Showing posts with label கலைஞர் டிவி. Show all posts
Showing posts with label கலைஞர் டிவி. Show all posts

Tuesday, July 10, 2012

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள்- விமர்சனம் (8.7..2012)


நாளைய இயக்குநர் நிகழ்ச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் படைப்பளிகளை ஊக்குவிக்கும் ஒரு தரமான நிகழ்ச்சி.. காதலில் சொதப்புவது எப்படி? குறும்படம் பெரும்படம் ஆகி வசூல் தரும் படம் ஆன பிறகு இந்த நிகழ்ச்சிக்கான மதிப்பு உயர்கிறது . வாரா வாரம் ஞாயிறு காலை 10.30  டூ 11.30 கலைஞர் டி வியில் காணலாம்.. 


இன்னைக்கு ஆர்த்தி பெருசா பூப்போட்ட நைட்டி அணிஞ்சு வந்தாங்க.. ஜட்ஜஸ் 2 பேர் கிட்டேயும் கேள்வி கேட்டாங்க.. அதுக்கு அவங்க பதில்// 


ஆர்த்தி - சார், சமீபமா நீங்க என்ன படம் பண்ணிட்டு இருக்கிங்க? அது பற்றி சொல்லுங்க


 பிரபு சாலமன் -  நான் எடுத்து வரும் கும்கி படம் யானைகளை மையமா எடுத்து சொல்லப்படும்  டாக்குமெண்ட்ரி என நிறைய பேரு நினைக்கறாங்க, ஆனா அது உண்மை அல்ல,கதைக்கான பின்னணி யானை.. மற்றபடி ஒரு காதல் கதை,.. யானைப்பாகனின் கதைன்னும் சொல்லலாம்.. சிவாஜியின் பேரன்க்காக இந்த கதை எடுக்கறேன். 


விக்ரமன் - இளமை நாட்கள்னு ஒரு  படம்  பாதி எடுத்தாச்சு, இப்போ ஸ்டாப் பண்ணிட்டோம்.. புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன்


1. குறும்பட இயக்குநர் பெயர் - குகன் , குறும்படத்தின் பெயர் - H2O ( தண்ணீர் )


இது அக்மார்க் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை.. 2050ல கதை நடக்குது..  ஒரு பாலைவனம்.. அதுல ஒரு ஆள் பயணம் பண்றாரு. நடராஜா சர்வீஸ் தான்.. இடுப்புல வாட்டர் கேன், முதுகுல ட்ராவலிங்க் பேக்.. போற வழில 3 பேர் செத்தோ, மயக்கமாவோ கிடக்கறாங்க.. அவங்களை குனிஞ்சு செக் பண்றப்போ 3 பேர்ல ஒருத்தன் அவன் கிட்டே இருக்கும் வாட்டர் கேனை பிடுங்க பார்க்கறான். சண்டைல ஹீரோ அவனை கொன்னே போட்டுடறான்.. தண்ணீருக்காக கேரளா,கர்நாடகா, தமிழ் நாடு அடிச்சுக்குதே அதுதான் குறியீடு போல.. எதிர்காலத்துல உலகப்போர் வந்தா அது தண்ணீருக்ககவோ, பெட்ரோலுக்காகவோதான் இருக்கும்னு யாரோ சொன்னாங்க. .


ஹீரோ கழுத்துல காயத்தோட தனது பயணத்தை தொடர்றான்..  சாகற நிலைமை.. தனது கடைசி மூச்சு விடறப்போ  ஒரு செடிக்கு அந்த தண்ணீரை ஊற்றிட்டு சாகறான்.. 


விக்ரமன் - என்வயரோமெண்ட்ல அக்கறை வேணும், பொல்யூஷன் வராம பார்த்துக்கனும்னு சொல்ல வந்திருக்கீங்க.. குட்.. ஓப்பனிங்க் ஷாட்ல 1000 ரூபாய் நோட்டால வியர்வையை துடைக்கற சீன் கிளாசிக்.. அவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.. ஆனா தண்ணீர் தான் அத்தியாவசியத்தேவைன்னு சொல்ல வந்தது நல்லா வந்திருக்கு.. பதியுது..  அந்த  இடத்துல இசை சூப்பர்.. ஒரே ஒரு கேரக்டரை வெச்சு தண்ணீர் பிரச்சனையை பேஸ் பண்ணி படம் பண்ணி இருக்கீங்க.. குட்..


பிரபு சாலமன் - ஹீரோவோட சிந்தனை பூரா  தண்ணீர்ல ஊறி கிடக்கு என்பதை அவன் சாகற சீரியஸ் நிலைல கூட ஸ்விம்மிங்க் பூல்ல விழுந்த நினைவை காட்டுவதுல இருந்து உணர்த்திடறீங்க.. . எதிர் காலத்துல இப்படித்தான் நடக்கப்போகுதுன்னு சொல்ல வந்திருக்கீங்க.  நல்லாருக்கு


சி.பி - முன்னுக்குப்பின் முரணான பாத்திரப்படைப்பா  ஹீரோவை காட்டறீங்க.. ஒரு 100 மிலி தண்ணீருக்காக கொலை செய்யும் அளவுக்கு வக்கிரமான , குணம் கொண்ட ஹீரோ தன் உயிர் போறப்பக்கூட தன் தாகத்துக்கு தண்ணீரை குடிக்காம செடிக்கு தண்ணீர் ஊற்றுவது சூட் ஆகலையே.. சக உயிரை ஆறறிவு மனிதனை காப்பாற்றாமல் செடிக்கு ஊற்றுவது ஏன்?இயற்கையை பாதுகாக்க என்றால் மனிதனும் இயற்கையின் படைப்பு தானே?

இந்தப்படம் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு..

மன்மோகன் ஆட்சியில் எவ்வளவு ஊழல் சாதனைகள் நடந்துருக்கு.. அதெல்லாம் சாதனை இல்லையா..


2. குறும்பட இயக்குநர் பெயர் - சந்ரு , குறும்படத்தின் பெயர் -ஆருயிரே

இந்தப்படத்தோட கதை , திரைக்கதை எல்லாம் நம்ம ஆளு அதிஷாவுடையது,, புதிய தலைமுறை உதவி ஆசிரியர்.. பிரபல ட்விட்டர்.. பிரபல பதிவர் என பன்முகம் கொண்டவர்..

சமீபத்தில் நடந்த  போலீசின் எண்கவுண்ட்டர் பற்றிய படம்..அதாவ்து  பேங்க் கொள்ளை நடந்தப்ப  இவங்க தான் பேங்க் கொள்ளையர்ஸ்னு வட மாநில ஆட்களை போட்டுத்தள்ளுச்சே போலீஸ் அதை கிண்டல் செய்யும் ப்டம்.. ஆனா காமெடி  கதை அல்ல. சீரியஸ்..

ஓப்பனிங்க் ஷாட்ல  லவ்வர்ஸ் ஜோடியை காட்ட்டறாங்க.. வழக்கம் போல ஊரை விட்டு ஓடி வந்தவங்க.. காதலன் தன் நண்பனை நம்பி வந்துடறான்.  ஆனா அவன் இவனை கண்டுக்கலை. செல் ஃபோன்ல நோ ரெஸ் பான்ஸ்.. கடைசில எப்படியோ கண்டு பிடிச்சு அந்த நண்பனோட ரூமுக்கு போறான்.. தனியாத்தான்.. காதலியை அவன் சாப்பிட்ட மெஸ்ல வெயிட் பண்ண வெச்சு இவன் மட்டும் போறான்.  ஆனா அந்த ரூம்ல அவனோட நண்பன் இல்லை.. சரின்னு அந்த ரூமை விட்டு வெளீல வர்றப்போ போலீஸ் கும்பல் அவனை , அந்த ரூம்ல இருக்கறவங்களை எந்த விசாரணையும் இல்லாம  போட்டுத்தள்ளிடுது..

 ஹீரோயின் அங்கே ஹீரோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. அவ்லவ் தான் படம்



மனம் கவர்ந்த வசனங்கள்


1. போலீஸ் நம்மளை ட்ரேஸ் அவுட் பண்ணிட்டா என்ன பண்றதுனு செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராம வந்துட்டோம்..


2. எனக்கு பயமா இருக்கு.. நம்மை நிம்மதியா வாழ விட மாட்டாங்க..


3. ஃபிரண்ட் செல் நாட் ரீச்சபிள்.. அவனை நம்பி இங்கே வந்திருக்கக்கூடாதோ? எதுக்காக செல்லை ஆஃப் பண்ணிட்டான்னு தெரியலையே?


விக்ரமன் - காதல் பட இன்ஸ்பிரேஷன் அங்கங்கே தெரியுது,.,. ஹீரோ ஃபிரண்ட் கிட்டே பேசறப்போ காதல் சுகுமாறன் மாதிரியே என்னடா மச்சான் என்ரெல்லாம் கூப்பிடாம இருந்திருக்கலாம்.. காதலை நினைவு படுத்துது..



பிரபு சாலமன் -போலீஸ் ஸ்டோரிக்கான மூடு படத்துல மிச்சிங்க்.. அவங்க திடீர்னு வர்றாங்க, சுடறாங்க போயிடறாங்க.. படத்துல அவங்க வரப்போறாங்க என்பதற்கு ஒரு லீடு குடுத்திருக்கலாம்.. அது ஆடியன்ஸிடம் ஒரு டெம்ப்போ ஏத்தி இருக்கும்.. யூ ஸி.. சோகம் வேற , பாதிப்பு வேற.. வர்ற ஆடியன்சை சோகத்தோட அனுப்பக்கூடாது.. ஆனா நம்ம படம் அவங்க மனசை பாதிக்கனும்.. இதுதான் ஃபார்முலா..


சி.பி - போலீஸ் ஸ்டோரி கேட்டகிரில படம் எடுத்ததால கதையோட ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஸ்டார்ட் ஆகி இருந்தா நல்லார்ந்திருக்கும்.. ஹிட்சாக்கின் தியரிப்படி சஸ்பென்ஸ் என்பது திடீர்னு ஒரு எதிர்பாராத சம்பவத்தை காட்டி பார்வையாளனை திகைக்க வைப்பது அல்ல.. ஒரு வெடி குண்டு வெடிக்கப்போகுதுன்னு  ஆடியன்ஸ்க்கு சொல்லி அதை எப்போ எப்படி வெடிக்காம காப்பாத்தறாங்க என டெம்ப்போ ஏத்துவதே சஸ்பென்ஸ்க்கான இலக்கணம்.. போலீஸை ஓப்பனிங்க்லயே காட்டி இருந்தா இன்னும் கிராண்டா வந்திருக்கும்..

 படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேர் நடிப்பும் எதார்த்தம்.. பெஸ்ட் ஆக்டிங்க் அவார்டு 2 பேருக்கும் சமமா பகிந்து கொடுத்தாங்க.. ( அதை எப்படி 2 பேரும் ஷேர் பண்ணிக்குவாங்க? ஆளுக்கு ஒரு வாரமா? )

இந்தப்படம் பற்றி ட்விட்டர்ல நடந்த கலந்துரையாடல்


கி.கோ - ஆருயிரே' குறும்படம் யாராச்சும் பார்த்தீங்களா? இந்த அளவுக்கா நம்மூர்ல படைப்பு சுதந்திரம் இருக்குது ~ நம்பவே முடியல!


சி பி - டி வி க்கு சென்சார் இல்லை, அதுவும் இல்லாம போலி என்கவுண்ட்டர் பற்றி படம் எடுத்து இப்படி போடுவாங்கன்னு ஜெ அரசு எதிர்பார்த்து இருக்காது


கி கோ -ஆமாங்க.. ஆனாலும்.. சந்துருவின் கற்பனை கொஞ்சம் அதிகமா படுது.. சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை தான்..






3. குறும்பட இயக்குநர் பெயர் - மித்ரன் , குறும்படத்தின் பெயர் -பொல்லா வினையோன்




ஊஞ்சல்ல ஒரு பொண்ணு உக்காந்து ஆடிட்டு இருக்கு.. பேப்பர்ல ஒரு பறக்கும் தட்டை வரைஞ்சு அதை பார்த்துட்டு இருக்கு.. திடீர்னு ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்கி அந்த பாப்பாவை கூட்டிட்டு போயிட பாக்குது..


பாப்பாவோட மம்மி ஷாப்பிங்க் போறப்போ அந்த வேற்றுக்கிரக வாசிகள் அவளை அப்ரோச் பண்றாங்க.. இந்த உலகத்தை அழிச்சுட்டு புதுசா ஒரு உலகத்தை உருவாக்கப்போறோம்கறாங்க. கடைசில அந்த லேடி தன் குழந்தையை அவங்களோட அனுப்பி வைக்குது..

 எந்த ஊர்ல அப்படி ஒரு அம்மா குழந்தையை அனுப்பி வைக்குமோ தெரியலை.. சாமார்த்தியமா கதைக்களன் நியூ ஜெர்சிலன்னு காட்டிடறாங்க.. ஆனா எந்த ஒரு தேசத்திலும் பெற்ற அம்மாவே தன் குழந்தையை அப்படி அனுப்பி வைக்க மாட்டாங்கன்னுதான் தோணுது..

 வழக்கமா உள்ளத்தை தொடும் சமூக கருத்தை சொல்லும் மித்ரன் இந்த டைம் சரியான திரைக்கதை அமைக்காம சொதப்பிட்டார்னு தோணுது.. .



பிரபு சாலமன்  - புது உலகத்தை உருவாக்க நினைப்பது ஓக்கே.. ஆனா அதுக்காக ஏன் பழசை அழிக்கனும்?கான்செப்ட் ஈஸ் நாட் ஓக்கே.



 விக்ரமன்  - SOME TIMES CREATIONS WILL FAIL ,BUT THE CREATORS NEVER FAIL - சில சமயம் சில படைப்புகள் தோல்வி அடையலாம், ஆனால் படைப்பளிகள் தோற்பதில்லை


சி.பி - இவரோட படைப்புகள் எல்லாமே ஹை கிளாஸ் ஆடியன்ஸுக்கானவை.. மணிரத்னம், கவுதம் மாதிரி,. இன்னும் எளிமையா சொல்லலாம்


 பெஸ்ட் சி ஜி ஒர்க்குக்கான விருது கிடைச்சுது..





Thursday, June 21, 2012

நாளைய இயக்குநர் - செமி ஃபைனல் - விமர்சனம் ( 17 .6.2012)

வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க.. 

இந்த வாரம் நடுவர்களா இயக்குநர் விக்ரமன், மைனா இயக்குநர் பிரபு சாலமன்..

பிரபு சாலமன்...  -. எங்களுக்கு நாளைய இயக்குநர்  மாதிரி ஒரு பிளாட் கிடைச்சிருந்தா 12 வருஷங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்.என்னோட அடுத்த படம் கும்கி. அதாவது பயிற்சி கொடுக்கப்பட்ட யானைகள் வாழ்க்கை பற்றி. பின்னணில ஒரு காதல் கதை .. கிராமத்துல நடக்கும் பிரச்சனைகள்.. இப்படி போகும்.. 


விக்ரமன் - இந்த வாரம் டாபிக் போலீஸ் ஸ்டோரிஸ், சயின்ஸ் ஃபிக்சன்



#
என்னடா பிரச்சனை உங்களுக்கு ?-kovai mani



1. இயக்குநர் பெயர் - பாரதி பாலா , குறும்படத்தின் பெயர் - சத்தியப்பிரமாணம்


1960 களில் வந்த பழைய படங்களை கிண்டல் பண்ற மாதிரியும், புதிய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலுமா இந்தப்படம் எடுத்திருக்காரு.. பின்னணி இசை , உடை வடிவமைபு, உடல் மொழி, வசனம் எல்லாமே அப்படியே அந்தக்காலம்.. ஐ திங்க்.... இதுதான் முதல் பழைய கால பிரதிபலிப்பு முதல் குறும் படம்./.

போலீஸ் உயர் அதிகாரி அண்ணன் தம்பி 2 பேரையும் கூப்பிட்டு ஒரு பொறுப்பை ஒப்படைக்குது.. அவங்க 2 பேரும் போலீஸ் தான்.. ஒரு கடத்தல் கும்பலை பிடிக்கும் வேலை.. 

 இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. ஸ்கூல்ல படிக்கும்போதே டீச்சர் “ நீங்க என்னவாகனும்னு ஆசைப்படறீங்கன்னு கேட்டப்பவே 2 பேரும் ஒரே மாதிரி போலீஸ் ஆகனும்னு ஆசைப்பட்டவங்க,.. 

பழைய பட சஸ்பென்ஸ் மாதிரியே அண்ணன் தம்பி ராமு- குமார்ல ராமுதான் வில்லன்.. ஆனாலும் அவனை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைக்கறதுதான் கதை.. 

 மேலோட்டமா பார்த்தா அல்லது எழுத்து வடிவில் இதை படிக்கும்போது அரைச்ச மாவுதானே என்ர சலிப்பு வரும்.. ஆனாலும் இந்த 8 நிமிட குறும்படத்துக்காக எடுத்துக்கொண்ட உழைப்பு அதிகம்.. 

 ஆனாலும் உழைப்பு அதிகம் என்பதற்காக யாரும் படங்களை ரசிப்பதில்லை.. அப்படி ரசிச்சிருந்தா கமல் ஹாசன் ரஜினியை பீட் பண்ணி இருப்பாரே?



விக்ரமன்  கமெண்ட் பண்றப்போ  “ ஸ்பூஃப் ட்ரை பண்ணி இருக்கீங்க. ஆனா அதிகம் ஒர்க் அவுட் ஆகலை.. 1960 டூ 75 அப்படியே கண் முன்னால் நிறுத்தினீங்க அப்டினு பாராட்னாரு.. 

சாலமன் - ஈஸ்ட்மென் கலர், டைட்டில் டிசைன்,  பின்னணி இசை எல்லாம் அபாரம்.. ஏன்னா அந்தக்காலத்துல ஈஸ்ட்மென் கலர்ல படம் எடுக்கறது அபூர்வம்.. அதனால அதை பெருமையா டைட்டில்ல போட்டுக்குவாங்க , அதைக்கூட மிஸ் பண்ணாம  கரெக்டா நோட் பண்ணி டைட்டில்ல யூஸ் பண்ணி இருக்கீங்க.. குட்.. நேர்த்தியான, உண்மையான உழைப்பு.. 


ஒளிப்பதிவுக்கு  பரிசு வாங்குச்சு.. 



Prime Minister Manmohan Singh today left for Rio De Janeiro to attend the Rio+20 summit, the three-day meeting to be attended by 193 nations.

Singh was here in this Mexican resort to participate in the seventh summit of the Group of developed and developing countries(G-20).


2,இயக்குநர் பெயர் -ஸ்ரீகணேஷ் , குறும்படத்தின் பெயர் - ஒரு கோப்பை தேநீர்

 எஸ் ராம கிருஷ்ணனின் சிறுகதையை பேஸ் பண்ணி  மகேந்திரன் பாணில அழகிய படம்.. 
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு கைதி .. 2 பேரும் லேடீஸ்.. கோர்ட்டுக்கு போற வழில அவங்களுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் தான் படம்.. 

 படத்தோட கதைப்போக்கு அன்பே சிவம் டைப் தான்.. அதாவது மாறுபட்ட 2 கேரக்டர்களை வெச்சு இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கருத்தை மக்களுக்கு சொல்வது ..

கைதி சின்ன விஷயத்துக்காக திருடி மாட்டிக்கறா.. அவளை கோர்ட்ல ஒப்படைக்க லேடி போலீஸ் கூட்டிட்டு போறாங்க,.,. அவங்க அன் மேரீடு.. வழில அவங்க மாமா கிட்டே பேசும்போது அந்த மேட்டர் தெரிய வருது.. போலீஸ்னாலே மாப்பிள்ளைங்க பயப்படறாங்க. அதனால லேடி போலீஸ்க்கு வருத்தம்.. 

 இதுல என்ன காண்ட்ரவர்சின்னா போலீஸ் வேலைல இருந்தும் அந்த லேடி டென்ஷனா இருக்காங்க, கைதியா இருந்தும் அந்த லேடி ஜாலியா , எதைப்பற்றியும் கவலை இல்லாம இருக்காங்க.. வழி பூரா தொண தொணனு பேசிட்டே வர்றா.. 

 திடீர்னு அந்த லேடிக்கு மென்சஸ் ஆகிடுது. போலீஸ் கிட்டே மெடிக்கல் ஷாப்ல நாப்கின் வாங்கித்தாங்கனு கேட்கறா.. போலீஸும் வாங்கித்தருது.. இதே ஒரு ஆண் போலீஸா இருந்தா கிண்டல் தான் பண்ணுவாங்க.. ஒரு பொண்ணா  இருப்பதால் தான் வலி உங்களுக்கும் தெரியுதுன்னு சொல்லி படத்தை செண்ட்டிமெண்ட்டா முடிக்கறாங்க

 இதுல முக்கியமான 2 கேரக்டர் நடிப்பும் கிளாஸ்.. போலீஸா வரும் நடிகை முகத்தில் கவலைச்சுருக்கங்கள் அப்படியே கண் முன் ... கைதியின் தெனாவெட்டுப்பேச்சு கலக்கல்.. 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. கில்மா லேடி - போற வர்றவங்க எல்லாம் யூஸ் பண்ண நான் என்ன குப்பைத்தொட்டியா? 


2. இங்கே பாருங்க மேடம், போலீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்கன்னா ஒரே பார்வை தான் ( எவன் சொன்னது? யூனிஃபார்ம்ல இருந்தா பம்முவோம் ஹி ஹி )


3. சாஃப்ட்வேர் கம்ப்பெனில ஒர்க் பண்றவன் எதுக்கு போலீஸ் லேடி மேரேஜ் பண்ணனும்னு இருக்கு? அவனுக்கு தோசை சுட்டுப்போடும் மனைவி போதாதா?


4. போலீஸ் - யார்டி அவன், உனக்கு ஹாய் சொல்லிட்டுப்போறான்?

 சும்மா. இப்போ ஜெயிலுக்கு போனா வெளில வர எப்படியும் 6 மாசம் ஆகும்.. அதான் அனுபவிக்கலாம்னு.. 


5. லீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் பெண்களுக்கு இந்த மாதாந்திர வலி பொதுவானது.. எல்லாருக்கும் வலிக்கும். 

6. நான் 1 கேட்பேன், பதில் சொல்லு.. நீ ஏன் திருடி ஆனே?


 நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க? 


7. உங்களை அக்கான்னு கூப்பிடவா?

 வேணாம்.. 

சரி ஏட்டம்மான்னு கூப்பிட்டுக்கறேன்.. 


ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் நல்லா இருந்தது.. 


சாலமன் - டைட்டில் சரி இல்லை, இன்னும் கிரிப்பா வெச்சிருக்கலாம் ( எப்படி? ஸ்ட்ராங்க் டீ 1 அப்டின்னா? )


விக்ரமன்  - மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்துல ஒரு தீம் மியூசிக் வரும்.. படம் முடிஞ்ச பின்னாலும் நம்ம மனசுல தங்கும் இசை அது.. அதே மாதிரி இந்தப்பட தீம் மியூசிக்கும் இருந்துச்சு வெல்டன். 



இந்தப்படம் இந்த வாரத்தின் சிறந்த படமா செலக்ட் ஆச்சு. சிறந்த நடிப்புக்கு 2  ஹீரோயின்ஸ்க்கும் கிடைச்சுது


ரெடி....1....2.....



3. இயக்குநர் பெயர் -செந்தில்   , குறும்படத்தின் பெயர் -ரெட்டைக்குழல்

 ரிட்டயர் ஆகப்போகும் ஒரு போலீஸ்காரரின் கடைசி பணி நாள் தான் கதை.. 
எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை..அப்டின்னு மனைவி புலம்பறாங்க.. பொதுவா இந்த சம்சாரங்களே புலம்பல் பார்ட்டிங்க தான்.. போலீஸ்காரர் ஸ்டேஷன் போறாரு./..அவரோட துப்பாக்கியை மிஸ் பண்ணிடறாரு.. கடைசி நாள் எல்லாம் ஒப்படைக்கனும்

 யார் எடுத்திருப்பாங்க? அவர் லிஸ்ட் அவுட் பண்ணி பார்க்கறார்.. அவரோட எதிரிகள் யார் எல்லாம் இருக்காங்க.? சமீபத்திய கேஸ்கள்ல மாட்டுனது யார்? ஒவ்வொருவரா விசாரனை பண்றாரு.. யாரும் எடுக்கலை.. 

 கடைசில பார்த்தா ஒரு லேடி கான்ஸ்டபிளே  அதை எடுத்து ஒளிச்சு வெச்சு அதுவே கண்டு பிடிச்சுத்தர்ற மாதிரி ஷோ காட்டி நல்ல பேர் வாங்குது.. என்ன ட்விஸ்ட்னா  அவர் பையன்  இந்த லேடியை லவ்விங்க். மாமனார்ட்ட நல்ல பேர் எடுக்க இப்படி ஒரு டிராமா...


மலைக்கிராமம் அப்படியே கண் முன் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்.. 


லாஜிக் மிஸ்டேக்கா  சாலமன் சொன்னது -நானும் சினி இண்டஸ்ட்ரில பல தடைகளை தாண்டி வந்ததால உங்க மனசை புண்படுத்த விரும்பலை, அதனால . சில குறைகளை சாஃப்ட்டா சொல்றேன்.


1.  ஒரு ரைபிளை இப்படி அசால்ட்டா ஒரு போலீஸ் வெச்சுட்டு போக மாட்டார். அதை வைக்க ஒரு லாக்கர் இருக்கு.. அதுல தான் வைப்பாங்க


2. துப்பாக்கியை காணோம்னா ஒரு பதட்டம், பரபரப்பு வேணும்.. எதையும் அந்த போலீஸ் காட்டலை. மெத்தனமா இருந்தா பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மட்டும் எப்படி ஒரு ஆர்வம் வரும் ?





 பாராட்டு பெறும் வசனங்கள்

1.  என் 33 வருஷ சர்வீசை வெறும் 7 மணி நேரம் மாத்திடும் போல இருக்கே?


2. எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை.




நிகழ்ச்சித்தொகுப்பாளர் கீர்த்தி கிட்டே ஒரு முன்னேற்றம்.. முதல்ல எல்லாம் ரொம்ப  கேவலமான நைட்டியை போட்டுட்டு வருவார்.. இப்போ கொஞ்சம் டீசண்ட்டா நைட் கவுன் போட்டுட்டு வர்றார்.. ( ஒரு வேளை ஷூட்டிங்க் நைட்ல நடக்கறதால  மேட்சுக்கு மேட்சா நைட் டிரஸ்ல வர்றாரோ?)

Tuesday, June 12, 2012

நாளைய இயக்குநர் -விமர்சனம் (10.6.2012)



வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க..

நடுவர்களான இயக்குநர் விக்ரமன், சுந்தர் சி ரெண்டு பேர்ட்டயும் ஆர்த்தி ஒரு கேள்வி கேட்டாங்க..நம்ம நாட்டுல நடத்தற ஷூட்டிங்க், ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல நடத்தற ஷூட்டிங்க் எது ஈசி,  என்ன ரீஸன்?


ஃபாரீன்ல செலவு கம்மி.. 10 பேரை வெச்சு முடிச்சுடலாம்.. இங்கே யூனியன் அது இதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்.. 100 பேரை வெச்சு  எடுக்கனும், செலவு, சிரமம் எல்லாம் பல மடங்கு.. அப்புறம் நம்ம நாட்ல ஷூட் பண்ண பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. உதாரணமா மேட்டூர் டேம்ல ஒரு ஷூட்னா வன இலாகா, PWD,போலீஸ் இப்படி பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. ஃபாரீன்ல அப்படி இல்லை.. ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட்ல சொன்னா போதும்.. அவங்களே ஒரு ஆளை கூட அனுப்புவாங்க .. ஷூட்டிங்க்ல ஏதாவது பிரச்சனைன்னா அவங்களே உதவி செய்வாங்க, க்ளியர் பண்ணி விடுவாங்க 


அப்டின்னாரு சுந்தர் சி..அதே போல் விக்ரமன் சாரும் ஸ்விச்சர்லாந்தில் ரொம்ப ஈசியா தான் நடத்துன பட ஷூட்டிங்க் பற்றி சிலாகிச்சு பேசுனாரு..



1.இயக்குநர் பெயர் - மித்ரன்  , குறும்படத்தின் பெயர் - மனிதம் ( அறம் செய்ய விரும்பு )


ஒரு நாட்டுல ஒருத்தர் செய்யற தப்பால அந்த நாட்டுக்கே  கெட்ட பேர் வர்றது எப்படி? எதனால குறை சொல்றாங்க? அப்டிங்கற ஒன் லைன் தான் கதைக்கரு.. சமீபத்துல ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தான் கதைக்கான பேசிக்  KNOT

ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் ஒரு இந்திய மாணவன் செல் ஃபோன்ல அப்பா கிட்டே பேசிட்டு இருக்கான்.. அப்போ ஒருத்தன் வந்து அவனை கத்தியால குத்திட்டு போயிடறான்.. கொலை செஞ்சவனோட அம்மா வீட்ல அவனோட வித்தியாச நடவடிக்கைகளை நோட் பண்றாங்க.. இன்னொரு பக்கம் கொலை செய்யப்பட்ட பையனோட அப்பா கண்ணீர் விட்டுட்டு இருக்காரு..

 கலவரம், போராட்டம் நடக்குது.. நாடு முழுவதும் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் ஒரே ஒரு நாள் இந்திய உணவை சாப்பிட முடிவு செய்யறாங்க. ஒரு அஞ்சலி மாதிரி.. கொலையாளியின் அம்மாவே போலீஸ்ல அவனை பிடிச்சுக்கொடுத்துடறா.ங்க.

 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  கேவலம், ஒரே ஒரு செல் ஃபோனுக்காக ஒரு ஆளையே கொல்வாங்களா?

2. டேய் இந்தியா வர்றப்ப எனக்கு ஃபாரீன் சரக்கு வாங்கிட்டு வாடா..

அப்பா.. பையன் கிட்டே இப்படியா பேசுவாங்க?

புள்ளையையே எக்ஸ்போர்ட் பண்ணிட்டேன், சரக்கை இம்போர்ட் பண்ணக்கூடாதா?

3. குத்தறதையும் குத்திட்டு குருமா வேற சாப்பிடுவாங்களா?

4. என் பையன் எங்கே எல்லாம் போனானோ அங்கே எல்லாம் நானும் போய் பார்க்கனும்



சுந்தர் சி இந்தப்படத்தை ரொம்ப சிலாகிச்சு பாராட்டுனாலும் படம் ரொம்ப ஸ்லோவா போகுது,இன்னும் ஸ்பீடு பண்னனும்னாரு



2..இயக்குநர் பெயர் - கார்த்திகேயன் , குறும்படத்தின் பெயர் - புழுதிக்காடு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஒளிப்பதிவுல கலக்கி எடுத்துட்டாங்க .. அழகிய கிராமம்.. அங்கே பனை மரங்கள் உள்ள இடம்.. நிர்மலமான வானம், குருவி, ஓடை, பச்சைப்பசேல் வயல்கள், என ஷாட் பை ஷாட் பின்னி எடுத்தாங்க.. ஆனா கதை தான் ஒண்ணும் தேறலை..

 படத்துல வசனமே இல்லை.. 5  பிட் பாட்டுக்கள்.. ஓப்பனிங்க் ஷாங்க், ஒரு கொண்டாட்டப்பாட்டு, ஒரு ஒப்பாரிப்பாட்டு, ஒரு காதல் பாட்டு, நண்பர்களுடனான ஒரு தெம்மாங்குப்பாட்டு.. அவ்ளவ் தான் படம் முடிஞ்சுது.. இதுல என்ன சொல்ல வர்றாருன்னு தெரியலை..

 இதே கேள்வியை ஜட்ஜ்ங்க கேட்டப்ப “ ஹீரோவை அவன் காதலி மறந்துட்டு போயிடறா.. ஆனா ஹீரோவால அவளை மறக்க முடியலை.. அவ நினைவாவே காலம் எல்லாம் வாழறார்.. அதைத்தான் சொல்ல வந்தேன்னாரு.. ஆனா காட்சிகள்ல அந்த வலி பதிவு செய்யப்படலை.. 


பாடல் மூலமா கதை சொல்றது நல்ல விஷயம் தான் நாங்க எல்லாம் ஒரே பாட்டுல ஹீரோவை கோடீஸ்வரர் ஆக்கி இருக்கோம், ஆனா நீங்க சொன்ன கதைல எதுவும் தேறலை, பெட்டர்  லக் நெக்ஸ்ட் டைம் அப்டின்னாரு விக்ரமன்


3. இயக்குநர் பெயர் - நித்திலன் , குறும்படத்தின் பெயர் - சிரிப்பு வர்லைன்னா  பொறுப்பு நாங்க இல்லை

இதுல ஸ்பெஷல் விஷயம் என்னான்னா படத்தோட  ஹீரோ நம்ம ஊர்க்காரர் சாம் ஆண்டர்சன்.. 

ஒரு அப்பா தன் பையனை மன நல  மருத்துவரிடம் கூட்டிட்டு வர்றார்.. அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு.. விசாரிச்சா காதல் தோல்வி.. தன்னோட  3 காதல் தோல்விகள் பற்றி ஹீரோ புளி போடாமயே விளக்கறாரு.. அப்போ டாக்டர் சொல்றாரு.. என் கிட்டே  ஒரு மாத்திரை இருக்கு, அதை விழுங்கிட்டா நீ கடந்த காலத்துல பயணம் செஞ்சு நீ செஞ்ச தப்பை கரெக்ட் பண்ணலாம், உன் காதலியை கிஸ் பண்ணலாம், என்ன வேணா செய்யலாம்..

 அட்டகாசமான வாய்ப்பு.. ஆனா இந்த ஹீரோ என்ன பண்றாரு ? கடந்த காலத்துல போய் தன்னை  , தன் காதலை கேவலப்படுத்திய ஒரு காதலி கிட்டே 1000 ரூபா நோட்டுல ஐ லவ் யூ எழுதி கொடுக்கறாரு.. அந்த பொண்ணு கெக்கே கெக்கே பிக்கெக்கே  என சிரிச்சுட்டே வாங்கிக்குது.. உடனே பளார்னு ஒரு அறை விட்டுட்டு ரிட்டர்ன் வந்துடறாரு.. 

 ரெண்டாவது காதல்.. அதை எதிர்த்த தன் அப்பாவை அடிச்சுட்டு வர்றாரு.. க்ளினிக் வெளீல வெயிட் பண்ணிட்டு இருந்த அப்பா அழுதுட்டே வர்றாரு.. அங்கே அடிச்சா இங்கே வலிக்கும் - ரமணா டயலாக் போல .. 

 மூணாவது காதல் -ல ஒரு ட்விஸ்ட்.. அதாவது காதலியின் அண்ணன் இப்போ மாத்திரை கொடுத்த டாக்டர் தான். அவரையும் ஹீரோ அடிக்கறாரு.. டாக்டர் அய்யோ அய்யோன்னு கத்த படம் ஃபினிஷ்.. 


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  கடந்த காலத்துல பயணிக்கும் அரிய வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் பாசிட்டிவா திங்க்  பண்ணி  காதலியை கரெக்ட் பண்ண பாப்பாங்க. ஹீரோ 3 காதலிகளை கண்டுக்கவே இல்லை.. பழி வாங்கும் உணர்ச்சி தான் அவன் கிட்டே இருக்கு.. 


2. காமெடிக்குத்தான் என்றாலும் 3 ஃபிளாஸ்பேக்க்கிலும் அவர் அடி  போடுவது போர்..  ஒவ்வொரு காதலையும் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்.. 


3. நான் எடுக்க நினைச்ச கதையே வேற.. சாம் அண்டர்சன் கால்ஷீட் சொதப்பலால் வேற கதையை மாத்த வேண்டியதா போச்சுன்னு சமாளீஃபிகேஷன் கொடுத்ததை ஏத்துக்க முடியலை..


 சிறந்த படம் முதல் படமே.. அவார்டு வாங்குனதும் அதுவே..

Tuesday, June 05, 2012

நாளைய இயக்குநர் - ஃபேன்ட்டசி கதைகள் -(27.5.2012)-விமர்சனம்

மரசிற்பம் செய்யும் மாமனிதர்..........-k r vijayan.
Photo: மரசிற்பம் செய்யும் மாமனிதர்...........
1. இயக்குநர் பெயர் - பாக்யராஜ் கண்ணன் - குறும்படத்தின் பெயர் - வசூல்

இயக்குநர் தன் பேருக்குத்தகுந்த மாதிரி குறும்பான கதையைத்தான் செலக்ட் பண்ணி இருக்காரு..

ரஜினியின் அதிசயப்பிறவி,வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் படங்கள் மாதிரி இதுவும் ஒரு ஃபேண்டசி மேல் லோக கதை தான்.. அதாவது எம தர்ம மகாராஜா தன் சின்ன வீடான ரம்பை வீட்டுக்கு போறப்ப சாரி போன பின் அங்கேயே பாசக்கயிறை மறந்து வெச்சுட்டு வந்துடறாரு .. அதனால காலைல பூலோகத்துல ஒரு  உயிரை எடுக்க வேண்டிய சூழ்நிலைல அவரால உயிரை எடுக்க முடியலை.. அந்தாளோட சம்சாரம் அவரை எமலோகத்துக்கு கூட்டிட்டுப்போக ஒரு கண்டிஷன் போடறாங்க.. அதாவது அவங்க கணவர் பல பேருக்கு பணம் கடன் கொடுத்திருக்கார்.. அந்த கடன் பல லட்சங்கள் மதிப்பு பெறும்.. ஏதாவது ஒரு கடனை வசூல் பண்ணிக்கொடுத்துட்டு கூட்டிட்டுப்போங்கங்கறாங்க .. ( இவ தான்யா பொண்டாட்டி - டாக்டர் ராஜசேகர்க்கு அடுத்த பட டைட்டில் ரெடி )

எமனும், சித்திர குப்தனும் அங்கே இங்கே அலைஞ்சு பார்க்கறாங்க, வேலை ஆகலை..என்ன நடக்குதுங்கறதை காமெடியா சொல்லி இருக்காரு.. ஒரு 8 நிமிஷ படத்துக்கு அவர் உழைப்பு அதிகம் .. வெல்டன் சார்..

எமனா நடிச்சவர் நடிப்பு கலக்கல்னா அந்த சொர்ணாக்கா நடிப்பு செம.. வசனங்களில் நகைச்சுவை இழை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. கடனை எப்போ ரிட்டர்ன் பண்ணப்போறே?

எப்போ வேணும்னாலும்.. கைல காசு இருக்கறப்ப

2. மகனே!

யார்.. என் அப்பனே!

3. ஏத்துன போதையைக்கூட இறக்கிடலாம், ஆனா கொடுத்த கடனை திருப்பி வாங்கவே முடியாது

4. அவங்க ரம்பா மாதிரி என் கண்ணுக்கு தெரியறாங்க..

 என் கண்ணுக்கு என் வாகனம் எருமை மாதிரி தெரியறாங்க..

5. எனக்கு ஒரு சந்தேகம்..

 கேளு

 பவர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

6. இப்போ கணக்கு சரியா வருதா?

ம்ஹூம், கணக்கு சரியா வர்லை, காதல் தான் வருது



எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.
Photo: எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது  சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.




2. இயக்குநர் பெயர் - ஸ்ரீகணேஷ்  - குறும்படத்தின் பெயர் - பரிசு



ஒரு ஏழை.. குடிசை வீட்ல வசிக்கறாரு.. அவர் குடிகாரர்.. மனைவிதான் பொறுப்பா வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாத்துது.. அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை.. 10 வயசு.அந்தபெண்ணோட கனவுகள் பூ வளர்க்கனும்,கிதார் கத்துக்கனும், சைக்கிள் வாங்கனும்,,


 சைக்கிள் வாங்க காசு சேர்க்கறா.. அம்மா தீனி வாங்க குடுக்கற காசு, அக்கம் பக்கம் வீடுகளில் கடை கண்ணிக்குப்போய் அவங்க தர்ற டிப்ஸ் காசு எல்லாம் உண்டியல்ல சேர்த்து வைக்கிறா..


அப்போ டி வி ல ஒரு நியூஸ்... தானே புயல் நிவாரண நிதிக்காக அறைகூவல் விடுக்கறாங்க.. இவ தன் உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை கொண்டு போய் டி வி ஸ்டேஷன்ல கொடுக்கறா.. அவளைப்பற்றி டி வி நியூஸ்ல சொல்றாங்க.. அதைப்பார்த்த அவ பெற்றோர் உள்ளம் உருகறாங்க, அவ அப்பா இனி நான் குடிக்கலை.. 2 மாசம் குடிக்காம பணம் சேர்த்து வெச்சிருந்தா உனக்கு சைக்கிள் வாங்க காசு சேர்ந்திடும்னு சொல்றார்..


க்ளைமாக்ஸ்ல டி வி ல இருந்து அவ வீட்டுக்கு சைக்கிள் பரிசு வருது..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சைக்கிள் வாங்கி இருந்தாக்கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.. இப்போ தானே நிவாரண நிதிக்கு பணம் குடுத்தது மனசுக்கு நிறைவா இருக்கு

2. நீ ஏம்மா இந்த வீட்ல வந்து பிறந்தே?

3. ஃபோட்டோ எடுத்துக்கவா?

வேணாம் சார்.. நான் அழுத மாதிரி இருக்கேன், நல்லா வராது

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காசின் தேவை உள்ள ஏழைப்பெண் அடிப்படையில் கிறிஸ்டினாக இருந்தாலும் தான் கண்டெடுக்கும் 100 ரூபாய் பணத்தை இந்து உண்டியலில் போடுவது

2. அந்த 100 ரூபாய் இருந்தா குவாட்டர்க்கு ஆச்சு, என அப்பாவும், 4 கிலோ அரிசியாவது வாங்கி இருக்கலாம் என அம்மாவும் எதார்த்தமாக பேசுவதும், தன் பெண்ணின் நல்ல குணத்தை அவர்கள் புரியாதபடிக்கு இருப்பதும், பின் தாமதமாக அதை உணர்வதும்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அந்த சிறுமி டி வி ஸ்டேஷன்ல பணம் குடுத்துட்டு அப்பவே கிளம்பிடுது.. ஜஸ்ட் ஒரு ஃபோட்டோ  எடுக்கலாம்னு டி வி ஆஃபீசர் கேட்டப்பக்கூட வேனாம்னு சொல்லி கிளம்பிடுது.


டி வி செய்தில கூட அந்த சிறுமி பேர் சொல்லலை.. அப்படி இருக்கும்போது சைக்கிள் பரிசு தர அந்த ஆஃபீசர் கரெக்டா அந்த குடிசை வீட்டுக்கு வருவது எப்படி? எந்த விபரமும் அந்த சிறுமி சொல்லலையே?


2. அப்பா திருந்திடறாரு.. அப்போ அந்த சிறுமி தூங்கிட்டு இருக்கு.. அவளை எழுப்பி விட்டு அப்பா “ நான் திருந்திட்டேன்”னு சொல்றாரு.. மகள் மேல் பாசம் உள்ள எந்த அப்பா தூக்கத்தை கலைச்சு விட்டு தான் நல்லவன்னு சொல்வாரு.. காலைல சொல்லிக்கலாமே?

Photo


=

3. இயக்குநர் பெயர் - அஸ்வின்   - குறும்படத்தின் பெயர் - இன்பாக்ஸ்

இது செம ரொமாண்டிக் கதை.. எல்லாரும் நிமிர்ந்து உக்காருங்க..

ஹீரோயின் 75 மார்க்  ஃபிகரு.. செம கலரு.. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல என்னமோ வாங்குது,, ஒரு அழகான கேரி பேக் மாதிரி 1 தர்றாங்க.. அதே கடை, ஹீரோவும் ஏதோ வாங்கறாரு.. அவருக்கும் ஒரு கேரி பேக்..

அந்த கேரி பேக் மெயில் சேட் மாதிரி யூஸ் ஆகுது.. அதாவது ஒரு சீட்ல ஹீரோ தன் பேரை எழுதி உள்ளே போட்டா அது ஹீரோயின் பேக்ல போய் சேருது, ஹீரோயின் அதை படிச்சுப்பார்த்துட்டு அதே போல் ரிப்ளை பண்ணுது.. 2 பேரும் தங்களைப்பற்றி தகவல்களை பகிர்ந்துக்கறாங்க..

2 பேரும் அதை வெச்சு சீட்டு விலையாடறாங்க.. எப்படின்னா 13 கார்டு அந்த பாக்ஸ்ல போட்டா அவ பாக்ஸ்க்கு அது போயிடும்..திடீர்னு கேரி பேக் கிழிஞ்சுடுது.. ஹீரோ சோகம் ஆகறாரு.. ஹீரோயினும் தான்.. 2 பேரும் எதேச்சையா பார்க் வர்றாங்க.. ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க, சேர்ந்துடறாங்க ...

நம்ப முடியாத கதை தான்.. ஆனாலும் ரசனையா தான் எடுத்திருக்காங்க

1. படத்தில் நோ வசனம்.. எல்லாம் காட்சிகள் தான் மகேந்திரன் சார் படம் மாதிரி

2. படம் பார்க்கறவ்ர்களை ஏங்க வைத்து விடுகிறது அது போல் ஒரு கேரி பேக் கிடைக்காதா என..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஒரு சீன்ல ஹீரோயின் லேப்டாப்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கு.. டக்னு அதை க்ளோஸ் பண்ணிடுது.. சைன் அவுட் கொடுத்து ஆஃப் பண்ணி அப்புறமா லேப்டாப்பை மூடனும்கற பேசிக் நாலெட்ஜே கிடையாதா?

2. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் வெவ்வேற ஏரியா.. அதெப்பிடி கரெக்ட்டா ஒரே பார்க் வந்து ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க? இன்னும் நம்பகத்தன்மையோட  அந்த ட்விஸ்ட்டை யூஸ் பண்ணி இருக்கலாம்..

இந்தப்படத்துக்கு சிறந்த படம் விருது கிடைச்சுது..


Wednesday, May 02, 2012

நாளைய இயக்குநர் 29.4.2012 - விமர்சனம்

வாரா வாரம் சண்டே அன்னைக்கு காலைல 10.30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சில தான் கலைஞர் டி வி ல பெஸ்ட் புரோகிராம்னு சொல்லலாம்.. பார்க்காதவங்க ரெகுலரா பாருங்க.. 7 நிமிட குறும்படங்கள் 3 ஒளீபரப்பாகுது.. 

பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா கீர்த்தி இன்னைக்கு பச்சைக்கலர் பாவாடை ( மிடி பாட்டம்?) போட்டுட்டு வந்திருந்தாங்க.. அவங்க கழுத்துல காசு மணீ பாசி மாலையும் பச்சைக்கலர்ல.. நல்ல வேளை பச்சை பச்சையா பேசலை.. மேட்சுக்கு மேட்ச் மிஸ்.. 


அவங்க தலை வலது புறமா லேசா வீங்கி இருந்தது,.. என்னான்னு கேட்டா அது ஒரு வகை ஹேர் ஸ்டைலாம்.. சகிக்கலை.. அவர் போட்டுட்டு வந்த ஹை ஹீல்ஸ் ரொம்ப குறுகலா இருக்கு.. இதே மாதிரி அவர் ரெகுலரா சைஸ் பத்தாத செப்பலை போட்டுட்டு வந்தா கால் பணால் ஆகிடும்.. ( இப்போ விமர்சனம் ஷார்ட் ஃபிலிமுக்கா? கீர்த்திக்கா?)


1. குறும்பட இயக்குநர் பெயர் - கார்த்திக்  - குறும்படத்தின் பெயர் - தோஸ்த்


ஓப்பனிங்க்லயே இது ஒரு காமெடி படம்னு தெரிஞ்சுடுது,, ஒரு வீட்டுக்குள்ள திருடன் திருடப்போறான்.. அங்கே ஃபோட்டோல இருக்கற பெருசு ஆவியா இருந்து அவனை வழி நடத்துது.. அதாவது அந்த பெருசு உயிரோட இருந்தப்போ அந்த வீட்ல இருந்தவங்க யாரும் சரியா அவரை கவனிக்கலை போல.. அதனால எந்தெந்த பொருளை அவன் திருடனும்னு அந்த ஆவியே சொல்லித்தருது.. 

 எல்லாம் முடிஞ்சு கிளம்பறப்ப அந்த ஆவி அந்த திருடன் கிட்டே அவன் ஃபோன் நெம்பர் கேக்குது.. அப்பப்ப போர் அடிச்சா உன் கிட்டே பேசறேன்குது.. திருடனும் குடுக்கறான்.. 

 அடுத்த நாளே போலீஸ்ல மாட்டிக்கறான்.. அந்த வீட்டின் ஓனர் ஒரு ஆட்டோமேடிக் கேமரா வீடியோ செட் பண்ணி வெச்சிருக்கான்.. அந்த வீடியோவுல்  திருடன் பேசுன ஃபோன் நெம்பர் ரெக்கார்டு ஆகிடுது.. அதனால மாட்டிக்கறான்...

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உன் பேரென்ன?

 கண்ணன்

 அதான் திருட வந்திருக்கே.. 


2.  முதல்ல இந்த டி வியை எடுத்துட்டுப்போ.. இதுல வர்ற 15 சீரியலையும் என் மருமக பார்க்கறா.. கரண்ட் போனா மட்டும் தான் என் பையனுக்கு சமைச்சுப்போடறா..


3. டேய்.. வீட்ல ஒரு ஆவிடா.. 

 குடிச்சிருக்கியா? எப்போ சரக்கை அடிச்சாலும் ஏண்டா எனக்கு ஃபோன் பண்ணி என் உயிரை வாங்கறே?


இந்தப்படத்துல ஹீரோவா வந்தவர் முகச்சாயல்லயும் சரி பாடி லேங்குவேஜ்லயும் சரி பருத்தி வீரன் கார்த்தி போலவே இருந்தாரு.. செம நடிப்பு.. பெஸ்ட் ஆக்டர் விருது வாங்குனாரு.. ஆவியா வந்த பெரியவர் நடிப்பும் பாந்தம்.. 

 பொதுவா பேய்னாலே பேக்கிரவுண்ட்ல  அதிரடி திகில் இசையைத்தான் போடுவாங்க.. இதுல கர்னாடிக் மியூசிக் வித்தியாசமா இருந்தது.. 


2.  குறும்பட இயக்குநர் பெயர் -ராஜேஷ்குமார் - குறும்படத்தின் பெயர் -சாரதி

 ஒரு கால் டாக்ஸி டிரைவர்.. ஒரு லண்டன் வாழ் தம்பதிக்கு ஒரு நாள் கார் டிரைவரா வர்றாரு.. அவங்க போற பக்கம் எல்லாம் டிரைவரும் போறாரு.. டிரைவருக்கு குழந்தைன்னா ஆசை.. ஆனா அவருக்கு குழந்தை இல்லை.. அந்த தம்பதியோட பெண் குழந்தை அந்த டிரைவர்ட்ட ஒட்டுதலா இல்லை.. அந்த பாப்பாவுக்கு இந்தியாவையே பிடிக்கலை.. நரசிம்மராவ் மாதிரியே மூஞ்சியை வெச்சிருக்கு.. 
பெண் குழந்தைகளை கடத்தி வியாபாரம் பண்ற ஒரு கும்பல் அந்த பெண் குழந்தையை கடத்திடுது.. டிரைவர் கஷ்டப்பட்டு  அந்த கும்பலில் மாட்டின குழந்தைகளை மீட்டு அவங்க பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் கதை.. 


கால் டாக்சி டிரைவரா நடிச்சவர் ரொம்ப யதார்த்த நாயகனா சேரன் மாதிரி ( ஆனா குண்டு) நடிச்சிருந்தார்.. எதுக்கும் கோபத்தை காட்டாத பொறுமையான நடிப்பு.. லண்டன் தம்பதியின் குழந்தையா வந்த பாப்பாவை விட கும்பல்ல மாட்டிக்கிட்ட இன்னொரு பெண் குழந்தை ஃபேஸ் கட், துறு துறுப்பு எல்லாம் செம கலக்கல்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா கிட் நாப் கும்பல் கடத்துனதும் மயக்க மருந்து குடுத்துடுவாங்க.. ரிஸ்க் எதுக்குன்னு.. அதுவும் இல்லாம விழிச்சிருந்தா சத்தம் போடுவாங்க அல்லது தப்பிக்க வழி தேடுவாங்க ..

2. குழந்தைகளை கடத்தி வெச்சிருக்கற அதே ரூம்ல எந்த லூஸாவது ஹீரோவை அடைச்சி வைப்பானா?

3. டிரைவர் தன் மனைவியிடம்  செல் ஃபோனில் உரையாடும் காட்சி  தேவை இல்லாதது ( பிள்ளை இல்லாதவர் என்பதால் அவர் தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்ற சஸ்பென்சுக்காக என்றாலும் அது தேவை இல்லாத சீனே..)

 நடுவரா வந்த சுந்தர் சி,  வெற்றி மாறன் 2 பேருமே ஒரு குறை சொன்னாங்க.. அதாவது அந்தக்குழந்தை ஏன் டிரைவர் மேல வெறுப்பா இருக்கு.. கதைக்கு அது தேவையே இல்லைன்னு.. நான் என்ன சொல்றேன்னா நோ பிராப்ளம்.. அந்த குழந்தை வெறுப்பா இருந்தாக்கூட டிரைவர் அந்த குழந்தையை காப்பாத்தறார் என்பதுதான் கதைக்கரு.. 

 இந்த ஜட்ஜுங்க எல்லாம் ஸ்டேஜ்ல இயக்குநர்களை மடக்கிடறதா நினைச்சு சில கேள்விகளை கேட்க்றாங்க /. மேடை பயம் டென்ஷன் இதனால அந்த இயக்குநர்கள் அதுக்கு சரியா பதில் சொல்ல முடியறதில்லை.. இதனால ஜட்ஜூங்க ரொம்ப மிதப்பா நினைச்சுக்கறாங்க ..  

3.குறும்பட இயக்குநர் பெயர் -அருண் - குறும்படத்தின் பெயர் -கறுப்பு, மஞ்சள், சிவப்பு


வித்தியாசமான திகில் படம்.. பேசிக் இன்ஸ்டிங்க் - பாகம் 2 படத்தோட சாயல்ல..   காலேஜ் ஃபிரண்ட்ஸ் 3 பேரு அவங்க ரூமுக்குள்ள வர்றாங்க.. அதுல ஒரு பையன் இன்னொருத்தனை ( ரூம்ல இருக்கற 3 பேர் தவிர வேற ஒரு ஆள்) திட்டிட்டே இருக்கான்.. அவங்க பேச்சுல இருந்து நமக்கு தெரிய வர்ற விஷயம் என்னான்னா  வனை இவங்க 3 பேரும் நல்ல சக்கையா அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டாங்க.. வந்தவங்க அவன் பேக் ஒண்ணையும் எடுத்துட்டு வந்துட்டாங்க..
 

 அந்த பேக்ல ஒரு டைரி.. அது ரத்தத்தால எழுதப்பட்டிருக்கு.. அதை ஒருத்தன் படிக்கறான்.. என்ன ஆச்சரியம்னா  அதுல இவங்க அவனை அடிச்சதை, அடிச்சுப்போட்டுட்டு ரூமுக்கு வந்ததை எல்லாம் விவரமா அதுல எழுதி இருக்கு..  பயத்தோட, ஆர்வத்தோட படிக்கறப்ப ஒரு இடத்துல “ இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. 

 அதை படிச்சதும் டக்னு படிச்சவன் டைரியை அனிச்சையா தூக்கிப்போட்டுடறான்.. படிப்பு கட்,... அவன்  மண்டை பட்.. 

 மீதியை மீதி இருக்கற 2 பேரும் படிக்கறாங்க.. இப்போ நீங்க 2 பேரும் ஒருவரை ஒருவர் அடிச்சுக்கிட்டு சாவீங்கன்னு அதுல வருது.. உடனே 2 பேருக்கும் பயம்.. யார் யாரை போடப்போறாங்கன்னு.. ஆளுக்கொரு ஆயுதம் எடுக்கறாங்க.. ஆனா அதுல ஒருத்தன் சூசயிடு பண்ணிக்கறான்.. மீதி இருக்கறவன் ஒருத்தன்.. 

 இப்போ அவனும் சாகப்போறான்.. ஆனா மறுபடி எல்லாரும் பிழைச்சுக்குவீங்கன்னு வருது.. அதே போல் பிழைச்சுக்கறாங்க,..,ஆனா மறுபடி அதே போல் படிக்க ஆரம்பிக்கறாங்க..  ( செத்து செத்து விளையாடறாங்க)

 அதாவது பாதிக்கப்பட்ட அந்த ஆள் அவங்களை கொலை கொலை செஞ்சு தன் வெறியை தீர்த்துக்கறான் என்பதே கதை.. 

 ரொம்ப புதுமையா இருந்த  இந்தக்கதையை இரு இயக்குநர்களூம் பாராட்டாட்டிக்கூட பரவாயில்லை.. ஏகப்பட்ட வன்முறைன்னாங்க.. பேய்ப்படம்னா பின்னே கொஞ்சிட்டா இருக்க முடியும்?நகரம் படத்துல இல்லாத வன்முறையா? வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த பொல்லாதவன்ல கூட ஓவர் வன்முறை தான்.. 

 இதே கதை நாட் ல அமரர் சுஜாதா கூட ஒரு சிறுகதை எழுதி இருக்கார்.. டைட்டில் நினைவில்லை.. அதுல ஹீரோ ஹீரோயின் ஸ்விம்மிங்க் பூல்-ல நீச்சல் பழக்குவது போலவும் ஒருவர் சாவது போலவும்... மறுபடியும் முதல்ல இருந்து மாதிரியும் வரும்.. 

மாதவன் -ன்  யாவரும் நலம் படத்துல கூட டி வி ல வர்ற சீன் எல்லாம் நிஜத்துல நடக்கற மாதிரி காட்டி இருப்பாங்க.. 

 என்னைப்பொறுத்த வரை இது ஒரு நல்ல முயற்சி,.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. முதல் ஆள் அதே போல் சாகறான், ஓக்கே, ஆனா அதுக்குப்பிறகு 2 வதா படிக்கறவன் கூட அதே போல் பாதிலயே படிக்கறதை நிறுத்தறான்..,ஆனா அவன் மண்டை வெடிக்கலை.. அது ஏன்?

2. ரூமில் இருக்கும் 3 பசங்க ஸ்டேட்மெண்ட் படி அந்தப்பையனை நல்லா அடிச்சுப்போட்டதாத்தான் வருது , கொலை செய்யலை.. ஏன்னா அவனை இன்னொரு டைம் போய் நல்லா அடிக்கனும்னு ஒருத்தன் சொல்றான்.. அப்புறம் எப்படி அவன் செத்தான்?

3. அந்த பையனை அடிச்சுப்போட்டுட்டு அப்போதான் ரூமுக்கு வர்றாங்க.. அப்படியே அவன் செத்திருந்தாலும் 10 நிமிஷ கேப்ல பேயாகி உடனே டைரி எழுதி பழி வாங்கனுமா? 2 நாள் கழிச்சு அந்த சம்பவம் நடப்பது போல் காட்டி இருக்கலாம்.. 

 இந்தப்படத்துக்கு பெஸ்ட் கேமரா, எடிட்டிங்க்னு 2 அவார்டு கிடைச்சது.. வெல்டன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Wednesday, April 25, 2012

நாளைய இயக்குநர் 22.4.2012 - விமர்சனம்

கே பாக்யராஜ் நடுவரா  அல்லது ஜட்ஜா இருந்த டைம்ல அவர் டி எம் கே ல இருந்தாரு.. அவர் அம்மா கட்சிக்கு வரப்போறார்னு பேச்சு அடிப்பட்ட அடுத்த நாளே விக்ரமன் , வெற்றி மாறன் கூட்டணி.. இப்போ மறுபடி சுந்தர் சி உள்ளே வந்துட்டாரு.. சுந்தர் சி எப்பவும் சிரிச்ச முகம், வெற்றி மாறன் கடு கடு முகம்.. ஹூம்.. 


1. குறும்பட இயக்குநர் பெயர் - அஸ்வத்  - குறும்படத்தின் பெயர் - குழந்தையின் வயது 75

டைட்டிலை பார்த்ததுமே செண்ட்டிமெண்ட்ல பிழியப்போறாங்கனு நினைச்சேன்.. 100% சரி.. ஒரு அப்பா, பையன் நடுவில் உள்ள தவமாய் தவமிருந்த உறவு பற்றிய கதை.. படம் ஃபுல்லா 2 பேர் உரையாடல்லயே முடிஞ்சுடுது.. 

அப்பாவும், பையனும் லொட லொடனு பேசிட்டே இருக்காங்க.. அப்பா பேச்சு வாக்குல அது என்ன?னு கேட்கறார்.. பையன் சொல்றான் - அது அணில்ப்பா.. 
மறுபடி அதே கேள்வி.. மகன் அதே பதில். இந்த மாதிரி 4 டைம் ரிப்பீட் ஆனதும் பையன் கடுப்பாகி ஏன்பா திருப்பு திருப்பி கேட்கறீங்க?ங்கறார்.. அப்பா உடனே ஃபிளாஸ் பேக் சொல்றார்.. பழைய டைரி எடுத்து அதுல ஒரு பேஜ் படிக்க சொல்றார்.. அதுல பையன் 20 டைம் மாடு இருக்கறதை காட்டி அது என்னப்பா? என கேட்பதும், அப்பா அதற்கு சலிக்காமல் பதில் சொல்வதும் அதுல பதிவு பண்ணப்பட்டிருக்கு.. 

 மகன் அதை கேட்டு கண் கலங்கறான்.. அதாவது நம் பெற்றோர்கள் நாம குழந்தைகளா இருந்தப்போ காட்டுன அக்கறையை, பொறுமையை நாம் நம் பெற்றோர்களிடம் காட்டுவதில்லை என்ற கரு.. க்ளைமாக்ஸ்ல அந்த பையனின் மகள் அதே போல் லவ் பேர்ட்ஸ் கூண்டை காட்டி அது என்ன ? என 2 முறை கேட்க அவன் பொறுமையா  பறவை என்கிறான்..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அப்பா அந்த டைரியை எடுத்து டிசம்பர் 31 ஆம் பக்கம் எடுத்து படி என்கிறார்.. ஆனால் பையன் டைரியின் கடைசி பக்கம் பார்க்காமல் முதல் 25 வது பக்கம் பார்க்கிறான்

2. அப்பா 1985 ஆம் வருஷ டைரியை எடுன்னு சொன்னதும் பையன் உள்ளே போய் தேடி எடுக்காமல் ரெடியாக டக் என்று அவர் தலை மாட்டில் இருந்து எடுக்கிறான்

3.  அப்பாவின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் மகன் கேரக்டர் செயற்கையான நடிப்பு + சிரிப்பு. நாடகம் பார்ப்பது போல்.. இருக்கு

 இப்படி சில குறைகள் இருந்தாலும் இது ஒரு நல்ல படமே.. ஆனா ஜட்ஜ்ங்க  2 பேரும் இந்த படத்தை குறை தான் சொன்னாங்க..


2.குறும்பட இயக்குநர் பெயர் - ஸ்ரீ கணேஷ் - குறும்படத்தின் பெயர் - டைம் அவுட்.


அசோகமித்திரன் எழுதுன சிறுகதையான காலமும் 5 குழந்தைகளும் தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்.. எதைத்தொட்டாலும் துலங்காத ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவனைப்பற்றிய ஜாலியான நகைச்சுவைக்கதை.. 

கதையை சொல்றதுக்குப்பதிலா மனம் கவர்ந்த வசனங்கள் சொன்னாலே ஓரளவு கதை புரிஞ்சுடும்



1. ஆட்டோ.. அடையாறு போகனும்.. வர்றீயா?



 நான் மவுண்ட்ரோடு தான் போறேன்.. அங்கே வேணா வர்றியா?


2.  தலைவரே.. எப்படியாவது எனக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்துடுங்க.. 

 போலி எம் எல் ஏ - கவலையே படாதே. பணம் கொடுத்தாச்சு இல்ல? நீ தான் அடுத்த வி ஏ ஓ.. ஆமா ஏய்யா பி ஏ.. வி ஏ ஓ அப்படின்னா என்ன?


3. ஒரு 5 நிமிஷம் இந்த உலகம் சுத்தறதை நிறுத்திட்டு ரெஸ்ட் எடுத்தா என்ன?எப்போ பாரு பரப்பாவே இருக்கே..?ரெஸ்ட் எடுக்கவே மாட்டாங்களா?

4.  எங்கே ஓடறோம்? ஏன் ஓடறோம்? எவ்ளவ் தூரம் ஓடறோம்..? எதுவும் தெரியலை. திரும்பிப்பார்த்தா டோட்டல் வோர்ல்டும் ஓடிட்டே இருக்கு.. 


5. யோவ்.. ஆட்டோ சீக்கிரம் போய்யா. 

 இருங்க.. ஒரு சவ ஊர்வலம்..

 அடடா.. யோவ்.. ஒரு 5 நிமிஷம் லேட்டா செத்திருக்கக்கூடாதா?


6.  ஜோசியரே. என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

 10 வருஷம் நாய் படாத பாடு படுவீங்க.. 

 அதுக்குப்பிறகு என் நேரம் நல்லாருக்குமா?

 ம்ஹூம், அதுக்குப்பிறகு அது பழகிப்போயிடும்


படத்தோட ஹீரோ கடவுளையே ஒரு டைம் நேர்ல சந்திச்சும் அவனுக்கு அது யூஸ் இல்லாம போயிடுது அப்டிங்கற மாதிரி கொண்டு போனாங்க..

 இந்தப்படத்துக்கு இயக்குநர் எடுத்துக்கிட்ட முயற்சிகள், உழைப்பு பிரம்மிக்க வைத்தது.. 89 கட் ஷாட்ஸ்..  120 கேமிரா ஆங்கிள்ஸ்

உழைப்பு வீண்போகலை.. இந்த வாரத்துக்கான பெஸ்ட் ஃபிலிம், பெஸ்ட் ஆக்டிங்க், பெஸ்ட் கேமரா மேன் என 3 விருதும் ஒரே படமே வாங்குனது 10 மாதங்களூக்குப்பின் இதுவே முதல் முறை


3. குறும்பட இயக்குநர் பெயர் - ஷபி   குறும்படத்தின் பெயர் - இருட்டு


எனக்கு பேய், பிசாசுல நம்பிக்கை இல்லைன்னாலும் அந்த மாதிரி ஹாரர் ஃபிலிம்ஸை ரொம்ப ரசிப்பேன்.. த்ரில்லர் ஃபிலிம், ஹாரர் ஃபிலிம், காமெடி ஃபிலிம் இந்த 3 ம் தான் என் சாய்ஸ்.. ( கில்மா ஃபிலிம்? பப்ளிக் பப்ளிக்)

ஒரு கிராமம்.. அதுல ஆவி இருக்கறதா சொல்லப்படும்  வலையல் காரி வீட்டில் தங்குனா பரிசுன்னு ஒரு பந்தயம்.. 4 ஃபிரண்ட்ஸ் போய் தங்கறாங்க.. நைட் ஃபுல்லா எதுவும் ஆகலை.. விடிஞ்சதும்  அந்த 4 பேர்ல ஒருத்தன் ஒரு இடத்துல விழுந்து கிடக்கறான்.. அவனை விசாரிச்சா அவன் நைட்ல இருந்து அங்கே தான் மயங்கி இருக்கான்னு சொல்றான்.. அப்போ நைட் பூரா அவங்க கூட இருந்தது, பேசுனது எல்லாம் அந்த பெண் பேய் தான் அதுவும் அந்த நண்பன் ரூபத்துல.. உடனே பயந்து போய் அவனை அம்போன்னு அங்கேயே விட்டுட்டு ஓடிடறாங்க..


இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  பேய் தான் வெளில போயிடுச்சு././ இப்போ இவங்க பார்த்தது அவங்க நண்பனைத்தானே..? ஏன் பயந்து ஓடறாங்க?

2. நைட் பூரா நண்பர்களுடன் ஆண் வேடத்தில் இருந்த பெண் பேய் சாதிச்சது என்ன? ஒரு கொலை இல்லை, ஒரு ரேப் இல்லை.. சும்மா கடலை ஒன்லி??


3. இந்தக்கதையின் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? பேய்கள் யாரையும் கொல்லாதுன்னா?

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்தக்காலத்துலயும் பேய், பிசாசு எல்லாம் இருக்கா?

 ஏன்? சாவு நடந்துட்டுத்தானே இருக்கு?


2. செயினைக்காணோம்டா..

 இங்கே எங்கேயும் இருக்காதுடா.. நாம முதல்ல இங்கே இருந்து கிளம்பலாம்.. அங்கே போய் தேடிக்கலாம்..



Wednesday, January 18, 2012

நாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -விமர்சனம்

http://www.bestactress.info/wp-content/uploads/2011/06/Keerthi-Chawla-hot-saree-navel.jpg 

நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் ஒப்பனிங்க்கே சரி இல்லை, நியூ இயர் அன்னைக்கு சண்டே, அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் பொங்கல் என 2 சண்டே அநியாயமா அந்த நிகழ்ச்சி கட்.. அதுக்குப்பதிலா ஒரு மொக்கை புரோக்ராம் போட்டு கடுப்பேத்துனாங்க.. போன வாரம் பார்த்த அந்த நிகழ்ச்சி.. 


1. குறும்படத்தின் பெயர் -  விடுதி - குறும்பட இயக்குநர் பெயர் -  அருண் சக்தி முருகன் ( நாஞ்சில் விஜயன்)

ஓப்பனிங்க் ஷாட் ல பர பர நியூஸ் ஓடுது அதாவது ஒரு பிரபல காலேஜ் விடுதில ஒரு மாணவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்.. அதை பற்றி சொல்றாங்க..

காலேஜை காட்றாங்க.. அங்கே 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ்..  அவங்க பண்ற கலாட்டாக்கள், காமெடியா கொஞ்சம் காட்றாங்க.. அவங்க கிட்டே ஒரு பொண்ணு  ( ஏன் ஃபிகரு, ஜிகிடின்னு சொல்லலைன்னா அந்த அளவு பாப்பா ஒர்த் இல்ல ஹி ஹி )

வாலண்ட்ரியா  செல்வா ராகவன் ஆண்ட்ரியா போல் பழகுது.. பாப்பா  திடீர்னு பார்த்தா பாப்பா அந்த 3 பேரையும் கொலை செய்யுது.. 


 இப்போ பாப்பா ஃபிளாஸ்பேக் சொல்லுது.. பாப்பாவோட தம்பி.. கொஞ்சம் பெண்மை சாயல் கொண்டவர்.. அவன் இவன் விஷால் மாதிரி.. அவரை இந்த 3 பேரும் காலேஜ் ல ரேகிங்க் பண்ணி இருக்காங்க.. அவமானம் தாங்காம அவன் தற்கொலை செஞ்சுக்கறான்.. அவன் மரணத்துக்கு காரணமான இவங்க 3 பேரையும் அக்கா பழி வாங்கறதுதான் கதை.. 


இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் எடுக்கற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கறேன், வில்லன்களை காட்றப்ப ஆடியன்ஸுக்கு அவங்க மேல வெறுப்போ, கோபமோ வரனும், அப்போதான் அவங்க சாகடிக்கப்படறப்ப  ஒரு திருப்தி வரும்.. அவங்க பண்ற காமெடி சீன்லாம் காட்டிட்டு கொலை செய்யப்படறதை காட்னா எஃபக்ட் இருக்காது.. 

3 பேரும் கொலை செய்யப்படும் காட்சி ஓவர் வல்கர்.. 

மனதில் நின்ற ஒரே வசனம் - சீனியர்னா உங்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?

http://chennai365.com/wp-content/uploads/actress/Keerthi_Chawla/Keerthi_Chawla_006.jpg


2. குறும்படத்தின் பெயர் -  ஒரு ஃபீலிங்க்  - குறும்பட இயக்குநர் பெயர் -  கார்த்திக்

ஓப்பனிங்க் செம காமெடியா இருந்துச்சு.. 2 ஃபிரண்ட்ஸ்.. ஒருத்தன் தம் அடிக்கறான், இன்னொருத்தன் புகை விடறான்,.. அந்த .. ஒருத்தன்   பபிள்கம் சாப்பிடறான், இன்னொருத்தன் குமிழி ( மொட்டுழி) விடறான்.. அவ்ளவ் க்ளோசாம் அடங்கோ...2 பேரும் ஜீரோ மார்க் தான் வாங்கறாங்க.. காலேஜ்ல..


அவ்ளவ் க்ளோசா இருக்கற 2 பேர்ல ஒருத்தன் ஒரு ஃபிகரை ரூட் போடறான்.. மேட்டரை அவ கிட்டே சொல்ல தயக்கம்.. அதனால அவன் ஃபிரண்ட் கிட்டே சொல்லி சொல்ல சொல்றான்.. அவன் போய் அந்த ஃபிகர்ட்ட இந்த மாதிரி இந்த மாதிரி இந்த மாதிரிங்க.. என் ஃபிரண்ட் உங்களை லவ் பண்றான்னு சொன்னதும் ஒழுக்கமான ஃபிகர் என்ன சொல்லனும்? எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு கட் பண்னனும், ஆனா ஃபிகர் சொல்லுது >நான் உங்களை லவ் பண்றேன், அவனுக்காக நீங்க தூது வந்தா எப்படி?ன்னு கேக்குது , அவன் ஷாக் ஆகிடறான்


ஃபிகரோட ஃபிரண்ட் ஜிகிடி கேக்குது ஏண்டி அப்படி சொன்னே? அதுக்கு  ஃபிகர் சொல்லுது, அப்போதாண்டி அவங்க 2 பேரும் அடிச்சுக்குவாங்க.. நம்ம கிட்டே வர மாட்டாங்க.. என்ன லாஜிக்கோ?

அப்புறம் பார்த்தா அந்த 2 பேருக்கும் கிடைக்காத அந்த ஃபிகர் ஒரு டப்பா மூஞ்சி பையனுக்கு கிடைக்குது.. 

வழக்கமான கதைதான், உருப்படியா செஞ்ச விஷயம் படத்துல நடிச்ச அந்த 2 உருப்படிகள் தான் ஹி ஹி 

ரசித்த வசனங்கள்

1. அவனுக்கு லவ்வா? அவனுக்கு ஒழுங்கா வடை சுடக்கூடத்தெரியாது..

2. அவனவன் லவ்வை அவனவனே போய் சொல்லுங்கப்பா... 

3. காதல்ங்கறது ஆயா சுட்ட வடை மாதிரி..  ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைன்னா எவனாவது கவ்விட்டு போயிடுவான், நட்புங்கறது ஆயா மாதிரி , எவனும் கண்டுக்க மாட்டான்..  ( எஸ் எம் எஸ் ஜோக்)


அப்புறம் குறும்படம் இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை படத்துல டயலாக்ஸ் ஓடறப்ப தேவைப்படாம பின்னணி இசை போடாதீங்க. எப்படி வசனம் புரியும்?

http://farm3.staticflickr.com/2088/2343213010_d5a36c9a38_z.jpg?zz=1


 3. குறும்படத்தின் பெயர் -  குவியம்   - குறும்பட இயக்குநர் பெயர் -  கிஷோர்

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர், அவர் ஒரு ஃபோட்டோ மட்டும் இல்ல, பல ஃபோட்டோஸ் எடுப்பவர்.. ஒரு தடவை அவர் கண்ல, கேமரால எதேச்சையா ஒரு ஜிகிடி மாட்டுது.. அதை க்ளிக் பண்றாரு.. அந்த ஜிகிடி கிட்டே பிட்டை போடறாரு.. நீங்க மாடலிங்க்கா போஸ் தரனும்.. உங்க ஃபோட்டோ பார்த்துட்டு ஒரு பெரிய ஆங்கில பத்திரிக்கை ஓக்கே சொல்லி இருக்குன்னு பிட் போடறார்.. ஜிகிடி அதை நம்பிடுது ( பொதுவா இந்த பொண்ணுங்க உண்மையான பசங்களை நம்ப மாட்டாங்க, பொய் சொல்றவனுக்குத்தான் காலம், அவன் வண்டி வண்டியா பொய் சொல்லுவான், அதை நம்பிடும்ங்க அய்யா ஹய்யோ)


ஃபோட்டோ ஷூட் நடக்குது, பல கோணங்கள்ல படம் எடுக்கறார் ( அரக்கோணம், கும்ப கோணம் இப்படி இல்ல..:)2 பேருக்கும் லவ் க்ளிக் ஆகிடுது..
அப்புரம் ஒரு கட்டத்துல ஒரு விட்டத்துல, ஒரு சதுரத்துல ஹீரோயினுக்கு மேட்டர் தெரிஞ்சுடுதுன்னு , அப்புறம் ஏன் இப்படி கலைஞர் மாதிரி வாய்ல வர்றது எல்லாம் டகால்டியா இருக்கே?னு கேட்க அவர்  அதான் ஹீரோ டக்னு வடிவேல் மாதிரி பல்டி அடிச்சிடறார், உன்னை லவ் பண்ணேன், உன்னை டெவலப் பண்றதுக்காகத்தான் அப்படி பொய் சொன்னேன்கறார்.. உடனே ஜிகிடி சிரிச்சுக்கிட்டே ஓக்கே டன் அப்டினு சொல்லிடுது சுபம்.. ரொம்ப சிம்ப்பிள் லவ் ஸ்டோரி நீட்டா இருந்துச்சு ஹீரோயின் அழகும் , ஹீரோ நடிப்பும் ஓக்கே ரகம்.. 


ரசித்த வசனங்கள்


1. மேரேஜுக்காக 1000 பொய் சொல்லலாம்னு சொல்றாங்க, அப்போ லவ்வுக்காக மட்டும் பொய் சொல்லக்கூடாதா?


2. லவ் ஈஸ் ஸ்வீட் நத்திங்க் -LOVE IS  SWEET NOTHING( அப்டின்னா லவ்வுல ஸ்வீட் தவிர வேற எதுவும் இல்லைன்னு அர்த்தமா? காரம் சாப்பிட மாட்டாங்களா?) 


3. ஒரு நிமிஷம் இருங்க, கூலிங்க் கிளாஸ் போட மறந்துட்டேன் , அது லவ் க்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி 

மவுன ராகம் படம் மாதிரி ரொம்ப நீட்டா அழகா வந்ததா நடுவர்கள் சிலாகித்தார்கள்


டிஸ்கி - கீர்த்தி ஃபோட்டோஸ் போடலை, அதுக்கு சப்ஸ்டிடியூட்டா கீர்த்தி சாவ்லா ஃபோட்டோ  ... விமர்சனத்தை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும் என்பதை சொல்லும் வகையில் சானியா மிர்சா ஃபோட்டோ


டிஸ்கி  1 -

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3-

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 4 -

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

 

டிஸ்கி  5 -

பட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்


Thursday, December 15, 2011

நாளைய இயக்குநர் -காமெடி , காதல் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbhj_dm6l6nCmX-G2LI9vKce7p0xM1hYD4f8hXJTd3D9AExTWDnczWLCVGYWKRxIQ1-4WFuo8sBy1c8vNsJknkhhyphenhyphencq97I7NiPs2JKctvGaXGWaEvwy4pKovVKIc9WeG9pHwZxAMoMEjm4/s320/keerthy+jewellery+model.jpg

கலைஞர் டி வி ல வாரா வாரம் ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு  வர்ற நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு நான் ஒரே ஒரு கரெக்‌ஷன் மட்டும் சொல்லிக்கறேன்.. ஜட்ஜா வர்ற கே பாக்கியராஜ், சுந்தர் சி 2 பேரும் கோட் சூட்லதான் ரெகுலரா வர்றாங்க, அது போர்.. இயல்பா பேண்ட் சர்ட்ல வரலாமே?அப்புறம் கீர்த்தி எப்பவும் நைட்டி அல்லது பெட்டிகோட் மாதிரி ஒரு டிரஸ் போட்டுட்டுதான் வர்றாங்க.. அது ஏன்? சேலை, சுடினு டீசண்ட்டா வரலாமே? இன்னைக்கு கீர்த்தி ஏதோ சி டி மாதிரி ஒரு டாலர் செயின் போட்டு வந்தாங்க, அய்யோ ஹய்யோ

கீர்த்தி - உங்களை பொருத்தவரை ஆக்‌ஷன் , காதல் , காமெடி எந்த மாதிரி படம் எடுக்கறது டஃப்?

கே பாக்யராஜ் - என்னை பொறுத்தவரை எல்லாத்துக்குமே மூளையை கசக்க வேண்டி இருக்கு. இன்று போய் நாளை வா மாதிரி காமெடி சப்ஜெக்ட்டுக்கும் சரி, ஒரு கைதியின் டைரி மாதிரி ஆக்‌ஷன் படங்களுக்கும் சரி சீன் ரெடி பண்ண ரொம்பவே மெனக்கெடறோம்..

1. இயக்குநர் பெயர் - பிரசாந்த் - குறும்படத்தின் பெயர் - வடுகப்பட்டி ராம்சாமி

ஒரு காலேஜ் ஹாஸ்டல் ரூம். அதுல 3 ஃபிரண்ட்ஸ் தங்கி இருக்காங்க.. அவங்க ரூம்க்கு புதுசா ஒரு ஃபிரண்ட் வர்றான்.. அவன் தான் வடுகப்பட்டி ராம்சாமி.. அண்ணன் செம ராசியான ஆளு.. அவர் முகத்துல விழிச்சுட்டு போனதால்  ஒருத்தன் சேற்றில் விழுந்துடறான்.. இன்னொருத்தன் தன் காதலியின் அண்ணனிடம் அடி வாங்கறான். 3 வது ஆளு தன் ஆள் கிட்டே லவ் பிரப்போஸ் பண்ணி அது ரிஜக்ட் ஆகுது.. 3 பேரும் சேர்ந்து அந்த ராம்சாமியை துரத்தி விட்டுடறாங்க.. 

நல்லா காமெடியாத்தான் இருக்கு.. ஆனா இது ஒரு சம்பவம் மாதிரிதான் இருக்கே ஒழிய  ஒரு கதையாவோ, குறும்படமாவோ பிரமோட் பண்ணாம இருக்கு.. ஃபினிஷிங்க் டச் இல்ல. முழு நிறைவு வர்ல. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

2.  இயக்குநர் பெயர் - ஷஃபி  - குறும்படத்தின் பெயர் -தூவானம்

ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி.. ஒரு அம்மா அப்பா.. 18 வயசு பையன்.. ஓப்பனிங்க்ல அம்மா தைரியமா சொல்லிடும்மா என்கிறான் பையன்.. ஏதோ அவனோட லவ் மேட்டரை அவனோட அப்பா கிட்டே சொல்ல சொல்றதா ஒரு பில்டப். அப்புறம் பார்த்தா அம்மாவோட ஃபிளாஸ்பேக் காதல் ...அவங்க லவ் பண்ற பையனை அடிச்சு மிரட்டி துரத்திடறாங்க. அவங்களால தைரியமா நின்னு காதலை கவுரவிக்க முடியலை.. காதலனுக்கு வேற பக்கமும், இவங்களூக்கு வேறொருவர் கூடவும் மேரேஜ் ஆகிடுது.. இப்போ தன் பையனின் க்ளாஸ்மேட்டின் அப்பா தான் தன் முன்னாள் காதலன்கரதை தெரிஞ்சுக்கிட்டு  அவனை சந்திக்க மன்னிப்பு கேட்க ஆசைப்படறா.. ஆனா முன்னாள் காதலன் இறந்துட்டதா தகவல் தெரிய வருது..

இந்த கதைல மேக்கிங்க் ஸ்டைல். வசனம், எல்லாத்தையும் விட பிரமாதமான விஷயம் என்னான்னா அம்மாவா நடிச்ச மேடம் , அவங்க ஃபிளாஸ்பேக்ல வர்ற பொண்ணோட முகச்சாயலுடன் 100% ஒஹ்த்டுப்போற மாதிரி ஆர்ட்டிஸ்ட்டை தேடி கண்டு பிடிச்சதுதான்.. ( ஒரு வேளை அம்மா, பொண்ணாகவும் இருக்கலாம்.. ) ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷனுக்காகவே இந்த பட டைரக்டரை பாராட்டலாம் வெல்டன்..

3. இயக்குநர் பெயர் - பால மனோகர்  - குறும்படத்தின் பெயர் -காலேஜ் திருட்டு


ஒரு காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண் மாடியிலிருந்து குதிச்சு
தற்கொலை பண்ணிக்குது. ஆனா,யாருக்கும் காரணம் தெரியலை. அது போலீசு கேசாகி எல்லா பசங்க கிட்டயும் விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வரார்.
எல்லா பசங்ககிட்டயும் விசாரிக்குறார். எல்லார்மே அந்த பொண்ணு ரொம்ப நல்லபொண்ணுன்னு சொல்லி குட் சர்டிஃபிகேட் குடுக்குறாங்க. மண்டைய பிச்சுக்குற போலீஸ்காரர், அந்த பொண்ணோட க்ளோஸ் ஃப்ரெண்டை கூட்டிக்கிட்டு போய் விசாரிக்குறார்.

அட, ஏம்பா எல்லாரும் ஆர்வமாகுறீங்க, அவர் அந்த மாதிரி போலீஸ்கார்ர் இல்லை. இவர் காக்க காக்க சூர்யா, வேட்டையாடு விளையாடு கமல், தங்க பதக்கம் சிவாஜி, மூன்றுமுகம் ரஜினி போல ரொம்ப நல்ல போலீஸ்காரர். பாப்பாவும் எல்லாரையும் போல நல்ல பொண்ணு, சொக்க தங்கம்னு சர்டிஃபிகேட் குடுக்குது. அவ ரூமுல தனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்குறதாகவும், அதன்படி பார்த்தால், நீதான் அவ சாவுக்கு காரணம்னு பிட்டை போடுறார்(இது அந்த பிட்டோ,  பரிட்சை பிட்டோ இல்லை).

உடனே பாப்பா அழுதுக்கிட்டே தான் காரணம் இல்லைன்னும் ----ன்ற பையந்தான் காரணம்னு கொசுவர்த்தி ஏத்துது. அட அதான்பா பிளாஸ்பேக் ஓட்டுது. ஃப்ரெண்டாகி கடலை வறுக்க ஆரம்பிச்சு இருக்கு. வறுத்த கடலை ரொம்ப தீய்ஞ்சு போய் அந்த பையனை மத்த பொண்ணுங்க கூட பேசாத, கடலை போடாதே, சைட்டிக்காதேன்னு சொல்லியிருக்கு. பெத்தவங்க சொல்லியே கேக்காத நாம ஃபிகர் சொல்லியா கேட்க போறோம். அதுல கோவமாகி அந்த பையன் பாப்பாக்கிட்ட என்னை ஏன் இப்படிலாம் இம்சை
பண்ணுறே. உன்கூட மட்டும்தான் ஃப்ரெண்டா இருக்கனும்னு ஏன் என்னை
நச்சரிக்குறே, நீ செத்தாதான் நான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லி கோவமா
போய்டுறான். அதனால மனம் வெறுத்து போய் அந்த பொண்ணு மாடியிலிருந்து தற்கொலை பண்ணிக்கிட்டான்னு அவ ஃப்ரெண்ட் சொல்ல கேஸ் ஃபைலை மூடிடுறாங்க.

 லாஜிக் மிஸ்ஸிங்க்.. இதுக்கெல்லாமா தற்கொலை செஞ்சுக்குவாங்க? ஆனா ஒரு இன்வெஸ்டிகேஷன் படத்தை டைரக்ட் பண்ற சாமார்த்தியம் அந்த இயக்குர்ட்ட இருக்கு.. நல்ல ப்ளாட் தான் அமையலை.. 


 4.  - குறும்படத்தின் பெயர் -அகலாது - இயக்குநர் பெயர்- சீனிவாசன்


ஓப்பனிங் சீனில் இன்னிக்கு நமக்கு கல்யாண நாள். கல்யாண நாளைக்கு இங்க வரனும்னு தோணுச்சுன்னு வயசான பெருசு ரெண்டுங்க பேசிக்கிட்டு இருக்காங்க. பேசிக்கிட்டு இருக்கும்போதே தங்கள் இளமைக்கால நாட்களுக்கு போகுது அவங்க நினைவு....,

சுதந்தர போராட்ட காலத்தில் அவங்களுக்கு டீனேஜ். அப்போ அந்த ஹீரோ காந்தியோடு சேர்ந்து ரொம்ப தீவிரமா போராடுறார். அவர் வீரத்தில் மயங்கி ஹீரோயின் காதலிக்குறாங்க.  ஆனால், ஹீரோவுக்கும் மனசுல காதல் இருந்தாலும், சுதந்திரத்திற்கு அப்புறம்தான் கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறதை ஹீரோயினோட அப்பா பார்த்துடுறார். வீட்டுக்கு வந்து  இனி நீ சுதந்தர போராட்டம் அது இதுன்னு சொல்லி வெளிய போக்க்கூடாது. உடனே மாப்பிள்ளை பார்த்து உனக்கு கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

ஹீரோயின் ஹீரோக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி, எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லைன்னும், ஆனால், அதுக்காக, நீங்க, உங்க கொள்கையை விட்டு குடுக்க வேணாம், நான் கஸ்தூரிபாய் தலைமையில நடக்குற போராட்டத்துல கலந்துக்க நம்ம ஊரு பொண்ணுங்க போறாங்க. அவங்களோடு நான் போய்க்குறேன். அப்படி போகனும்னா எனக்கு பணம் வேணும். அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணி குடுங்கன்னு கேட்குறாங்க.


 ஹீரோவும் எங்கெங்கெல்லாமோ கேட்டு பார்க்குறார். ஆனால், பணம்தான் கிடைக்கலை. கடைசியா ஒருத்தர் சொல்றார், தன்கிட்டயும் பணமில்லை ஆனால், இந்த ஊர் பண்ணையார் பொண்ணு கல்யாணம் ஆகி கைக்குழந்தையோடு விதவையாயிருக்கு. அதை கட்டிக்கிட்டால், உனக்கு பணம் கிடைக்கும்னு வழிக்காட்டுறார். 

சரின்னு சொல்லி பணம் வாங்கி ஹீரோயின்கிட்ட குடுத்துட்டு, விதவை பொண்ணை கட்டிக்கிட்டு வண்டியில வரும்போது எதிர்க்க வண்டியில ஹீரோயினும் வேற ஒருத்தரை கல்யாணம் கட்டிக்கிட்டு வராங்க.
என்ன ஏதுன்னு விசாரிச்சால், போராட்டத்துக்கு கிளம்புகையில் அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்டதால்  கல்யாணம் கட்டிக்கிட வேண்டியதாகிடுச்சுன்னு சொல்லி பிளாஸ்பேக்கை முடிச்சு நிகழ்காலத்துக்கு வராங்க.


சரி அவர் காத்துக்கிட்டு இருப்பார்ன்னு பாட்டியும், அவளுக்கு மருந்து வாங்கனும்னு தாத்தாவும் எதிரெதிர் திசையில் பிரியுறதா காட்டுறாங்க.
கதையும் நல்ல கதை, டெக்னிக்கல் விஷயம்,  நடிகர்கள் தேர்வு, இசைன்னு பக்காவா இருந்ததால், இந்த படத்துக்கு பெஸ்ட் ஃபிலிம் அவார்டும், பெஸ்ட் டெக்னிஷியன்சுக்கான அவார்டும் கிடைச்சுது. 

டிஸ்கி - கீர்த்தி ஜ்வல்லரி விளம்பரத்துக்கு  எடுத்த மாடல் ஃபோட்டோவை கீர்த்திக்கு சம்பர்ப்பிக்கிறேன்

Tuesday, November 29, 2011

நாளைய இயக்குநர் - லைட் காமெடி , சைட் ஃபிகர்ஸ் - விமர்சனம்

Art Wallpapers
தனது 28 வருட வாழ்க்கையில் முதல் முறையாக தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி, படிய தலை சீவி  ஓரளவு டீசண்ட்டான டிரஸ்ஸுடன் ( மெரூன் கலர் நைட்டி கம் மிடி பட் லோ யூ நெக் ஹி ஹி ) வந்த தொகுப்பாளினி கீர்த்தி  சிரிச்ச முகத்தோட இருந்தார்.. இதை ஏன் பர்ட்டிகுலரா, பைனாகுலரா, டிராகுலரா சொல்றேன்னா டி வி ல வர்ற ஃபிகருங்க எல்லாம் பிசி (busy) போல யாருமே தலையே சீவறதில்லை.. அது ஒரு ஃபேஷன் மாதிரி ஆகிப்போச்சு.. நான் ஒரு ஃபிகர்ட்ட காரணம் கேட்டேன் (ஃபோன்ல தான் நோ ட்ரீம்)அது ஆண்களுக்கு இணையா நாங்களும் வளர்றோம் இல்லையா? அதான் அவங்க மாதிரியே பரட்டையா.. ஹி ஹி ன்னாங்க அவ்வ்வ்வ்


1. குறும்படத்தின் பெயர் - கணக்குப்பண்ணுவது எப்படி? -இயக்குநர் -ஸ்ரீகணேஷ்

 காலேஜ் கலாட்டா கதை தான், ரொம்ப லைட்டா சொல்லி இருக்கார்.. அதாவது ஹீரோவுக்கு கணக்கு சப்ஜெட்னா ஆவாது.. கணக்கு , பிணக்கு , ஆமணுக்கு  , புண்னாக்கு  டைப்... லெக்சரர் செம காண்ட் ஆகறார்.. ஒரு சம்  (SUM)மை குடுத்து நாளை இதை போர்டுல எல்லார் முன்னாலயும் சால்வ் பண்ணிக்காட்டுனா நீ தப்பிச்சே, இல்லைனா அவ்ளவ் தான்னு மிரட்றார்.. ஏன்னா அவர் க்ளாஸ்ல சீரியஸா பாடம் நடத்தறப்ப ஹீரோ தூங்கிட்டு இருந்திருக்கான்.. 


இனி என்ன பண்றதுன்னு பையன் யோசிச்சுட்டே போறப்ப ஒரு ஃபிகர் அவன் ரூட்ல என்ட்ரி குடுக்குது.. தாமினி டீச்சரா மாறி ( ஐஸ்வர்யா ராய் நடிச்ச கில்மா படம் ஹி ஹி ) இலவச டியூஷன் சொல்லி தர்றாப்ல.. ஆம்பள வாத்தியார் சொல்லிதர்றப்ப தூங்கிட்டு இருந்த பையன் ஃபிகர் சொல்லித்தர்றப்ப நல்லா கவனமா கவனிக்கறான் பாடத்தை..

க்ளாஸ் ரூம்ல கரெக்டா அந்த கணக்கை போட்டுடறான், என்னா சோகமான ட்விஸ்ட்னா வாத்தியார் இப்போ தூங்கிடறார்.. அவ்வ்வ்வ்வ்

படத்தில் வந்த ரசனையான  வசனங்கள்

1. வெளில என்ன வெய்யில் அடிச்சாலும், ராமானுஜம் சார் க்ளாஸ்னா காத்து வாங்கும். ...

2. கணக்கு பாடமே எனக்கு கொடுமை தான், இந்த வாத்தியார் அதை விடக்கொடுமை..

3. இவன் ஏன் இங்கே வந்தான்?

அவனுக்கு தூக்கத்துல நடக்கற வியாதி,அதான் தெரியாம காலேஜ் வந்துட்டான்..

4.  பொண்ணுங்க அட்வைஸ் பண்ணுவாங்களே தவிர ஹெல்ப் பண்ண மாட்டாங்க..

5. அட்வைஸ் பண்றது ஈஸி, ஆனா அதை அப்டேட் பண்றது கஷ்டம்..


பாக்யராஜ் கமெண்ட் - வாத்தியார் சொல்லித்தர்றதை விட ஒரு பொண்ணூ சொல்லிக்குடுத்தா நல்லா மண்டைல ஏறும்..

சுந்தர் சி கமெண்ட் -  இளமைக்குறும்பு + திமிர் , நல்ல வந்தது படம்.. ஓவர் ஆல் எண்ட்டர்டெயிண்மெண்ட் காமெடி





2. குறும்படத்தின் பெயர் - தோற்ற மயக்கம் ஏனோ?  இயக்குநர் - முருகப்பிரகாஷ்

ஒரு வித்தியாசமான ட்விஸ்ட் உள்ள லவ் ஸ்டோரி.. பார்க்ல ஒரு லவ் ஜோடி உக்காந்திருக்கு.. 2 பேரும் ஒரே டைம்ல லவ்வை வெளிப்படுத்திக்கறாங்க அப்போத்தான்.. அடடே.. என்ன ஒரு ஒற்றுமைன்னு அவங்க சிலாகிக்கும்போது... ஒரு ஃபிளாஸ் பேக்...

அந்த ஃபிகர் தனியா வாக் வித் எ சாங்க்.. அந்த பையன் வாக் வித் எ சாங்க்.. 2 பேரும் பார்க் வர்றப்பதான் தெரியுது... அவன் லவ் பண்ற ஃபிகர் வேற ஒரு பையன் கூட, அந்த ஃபிகர் லவ் பண்ற பையன் வேற ஒரு பொண்ணோட .. நல்ல ட்விஸ்ட்.. இப்போ நிராகரிக்கப்பட்ட அதாவது காதலை வெளிப்படுத்த தயங்குன 2 பேரும் அவங்களுக்குள்ள காதலிச்சுக்கறாங்க , 2 பேருக்கும் புக்ஸ் ரீடிங்க் ஒரு ஒற்றுமை..

படிக்கும்போது கொஞ்சம் குழப்பமா இருந்தாலும் காட்சிப்படுத்துனது அழகு..  பார்க்ல லவ் ஜோடிங்க உக்காந்திருக்கும்போது அவங்க என்ன டிரஸ் போட்டிருந்தாங்களோ அதே கலர் டிரஸ்ல இந்த ஜோடியையும் பொட வெச்சது நல்ல உத்தி..

கவுதம் வாசுதேவ் மேனன் பட பாடல் மாதிரி நல்லா விசுவல் டேஸ்ட்டோட பாட்டு இருந்துச்சு அது ஒரு எக்ஸ்ட்ரா பிளஸ்..பெஸ்ட் மியூசிக் அவார்ட் வாங்கிச்சு




3. குறும்படத்தின் பெயர் - ஒரு தலை ராகம்  இயக்குநர் -ராகேஷ்

ஏதோ வித்தியசமான கருன்னு இயக்குநர் நினைச்சு பணி இருக்கார் சரியா எடுபடல..  ஒரு காலேஜ்ல கடைசி நாள்  ..ஸ்வாதி மாதிரி ஒரு ஃபிகர் நடக்குது, ஓடி வருது .. பேக் டிராப்ல ஒரு ஆணின் குரலில் காதல் பாடல் ஒலிக்குது.. வசனமே இல்லை.. 7 நிமிஷம் பூரா அந்த ஃபிகர் புகழ் பாடல் லைன்ஸ் மட்டும் தான்.. அப்புறம் பார்த்தா அந்த காலேஜ் சுவர் தான் அந்த பாட்டை பாடுனது மாதிரி.. காதல் என்பது உயிருள்ள மனிதருக்கு மட்டும் இல்ல..  உயிர் அற்ற கான்கிரிட் சுவருக்கும் உண்டுன்னு சொல்லி முடிக்கறாங்க.. எடுபடலை.. சாரி மிஸ்டர் டைரக்டர்..

இது காலேஜ் கதையா? காலேஜே கதையா?ன்னு  பாக்யராஜ் கிண்டல் அடிச்சார்.. சாங்க் நல்லாருந்தது..




4. குறும்படத்தின் பெயர் -அட்ரா அவளை ஒதைடா அவளை , இயக்குநர் -கே பாக்யராஜ் ( இவர் வேற ஆள்)


 டைட்டில்ல டைமிங்கா ஹிட் பாட்டு லைன் இருந்தப்பவே நினச்சேன் படம் செமயா இருக்கும்னு.. எதிர்பார்ப்பு சரிதான்.. ஒருத்தன் ஒரு ஃபிகரை காதலிக்கறான்..துரத்தறான் ஐ லவ் யூ சொல்றான்.. அது பளார்னு அறையுது.. இவன் சலிக்காம லவ்வறான்.. அப்புறம் போனாத்தொலையுதுன்னு  அதுவும்  லவ் பண்ணுதுதான்.. அப்புறம் ஒரு சின்ன ஊடல்.. காதலியோட பிறந்த நாளை அவன் மறந்துட்டு வாழ்த்து சொல்லாம விட்டுடறான்.. உடனே ஃபிகர் கழட்டி விட்டுடுது.. அதாவது அவன் லவ்வை கழட்டி விட்டுடுது..அவ அவனை திட்டறா.. லவ் டமால்.. இவன் செம காண்ட் ஆகறான்.. லவ் எல்லாம் சரி வராது, யாரும் லவ் பண்ணாதிங்கங்கறான்./. அப்புறம் அந்த ஃபிகரே வந்து சாரி சொல்லுது.. உடனே இவன் பல்டி அடிச்சுடறான்.. ஃபிகர் கூட சேர்ந்துடறான்..

ஜாலியான கதை .. மேக்கிங்க் ஸ்டைல் செம..

ரசித்த வசனங்கள்

1.  பசங்களுக்கு 13 வயசானாலே  பொண்ணுங்களை ரொம்ப பிடிச்சுடுது..

2.  அவ்வ்வ்வ்வ், செம ஃபிகர்டா... அப்டினு சொல்ல முடியாட்டாலும் சுமாரான ஃபிகர் தான்.

3. அஞ்சாவது தடவையா அறை வாங்குன பிறகுதான் அவ பேரு அஞ்சலைன்னு தெரிய வருது.. அவ்வ்வ்

4.  ஃபேஸ்புக்ல சர்ச் பண்ணுனா அஞ்சலைங்கர பேர்ல ஏகப்பட்ட ஆண்ட்டிங்க ஆன்சர் பண்றாங்க, இவளை காணோம்..

5. சூப்பர் ஃபிகரை கரெக்ட் பண்ண பிறந்தவன்னு உன்னை பார்த்ததுமே உங்கம்மா முடிவு பண்ணி இருப்பாங்களே?

6. லவ்வர் பர்த்டேவை எவனாவது மிஸ் பண்ணுவானா?

இதுல ஹீரோ ஹீரோயின் நடிப்பு ரெண்டும் செம..

இதுதான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு, அப்புறம் பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்டா ஹீரோவுக்கு ஒரு அவார்டு..

Wednesday, November 16, 2011

நாளைய இயக்குநர் - காலேஜ் ,காதல், பேய் கதைகள் - விமர்சனம்

Best Ever Quotes
viewer


என்னைக்கும் பொட்டு வைக்கற பழக்கம் இல்லாத கீர்த்தி  இன்னைக்கு ஒயிட் &ஒயிட்  கலர் நைட்டியா? கவுனா?னு கணிக்க முடியாத ஒரு டிரஸ் போட்டுட்டு வந்தாங்க.. மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வர்றப்ப மட்டும்  டீசண்ட்டா வர்றாங்க.. இந்த நிகழ்ச்சில மட்டும் பேட்டா மிஸ்ஸிங்க் போல..


1.இயக்குநர் பெயர் -அருண் பிரசாத் - குறும்படத்தின் பெயர் - ஃபிளாஷ்பேக்


ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு மரத்தடில ஒரு பெண் நிருபர் ஒரு வெற்றி பெற்ற சினிமா இயக்குநருடன் காணும் நேர் காணல் மாதிரி காட்சி.. அதுல உங்க காலேஜ் லைஃப்ல நடந்த மறக்க முடியாத அனுபவம் சொல்லுங்க சார்.. அப்டினு கேட்க கட் பண்ணி காலேஜ் கேம்பஸ்க்கு கதை நகருது..

ஒரு ஃபிரண்ட்ஸ் குரூப்...ஒரு குறும்படம் எடுக்கறதுக்கு ஸ்டோரி டிஸ்கஷன் பண்றாங்க.. யார் ஹீரோ ,யார் ஹீரோயின் அப்டினு முடிவாகுது,.. ஷூட் பண்றப்ப ஹீரோவா நடிக்கறவர் ஹீரோயினா நடிக்கறவர்ட்ட ஐ லவ் யூ சொல்லற சீன்ல அவர் சரியா  பர்ஃபார்ம் பண்ணாததால டைரக்டர் நடிச்சுக்காட்றேன்கற பேர்ல அந்த ஃபிகர்க்கு ரூட் போடறார்..

அந்த ஷாட் கட் பண்ணுனா அதுவும் , இப்போ பேட்டி எடுக்கற ஷாட்டும் எல்லாமே இன்னொரு ஷூட்டிங்க்னு தெரியுது.. க்ளைமாக்ஸ்ல “ என்ன தாண்டா சொல்ல வர்றீங்க?” அப்டினு அவங்களே அவங்களை எள்ளல் பண்ணிக்கற மாதிரி முடியுது..

ஏதோ காமெடியா ட்ரை பண்ணி இருக்காங்கனு தெரியுது.. ஆனா கம்ப்ளீட் ஆகலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

கே பாக்யராஜ் அவரோட மலரும் நினைவுகள்ல ஒரு சம்பவம் எடுத்து விட்டாரு.. சுவர் இல்லாத சித்திரங்கள்ல இதே மாதிரி ஒரு சீன் வரும்.. அதாவது ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஹீரோவுக்கு நடிப்பு சொல்லித்தர்றேன் பேர்வழின்னு டைரக்டர் ஹீரோயினுக்கு ரூட் விடுவாரு.. அப்போ கவுண்டமணி பஞ்ச் குடுப்பாராம்.. ஹீரோயினை அடிக்கடி கட்டிப்பிடிக்கறதுக்காகவே ஷாட் ஓக்கே இல்லைனு ஹீரோவை குறை சொல்லி டெமோ காட்ற சாக்குல அண்ணன் உள்ளே புகுந்து விளையாடறாரு,..னு..

சுந்தர் சி கமெண்ட் செஞ்சப்போ ஃபேமஸ் டயலாக்ஸை குறும்படத்துல அடிக்கடி வைக்காதீங்க.. போர் அடிச்சிடும்.. உதாரணமா இந்த “ கண்ணா, லட்டு திங்க ஆசையா?” டயலாக்கை அடிக்கடி டோண்ட் யூஸ்...அப்டின்னாரு. அதே மாதிரி ஃபேமஸான பழைய ஹிட் சாங்கை லவ் சீனுக்கு யூஸ் பண்றப்ப ஒரே மியூசிக்கை டோண்ட் ரிப்பீட்னாரு.. எல்லாரும் நோட் பண்ணிக்குங்கப்பா.. .

viewer6

2. இயக்குநர் பெயர் - அஸ்வின் -- குறும்படத்தின் பெயர் - உனக்காகவே வாழ்கிறேன்

ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் தான் பாஸ் ஆவமா? ஃபெயில் ஆவமா?ன்னு தெரிஞ்சுக்க ஆவி அமுதா மாதிரி ஒரு ஆவிகளிடம் பேசுற மீடியா கிட்டே வர்றான்.. அவனுக்கு பதில் சொல்றதும் ஒரு ஆவிதான்..அப்போ ஒரு ஃபிகர் பேய் கிராஸ் பண்ணுது அந்த இடத்தை.. உடனே பதில் சொல்ற வேலையை பாதிலயே விட்டுட்டு அந்த ஃபிகர் பேய் பின்னால இந்த ஆண் பேய் போகுது.. ஆவிகளின் லீடருக்கு செம கடுப்பு.. உன் வேலையை ஒழுங்கா செய்யாம பேய் பின்னால சுத்தறியேன்னு.. திட்றார்..

உடனே மனசொடிஞ்சு போன அந்த ஆண் பேய் தன் நண்பன் பேய் கிட்டே புலம்பறான்.. அப்படியே அந்த ஃபிகர் பேய் பற்றி விசாரிக்கறான்.. அது ஒரு கொலை செய்யப்பட்ட ஆவிங்கறான்.. அடடான்னு இரக்கப்பட்ட ஆண் பேய் அந்த ஃபிகர் பேய் பின்னாலயே சுத்தறான்.. அந்த ஃபிகர் பேய் ஒரு ஸ்விம்மிங் பூல்ல  ஒரு லவ் ஜோடியை முறைச்சு பார்க்குது..

யாரும் நிமிர்ந்து உக்காராதீங்க.. இந்த சீன்ல நோ சீன்.. ( நான் டைரக்டரா இருந்தா அந்த லவ் ஜோடி ஸ்விம்மிங்க் டிரஸ்ல இருக்கற மாதிரி ஒரு கிளாமர் சீன் வெச்சிருப்பேன். ( டேய் நாயே, அதான் ஆட்டுக்கு வாலை அளந்து வெச்சிருக்காங்க.. )

அந்த லவ் ஜோடில ஆண் தான் இப்போ இருக்கற பெண் பேயோட முன்னாள் லவ்வர்.. அவன் அமைதிப்படை சத்யராஜ் மாதிரி அவளுக்கு அல்வா குடுத்து கொன்னுடறான்.. அதே நிலைமை தானே இப்போ அவன் லவ்வற பொண்ணுக்கும் வரப்போகுதுன்னு இந்த பெண் பேய்க்கு மனசு சரி இல்லை..

உடனே அந்த ஆண் பேய் ஆவிகளின் தலைவன் கிட்டே போய் இந்த மாதிரி இந்த மாதிரி . ஒரு பொண்ணோட லைஃப் கெடப்போகுது.. அதை காப்பாத்தனும்னு ஐடியா கேட்கறான்.. உடனே ஆவிகளின் தலைவர்க்கு கோபம் வந்துடுது.. இதெல்லாம் நம்ம சக்திக்கு மீறுன விஷயம்,.. பிரதமர் மன் மோகன் சிங்க் மாதிரி வேடிக்கை மட்டும் தான் பார்க்கனும், சுப்ரமண்யம் சாமி மாதிரி ஆடாதேன்னு அட்வைஸ்,, 



ஆனா அந்த ஆண் பேய்  கேட்கலை..அது போய் அந்த சீட்டிங்க் லவ்வர் ஆணின் உடம்புல புகுந்து கில்மாவா அந்த ஃபிகர்ட்ட பேசறான் - வா ரூமுக்கு போலாம்னு.. உடனே அந்த ஃபிகருக்கு கோபம் வந்துடுது,.. கோவிச்சுக்கிட்டு போயிடுது..  இந்தக்காலத்துல இப்படி ஒரு ஃபிகர் இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு போகுமா?ன்னு லாஜிக் மிஸ்டேக் சொன்னா அப்புறம்  பெண் சங்கங்கள், மாதர் சங்கங்கள் ( 2ம் 1 தானே?) என்னை கும்மு கும்முனு கும்மி விடும் அபாயம் இருப்பதால் நோ கமெண்ட்ஸ்..

இதை பார்த்த அந்த பெண் பேய்க்கு சந்தோஷம் .. எனக்காகத்தானே இப்படி செஞ்சே.. தாங்கஸ்னு சொல்லி அவனை லவ்வுது.. இந்த மேட்டர் ஆவிகளின் தலைவனுக்கு தெரிஞ்சு செம காண்டாகறார்.. நம்ம ஆஃபீஸ் மேனேஜர் எதுக்கெடுத்தாலும் காச் மூச்னு கத்துவாரே அப்படி கத்தி இப்படி செஞ்சதுக்கு தண்டனையா நீ பூமில போய் இன்னொரு பிறப்பெடுக்கனும்கறார்..

பொதுவா ஒரு காலேஜ் கிளாஸ்ல நம்ம லவ்வர் வெளில போனா அல்லது லெக்சரர் வெளீல அனுப்பிட்டா நாம என்ன செய்வோம்? ஏதாவது சாக்கு வெச்சு கலாட்டா பணி அதே மாதிரி நாமும் வெளீல வந்துடுவோம் தானே.. அதே போல் அந்த பெண் பேய் என்ன பண்ணுது.. தன்னோட முன்னாள் லவ்வர் உடம்புல புகுந்து அவன் தற்கொலை பண்ணிக்கற மாதிரி பண்ணுது.

ஒரே கல்லுல 2 மாங்காய்..பழிக்கு ப்பழி வாங்குன மாதிரியும் ஆச்சு.. இதான் சாக்குனு பூமில பிறப்பெடுன்னு ஆவிகள் தலைவன் தண்டனை குடுத்ததும் அந்த பெண் பேய் பேபியா மாறி அந்த ஆண் பேய் பக்கத்துல (இப்போ அந்த ஆண் பேயும் ஒரு குழந்தையா) இருந்து சிரிக்குது.. குஷி படத்துல வர்ற ஓப்பனிங்க் சீன் மாதிரி இந்தப்பட க்ளை மாக்ஸ்,.

நல்ல வித்தியாசமான ஃபேண்டஸி கதைதான்.. ஃபர்ஸ்ட் பிரைஸ் இதுக்குத்தான்.

ரசித்த வசனங்கள்

1. நான் செத்தாக்கூட உருப்படமாட்டேனு எங்கம்மா அப்பவே சொன்னாங்க..

2. தூக்கில் தொங்கும் ஆள் கடைசி கட்ட சாங்க் - நான் போகிறேன் மேலே மேலே ..

3. நான் உயிரோட இருந்தாக்கூட இவ்ளவ் சந்தொஷம் கிடைச்சிருக்காது..

4. ஹாய்.. செல்லம் , ரூமுக்குப்போலாமா?

ஸ்டுப்பிட்....


அப்போ இங்கேயேவா?

டாமிட்

போடி. நீ போனா இன்னொருத்தி..



viewer8
3 -இயக்குநர் பெயர் - ராமானுஜம் - குறும்படத்தின் பெயர் - கால் ஏஜ் ( காலேஜ்)

காலேஜ்னாலே ராகிங்க் பண்றது சகஜம் தானே.. ஒரு காலேஜ்ல 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ் ஒரு ஜூனியர் பையனை ராகிங்க் பண்றாங்க.. அவன் பார்க்க போங்கானாட்டம்  இருக்கான்.. இந்த 3 பசங்களும் என்ன தான் பார்க்க ரவுடிக மாதிரி இருந்தாலும் ஒரு ஃபிகர் கிட்டே எப்படி புரோப்பஸ் பண்றதுன்னு தெரியாம இருக்காங்க.. ( அது தெரிஞ்சா நாமளும் யாரையாவது லவ்வி இருப்போமே?)

3 பேரும் ஒரே ஃபிகரை ரூட் விடறாங்க, ஆனா யாருக்கும் அது செட் ஆகலை.. அது கூடப்பரவால்ல. அவங்களை மனுஷனாக்கூட மதிக்கலை.. ( இதெல்லாம் நமக்கு சாதாரணம்ப்பா.. )

அப்புறம் பார்த்தா அந்த 3 பேரும் ராக் பண்ணுனாங்களே ஒரு தகர டப்பா தலையன் ( நன்றி - கவுண்டமணி) அவன் தான் லவ்வறான், பாப்பாவும் அவனை லவ்வுது.. இதைத்தான் சஸ்பென்ஸ்னு நினைச்சுட்டார் போல.. ஹா ஹா நாங்க தான் பல கதைல இதை பார்த்துட்டமே..

ஹீரோயினா நடிச்ச ஃபிகர் நல்ல கலர், முக வெட்டு ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை குறை சொல்லி இருக்கோம்?)

ரசித்த வசனங்கள்

1. என்ன பார்க்கறே? இவ்ளவ் அழகான பையன் லவ் பண்றானே?ன்னா?
ம்ஹூம்,நீயெல்லாம் லவ் பண்றியே.. அதான் பார்த்தேன்..

2. விட்றா விட்றா.. பொண்ணுங்க எல்லாம் மரத்துல இருந்து உதிர்ற இலை மாதிரி,, நாமெல்லாம் மரத்தோட ஆணி வேர் மாதிரி.. இந்தப்பொண்ணு போனா வேற பொண்ணு..  ( அதானே..  ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதையை தமிழன் என்னைக்கும் மறக்க மாட்டானே?)

viewer1

4. இயக்குநர் பெயர் - குகன்  - குறும்படத்தின் பெயர் - காற்றில் கலந்து வா

ஒரு ஊர்ல ஒரு ஆஃபீஸ்.. அந்த ஆஃபீஸ்ல ஒரு ஃபிகரு.. ஏன் ஒரே ஒரு ஃபிகர்தான் அங்கே இருக்குன்னு என்னை கேட்காதீங்க? ஏன்னா நானும் யார்ட்டயும் அந்த கேள்வியை கேட்க முடியாது..அந்த 70 மார்க் ஃபிகர்க்கு அநாமதேய ஃபோன் கால்ஸ் வருது.. சாதாரண டொக்கு ஃபிகருக்கே நம்மாளுங்க ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்ணுவானுங்க.. நல்ல ஃபிகர் கிடைச்சா விடுவானுங்களா? அந்த ஃபிகருக்கு செம கோபம்.. யார்றா நீ? எதுக்கு சும்மா என்னை டார்ச்சர் பண்றே?ன்னு கேக்குது..

ஆனா அவன் டீட்டெயில்ஸ் எதுவும் சொல்லலை.. ( சொன்னா ஆள் வெச்சு அடிப்பாங்கன்னு தெரியுமே.. ) அவ காபி குடிக்கறதைக்கூட கரெக்ட்டா சொல்றான்.. உடனே ஃபிகர் கேக்குது.. நீ இந்த ஆஃபீஸ்லயா ஒர்க் பண்றே? உன்னை பார்க்கனுமே?அப்டிங்குது.. இல்ல.. என்னை உன்னால பார்க்க முடியாது அப்டினு சொல்றப்பதான் அந்த டார்ச்சர் பண்ற பார்ட்டி பேய்னு நமக்குத்தெரியுது.. அந்த ஃபிகரு டென்ஷன் ஆகி உன்னை இப்போ பார்க்க என்ன வழி?ன்னு கேட்கும்போது நீயும் என் உலகத்துக்கு வான்னு மேலே இருந்து தொப்னு அந்த ஃபிகர் மேல என்னமோ விழுது.. அவ்ளவ் தான் கதை..

இந்த கதைல ஹீரோயின் புல்லட் பைக் ஓட்டுது.. அவ்வ்வ்வ்வ்வ்
நல்ல டெரர் ஃபிலிமா வந்திருக்க வேண்டியது ஜஸ்ட் மிஸ் ஆகிடுத்து..

டிஸ்கி - நீ தான் டியூப்லைட் ஆச்சே, 2வது கதை உனக்கு புரிஞ்சிருக்காதே, காம்ப்ளீகேட்டடா இருக்கே. எப்படி கரெக்டா விமர்சனம் பண்ண முடிஞ்சுதுன்னு யாரும் கமெண்ட் போடாதீங்க.. ஏன்னா அந்தப்படத்தை 2 தடவை யூ டியூப்ல பார்த்து அப்பவும் சரியாப்புரியாம ஒரு கேர்ள் ஃபிரண்டுக்கு ஃபோன் போட்டு கேட்டு ஏதோ கொஞ்சம் புரிஞ்ச பிறகுதான் டைப்பிங்க்..