Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Wednesday, June 26, 2013

மரியான் - இயக்குநர் பரத்பாலா பேட்டி @ கல்கி

அர்ஜுன்

இயக்குனர் பரத் பாலாவும் .ஆர்.ரஹ்மானும் வந்தே மாதரம், ஜன கண மன சேர்ந்து தூள் கிளப்பி இருந்தாலும் பரத் பாலாவுக்கு இதுவே முதல் தமிழ்ப் படம். தனுஷ் பல படங்களில் நடித்து, தேசிய விருது வாங்கி இருந்தாலும் கூட, அவர் படங்களுக்கு .ஆர். ரஹ்மான் இசையமைத்ததில்லை. இப்போது இந்த மூவர் கூட்டணியில் வெளியாகவிருக்கும் படம்மரியான்யூடியூபில் பாட்டுகளும், விளம்பர டீசர்களும் 26 லட்சம் ஹிட்ஸ் தாண்டி எகிறிக் கொண்டிருக்கிறது.




 டைரக்டர் பரத் பாலாவை அவரது ராஜா அண்ணாமலைபுரம் அலுவலகத்தில் சந்தித்தோம். கவிஞர் குட்டி ரேவதி உள்ளிட்ட மரியான் யூனிட் படு பிசியாக தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் பாலாவின் அறையில், ஒரு பக்கச்சுவர் முழுக்க துண்டுக் காகிதங்களாக ஒட்டப்பட்டிருக்கின்றன. என்னவென்று கேட்டால், படத்தின் ஸ்கிரிப்ட் என்கிறார் பாலா. கல்கிக்கு அவர் அளித்த ஸ்பெஷல் பேட்டி:


 


திடீர்னு எப்படி தமிழ்ப் படம் பண்ணற ஆசை வந்தது?


இருபது வருஷமாய் விளம்பரப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள்னு நிறைய எடுத்தாலும், அது எல்லாத்துலயும் ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கும். அதுதான் ஹியூமன் எமோஷன்ஸ். இந்தப் படங்கள் எல்லாமே மொழியைத் தாண்டி மக்களோடு உணர்ச்சிபூர்வமான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திச்சு. ஏற்கெனவே ஹிந்தியில டைரக்ட் பண்ணின என்னோட முதல் படமும் அது மாதிரிதான்



 இப்போ படத்துக்கு எடுத்துக்கிட்டிருக்கிற சப்ஜெக்ட் ரொம்ப ஸ்டிராங்கான ஹியூமன் எமோஷன். நான் உலகம் முழுக்க சுத்தி இருக்கேன் என்றாலும், என் வேர் மைலாப்பூர். அதனால, இந்தக் கதையை தமிழ்ல சொன்னாத் தான் சரியா இருக்கும்னு நினைச்சேன். என் முதல் தமிழ்ப்படம்மரியான்உருவான பின்னணி இதுதான்."
 




மரியான் ஒரு நிஜ கேரக்டராமே?


ஆமாம்! ரெண்டு வருஷங்களுக்கு முன்னால பேப்பர்ல நான் படிச்ச நியூஸ்தான்மரியான்கதைக்கு ஆரம்பப் புள்ளி. கேரளா, மும்பை, பஞ்சாப்ல இருந்து வேலைக்காக ஆஃப்ரிக்காவில் சூடானுக்குப் போன மூணு இளைஞர்கள் அங்கே பட்ட கஷ்டங்கள்தான் கதைக்கு அடித்தளம். அதுல ஒருத்தனோட காதல் அவனுக்கு எத்தனை உடல் ரீதியான, மனோரீதியான பலத்தைக் கொடுக்குது? அதை வெச்சு அவன் எப்படி எல்லா கஷ்டங்களையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கறான்னு படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டபோது, ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது.  


அந்த இளைஞர்களைப் பத்தி முழு விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டபோது அதுல ஆழமான ஹியூமன் எமோஷன் இருக்கிறது புரிஞ்சுது. அதை வெச்சு ஒரு பவர்ஃபுல் ஸ்கிரிப்ட் பண்ணலாம்னு தோணிச்சு."

 



தனுஷ் எப்படி?

ரெண்டு வருஷம் முன்னால, தேசிய விருதுக்கான நடுவர் குழுவுல நான் இருந்தப்போ தனுஷ் நடிச்சஆடுகளம்பார்த்து, அவரோட நடிப்புல ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன். இந்த ஸ்கிரிப்ட்ல நடிக்க தனுஷ்தான் பொருத்தமா இருப்பாருன்னு முடிவு பண்ணினேன்


 தனுஷுக்குக் கதையைச் சொன்னதும், அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போய், உடனே சரின்னு சொல்லிட்டார். இதுதான் கதை, தனுஷ் நடிக்கிறாருன்னு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிசந்திரனிடம் சொன்னதும், உடனே படத்தை புரொடியூஸ் பண்ண .கே. சொல்லிட்டார். படத்துல தனுஷ் மண்டைக்காடு பக்கத்துல இருக்கிற நீரோடிங்கிற கிராமத்து மீனவ இளைஞர். அவர் வேலை செய்ய சூடான் போகும் போது நடக்கிற வாழ்க்கைப் போராட்டம்தான் கதை."




 
பூபடத்தோட சாஃப்ட் பார்வதிக்குக் கூட ரொம்ப பவர்ஃபுல் ரோலாமே?


இந்தப் படத்துக்காக அவங்களுக்கு படத்துல வருகிற ஐந்தாறு சீன்களைக் கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னேன். முதல் சீனை நடிக்கும்போதே நான் அங்கே பார்வதியைப் பார்க்கலை; பனிமலரைத்தான் பார்த்தேன்."


ரஹ்மானை படத்துக்கு இசையமைக்க வைப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்திருக்காதே?


(சிரிக்கிறார்) நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் நாள்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். முன்னாலயே நாங்க சேர்ந்து ஒர்க் பண்ணின வந்தே மாதரம், ஜன கண மன இரண்டுக்கும் அகில இந்திய அளவுல எந்த மாதிரியான வரவேற்பு கிடைச்சுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் கேட்டேன்



 அவரும் உடனே சம்மதிச்சார். மறுபடியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ண ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சின்னு அஞ்சு விதமான எமோஷன்ஸ் படத்துல இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி பாட்டுகள் வேணும்னு சொன்னேன். வாலி தொடங்கி தனுஷ், கபிலன், குட்டி ரேவதி, ரஹ்மான்னு எல்லாரும் பாட்டு எழுதி இருக்காங்க. மரியான் தமிழைத்தாண்டி, உலக அளவில் ரசிகர்களை ஈர்க்கிற ஒரு சினிமாவாய் இருக்கும் என்பது நிச்சயம்."




 
படத்தோட கேமராமேன் ஒரு ஃப்ரெஞ்சுக்காரராமே?



ஜானி மை டாக்னு ஒரு படம் பார்த்திட்டு, அதன் கேமராமேன் மார்க்தான் நம்ம படத்துக்கும் கேமரான்னு தீர்மானிச்சு, அவரைத் தேடிப் பிடிச்சுக் கேட்டதும் .கே. சொல்லிட்டார். அவர் இதுக்கு முன்னால இந்தியாவைப் பார்த்ததில்லை. அவர் கோணத்துல இந்தியாவைப் பார்க்கிறபோது, நமக்கே தெரியாத புதுப்பார்வை படத்துல இருக்கும். சீன்கள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கதை சூடான்ல நடக்குது. ஆனா, அந்த சீன்களை நாங்க எடுத்தது நமீபியாவுல. ‘ஜானி மை டாக்படத்துல நடிச்சிருக்கிற சில ஆஃப்ரிகன் ஆக்ஷன் நடிகர்களை நடிக்க வெச்சிருக்கேன்."


படத்தோட கடைசி சீன்ல ஷூட்டிங்கை ஆரம்பிச்சு, முதல் சீன் வரைக்கும் ரிவர்ஸ்ல படத்தை எடுத்தீங்களாமே. என்ன காரணம்?


முதல் சீன்ல ஆரம்பிச்சு வரிசையா சீன்களை எடுத்திருந்தா படம் எடுத்து முடிக்க ரெண்டு வருஷம் ஆகி இருக்கும். அந்தத் தாமதம் வேணாம்னுதான் மாத்தி ரிவர்ஸ்ல எடுத்தோம்."


ஆழ்கடல் சீனெல்லாம் எடுத்திருக்கீங்க. ஆனா தனுஷுக்கு நீச்சலே தெரியாதாமே?

ஆமாம். மன உறுதியும், உடல் பலமும் கொண்ட மீனவ இளைஞர் மரியான். எல்லோரும் வலை வீசி மீன் பிடிச்சா, இவன் ஆழ்கடலுக்குப் போய், பெரிய மீனை கூரிய ஆயுதத்தால் நேரடியாகக் குத்திப் பிடிப்பான். நீச்சல் தெரியாது போனாலும், தனுஷ் காட்டின தைரியமும், ஈடுபாடும் வாவ்! கிரேட்!"


thanx - kalaki 





Tuesday, April 30, 2013

3 பேர் 3 காதல் - டைரக்டர் வஸந்த் பேட்டி @ கல்கி

அறிமுகம்

3 பேர் 3 காதல்


ஆனால் காதல் கதையல்ல!

அர்ஜுன்
டைரக்டர் வஸந்த் பேட்டி...

தமிழ் சினிமாவுல புராண, இதிகாசங்கள்ல ஆரம்பிச்சு, இன்னைக்குவரை ஆயிரக்கணக்கான படங்கள்ல காதலைச் சொல்லியாச்சு. சொல்லப் போனா, தமிழ் சினிமா, காதல் என்ற வட்டத்துக்குள்ளேயே உறியடிச்சுக்கிட்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, உங்களோடமூன்று பேர் மூன்று காதல்படத்துல இதுவரை சொல்லாத எந்தக் காதலை புதுசா சொல்லப் போறீங்க? என்று படு சீரியஸாக டைரக்டர் வஸந்திடம் கேட்டால்...
அவரோ அசராமல், இதுவரை தமிழ் சினிமாவுல சொல்லாத காதல் கதையை நான் இந்தப் படத்துல சொல்லி இருக்கிறதா இதுவரை யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. ஏன்னா, இது ஒரு லவ் ஸ்டோரி கிடையாது," என்றார்.
என்ன டைரக்டர் சார்! படத்துக்குத் தலைப்பு மூன்று பேர் மூன்று காதல்னு வைப்பீங்களாம்; படத்துல அர்ஜுன், சேரன், விமல்னு மூணு ஹீரோக்களாம். அவங்களுக்கு ஜோடியாக முக்தா பானு, சுர்வீன் சாவ்லா, லாசினின்னு மூணு ஹீரோயின்களாம். ஆனா, ‘இது காதல் படம் இல்லைன்னு ரொம்பத் தான் கலாய்க்கறீங்களே! இது நியாயமா?
நான் பொய் சொல்லலை; நான் சொல்வதெல்லாம் .எஸ்.. தரச்சான்றிதழ் பெற்ற நிஜம்!"
அப்படீன்னா?
இது லவ் ஸ்டோரி இல்லை; ஆனா லவ் பத்தின படம். லவ்வுக்கு இந்த உலகத்துல, மக்கள் மத்தியில எவ்வளவு பவர் இருக்குன்னு காட்டற படம். காதலால இந்த உலகத்துல என்னென்ன எல்லாம் நடக்கலாம்னு காட்டி இருக்கேன். இன்னும் சொல்லணும்னா, ‘இந்த உலகத்துல லவ்வப் போல பைத்தியக்காரத் தனமான விஷயம் வேற ஒண்ணும் இல்லைன்னு விமல் ஒரு டயலாக்கூட பேசுவாரு."
என்னது?
யோசிச்சுப் பார்த்தா, இந்த உலகத்துல லவ்வப் போல பைத்தியக்காரத்தனமான விஷயம் வேற ஒண்ணும் இல்லை. ஆனா நாம யோசிச்சாதானே!’ன்னு விமல் ஒரு டயலாக் சொல்வாரு. அதைத்தான் சொன்னேன்."
அப்ப உங்க பார்வையில லவ்னா என்ன?
காதலை நான் எப்படிப் பார்க்கறேன்னா, பல வார்த்தைகள், உணர்வுகளோட ஒட்டுமொத்த உருவமாத்தான் பார்க்கறேன். அன்புகூட என்னைப் பொறுத்தவரைக்கும் காதல்தான். பெண்ணாசை, மது குடிப்பதால் வரும் பிரச்னைகள், உறவுகளில் வரும் சிக்கல்கள், ரொம்ப நெருக்கமானவங்களோட மரணத்தோட நம்ம வாழ்க்கை முடிஞ்சிடறதில்லைன்னு பல விஷயங்களை நான் என்னோட படங்கள்ல டீல் பண்ணி இருக்கேன். இதுமாதிரியான விஷயங்கள்தான் நான் படம் எடுக்கத் தூண்டுகோலாய் இருக்கு."
சரி! அது மாதிரி இந்தப் படத்துக்கு தூண்டுகோலாய் இருந்தது எது?
காதலைப் பத்தி ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஒரு கருத்து இருந்துகிட்டு இருந்துச்சு. யதேச்சையா நா. பிச்சமூர்த்தியோட கவிதையைப் படிச்சேன். அந்தக் கவிதையில, அவரும் நான் நினைச்சுக் கிட்டு இருந்த விஷயத்தையே சொல்லி இருந்தார். எனக்கு அதைப் படித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாக்கூட இருந்தது. அதிலிருந்து உருவானது தான் இந்தக் கதை. இந்தக் கதை எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். ‘ஒரு கதை, நெய்தல் என்கிற கடலும் கடல் சார்ந்த இடத்துலயும், இன்னொண்ணு குறிஞ்சி என்கிற மலையும் மலை சார்ந்த இடத்துலயும், மூணாவது கதை, மருதம் என்கிற வயலும் வயல் சார்ந்த இடத்துலயும் நடக்குது. இன்னொரு விஷயம் என்னன்னா, படத்துல சொல்லி இருக்கிற மூணு பேரோட காதல்ல ஏதாவது ஒண்ணை நிச்சயமா படம் பார்க்கிற எல்லாரும், ‘அட! இது நம்ம லைஃப் கதை மாதிரியே இருக்கேன்னு ஐடென்டிஃபை பண்ணி ரசிப்பாங்க! இந்தப் படம் நிச்சயமா ஜனரஞ்சகமான, குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய ஒரு படமா இருக்கும்."
அன்று சூர்யா; இன்று வருண்

சூர்யா, சிம்ரன், ஜோதிகா, சுவலட்சுமி, சுர்வீன், லாசினி என்று டைரக்டர் வஸந்தால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருப்பவர் ரித்விக் வருண். வஸந்த் தம் டைரக்ஷனிலேயேமூன்று பேர் மூன்று காதல்படத்தில் ஒரு பாடல் காட்சியின் மூலமாக வருணை அறிமுகப்படுத்துகிறார். லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கும் வருண், மணிரத்னத்திடம் கொஞ்ச நாள் பயிற்சி பெற்றவர்.
மகனை நடிகராக்கும் ஐடியா திடீரென்று எப்படி வந்தது?" என்று கேட்டபோது, மூன்று பேர் மூன்று காதல் படத்தில் ஒரு ஸ்பெஷல் ரோலுக்கு, வருணையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். அவனிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவனுக்கு ஆச்சர்யம். உடனே .கே. சொன்னான். காரணம், அவனுக்கும் நடிக்க ஆர்வம் இருந்திருக்கிறது. இந்தப் படம் அவனுக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்" என்றார் வஸந்த்.
மகனை நடிக்க வைப்பது என்று முடிவானதும், தமது குருநாதர் கே. பாலசந்தரிடம் அழைத்துக் கொண்டு போனார் வஸந்த். ‘உன்னுடைய உயரமும், பர்சனாலிடியும் உனக்கு பெரிய பிளஸ் பாயின்ட்என்று சொல்லி வாழ்த்தினார் கே.பி. அடுத்து பாலுமகேந்திராவை சந்தித்தபோது, ‘உனக்கு நல்ல போட்டோஜீனிக் முகவெட்டு இருக்கு!’ என்று சொன்னார். இயக்குனர் மகேந்திரன் தானே வரைந்த சத்யஜித்ரே படம் ஒன்றைப் பரிசளித்து வாழ்த்தினார். பிரசாத் லேப்பில் நடந்த நிகழ்ச்சியில் கே.பி., ரித்விக் வருணை அறிமுகப்படுத்தினார்.

நன்றி - கல்கி