Showing posts with label கதை திரைக்கதை வசனம் இயக்கம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label கதை திரைக்கதை வசனம் இயக்கம் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, August 14, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - சினிமா விமர்சனம்

ரா  பார்த்திபன் -ன் அக்மார்க் காமெடி ட்ரீட்மெண்ட்டில்  வந்திருக்கும்  வித்தியாசமான சப்ஜெக்ட் ஆன இந்தப்படம்  துவண்டு கிடந்த  அவர் கொரியோகிராஃபில்  நிச்சயம்  ஒரு மாற்றத்தை  உருவாக்கி ஏறுமுகம் ஆக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப்பட விமர்சனத்துக்குள்ளே போவோம். 

சினிமா இயக்குநர் ஆகனும்கற ஆசைல ஹீரோ .அவருக்குக்கீழே ஒரு டீம். ஹீரோ வித்தியாசமான படம் இயக்கும் ஆசை கொண்ட புதுமுக இயக்குநர் ( புதிய பாதை பார்த்திபன் ஆகக்கொள்க ) . அவர் கூட 5 அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்.அவருக்கு மேரேஜ் ஆகிடுச்சு . லவ்மேரேஜ் ( சீதா  என கொள்க ) 


ஹீரோ எப்பவும்  சினிமா சிந்தனைலயே இருக்காரு. என்ன மாதிரி கதை சொல்லலாம். எப்படி  புரொடியூசரை இம்ப்ரஸ் பண்ணலாம்? இப்டியே நினைச்சுட்டு இருக்காரு .இவரும்  இவரோட  டீமும் செய்யும் வார்த்தை ஜாலக்காமெடி , கதை சொல்லும் உத்திகள் இதுதான்  முன் பாதிக்காமெடி. 

பின் பாதில  தான்  கதை  . ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும்  பிரச்சனை . மனக்கசப்பு . தன்னை கவனிக்கவே  இல்லை . தனக்கு நேரமே ஒதுக்குவது இல்லைனு  ஒயிஃப்  ஃபீல் பண்றாப்ல . இந்த இக்கட்டான  சூழ்நிலைல  ஹீரோ கம் டைரக்டரை  வேற ஒரு  பொண்ணு  ஒன் சைடா லவ்வுது . ( சுதா ரகுநாதன் எனக்கொள்க ) இருவருக்கும் எப்படி வாழ்க்கை அமையுது ? பட சான்ஸ் வந்ததா? இல்லையா? என்பதுதான் மிச்ச மீதிக்கதை . 

படத்தின்  ஹீரோ திரைக்கதை தான் . அநாயசமாவார்த்தை ஜாலத்தில்  விளையாடி  இருக்கார் மனுஷன் . படம் போட்டு  முதல் 40  நிமிடங்கள் தியேட்டரில் ஆர்பாட்டமான கை தட்டல் . அப்ளாஸ் அள்ளுது . இதில்  பார்த்திபன ஹீரோவா பண்ணி  இருந்தால் ஆக்டிங் டாமினேட் ஆகி திரைக்கதை அமுங்கி  விடும் அபாயம் இருப்பதால் சாமார்த்தியமாக புதுமுகத்தை போட்டுட்டார் . சபாஷ்.


எல்லோர் நடிப்பும்  பக்கா . நாயகியாய் வருபவர்  நயன்  தாரா சாயலில் இருக்கார். சிம்பு வின் கண்களில்  இருந்து  தப்பித்து  மிச்சம்  மீதி  இருந்தால்   முன்னேறுவார். ஒல்லியான  தேகம் . அபாரமான  முக பாவனைகள் . கிளாமர் காட்சிகளில்  உக்காரும்மா  என்றால் பத்தமடை  போய்டலாமா? என கேட்கும் அட்வான்ஸ்டு  டைப் . ஒரு  குளியல் காட்சியில் இவர் காட்டும்  முக பாவனைகள் அபாரம் ( இந்தியாவிலேயே  குளிக்கற சீன் ல  ஹீரோயின்  முகத்தைப்பார்த்து  விமர்சனம் எழுதுன  முதல் விமர்சகர் நான் தான் ) 


இப்போ  ரிலீஸ் ஆகும்  பெரிய பட்ஜெட் படங்களை , ஃபாரீன் டிவிடி பார்த்து  சுட்டு படம் எடுக்கும்  படங்களை வாரு வாரு என வாரி  இருக்கார்.


விஷால் , விஜய் சேதிபதி  சும்மா கெஸ்ட் ரோல். படத்தில் வரும் ஒரே ஒரு காட்சியாக ஓப்பனிங்கில் வர்றாங்க .


 படத்தில்  வரும்  ஹீரோ - ஹீரோயின் வாழ்க்கையை படமாக ஆக்கும்போது வரும் நடிக  நடிகையாக ஆர்யா - அமலா பால் வர்றாங்க . ஆர்யா டல் அடிச்ச முகக்த்தோடும்  , அமலாபால் கல்யாணக்களை இல்லாமல் களைப்பான  முகத்தோடும்  இருக்காங்க ( ஓ சி ல நடிச்சுக்கொடுக்க இது  போதும்னு  நினைச்சிருப்பாங்களோ? )

ஷாக்  சர்ப்பரைசா    ரா பார்த்திபனே அப்பப்ப வந்து  கமெண்ட் அடிக்கறார். இடைவேளை போடும்போதும்  , அதுக்குப்பின் வரும்  ஓப்பனிங்  சீனும், க்ளைமாக்ஸ் டச்சும் அக்மார்க் ரா பார்த்திபன் முத்திரை .




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1.  முன்  பாதியில்   காட்சிக்கு காட்சி   காமெடி களை கட்டுது . வசனத்தில்  புகுந்து  விளையாடிய  இயக்குநர் . கிரேசி மோகன் பாதிப்பும் , அடிக்கடி ட்விட்டர் வந்து  போன பலனும்  தெரிகிறது . வெரிகுட்.ரா ;பார்த்திபன்  ட்விட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பதால் பலரின் அப்டேட்ஸையும் படத்தில் அப்டேட்டி இருக்கார்  அவர் ட்ரீட்மெண்ட்டில் .


2  அசிஸ்டெண்ட் டைரக்ட்ராக வரும்  அந்த லேடி ஒல்லியாக  இருந்தாலும்   நல்லா பண்ணி  இருக்கு .நாயகியாக வரும் நாயகி  நல்ல  தேர்வு .ஹீரோ மேல் ஆசைப்படும்  ஃபிகர்  மொக்கை  ஃபிகர்  ஆனாலும்   ரொம்ப  மோசம்  இல்லை .


3 ரா பா  வின்  சொந்த வாழ்க்கைக்கதை என்பதால்  ஒரு ஆர்வம் நம்மில் எழுவது படத்துக்குப்பிளஸ் பாயிண்ட் . ஒரு வேளை  சீதாவுக்குக்காட்டும் பச்சைக்கொடி அல்லது சமாதானக்கொடியோ என்னவோ?


4   தம்பி  ராமய்யா வின்  டயலாக்  டெலிவரி , புலம்பல் நடிப்பு படத்துக்குப்பிளஸ்.


5  க்ளைமாக்ஸ் காட்சியில்  அமைந்த அந்த சஸ்பென்ஸ் காட்சி பார்த்திபன் இப்படித்தான்  புதுமையாக செய்வார் என்ற எதிர்பார்பு  இருந்ததால்  பிரமாதம் என்று சொல்ல  முடியாவிட்டாலும்  ஓக்கே , புதுமை என  சொல்ல  முடிகிறது .


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.படத்தில்  இடைவேளைக்குப்பின் வரும்  கொலை /தற்கொலை  சீன்  நல்ல  ட்விஸ்ட் என்றாலும்  அந்த சீன் சம்பந்தப்பட்ட காட்சிகள் , விளக்கங்கள்  ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கு மட்டுமே  புரியும் . 


2 முன் பாதி  காமெடி , பின் பாதி  க்ரைம்  த்ரில்லர் என  ரூட்  போட்டு  பின் திடீர் என  டிராக் மாறி  திரைக்கதையை மாற்றியது  போல்  தோணுது .


3  முன் பாதியில் வரும்  ஹீரோ -ஹீரோயின் சம்பந்தப்பட்ட  ஊடல் , பிணக்குகள் எல்லாம்  பின் பாதியில்  படமாக ஆர்யா - அமலா பால் சம்பந்தப்பட்ட காட்சிகளாக வருவது சலிப்பு . 


4  குறும்பட டைரக்டர்கள் கொரில்லாக்கள் என்ற டயலாக் தேவை  இல்லாதது . 


5 அதி புத்திசாலித்தனமாக காட்சிகள்  இருக்கனும் , மீடியாக்கள் பாராட்டனும் என்ற உத்வேகம்  இயக்குநரிடம் தெரிகிறது . அந்த ஆர்வக்கோளாறில் காட்சிகள்  ரொம்ப  உயர்  தரமாக    சாதா  ஜனங்களுக்கு  அவ்வளவு  சீக்கிரம்  புரியாத தன்மையில் அமைந்தது .   



மனம் கவர்ந்த வசனங்கள்



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  

1 மாமூல் மசாலா கமர்ஷியல் பட விரும்பிகள் அஞ்சான் பார்க்கலாம். வித்தியாசமான ட்ரீட்மெண்ட் விரும்புவர்கள் க தி வ இ பார்க்கலாம்

2 எதையும் லைட்டா எடுத்துக்கும் ஏ சென்ட்டர் ஆடியன்சுக்கான காமெடி படம்  ரா பார்த்திபன் ன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் # இடைவேளை

3 இதுவரைக்கும் எதுவும் புடுங்கலை.இதுக்கு மேலதான் புடுங்கனும்.
வாட்
கெட்டுப்போன என் பல்லைச்சொன்னேன் # க தி வ இ



4 இறுமாப்பு னு டயலாக் எழுதிக்கொடுத்தா இரு மாராப்பு னு சொல்றான்.அந்தப்பொண்ணும் சிரிக்குது.என்னைத்தானே எல்லாரும் தப்பா நினைப்பாங்க? # க தி வ இ


5 இத்தனை நாளா கேனத்தனமா கொய்யாப்பழம்னு சொல்லிட்டிருந்தோம்.ஆனா அது மரத்தில் இருந்து கொய்த பழம் தான் # க தி வ இ


 6 ஸார்.நடிக்க சான்ஸ் கேட்டு நிறைய பேரு  வந்திருக்காங்க.

ஓ.ஆம்பளைங்களை  எல்லாம் டைரக்டர் கிட்டே அனுப்பு.பொண்ணுங்கன்னா என் கிட்டே # கதிவ இ

7 ஸார்.நடிக்க சான்ஸ் கேட்டு நிறைய பேரு  வந்திருக்காங்க.


ஓ.ஆம்பளைங்களை  எல்லாம் டைரக்டர் கிட்டே அனுப்பு.பொண்ணுங்கன்னா என் கிட்டே # கதிவ இ

8 உன்னை லஞ்ச் பன்றேன்.

பண்ணுங்க.சாப்டுவோம்.

யோவ்.அதில்லை.மீடியாவைக்கூப்ட்டு பண்ணுவமே

அது லாஞ்ச் # க தி வ இ


9 இது என்ன?

சிடி

 ஓ.நடுவுல ஓட்டை இருந்தாங்காட்டி வடை னு நினைச்ட்டேன் # க தி வ இ

10 எதுக்கு வடையைக்கீழே தள்ளி விட்டே?

நீ தானே உளுந்த வடை கேட்டே? # கீழே விழுந்த வடை # க தி வ இ


11 செருப்படி செருப்படி னு சொல்றாங்க்ளே.அது செருப்பைக்கழட்டி அடிப்பது இல்லை.சொல்லால் அடிப்பது # கதிவ இ


12 சீதா வுக்கும் ,பார்த்திபனுக்கும் எப்டி மனஸ்தாபம் ஏற்பட்டுச்சு? இதான் படத்தோட கதை னு தோணுது # க தி வ இ

13 டியர்.பாத்ரூம் காலி ஆகல.ஆள் இருக்கு.எப்டி குளிச்சே?
குளிச்சுக்காட்டனுமா? # க தி வ இ

14 டியர்.என் படம் ஹிட் ஆன பின் தான் உன்னை மேரேஜ் பண்ணிக்குவேன்
சரி.அதுவரை நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கறேன்.எப்டி டீல் ? # க தி வ இ


15 டைரக்டர் சார்.உங்க செல் போன் லயே இவ்ளவ் மெஸேஜ் இருக்கும்போது படத்துல ஏன் இல்லை? # க தி வ இ

16 டியர்.உன் கிட்டே பேசனும்.பைக் ல போலாமா?


நோ.ஒருத்தர் முதுகுக்குப்பின் பேசறது எனக்குப்பிடிக்காது # க் தி வ இ

17 ரா பார்த்திபன் ன் பிரமாதமான காமெடி வசனங்கள் தியேட்டரில்  அப்ளாஸ்  # க தி வ இ

18  ஏன்டி.அந்தாளைப்பார்த்தா ஏன் கண்ணாலயே காரி துப்பறே? # கதை திரைக்கதை வசனம்

19 இப்பவெல்லாம் சீரியசான படத்தைக்கூட காமெடி யாத்தான் எடுக்கனும் போல # ரா பார்த்திபன்

திருட்டுக்கதை ,டாஸ்மாக் இதானே தமிழ் சினிமா ? # ரா பார்த்திபன்

20 மூளை இல்லாத 5 பேரை தவறுதலா பிரம்மன் படைச்ட்டாரு.அவங்களை கண்டு பிடிக்கனும்

ஒரு வேளை  சினிமா அஸிஸ்டென்ட் டைரக்டரா இருப்பாங்க்ளோ? # ரா பா





சி பி கமெண்ட் -
கதை திரைக்கதை வசனம் இயக்கம் = ரா பார்த்திபன்் காமெடி யில் முன் பாதி ,இறுக்கமான  திரைக்கதை முடிச்சில் பின் பாதி.விகடன் =43 ,ரேட்டிங் =2.75 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 43





குமுதம் ரேட்டிங்க் =நன்று


 ரேட்டிங் =    2.75 /  5
  
கதை திரைக்கதை வசனம் இயக்கம்


ஆர்யா, அமலாபால், விஜய் சேதுபதி, விஷால் ஆகியோர் கவுரவ வேடத்திலும், புதுமுகங்கள் முக்கிய வேடத்தில் நடித்து ஆர்.பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்.


இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 1ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைக்கு ‘ஜிகர்தண்டா’, ‘சரபம்’ மற்றும் ‘சண்டியர்’ போன்ற படங்களும் ரிலீஸுக்கு வருவது உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி தனது படத்தை ஆகஸ்ட் 29 விநாயகர் சதுர்த்திக்கு ஒத்தி வைத்தார் பார்த்திபன். இந்நிலையில் ஆகஸ்ட் 29ல் ‘இரும்புகுதிரை’, ‘சலீம்’, ‘மெட்ராஸ்’ ஆகிய மூன்று படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


இதனால், ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக இருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி அஞ்சான் படத்திற்கு போட்டியாக களமிறக்கவுள்ளார் பார்த்திபன். இதேநாளில் தான் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படமும், முத்துராமலிங்கன் இயக்கத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்த ‘சிநேகாவின் காதலர்கள்’ படமும் ரிலீஸாக உள்ளன. சூர்யா படத்திற்கு போட்டியாக தன் படத்தை களமிறக்குவது குறித்து பார்த்திபன் அண்மையில் நடந்த சிகரம் தொடு இசை வெளியீட்டு விழாவில் விளக்கமளித்துள்ளார்.


கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் வெளியான அன்றுதான் எனது ‘புதிய பாதை’ படமும் வெளியானது. அன்றைய விளம்பர போஸ்டர்களில் ‘எல்லாரும் அபூர்வ சகோதரர்கள் படம் பார்க்கப் போங்க… டிக்கெட் கிடைக்காதவங்க என் புதிய பாதை படத்துக்கு வாங்க’ என்று போட்டிருந்தோம். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதையேதான் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் சொல்கிறேன். ‘எல்லோரும் சூர்யாவின் அஞ்சான் படத்திற்கு போங்க. டிக்கெட் கிடைக்காதவங்க என் படத்துக்கு வாங்க” என்கிறார் பார்த்திபன். இதையேதான் அன்றைய விளம்பரங்களில் போடப் போகிறாராம்..!


பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாத படம் என்று பார்த்திபன் அறிவித்த நாள் முதல் இந்தப் படத்தின் மீது பலருக்கு ஆவல்.
தமிழ் சினிமாவில் நடக்கும் கதை விவாதத்தைதான் பார்த்திபன் படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கதை விவாதத்தின் போது, இந்த காட்சியில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா. அப்போது அந்தக் காட்சியில் குறிப்பிட்ட நடிகரே தோன்றி நடிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 
ஆர்யா, விஷால், அமலா பால், தாப்ஸி, பிரகாஷ்ராஜ், விமல் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யாருமே பணம் வாங்காமல் நடித்துள்ளனர். பார்த்திபன் இதில் நடிக்கவில்லை என்பது படத்தின் இன்னொரு பலம்.
அல்போன்ஸ் ஜோ‌சப், சரத், விஜய் ஆண்டனி, எஸ்.தமன் என்று நான்கு பேர் இசையமைத்துள்ளனர். மதன் கார்க்கி, நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 படம் திரைக்கு வருகிறது.


கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கதை உண்டு

kathai thiraikathai vasanam iyakkam movie has story
ஆர்.பார்த்திபன் என்கிற ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தற்போது இயக்கிவரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் கதையே இல்லை என்பதையே படத்தின் விளம்பரங்களில் முக்கிய வாசகமாக வைத்திருக்கிறார் ஆர்.பார்த்திபன். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் கதையைச் சொல்பவர்களுக்கு கடன் வாங்கியாவது ஒரு கோடி ரூபாய் பரிசு தருகிறேன்!! என்றும் காமெடியாக சொல்லி வருகிறார். சரி..கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கதை இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது.

இதுதான் கதை... படத்தின் கதாநாயகன் ஒரு உதவி இயக்குநர். ஒரு கதையை தயாரித்து செய்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்குகிறார். அவரை இயக்குநராக வைத்து படம் எடுக்க யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் அவரை வைத்து படம் எடுக்க முன் வருகிறார். அவரிடம் கதை சொல்கிறார். அவர் சொல்லும் படத்தின் கதை காட்சிகளாக விரிகின்றன. இதுதான் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் கதை.
தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார் நடிகர் பார்த்திபன். இவன் படத்துக்குப் பிறகு பார்த்திபன் இயக்கிய படங்கள் அனைத்தும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. குடைக்குள் மழை, பச்சக்குதிர, வித்தகன் ஆகிய
மூன்று படங்களும் அவரது இயக்கத் திறமையை சந்தேகப்படும் அளவுக்கு ஆக்கிவிட்டன.


இப்போது மீண்டும் தன்னை நிரூபிக்க வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் பெயர் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான் செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். கூடவே A Film without a story என்று குறிப்பிட்டு தன் குறும்பைக் காட்டியுள்ளார்.
thanx -dinamalar ,maalaimalar, all ciema web