ஒரு ஹை க்ளாஸ் பிராமண குடும்பத்தில் நடக்கும் ஏ க்ளாஸ் கதை . ஹீரோ , ஹீரோயின் இருவருக்கும் பெற்றோரால் நிச்சயம் நடந்துடுது. நம்மாளுங்க பட பூஜை போட்ட அடுத்த நாளே படத்தோட டீசர் ரிலீஸ் ஆகனும்னு எதிர்பார்க்கறவங்க . நிச்சயதார்த்தம் நடந்துட்டா சும்மா இருப்பாங்களா? 2 பேரும் ட்ரெய்லர் ஓட்டலாம் , ரிகர்சல் பார்க்கலாம்னு முடிவு பண்றாங்க கலாச்சாரக்காவலர்கள் குய்யோ , முறையோன்னு குதிக்கக்கூடாது அப்டிங்கறதுக்காக குடி போதைல அதை செய்வதா ஒரு சால்ஜாப்பு .
ஆனா பாருங்க ஹீரோவால “டெம்ப்”ரவரியா முடியல . அவனுக்கு அதிர்ச்சி. ஆனா ஹீரோயின் அதைக்கண்டுக்கலை . பஜ்ஜிக்கு உப்பு கம்மியா இருக்கு அப்டிங்கற மாதிரி ரொம்ப சாதாரண்மா அதை எடுத்துக்கறா ( அதை = அந்த பிரச்சனையை ) .
ஹீரோ டென்ஷன் ஆகி என்னால தான் முடியல , நீ வேற யாரையாவது மேரேஜ் பண்ணிக்கோ அப்டிங்கறார். என்ன தான் ஃபுல் மீல்ஸ் சாப்பிடலைன்னாலும் மெயின் மேட்டர் தவிர மத்ததெல்லாம் முடிஞ்சிடுச்சே அப்டிங்கறதால ஹீரோயின் பிரேக்கப்க்கு ஒத்துக்கலை . முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், ட்ரை த ட்ரை அப்டிங்கறா
அதுக்குப்பின் என்ன நடந்தது ?என்ன என்பதே பின் பாதி திரைக்கதை
1982 ல் ரிலீஸ் ஆன பி சி செண்ட்டர் ரசிகர்களுக்கான வாலிபமே வா வா படம், 1992 ல் ரிலீஸ்
ஆன சி செண்ட்டர்களில் செம ஹிட் ஆன முதல் இரவே வா வா
தெலுங்கு டப்பிங்க் படம் இரண்டின் கண்ணியமான தழுவல் தான் இது .
ஹீரோ பிரசன்னா.
சினேகாவை மேரேஜ் பண்ணி கொஞ்ச நாள் ல யே இப்படி ஒரு கேரக்டர் செய்ய அபார துணிச்சல்
வேணும்.சபாஷ் கேரக்டர். பல காட்சிகளில் இவர் மிக கச்சிதமான நடிப்பு .கண்ணியமான
தோற்றம் , அழகிய டிரஸ்சிங்க் சென்ஸ் அசத்தல் .
ஹீரோயின் லேகா
வாஷிங்க்டன். ஒரு டன் சர்ஃப் எக்செல்லில் வாஷிங்க் செய்தாலும் பளிச் சிடாத சராசரி
டல் முகம் .கல்யாணக்காட்சிகளில் மட்டும் களை கட்டுகிறது . சிரத்தையுடன்
நடித்திருக்கிறார். நமக்குத்தான் அசிரத்தை.
டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் உட்பட படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் நிஜ வாழ்வில் கூட பிராமணர்கள் என்பதால் காட்சி அமைப்பில் ரொம்பவும் இயல்புத்தன்மை வந்து விடுகிறது
பலே பரிமளா
1. படத்தின் சப்ஜெக்ட்டுக்குத்தக்கப்படி அதே சமயம் கண்ணியம் மாறாமல் முடிந்தவரை புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட வசனங்கள் . பெண்களை மிக வசீகரமாக சிரிக்க வைக்கும் , ஆண்களை சங்கடத்தில் நெளிய வைக்கும் அஜால் குஜால் காமெடி காட்சிகள் பல இடங்களில் பிளஸ்
\
2. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கல்யாண மண்டபத்தில் நடப்பது போல் வருவதால் ஒரு கல்யாண விழாவுக்குச்சென்று வந்த திருப்தி .
3 ஃபேஸ் புக்கில் ஷேர் செய்வது , கமெண்ட்டுவது இரண்டையும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட வித்தியாசமான பாடல் காட்சி அழகு கவிதை
4 பல காட்சிகளில் கே பாலச்சந்தர் டைப்பில் டைரக்சன் டச் செய்வது. முத்திரை பதிக்கும் இயக்கம்
5. மேரேஜ் ஆனதும் புருஷன் ஓவரா வாய் பேசுனா எப்படி வாயை அடைப்பே? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மெது வடையை வாயில் வைக்கும் காட்சி ஏதாவது கில்மா குறியீடா?
6 பல்லுப்போன ராஜாவுக்கு பருப்பு திங்க முடியலையா? கிளு கிளு பாடல் வரிகள் அபாரம்
7 டாக்டர் , பவுலிங்க் தான் போட்டேன் , பேட்டிங்க் நான் இல்லை என ஹீரோ ட்விஸ்ட் செய்யும் காமெடி காட்சி அபாரம்
சொதப்பிட்டியே சொப்னா
1. பிராமண இனத்தைச்சேர்ந்த சைவம் சாப்பிடும் கண்ணியமான குடும்பப்பெண் சர்வ்சாதாரணமாக சரக்கு சாப்பிடும் அதிர்ச்சிக்காட்சி தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பும் . விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் சினிமாவில் காட்டப்படும் காட்சி ஒரு சமூகத்தை பிரதிபலிக்கும் அபாயம் இருக்குது
2 மேரேஜ்க்கு முன்னால என்ன வேணா பண்ணிக்கோ , ஆனா மெயின் மேட்டர்க்கு மட்டும் இடம் கொடுத்துடாதே என பெத்த அம்மாவே பொண்ணிடம் சொல்லும் காட்சி கை தட்டலுக்கு உபயோகமா இருக்கலாம்., ஆனால் விரசம்
3 மேரேஜ் பண்ணிக்கப்போகும் பொண்ணிடம் வருங்கால கணவன் “ காலேஜ் படிக்கும்போதே உனக்கு கில்மாவில் அனுபவம் இருக்கா? “ என சர்வ சாதாரணமாக கேட்பானா? ரகுவரன் , பிரகாஷ்ராஜ் மாதிரி சைக்கோ கேரக்ட் கேட்டா அது வேற . ஒரு ஹீரோ அப்டி கேட்டா பொண்ணுக்கு க்கோபம் வராதா? அதை சர்வ சாதாரணமாக எடுத்துக்கிட்டு அசால்ட்டா நோ சொல்லும் ஹீரோயினும் அதிர்ச்சி அடைய வைக்கறாங்க
4 படத்தின் முன் பாதி சுவராஸ்ய முடிச்சு ஓக்கே , பின் பாதியில் எப்படிக்கதையை கொண்டு போவது என தெரியாமல் குஷி , போடா போடி என திரைக்கதை கண்ட மேனிக்கு பயணிக்கிறது
5 படத்தின் பல காட்சிகள் , வசனங்கள் குடும்பத்துடன் பார்க்க விடாமல் நெளிய வைக்கிறது ,. ஆண்மையைக்குறை சொல்லும் காமெடியை பெண்கள் உள்ளூர விரும்பினாலும் அருகில் அமர்ந்திருக்கும் கணவன் தன்னை தப்பா நினைச்சுக்கக்கூடாது என பெண்கள் அடக்கி வைக்கும் சிரிப்பை அவர்க்ள் முகத்தில் காண முடிந்தது . ஆண்களும் சில காட்சிகளில் சைக்காலஜிக்கலாய் பாதிக்கப்படிவதை காண முடிந்தது . இந்த இரு பாயிண்ட்சும் படத்தின் வெற்றிக்குப்பெரிய தடைக்கல்
6 அந்த மேட்டர் மட்டும் தான் வாழ்க்கையா? என கேட்கும் ஹீரோயின் அதே காட்சியில் பின் “ அது இல்லாம என்னால் இருக்க முடியாது “ என சொல்வதும் அதீதம் தான் . அது எப்படி ? அனுபவ்ம் இல்லாமலேயே அப்படி ஒரு பெண்ணால் சொல்ல முடியும் ?
7 படத்தின் மெயின் மேட்டரே ஹீரோவால முதல் முயற்சியில் மேட்டர் பண்ண முடியல என்பதால் தான் . பின் ஏன் அவர் 2 வது , 3 வது முயற்சியே செய்யலை ? நம்மாளுங்க அரியரில் தான் அட்டெம்ட்க்கு யோசிப்பாங்க ,. இதுல யோசிக்கவே மாட்டாங்க
8 க்ளைமாக்ஸ் மகா சொதப்பல் . மாப்ளை பொண்ணு 2 பேரும் ஓடிட்டாங்க என்ற பதை பதைப்பு கொண்டு வர ட்ரை பணி இருக்காங்க எடுபடலை . ரொம்ப செயற்கையான முடிவு
9 இந்தப்படத்துக்கு பின்னணி இசை ரொம்பவே சுமார் தான் . பாடல்காட்சிக்கான இசை ஓக்கே , ஆனால் ஒரு காமெடி சப்ஜெக்ட்க்கு இந்த இசை போதாது
10 மண்டப அட்வான்ஸுக்கு கொடுக்கப்படும் செக் ஓரத்தில் லைட்டாக கட் ஆகி இருப்பதால் செக் பவுன்ஸ் ஆவது , மண்டபம் கேன்சல் ஆவது அபத்தம் பேங்க் மேனேஜர் தன் ரெகுலர் கஸ்டமர் ஒரு வி ஐ பி எனில் அவருக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லித்தான் பவுன்ஸ் பண்ணுவார் . மேலும் மேனேஜர்க்கு அந்த செக்கை பாஸ் பண்ணும் அதிகாரமும் இருக்கு . செக் ரிட்டர்ன் ஆனதும் மண்டப மேனேஜர் அவருக்கு ஏன் தகவல் சொல்லலை? சொல்லி பதில் செக் தராமல் போனால் தான் மண்டபம் கேன்சல் ஆகும்
a
நச் டயலாக்ஸ்
1. நானும் தான் டெய்லி உக்கார்றேன் . எனக்கு எதும் இல்லையா? ஒரு பொண்ணு உக்காந்துட்டா என்றா மட்டும் ஏன் கொண்டாடறீங்க?
2 பேரண்ட்சே மாப்ளை பார்க்கறாங்க , நமக்கு நோ ரிஸ்க் . நம்ம வேலை ஒன்லி ரிஜக்ஷன் தான்
3 நீங்க எங்கே ஒர்க் பண்றீங்க?
எனக்கு சம்பளம் தரும் ஆஃபீஸில்
4 டேய் , பசங்களா! அம்மா , அப்பா பக்கத்தில் இல்லைன்னா எதை வேணாலும் தொடலாம்னு நினைக்கறீங்களா?
இந்த டயலாக் அவனுங்களுக்கா? எனக்கா?
ஏன் கேட்டீங்க>
சும்மா
5 எனக்கு குழந்தை பிடிக்காது , ஆனா குழந்தையை பிடிக்கும்கற பொண்ணுங்க பிடிக்கும்
6 ஆரம்பத்துலயே பொண்ணு பிடிச்சுடுச்சுன்னு சொல்லிடக்கூடாது , நமக்கான நெகோசியேஷன் பவர் போயிடும்
நாம என்ன பிஸ்னெஸா பண்றோம் ?
7 ஒரு பொண்ணுக்கு மாப்ளை ஆவது ஈசி . அவங்க பேரண்ட்ஸ் வெச்சு கவர் பண்ணிடலாம் , ஆனா ஒரு பொண்ணு க்கு ஃபிரண்ட் ஆவது கடினம்
8 சார் காபி ல ஈ
அடடா, சரி எப்போ மேரேஜ் டேட் ?
நாங்க போய் ஈ மெயில் அனுப்பறோம்
9 இந்தக்காலத்துல மாப்ளை பார்க்கும் முன்பே மண்டபம் பார்த்துடுடறாங்க
10 ஸ்டேண்ட் அப்
வாட்?
இல்லை . ஸ்ட்ரெஸ் ஆகாத . படிச்சிருக்கேன் , சரி ஆகிடும்
11 சிஸ்டம் டவுன் ஆகிடுச்சு
சிஸ்டமுமா?
12 பப்ளிக் ப்ளேஸ் ல இப்படி செல் ஃபோன் ல கில்மாப்படம் பார்க்கலாமா/
சரி வா அப்படி ஓரமா போய் கார்ல உக்காந்து பார்க்கறோம்
13 தப்பு செய்ய நினைச்சா சாமி குத்திடும்பாங்களே? அதனாலயோ?
கண்ணைத்தானே குத்தனும் >?
14 பிரச்சனையை தைரியமா ஒத்துக்குவதே முதல் சிகிச்சை
15 அடியேய் , இண்ட்டர் கோர்ஸுக்கு மட்டும் மேரேஜ்க்ல்கு முன்னே ஒத்துக்காதேடி
ஹ்ஹுக்கும் ,. அது மட்டும் ந்டக்காதும்மா
16 உன் பிராப்ளத்துக்கு ஜீன்ஸ் காரணமோ?
அப்டி இருந்தா என் அப்பாவுக்கு நான் எப்படி பிறந்திருப்பேன்?
நான் சொன்னது ஜீன்ஸ் பேண்ட்
17 மாப்ளை ஆகிட்டா யார் கூட வேணாலும் பக்கத்துல உக்காரலாம், ஆனா பொண்ணு பக்கம் மட்டும் போக விடமாட்டாங்க
18 பொண்ணு விரும்புவது யு எஸ் மாப்ளை , ஆனா கிடைச்சது இந்தியன் மாப்ளை , அப்போ பொண்ணு என்ன செய்வா?
அடிக்கடி யு எஸ் வெக்கேசனுக்கு போவா
19 ஒரு பையனுக்கு ஏதாவது பிராப்ளம்னா பொண்ணுக்கு ஏன் பரிகாரம் பண்றீங்க?
20 என்ன செஞ்சான் அந்த மடையன் ?
ஒண்ணுமே செய்யலை , அதான் பிராப்ள,ம் \
\
சி பி கமெண்ட் - ஏ செண்ட்டர் ரசிகர்கள் மட்டும் தான் ரசிச்சுப்பார்ப்பாங்க . பிரசன்னா என்ற பெயரை டைரக்டர் லிஸ்ட்டில் பார்த்து பலரும் ஹீரோ பிரசன்னா தான் டைரக்டர்னு நினைச்சுட்டாங்க . அவர் ஒரு மலையாள டைரக்டர் . மலையாளத்துல இது ஹிட் ஆகலாம் . இங்கே எடுபடாது , மீடியாக்கள் பாராட்டும் . செலவே இல்லாத படம் என்பதால் நட்டம் வராது . ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் . 7 கள்ளக்காதல் ஜோடி , 6 தெய்வீகக்காதல் ஜோடிகள் மட்டும் தான் தியேட்டர்ல .கூட்டமே இல்லை . இசை யாரோ அரோரா வாம் . படமும் அரோகராதான்
ரிவியூல ஜனனி ஐய்யர் ஃபோட்டோ இருக்குது.. ஏன் என கேட்பவர்களுக்கு -பொண்ணு வைக்கற இடத்துல பூ வைப்பது மாதிரி பட ஹீரோயின் மொக்கை ஃபிகர் எனில் பட ஆடியோ ரிலீஸ்க்கு வந்த ஃபிகரை அப்டேட்டுவது தமிழர் பண்பாடு
ரிவியூல ஜனனி ஐய்யர் ஃபோட்டோ இருக்குது.. ஏன் என கேட்பவர்களுக்கு -பொண்ணு வைக்கற இடத்துல பூ வைப்பது மாதிரி பட ஹீரோயின் மொக்கை ஃபிகர் எனில் பட ஆடியோ ரிலீஸ்க்கு வந்த ஃபிகரை அப்டேட்டுவது தமிழர் பண்பாடு
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 40
குமுதம் = ஓக்கே
ரேட்டிங்க் = 2.75 / 5