Showing posts with label கற்பு. Show all posts
Showing posts with label கற்பு. Show all posts

Thursday, September 02, 2010

சிந்துசமவெளி - நாகரீகமா?அநாகரீகமா? 18+

22 வருடங்களுக்கு முன் ஈரோடு  ரவி தியேட்டரில் (18. 6.1989) மழு என்ற மலையாளப்படம் ரிலீஸ் ஆச்சு.தமிழில் மாமனாரின் இன்ப வெறி என இவர்களாகவே மொழி பெயர்த்திருந்தார்கள்.கிட்டத்தட்ட அதே மாதிரியான கதை அமைப்பில் நாளை ரிலீஸ் ஆகும் இந்தப்படமும் சேரும்.

இந்தப்படத்தில் 2 வெவ்வேறு துருவங்கள் இணைகின்றன.மிக கவுரவமான எழுத்துக்களுக்கும்,நுண்ணிய மனித உணர்வுகளின் நுட்பமான தருணங்களை நாவலில் வடிப்பவருமான எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதி இருக்கிறார்.இவர் எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்த லிஸ்ட்டில் விரைவில் வர இருப்பவர்.இவரது எழுதும் வேகம் அளப்பரியது.22 வருட பத்திரிக்கைத்துறை அனுபவத்தில் இவரைப்போல் சலிக்காமல் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுபவரை நான் கண்டதில்லை.

இயக்குநர் சாமி உயிர் படம் மூலம் அண்ணி -கொழுந்தன் உறவில் ஏற்படும் ஒரு சிக்கலான தருணம் பற்றி படம்  எடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர்.படத்தில் காட்சி ரீதியாக ஆபாசம் இல்லை என்றாலும் கருத்து ரீதியாக கூட்டுக்குடும்பங்களிடையே பெரிய ஒரு சுணக்கத்தை ஏற்படுத்த வல்ல பாம் (படம்)அது.2வது படம் மிருகம் ஷீட்டிங்க் டைமில் நாயகி பத்மப்ரியாவை பளார் என அறைந்து ஒரு வருட காலம் டைரக்ட் பண்ண தடை பெற்றவர்.


இப்படி 2 வேறு வேறு துருவங்கள் இணையும் இந்தப்படம் என்ன மாதிரி கதை?

ரஷ்ய மொழியில் வெளி வந்த 3 காதல் கதைகள் என்ற நூல் தொகுப்பில் முதல் காதல் என்ற குறு நாவலே ஜெயமோகன் கை வண்ணத்தில் படம் ஆகி இருக்கிறது.
இளம் காதல் ஜோடி திருமணத்திற்குப்பின் திடீர் என ஒரு கட்டத்தில் நாயகன் ஹரீஸ் காணாமல் போகிறார்.அவர் என்ன ஆனார்?உயிருடன் உள்ளாரா ,இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில் நாயகி அனகா மாமனார் (ராணுவ மேஜர் ரிட்டயர்டு) உடன் தொடர்பு ஏற்படுகிறது.திடீர் என காணாமல் போனதாகக்கருதபட்ட நாயகன் வருகிறான்.இப்போது நாயகியின் நிலை என்ன?யாருடன் ஜோடி சேர்கிறாள்?மாமனாருக்கு கிடைத்த தண்டனை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

ஹீரோயின் கேரளத்துப்பார்ட்டி போல.நல்ல கவிதை பேசும் கண்கள்,நடிக்க பல சீன்களில் வாய்ப்பு.இந்தப்படத்துக்கு நல்ல விளம்பரம் ,தியேட்டர்களில் வைக்கப்பட்ட ரிச்சான ஸ்டில்கள் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவர்வதாக இருந்தன.ஒளிப்பதிவு தரமாக இருந்தது.மாமனாரின் அறிமுகக்காட்சியில் கமாண்டோ படத்தில் அர்னால்டு ஸ்வார்செனேகர் விறகு வெட்டி எடுத்துப்போவது போல் (பைசெப்ஸ் காண்பிக்கும் ஆண்மை தெறிக்கும்)சீனை சுட்டு ஏற்கனவே விஜய்காந்த் உளவுத்துறையில் சீன் வைத்திருந்தாலும் சாமி அது பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் அந்த சீனை சுட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா நல்ல ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாடோடிகள்,சுப்ரமணியபுரம்,அங்காடித்தெரு
,களவாணி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட் ஆகி புதுப்புது டைரக்டர்களை,புது கதையம்சமான படங்களை கோடம்பாக்கம் வரவேற்கத்தயாராகி வரும் இந்த நேரத்தில் சாமி மதிரி பெண்ணியத்தை கொச்சைப்படுத்துகிற ஒரு படைப்பாளியின் படைப்பு மக்களிடையே வரவேற்பு பெறாமல் போவதே நல்ல படைப்புகளை விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
  இயக்குநர் சாமி மீது தனிப்பட்ட பகையோ,கருத்து வேற்றுமையோ எனக்கு கிடையாது.நான் இன்னும் படமே பார்க்கவில்லை.ட்ரைலர் மட்டுமே பார்த்தேன்.மேலும் சில தகவல்கள் சினிமாத்துறையில் உள்ள உதவி இயக்குநர்கள் தந்து  உதவினார்கள்.சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் போராடும் பெண்ணிய அமைப்புகள் இந்தப்படம் பற்றி என்ன கருத்து கூறுவார்கள் என்பது நாளை தெரிந்து விடும்.