ஒரு படைப்பாளிக்கு பெரிய சந்தோஷமே தான் மக்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வுதான்.ஒவ்வொருவரும் எழுதுவதும்,படைப்பதும் இந்த அங்கீகாரத்துக்குத்தான். அதனால் கிடைக்கும் வருமானம் தனி சந்தோஷம் என்றாலும் இந்த அங்கீகாரம்தான் சிறந்தது என்பேன்.
நான் முதன் முதலாக பிளாக் உலகில் வரும்போது கவனித்த இருவர் கேபிள் சங்கரும், கவிதைக்காதலரும்.பதிவுலகின் ரஜினி என போற்றப்படும் சங்கர் சினி ஃபீல்டில் ஆல்ரெடி எண்ட்டர் ஆகி விட்டார்.நம்ம கவிதைக்காதலன் தபு சங்கருக்கு இணையான கவிதைத்திறம் மிக்கவர். அவரது கவிதைகளில் காதல் ரசம் சொட்டும்.
நான் அவர் பிளாக்கில் கமெண்ட் போடும்போதே நீங்கள் சினி ஃபீல்டில் நுழையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கமெண்ட் போட்டேன்.அது உண்மையாகி விட்டது. கந்தகோட்டை என்ற படத்தை எடுத்த எஸ் சக்திவேல் என்ற இயக்குநர் எடுக்கும் உயிரைத்தொலைத்தேன் படத்தில் 2 பாடல் எழுதுகிறார். அதை விட பெரிய விஷயம் டைட்டிலில் ,போஸ்டரில் அவர் பெயர் வருகிறது. ( மணிகண்டவேல்)
இதில் என்ன பெருமை என கேட்பவர்களுக்கு. சினி ஃபீல்டில் அவ்வளவு சீக்கிரம் டைட்டிலில் பெயர் போட விட மாட்டார்கள்.முதல் படத்திலேயே அவர் பெற்ற இந்த வாய்ப்பும் ,பெருமையும் நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.
நேற்றே இறந்து விட்டேன் என்ற கவிதையை பார்த்து இயக்குநர் இந்த வாய்ப்பு கொடுத்தாராம்.பலர் ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்து வாய்ப்பு கேட்டும் கிடைக்காத வாய்ப்பு பதிவு போட்டே இவருக்கு கிடைத்தது ஒரு பதிவர் என்ற முறையில் நம்மை எல்லாம் பெருமை கொள்ள வைக்கிறது.
ஒரு திறமைசாலி அடையாளம் காணப்பட்டால் அது நமக்கு பெருமை. அதே திறமைசாலி நம் நண்பன் என்றால் அந்த பெருமிதம் இரட்டிப்பு ஆகிறது.நமக்கு பதிவு போட மேலும் ஊக்குவிப்பாக இவரது முன்னேற்றம் அமைகிறது.
எனவே இவரது வெற்றியை நமது வெற்றியாக கொண்டாடுவோம்.வாழ்த்துவோம். அவரது ஃபோன் நெம்பர் 9043194811,வயது 24, இன்னும் மணமாகாதவர்.. எனக்கு அண்ணன் மாதிரி..ஹி ஹி
அவரது மெயில் ஐ டி [email protected]
வாழ்த்துங்கள்..