1985 ஆம் ஆண்டு பிரபு -ரேவதி நடிக்க ஆர் பாண்டியராஜன் இயக்க வெளி வந்த படத்தின் கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை , அதன் ரீமேக்கும் இல்லை
இந்தப்படத்துக்கு ஜெமினிகணேசன் என டைட்டில் முதலில் வைக்கப்பட்டது . நாயகன் ஆக ஜீவா புக் ஆனார் 2015 ஆம் ஆண்டு படம் ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் அதே ஆண்டில் இதே தயாரிப்பு நிறுவனம் எடுத்த புலி அட்டர் ஃபிளாப் ஆனதால் படம் டிராப் ஆனது 2017 ஆம் ஆண்டு தயாரிப்பு நிறுவனம் மாறியது . நாயகன் ஜீவா மாறி விமல் வந்தார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் லவ் மேரேஜை வெறுப்பவர் , அரேஞ்சுடு மேரேஜ் தான் நல்லது என்ற கொள்கை உடையவர் , ஆனால் அவர் குடும்பம் அவருக்கு நேர் மாறானது . குடும்பத்தில் அம்மா, அப்பா உள்பட அனைவரும் லவ் மேரேஜ் தான். அதனால் நாயகனுக்குல் லவ் மேரேஜ் தான் செய்ய வேண்டும் என ஒற்ரைக்காலில் நிற்கிறார் நாயகனின் அப்பா . ஆனால் நாயகன் அரேஞ்ச்டு மேரேஜ் தான் என பிடிவாதமாக இருக்கிறார்
நாயகி ஒரு போலீஸ் ஆஃபீசரின் மகள் . நாயகன் மேல் ஆசைப்படுகிறார். நாயகனை அடைய அவர் போகும் மொக்கைக்காமெடி திட்டங்கள் எப்படி வெற்றி பெறுகிறது என்பதே மீதிக்கதை
நாயகன் ஆக களவாணி விமல். சி செண்ட்டர் வில்லேஜ் ரசிகர்களின் இன்னொரு ராமராஜன். கச்சிதமாக நடித்திருக்கிறார். அவர் லவ் மேரேஜூக்கு எதிராகப்பேசும் வசனங்கள் அருமை
நாயகி ஆக வரலட்சுமி சரத் குமார். ஆஜானுபாவகமான வரலட்சுமி டயட்டில் இருந்து இளைத்திருக்கிறார். பழைய வனப்பும் ., அழகும் மிஸ்சிங்
முதல் பாதி காமெடி டிராக்கிற்கு ரோபோ சங்கர் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது . நாயகியின் முறை மாப்பிள்ளையாக வரும் யோகிபாபுவின் அலட்டல்கள் ரசிக்க வைத்தாலும் ரோபோ சங்கர் அளவு இவர் காமெடி எடுபடவில்லை
நாயகனின் அப்பாவாக வரும் ஆர் பாண்டியராஜன் பரவாயில்லை . இவருக்கு காமெடி காட்சிகள் பெரிதாக இல்லை ஷகீலா ஓவர் மேக்கப்பில் காமெடி பண்ணுகிறார்
எஸ்ன் செல்வக்குமார் ஒளிப்பதிவில் கிராமத்துக்காட்சிகள் கண்ணுக்குக்குளூமை . 132 நிமிடங்கள் ஓடும்படி எடிட்டர் ட்ரிம் பண்ணி இருக்கிறார். நாடகம் பார்க்கும் உணர்வை பல இடங்களில் உணர முடிகிறது
விஷால் சந்திர சேகரின் இசையில் 3 பாடல்கள் , ஓக்கே ரகம்
சபாஷ் டைரக்டர் ( முத்துக்குமரன் )
1 நாயகனுக்கு தர வேண்டிய கில்மா லேகியம் ஆள் மாறிப்போவதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி டிராக்கும் பல படங்களில் பார்த்தவை என்றாலும் ரசிக்க வைத்தது
2 ரோபோ சங்கரின் காமெடி டிராக் படத்தின் முதல் பாதியை கலகலப்பாக வைத்திருக்க உதவுகிறது
3 படத்தின் பின் பாதியில் வரும் யோகிபாபுவின் மொக்கைக்காமெடி சுமார்தான் என்றாலும் மோசம் இல்லை
செம ஹிட் சாங்க்ஸ்
1 உன் கிட்டே என்னவோ இருக்கு \\
2 கண்ணனே\
3 குட்டி குட்டி செல்லம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 என்னதான் காமெடிப்படம் என்றாலும் போலீஸ் ஆஃபீசராக இருக்கும் நாயகியின் அப்பா அவ்ளோ முட்டாளாகவா இருப்பார் ? ஒரு வரம்பு வேணாமா ? மொமெண்ட்
2 நாயகி நாயகனை அடைய போடும் திட்டங்களில் புதுமை இல்லை , கிரியேட்டிவிட்டி இல்லை ., பழைய படங்களில் பார்த்த காட்சிகள் தான்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - காட்சி ரீதியாக இல்லை . வசனங்களில் 18+ உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி யில் போட்டால் பார்க்கலாம் என்ற அளவில் சுமார் ரகக்காமெடிப்பட லிஸ்ட்டில் சேர்க்கலாம் . ரேட்டிங் 2.25 / 5
கன்னி ராசி | |
---|---|
இயக்கம் | முத்துக்குமரன் |
உற்பத்தி | ஷமீம் இப்ராஹாம் |
நடித்துள்ளார் | விமல் வரலட்சுமி சரத்குமார் |
ஒளிப்பதிவு | எஸ்.செல்வகுமார் |
திருத்தியவர் | ராஜா முகமது |
இசை | விஷால் சந்திரசேகர் |
தயாரிப்பு நிறுவனம் | கிங் மூவி மேக்கர்ஸ் |
வெளிவரும் தேதி |
|
நேரம் இயங்கும் | 133 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |