Showing posts with label கத்தி - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label கத்தி - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, October 22, 2014

கத்தி - சினிமா விமர்சனம்

   

 கொல்கத்தா  ஜெயில்ல  ஒரு கைதி தப்பி ஓடறாரு. அவரைப்பிடிக்க 1000 வழி  இருந்தும் போலீஸ் அத எல்லாம் ட்ரை பண்ணாம ஆல்ரெடி அதே  ஜெயில்ல  இருந்து  18 தடவை தப்பி  ஓடிய ஹீரோ கிட்டே அவன் எப்டி தப்பிச்சான்னு கேனம் மாதிரி கேட்கறாங்க. கைதியா இருக்கும்  ஹீரோ இதோ இப்டித்தான்னு தப்பி டெமோ காட்றேன்னு  போலீஸ்க்கே  தண்ணி காட்டி த்தப்பிக்கறாரு.

 

தப்பிச்ச  ஹீரோ  ஆன் த வே ல  ஒரு கேங் ஒரு ஆளை  ஷூட் பண்ணப்படறதைப்பார்க்கறார். அவரைக்காப்பாத்த  ஹாஸ்பிடல்  கொண்டு போறார்.அந்த ஆள் ஹீரோ  முகச்சாயல்லயே  இருக்கார். நல்ல வேளை அவர் ஹீரோவுக்கு அண்ணனோ , தம்பியோ இல்லை. உடன்  பிறப்புன்னாலே       பிரச்னைதானேனு அவாய்ட் பண்ணிட்டாங்க போல.

 

இதான்  சாக்குன்னு  ஹீரோ ஆள் மாறாட்டம் பண்ணிடறார். இதுதான்  எம் ஜி ஆர் காலத்துல  இருந்தே பார்த்தாச்சேன்னு  யாரும் அங்கலாயக்கக்கூடாது. அண்ணனோட எய்மே  அடுத்த  எம் ஜி ஆரா அரசியல்லயும் , அடுத்த  ரஜினியா  சினிமாவுலயும் வரனும்னுதானே? 

 

இப்போ  ஃபிளாஸ்பேக்.கூடங்குளம் இடிந்த கரை  உதய குமார் கேரக்டரை கற்பனை பண்ணிக்குங்க. அந்த  கேரக்டர் தான்  இன்னொரு  ஹீரோ . அணு  மின்  நிலையம் நு காட்டுனா  சென்சார் ல விட மாட்டாங்க .அதனால கார்ப்பரேட் கம்பெனிங்க அந்த  கிராமத்துல   ஆக்ரமிக்கறாங்க . அதுக்கு  ஹீரோ   தடையா  இருக்காரு. (இவர் படத்துக்கே  ஒவ்வொரு டைமும் ஏதோ    ஒரு  தடை வந்துட்டே இருக்கு. இதுல இவரு அடுத்தவங்களுக்கு  தடை விதிக்கறாராம்)

 

ஆள் மாறாட்டம்  செஞ்ச  ஹீரோ எப்படி மக்களைக்காப்பாத்தறார் என்பதே  மிச்ச மீதிக்கதை .( படம் பார்க்கற மக்களை யார் காப்பாத்துவாங்களோ?)

 

ஹீரோவா நாளைய சூப்பர் ஸ்டார்  விஜய் . சம்ந்தாவுடனான  ரொமான்ஸ் காட்சிகளில் இவரது  க்யூட்டான  முக பாவனைகளுக்காக  ரசிகைகள் கை தட்றாங்க . செல்பி புள்ள பாடல்  காட்சியில் இவர்  போடும் டான்ஸ்,ஃபாரீன் கேர்ள்சுடன் போடும்  ஃபைட் காட்சி , க்ளைமாக்ஸ்  ஃபைட் எல்லாம் அசத்தல்கள் . எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்த  2 வது  விஜய் -ன்  கெட்டப் சேஞ்ச் கலை வித்தகர் கமல் க்கே ஹார்ட் அட்டாக் வந் து  டும்.   

 

 

 முருகதாஸ் படங்கள் லயே  ஹீரோயினுக்கு அதிக வேலை இல்லாத படங்கள் 2 தான் . 1  ரமணா . 2 கத்தி ( அதுக்காக  ரமணா  லெவலா?னு கேட்கக்கூடாது)



சமந்தா  கன்னத்தை  புஷ்டி ஆக்கறேன்னு பேர்வழின்னு ஏதோ ஆபரேசன் பண்ணி  இருக்கு போல . நல்லாவே இல்லை.எல்லார்க்கும் 1 சொல்றேன். இயற்கையா  என்ன நம்ம  கிட்டே  இருக்கோ அதான் அழகு. அஞ்சான் ரேஞ்சுக்கு  ஹீரோயின்  இதுலயும்  ஏதாவது  கிளாமர்  புரட்சி பண்ணுவார்னு பார்த்த , எதிர் பார்த்த   ரசிகர்களுக்கு ஏமாற்றம். படத்துல  அவர் நடிப்பையு

 ம் காட்டலை . கிளாமரும் காட்டலை. டான்ஸ் காட்சிகளில்  விஜய்க்கு  ஈடு  கொடுக்க  முடியாம  திணறுகிறார்.


வில்லன் அய்யோ பாவம். வேலை  இல்லா பட்டதாரி  யில் வந்த வில்லனை  விட படு  மொக்கை . வில்லனை  கெத்தா காட்டுனாத்தான்  ஹீரோ அவனை  வீழ்த்தும்போது செமயா  இருக்கும். வில்லனே  மொக்கைன்னா?

லிப் லாக் லெஜண்ட்  , மவுத் ஆர்கன் ஸ்பெஷலிஸ்ட்  அனிரூத் தான்  இசை . ஓப்பனிங்   ஷாட்  பிஜி எம் , செல் பி புள்ளே சாங் கில் கலக்கறார்.  பல இடங்களில் அப்ளாஸ்


முன் பாதியில்   ரொம்பவே  சுமார்  தான்.  பின் பாதியில்  ரமணா  பாணியில்  திரைக்கதை போவதால்  நிமிர்ந்து உக்கார்றோம்.

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

 

 

1 ஜெயிலில்  ஹீரோ  ப்ளூ  பிரிண்ட் வாங்கி  தப்பி  ஓடவேண்டிய    விவரிக்கும்போது  வரும்  கிராஃபிகஸ் காட்சி கலக்கல் 

 

2  ஆள் மாறாட்டத்தால்  யாருக்கோ  போக     வேண்டிய விருதை  ஹீரோ வாங்கும்போது  வரும்  குற்ற உணர்வில் விஜய் நடக்கும் காட்சி கலக்கல்    

 

3 பெட்ரோமாக்ஸ்  லைட்   பைப்  சீன்  எடி ட்டிங். 2  ஃபைட் காட்சிகள் 


இயக்குநரிடம் சில கேள்விகள்

 

 

1  ஹீரோவை  ஓப்பனிங்  சீன்ல  4 பேர் துப்பாக்கியால  சுடும்போது  பட பட நு ஜல்லடை மாதிரி   சலிச்சிருக்கலாமே? ஏன்  ஒரே  ஒரு  கு ண்டு

மட்டும் பாயுது?

2    வில்லனுக்கு  ஷேவ்   பண்ண வந்த ஆள்  வில்லனை  ஏமாத்தி     பிடறில   மை  வைக்கறாரு ஓக்கே . ஆனா அவர்  ஷேவிங்கே  பண்ணாம   போறாரே? லீவ்  போட்டுட்டாரா? அது  பத்தி   வில்லன்  கண்டுக்கவே  இல்லை


3   ஜெயில்ல   ஒரு    கைதி  தப்பிப்போனா   போலீஸ் ஆஃபீசருங்க  இப்டித்தான்  லூசுங்க   மாதிரி   இன்னொரு  கைதியை  டெமோ காட்டச்சொல்வாங்களா?  நியாயமா   போலீஸ்  தான்   படத்துக்கு த்   தடை கேட்கனும்

அ .
4   இந்த படத்துக்கு  2  ரோலே  தேவை  இல்லை . சும்மா   பர பரப்புக்காக   திரைக்கதையில்  வலுவந்தமா  புகுத்தி   இருக்காங்க



5   முன்  பாதியில்  வரும் ஆள் மாறாட்டக்காட்சிகளுக்குப்பதிலா   ஃபாரீன்  கம்பெனிகள் எப்படி  கிராம நிலங்களை ஆக்ரம்மிக்கறாங்கனு  விலா வாரியா காட்டி  இருக்கலாம்

மனம் கவர்ந்த வசனங்கள்



1  ஆப்பம் திங்கறது ஒருத்தன்.

ஏப்பம் விடறது ஒருத்தனா? - சதீஷ் # கத்தி



2  சமந்தா = நான் போய் டிரஸ் பண்ணி ட்டு குளிச்ட்டு வந்துடறேன்.

விஜய் = ஆ! உல்டாவா இருக்கு?



3  விஜய் = ஒரே ஒரு அறை பளார்னு விட்டதுக்கே செட் ஆகிட்டாளே?



4  விஜய் = நான் ஒண்ணும் உன்னை மாதிரி ஏமாத்தறவன் இல்ல ( இதுல ஏதாவது உள் குத்து இருக்கோ?)


  5சார்.உங்களுக்கு அவார்டு தர்றாங்களாம்.

விஜய் = சாரி

கூடவே 4 லட்சம் பணமும் தர்றாங்களாம்

விஜய்=இதோ வந்துட்டேன்

6 - என் உயிரே போனாலும் விவசாயத்தை யாரும் விட்றாதீங்க

இடைவேளை பஞ்ச்
வில்லன் =,உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போய்டு
#கத்தி
இது ஹீரோவுக்கா? ஆடியன்சுக்கா? ;-))

7  ஸமந்தா = ஐ லவ் யூ ங்க
விஜய் = தாங்க்ஸ்ங்க
சமந்தா= நோ மென்சன் ங்க ;-)

8 விஜய் = நான் பொய் சொன்னேன்.ஆனா என் அன்பு பொய் இல்லை



9 ஜெயில்ல இருந்து ஒரு கைதி தப்பிச்ட்டான்.எப்டி எஸ் ஆனான்னு கண்டுபிடிக்கனும்.
கைதி விஜய்-
சரி.நான்  ரூட் காட்றேன்.பாலோ மீ

10  கம்யூனிசம்னா என்ன அண்ணா?

 உனக்கு பசி தீர்ந்ததுக்கு அப்பறம் நீ சாப்படற அந்த ஒரு இட்லி.. வேற ஒருத்தனுது!

படம் பார்க்கும்போது போட்ட Tweets  

1  துப்பாக்கி மாதிரி மாஸ் படம் தந்த ஏ ஆர் முருகதாஸ் சாதாரண ஆள் மாறாட்டக்கதையுடன் களம் இறங்கி இருப்பது  ஏமாற்றம் # கத்தி




பாரீன் கேர்ள்ஸ்.இருவருடன் விஜய் போடும் பைட் சீன் செம .அப்ளாஸ்


3  ஈரோடு அன்னபூரணி யில் அதிகாலை 3,மணி ஷோ என புக் பண்ணி இன்னமும் படம் போடாததால் ரசிகர்கள் ரகளை # கத்தி


 4 தியேட்டர் எதிரே டீக்கடைக்கு செம சேல்ஸ்.பேசாம ஒரு டீக்கடை வெச்சா பொழைச்சுக்கலாம்.போல

5  ரசிகர் = சார்.கதையை அவுட் பண்ணிடாதீங்க.

இருந்தா அவுட் பண்ண மாட்டேன்


6  எல்லார் கைலயும் டிக்கெட் ஆல்ரெடி இருக்கு.எதுக்கு அடிச்சுக்கறாங்க உள்ளே போக?# தமிழேண்டா

7  1000 பேர் ல எத்தனை பேர் குளிச்சுட்டு வந்திருக்காங்கனு தெரியலை.கோயிலுக்குப்போய்ட்டு வந்து தான் குளிக்கக்கூடாது.தியேட்டர் ்போய்ட்டு வந்து?

8  சார்.நீங்க 3 ரோல் ல வர்றதை ஏன் முதல்லயே சொல்லலை?

2 கெட்டப் னாலே நம்ப மாட்டேங்கறாங்க

9  சீட் இல்லைனு ஒருத்தர் பக் வீட் ல போய் கதவைத்தட்டி ஸ்டூல் வாங்கிட்டு வந்துட்டார்.அடேங்கப்பா

10  ஓப்பனிங் சீன் மாஸ்.விஜய் ரன்னிங் ;-))


11  ஹீரோயினுக்கு ஹீரோ பேனா கடன் தர்றாரு.அடடே

12  ஏர்போர்ட்டில் விஜய் ஆடும் ஓப்பனிங் சாங் செம கலக்கல் டான்ஸ் #,அனிரூத் ராக்கிங் இசை


13  எம் ஜி ஆர் மாதிரி ஏழை மக்களுக்காகப்பாடுபடும் கேரக்டரில் ந்டித்தால் அரசியலில் எம் ஜி ஆர் ஆகி விடலாம் என்ற கனவு யாருக்கும் வரக்கூடாது

14 


கூடங்குளம்  இடிந்த கரை உதய்குமார்  கேரக்டர் தான் ஜீவானந்தம் கேரக்டருக்கான இன்ஸ்பிரேசன்

15 ஏழைகளுக்காகப்போராடும் விஜய் க்காக ஜெயிலில் இருக்கும்,அவர் விடுதலைக்காக 7 பேர் தற்கொலை # ஜெ வுக்கு ஆல்ரெடி போட்டுக்காட்டிட்டாஙளோ?

16 ஐ ஆம் வெய்ட்டிங் எனும் துப்பாக்கி ஹிட் பஞ்ச்சை கத்தியிலும் ஹீரோ சொல்வது இயக்குநரின் கற்பனை வறட்சி

17 துப்பாக்கி யை விட டபுள் மடங்கு கத்தி சூப்பரா இருக்குன்னு சிலர் சொல்றாங்க.எனக்கு மட்டும் வேற படம் காட்டி ஏமாத்திட்டாங்ளா?

18 அரங்கம் அதிரும் கரகோசத்துடன் அட்டகாசமான.செல்பி புள்ள பாட்டு.டான்ஸ் அதிர் வேட்டு # விஜய் ராக்ஸ்

19  வில்லன் - இங்கே எல்லா மனுசனுக்கும் ஒரு விலை இருக்கு # டிக்கெட் விலை  200 ரூபா.50 ரூபாய்க்காவது படத்தை காட்டுங்க

20  ஹீரோ ஒரு ரூம்ல 50 பேரை அடிச்சு ஒவ்வொருவர் நெத்திலயும் ஒரு ரூபாக்காசு வைக்கறாரு.அத்தனை சில்லறை ஏது?எஸ்டிடி பூத் ஆளோ?

21  முன் பாதியில் சறுக்கிய இயக்குநர் பின் பாதியில் அட்டென்டென்ஸ் போடறார்.ட்ரய்லரில் வந்த பெட்ரோமாக்ஸ் சீன் அப்ளாஸ் அள்ளுது

22 வாட் த ஹெல் யூ ஆர் டாக்கிங்.வி ஆர் எஜுகேட்டட்.மைன்ட் இட் - ஏ ஆர் முருகதாஸ் ஒரு சீனில் அப்ளாஸ் அள்ளறார் நடிகரா

23   விஜய் க்கும் வித்யாசம் 0.001% கூட இல்லை.ஆடியன்சுக்கும் சிரமம் இல்லை.மேக்கப்மேனுக்கும் சிரமம் இல்லை.குமுதா ஹேப்பி அண்ணாச்சி

24 விஜய் சிவப்பு சட்டை யுடன் கம்யூனிச வசனம் பேசறாரு.நல்லாதான் இருக்கு.அம்மாக்கு கோபம் வராம இருந்தா சரி

25 விஜய்காந்த் ஒரு சீன் ல வர்றார்.சாரி.அது விஜய் தான்.புள்ளி விபர வசனம் அள்ளி விட்டதால  ஏமாந்துட்டேன்

26 எல்லோரும் எதிர்பார்த்தது போல் விஜய் டூயல் ரோலில் வில்லன் எல்லாம் இல்லை.10 நிமிசம் தான்.ஆள் மாறாட்டக்கதை.

27 க்ளைமாக்ஸ்.கலக்கல் வசனங்கள் = "குருவி" தலையில் பனங்காய்


சி பி கமெண்ட்

கத்தி - முன் பாதி சராசரி.பின் பாதி முருகதாஸ் டச் .கதைக்கரு அருமை.விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 2.75 / 5

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 42


குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =    /2.75/  5 


( விகடன் மார்க்   கதைக்கருவுக்குத்தான்.   திரைக்கதையில்  ஜில்லா வுக்குக்கீழே தான். துப்பாக்கி க்கு கிட்டே  கூட  நிக்க  முடியாது )

லைக்கா  நிறுவன  2 நாள் வருமானம்  ஊ ஊ  


பூஜை - சினிமா விமர்சனம்  - 
http://www.adrasaka.com/2014/10/blog-post_32.html