Showing posts with label காஞ்சனா 2 - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label காஞ்சனா 2 - சினிமா விமர்சனம். Show all posts

Friday, April 17, 2015

காஞ்சனா 2 - சினிமா விமர்சனம்



நம்ம ஜனங்களுக்கு  ஒருத்தரை  பிடிச்சுட்டா அவருக்கு அமோக  ஆதரவு  கொடுப்பாங்க . முனி  படம் பார்க்கும்போதெல்லாம்  அது  ஹிட்  ஆகும்னு  எதிர்பார்க்கவே இல்லை. அதே  போல்  காஞ்சனா இப்டி மாஸ்  ஹிட்  ஆகும்னு  நினைக்கலை . இப்போ வ்ந்திருக்கும்  காஞ்சனா 2 வுக்கு  முன்னணி  ஹீரோக்கள்  படங்களுக்கு  உரிய  ஓப்பனிங்க் .ஈரோட்டில்  5  தியேட்டரில் ரிலீஸ்  ஆகியும்   டிக்கெட்  ரேட்  150  ரூபா .முதல் 10  நாளில்  50  கோடி கலெக்சன் அள்ளிடும்   என  எதிர்பார்க்கலாம். 


வழக்கம் போல்  ஹீரோ  ஒரு  பயந்த  சுபாவி . இருட்டைப்பார்த்தாலே ஓபிஎஸ் மாதிரி பம்முவார். அவர்  ஒரு  டிவி சேனல்ல  ஒர்க்  பண்றாரு  அந்த  சேனல்ல  பேய்  சம்பந்தப்பட்ட   ஒரு  புரோகிராம்  பண்றாங்க . மக்களோட கவனத்தை திசை திருப்பி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை  ஏத்திக்க  ஐடியா.  விஜய்  டி வி  எப்படி  தன்  புரோகிராம்ல  யாரையாவது அழ  வெச்சு   ஹிட்ஸை  ஏத்திக்குதோ , நம்ம  இட்ஸ்  அண்ணன்  எப்படி  டப்பா பட த்துக்கு  எல்லாம் 4/5  , 4.5  /  5 மார்க்  போட்டு  நம்  கவனத்தை திசை  திருப்பறாரோ  அப்படி.. 


ஹீரோயின் தான் அந்த  டி வி  புரோகிராமுக்கு க்ரியேட்டிவ்  ஹெட்  நம்ம சித்தி  ராதிகா  மாதிரி . ஹீரோவுக்கு  ஆல்ரெடி  ஹீரோயின்  மேல லவ்.2  பேரும்  லவ்  பண்ணிக்கிட்டே  அந்த  பேய்  புரோகிராம்  பண்ண  ஒரு  பாழடைஞ்ச  பங்களாவை  செலக்ட்  பண்ணி  ஷூட் பண்ணி   டிராமா  எடுக்கறாங்க. அப்போதான்  ஒரு ட்விஸ்ட். 

 நிஜமாவே  அங்கே  பேய்  இருக்கு.அந்தப்பேயை வெச்சு எல்லாப்படத்துலயும்  வருவது  போல்  பயமுறுத்தல்கள்    காமெடிகள்  சிரிப்புகள் அப்டினு  இடைவேளை வரை  கலக்கலான  சிரிப்பு  மழையில்  திரைக்கதை  படு  வேகமா  பயணிக்குது 


 பின் பாதியில்   ரொம்ப  இழுவை . அந்த  ஃபிளாஸ்  பேக் கதை  எல்லாம்   மகா  நீளம் . ஆனா  ஜனங்க  ரசிக்கறாங்க .



ஹீரோவா  ராகவா  லாரன்ஸ் . ஒரு சக்சஸ்  ஃபார்முலாவை  பிடிச்ட்டார் . அவருக்கு அது நல்லா  ஒர்க்  அவுட்  ஆகிடுச்சு . இன்னும்  10 பாகங்கள்  எடுப்பார் .  ஹீரோவா  நடிப்பில்  குறை  வைக்கலை . பயந்த  சுபாவம்னு  ஒரு  சாக்கு வெச்சுக்கிட்டு கோவை சரளா ,  டாப்சி  உட்பட   5  பொண்ணுங்க   இடுப்புல  குழந்தை  மாதிரி  ஏறி  உக்காந்துக்கறாரு .ஹூம் . ( பொறாமைதான்) 


ஹீரோயினா  பேக்கரியில்  அப்போ  தான் ரெடி ஆன  பிரெட் மாதிர்  மெத் மெத்  டாப்சி பன்னு . நல்ல  அழகு  தான் .லோ  ஹிப்பில்  டான்ஸ்  எல்லாம்  ஓக்கே ., ஆனா அவருக்கு  பேய்  கெட்டப்    எடுபடலை . இந்தப்பிஞ்சு  மூஞ்சில  எப்டிண்ணே  அது  வரும் மொமெண்ட் , போதாக்குறைக்கு  சந்திரமுகி  ஜோதிகா , அருந்ததி  அனுஷ்கா  எல்லாரையும்  இமிடேட்  பண்றார் , சகிக்கலை .


படத்தின்  நிஜமான  நாயகி  கோவை சரளா  தான்  . அட்டகாசமான  அர்ப்பணிப்பான  கல கலப்பான  நடிப்பு , இவரது  குரல் பாடி லேங்குவேஜ்  டயலாக்  டெலிவரி  ஃபிலிம்  இன்ஸ்ட்டிடியூட்  மாணவர்கள்  போற்றிட வேண்டிய  ஒன்று . இந்த ஆண்டின்  சிறந்த  நகைச்சுவை  நடிகைக்கான  அவார்டு  கன்ஃபர்ம்

 நித்யா மேனன்   மாற்றுத்திறனாளியாக  ஃபிளாஸ்பேகில்  வர்றார்.  குட்  ஆக்டிங் 


மனோபாலா , மயில் சாமி , என  காமெடி  களை  கட்ட  இன்னும்  எக்ஸ்ட்ரா மசாலா  வேறு . 


 பாடல்கள்  படத்துக்குத்தேவையே  இல்லை .  பின் பாதியில்  2  பாட்டு  பொறுமையை  சோதிக்கறாங்க . படம்  ரொம்ப  நீளம் , பின் பாதியில்  கடைசி  30  நிமிஷம்  அய்யோ அம்மா  விடுங்கய்யா நான்  ஓடிடறேன்னு  அலற  வைக்கறாங்க  . மிகவும்  பிற்போக்குத்தனமான  , அரதப்பழசான  திரைக்கதை ( ஃபிளாஸ்பேக்கில் ) 







மனதைக் கவர்ந்த  வசனங்கள்



1  பேய்  எவ்ளோவ்  அழகா  இருக்கு 


 அடேய் விட்டுடுடா, அது ஃபேமிலியோட வந்திருக்கு 



2  யோவ்   யார்யா நீ? பாத்ரூம்க்குள்ளே  இருந்து  வர்றே? 

 நான்  பாத்ரூம்  வாட்ச்மேன் 


3  இப்போஉங்களுக்கு இந்த  மீசை தானே  பிரச்சனை . ஒட்டு  மீசை தான்  எடுத்துட்டா  போச்சு , நான்  வேலைக்குத்தகுந்தாற்போல்  கெட்டப் சேஞ்ச் 



4   இவங்க  தான்  குக்கா? இந்த இளவயசு  குக்கைப்பார்த்தா  மனசு  பக்குபக்குனு  அடிச்சுக்குது


5    டேய்  வாடா  உள்ளே  போகலாம் 

 ஆமா  நாம  உள்ளே  தானே  இருக்கோம் ? 



 6  ஐ ஆம்  ஜாயிண்ட்  ஃபேமிலி . எப்பவும்  4  பேர்  கூட  படுத்தாத்தான்  தூக்கம் வரும் 


7  அல்பாயுசுல  போனவன்  ரொம்ப  உத்வேகமா  இருப்பான்  ( மத்தவன்  எல்லாம்   ஸ்லோ மோஷன் ல  இருப்பானா? ) 






 படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்


டாப்சியின் பொருத்தம் இல்லாத பேய் ஒப்பனையை கோவை சரளாவின் புயல் நடிப்பு அடிச்சு கிளப்பி தூக்கிபோடுது


2 பேய் தம் அடிக்குது.கேன்சர் வராதா?


3 தியேட்டர் முழுக்க சிரிப்பலைகள் ,பயக்கூச்சலுடன் ஆரவாரமான இடைவேளை @ காஞ்சனா.2 ,அதிரி புதிரி ஹிட் உறுதி

4 பேய்ப்படத்துக்கு ஆடியன்சின் அலற்ல் தான் வெற்றிச்சத்தம் #,பிஜிஎம் இவங்களே தர்றாங்க


5 பேய்ப்படத்துக்கு வர்றவனுங்க எல்லாம் விபரமா ஏதோ ஒரு பிகரை தள்ளிட்டு வந்துடறானுங்க.பேய் வரும்போது டக்னு கட்டிப்பிடிச்சுடறானுங்க.


6 அடேங்கப்பா.ஹீரோ என்ட்ரிக்கு ரஜினி அஜித் விஜய் ரேஞ்ச்க்கு மாஸ் அப்லாஸ்.ராகவா.@ஹிஸ் பீக்


7 காஞ்சனா.2 = 163 நிமிடங்கள்.


8 காஞ்சனா 2 = தியேட்டர் புல்லா பேமிலி ஆடியன்ஸ்.5 தியேட்டருல ரிலீஸ் ஆகியும் டிக்கெட்.100 ரூ 150 ரூ.கலெக்சன் அள்றாங்க




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  படத்தின்  முன்  பாதியில்  சீன் பை  சீன் சிரிப்பு
தான்  காமெடி  தோரணம்   கொடி  கட்டிப்பறக்குது. அனைத்து  நட்சத்திரங்களின்  பங்களிப்பு  அருமை 

2  கோவை  சரளாவின்   காமெடி பொங்கும்  நடிப்பு  அதகளம் . அவர் தான் படத்தின்  வெற்றிக்கு  முதுகெலும்பு . அப்புறம்  திரைக்கதையில்  முன்  பாதியில் இயக்குநரின்  கவனம்  , நேர்த்தி 



3    தமனின்  பின்னணி  இசை  கன  கச்சிதம். பின் பாதியில் தலை வலி 



4   சுஹாசினியிட ம்  டாப்சி “  நெம்பர்   2  வில்  இருந்து நெ 1  ஆக  நீங்க ஒரு  காரணம் என  சொல்வது  ஏதோ குறியீடு 


5   ஹீரோ   பயம்  வரும்போதெல்லாம்  யாரோ  ஒரு  லேடியா பார்த்து  கரெக்டா  ஏறி  உக்காந்துக்குவது . தியேட்டரில்  அதுக்கு ஆரவாரமான  வரவேற்பு , இனி  வரும்  பேய்ப்படங்களில்  இது  நல்லா  ஒர்க் அவுட்  ஆகும் 




6      ஹீரோ  கோவை சரளாவிடம்  பேசிட்டு  இருக்கும்போது  டபுள்  டாப்சி  இருப்பது அருமையான  சீன் 



7   நான்  கடவுள்  மொட்டை  “ நமக்குள் என்ன மரியாதை என  கேட்கும்பொது அவர்  அடியாட்கள் உட்கார  முயற்சிப்பதும் அவர்  முறைப்பதும்   அதகளம் .  அவர்  வரும்  ஓப்பனிங்  சீன்  செம  அப்ளாஸ் 




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1    தூக்கு  போட்டு தற்கொலை செஞ்சுக்கும் ஆளுக்கு நாக்கு தள்ளி  இருக்காதா? முகம் அகோரமா இருக்காதா? இதில்  ஒரு டெட் பாடி  அமைதியே வடிவா  இருக்கு 


 2   நித்யா மேனன்   ராஹவா  மீது  லவ்  இருப்பதை  சொல்லாமல்  இருக்கார்  சரி ஆனா  மேரேஜ்  வேறொருவருடன்  நடப்பதாக  இருக்கும்போது  அவர்  முகத்தில்  சோகமே  இல்லையே , திருமணம்  தடை படும்போது  அவர்  மகிழவே  இல்லையே ? 


 3  ஹீரோவுக்கு  அம்மா  கேரக்டரில் வருபவர்  எப்போதும் கண்ணியமான  கேமரா ஆங்கிளில்  வைக்கப்பட  வேண்டும் , இதில்  கோவை  சரளா  அபாயமான  லோ  ஹிப் சேலையில்  3  காட்சிகளில்  வர்றார் 



4   முன்  பாதியில்   ஹீரோவும்  இன்னொருவரும்  ஹோமோ  போல்  காட்டப்படும்  காமெடி  மகா அருவெறுப்பு .  ஃபேமிலி  ஆடியன்ஸ்  வரவேற்பு  பெறும் படத்தில்  இது  எதுக்கு  ? 


 5  மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு  வருவது   அதை  வைத்து  பரிதாபம் தேடுவது என்னமோ போல்  உள்ளது.மன  நிலை  பாதிக்கப்பட்ட  வில்லனின்  மகன்  ஹீரோயினை ரேப் பண்ண மட்டும்  அப்படிப்பாயறான் (  அவர்  சும்மாகூட  பாய்ஞ்சிருக்கலாம்) 


6   பின்  பாதி   திரைக்கதை ரொம்ப  நீளம் . குறிப்பா  கடைசி 30 நிமிஷ்ம்  அய்யோ அம்மா 




சி  பி  கமெண்ட்  = காஞ்சனா.2,= கோவை சரளாவின் மிரட்டலான நடிப்பில் ஏ ,பி,சி ஆல் சென்ட்டர் ஹிட் பிலிம்.விகடன் மார்க் =44 ,ரேட்டிங் = 3.25 / 5





ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  44



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =  நன்று



 ரேட்டிங்   3 .25  / 5 

diSki  -   ஓ  காதல் கண்மணி - சினிமா விமர்சனம்