Showing posts with label கற்பூர தீபம் 1985 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா). Show all posts
Showing posts with label கற்பூர தீபம் 1985 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா). Show all posts

Wednesday, July 06, 2022

கற்பூர தீபம் 1985 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)


தமிழ்  சினிமா  உலகில்  கோலோச்சிய  நகைச்சுவை  நடிகர்கள்  பட்டியல்  எடுத்தா  அதுல  மினிமம்  100  பேர்  தேறுவாங்க, ஆனா  நகைச்சுவை  நடிகைகள்  பட்டியல்  எடுத்தா  மொத்தமே  ரெண்டு  பேர்தான், 1  மனோரமா , 2  கோவை  சரளா . இவ்ங்க  ரெண்டு  பேரும்  சேர்ந்து  நடிச்சிருக்காங்களா?னு  செக்  பண்ணினப்போ  இந்தப்படம்  சிக்குச்சு , அம்மா  மகள்  வயசு  இருவருக்கும் ஆனா  அக்கா  தங்கையா  கவுண்டமணிக்கு  ஜோடியா  நடிச்சிருக்காங்க. அதைப்பத்திப்பார்ப்போம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ பெரிய  தொழில்  அதிபர் . கம்பெனி  விஷயமா  ஹைதராபாத்  போறப்ப  அங்கே  ஒரு  நாட்டிய  நிகழ்ச்சில  ஹீரோயினைப்பார்க்கிறார்..ரெண்டு  பேரும்  பழகறாங்க ஒரு  டைம்  ஹீரோயின்  வெள்ளத்துல  சிக்கி  காணாம  போய்டறாங்க . ஹீரோ  தேடிப்பார்த்தும்  கிடைக்காததால்  ஊருக்கு  ரிட்டர்ன்  ஆகிடறார்/ ஒரு  2  வருசம்  சோகத்துல  இருக்கார். வீட்டின்  வற்புறுத்தலால் ஒரு  மேரேஜ்  பண்ணிக்கறார்

இப்போ  பழைய  காதலி  உயிரோட  வர்றாங்க . ஹீரோ  நியாயமா  தனக்கு  மேரேஜ்  ஆகிடுச்சு . நீ  வேற  மேரேஜ்  பண்ணிக்கோனுதானே  சொல்லனும்? அவரு  கூழுக்கும்  ஆசை  மீசைக்கும்  ஆசை  கணக்கா  சொல்லலை . ரெண்டு  பேரையும்  சமாளிக்கிறார்


 இப்போ  மனைவிக்கு  ஒரு  குழந்தை  , காதலிக்கு  ஒரு குழந்தை . இவங்க  ரெண்டு  பேசும்  ஒரு  கட்டத்துல  ச்ந்திச்சு  உண்மை  தெரிய  வரும்போது  என்ன  ஆச்சு ? என்பதே  க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  சிவக்குமார். தமிழ்  சினிமா ல  ரெண்டு  பொண்டாட்டிக்காரன்  கேரக்டர்ல  அதிகம்  நடிச்ச  நடிகர்  யார்?னு  பார்த்தா  சிவக்குமார்தான். வாழ்றார்யா  மனுசன். அதே  போல   மனைவி  மேல  சந்தேகப்படும்  கேரக்டரில்  ரகுவரனுக்கு  அடுத்து  பிரமாதமா  பண்றவரும்  இவரே . இதுல  மனைவியோடு  கொஞ்சும்  காட்சிகளில்  , காதலியோடு சுற்றும்  காட்சிகளில்  எல்லாம்  நல்லா  நடிச்சிருக்கார்னா  இருவரையும்  ச்மாளிக்கும்  காட்சிகளில்  காமெடியும்  உண்டு 


 மனைவியா  சுஜாதா  தேர்ந்த  நடிப்பு . இளமைத்தோற்றம் ,  வயதான  தோற்றம்  இரண்டிலுமே  சைன்  பண்றார். காதலியா  அம்பிகா. அப்பாவிப்பெண்ணாகவும்  சரி    தியாகி  ஆகும்போதும்  சரி  மனம் கவரும்  நடிப்பு 


ஹீரோவின்  நண்பராக  பி ஏ வா க  கலகலப்புக்கு  கவுண்டம்ணி . இவருக்கு  2  சம்சாரம்  அதுதான்  மனோரமா  , கோவை  சரளா. இவங்க  காமெடி  டிராக்  மெயின்  கதைக்கு  சம்ப்ந்தம்  இல்லைன்னாலும்  ரசிக்க  முடியுது 


இசை  கங்கை  அமரன்  பாடல்கள்  இசை  இரண்டுமே சுமார்  ரகம்  தான்  . பிஜிஎம்மும்  பெரிய  அளவில்  இல்லை


சபாஷ்  டைரக்டர்\


1  இந்தக்கதையை  நான்  சொன்ன  ஃபார்மெட்டில்  சொன்னா  சாதா  ப்ளேபாய்  ஸ்டோரிமாதிரி  போய்டும்  என்பதால்  வயதான  சிவகுமார்  சுஜாதா  ஜோடியைக்காட்டி  அவரோட  மகன்  மேரேஜில்  பிரச்சனை  வருவது  போலவும்  அப்போ  அம்பிகா  பெருமையை  சொல்வது  போல  சொல்லிட்டா  இது  ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்  படமா  காட்டிக்கலாம்  என  நினைத்த  இயக்குநர்  ஐடியா  குட் 


2   ஹீரோவுக்கும்  2  ஜோடி  காமெடி  டிராக்கிலும்  ரெண்டு  ஜோடி  என  வைத்து  விட்டால்  அது  பெரிய  தப்பு  ஒண்ணுமில்லை  ஊர்  உலகத்துல  நடக்கறதுதான்  என  காட்டும்  விதமாக  திரைக்கதை  எழுதிய  சாமார்த்தியம்,அந்தக்காலத்துல  எல்லாம்  பெண்ணிய  அமைப்புகள்   மாதர்  சங்கங்கள்  ஆக்டிவா  இல்லை  இருந்திருந்தா  இயக்குநரைக்கிழிச்சு  இருப்பாங்க 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   அம்பிகா    சிவக்குமார்  பழக்கம்  ஏற்படும்போது  அவர்  தன்  சென்னைக்கம்பெனி  விசிட்டிங்  கார்டையே  தர்லை.  ஃபோன்  நெம்பரும்  தெரியாது பொதுவாக  பெண்கள்  சேஃப்டி  பண்ணிக்குவாங்க  காதலன்  பேக்  கிரவுண்ட்  தெரியாமல்  அதுக்கு  சம்மதிப்பாங்களா?  


2  ஹீரோ  வ்ழக்கமா 10  டூ  5  தான்  கம்பெனில  இருப்பார்  மற்ற நேரத்தில்  வீடுதான். அம்புகா  வந்தபின்  காலை  6  டூ  நைட் 11   வீட்டுக்கே  வர்றதில்லை ., சுஜாதாவுக்கு  டவுட்  வராதா?(  சுஜாதாவோட  அம்மாவுக்குதான்  டவுட்  வருது 


3  அம்பிகாவிடம்   டெய்லி  நைட்  தங்குவதே  இல்லை  அது  பற்றி  அவர்  கேள்வி  கேட்கவே  மாட்டாரா?  கர்ப்பமாகி  6  வது  மாதம்  வரை  தாலி  பற்றி  அவர்  கண்டுக்கவே  இல்லையே? 


4  அம்பிகாவுக்கு  ஒரு  பங்களா  வாடகைக்கு  ரெடி  பண்ணி  அவரை  அங்கே  வெச்சிருக்கார்  ஓக்கே  ஆனா   ஒரு  இடத்துக்கு  டூர்  போறப்போ   பலர்  அவரைப்பார்க்க  வாய்ப்பிருக்கே? என்ன  தைரியத்துல  போறார்?


5  ஆல்ரெடி  ஹைதராபாத்ல  லவ்  பண்ணி  இங்கே  சென்னை  வந்து  லவ்  பண்ணி  குடித்தனம்  பண்ணும்  அம்பிகாவுக்கு  சிவக்குமார்  பர்த்டே  கூட  தெரியாமயா  இருக்கும்? 


6   சிவக்குமார்  பர்த்டே அன்னைக்கு  மாலைல   5  டூ 5 30    ஒருவர்  கூடவும்  5.30  டூ 6  இன்னொருவர்  கூடவும்  ஒரே  கோயிலுக்குப்போறதா  பிளான், ரொம்ப  மடத்தன்மா  இருக்கு  காலைல  ஒருவர்  கூட  மாலை  வேற  ஒருத்தர்  கூட  வேவ்வேற  கோயிலுக்குப்போனாதானே  சேஃப்டி? சும்மா  காமெடிக்காக  இ து  வெச்சாலும்   நிஜத்தில்  மடத்தனமா  இருக்கு 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரொம்ப  பிற்போக்குத்தன்மான  திரைக்கதை  நடிகர்களின்  நல்ல  நடிப்பு  ரசிக்க  வைக்கும்  காமெடி  இப்ப்டி  மைனசும்  ப்ளசும்  கலந்த  கலவையா  இருக்கும்  படம் .  ரேட்டிங்  1.75 / 5