Showing posts with label கருத்துக்கள். Show all posts
Showing posts with label கருத்துக்கள். Show all posts

Wednesday, September 15, 2010

சினிமாத்துறைக்கு மட்டும்தான் சி எம் சீட் சொந்தமா?


Blogger தமிழகத்தில் சினிமாவுக்கும் ,அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
 மக்கள் மனதை சினிமா என்னும் கவர்ச்சி வலையின் மூலம் கவர்ந்தவர்கள் ஆந்திராவில் என் டி ஆரும், தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களும்.மந்திரிகுமாரி படத்தில் நடிக்கும்போது எம் ஜி ஆர் அரசியலில் நிழைவது பற்றி யோசித்தே இருக்கவில்லை.ஆனால் மதுரைவீரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகே அவர் படங்களில் அரசியல் வசனங்கள் இடம் பெற ஆரம்பித்தன.ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாடாளும் மன்னன் இவன் என பாடல் வரிகள் வரும்போது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு தியேட்டர்களில் அளவிட முடியாதது.
 
அதற்குப்பிறகு எம் ஜி ஆர் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி ஜெ கைக்குப்போனது.பாட்ஷா பட விழாவில் ரஜினி பேசிய பரபரப்பான பேச்சு ஒரு அலையை ஏற்படுத்தியது.அப்போது இருந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாகப்பயன்படுத்த ரஜினி தவறி விட்டார் என ஒரு பேச்சு இருந்தாலும் ரஜினியின் கணக்கு வேறாக இருந்தது,கலைஞர் இருக்கும் வரை அவரை எதிர்த்து அரசியல் பண்ணக்கூடாது என்பதே அவர் எண்ணம்.இதற்காகவே அவர் ஷங்கரின் டைரக்‌ஷனில் முதல்வன் பட வாய்ப்பையும் தட்டிக்கழித்தார்.அந்தப்படத்தில் அவர் நடித்திருந்தால் தமிழக அரசியலையே அது புரட்டிப்போட்டிருக்கும் என சொல்வோர் உண்டு.
  கிடைத்த சைக்கிள் கேப்பில் கேப்டன் வந்தார்.வந்த புதிதில் அவர் எள்ளி நகையாடப்பட்டாலும் தொடர்ந்து அவர் பெற்ற வரவேற்பும்,வாக்கு சதவீதமும் குறிப்பிடத்தக்கவை.அவரால் இப்போதைக்கு சி எம் ஆக முடியாவிட்டாலும் தமிழக அரசியலில் அவருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

இப்படிப்பட்ட சூழலில் 2011 இல் ஆட்சி அமைக்கப்போவது யார்? இது மில்லியன் டாலர் கேள்வி.ஆனந்த விகடன்,குமுதம் உட்பட பல இதழ்களில் பணியாற்றியவரும்,பத்திரிக்கையாள்ரும்,ஜிபோஸ்ட் எனும் பிளாக் நடத்துபவருமான ஜி கவுதம் பிளாக்கருக்கான அரசியல் கருத்துக்கணிப்பை பதிவு செய்தார்.அது சூர்யக்கதிர் எனும் மாதம் இருமுறை இதழில் வெளியானது.நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
 
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தி.மு.க.-காங்கிரஸ்-பா.ம.க. கூட்டணி ஒரு புறமிருக்கும்..! அ.தி.மு.க.-தே.மு.தி.க.-வைகோ-கம்யூனிஸ்ட்டுகள் மறு கூட்டணியில் இருக்கும்..! ஒருவேளை பா.ம.க.வும், தே.மு.தி.கவும் கூட்டணி இடம் மாறினாலும் மாறுவார்களே தவிர.. தனித்து நின்று தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்..! அடுத்து ஐந்து வருடங்கள் பணம் சம்பாதிக்க இருப்பதைத் தள்ளிப் போட இனியும் அவர்கள் முட்டாள்களில்லை..!
3:54 PM
Blogger சி.பி.செந்தில்குமார் said...
காங்கிரஸ் கேப்டனுடன் கூட்டணி அமைக்கும்.டி எம் கே,ஏ டி எம் கே, காங்கிரஸ் என 3 முமுனைப்போட்டியாக இருக்கும்.விஜய்காந்த் சி எம் ஆகாவிட்டாலும் குறிப்பிடத்தக்க சீட்ஸ் பெறுவார்.கலைஞரே மீண்டும் முதல்வர் ஆவார்.
3:57 PM
Blogger ஜி கௌதம் said...
தி.மு.க.-காங்கிரஸ்-பா.ம.க. கூட்டணி ஒரு புறமிருக்கும்..! அ.தி.மு.க.-தே.மு.தி.க.-வைகோ-கம்யூனிஸ்ட்டுகள் மறு கூட்டணியில் இருக்கும்..! ஒருவேளை பா.ம.க.வும், தே.மு.தி.கவும் கூட்டணி இடம் மாறினாலும் மாறுவார்களே தவிர.. தனித்து நின்று தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்..! அடுத்து ஐந்து வருடங்கள் பணம் சம்பாதிக்க இருப்பதைத் தள்ளிப் போட இனியும் அவர்கள் முட்டாள்களில்லை..! - சென்னையில் இருந்து உண்மைத் தமிழன் (இப்படி உங்கள் இருப்பிடத்தையும் சேர்த்து பெயரைக் குறிப்பிட்டால் அப்படியே இதழில் பிரசுரம் செய்ய வசதியாக இருக்கும்.. புகைப்படமும் இடம்பெற விரும்பினால் தனியே மின்னஞ்சலில் அனுப்பிவைக்கவும் - [email protected] நன்றி)
3:57 PM
Blogger ராம்ஜி_யாஹூ said...
திமுக காங்கிரஸ் கூட்டணியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்பது என் கணிப்பு
4:01 PM
Blogger ஜி கௌதம் said...
//காங்கிரஸ் கேப்டனுடன் கூட்டணி அமைக்கும்.டி எம் கே,ஏ டி எம் கே, காங்கிரஸ் என 3 முமுனைப்போட்டியாக இருக்கும்.விஜய்காந்த் சி எம் ஆகாவிட்டாலும் குறிப்பிடத்தக்க சீட்ஸ் பெறுவார்.கலைஞரே மீண்டும் முதல்வர் ஆவார். - சென்னிமலையில் இருந்து சி.பி.செந்தில்குமார்// இதுதான் சாம்ப்பிள். இப்படி உங்கள் ஊரையும் குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவும். புகைப்படமும் இடம்பெற விரும்பினால் தனியே மின்னஞ்சலில் அனுப்பிவைக்கவும் - [email protected] நன்றி.
4:01 PM
Blogger ஜி கௌதம் said...
கருத்து தெரிவிக்கும் ஒவ்வொருவரும் தத்தம் முகவரியை என் மின்னஞ்சலில் தெரிவித்தால் பிரசுரமாகும் சூரிய கதிர் இதழை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்திய முகவரிக்கு மட்டுமே இதழ் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் மன்னிக்கவும்.
4:05 PM
Blogger மாயவரத்தான்.... said...
வரும் பொதுத் தேர்தலில் - தி.மு.க. + காங்கிரஸ் + இதர உதிரிக் கட்சிகள் ஒரு கூட்டணி - அ.தி.மு.க. + வைகோ + கம்யூனிஸ்ட் + முஸ்லீம் லீக் + தமமுக + இதர உதிரிக் கட்சிகள் அடுத்த கூட்டணி - விஜயகாந்த் தனித்து போட்டி - ராமதாஸ் தனித்து போட்டி இப்படித் தான் இருக்கப் போகிறது கூட்டணி. உதிரிக் கட்சிகள் அங்குமிங்கும் தாவலாம்! இந்த தடவை போலவே யாருக்கும் தனி மெஜாரிடி கிடைக்கப் போவதில்லை. கடந்த முறை ‘இலவச கலர் டி.வி.’ என்றதைப் போல இந்த முறை வேறு ஏதேனும் இலவசம் என்ற சின்ன மீனை போட்டு வெற்றி என்ற பெரிய மீனைக் கவ்வ தி.மு.க. திட்டம் ஏற்கனவே ரெடியாக இருக்கும். ஜெயித்தால் ஆட்சியில் பங்கு என்ற குடைச்சலை காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னதாகவே ஆரம்பித்து விடும். தேர்தலுக்குப் பிறகு பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் காணாமல் போய்விடும்! காங்கிரஸின் முக்கிய தலைகளை ஜெயிக்க விட்டால் ஆட்சியில் பங்கு கோரிக்கை அதிகமாகி விடும் என்பதினால் அவர்களை ‘கவிழ்க்க’ பல வேலைகள் நடைபெறும். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அடுத்தவனுக்கு இரண்டு கண்கள் போய் விடுகிறது அல்லவா?! தி.மு.க. - அ.தி.மு.க. இடையில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைந்த அளவே இருக்கும். அ.தி.மு.க.வின் சில முக்கிய தலைகள் தேர்தலுக்கு முன் தி.மு.க.விற்கு தாவும் வைபவங்கள் தொடர்ந்து நடைபெறும். வழக்கம் போல வி.சி. திருமாவளவன் ‘வழவழ கொழகொழ’வாக தி.மு.க.வுடன் கூட்டணி, காங்கிரசுடன் இல்லை என்று சொல்லி இங்கேயே ஒரு சீட்டுக்காக தொடருவார் - உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட! தற்போதைய அமைச்சர்களில் பாதி பேருக்கு இதயத்தில் மட்டுமே இடம் கிடைக்கும். துணை முதல்வரின் கை ஓங்கியிருக்கும். அ.தி.மு.க.விலோ மீண்டும் மன்னார்குடி மகாத்மியம் ஆரம்பமாகி விடும்.
4:06 PM
Blogger மாயவரத்தான்.... said...
வரும் பொதுத் தேர்தலில் - தி.மு.க. + காங்கிரஸ் + இதர உதிரிக் கட்சிகள் ஒரு கூட்டணி - அ.தி.மு.க. + வைகோ + கம்யூனிஸ்ட் + முஸ்லீம் லீக் + தமுமுக + இதர உதிரிக் கட்சிகள் அடுத்த கூட்டணி - விஜயகாந்த் தனித்து போட்டி - ராமதாஸ் தனித்து போட்டி இப்படித் தான் இருக்கப் போகிறது கூட்டணி. உதிரிக் கட்சிகள் அங்குமிங்கும் தாவலாம்! இந்த தடவை போலவே யாருக்கும் தனி மெஜாரிடி கிடைக்கப் போவதில்லை. கடந்த முறை ‘இலவச கலர் டி.வி.’ என்றதைப் போல இந்த முறை வேறு ஏதேனும் இலவசம் என்ற சின்ன மீனை போட்டு வெற்றி என்ற பெரிய மீனைக் கவ்வ தி.மு.க. திட்டம் ஏற்கனவே ரெடியாக இருக்கும். ஜெயித்தால் ஆட்சியில் பங்கு என்ற குடைச்சலை காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னதாகவே ஆரம்பித்து விடும். தேர்தலுக்குப் பிறகு பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் காணாமல் போய்விடும்! காங்கிரஸின் முக்கிய தலைகளை ஜெயிக்க விட்டால் ஆட்சியில் பங்கு கோரிக்கை அதிகமாகி விடும் என்பதினால் அவர்களை ‘கவிழ்க்க’ பல வேலைகள் நடைபெறும். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அடுத்தவனுக்கு இரண்டு கண்கள் போய் விடுகிறது அல்லவா?! தி.மு.க. - அ.தி.மு.க. இடையில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைந்த அளவே இருக்கும். அ.தி.மு.க.வின் சில முக்கிய தலைகள் தேர்தலுக்கு முன் தி.மு.க.விற்கு தாவும் வைபவங்கள் தொடர்ந்து நடைபெறும். வழக்கம் போல வி.சி. திருமாவளவன் ‘வழவழ கொழகொழ’வாக தி.மு.க.வுடன் கூட்டணி, காங்கிரசுடன் இல்லை என்று சொல்லி இங்கேயே ஒரு சீட்டுக்காக தொடருவார் - உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட! தற்போதைய அமைச்சர்களில் பாதி பேருக்கு இதயத்தில் மட்டுமே இடம் கிடைக்கும். துணை முதல்வரின் கை ஓங்கியிருக்கும். அ.தி.மு.க.விலோ மீண்டும் மன்னார்குடி மகாத்மியம் ஆரம்பமாகி விடும். - தாய்லாந்திலிருந்து கி. ரமேஷ்குமார்
4:07 PM
Blogger மாயவரத்தான்.... said...
தமமுக என்பதை தமுமுக என்று திருத்திக் கொள்ளவும்.
4:09 PM
Anonymous மருது said...
எந்த கட்சியோ அல்லது எந்த அரசியல்வாதியோ ஆட்சிக்கு வந்தாலும் நம்மளை மறைமுகமா உலக வங்கியும் அமெரிக்காவும் தான் ஆட்சி செய்யப் போறானுங்க .. என்ன ஒண்ணு வேணும்னா விவாதிக்கலாம் .. ஆளும் கட்சியா யாரு வந்து அமெரிக்காவும் , உலகவங்கியும் போடுற பிச்சைக் காசை பொறுக்கித் தின்னு சத்தமில்லாமல் சொத்து சேர்க்க போறாங்க என்று விவாதிக்கலாம் . மற்ற படி எவன் வந்தாலும் இந்த நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் ஏற்படப் போறது இல்லை .
4:10 PM
Anonymous Gurumurthy said...
இந்த முறை தி.மு.க மீண்டும் அரியணைக்கு வருவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். அம்மாவுக்கு கூடிய கூட்டம் மட்டுமல்ல,தொடர்ந்து நீடிக்கும் விலைவாசி,மின்வெட்டு போன்ற பிரச்சனைகளும் எதிரொலிக்கும்.காங்கிரசை எப்படியாவாது கூட்டணியில் தக்க வைக்க தி.மு.க. போராடும். அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தால் ஏற்கனவே உள்ள மதிமுக,தோழர்கள்,தமுமுகவுடன் அதிமுக கூட்டணி வலுவாக இருக்கும். இதை பயன்படுத்தி காங்கிரஸ் அதிக சீட்டுகள் மற்றும் அரசில் பங்கு கேட்கும் சூழ்நிலை உருவாகும். ஆனால் தேமுதிக தனித்து போட்டியிடும் பட்சத்தில் அதிமுகவுக்கு ஓட்டுகள் பிரிந்து அதிமுக,திமுக இரண்டு கட்சிகளுக்கும் குறைந்த சீட் வித்தியாசமே உண்டாகும்; அறுதி பெரும்பான்மை கிடைக்காது. அந்த நேரத்தில் ஆட்சி அமைப்பதில் தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பங்கு முக்கியமாக இருக்கும். மொத்தத்தில் இந்த தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பெரிய சவாலாக இருக்கும். யார் வந்தாலும் மக்கள் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஆண்டால் சரி. இலவசங்கள் வேண்டாம். உரியதை உருப்படியாக கொடுத்தால் போதும். மதுரையிலிருந்து குருமூர்த்தி
4:57 PM
Blogger thamizhan said...
திமுக காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பில்லை.அதிமுகவிற்கு மதிமுக,கம்யுனிஸ்டுகளால் பெரிய அளவில் வாக்குகள் கூடப்போவதில்லை.பாமக,தேமுதிக தனியாக நின்றால் திமுக கூட்டணி வெற்றி பெரும். ஆனால் அறுதி பெறும்பான்மை திமுகவிற்கோ, அதிமுகவிற்கோ கிடைக்காது.விலைவாசியும் மின்வெட்டும் கலைஞருக்கு எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிமுகவுக்கு சாதகமாகும்.
7:27 PM
Blogger சித்தன்555 said...
திமுக-காங்-பாமக ஒரு பக்கம். அதிமுக-தேமுதிக-மதிமுக-கம்யூக்கள் மறுபக்கம். முடிவு அந்தரத்தில். கோவையிலிருந்து சித்தன்.
7:34 PM
Anonymous ஞெலிநரி வெய்யோன் said...
*அம்மா அலையெல்லாம் ஒன்றும் வீசவில்லை. அம்மா குட்டிக் குட்டிக் கட்சிகளுக்கெல்லாம் வலை வீசுகிறார். இன்னும் திரு. எம்.ஜி. இராமச்சந்திரனையே நம்பி வாழ்க்கையை ஓட்டுவதெல்லாம் வேலைக்காகாது என்று இவ்விடத்தில் அம்மாவிற்கு அறிவுரை கூறிக்கொள்கிறேன். *அடுத்து மருத்துவர் திரு. இராமதாசு அவர் வேண்டுமானால் திரு. விசயக்கந்திடம் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அது நடப்பின் கண்டிப்பாக பா.மா.க. பலவாக உடையும் (?) என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் அவரது மகனுக்கு அக்கூட்டணியின் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஒரு கட்சியால் தமிழக அரசியலிலோ மக்களின் வாழ்விலோ ஒரு பெருமாற்றத்தை எந்தக் காலத்திலும் ஏற்படுத்திவிட முடியாது. *திரு. வைகோவின் தற்போதைய ஆதங்கமெல்லாம் குறைந்தபட்சம் சில ச.ம.உ. இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ம.தி.மு.க. என்ற கட்சியின் பெயரையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானேயன்றிப் பிறிதில்லை. அது நடக்காது என்பது என்னைப் போன்ற தீவிர அரசியல் ஆர்வலர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது. *அடுத்து திரு. விசயகாந்த், அவர் தனித்தே இருக்கும் வரையில் அவரது கட்சியின் சார்பில் அவர் மட்டுமே ஓமந்துரார் அரசினர்த் தோட்டத்திற்குச் செல்ல முடியும் என்பதில்ஐயமேதுமில்லை. *எப்படிப் பார்த்தாலும் மேற்கூறிய யாவர்க்கும் தனிப் பெரும்பான்மை என்பது ஒரு பெருத்த வினாக்குறியே ஆகும். எனவே கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, வகையிட்டு, தொகையிட்டுப் பார்ப்பின் மக்கள் நலனில் அதிக ஆர்வமுடைய ஐயா கலைஞர் திரு. மு. கருணாநிதியின் ஆட்சியே மீண்டும் அமையும் என்பது எனது மேலோங்கிய கருத்தாகும். முதல்வர் வேண்டுமானால் மாறலாம் ஆனால் தலைமை மாறாது. --- ஞெலிநரி வெய்யோன். தமிழ் வழிப் பொறியியல் மாணவன். அண்ணா பல்கலைக் கழகம், கிண்டி. மேலதிக விபரங்களுக்கு, http://FirefoxSurya.blogspot.com http://twitter.com/FirefoxSurya http://facebook.com/FirefoxSurya பின் குறிப்பு: புகைப் படத்தை அருள் கூர்ந்து facebook-இல் இருந்து எடுத்துக் கொள்ளவும்.
10:09 AM
Anonymous ஞெலிநரி வெய்யோன் said...
*அம்மா அலையெல்லாம் ஒன்றும் வீசவில்லை. அம்மா குட்டிக் குட்டிக் கட்சிகளுக்கெல்லாம் வலை வீசுகிறார். இன்னும் திரு. எம்.ஜி. இராமச்சந்திரனையே நம்பி வாழ்க்கையை ஓட்டுவதெல்லாம் வேலைக்காகாது என்று இவ்விடத்தில் அம்மாவிற்கு அறிவுரை கூறிக்கொள்கிறேன். *அடுத்து மருத்துவர் திரு. இராமதாசு அவர் வேண்டுமானால் திரு. விசயக்கந்திடம் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அது நடப்பின் கண்டிப்பாக பா.மா.க. பலவாக உடையும் (?) என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் அவரது மகனுக்கு அக்கூட்டணியின் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஒரு கட்சியால் தமிழக அரசியலிலோ மக்களின் வாழ்விலோ ஒரு பெருமாற்றத்தை எந்தக் காலத்திலும் ஏற்படுத்திவிட முடியாது. *திரு. வைகோவின் தற்போதைய ஆதங்கமெல்லாம் குறைந்தபட்சம் சில ச.ம.உ. இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ம.தி.மு.க. என்ற கட்சியின் பெயரையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானேயன்றிப் பிறிதில்லை. அது நடக்காது என்பது என்னைப் போன்ற தீவிர அரசியல் ஆர்வலர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது. *அடுத்து திரு. விசயகாந்த், அவர் தனித்தே இருக்கும் வரையில் அவரது கட்சியின் சார்பில் அவர் மட்டுமே ஓமந்துரார் அரசினர்த் தோட்டத்திற்குச் செல்ல முடியும் என்பதில்ஐயமேதுமில்லை. *எப்படிப் பார்த்தாலும் மேற்கூறிய யாவர்க்கும் தனிப் பெரும்பான்மை என்பது ஒரு பெருத்த வினாக்குறியே ஆகும். எனவே கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, வகையிட்டு, தொகையிட்டுப் பார்ப்பின் மக்கள் நலனில் அதிக ஆர்வமுடைய ஐயா கலைஞர் திரு. மு. கருணாநிதியின் ஆட்சியே மீண்டும் அமையும் என்பது எனது மேலோங்கிய கருத்தாகும். முதல்வர் வேண்டுமானால் மாறலாம் ஆனால் தலைமை மாறாது. --- ஞெலிநரி வெய்யோன். தமிழ் வழிப் பொறியியல் மாணவன். அண்ணா பல்கலைக் கழகம், கிண்டி. மேலதிக விபரங்களுக்கு, http://FirefoxSurya.blogspot.com http://twitter.com/FirefoxSurya http://facebook.com/FirefoxSurya *அம்மா அலையெல்லாம் ஒன்றும் வீசவில்லை. அம்மா குட்டிக் குட்டிக் கட்சிகளுக்கெல்லாம் வலை வீசுகிறார். இன்னும் திரு. எம்.ஜி. இராமச்சந்திரனையே நம்பி வாழ்க்கையை ஓட்டுவதெல்லாம் வேலைக்காகாது என்று இவ்விடத்தில் அம்மாவிற்கு அறிவுரை கூறிக்கொள்கிறேன். *அடுத்து மருத்துவர் திரு. இராமதாசு அவர் வேண்டுமானால் திரு. விசயக்கந்திடம் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அது நடப்பின் கண்டிப்பாக பா.மா.க. பலவாக உடையும் (?) என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் அவரது மகனுக்கு அக்கூட்டணியின் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஒரு கட்சியால் தமிழக அரசியலிலோ மக்களின் வாழ்விலோ ஒரு பெருமாற்றத்தை எந்தக் காலத்திலும் ஏற்படுத்திவிட முடியாது. *திரு. வைகோவின் தற்போதைய ஆதங்கமெல்லாம் குறைந்தபட்சம் சில ச.ம.உ. இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ம.தி.மு.க. என்ற கட்சியின் பெயரையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானேயன்றிப் பிறிதில்லை. அது நடக்காது என்பது என்னைப் போன்ற தீவிர அரசியல் ஆர்வலர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது. *அடுத்து திரு. விசயகாந்த், அவர் தனித்தே இருக்கும் வரையில் அவரது கட்சியின் சார்பில் அவர் மட்டுமே ஓமந்துரார் அரசினர்த் தோட்டத்திற்குச் செல்ல முடியும் என்பதில்ஐயமேதுமில்லை. *எப்படிப் பார்த்தாலும் மேற்கூறிய யாவர்க்கும் தனிப் பெரும்பான்மை என்பது ஒரு பெருத்த வினாக்குறியே ஆகும். எனவே கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, வகையிட்டு, தொகையிட்டுப் பார்ப்பின் மக்கள் நலனில் அதிக ஆர்வமுடைய ஐயா கலைஞர் திரு. மு. கருணாநிதியின் ஆட்சியே மீண்டும் அமையும் என்பது எனது மேலோங்கிய கருத்தாகும். முதல்வர் வேண்டுமானால் மாறலாம் ஆனால் தலைமை மாறாது. --- ஞெலிநரி வெய்யோன். தமிழ் வழிப் பொறியியல் மாணவன். அண்ணா பல்கலைக் கழகம், கிண்டி. மேலதிக விபரங்களுக்கு, http://FirefoxSurya.blogspot.com http://twitter.com/FirefoxSurya http://facebook.com/FirefoxSurya பின் குறிப்பு: புகைப் படத்தை அருள் கூர்ந்து facebook-இல் இருந்து எடுத்துக் கொள்ளவும்.
10:10 AM
Anonymous Anonymous said...
ஓர் அலை வந்தது போலத் தோன்றலாம். ஆனால் அந்த அலை ஓட்டுகளாக மாறுமா என்ற சந்தேகம் கடலுக்கே தெரியாத ஒன்று! திராவிட கட்சிகளோடு ஒன்று சேராமல் எந்த கட்சிக்கும் மாபெரும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்று கடந்த தேர்தல் நிரூபித்து விட்டது! தற்போதைய அரசு, அடிப்படை ஏழை மக்களுக்கு இலவசங்களால் மனநிறைவு கொடுத்துள்ளது. ஏழை எளிய மக்கள் தான் அதிகமும் வெயிலில்/மழையில் வரிசைகளில் நின்று ஓட்டு போட முன் வருபவர்கள் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த விஷயம். விமர்சன விரும்பிகளில் அதிகமும் NDTV 24 x7 - ஐ குளிர் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்! இலவசம் பெற்று மனநிறைவு பெற்றவர்களின் ஓட்டுகள் இந்த அரசிற்கு கிடைக்க வாய்புண்டு. இந்த அரசு இந்த முறை சொன்னதை செய்தது! சொல்லாத பல புதிய திட்டங்களையும் செயல் படுத்தி உள்ளது! நீண்ட பட்டியல்களை எல்லோரும் எங்கும் கேட்டிருக்ககூடும் என்பதால் நான் மீண்டு அதை இங்கே பதிவு செய்யவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் என பல இலவசங்கள்... இதையெல்லாம் ஓட்டு வாங்க என்று சொன்னாலும் கலைஞர் காப்பீடு திட்டம் போன்றவைகள் மக்களிடம் பெருமளவு ஆதரவை தந்துள்ளது! கலைஞர் ஐயாவின் வயது ஒரு மாற்றத்தை கொண்டு வர மக்கள் மனதில் எண்ணம் எழுந்தாலும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக உள்ளதாகத் தான் பொதுவாக சொல்லப்படுகிறது. தனித்தனியாக கட்சிகள் களத்தில் இறங்கினால் ஓட்டுகள் சிதறி யாருக்கும் வெற்றியைத் தராது என்பதால் யார் யாரோடு இணைவார்கள் என்று தான் மக்களின் கவனம். மாற்றங்கள் மக்கள் விரும்பலாம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. ஓட்டு போட எல்லோரும் முன் வர வேண்டும். வெறும் 45 அல்லது 55 விழுக்காடு மட்டும் பதிவான ஓட்டுக்களை வைத்துக்கொண்டு வெற்றிகளை தீர்மானித்து ஒரு கட்யிடம் இதோ இந்த நாட்டை ஆண்டு கொள் என்று சொல்வது மிகவும் கவலைக்குறியது, முட்டாள்த்ட்தனமும் கூட! காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே இல்லை. ஆனால் ஐயா காமராஜர் தந்த நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் காண என்போன்றோருக்கு ஆசை இல்லாமல் இல்லை! எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும் என் சுரேஷ்
11:06 AM
Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
டியர் பிரதர்.. தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்பு என்றால் அனைத்துக் கட்சியினரின் புகைப்படங்களையும் போடுவதுதான் பொருத்தமாக இருக்கும்..! இங்கே புரட்சித் தலைவியின் புகைப்படம் மட்டுமே இருப்பதையும், ஆத்தா போஸ் கொடுத்திருக்கும் அழகையும் பார்த்தால்.. அடுத்தது அம்மாவின் ஆட்சிதான் என்பதை நீங்கள் சிம்பாலிக்காக சொல்வதுபோல் எனக்குத் தோன்றுகிறது..! எப்போதிலிருந்து நீங்கள் அம்மாவின் தொண்டனாக மாறினீர்கள் பிரதர்..?
11:38 AM
Blogger ஜி கௌதம் said...
//எப்போதிலிருந்து நீங்கள் அம்மாவின் தொண்டனாக மாறினீர்கள் பிரதர்..?// ஹா ஹா ஹா.. அம்மா அலை வீசுகிறதா இல்லையா என்பதுதான் இந்த நேர அரசியலில் எல்லோரது முதல் கேள்வியும்! அதான் அம்மா போஸ்.. மற்றபடி நானெல்லாம் கூத்தாடி மட்டுமே! :-)
11:44 AM
Blogger முரளிகண்ணன் said...
பேருந்துகளில், தேநீர் கடைகளில் தற்போது அம்மா அலை வீசுவது பற்றிய பேச்சுத்தான் அதிகம் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. தே மு தி க மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைந்தால் லலிதாவுக்கே ஜெயம். ஆனால் நடைமுறையில் அணி 1 : திமுக, காங்கிரஸ்,பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் அணி 2 : அதிமுக மதிமுக தே மு தி க கம்யூனிஸ்ட் என்றே அமையும் என நினைக்கிறேன். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான மின்வெட்டும், வறட்சியும் முக்கிய அம்சமாக எதிரொலிக்கும். அந்தக் காலத்தை திமுக சமாளித்து விட்டால், முதல் அமைச்சர் ஓமாந்தூரார் தோட்டாத்தில் கொடியேற்றுவார் இல்லையென்றால் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அது நடக்கும். R.முரளிகண்ணன் 6/1, கற்பக நகர் 5 ஆவது தெரு திருமங்கலம் 625 706 மதுரை மாவட்டம்
12:11 PM
Blogger யுவகிருஷ்ணா said...
திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகவே இருப்பதாகப் படுகிறது. இளங்கோவனை விட்டு மேலிடம் ஆழம் பார்த்தாலும் தன்னுடைய நம்பிக்கைக்குரிய சகாவாக அதிமுகவை விட திமுகவையே காங்கிரஸ் அதிகம் விரும்பும். இந்த கூட்டணி உடையாவிட்டால், ஆறாவது முறையாக கலைஞர் அரியணை ஏறுவது உறுதி. புரட்சித்தலைவிக்கு கோவையில் கூடிய கூட்டம் உலகசாதனை. திருச்சியில் அதைவிட கூட்டம் அதிகமாக கூடியிருந்தாலும் முழுக்க கட்சிக்காரர்கள் கூட்டமாகவே இருந்தது. கூடியவர்கள் கட்சிக்காரர்களா பொதுமக்களா என்று கண்டறிய ஒரு எளிய சூத்திரம் இருக்கிறது. கூட்டம் முழுக்க வெள்ளைவெளேர் என்று வெள்ளைச்சட்டையில் இருந்தால் மாநிலமெங்கும் இருந்தும் கட்சிக்காரர்களை கூட்டியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். மாறாக அங்கங்கே கலர் தெரிந்தால், பொதுமக்களும் கூடியிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். முந்தைய கூட்டத்தில் அங்கங்கே கலர் தெரிந்தது. பிந்தையதில் அது மிஸ்ஸிங். கலைஞரின் இம்முறை ஆட்சியில் கலர்டிவி, காப்பீடு, 108, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கான சலுகைகள், முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான உதவித்தொகை என்று அரசு களத்தை தொட்ட விஷயங்கள் ஏராளம். ஓட்டுப்போடும் ஒவ்வொரு குடிமகனையும் அரசு ஏதோ ஒருவகையில் சந்தித்து இருக்கிறது. இதுவே கலைஞரின் பலம். பெட்ரோல், விலைவாசி, மின்சாரம், ஈழம், மத்திய அரசு - இவை கலைஞருக்கான பலவீனம். பா.ம.க. - தே.மு.தி.க ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணி முடிவும் 2011 திமுகவுக்கா அல்லது அதிமுகவுக்கா என்பதை முடிவுசெய்யும் ஆற்றல் பெற்றிருப்பதையும் இங்கே புறக்கணித்து விடக்கூடாது. சென்னையிலிருந்து கிருஷ்ணகுமார்
1:11 PM
Blogger யுவகிருஷ்ணா said...
திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகவே இருப்பதாகப் படுகிறது. இளங்கோவனை விட்டு மேலிடம் ஆழம் பார்த்தாலும் தன்னுடைய நம்பிக்கைக்குரிய சகாவாக அதிமுகவை விட திமுகவையே காங்கிரஸ் அதிகம் விரும்பும். இந்த கூட்டணி உடையாவிட்டால், ஆறாவது முறையாக கலைஞர் அரியணை ஏறுவது உறுதி. புரட்சித்தலைவிக்கு கோவையில் கூடிய கூட்டம் உலகசாதனை. திருச்சியில் அதைவிட கூட்டம் அதிகமாக கூடியிருந்தாலும் முழுக்க கட்சிக்காரர்கள் கூட்டமாகவே இருந்தது. கூடியவர்கள் கட்சிக்காரர்களா பொதுமக்களா என்று கண்டறிய ஒரு எளிய சூத்திரம் இருக்கிறது. கூட்டம் முழுக்க வெள்ளைவெளேர் என்று வெள்ளைச்சட்டையில் இருந்தால் மாநிலமெங்கும் இருந்தும் கட்சிக்காரர்களை கூட்டியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். மாறாக அங்கங்கே கலர் தெரிந்தால், பொதுமக்களும் கூடியிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். முந்தைய கூட்டத்தில் அங்கங்கே கலர் தெரிந்தது. பிந்தையதில் அது மிஸ்ஸிங்.
1:12 PM
Blogger யுவகிருஷ்ணா said...
கலைஞரின் இம்முறை ஆட்சியில் கலர்டிவி, காப்பீடு, 108, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கான சலுகைகள், முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான உதவித்தொகை என்று அரசு களத்தை தொட்ட விஷயங்கள் ஏராளம். ஓட்டுப்போடும் ஒவ்வொரு குடிமகனையும் அரசு ஏதோ ஒருவகையில் சந்தித்து இருக்கிறது. இதுவே கலைஞரின் பலம். பெட்ரோல், விலைவாசி, மின்சாரம், ஈழம், மத்திய அரசு - இவை கலைஞருக்கான பலவீனம். பா.ம.க. - தே.மு.தி.க ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணி முடிவும் 2011 திமுகவுக்கா அல்லது அதிமுகவுக்கா என்பதை முடிவுசெய்யும் ஆற்றல் பெற்றிருப்பதையும் இங்கே புறக்கணித்து விடக்கூடாது. சென்னையிலிருந்து கிருஷ்ணகுமார் . பி கு.  -பிளாக்குகள் நடத்துபவரின் கருத்துக்கள் பத்திரிக்கைகளின் கவனத்தை கவர்ந்திருப்பது பெருமைப்படத்தக்கது.இது ஒரு வளர்ச்சியின் ஆரம்பம் என கொள்ளலாம் .