Showing posts with label கண் சிமிட்டும் நேரம் (1988) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label கண் சிமிட்டும் நேரம் (1988) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, June 21, 2023

கண் சிமிட்டும் நேரம் (1988) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் )

 


    இயக்குநர்  கலைவாணன்  கண்ணதாசன் அறிமுக  இயக்குநராக  இது  முதல்  படம், அதே  போல்  சரத்  குமாருக்கும்  இது  முதல்  படம் , தமிழில்  சூப்பர்  ஹிட்  ஆன  இப்படம்  பிறகு  ஹிந்தியில் ரீமேக்  செய்யப்பட்டு  1990  ஆம்  ஆண்டு  சைலாப்  என்ற  பெயரில்  ரிலீஸ்  ஆனது . இது சரத் குமாரின்  சொந்தப்படமும்  கூட  , தனது  மகள்  பெயரில்  வரலட்சுமி  மூவிஸ்  தயாரிப்பு 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  நாயகி  இருவருக்கும்  முன்  பின்  அறிமுகமே  இல்லை , பார்த்துக்கொண்டதும்  இல்லை .  இருவருக்கும்  எந்தத்தொடர்பும்  இல்லை . ஆனால்  நாயகன்  நாயகியைகொலை  செய்ய  துரத்துகிறான், அது  ஏன்  என்பதுதான் கதையின்   ஒன் லைன் 


நாயகனுக்கு  அம்மா, திரும்ண  வயதில்  ஒரு  தங்கை ,  இருவரும்  இருக்கிறார்கள் . மிடில்  கிளாஸ். தங்கைக்கு  மாப்ளை  பார்த்து  திருமணம்  நிச்சயிக்கும்போது  மாப்பிள்ளை  வீட்டார்  பெண்ணுக்கு  குறிப்பிட்ட  சீர்  செய்ய  வேண்டும்  என  எதிர்பார்க்கிறார்கள் , ஆனால்  நாயகனிடம்  அவ்வளவு  பணம்  இல்லை . ஆனால்  மாமா  ஒரு  ஐடியா  சொல்கிறார். நாயகனுக்கு  ஒரு  இடத்தில்  பெண்  பார்த்து  அவங்க  கிட்டே  வரதட்சணை  வாங்கி  இங்கே  கை  மாத்தி  விட்டு  டேலி  பண்ணிடலாம்  என்பதே  அந்த  ஐடியா


 நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்கிறான். நாயகனுக்கு  ஒரு  இடத்தில்  பெண்  பார்க்கிறார்கள் . திருமண்ம்  நிச்சயிக்கப்படுகிறது. நாயகனுக்கு  நிச்சயம்  ஆன  பெண்ணுக்கு  ஆல்ரெடி  ஒரு  காதலன்  உண்டு . அவன்  மடத்தனமாக  ஒரு  திட்டம்  போடுகிறான். அவனுக்கு  வரனாக  வந்த  பல  பெண்  ஃபோட்டோக்களில்  ரேண்டம்  ஆக  ஒரு  ஃபோட்டோவைத்தேர்ந்தெடுகிறான். அது  தான்  நாயகியின்  ஃபோட்டோ. அந்த  ஃபோட்டோவை  நாயகன்  ஃபோட்டோவுடன்  வைத்து  மார்ஃபிங்  பண்ணி  ஜோடி  ஃபோட்டோ  போல்  ரெடி  பண்ணுகிறான். அதை   தனது  காதலியின்  அப்பாவுக்கு  ஒரு  கடிதத்துடன்  இணைத்து  அனுப்புகிறான்


 அக்கடிதத்தில்  நாயகன் நாயகி  இருவருக்கும்  ஆல்ரெடி  திருமணம்  ஆகி  விட்டது  என  இருக்கிறது. இதனால்  திருமணம்  நிற்கிறது .நாயகனுக்குப்பெண்  பார்த்த  பெண்ணுக்கு  அவள்  காதலனுடன்  திருமணம்  நடக்கிறது .அந்தப்பெண்ணின்  அப்பா  நாயகனின்  தங்கை  திரும்ணத்தை  நிறுத்தி  விடுகிறார். இதனால்  மனம்  உடைந்த  நாயகனின்  அம்மா,  தங்கை  இருவரும்  தற்கொலை  செய்து  கொள்கின்றனர் 


இதுவரை  சொன்னது  ஃபிளாஸ்பேக்


 தன்  குடும்பத்தாரின்  சாவுக்கு நாயகி  தான்  காரணம்  என  தவறாக  நினைத்து  நாயகியைக்கொலை  செய்ய  நாயகன்  கிளம்புகிறான், இது  தான்  ஓப்பனிங்  ஷாட்.நாயகனுக்கு  தலையில்  அடிபட்டு  டாக்டர்  ஆன  நாயகியிடமே  பேஷண்ட்டாக  அட்மிட்  ஆகிறான்.  தலையில்  அடிபட்டதால்  நாயகனுக்கு  பழைய  நினைவு  எதுவும் இல்லாமல்  மூன்றாம்  பிறை  ஸ்ரீதேவியின்  மேல்  வெர்சன்  போல்  நடந்து  கொள்கிறான் 


 டாக்டர்  ஆன  நாயகி   ஒரு  தலையாய்  நாயகன்  மீது  மையல்  கொள்கிறாள்  நாயகனுக்கு  ஒரு  கட்டத்தில்  மீண்டும்  தலையில்  அடிபட  பழைய  நினைவு  வருகிறது . இதற்குப்பின்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  க்ளைமாக்ஸ் 


 நாயக்ன்  ஆக  நவரச  நாயகன்  கார்த்திக். கண்களில்  கொலை  வெறி ததும்ப  இவர்  நாயகியைத்துரத்தும்  காட்சிகள்  கலக்கல் ரகம், தியேட்டரில்  ஒரே  கைதட்டல்  மழை  ரிலீஸ்  டைமில் 


நாயகி  ஆக  அம்பிகா. ஒரு  நளினியோ , ஜீவிதாவோ  செய்திருக்க  வேண்டிய  கேரக்டர்.  ஏன்  எனில்  இது  பொன்ற  பயமுகம்  காட்டும்  ரோல்களில்  அவர்கள்  இருவரும்  விற்பன்னர்கள் . அவர்கள்  அளவுக்கு  இவர்  முகத்தில்  பயம்  இல்லாவிட்டாலும்  காதலும் , வெட்கமும்  நன்றாக  வருகிறது 


 இந்த  கேசை  துப்பு  துலக்கும்  போலீஸ்  ஆஃபீசராக  ச்ரத்  குமார் . இவரே  தயாரிப்பாளர்  என்பதால்  படம்  முழுக்க  வரும்படி  ரோல். கச்சிதமாக  செய்து  இருக்கிறார்.க்ளைமாக்சில்  இவருக்கும்  நாயகனுக்கும்  சோலோ  ஃபைட்  புலன்  விசாரனை  ஃபைட்  போல்  மிரட்டலாக  வைத்திருக்கலாம், ஆனால்  ஏனோ   மிஸ்  ஆகி  விட்டது 


மெயின்  கதைக்கு  ச்ம்பந்தம்  இல்லாமல்   எஸ்  எஸ்  சந்திரன்  - செந்தில்  காமெடி  டிராக் வருகிறது. ரொம்ப  மொக்கை  எல்லாம்  இல்லை . பரவாயில்லை  ரகம் 


இவ்ர்கள்  போக  பூர்ணம்  விஸ்வநாதன் , குட்டி பத்மினி  போன்றோரின்  பங்களிப்பும்  உண்டு 


வி எஸ்  நரசிம்மன்  இசையில்  நான்கு  பாடல்கள் , அதில்  ஒரு  பாட்டு  சூப்பர்  டூப்பர்  ஹிட்டு . பின்னணி  இசை  குட் . குறிப்பாக  சரத்  குமார்    ஜீப்பில்  வரும்  காட்சிகளில்  எல்லாம்  ஒரு  பிஜிஎம்  பின்னி  எடுக்கிறது . களைமாக்ஸ்  நாயகன் - நாயகி  சேசிங்  சீன்களில்  பிஜிஎம்  பரபரப்பு 


எடிட்டிங்கில்  ரெண்டே  கால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 


இயக்குநர்  ஆகவும் , பாடல்  ஆசிரியர்  ஆகவும்  கலைவானன்  கண்ணதாசன்  ஜெயித்திருக்கிறார். அந்தக்காலத்தில்  ரிலீஸ்  டைமில்  சந்தம்  இல்லாமல்  வந்து  எதிர்பாராத  ஹிட்  கொடுத்த  படம்  இது 


சபாஷ்  டைரக்டர்


1  ஃபிளாஸ்பேக்  போர்சனை  கச்சிதமாக  படத்தின்  பின்பாதியில்  வைத்தது 


2  க்ளைமாக்ஸ்  சேசிங்  சீனை  மிரட்டலாக  எடுத்தது 


3 நாயகன் , நாயகி  இருவருக்கும்  எந்தத்தொடர்பும்  இல்லை  என்றாலும்  அவர்களை  லிங்க்  பண்ணிய  ஐடியா  குட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  விழிகளில்  கோடி  அபிநயம் ,


2  மமனுக்குத்தான்  வலை  விரிச்சேன் 


3   ராகம்  புது  ராகம் 


4  தேனே  பாடுதே 


  ரசித்த  வசனங்கள் 


1  இங்கே  இருக்கும்  எல்லா  நாய்களும்  விற்கத்தான். ரூ 1500 ஒரு  நாயின்  விலை 


அப்படியா? அப்போ  இது ?


 யோவ், அந்தப்ப்பொண்ணு  லேடி  ஸ்டாஃப் 


( மெயின்  கதையில்  வசனம்  எதுவும்  சொல்லும்படி  இல்லை , காமெடி  டிரக்கில்  தான்  க்ளிக்  ஆகி  இருக்கிறது )

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஓப்பனிங்  ஷாட்ல  ஆட்டோவில்  நட்ட  நடு  ராத்திரியில்  கூலிங்க்  கிளாஸ்  போட்டுட்டு  போறார். அவருக்கு  கண்  நல்லாதானே  இருக்கு ? எதுக்கு  நைட்  டைம்ல  கூலர்ஸ்? 


2  நாயகி  ஓப்பனிங்  ஷாட்ல  கொட்டும்  மழைல  நனைஞ்சுக்கிட்டே  கேட்  டை  திறந்து  விட்டு  காரில்  வீட்டுக்குள்  வருகிறார்/  லாங்  ஷாட்டில்  மழையில்  நன்கு   நனைபவர்  க்ளோசப்   ஷாட்டில்   நன்றாக  இருக்கிறார் , நனையவில்லை 


3  நாயகன்  சூட்கேசில்  ஒரு  லுங்கி, ஒரு  பாட்டில் சரக்கு , ஒரு  கத்தி  இவ்ளொ  தான்  வெச்சிருக்கார் . அந்த  சூட்கேசில்  ஏதோ  பெரிய  புதையல்  இருக்கறதா  நினைச்சுட்டு  நாலு  லூஸ்  ரவுடிகள்  ஃபைட்  எல்லாம்  போடறாங்க . நாயகன்  அந்த  டப்பா  சூட்கேஸ்சை  தானமாவே  கொடுத்திருக்கலாம் 


4 நாயகன்  நாயகி  வீட்டில்  பேஷண்ட்  ஆக  இருக்கிறான். போலீஸ்  ஸ்டேஷன்  வந்துட்டுப்போகும்படி  ஆஃபீசர்  சொன்னதால்  நாயகி  அங்கே  போகிறார் , சரி  கூட  எதுக்கு  நாயகனை  கூட்டிட்டுப்போறார் ? அவரே  பேஷண்ட். வீட்டில்  பணியாட்கள்  இருக்கிறார்களே? பார்த்துக்க  மாட்டாங்களா? 


5   க்ளைமாக்சில்  நாயகனுக்குப்பழைய  நினைவுகள்  வந்து  விடுகிறது . நாயகியைக்கொலை  செய்ய  துரத்துகிறார். நாயகியுடன்  பழகிய  தருணங்கள்  மறந்து  விடுகிறது . ; பிறகு  எப்படி நாயகியின்  பங்களா மட்டும்  நினைவு  வருகிறது ?


6  க்ளைமாக்ஸில்  சரத்  குமார் கார்த்திக்கின்  முழங்காலில்  சுடுகிறார். புல்லட்  பட்டு  ரத்தம்  வருகிறது . ஆனால்  பல  லாங்  ஷாட்களில்  பேண்ட்டில்  ரத்தமே  இல்லை . குண்டடி  பட்டும்  அவர்  ஓடிக்கொண்டே  , துரத்திக்கொண்டே  தான்  இருக்கிறார் 


7 வரதட்சணை  வாங்குவதும்  தவறு, கொடுப்பதும்  தவறு , இருந்தும்  நாயகன்  எபப்டி  அந்த  எக்சேஞ்ச்  ஆஃபருக்கு ஒத்துக்கொண்டார்? 


8 ஹீரோ  ஃபிளாஸ்பேக்கில் ,  ரன்னிங்  டைமில்  ஆகிய  இரு கால  கட்டங்களிலும்  ஒரே  ஹேர்  ஸ்டைல்  தான், ஆனால்  ஓப்பனிங்  ஷாட்  சேசிங்கில்  மட்டும்  விக்.. ஏன் ? 


9  அம்பிகா  எழுதிய  லெட்டர்  போல  ஒரு  போலியான  கடிதம்  தயாரிக்கபப்டுகிறது , ஆனால்  அம்பிகாவின்  வாய்ஸ்  ஓவரில்  அந்தக்கடிதம்  படிக்கப்படுவது  எப்ப்டி? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பரபரப்பான  , விறுவிறுப்பான  படம் . பார்க்கலாம் ., ரேட்டிங்  2.75 /  5



கண் சிமிட்டும் நேரம்
இயக்கம்கலைவாணன் கண்ணதாசன்
தயாரிப்புஆர். சரத்குமார்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புகார்த்திக்
அம்பிகா
பூர்ணம் விஸ்வநாதன்
சரத்குமார்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
கிருஷ்ணாராவ்
டிஸ்கோ சாந்தி
குட்டி பத்மினி
வரலட்சுமி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்