Showing posts with label கன்னி ராசி (1985) - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி). Show all posts
Showing posts with label கன்னி ராசி (1985) - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி). Show all posts

Saturday, September 19, 2020

கன்னி ராசி (1985) - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி)

 


இந்தியாவின்  சிறந்த    திரைக்கதை  ஆசிரியரும், எம் ஜி ஆர் -ன்  கலை உலக வாரிசும், ஜனரஞ்சக  இயக்குநருமான  கே  பாக்யராஜின் சிஷ்யரான ஆர்  பாண்டியராஜன்  ஹீரோவாக  நடித்து  இயக்கிய  முதல்  படம்  ஆண்பாவம்  என்பது  எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆனா  அவர் முதன்  முதலாக  இயக்கிய  படம்  கன்னிராசிதான்  என்பது  சிலருக்கு  தெரியாமல்  இருக்கலாம். அந்தப்படத்தைப்பத்திப்பார்ப்போம்


ஹீரோ தமிழ்  சினிமா வழக்கப்படி  ஒரு வெட்டாஃபீஸ். பொண்ணுங்களோட   கலாட்டா பண்ணி ஜாலியா சுத்திட்டு  இருக்கார். ஓப்பனிங்  ஷாங் ,  ஹீரோ இண்ட்ரோ  அப்டினு  கதையே இல்லாம ஜாலியா  20 நிமிசம்  போன பின்  ஹீரோவோட அக்கா  ஊருக்கு அனுப்பப்படறார். அங்கே  ஒரு முறைப்பொண்ணு இருக்கு 


 இத்தனை  நாளா பல  பொண்ணுங்களோட  ஜாலியா  சைட் , விளையாட்டுனு இருந்த  ஹீரோ இப்போ  முறைப்பொண்ணை  லவ்வ  ஆரம்பிக்கறார். அக்காவுக்கும்  விசயம் தெரியும்


 இயக்குநர்  விக்ரமன்  படம் மாதிரி  வில்லனே இல்லாத  திரைக்கதையா இருக்கே?னு யோசிக்கும்போது   செவ்வாய்  தோஷம்  வடிவில்  வில்லன்  இண்ட்ரோ 


 நாயகிக்கு அதாவது  முறைப்பொண்ணுக்கு  செவ்வாய் தோஷம்,  நாயகனுக்கு சுத்த  ஜாதக்ம்.  செவ்வாய் தோஷம்  உள்ள  ஜாதகத்தார்  இன்னொரு செவ்வாய் தோஷம்  உள்ள   ஜாதகத்தாரோடுதான்  திருமண  பந்தம்  வெச்சுக்கனும்னு  ஐதீகம், அதுலயும் செவ்வாய் நாலில்  இருந்தா   செவ்வாய் 2 ல் இருப்பவருக்கு  மேட்ச் ஆகும் என உள்  ஜாதகம்  கூட உண்டு 


இந்த  விஷயம்  தெரிஞ்சதும்  ஹீரோவின் அக்காவுக்கு அதிர்ச்சி. அதுக்குப்பிறகும்  இருவரும்  நெருக்கமாப்பழகுவதை  அறிந்து  அக்கா  தம்பியை  வீட்டை விட்டு  வெளீல  போ அப்டினு துரத்திடறார்



 ஆனா  ஹீரோ வீட்டை விட்டுப்போனாலும் ஊரை  விட்டுப்போகலை, அவர்  என்ன செஞ்சார்? க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  என்ன? என்பதை  திரையில் காண்க , யூ ட்யூப்ல கிடைக்குது  


ஹீரோவா பிரபு .பொண்ணுங்களோட  பழகனும், முறைப்பொண்ணு கூட கலாட்டா பண்ணனும். இவ்ளோ  தான் அவருக்கு  இட்ட பணி , கரும்பு  தின்ன  சம்பளம் வேற . ஜாலியா  எஞ்சாய்  பண்ணி நடிச்சிருக்கார்


  ஹீரோயினா ரேவதி . பக்குவப்பட்ட நடிப்பு . ம்பல காட்சிகளில் அவரது விழிகளே  பேசி  விடுகின்றன


அக்காவா சுமித்ரா  குட் ஆக்டிங் . அக்கா கணவரா  கவுண்டமணி . கலக்கல்  மணி   ஆரம்பக்கட்ட  அமர்க்களத்துக்கு  இவர்  கேரண்டி 


iஇயக்குநரான  ஆர்  பாண்டியராஜன்  ஓப்பனிங்  சீன்ல தலைகாட்றார். ஆண் பாவம்  நடிப்புக்கு இதுல வெள்ளோட்டம், முன்னோட்டம் பார்த்துட்டார் போல 


அக்கா  கணவராக  கவுண்டமணி  கலக்கல்  காமெடி 


 ஜனகராஜ்  பாட்டு  வாத்தியாராக  வந்து  ரேவதி மேல்  ஆசைப்படும் கேர்க்டர் . ஜாலியா  பண்ணி இருக்கார் 


 பாடல்கள்  செம  ஹிட்  

சோறுன்னா சட்டி தின்போம் சொன்ன பேச்சைக்கேட்க மாட்டோம்  ராத்திரியில்  தூங்க மாட்டோம், விடியல்காலை  எந்திரிக்க மாட்டோம்


 ஆள  அசத்தும்  மல்லிகா மல்லிகா 


சுக ராகமே  என் சுக போகமே 


 நச்  வசனங்கள்


1  1  எல்லாரும்  குழந்தை  பிறக்க  எந்த  திசைல  சுத்திட்டு இருக்காங்க? நீங்க எதிர் திசைல சுத்திட்டு இருக்கீங்க?> 


 எனக்கு  குழந்தை  இனி வேணாம்னு சுத்தறேன், ஏன்னா ஆல்ரெடி ஏகப்பட்ட குழந்தைகள்  இருக்கு 


2  உலகத்துல  தாயை  மட்டும் தான் விலைக்கு வாங்க  முடியாது ந்


 அப்படியா>  ஏப்பா  அந்த  தாய் வார  இதழ் ஒண்ணு குடு 


3   சாமிக்கு பூ போட்டா  கிழவன்  மாமிக்குப்பூ போட்டா  குமரன் 


4   வேலை  வேணும்னா சைக்கிளை  மிதிக்கனும்


 வேலைக்காக சாணியையே  மிதிப்பேன்..


5  உங்களுக்குப்போய்  என் அக்காவைக்கட்டிக்கொடுத்தமேனு வருத்தமா  இருக்கு 


  வேற  வக்கில்ல, கட்டிக்கொடுத்தீங்க 


6   கூறு கெட்ட  மாடு  ஆறு கட்டு புல் திங்குமாம் 


7   அடேய் , உங்க  அக்காவுக்கு சூப் வைக்கத்தெரியும்கற விஷயமே  இப்போ தான் எனக்கே தெரியும் 


8   மாலை  மாத்திக்கற  மாதிரி  கனா  கண்டா  குடும்பத்துக்கு ஆகாதுனு ஐதீகம் 


9  யார்றா  இவன்? ஏலக்காயைக்கட்டிக்குடுன்னா  எலிப்புழக்கையைக்கட்டிக்கொடுக்கறான்

10   பால் பாத்திரம் பத்து  அடி  தூரத்துல  இருக்கும்போதே  பூனை  பம்மும்,  பால் பாத்திரத்துக்கு உள்ளேயே  பூனையை  விட்டா..?


11   துபாய்ல   பொண்ணை  நிமிர்ந்து   பார்த்தா  கையை  வெட்டி  கைல  கொடுத்துடுவாங்க 


( கையைத்தான்  வெட்டிடராங்களே?  அப்ரம்  எப்படி  கைல  அதை  கொடுப்பாங்க?  )


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   இடைவேளை  டைமில்  அக்கா  தம்பியிடம்  கோபிக்கிறாள் , வீட்டை  விட்டு வெளில  போ என்கிறாள் , அப்பவோ  அதுக்குப்பின்னோ  எதுவுமே  பேசாத  ஹீரோ க்ளைமாக்ஸ்ல  பக்கம்  பக்கமா  பேசறாரே?


2   மனப்பொருத்தம்  இருந்தா  போதும், மத்த  பொருத்தம் எல்லாம்  தேவையே இல்லை  என்பது  மாதிரி  வசனம்  எதிர் பார்த்தேன், ஆனா  காணோம். செவ்வாய் தோஷம்  ஜாதகம்  என்பதற்கு அறிவியல் ரீதியாகவும்  காரணம்  சொல்வாங்க,  ரத்த  க்ரூப்  வெச்சு ந் அது சம்பந்தமான  டயலாக்சும் இல்லை 


3   க்ளைமாக்ஸ்  ஏற்புடையது  அல்ல .  ஜாதகத்தை  பொய்யாக்கறேன்னு  நாயகி எடுக்கும்  முடிவு ரசிக்ர்களை  கவர்ந்திருக்காதுனு  நினைக்கறேன்


 சி.பி ஃபைனல்  கமெண்ட்  -  ரிலீஸ்  டைமில்  கமர்ஷியலா  இது சுமாரா தான் போச்சாம், ஆனாலும்  படம்  ஜாலியாகத்தான்  போகுது . ஆண் பாவம்  லெவல் இல்லைன்னாலும்  பார்க்கலாம் , இளையராஜா  இசைக்காகவும் , கவுண்டமணி  காமெடிக்காகவும்   ரேட்டின்ஃப்  2.75  . 5