1.நடன நிகழ்ச்சிகளில் சில பெண்களின் அங்கஅசைவுகளுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் அந்த பெண்களின் நளினத்தை அவர்களயும் அறியாமல் குறைத்துவிடுகிறது
--------------------------------
2. தாலி கட்டிய கணவனை பொது இடங்களில் டா போட்டு பேசுவதன் மூலம் தன் பிரத்யேக உரிமையை நிலை நாட்டுகின்றனர் சில புரட்சிப்பெண்கள்
--------------------------
3. அந்த ஆளே சரின்னு போறாராம். உங்களுக்கு எங்க வலிக்குது?
ஹலோ, அந்த ஆளே நான் தாங்க.. ஹி ஹி
-----------------------------
4. தன் சவுகர்யத்தை முன்னிட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தாலும் அந்த பெண் அடங்காத தன்மையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள்
-------------------------------------
5. ஆண்களின் சில குரூர மகிழ்வுகளுக்கு தனது அசாதாரணமான சமயங்களில் உருவாகும்ஆடை நெகிழ்வகளும் காரணம் என்பதை பெண் பல சமயங்களில் உணர்ந்தே இருக்கறாள்
--------------------------------
6. பெண்ணின் படைப்புக்கு தனி கவனம் என்றும் உண்டு ,பலரால் சிலாகிக்கப்டும், சிலரால் விவாதிக்கப்படும், பர பரப்புக்கு பஞ்சம் இன்றி
-----------------------------
7. சௌபர்ணிகா - ஹிந்தில SOW = 100 , இங்க்லீஷ்ல BURN = எரித்தல் தமிழ்ல கா = தன்னிடம் பழம் விட்டவர்ளிடம் கூட சண்டை போட்டு டூ விடுபவர்
------------------------
8. வாசன் ஐ கேர்ல எல்லாரும்ரொம்ப அன்பா பழகறாங்கன்னு ஒருபொண்ணு விளம்பரத்துல சொல்லுச்சு, நான்போனப்ப என்னை யாரும் கண்டுக்கவே இல்ல:)
-----------------------------------
9. எண்ணெய் தடவப்பட்ட தலை முடி அழகுக்குறைவு என பல இளைய தலை முறைகள் நினைத்துக்கொண்டு,ஆரோக்யக்குறைவுககு அடி கோலுகின்றனர் ( இரு பாலினரும்)
------------------------------------
10. தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல பெண்கள் தங்கள் விழிகளிலிருந்து கண்ணீரை இறக்கிக்கொள்கிறார்கள்
-----------------------------------
11.ராமராஜன் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கா? அய்யய்யோ எப்படி?
ராமர் ஆட்சியை அவரால தரமுடியுமே? ( ராமர் + ராஜன்)
-------------------------------
12. என் ஆளு நயன் தாரா மாதிரி....
ஓஹோ,சாயல்லயா?
ம்ஹூம், நடத்தைல. லவ் மட்டும் பண்ணா போதும், மேரேஜ் பண்ணிக்கத்தேவை இல்லை
----------------------------------
13. நேற்று ரம்லத்க்கு சக்களத்தியா நயன்தாரா, இன்று நயன்தாராக்கு சக்களத்தியா ஹன்சிகா மோத்வானி இதுதான் வாழ்க்கை # ஜோடி மாறும் கேடி மாறமாட்டான்
--------------------------------
14. தலைவரே, எல்லா எம் எல் ஏஎக்களும் ஏன் லேப் டாப் பார்த்துட்டே இருக்காங்க?
இனிமே பதவி போகுதான்னு மெயில் பார்த்தே தெரிஞ்சுக்கலாம்
------------------------------------
15. காலனி ஆதிக்கம் சிறு குறிப்பு வரைக ./
டீச்சர், காலம் மாறிடுச்சு, இப்போ செருப்பு வீசறதுதான் ஃபேஷன்.. காலணி ஆதிக்கம் தான் ஜாஸ்தி
--------------------------------