Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Sunday, December 07, 2014

குஷ்பூ அங்கன இருந்தா இங்கன நமீதா?!! - ஜி கே வாசன் திடுக் பேட்டி @ த தமிழ் இந்து

திமுக, அதிமுக ஆட்சியில் நன்மை இருந்த அளவு தீமையும் இருந்தது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிறப்புப் பேட்டி

 

திமுக, அதிமுக ஆட்சியில் எந்த அளவு நன்மை நடந்ததோ அதே அள வுக்கு தீமைகளும் நடந்துள்ளன என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு தமாகாவை மீண் டும் தொடங்கியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். திருச்சியில் கட்சியின் தொடக்கவிழா மாநாட்டை நடத்தி முடித்துள்ள நிலையில், ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: 



நீங்கள் புதுக்கட்சி தொடங்க முக்கிய காரணம் என்ன? 


 
கடந்த 2002-ல் தமாகாவை காங்கிரஸுடன் இணைத்தபோது, அக்கட்சியை வலுப்படுத்த வேண் டும் என்ற நோக்கம்தான் இருந்தது. ஆனால், தகுதியானவர்கள் கட்சி யில் ஓரங்கட்டப்பட்டதால், கட்சி வலுவிழந்தது. என்னுடன் இருந் தவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். இதே நிலை நீடித்தால் நம் நிலை என்ன என்ற கேள்வி கட்சி யினர் மத்தியில் எழுந்ததே புதுக் கட்சி தொடங்க காரணமாக அமைந்தது. 



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு கிடைத்த தண்டனை, நீங்கள் புதுக் கட்சி தொடங்க ஒரு தூண்டுகோலாக அமைந்ததா? 


 
தொண்டர்களின் உணர்வை அடிப்படையாக வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா வுக்கு கிடைத்த தண்டனையை இதனுடன் முடிச்சுப் போட முடி யாது. அதெல்லாம் தலைவர்கள் போடும் கணக்கு. தலைவர்கள் நினைத்தால் எதுவும் நடந்து விடாது. தொண்டர்கள் நினைத்தால்தான் நடக்கும். 



மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் சென்ற அனைவரும் இப்போது உங்களுடன் வந்திருக் கிறார்களா? 


 
என் தந்தையுடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. ஒரு சிலர் எங்க ளுடன் இல்லை. பெரும்பான்மை யினர் என்னுடன்தான் உள்ளனர். 



தேசியப் பார்வை கொண்ட மாநில கட்சியாக தமாகா இருக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் உங்கள் நிலை? 


 
இரு தரப்பு இடையே சண்டை நடக்கும்போது, சட்டம் என்ன சொல் கிறதோ அதை ஏற்க வேண்டும். கர்நாடகம், கேரளம் தங்கள் தவறை திருத்திக் கொண்டு தமிழகத்தின் நியாயமான நிலையை தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். 


முதல் இயக்கமாக வளர்வதற்கு உங்க ளுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? 


 
திமுக, அதிமுக கட்சியினர் ஆண்டவர்கள், ஆண்டு கொண் டிருப்பவர்கள். அவர்களது பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது ஆட்சியில் எந்த அளவு நன்மை செய்தார்களோ, அந்த அளவு அவர்களால் தீமையும் உண்டு. அதற்கு மாற்றாக ஏன் நாங்கள் வரக் கூடாது? 



மத்திய ஆட்சியில் பதவி வகித்து விட்டு, ஆட்சி போனதும் வெளியேறி யது துரோகம் என்கிறார்களே? 


 
கடந்த 2002-ம் ஆண்டில் 23 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி.யுடன் தமிழகத்தில் தமாகா மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. காங் கிரஸ் எந்த வரிசையில் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும். என் தந்தை இறந்த ஒரு வருடத் தில் தமாகாவை காங்கிரஸுடன் இணைந்தோம். அப்போது மத்தி யில் பாஜக ஆட்சிதான் இருந்தது. 




காமராஜர் போன்ற தலைவர்களின் பெயரை குறிப்பிடுவதில் ஏற்பட் டுள்ள சர்ச்சை பற்றி? 


 
காங்கிரஸ் வளர்ச்சிக்கு வித்திட் டது காமராஜர், கக்கன், மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராம மூர்த்தி, மூப்பனார் போன்றோரின் உழைப்புதான். அவர்களது புகழை போற்றாமல் இருக்க முடியாது. 




நீங்கள் அமைச்சரவையில் இருந்த போதுதான் 2ஜி, நிலக்கரி ஊழல் போன்ற பெரிய ஊழல்கள் நடந்துள் ளன. இப்போது அதற்கு வக்காலத்து வாங்க விரும்புகிறீர்களா? ஒதுங்கிக் கொள்ள விரும்புகிறீர்களா? 


 
இந்தியா ஜனநாயக நாடு. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சுமத்து வது பல மாநிலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். 



நீங்கள் பதவியில் இருந்தபோது, யாருக்கும் பதவி வாங்கித் தர வில்லை என்ற மனக்குறை கட்சி யினர் மத்தியில் உள்ளதே? 



 
மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் செயலர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என 13 ஆண்டுகள் பதவியில் இருந்தேன். அப்போது மனசாட்சிப்படி நியாய மாக நடந்து கொண்டேனா என்ப தற்கு புதிய கட்சியின் தோற்றம், திருச்சி கூட்டமே சாட்சி. பதவியில் இருந்தபோது சிலருக்கு என்னால் பதவிகளை பெற்றுத் தர முடியாமல் போயிருக்கலாம். அது என் கையில் இல்லை. 



நடிகை குஷ்பு, காங்கிரஸில் இணைந் தது அக்கட்சியை பலப்படுத்துமா? 


 
ஜனநாயக நாட்டில் எந்த துறை யைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்தக் கட்சியிலும் சேர லாம். அவர்களது செயல்பாடுகளை நீங்கள்தான் கணிக்க வேண்டும். 



தமிழகத்தில் மதுவிலக்கு அவசியம் என்று நினைக்கிறீர்களா? 


 
பூரண மதுவிலக்குதான் எங்கள் கொள்கை. அந்த நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம். 



ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் வெளிவருகிறதே? 


 
அது தவறான தகவல். 


நிர்வாகிகள் நியமனம் எப்போது? 

 
கொடி அறிமுகம் செய்துள் ளோம், கட்சிப் பெயர் அறிவித் துள்ளோம். உறுப்பினர் சேர்க்கை இன்னும் 2 நாட்களில் அறிவிக்க உள்ளேன். படிப்படியாக நிர்வாகி களை நியமனம் செய்து கட்சிக்கு முழு வடிவம் கொடுப்பேன். 



அதிமுக-வுடன் உங்கள் உறவு எப்படி இருக்கும்?




எல்லா கட்சிகளுடனும் நல் லுறவே வைத்துள்ளேன். யாருட னும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. யாரையும் தனித் தராசில் வைத்து பார்க்க விரும்பவில்லை. 



மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது, திமுக-வுடன் கூட்டணி வைத்து பெரும் வெற்றி பெற்றார். அதே கூட்டணி மீண்டும் ஏற்படுமா? 


 
தற்போது என் எண்ணமெல்லாம் தமாகா-வை சிறந்த இயக்கமாக உருவாக்க வேண்டும் என்பது தான். ஆனால், எங்கள் உயரம் என்ன என்பதை உணர்ந்து, தொண்டர்கள், மக்களின் எண்ணங் களைப் பொறுத்து முடிவெடுப்பேன். கூட்டணியே வைக்க மாட்டேன் என்று சவால்விட விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் நியாயமான முடிவை எடுப்போம்


நன்றி - த இந்து

Saturday, May 17, 2014

மன்மோகனின் 10 ஆண்டு சாதனைகள்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
கல்வியாளராகவும் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்த நிதியமைச்சராகவும் மட்டுமே அறியப்பட்ட மன்மோகன் சிங்கைத் திடீரென ‘பிரதமர்’ பதவிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்தபோது காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, நாடே திகைத்தது. ஆனால் எவருமே, ‘இந்தப் பதவிக்கு இவர் தகுதியானவர் அல்ல’ என்று சொல்லவே முடியவில்லை. பத்தாண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த பிறகு, அவருடைய பதவிக் காலத்தைப் பற்றியும் ஆட்சியைப் பற்றியும் எவரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லக்கூடிய ஒரே பதில் - ‘இந்தப் பதவி இவருக்குத் தகுதியானது அல்ல’ என்பதுதான். 



சோனியாவின் தேர்வு
நரசிம்ம ராவைப் போல சாணக்கியத்தனத்தை மறைத்துக்கொண்டு, வெளியில் சாதாரணமாகத் தெரியும் எந்த காங்கிரஸ் தலைவரிடமும் பிரதமர் பதவியை ஒப்படைக்கக் கூடாது. அப்படி ஒப்படைத்தால், பிறகு காங்கிரஸ் கட்சியும் தன்னிடம் இருக்காது என்று நன்கு புரிந்துகொண்ட சோனியா காந்தி செய்த தேர்வுதான் மன்மோகன் சிங். மன்மோகன் பிரதமரானபோது, ‘ஓரிரு ஆண்டுகள் கழித்து, இவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சோனியாவே அமர்ந்துவிடுவார் அல்லது மகனைக் கொண்டுவந்துவிடுவார்’ என்று பலரும் நினைத்தார்கள். தானோ தன் மகனோ ஆட்சியில் அமர்ந்தால்கூடச் செய்ய முடியாததை மன்மோகனை அமரவைத்துச் சாதித்துக்கொண்டார் சோனியா



.
குடும்ப ஆதிக்கம்
‘மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர்’ என்று பலர் விவரம் புரியாமலேயே விமர்சிக்கின்றனர். நேரு குடும்பத்துக்குத்தான் தலைமைப் பதவியும் அதிகாரமும் என்பது காங்கிரஸின் எழுதப்படாத வேதமாக இருக்கும் நிலையில், அந்தக் கட்சியில் சோனியாவால் பார்த்து பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் மன்மோகனுக்கு எப்படி அதிகாரங்கள் இருக்கும் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாதவர்களின் வெற்று விமர்சனம் இது. அவர் நினைத்ததைச் சில துறைகளில் செய்துகொள்ளவும் அவருக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது. 



இந்தியா முழுக்க எல்லாக் கட்சிகளிலும் இதே குடும்ப ஆதிக்கம்தான். (இடதுசாரிக் கட்சிகள் விதிவிலக்கு). எனவே, இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங்கைக் குறைசொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. குடும்ப ஆதிக்கம் உள்ள கட்சியில் தரப்படும் பதவியை எப்படி வகிக்க வேண்டும், என்னென்ன அதிகாரங்கள், என்னென்ன சுதந்திரங்கள் என்பதை மன்மோகன் வெகு எளிதாகக் கற்றுக்கொண்டுவிட்டார். எனவே, பத்தாண்டுகளும் இரு தலைவர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நிலவியது. 



முதல் முறையும் இரண்டாவது முறையும் 

 
முதல் ஐந்தாண்டு காலத்தில் மன்மோகன் சிங் தனக்கென்று சில விதிகளை வகுத்துக்கொண்டு செயல் பட்டதைப் போலத் தெரிந்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இப்படி ஆட்சி செய்த பிறகு, நம்பிக்கை அதிகரித்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் சோனியா காந்தியின் சம்மதத்தின்பேரில் துணிச்சலான முடிவுகளை எடுத்தார். வெளியிலிருந்து ஆதரித்த இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்ற போதிலும் அரசு கவிழாது என்ற நிலை ஏற்பட்டது அவரை மேலும் உற்சாகப் படுத்தியது. 


ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இடதுசாரிகள் இல்லாத குறையை மம்தா பானர்ஜி பூர்த்திசெய்தார். மத்திய அரசு உருப்படியாக நடக்க விடாமல் தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்தார். பொருளாதாரச் சீர்திருத்தத்தை மேலும் தீவிரப்படுத்தவே மன்மோகன் விரும்பினாலும் சோனியாவுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. மேலும், தேசிய ஆலோசனை கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகி, மன்மோகனுக்குச் சம அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மகிழ்ந்தார் சோனியா. அத்துடன் முக்கிய கொள்கை முடிவுகளை அவரும் சமயங்களில் அவருடைய மகனுடன் ஆலோசனை கலந்தும் எடுக்க ஆரம்பித்தார். வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறைந்தன. தொடர்ந்து தொழில்துறையில் மந்தநிலை ஏற்பட்டது. விலைவாசி உயர்ந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்கள் வெளிப்பட்டு அரசுக்குத் தாள முடியாத அவப்பெயரும் பின்னடைவும் ஏற்பட்டது. 



முதல் ஐந்தாண்டு காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்ததாகப் புகழப்பட்ட மன்மோகன், அடுத்த ஐந்தாண்டு காலத்தில் எல்லாத் துறைகளிலும் தோல்வியையும் கண்டனங்களையும் பெருமளவு சம்பாதித்தார். எனினும், இந்திய வரலாற்றில் மன்மோகன் நல்லவராகவே இடம்பெறு வார். அவரது ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகள் காலப் போக்கில் மறக்கப்பட்டுவிடும்; வெற்றிகள் நினைவுகூரப் படும். ஆனால், தங்கள் சாதனைகளை வெளியுலகத்துக்குச் சரியான விதத்தில் விளம்பரப்படுத்துவதற்கு காங்கிரஸ் தலைவர்களுக்கும் மன்மோகனுக்கும் தெரியாததுதான் அவர்களின் துரதிர்ஷ்டம். இந்த விஷயத்தில் அவர்கள் பா.ஜ.க-விடமிருந்தும் மோடியிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய. 



மன்மோகன் ஆட்சியின் தோல்விகள், பலவீனங்கள் ஊரறிந்தவை. அந்தத் தோல்விகளைவிட அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மிக முக்கியமானவை. அந்தச் சாதனைகளின் பட்டியல் இங்கே: 



மன்மோகனின் சாதனைகளில் சில 


 
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2006-ல் 200 மாவட்டங்களில் அறிமுகம். பிறகு, அனைத்து மாவட்டங்களிலும் அமல்.
• மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்க 2005-ல் சட்டம்.
• தகவல் அறியும் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் அமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றம்.
• வன உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம்.
• நிலம் கையகப்படுத்தப்பட்டால், நியாயமான இழப்பீடு வழங்கச் சட்டம்.
• கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம், மறுவாழ்வுத் திட்டம் 2012.
• மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
• 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 8 புதிய ஐ.ஐ.டி-கள், 7 ஐ.ஐ.எம்-கள், 30 மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்டுவரத் திட்டம்.
• நபர்வாரி வருமானம் 2004-ல் 630 டாலர்களாக இருந்தது 2012-ல் 1,550 டாலர்களாக உயர்ந்தது.
• பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு 2010-ல் நீக்கம்.
• டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு 2013-ல் பகுதியாக நீக்கம்.
• உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு.
• ரயில்வே துறையில் 2008-ல் ரூ.90,000 கோடி ரொக்க உபரி.
• 2008 அக்டோபர் 22-ல் சந்திரயான்-1 ஏவப்பட்டது.
• ஆக்கபூர்வப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.
• டெல்லி-மும்பை, பெங்களூரு-சென்னை தொழில்கூடத் தொகுப்புகள் கட்ட ஒப்பந்தம்.
• சீனாவுடன் வர்த்தகம் 7,000 கோடி டாலர்களாக உயர்வு.
- சாரி, தொடர்புக்கு: [email protected]

Monday, April 28, 2014

ராம்தேவின் 'தேனிலவு' பேச்சு எதிரொலி: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

யோகா குரு பாபா ராம்தேவின் 'தேனிலவு' பேச்சு எதிரொலியாக, தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. 


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகச் செல்வதாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த யோகா குரு ராம்தேவ் மீது உத்தரப் பிரதேச போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


பாஜகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகா குரு பாபா ராம்தேவ், லக்னோவில் பேசும்போது, "ராகுல் காந்தி தனது தொகுதியில் உள்ள தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகவும், சுற்றுலாவுக்காகவும் செல்கிறார். அவர் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருந்தால், அந்த அதிர்ஷ்டத்தில் பிரதமராகியிருப்பார். ஆனால், அவர் அதிர்ஷ்டமில்லாதவர். 


அவர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் பிரதமராக முடியாது என்று தாயார் சோனியா காந்தி கூறியிருக்கிறார். ஆனால், ராகுலோ இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறார். அதனால், முதலில் பிரதமராகும்படியும், அதன் பின்பு வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படியும் இப்போது சோனியா கூறி வருகிறார்" என்று ராம்தேவ் பேசினார். 


ராம்தேவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


இந்த நிலையில், பாபா ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சின் எதிரொலியால், தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. 


அதன்படி, தனிநபர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், இதனை மீறுவோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், அவ்வாறு பேசுவோர் மீது சட்டபூர்வமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 


ராம்தேவ் பிரச்சாரம் செய்ய தடை

 
யோகா குரு ராம்தேவ் லக்னோ மாவட்டத்தில் மே 16-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், உத்தரப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படவில்லை. 


இதனிடையே, தலித் சமுதாயத்தை இழிவுபடுத்திய ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

 நன்றி - த  இந்து 


  • Vasudevan Venugopal  from Chennai
    ஆத்மாவைப் பரமாத்மாவோடு இணைப்பதுதான் யோகா என்று பதஞ்சலி யோக சாஸ்திரம் சொல்கிறது. எப்படிப் பத்மாசனத்தில் அமர்ந்து குண்டலினியை எழுப்பி மனதை ஒருநிலைப் படுத்தி "சாதனா" செய்ய வேண்டும் என்பதை பகவத் கீதை விளக்குகிறது. இதை கற்றுக்கொள்ள ஆன்மீகத்தில் மூழ்கிய ஒரு spiritual குருவின் வழிகாட்டல் தேவைப்படும். இதற்க்கு ஏதுவாக உடலைத் தயாராக்கிக் கொள்ளும் சில குறிப்பிட்ட உடற்ப் பயிர்ச்சிகளையே யோகா என்று நாளடைவில் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த ராம்தேவ் போன்ற கிராமத்துப் பாமரர்கள் உடலை அஷ்ட கோணலாக முறுக்கியும், வயிற்றை உள்ளிழுத்தும் டிவியில் காட்டி 'யோகா குரு" என்று பெயர் வைத்துக்கொண்டு மக்களின் அறியாமையைப் பணம் பண்ணினார்கள். ஆகவே, இப்படிப்பட்ட ஆசாமிகளிடமிருந்து கண்ணியமான பேச்சுக்களை எதிர்பார்க்க முடியாது. இவர்களையெல்லாம் பிரச்சாரத்திர்க்குப் பயன்படுத்திக்கொள்ளும் பிஜேபியைச் சொல்லவேண்டும்.
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Manohararaj  
    இப்போதே இப்படி என்றால் மோடி வெற்றி பெற்றால் இந்தமாதிரி போலிகளின் இம்சைகள் கட்டுகடங்காமல் போய்விடும்.
    about a month ago ·   (4) ·   (2) ·  reply (0)
  • Dhanasekar .S  from Chennai
    போலி)சாமி
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Ahmad  from Jeddah
    போலி சாமியார் ராம்தேவ் ஒரு குடும்பஸ்தராக இருந்தால் இப்படிப்பட்ட தகாத வார்த்தைகளை அள்ளி வீச மாட்டார்.துறவறம் அவரை பக்குவப்படுத்தியதாக தெரியவில்லை.எப்போதும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது இவரின் வாடிக்கை ஆகி விட்டது.இவர் பிஜேபி இக்கு பிரச்சாரம் செய்வது மட்டும் மதச் சார்பு ஆகாதா?இவரின் சர்ச்சைக்குரிய பேச்சை பூசி மெழுகும் பிஜேபி,அது அவரின் சொந்த கருத்து என்று சொல்லுவது நயவஞ்சகத்தனம்.யோகாவை சொல்ல வேண்டிய இவருக்கு அரசியல் எதற்கு?
    about a month ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • aliakbar  from Riyadh
    இந்தியாவில் இறைவணக்கம் என்ற பெயரில் சாமியார்களின் பின்னால் மக்கள் செல்லும் வரை இவரை போன்ற சாமியார்களுக்கு கொண்டாட்டம் தான்
    about a month ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • a.s.ragunathan  from Mumbai
    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் நிஜமாகவே அடக்கத்துடனும் ஓரளவு கட்டுப்பாடுடனும் பேசுவதாக தெரிகிறது. மற்றவர்கள் குறிப்பாக பிஜேபி லீடர்ஸ் நரேந்திர மோடி உள்பட அனைவரும் கண்ட மேனிக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே பேச்சில் மிகவும் திமிர் தெரிகிறது. ஆட்சிக்கு வரும் வாய்ப்பு தவறினால் அப்போது தெரியும் சேதி.
    about a month ago ·   (3) ·   (0) ·  reply (0)
    ssm   Up Voted
  • guna  from Chennai
    குரு என்கிற வார்தையியே இழிவுபடுத்தி விட்டார் .சாதாரண மக்கள் வார்த்தைகளை அளந்து பேசும்போது இத்தகைய பிரபலங்கள் இப்படி பேசுவது சமூகத்தையே இழிவுபடுத்தும் செயலாகும்.எந்த முகத்தை கொண்டு இனி ஆயிரக்கனக்காநோருக்கு இவர் யோகா பயிற்றுவிப்பார் ?சட்ட வல்லுனர்கள் அரசியல் சட்டத்திற்குட்பட்டு குறைந்த பட்ச தண்டனையாவது இவருக்கு பெற்று தரவேண்டும் .
    about a month ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Raja Rajan at Cairn Energy 
    மூத்தோர்(யோகா குரு) சொல்லும், முது நெல்லிக்காயும் ..... ...... ...... இனிக்கும்!
    about a month ago ·   (2) ·   (14) ·  reply (0)
    Ahmad   Down Voted
  • Kannan  from Madurai
    இந்த (போலி)சாமியாரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவேண்டும்.

Tuesday, January 28, 2014

ராகுல் காந்தியின் சொதப்பல் பேட்டி யும் , பிரபல ட்வீட்டர்களின் காமெடி கும்மியும்


ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ராகுல் நேர்காணல்

'இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள' சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால், ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ, அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும் ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது.


இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த வாய்ப்பில் இருந்து நழுவினார்.


'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை மூன்றாவது நபராக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் பேசினார் ராகுல் காந்தி.


இந்திய அரசியல் கட்டமைப்புகளில் ஏதோ தவறு இருப்பதாகவும், இந்தக் குறைபாடுகளால் அன்றாடம் மக்கள் அவதியுறுவதாகவும் தெரிவித்தார். அப்படிப்பட்ட அமைப்புகளை, தாம் வெறுப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும் ஒரு காங்கிரஸ்காரராக சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் நிகழ்த்திய சாதனைகள் என பசுமைப் புரட்சி முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரையில் பட்டியலிட மறக்கவில்லை.


ராகுல் காந்தி நேர்காணலில் மிகவும் வலுவிழந்த பகுதி என்றால், அது மோடி பற்றிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த பகுதியே ஆகும். மோடி தொடர்பான கேள்விகளில் இருந்து தப்பிக்கவே ராகுல் மிகுந்த ஆர்வம் காட்டினார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 2002 குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்தாமல், அதை மேலும் தூண்டிவிட்டார் என்று கூறிய ராகுல், "இது மாதிரியான சம்பங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இப்போதைய தேவை என்னவென்றால், நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தலே" என விவாதத்தின் போக்கையே மாற்றினார்.


இதேபோல் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பபட்டது, கலவரத்துக்கு மன்னிப்பு கேட்பீர்களா என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்காத ராகுல், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கும், குஜராத் கலவரத்திற்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறினார். சீக்கியர்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது, ஆனால் குஜராத் கலவரத்தை தூண்டியதே பாஜகதான் என்றார்.


மோடி மீதான அச்சத்தால் அவருடன் சரிசமமாக ஒப்பிடப்படுவதை தவிர்க்கிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனக்கு எந்தவித அச்சமும் இல்லை, தேர்தல் தோல்வி பயம் இல்லை; ஆனால் அரசியலில் தன் தந்தை அனுபவித்த துயரங்களையும், அவரது மரணத்தையும் எப்போதும் மறந்ததில்லை என்றார்.


காங்கிரஸ் மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எப்போதும் மெளனம் சாதிப்பது ஏன் என்றதற்கு, "இது தொடர்பாக என் கருத்துகள் அனைத்தையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்து விட்டேன்" என்றார். இது, பிரதமரிடம் தாம் தெரிவித்துவிட்டதாகவும், பிரதமர்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குறைகூறும் தொணியில் பேசினார்.


இப்படி எல்லா கேள்விகளுக்கும் தொடர்பு இல்லாமல், தெளிவான பதில் அளிக்காமல் பேசிய ராகுல் காந்தி குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் குவிந்தன. ராகுல் சிறுபிள்ளை போல் பேசுவதாக கேலி செய்யப்பட்டார். பிரதமர் பதவியை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, வியப்பூட்டும் வகையில் "நான் இப்போது இங்கே ஏன் அமர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே பெரிய கேள்வி" என்றார்.


ராகுல் காந்தி முதல் முறையாக பேட்டியளித்துள்ளார் என டைம்ஸ் நெள சேனல் தெரிவித்திருந்தாலும், கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அவர் தைனிக் பாஸ்கர் இந்தி பத்திரிகைக்கு பேட்டியளியிருந்தது குறிப்பிடத்தக்கது.\\\\

ட்வீட்டாளர்களை ஜோக்காளர்களாக்கிய ராகுல் பேட்டி!




மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 'டைம்ஸ் நெள' சேனலுக்கு அளித்த பேட்டி, அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ இல்லையோ... இணையவாசிகளின் கற்பனைத் திறனுக்கு ஊக்கியாக இருந்திருக்கிறது.




குறிப்பாக, சமூக வலைத்தளமான ட்விட்டரில், ட்வீட்டாளர்கள் ஜோக்காளர்களாகி, நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான ட்வீட்களால், ராகுலை ட்ரெண்டிங்கில் வலம் வரச் செய்தனர்.


ட்விட்டரின் டாப் 10 ட்ரெண்ட்டிங்கில்

 முதல் 8 இடங்களை ராகுலே ஆக்கிரமித்திருந்தார். #RahulSpeaksToArnab | #ArnabVsRahul | #FranklySpeaking | #ComedyNightsWithPappu | Pappu | RTI | Women Empowerment முதலான ஹேஷ்டேகுகள் ஏற்றத்தில் இருந்தன.
ராகுல் பேட்டியைத் தொடர்ந்து வந்த எண்ணற்ற ட்வீட்களில் மிகவும் பிரபலமானவற்றில் சில இங்கே:


நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், ராகுல் காந்தி,

அது இது எது நிகழ்ச்சியின் மாத்தி யோசி சுற்றை விளையாடிக்கொண்டிருந்தார்.


@Chingakutty

அர்னாப்: நம் தேசத்தை ஏலியன்கள் படையெடுத்தால் என்ன செய்யலாம்?
ராகுல்: காங்கிரஸ்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்தியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


@TheUnRealTimes

வாழ்க்கை உங்களுக்கு ராகுல் என்ற பெயரைத் தந்தால்,
அதோடு டிராவிட்டை இணைத்துக் கொள்ளுங்கள்
காந்தியை அல்ல


@dhiry2k

இன்று, நாம் அனைவரும் ஞானவான்கள் ஆனோம்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் நம்மிடம் பதில் உள்ளது.
"பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், தகவல் அறியும் உரிமை சட்டம்"


@Viram

இந்த ராகுல் காந்தி பேட்டியில் கேள்விகள் இருந்தன,
பதில்களும் இருந்தன


ஆனால் இரண்டுக்குமான தொடர்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.


@bhogleharsha

ராகுல் காந்திட்ட உங்க பேரு என்னன்னு கேட்டா கூட 'empowering the women'ன்னு பதில் சொல்லுவாரு போல! :>


@BalaramanL


ஆர்.டி.ஐ-இன் விரிவாக்கத்தைக் கேட்காமல் இருந்து,
ராகுல் காந்தியை தர்மசங்கடப்படுத்தாமல் விட்டதற்கு
அர்னாப் கோஸ்வாமிக்கு பத்மபூஷண் விருது கொடுக்க வேண்டும்


@arnab_chak


இந்த பேட்டி என் கல்லூரி பிராக்டிகல் தேர்வுகளை ஞாபகப்படுத்துகிறது.
'நீ என்ன கேள்வி கேட்டாலும் எனக்குத் தெரிந்த பதிலைத் தான் சொல்லுவேன்'


@it_saurabh


ஒவ்வொரு முறையும் காங்கிரஸ், நரேந்திர மோடிக்கு தோண்டும் குழியில்
ராகுல் காந்தி குதிக்கிறார்


@rishibagree


ராகுல் காந்தி அவர்களே, 2+2 எவ்வளவு?


அர்னாப், பெண்கள் கையில் அதிகாரம் செல்ல வேண்டும். அரசியலை மாற்ற வேண்டும். அடுத்த கேள்வி?


@maheshmurthy

அடிப்படை பிரச்சினை என்னவென்றால்,
ராகுலுக்கு முதல் கேள்வி புரியும்போது
அர்னாப் 3-வது கேள்வியை கேட்டு முடிக்கிறார்.


@reviewero


நம் நாட்டில் உள்ள பெண்கள் ஜனத்தொகையை விட அதிக முறை
'பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்' என்கிற வார்த்தைகளை ராகுல் காந்தி இப்போது சொல்லிவிட்டார்


@i_Psycho


இது இரு வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போல் உள்ளது.
அர்னாபின் கேள்விகள், ராகுலின் பதில்கள்.


@gauravkapur


மோடிக்கு, பேச விருப்பமில்லை
ராகுலுக்கு, பேசத் தெரியவில்லை
கேஜ்ரிவால், பேச்சை நிறுத்தவில்லை


@daddy_san


அர்னாப்: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?
ராகுல்: கோழிக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், முட்டைக்கு தகவல் அறியும் சட்டத்தைத் தரவேண்டும்.


@chandana

 நன்றி - த தமிழ்  இந்து 

Tuesday, December 25, 2012

பெண் சுதந்திரம் என்ற பேரில் ஊரைச்சுத்திட்டு இருக்கலாமா? - அமைச்சர் பேச்சு - விவாதங்கள் , சர்ச்சைகள்

ஐதராபாத் :"" நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.

ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.

இவரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில், மீண்டும் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:நானும், ஒரு தந்தை தான்; எனக்கும், குழந்தைகள் உள்ளன. ஒரு தந்தையாக, என் கோபத்தை வெளிப்படுத்தினேன். 



 டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், என்னை மிகவும் பாதித்துள்ளது. இது, கண்டனத்துக்குரியது. நாட்டையே, இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. நான் தெரிவித்த கருத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.




மக்கள் கருத்து 


1. இவர் கூறிய கருத்து மிக மிக சரி. பெண் சுதந்திரம் என்று கூறி கொண்டு சும்மா இருக்கும் பெண்களை உசுப்பேற்றி அவர்களை சுதந்திரமாக நடமாட விட்டு அவர்களை ஒரு VULNERABLE SITUATION க்கு தள்ளி விடுவார்கள். சுதந்திரம் சுதந்திரம் என்று பெண்கள் மனதில் ஆழ பதிந்து,, என்ன செய்தால் என்ன எந்த நேரத்தில் யாருடன் எங்கே சுற்றினால் என்ன? போன்ற கேள்விகள் மனதில் தோன்றி இதை போன்ற விஷ பரிட்சைகளில் இறங்கி கடைசியில் மானத்தையும் உயிரையும் கூட இழக்கிறார்கள். 



இனியும் பெண்கள் இதை போன்ற சுதந்திர போக்கை கடைபிடித்து பாதிப்படைந்தால், பாதிக்கப்பட்ட இந்த ஒரு பெண்ணுக்காக இன்று போராடும் மாணவர்கள் கூட திரும்பி பார்க்க மாட்டார்கள். பெண்களே நீங்கள் சுதந்திரமாக இருங்கள் ஆனால் அதற்கு ஒரு நேரம் காலம் வைத்திருங்கள். முடிந்தவரை பெற்றோர்களுடனோ அல்லது கூட பிறந்தவர்களுடனோ மட்டுமே செல்லுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவார்கள். நீங்கள் ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ ஆனால் நீங்கள் ஒரு WEAKER SEX . உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 



இது இயற்க்கை பெண்ணினத்திற்கு இழைத்த அநீதி. இதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன தான் தைரியசாலியாக இருந்தாலும் கயவர்களின் கைகளில் மாட்டும்போது உங்களால் எதுவும் செய்ய இயலாது. சினிமாவில் வேண்டுமானால் கூட இருப்பவன் காப்பாற்ற வருவான். ஆனால் நிஜத்தில் பார்த்தீர்களா?. ஆகவே உங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள். 



உங்கள் பாதுகாபிற்க்கு யாரவது இதை போன்ற கருத்தை தெரிவித்தால் அதற்கு எதிர்ப்பு காட்டாதீர்கள். யார் என்ன கூறினாலும் அது உங்கள் நன்மைக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை போன்ற கருத்துக்களுக்கு எதிர்ப்பு காட்டுபவர்கள் உங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்ய மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான சுதந்திரம் உங்களுக்கு உண்டு. அதை ஒரு வரைமுறையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள். 



2. நேற்று நடந்த டெல்லி போராட்டத்தில் நான் பார்த்த ஒரு வாசகம் "DONT TELL HOW TO DRESS" இந்த மாதிரி பெண்களை என்ன சொல்வது இது இவர்களின் தவறா அல்லது இவர்களின் பெற்றவர்களின் தவறா பெண்ணுரிமை பேசுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பேசக்கூடாது.இந்த அமைச்சர் சொன்னது தப்பு கிடையாது 



3. தப்பு செய்தவன் உயிருடன் நன்றாக இருக்கிறான்.. பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள்.. அவனுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்று ஒரு அறிக்கை விட துப்பு இல்லை.. இங்கு சிலர் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று கூட ஐடியா கொடுக்கிறார்கள்.. 


இவர்களை எல்லாம் என்ன சொல்வது? வெறுப்பாக இருக்கிறது.. பிரச்னையை சரியான கோணத்தில் அணுக கூட தெரியாத அளவிற்கு நம்மவகளின் மனது இருக்கிறது.. கேட்டால் கலாசாரம் என்கிறார்கள் இந்த நாடு தான் பெண்களை போற்றுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது.. நீங்கள் எங்களை போற்றவும் வேண்டாம் இப்படி தூற்றவும் வேண்டாம் எங்களை உயிரோடு விடுங்கள் அது போதும்.. 



4. பெண்கள் பொதுவாகவே ஆண் வர்க்கத்தை ஈர்க்கும் தன்மை படைத்தவர்கள் .ஆகவே இரவில் தனியாக சுற்றாமல் தகுந்த துணையுடன் சென்றால் பாதுகாப்பானதே என்று சொன்ன அமைச்சரின் வார்த்தையில் தப்பில்லை 



5. அவர் கூறுவது உண்மை தானே. சுதந்திரமாக நள்ளிரவில் ஊர் சுற்றிய பெண்ணுக்கு நடந்த கொடுமை தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்து எல்லோரும் போராடுகிறார்களே. இனியாவது பெண்கள் சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருமுன் காப்பது தான் சிறந்தது. இன்று இந்த ஒரு பெண்ணுக்காக பல்லாயிரம் மாணவ மாணவிகள் போராடுகிறார்கள். அதை ENCOURAGING ஆக எடுத்து கொண்டு ""நமக்கு ஏதாவது ஒன்று என்றால் மாணவர்கள் போராடுவார்கள்"" என்ற தைரியத்தில் இனியும் பெண்கள் இரவு வேளைகளில் பாதுகாப்பு இல்லாமல் நடமாடினால் விளைவுகள் இன்னமும் மோசாமாக தான் இருக்கும். 



இன்று போராடும் மாணவர்களும் சலித்து போய் இதை போன்ற குற்றங்களை JUST LIKE THAT எடுத்து கொண்டு விடுவார்கள். பிறகு போராட யாரும் வர மாட்டார்கள். ஆகவே பெண்களே, உங்கள் பாதுகாப்பு முக்கியம், உயிர் மற்றும் மானத்தை விட சில மணி நேர உல்லாசம் எந்த விதத்திலும் உயர்ந்தது இல்லை. வாழ்கையை அனுபவியுங்கள். அதை அனுபவிப்பதற்கு உயிர் முக்கியம். உல்லாசதிர்க்காக மானத்தையும் உயிரையும் விடாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு. 


6. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற முக்கியக் காரணமே ஆண்கள் பலர் இரவு நேரங்களில் தெருக்களில் சுற்றிக்கொண்டும், ஆங்காங்கே நின்று அரட்டை அடித்துக்கொண்டிருப்பதும்தான். நேரத்திக்கு அவரவர் வீட்டிற்கு செல்லவேண்டியதுதானே.... சில நேரங்களின் வேலைக்கு சென்றுவிட்டுத் திரும்பும் பெண்கள் அதிக பணிச்சுமை காரணமாகவோ அல்லது பஸ் கிடைக்காமலோ இரவு நேரங்களில் தெருக்களில் வரும்போது இந்த மாதிரி ரோட்சைடு ரோமியோக்களால் நோட்டம் விடப்படுகிறார்கள். பல நேரங்களில் யார் இவர்கள் எந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூட தெரியாத அளவுக்கு ஆங்காங்கே கூட்டம்போட்டு அரட்டை அடித்துக்கொண்டும் கிண்டல் செய்துகொண்டும் உள்ளனர். பெண்களுக்கு எப்போதும் துன்பம் இதுபோன்ற ஆண்களால்தான். மொத்தத்தில் இரவு நேரத்தில் ஆணோ பெண்ணோ தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது தவறுதான். 



ஆண்கள் செய்யும் தவறை ஒப்புக்கொண்டு அதற்க்கு தக்க நடவடிக்கையும் தண்டனையும் கொடுக்க வேண்டும் என்று கூற நினைக்காமல் பல ஆணாதிக்க மனப்பான்மையுடையவர்கள் இங்கே பெண்களுக்கெதிராக வாய்கிழிய வக்கணையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் தங்களது வீட்டு ஆண் (மகன்)களைக் கட்டுக்குள் (பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடாமல் - ஈவ் டீசிங், தெருக்களிலும் பேருந்து மற்றும் ரயில் பயணத்தின் போது பாலியல் கொடுமை புரிதல், ஆங்காங்கே தேவையில்லாமல் கூட்டம் போட்டுக்கொண்டு அரட்டை அடித்தல்) கொண்டுவாருங்கள் குற்றங்கள் தாமாகக் குறைகிறதா இல்லையா என்று பாருங்கள். 


மாறாக நாங்கள் அப்படித்தான் இருப்போம், செய்வோம், பெண்கள்தான் அதையெல்லாம் மீறி வேலைக்கும் சென்றுவிட்டு வீட்டுக்குள்ளும் அடங்கி இருக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்த.... சொல்லக் கேவலமான வார்த்தைகள்தான் உள்ளது. 


7. ஒரு புறத்தில் நமது கலாச்சாரம் பெண்களை போற்றும் சிறப்பு உள்ளது தான். உலகெங்கும் பெண்களை பாலியல் பொருளாக கருதும் போது, நமது கலாச்சாரம் தான் பெண்களுக்கு கடவுளை போன்ற ஒரு தனி இடத்தை அளித்துள்ளது. அழகு போன பின் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இன்னொரு இளம் பெண்ணை மணக்கும் கொடுமைகள் இந்தியாவில் மிக குறைவு. அது நமது கலாச்சாரத்தின் சிறப்பு அம்சம்தான், அதே சமயம் பெண்களின் சிறகுகளை ஒடித்து கூண்டுக்குள் வைப்பதிலும் நாம் தான் முதல்வர்கள். 


அதற்கு முதலில் பெண் என்று தெரிந்ததும் ஆற்றில் வீசி விடுவோம், தவறி உயிர் பிழைத்து விட்டால், கல்வியை தர மாட்டோம் பின் இல வயதிலேயே திருமணம் செய்து வைத்து ஏழு எட்டு உருப்படிகளுக்கு தாயாக்கி விடுவோம், தப்பி தவறி படித்து விட்டால், திருமணத்தின் போது நாம் போடும் முதல் நிபந்தனையே வேலையை விட வேண்டும் என்பது தான். மேலே கூறிய அனைத்தையும் தவறாமல் செய்பவர்கள் திமுக காரர்கள். 



பொருளாதாரத்துக்கு கணவனை சார்ந்தே இருக்கவேண்டிய நிலையை நமது சமுதாயம் உருவாக்கியது தவறு. வாய்க்கும் கணவர்கள் குடிகாரர்களாய், சூதாட்ட காரர்களாய் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வை சற்று நினைத்து பாருங்கள். வெளியிலும் செல்ல முடியாது, உள்ளேயும் புழுங்கி கிடைக்கணும். இதனால் தான் தற்கொலைகள் பெருகுகின்றன. அதில் சில தற்கொலைகள் விவசாயம் பொய்த்ததினால் வந்தது என்று தலைவரும் குடைச்சல் கொடுக்கிறார், இத எங்க போயி சொல்லி ஒப்பாரி வைக்கிறது ??? 


8. அமைச்சர் சொன்னது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து . நான் ஒரு சாமானியன் அதனால் இதை சொல்லமுடியவில்லை. இந்தியாவிலுள்ள கோடிக்கன்னக்கான பெண்கள் இரவில் சுற்றினால் ஒவ்வொரு பெனிற்ற்கும் இரண்டு காவலர்களை நியமிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. அமைச்சரின் கூற்றிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவன் இதை உணரவேண்டும். 



மேலும் இதை எதிர்பவர்களை பார்த்து நான் கேட்கிறேன். உன் வீட்டு பெண்களை நீ தனியாக செல்ல அனுமதிப்பாயா? மனதில் உள்ளதை அதுவும் தத்துவத்தை வெளியில் பேசுபவனே மனிதன். இரவில் கேளிக்கை விடுதிக்கு செல்வதையும் திருமணமாவதற்குமுன் மற்ற ஆடவருடன் சுற்றுவதையும் நமது கலாச்சாரம் சரி என்று சொல்வதில்ல. பெண்கள்ளுக்கு சாதகமாக பேசியே அவக்களை கயவர்களின் காமவலையில் சிக்க காரனம்மகாதீர். அ. கோவிந்தராஜ் - துபாய் 



9.ஆந்திர அமைச்சர் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், தானே வலிய போய் இப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டிகொள்ளகூடாது என்பதற்காகவும், நல்ல எண்ணத்தில் சொன்னதை கூட sollakoodaadhu என்றால் என்ன சொல்வது. பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என கருதுகிறேன் , மறுக்கவும் முடியாது. நடுஇரவில் பெண்கள் தனியே செல்வதை தவிர்க்கவேண்டும் என்று சொல்வதை கூட ஏற்றுகொள்ள முடியாது என்பவர்கள் போலியாக பெண்ணுரிமை பற்றி பேசும் நபர்களாகத்தான் இருக்க முடியும் , அமைச்சர் பெண்கள் நடு இரவில் ஊர் சுற்றகூடாது என்று சொன்னதால் தான் பற்றிக்கொண்டு வருகின்றது போலிருக்கின்றது . நடு இரவில் ஊர் சுற்றகூடாது , என்பதுடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதாவது பையன்களுடன் சேர்ந்து கொட்டமடித்துகொண்டு ஊர்சுற்றகூடாது. இது போன்று இளம்பெண்களை சூறையாடியுள்ள எல்லா குற்றவழக்குகளிலும் ஆழ்ந்து கவனித்தால் தெரியும், அந்த இளம்பெண் , ஒரு இளைஞ்சன், அல்லது சில இளைஞ்சன்களுடன் வந்து இருப்பார். தன் பெற்றோர்களுடன் வந்த பெண்களுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்ததாக அதிகளவில் செய்திகள் இல்லை. நடுஇரவில் பையன்களுடன் ஊர்சுற்றிகொண்டிருக்கும் பெண்ணை பார்த்தமாத்திரத்தில் , அப்பெண்ணின் காரக்டரில் குறைபாடு உள்ளவளாக தெரிகின்றது அவர்கள் கண்களுக்கு. எனவே வம்பு செய்ய தொடங்கிவிடுகின்றனர். 



 அது மட்டுமல்லாமல் , கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் , நாகரிகம் என்கிற போர்வையில் எந்த அளவுக்கு தன் உடம்பை காட்ட முடியுமோ அந்தளவுக்கு காட்டிக்கொண்டு, வாலிப பசங்களை உசுப்பெற்றிவிடுவதெல்லாம் தவறாகவே தெரியவில்லையா? . டெல்லியில் தான் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடக்கின்றது என்றால் அதற்க்கு காரணம் ,நாம் நம் இந்திய பண்பாடைஎல்லாம் மறந்து ,மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி முத்தெடுப்பதால் தான். 



சென்ற ஏழெட்டு ஆண்டுகளாக சென்னையில் கூட வெளி மாநில பெண்கள் அதிகளவில் வந்து நடமாட துவங்கியதில் இருந்து , தமிழக பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருகின்றதை கண்கூடாக காணலாம் . குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுத்தால் மட்டுமே ,குற்றங்கள் குறையும். குற்றம் செய்தபின்பு , குற்றவாளிக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுப்பது மட்டுமல்லாமல், குற்றம் நடப்பதை தடுக்க பெண்களும் முன்னெச்சரிக்கையுடன் , பாதுகாப்பில்லாத நேரங்களில் , பாதுகாப்பில்லாத இடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் . 


10. இன்று நமது கலாச்சாரத்திற்கும் ஓவாத தொழில் அமைப்புகள் உருவாகி விட்டன, பெண்களுக்கு எபொழுது பனி நேரம் என்பது சட்டத்தில் இல்லை, இரவு நீதில் பனி செய்யும் பெண்களுக்கு உத்திரவாதம் என்ன , அரசின் உத்திரவாதம் என்ன, காவ்வல் துறையில் பெண்கள் பனி புரிகிறார்கள், காவல் துறையிலையே சில காவலர்களை பற்றி நாம் அன்றாடம் செய்திகள் படிக்கிறோம்,



 எனிவே பெண்களுக்கு இந்த வேலைகள் எல்லாமே ஒரு சாதனை கல் தான், ஒரு பெண் ஒரு ஆணுடன் சுற்றுவது என்பது தனக்கு பாதுக்காப்பு என்கிற அர்த்தத்திலும் வைத்து கொள்ளலாம், இன்று ஒன்று மட்டும் சொல்லலாம் அந்த பெண்ணும் அந்த ஆன் நண்பரும் ஒன்று மட்டும் நிச்சயம் தங்கள் மனதில் எடுத்து கொள்வார்கள் அன்று மட்டும் அந்த பயணத்தை மட்டு படுத்தி இருக்கலாம் என்று, அது நடக்காத ஒன்று, ஆனால் நடந்து விட்டது, இனி என்ன செய்வது, வாய்ப்புகளை நாம் மற்றவர்களுக்கு தடுத்து விட்டால் குற்றங்கள் இல்லை, 


நம் நாட்டில் பாதிக்கும் நேரத்திற்கும் மேல் மின்சாரம் கிடையாது உதவிக்கு இருட்டில் கூட யாரையும் கூப்பிட முடியாது, பஸ்சில் அயர்ந்து தூங்கி விட்ட சிறுமியை ஒரு கண்டக்டர் தவறு செய்ததை சிறுவயதி ல் படித்து இருக்கலாம், அது அரசு பேருந்து, காரணம் ப்ரெய்வெட் பஸ்களை இரவு நேரத்தில் தடை செய்யலாம் என்று சொல்லாலாம் இரவு பஸ்சில் பெண் போலிசே துப்பாக்கியுடன் நிறுத்தலாம், 


நன்றி - தினமல்ர் 

Wednesday, May 02, 2012

ஆஃபீஸ் ரூமிலேயே கில்மா.. அலப்பறை அபிசேக் மாட்டினாரு - சி டி ரிலீஸ். ஜூ வி கட்டுரை

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அபிஷேக் சிங்வி, இப்போது தலைப்புச் செய்தி ஆகிவிட்டார். அதுவும் கிளுகிளு செய்தி​யாக!         


சி.பி - அப்போ அவர் பேரு இனிமே ஜிஞ்சனுக்கு சிங்க்வீ?

உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்​திலும்  முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் என்கிற முறையில் தினமும் மீடியாக்களில் இவரது முகத்தைப் பார்க்கலாம். மாநிலங்கள் அவையின் உறுப்பினர் என்கிற வகையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் நாடா​ளுமன்ற நிலைக் குழுவின் தலைவர். 



முதன்முதலில், ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பேசியதோடு, 'லோக்பால்’ என்ற வார்த்தையைக் கொடுத்தவர் இவருடைய அப்பா. அதனால்தான், லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் குழுவில் இவர் இடம் பிடித்தார். இவரைத்தான் சீண்டிப் பார்த்துள்ளது ஒரு சி.டி.


அபிஷேக் சிங்விக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு சேம்பர் உள்ளது. இங்கு ஒரு மொபைல் (போன்) கேமராவைப் பொருத்தி சிங்வியின் நடவடிக்​கைகளைப் படம் பிடித்து இருக்கிறார், அவரது டிரைவர் முகேஷ்குமார். சிலரது உதவியுடன் கம்ப்யூட்டரில் அந்தக் காட்சிகளைப் பதிவிறக்​கம் செய்து சி.டி-யாக​வும் தயாரித்து உள்ளார். அதைக் காட்டி சிங்வியை மிரட்டவும் செய்திருக்கிறார்.



சிங்வி ஒரு பெண்ணோடு உரையாடுவது மட்டுமின்றி உற​வாடும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. அந்தக் காட்சிகள் மிகத்தெளிவாக இல்லை என்​றாலும், சில அங்க அசைவுகளும் ஆடையைக் களையும் காட்சிகளும் இருக்கிறது. 


இந்த வீடியோ தன்னிடம் இருப்பது குறித்து, கடந்த மார்ச் மாதமே எஸ்.எம்.எஸ். மூலம் முகேஷ்குமார் தகவல் கொடுத்திருக்கிறார். தனக்குக் குறைவான ஊதியம் கொடுத்தது மட்டுமின்றி, தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட ஊனத்துக்கு சிங்வியின் நாய்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்துள்ளார் முகேஷ். அதனாலேயே, கேமராவைப் பொருத்தி அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து சி.டி-யாக தயாரித்து உள்ளார்.


அபிஷேக் சிங்வி இந்த விவகாரத்தில் போலீ​ஸுக்குப் போகவே, பத்திரிகைகளுக்கும் சில அரசியல்வாதிகள் கைக்கும் சி.டி. போய்ச் சேர்ந்தது. உடனே, சிங்வி டெல்லி உயர் நீதிமன்றத்தில், 'இந்த சி.டி. காட்சிகளை பத்திரிகைகள் வெளியிடவோ... ஒளிபரப்பு செய்யவோ கூடாது’ என்று வழக்கு தொடர்ந்தார். கூடுதலாக, தன்னுடைய டிரைவர் பிளாக்மெயில் செய்ததையும், இது சம்பந்தமாக டெல்லி போலீஸில் புகார் கொடுத்து இருப்பதையும் மனுவில் குறிப்பிட்டார்.


 இதையட்டி, இந்த சி.டி-யை ஒளிப்பரப்பத் தடை விதித்ததோடு, சி.டி-க்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பத்திரிகை நிறுவனங்களுக்கு கோர்ட் உத்தரவு போட்டது. இந்த சி.டி குறித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி ஒருசில பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அதன்படி, பத்திரிகை நிறுவனங்கள் ஏப்ரல் 17-ம் தேதி சி.டி-யை நீதிமன்றத்தில் ஒப்படைத்தன. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த சி.டி-யில் இருந்த காட் சிகள் யுடியூப் மூலமாக ஒளி பரப்பானது. இதனை சிங்வி தரப்பு எத்தனையோ முயற்சி செய்து ரிமூவ் செய்தாலும், மீண்டும் மீண்டும் அப்லோடு செய்யப்பட்டது. 


அதனால், உலகம் முழுவதும் லட்சக்​கணக்​கான பார்வை​யாளர்கள் இந்த ஆபாசத்தைக் கண்டு களித்தனர். ஆனாலும், இந்த விவகாரத்தை எந்த பத்திரி​கையும், தொலைக்காட்சியும் தொடவே இல்லை. ஏனென்றால், நீதிமன்றத் தடை இருந்தது​தான்.


நிலைமை அளவுக்கு மீறிப்போகவே, அபிஷேக் சிங்வி தனது நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, சி.டி குறித்து அவரே அறிக்கையும் கொடுத்தார். இதன்பிறகுதான் இந்த சி.டி விவகாரம் அச்சுக்கு வந்தது. மறுநாள் தொடங்க இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் வெடிக்கலாம் என்று கருதியே, சிங்வி முன்னெச்சரிக்கையாக ராஜினாமா செய்தார் என்று சொல்லப்பட்டது.



''இந்த வீடியோ என்னுடைய தனிப்பட்ட விவகாரம். இதில் உள்ள காட்சிகள் ஜோடிக்கப்பட் டுள்ளது. எனது  டிரைவர் பிளாக்மெயில் செய்தது குறித்து காவல்துறையில் ஏற்கெனவே புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்று விளக்கம் சொல்கிறார் சிங்வி.


''மத்தியத் தடய அறிவியல் துறைக்கு இந்த சி.டி.யை அனுப்பி, உண்மையைக் கண்டறிய​வேண்டும். அப்​போது​தான் சி.டி-யில் இருப்பது உண்மையா அல்லது ஜோடிக்கப்​பட்டதா என்பது தெரியும். அதை ஏன் செய்யவில்லை?'' என்று கேட்கிறார் பி.ஜே.பி. தலைவர் அருண்ஜெட்லி. 


ஆனால், ஏனோ இந்த விவகாரம் குறித்து பி.ஜே.பி. இரண்டு அவைகளிலும் கேள்வி எழுப்பவே இல்லை. சிங்வியின் தந்தை எல்.எம். சிங்வியும் பிரபலமான வழக்கறிஞர், அரசியல்வாதி. அவர் முதல் முறையாக பி.ஜே.பி. சார்பில்தான் மாநிலங்கள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்த அபிமானம்தான் சிங்வியை எதிர்க்கட்சிகளிடம் இருந்து காப்பாற்றி உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள்.


மகனுக்குத் தந்தை ஆற்றும் உதவி!

Saturday, March 17, 2012

சிங்கள கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள், சேனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்

லகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி! 

நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்’ என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை.


வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வாணக் குவியலாய் லட்சக்கணக்கில் செத்து அழிந்தபோதும்கூட, 'ஒரு புகைப்படத்துக்காக கண்ணீர் வடித்த உலகச் சமூகம்’ அமைதியாகவே இருக்கிறது.


இலங்கையின் இனப்படுகொலை களுக்கு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் இருந்தும், 'தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று சாயம் பூசியதே தவிர, 'இது மனிதத்துக்கு எதிரான போர்’, 'தமிழர் களை அழிக்கும் போர்’ என்று சிறு முணுமுணுப்பும் எழவில்லை. ரசாயனக் குண்டுகளில் கருகிப் பொசுங்கி, பிய்த்து எறியப்பட்ட உடலையும் விடாமல் புணர்ந்து சிரித்து தமிழர்களைத் தின்று தீர்த்தது சிங்கள இனவெறி. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த இலங் கையின் இனப்படுகொலையும் ஈழத் தமிழர்கள் வெந்து துடித்து அனுபவித்த ரணங்களையும் சொற்களால் வர்ணித்துவிட முடியாது.


உயிர் கொடுத்த சேனல் 4 


இறுதிக்கட்டப் போரின் முடிவுக்குப் பிறகு, உலகச் சமூகத்துக்கு பொட்டில் அடித்தது போல், சேனல் 4 தொலைக்காட்சி சில காட்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. 'இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற காணொளியை வெளியிட்டது. இலங்கைக்கு எதிரான இந்தக் காணொளியைப் பார்த்து, இங்கிலாந்து நாடாளு மன்றம் தொடங்கி நார்வே, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் செனட் வரை அதிர்ந்தன. அந்தக் காணொளி திரையிடப்படாத நாடே இல்லை என்ற அளவுக்கு உலகெங்கும் அதிர்ச்சியை உரு வாக்கியது. இப்போது நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு, பக்கபலமாக இருப்பது இந்தக் காணொளிக் காட்சிகள்தான். இப்போது மீண்டும், 'இலங்கையின் கொலைக்களங்கள் -  தண்டிக்கப்படாத குற்றங்கள்’ என்ற பெயரில் புதிய காணொளியை சேனல் 4 கடந்த புதன்கிழமை வெளியிட்டது!


அதிர வைத்த ஆவணப் படம்!
கடந்த மார்ச் 11 அன்று ஓர் ஆவணப் படம், மனித உரிமைத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கைஅரசு பாதுகாப்பான பகுதி என்று அறிவித்த பகுதிகளில் இருந்த அப்பாவி மக்கள் மீது செல் குண்டு தாக்குதல்கள் நடத்தியது முதல், பெண் புலிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி இறந்த பிறகும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது வரை அதில் இரு ந்தது. இதையே சேனல் 4 வெளியிட்ட நேரத்தில், 'அது பொய்யானது, ஜோடிக்கப்பட்டது’ என்று, இலங்கை அரசு சொன்னது. ஆனால், இப்போது காட்டப்பட்ட ஆவணப் படத்தில் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என் பதும்  தெளிவாக அடையாளம் காணும் அளவுக்கு இருக்கிறது.


பாதுகாப்பான வளையம் என்று சொல் லப்பட்ட பதுங்கு குழிகள், ஐ.நா. உதவியுடன் அப்பாவி மக்கள் பாதுகாப்புக்காக இலங்கை அரசால் அமைக்கப்பட்டன. அதன் மீதே குண்டுகள் வீசித் தாக்கியுள்ளார்கள். பாதுகாப்பு வளையத்துக்கு வந்த மக்களுக்கு உணவு தரப்படவில்லை. காயம்பட்ட வர்கள் மருந்து இல்லாமல் இறந்து போயிருக் கிறார்கள். புதுமாத்தளன் மருத்துவமனை மீது செல்குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்த ஆவணப் படத்தில் இருக்கின்றன.


புதன்கிழமை காணொளி! 

'அய்யோ! இந்தப் பச்சப் பிள்ளையைக் காப்பாத்த முடியலையே’ என்ற மரணத்தை  விழி முன்னே நிறுத்தும் தாயின் கதறலின் ஊடே சேனல் 4 தொலைக் காட்சியின் புதிய காணொளி கடந்த புதன்கிழமை வெளியானது. சுமார் 53:12  நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளிக் காட்சிகளை கல்லம் மெக்ரே இயக்கி உள்ளார்.


''உலக நாடுகள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டும், உலக சமுதாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்குத் தண்டனை அளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டன. இத்தகைய தருணத்தில்தான் இந்தக் காட்சிகளை வெளியிடுகிறோம்'' என்ற விளக்கத்துடன் தொடர்கிறார் ஜான் ஸ்னோ.


''சேனல் 4 வெளியிட்ட இலங்கைக் கொலைக் களங்கள் வீடியோவைப் பார்த்துவிட்டு என் 28 வயது மகன் கதறி அழுதான். இந்தக் கொடூரத்தைக் கண்டுவிட்டு நான் சிங்களன், இலங்கை பிரஜை என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது என்றான்'' என்று, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சொல்வது அடுத்து வருகிறது.


இங்கிலாந்து முன்னாள் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட், ''26 ஆண்டு காலமாகப் போராடிய விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி, பெருந்தொகையான மக்களை இரு சகோதரர்களான கோத்தபயவும் மகிந்தாவும் அழித்து உள்ளனர். அவர் கள் தயாரித்த நல்லிணக்க அறிக்கையில் இந்தக் கொடூரங்களுக்கு யார் காரணம் என்பதைக் கூற மறுத்து விட்டனர்'' என்று குற்றம் சாட்டுகிறார்.


கத்தினால் ராணுவம் சுடும்! 

2009 ஜனவரி 23 அன்று பொதுமக்களைக் காப்பதற்காக ஐ.நா. சார்பில் பதுங்கு குழிகள் அமைக் கப்பட்டன. 'பாதுகாப்பு வளையம்’ என்று இலங்கை அரசால் முதலில் சொல்லப்பட்ட உட்டியகட்டுப் பகுதி அருகே பீட்டர் மெக்கே என்ற ஐ.நா. பணியாளர் மேற்பார்வையில் இது அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் ஐ.நா-வின் பதுங்கு குழிகள் மீதே எறிகணைகள் விழுந்திட.. இந்தத் தகவலை சரத் பொன்சேகா, கோத்தபய ஆகியோரிடம் பீட்டர் மெக்கே சொல்கிறார். உடனே, பாதுகாப்பு வளைய ங்களுக்கு கொஞ்சம் தள்ளி எறிகணைகளை வீசியிருக்கிறார்கள்.


பாதுகாப்பு வளையத்தில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர், 'நாங்கள் பட்ட காயங்களுக்கு மருந்து இல்லாமல் கத்திக்கொண்டே கண் சொருகி விழுந்து விடுவோம். அதுதான் எங்களுக்கு வலி நிவாரணி. அடிபட்டவர்கள் கத்திக்கொண்டே இருப்பதைக் கண்டால், இழுத்துப்போட்டு சுட்டுக் கொன்று விடுவார்கள் ராணுவத்தினர்''  என்கிறார் அதே வலியோடு.  


பிரபாகரனின் இளைய மகன் படுகொலை! 

மே 17-ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது அழுத்தமாக இந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது. பாலச்சந்திரனின் மெய்க்காவலர்கள் ஐந்து பேரும் கண்கள் கட்டப் பட்டு, கைகள் முதுகின் பின் கட்டப்பட்ட நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

 பாலச்சந்திரன் உடம்பில் இரண்டடி முதல் மூன்று அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் ஐந்து குண்டுகள் பாய்ந்து ள்ளன. இவர், பிரபாகரனின் மகன் என்பதாலேயே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று சேனல் 4 குறிப்பிடுகிறது.


தலைப்பகுதி மோசமாக சிதைக்கப்பட்டு, உடலில் சேறு பூசி, உடைகளை அகற்றிக் காட்டப்படுகிறது புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல். 'இது பிரபாகரன்தான்’ என்று கருணா உறுதிப்படுத்தியதாக சிங்கள ராணுவம் சொல்கிறது. ஆனால், இது வரை மருத்துவச் சான்றிதழை இந்தியாவுக்குத் தராமல் மறைக்கிறது இலங்கை அரசு. சிங்கள ராணுவத்தினரால் காட்டப்பட்ட அதே காட்சிகள், சேனல் 4 தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டன. ஆனால், இவை உண்மையில் பிரபாகரன்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை.


ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் இல்லை! 


இலங்கையில் போர் நடைபெற்ற போதும், அதன் பின்னரும் ஊடகவியலாளர்கள் நிலை குறித்து இலங்கையின் சுதந்திர ஊடகவியலாளர் பாஷன அபயவர்த்தனே பேசி இருக்கிறார். ''இலங்கையில் ஊடகவியலாளர் யாராக இருந் தாலும் அவர் கொல்லப்படவோ அல்லது நாட்டை விட்டு விரட்டப்படவோ வேண்டும் என்ற நிலையே இப்போதும் தொடர்கிறது. இது வரை, 60 பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டு உள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் இதுவரை சிங்களர்கள், தமிழர்கள் என்று 26 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்'' என்று சொல்கிறார்.


இதில் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும், படங்களும் தடயவியல் நிபுணர் டென்ரிக் ஃபவுன்டர் மூலமாக ஆராயப்பட்டுள்ளன. ''இந்தக் காட்சிகள் அனைத்தும் உண்மை. இதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ஜோடிக்கப்பட்ட காட்சிகளோ, பொய்யானவையோ அல்ல.




சிங்கள ராணுவத்தினர் எடுத்த காட்சிகள்தான் இவை. பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்டதில், அவருக்கு உடல் அளவில் எந்தக் கொடுமைகள் செய்யப்பட்டதற்கும் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர் மனதளவில் கொடுமை படுத்தப்பட்டிருப்பார் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது'' என்கிறார்.
இசைப்பிரியாவை சீரழித்த முந்தைய காட்சிகள், பெண் போராளி கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வது, உயிரற்ற போராளிகளைக் குப்பைகளைப் போல் ஆடைகளை அகற்றி டிராக்டரில் தூக்கி வீசும் சிங்களப் படை, உயிரைக் காத்துக்கொள்ள கடலிலும் காடுகளிலும் தஞ்சம் புகுந்து தப்பிக்கும் மக்கள் என்று ரத்தசாட்சிகளாய் சிவக்கிறது திரை.


போர் முடிந்ததும் சிங்களப் படையின் கொண் டாட்டங்கள், இந்திய அரசின் சார்பாக சிவசங்கர மேனன் ராஜபக்ஷேவுடன் நடத்திய சந்திப்புகள் போன்ற காட்சிகளும் வருகின்றன. 2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இருக்கும் சமயத்தில், '40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா-வும் உலகச் சமூகமும் மறந்துவிட வேண்டாம்’ என்று, குற்றவாளிகளை அடையாளம் காட்டிய நீதியுடன் இருள்கிறது காட்சிகள்.


என்ன செய்யப்போகிறது இந்தியா?