Showing posts with label காதலிக்க நேரமில்லை (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா). Show all posts
Showing posts with label காதலிக்க நேரமில்லை (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா). Show all posts

Thursday, January 16, 2025

காதலிக்க நேரமில்லை (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா)

                            


கிருத்திகாஉதயநிதி -   சிவா  நடிப்பில் இவரது இயக்கத்தில் வந்த  முதல் படமான  வணக்கம்  சென்னை (2013) ரொமாண்டிக் காமெடி டிராமாவாக  நன்றாக  இருந்தது .இரண்டாவது  படமாக  விஜய் ஆண்ட னி நடிப்பில் வெளிவந்த  காளி (2018)  ஓடவில்லை .மூன்றாவது  படைப்பு  படம் அல்ல, வெப் சீ ரிஸ் . ஜீ  5 ல்  வெளியான  பேப்பர் ராக்கட்  நல்ல  வரவேற்பைப்பெற்றது . நான்காவது  படம்  எப்படி  வந்துள்ளது  எனப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  முற்போக்குவாதி ,, சரக்கு , தம்  எல்லாப்பழக்கங்களும் உண்டு   நான்கு வருடங்களாக ஒருவனைக்காதலிக்கிறாள் . தன் பெற்றோரிடம் சொல்லி  திருமணம்  நிச்சயம் செய்தாகி விட்ட்து .விரைவி.ல்  காதலனுடன் திருமணம்  நடக்க இருக்கும் சூழலில்  தன காதலன்  குடி இருக்கும் அபார்ட்மெண்டுக்கு சர்ப் பரைஸ் விசிட் அடிக்கிறாள் .அங்கே  காதலன்  வேறு ஒரு பெண்ணுடன்  குடும்பம்  நடத்திக்கொண்டு  இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி  ஆகி ;பிரேக்கப் செய்கிறாள் .ஆண்  துணை இல்லாமல்  குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்கிறாள் 


நாயகன்  ஒரு ஜாலி டைப் . காதலி உண்டு . திருமணம்  செய்ய  இருக்கிறார்கள் . ஆனால்  ஜாலியா  வாழ்ந்தாப்போதும் , குழ்ந்தை  குட்டி  எல்லாம் வேண்டாம், சிக்கல் என நினைக்கிறான் . ஒரு கட்டத்தில்  தன நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  ஸ்பெர்ம்  பேங்க்கில்  ஸ்பெர்ம்  டொனேசன் செய்கிறான் . இது காதலிக்குப்பிடிக்கவில்லை . குழ்ந்தை  வேண்டாம் என  சொல்லி விட்டு  ஊருக்கு   குழந்தை கொடுக்கலாமா? என்பது அவள் கேள்வி . இந்தக்காதலும் பிரேக்கப் ஆகிறது 



நாயகனின் உயிர் அணு  நாயகியின் வயிற்றில் கருவாக உருவாகி வளர்கிறது . இந்த விஷயம்  தெரியாமலேயே  இவர்கள் சந்திப்பு நடக்கிறது . நாயகனுக்கு  நாயகி மீது  காதல் . அதை முறையாக வெளிப்படுத்தவில்லை .நாயகிக்குக் குழந்தை  பிறக்கிறது . எட்டு வருடங்கள் இடைவெளிக்குப்பின் நாயகன் - நாயகி சந்திப்பு மீண்டும் நிகழுகிறது .நாயகனின் முன்னாள் காதலி தேடி வருகிறாள் . இதற்குப்பின் நடந்தது என்ன? நாயகன் - நாயகி சேர்ந்தார்களா? என்பது மீதி திரைக்கதை 


நாயகன்   ஆக  ஜெயம்  ரவி . அழுத்தமான நடிப்பு .அமைதியாக  வந்து போகிறார் .இவர் தன் பெயரை மாற்றிக்கொண்டார் .ஆனாலும்  மக்கள்  பார்வையில்  இன்னமும்   ஜெயம் ரவி தான் . டி ராஜேந்தர்   ஒரு கால கட்டத்தில்  தனது  பெயரை  விஜய  டி ராஜேந்தர்  என  மாற்றிக்கொண்டார்  , ஆனாலும்   மக்கள்   அவரை  டி ராஜேந்தர்  ஆகவே   பார்த்தார்கள் .சமீப காலமாக  இவர் படங்கள்   ஓடவில்லை . இது ஓரளவு   கை கொடுக்கலாம் 

 நாயகி ஆக நித்யாமேனன்   அசத்தி  இருக்கிறார் .பார்வையாலேயே  நடிப்பை  அள்ளி  வழங்குகிறார் . நாயகனின் காதலி ஆக டி ஜெ   பானு  அழகாக  வந்து போகிறார் . நாயகனுக்கும்  , பானு வுக்கும்  ஒர்க் அவுட் ஆன  கெமிஸ்ட்ரி  நித்யா மேனன்  உடன் ஒர்க் அவுட் ஆக வில்லை 

நாயகனின் நண்பர்கள் ஆக  வினய் , யோகிபாபு  இருவரும்  சும்மா   வந்து போகிறார்கள் . யோகிபாபு வேஸ்ட் .
நாயகியின்  அம்மா, அப்பாவாக   வரும் லட் சுமி ராமகிருஷ்ணன் + மனோ  இருவரது நடிப்பும் நிறைவு .நாயகியின் 8 வயது மகனாக  வரும் ரோஹன் சிங்க்  நல்ல  நடிப்பு 

இசை ஏ ஆர்   ரஹ்மான் .பாடல்கள்  அருமை .பின்னணி இசையில்  கலக்கி இருக்கிறார் . கேவ்மிக்  ஏரியின் ஒளிப்பதிவில்   நாயகிகள் இருவரின்  க்ளோசப் காட் சிகள்   செம 


சபாஷ்  டைரக்டர்

1   ஒளிப்பதிவும் ,இசையும் , ஒரு ரொமாண்டிக்  சப்ஜெக்ட்டுக்கு ரொம்ப  முக்கியம் என்பதை உணர்ந்து  டெக்னீஷியன்களிடம் வேலை வாங்கிய விதம் 


2   நாயகன் , நாயகி ,  நாயகனின் காதலி   மூவர் நடிப்பும் உயிரோடடம் 


3   பின் பாதியில்   நாயகன் - நாயகி தான் சேரப்போகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந் தாலும்   எப்படி  இணைவார்கள் என்பதை எதிர்பார்க்க வைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1   இங்கே  பாருடி , மேரேஜ்க்கு  முன் அவனை வெளி லபோய் மீட் பண்ணுவது எனக்குப்பிடிக்கலை 


அம்மா, 4  வருடங்கள்  முன் வெளில  போய் அவனை மீட்  பண்ணினதால்தான் இப்போ மேரேஜ் வரை வந்திருக்கு 


2   அம்மா,   நான் இன்னும் வெர்ஜின் என நினைத்துக்கொண்டு இருக்கிறாயா? எப்போவோ  என்  கற்பு  போயிடுச்சு 


3 லவ்   பெயிலியர் ஆன ஆண்கள்   தம் அடிப்பாங்க  இல்லையா? அதான் நானும் ட்ரை பண்ணிப்பார்த்தேன் . ஆனா  நல்லால்லை 


 ஏன்னா   நீ  தம் அடித்த விதமே   தப்பு 


 ஓஹோ , அது தப்புன்னு உனக்கு எப்படி  தெரியும் ? 


அது வந்து ..... 


4    சாரி   டியர்   தெரியாம  தப்பு  நடந்திடுச்சு 

 எப்படி ? அவ தடுக்கி விழுந்து   உன் பெட்ல   விழுந்துட் டாளா? 


5   இங்கே  சாப்பிட   என்ன   நல்லாருக்கும் ?


  என் வீட்டில் இதை   விட   நல்;லாருக்கும் 


 இதுதான்   பெங்களூரில்  பிக்கப் லைனா? 


6  அம்மா  , டெஸ்ட்   ட்யூப்  பேபின்னா   என்ன? 


 சூப்பர் ஹீரோஸ்  தான்   டெஸ்ட்   ட்யூப்  பேபி  ஆக  வருகிறார்கள் 


7 எல்லாரையும்   திருப்திப்படுத்த  முடியாது 


8  உன் இதயத்துக்கு நீ உண்மையாக  இரு  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன் , நாயகனின்  இரு நண்பர்கள்  , நாயகி , நாயகியின் மூன்று  தோழிகள் , நாயகனின் முன்னாள் காதலி ,   நாயகியின் முதல் காதலன்   இப்படத்தில் வரும் அனைத்துக்கேரக்டர் களும்   தண்ணி  , தம் அடிக்கறாங்க . எதனால் ?  யோகா   செய்பவர்களாக ,ஜிம் போகிறவர்களாக   நல்ல விதமாக்காட்டிடலாமே? 


2   நாயகனின்   நண்பனாகவரும் வினய்  ஒரு கே  கேரக்ட்டர்   என்பதற்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் ? 


3  மவுன  கீதங்கள்  படத்தில்   நாயகன் -  மகன்   பாண்டிங்   போல  இதில்  சரியாக ஆடியன்சுக்குக்கனெக்ட் ஆகவில்லை 


4   நாயகியின் மகன்   காணாமல்   போகிறான் என்பது முதல் முறை அதிர்ச்சி , இரண்டாம் முறையும்  அப்படி ஆவது அயர்ச்சி 


5  நாயகியின் மகன்   காணாமல்  போனதும்   நாயகியை விட   அவள்  தோழி தான் அதிக அதிர்ச்சி  காட்டுகிறாள் . தேவர்  மகன் சூட்டிங்க்  டைமில்   சங்கிலி   முருகன் + வடிவேல்  போர்சனை   தூக்கியதை  மேடையில் வடிவேலு சொன்ன சீன்  தான் நினைவு வருகிறது 


6    திரைக்கதை   ரொம்பவே   மெதுவாக   நகர்கிறது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U /A 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் காதலிக்க நேரமில்லை (2025) =50% The Switch (2010) + 50% Miss shetty Mr Pohlishetty (தெலுங்கு) -இயக்குனர் கிருத்திகா உதயநிதியும் அட்லீ ரசிகைபோல .ஒளிப்பதிவு + ஏ ஆர் ஆர் இசை கலக்கல் ரகம்.மெதுவாக நகரும் திரைக்கதை.ஏ செண்ட்டரில் ஓடலாம். ஜெயம். ரவி + நித்யா மேனன் நடிப்பு குட்.ஆனால் ஜோடிப்பொருத்தம் இல்லை. விகடன் 42.ரேட்டிங் .2.75. /5