Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Saturday, December 29, 2012

டெல்லி சம்பவத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பு - ஓ பக்கங்கள் ஞானி கடிதம் @ குமுதம்

மன்னிக்க வேண்டுகிறேன்…..!!!!


அன்புள்ள…..

... உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.

டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு, எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள். உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். 


இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர் பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய். 


நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும் உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும், பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.

உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர் மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.

படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

நாங்கள்தான் – we the people of Indiaதான். காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.

படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.

அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது. மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண் பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.

உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.

உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம் காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம் உனக்கு - உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.

நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள். இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.

குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை, சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது. பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….

படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல் வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.

இந்த சூழலில் படித்தவனாக இருந்தால் அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ? வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க, பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.

மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம். ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.

அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.

இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.

அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன் வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

அன்புடன்

ஞாநி

சக இந்தியர்கள் சார்பாக.

குமுதம்
டிசம்பர் .2012

Saturday, November 03, 2012

ஓ பக்கங்கள் ஞானியின் கடிதம் டூ சின்மயி

அன்புள்ள சின்மயிக்கு

அன்புள்ள சின்மயிக்கு


வணக்கம். 


நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார்.

 சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.



அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில் உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக பாலியல் அவதூறுகளை செய்வதாக சிலரைக் குற்றம் சாட்டி நீங்கள் காவல் துறையில் புகார் செய்ததால் இருவர் கைதான செய்திகளைப் பார்த்ததும், இது தொடர்பான டிவிட்டுகளைத் தேடிப் படித்தேன். எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்த வரை படித்தேன்.



முதலில் உங்கள் ட்விட்டுகளைப் பற்றிப் பேசிவிடுவோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உங்கள் குமுறல் அதில் முக்கியமானது. தாழ்ந்த மனிதர் என்று யாரும் இல்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருக்கமுடியாது என்று நீங்கள் சொல்வது மிகச் சரி. அப்படி யாரேனும் தாழ்த்தி வைக்க முயன்றால், அடங்க மறு, அத்துமீறு, போராடு என்றுதான் இன்று தலித் தலைவர்களும் சொல்கிறார்கள். இதைத்தான் அம்பேத்கரும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால் அவர் அதைச் சொல்வதற்கு முன்னால் நிலைமை அப்படி இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும். தலித்துகளின் சம்மதம் இல்லாமலேதான் அவர்கள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள். 



உங்கள் அறிக்கையில் உங்கள் கொள்ளுப் பாட்டனார்கள் தமிழறிஞர்கள் மு.ராகவைய்யங்காரையும் ரா.ராகவைய்யாங்காரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருவரும் தமிழர் வரலாற்றில் மறக்கக் கூடாத மாமேதைகள் என்று நண்பர் ஆய்வாளர் பொ.வேலுசாமி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். எனவே வரலாறு முக்கியம் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதால்தான் உங்களுடைய தமிழ்ப் பாரம்பரியத்தை வரலாற்றிலிருந்து தூசு தட்டி எடுத்துச் சொல்கிறீர்கள். வரலாறு முக்கியம். மிக மிக முக்கியம். ஆனால் முழு வரலாறும் முக்கியம். அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் அல்ல. 



ராகவைய்யங்கார்களின் சம கால மேதைதான் கணித அறிஞர் ராமானுஜம். மூவருமே உங்கள் டிவிட்டர் பாஷையில் ‘ஹையங்கார்கள்’தான். ராமானுஜத்தை, அன்றைய உங்கள் ஜாதி வைதீகர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல், தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள்.




சொந்த ஜாதிக்காரனையே கடல் கடந்த குற்றத்துக்காக இப்படி நடத்திய வைதீகர்கள் அன்று தங்கள் பார்வையில் கீழ் ஜாதி என்று கருதப்பட்டவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று யோசியுங்கள். அந்த வரலாற்றையும் நீங்கள் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். ராகவைய்யங்கார்கள் ஏட்டுச் சுவடிகளைப் படித்து ரசித்து தமிழமுதில் இன்புற்றிருந்த வேளையில், இருளாண்டிகளும் அஞ்சலைகளும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கிறது. உங்கள் நண்பர் ‘ஈ’ இயக்குநர் ராஜமௌலி டிவிட்டில் தவறாகச் சொல்வது போல அந்த நிலை தொழிலால் வந்ததல்ல. 


பிறப்பால் சுமத்தப்பட்டதுதான். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுவதற்கு அவர்களுடைய சம்மதத்தை யாரும் கேட்டது இல்லை. எதிர்த்தவர்களுக்கு சாணிப்பால் அபிஷேகமும் கசையடி அர்ச்சனையும்தான் கிடைத்தன. அந்த வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்தால்தான், அந்த இடைவெளியை நிரப்பவே இன்றிருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குப் புரியமுடியும். 



‘மறவர் சீமைப் பொண்ணு நான்’ என்று பெருமைப்படுகிறீர்கள். உங்கள் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் அந்த மறவரெல்லாம் குற்றப் பரம்பரையினர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துப் படித்தால்தான், ஏன் இன்று மறவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது புரியும்.



ட்விட்டரில், பேஸ்புக்கில் எல்லாம் எவரும் தங்களுக்கு ஆழமாக நேரடியாக தெரிந்திராத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி டைனிங் டேபிளில் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது போல எழுதும் பொறுப்பற்ற சுதந்திரம் இருப்பதே பிரச்சினை. இந்த விஷயங்களில் உங்களுக்கோ பிறருக்கோ அக்கறை இருப்பதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். 99.9 மதிப்பெண் வாங்கிய பிராமணப் பெண்ணுக்கு சீட் கிடைக்காத பிரச்சினைக்கும் தீர்வு தேவைதான். ஆனால் தீர்வைத் தடுப்பது இட ஒதுக்கீடு அல்ல என்பது புரிய, நீங்கள் நிறைய படிக்க வேண்டும். பல மொழிகளைப் படித்துத் தேர்ந்துள்ள உங்களால் இது முடியாதது அல்ல. தேவைப்படுவது நிஜமான தேடலும் ஜாதிகளுக்கு அப்பால் எல்லா சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும்தான்.



இனி உங்கள் புகாரால் கைதாகியும் கைதை எதிர்நோக்கியும் இருக்கும் சக ட்விட்டர்களின் நடத்தையைப் பார்ப்போம். அதில் ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். நான் நடத்தும் கேணி இலக்கிய கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருபவர். ஓராண்டாக சிறப்பாக வெளிவரும் தமிழின் அருமையான ஒரு சிற்றிதழுக்குப் பங்காற்றுபவர். உங்களுடன் சண்டையிட்ட ட்விட்டர்கள் பலர் இட ஒதுக்கீடு, மீனவர் நலன் இவற்றில் எல்லாம் அக்கறையும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் உடையவர்கள். உங்களுடைய சில கருத்துகள் அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். 



ஆனால் அதற்காக பாலியல் சார்ந்த அவதூறுகளை கேலிகளை அவர்களில் யார் எழுதுவதையும் யாருக்கு எதிராக எழுதுவதையும் நான் நிச்சயம் ஏற்கவில்லை. கடுமையாகக் கண்டிக்கிறேன். நீங்களோ வேறு யாரோ இட ஒதுக்கீடு பற்றியோ, தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியோ, மீனவர் கொலைகள் பற்றியோ புரிந்தோ புரியாமலோ எவ்வளவு அபத்தமாகப் பேசினாலும், அவையெல்லாம் எப்படி அபத்தம் என்றுதான் புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கான பொறுமை இல்லாவிட்டால் உங்களை அலட்சியம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒருபோதும் யார் மீதும் பாலியல் வக்கிர அவதூறுகள், கேலிகள் செய்வது நிச்சயம் தவறு. 



இங்கே நான் கவலையும் கவனமும் கொள்ள விரும்பும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை நிச்சயம் சட்டத்தால் தீர்க்கமுடியாது.

 .
அறிவுக் கூர்மையும் திறமையும் கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் உடைய உங்களைப் போன்ற பலர் இதே சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பிரச்சினைகளை, அவற்றின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் உழைப்பே இல்லாமல் ஒரு முழு வாழ்க்கையை இன்றைய சமூகத்தில் வாழ்ந்து முடித்துவிட முடியும். புகழும் செல்வாக்கும் தரும் வசதியில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி குழப்பமான மேம்போக்கான கருத்துகளைச் சொல்லவும் முடியும்.



 ராகவைய்யங்கார் முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பாட்டில் தனக்கு ஒரு விஷயம் இன்னும் ஆழமாகத் தெரியவில்லை என்றால் எவ்வளவு தயங்கியிருப்பார், எவ்வளவு தேடியிருப்பார்.. தேடிப் பிடித்து படிக்காமல் அவசரப்பட்டு முடிவைச் சொல்லியிருந்தால் அவரை ஆய்வுலகம் கொண்டாடியிருக்குமா ? 



மறுபக்கம் இந்த பிரச்சினைகளில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் , அவற்றிற்குத் தீர்வு வரவேண்டுமென்ற ஆர்வமும் கொண்டு பல்வேறு சமூக சித்தாந்தங்களில் ஓரளவு பரிச்சயமும் உடைய மிகச் சிலராக இன்று ஒரு புதிய தலைமுறை துடிப்புடன் உருவாகி வந்துள்ளது. சோகம் என்னவென்றால், அதில் சிலர், கூடவே பாலியல் வக்கிர மனசும் உடைய டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடாக விளங்குகிறார்கள்..



 உங்களை பகடி செய்த ட்விட்டர்களின் விரல்கள் கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை. 



இன்றைய மீடியா சூழல்தான் காரணம். நீங்களும் சரி, உங்கள் டிவிட்டர் எதிரிகளும் சரி, ட்விட்டரில் எழுதிய பல வரிகளை ஒரு போதும் அச்சுப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. பத்திரிகை ஆசிரியர் தடுத்துவிடுவார். இணையம் தரும் சுதந்திரம் கட்டற்றது. ஆனால் அதைப் பயன்படுத்துவோருக்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பும் சொல்வதில் தெளிவும் தேவை. அது இல்லாத இருபிரிவினரிடையே நடக்கும் சண்டைதான் இந்த விவகாரம். இதனால் இணைய சுதந்திரத்துக்கே ஆபத்து. 


உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது ? மீடியாதான் காரணம். எத்தனை அறிவார்ந்த நூல்களைப் படித்தாலும் கேட்டாலும், சினிமாவும் டி.வியும் காமப் பிசாசுகளை உசுப்பி விடும் வேலையையே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்றபடி நல்லவர்களாக தெரிபவர்கள் கூட இணைய முகமூடி மாட்டியதும் நிர்வாணக் குத்தாட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் தலைக்குள், நீங்கள் பணி புரியும் வணிக சினிமா துறை விதைத்த காமவித்துகள், குத்தும் கூரிய முட்களோடு தழைத்துக் கொண்டே இருக்கின்றன.



நீங்கள் ஆபாசப் பாடல்களைப் பாடியிருப்பதால்,உங்களுக்கு எதிராக ஆபாசமாக எழுதினால் என்ன தப்பு என்ற அராஜகமான வாதத்தை நிச்சயம் நான் ஏற்க மாட்டேன். ஆனால் அறிவுக்கூர்மை, மொழிப் புலமை எவ்வளவு இருந்தாலும், என்ன பாடுகிறோம் என்பதை முடிவு செய்யும் தேர்வைக் கறாராக செய்யாமல் வாய்ப்பு, பணம், புகழ் என்ற அளவுகோல்களை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் பாடிக் கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் விளைவுகள் என்ன என்ற கேள்வியை நீங்கள் புறக்கணிக்க முடியாது.




“ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் ‘நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தை, என்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா? 



இந்தப் பாடல்களைக் கேட்டு வளரக் கூடிய ஒரு சிறுவன், நாளை க்வாண்ட்டம் பிசிக்ஸ் படித்து ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியானாலும் அவன் அடிமனதில் பதிந்துவிட்ட பாலியல் வக்கிரம், வேறொரு சின்மயியுடன் சண்டை வரும்போது வெளிப்படத்தான் செய்யும். ‘பாடுவது என் தொழில். கொடுப்பதைப் பாடுகிறேன் ‘ என்று வாதாட இடமில்லை. அந்தப் பாட்டு, அதைக் கேட்கும் மனங்களை இழிவான மனநிலைக்கு அழைத்துப் போனால், அதற்கான பொறுப்பில் உங்கள் பங்கும் இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை யாரும் தாழ்த்தப்பட்டவராக்கிவிடமுடியாது என்பது போலவே, உங்கள் சம்மதமில்லாமல் யாரும் உங்களை இழிவான பாடலகளைப் பாட வைத்துவிடமுடியாது. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை. 



சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இன்னொருவர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் உதறிவிடமுடியாது. உங்கள் மீது பாலியல் அவதூறுகளை வீசுபவர்களின் மன வக்கிரங்கள், காலம் காலமாக நம் ஊடகங்களால் விதைக்கப்பட்டவை. அதற்காக நியாயமாகவே பதறும் நீங்கள், அறிந்தோ அறியாமலோ அதே விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள். அவை விருட்சங்களாகும்போது உங்கள் மகளை அழைத்துக் கொண்டு நீங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் நிலை வரலாம். அல்லது உங்கள் மகன் மீது வேறொரு தாய் புகார் கொண்டு வரலாம்.



இந்தப் பிரச்சினைகளை நாம் சட்டத்தால் மட்டும் திருத்திவிடமுடியாது. ஒருவரோடொருவர் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த பாட்டைப் பாடும் முன்பு வரிகளின் அர்த்தத்தை யோசியுங்கள். அவற்றுக்கு என்ன மாதிரி காட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று யோசியுங்கள்.


 அது உங்களுக்கு உடன்பாடானதுதானா என்று யோசியுங்கள். அடுத்த ட்விட்டை எழுதும் முன்பு அந்த விஷயம் பற்றிய உங்கள் புரிதல் முழுமையானதுதானா என்று யோசியுங்கள். இல்லையென்றால் முதலில் புரிந்துகொண்டு அப்புறம் விமர்சியுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களையும் இன்னும் பலரையும் கீழ்த்தரமாக பகடி செய்த பதிவர்களும் கூட, தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன். நாம் எல்லாரும் வெறும் செராக்ஸ் மெஷின்களல்ல.



உலகின் மிகச் சிறந்த நீதிமன்றம் நம் மனசாட்சிதான். அதையே உங்களுக்கும் சரவணகுமாருக்கும் ராஜனுக்கும் இன்னபிறருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த மோசமான சூழலிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.
அன்புடன் ஞாநி


கல்கி 3-11-2012

thanx - kalki ,gnani

Wednesday, October 31, 2012

என்னை கவர்ந்த பிரபல ட்விட்டரின் கடிதம்

வசந்த் (@)

தோழர் சதீஷுக்கு வணக்கம்,

நான் நேற்று உங்களுடனான உரையாடலை தொடங்கியதற்கு காரணம் நீங்கள் அச்சமயத்தில் எழுதிய ட்வீட் மட்டுமல்ல,அதற்கு முன் நீங்கள் எழுதிய தமிழ் டிவிட்டர்கள் மற்றும் பாடகி சின்மயிக்கு இடையேயான பிரச்சனை பற்றிய பதிவும் கூட. அது ஒரு நடுநிலைமை பார்வையாக எனக்கு தெரியவில்லை, அதற்காக நீங்கள் இந்த விசயத்தில் நடுநிலைமையுடன் தான் இருக்கவேண்டும் என்பது என் விருப்பமும் அல்ல.


முதலில்,நாகரீகம் மட்டும் கட்டுபாட்டுடன் கூடிய கருத்துச் சுதந்திரம் என்பது இணையத்தில் எதிர்பார்க்ககூடாது என்பதே எனது கருத்து. இவ்வாறு ஏன் கருதுகிறேன் என்றால் நான் முன்னொரு முறை சொன்னது போல் நாகரீகம் என்பது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது, கரண்டி மூலம் மட்டுமே உணவை உண்ணும் மக்கள் பெருகிவிட்ட இன்றைய நிலையில் கையினால் பிசைந்து உணவை உண்பவர்கள் நாகரீகம் அற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.




ஆனால் இதில் உள்ள நியாயம் இருவருக்கும் வெவ்வேறானது. ஒருவரின் நாகரீகமானது அவரின் கடந்து வந்த வாழ்க்கை, பொருளாதார சூழல், சுற்றி உள்ள மனிதர்கள் என்று பல காரணிகளால் ஆளுமைக்கு உட்படுத்தப்படுகிறது. உதாரணமாக இன்வர்ட்டர் & ஜெனரேட்டர் போன்ற கருவிகள் உடைய பணக்காரர் மின்வெட்டு ஏற்படுகையில் அலட்டிக் கொள்ளமாட்டார், ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை,ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுக்கு அடியில் ஒற்றை மின்விசிறியின் துணையால் காற்று வாங்கிக் கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்ப்பட்டால் வட்டாரவழக்கை தான் துணை கொள்வார், இவர்களுக்கு இடையேயான பொருளாதார வித்தியாசத்தை கணக்கில் கொள்ளாதவர்கள் பின்சொன்னவரின் வட்டார வழக்கை மட்டும் குற்றம் சொல்வது நியாயமே கிடையாது.



அதுமட்டுமல்ல வட்டார வழக்கு என்பது எங்கெங்கும் நிறைந்து உள்ளது, அதை பல பெண்கள் உபயோகிப்பதை கூடக் கண்டிருக்கின்றேன், நண்பர்களுக்கு இடையே இதுபோன்ற வட்டார வழக்கு சொற்கள் வெகு இயல்பாக புழங்கும். புத்தகங்களில் இல்லாத வட்டார வழக்கு வார்த்தைகளா ? எத்தனை எழுத்தாளர்கள் அத்தகைய வார்த்தைகளை உபயோகிக்காமல் எழுதி உள்ளார்கள் என்று யோசியிங்கள்? பத்திரிக்கைகள்,சினிமாக்கள் மற்றும் டிவிக்களும் தன் பங்கிற்கு நாகரீக மீறல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. நிற்க. ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒருவர் திட்டுவது என்பது சொந்தக் காரணத்திற்க்காகவா ?




 ஒரு சாதாரண பொதுஜனமாக,அரசியல்வாதிகள் தொடர்ந்து செய்து வரும் அத்துமீறிய அநியாயங்களை எவ்வாறு கண்டிப்பது? அவர்களிடம் நேரில் சென்று நீதி கேட்பதோ,அவர்கள் மேல் வழக்கு தொடர்வதோ எத்தனை பேரால் முடியும் ? ஒருபுறம் அரசியல்வாதிகளின் சகிக்கமுடியாத அநீதிகள் மறுபக்கம் அதை தட்டிக் கேட்க்க முடியாத சூழ்நிலை, இத்தகைய நிலையில் ஒரு மனிதன் வெடித்து பேசத்தான் செய்வான், இதில் அவன் பேச்சை மட்டும் குற்றம் சொல்வது நியாயமே இல்லை. இவ்வாறு வெடித்து பேசாதவர்களும் இருக்கிறார்களே எனக் கேட்கலாம், அவ்வாறு பேசாதவர்களில் பெரும்பான்மையினர் மேட்டுக்குடியினர், பொதுப் பிரச்சனைகளால் பெரிய அளவில் பாதிக்கப்படாதவர், அதனால் இவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்வது சரியல்ல.




நீங்கள் நம்பும் நாகரீக மனிதர்களும் உணர்ச்சிவசப்படும்போது நாகரீகத்தை உடைத்தே வெளிவருகிறார்கள், நமக்கு தெரிந்த உதாரணமான மாயவரத்தானை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் மற்றொருவரை மிக ஆபாசமான வார்த்தையால் வசை பாடினார், காரணமாக அந்த நபர் மட்டும் திட்டலாமா என்று கேட்டார். இதுதான் அனைத்து மனிதர்களின் நிலையும், இங்கு யாராலும் ஒரு கட்டத்துக்கு மேல் நாகரீகத்தை கடைபிடிக்க முடியாது. பாதிப்பை பொறுத்தே நமது நாகரீகம் நிக்கும் மற்றும் நிலைக்கும். பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆங்கிலத்தில் பல வசை சொற்களை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டே தான் இருக்கிறார் (WTF, Shit, Bullcrap, முதலியவை)





அதுமட்டுமில்லாமல் அவர் என்ற ஐடியில் இருந்து வரும் ட்வீடுக்களை RT செய்திருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வளவு ஏன் மகேஷ் மூர்த்தி சின்மயியை சில ஆங்கில வன் சொற்களால் திட்டி உள்ளார்(Idiot, Fool). இதை சின்மயியோ அவரை ஆதரிப்பவர்களோ கூட கண்டுகொள்ளவில்லை. இதன் மூலம் நாம் உணர்வது ஆங்கிலத்தில் பேசும்போது நாகரீகம் தேவையில்லை ஆனால் தமிழுக்கு மட்டும் அது கட்டாயத்தேவை என்பதே. இதை ஏற்றுக்கொள்பவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.




இங்கு பெரும்பாலான இடங்களில் மற்றும் சமயங்களில் கருத்து சுதந்திரம் இல்லாமல் தான் இருக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கு ஒரு ஆசிரியர் தவறு செய்யும் போது அதை சுட்டிக்காட்டினால் அதன் பலன் என்னவாக இருக்கும், அந்த ஆசிரியர் தமது பலத்தை தவறாக உபயோகித்து நம்மை சஸ்பென்ட் செய்வது, பெற்றோரை கூட்டி வரச்சொல்வது, இன்டர்னல் மார்க்கில் கை வைப்பது போன்றவையை செய்கிறார்.




 அலுவலகங்களில், அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி வேலை செய்யச்சொல்லப்படும்போது எதிர்த்துக் கேட்டால் அப்ரைசல் சமயங்களில் "கவனித்துக்" கொள்ளப்படுகிறோம். சொந்த வேலைக்காக பிற அலுவலகங்களுக்கு செல்லும்போது அங்கு நம்மீது காட்டப்படும் அலட்சியங்களை சகித்துக்கொள்கிறோம். ஏன் குடும்பத்திலே தந்தைக்கோ, தாய்காகவோ, சகோதர சகோதரிக்காகவோ, வாழ்க்கை துனைக்காகவோ நாம் அடங்கிச் சென்றுகொண்டுதான் இருக்கிறோம். பின்பு எங்குதான் நாம் நம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தி கொள்வது, அதற்கு நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு இந்த இணையம் தான்.இங்கும், நாம் நியாயம் என்று நினைப்பதுவே உலகப்பொது நியாயம் என்று நினைப்பவர்களால் அடக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையானதென்றே நான் நினைக்கிறன்.



உங்களின் மற்றொரு கருத்தான ஒருவரைப்பற்றி விமர்சனம் வைக்கும்போது அதற்கான ஆதாரம் இருத்தல் வேண்டும் என்பதும் என்னால் ஏற்கமுடியவில்லை. 2G ஊழலிலும் நிலக்கரி ஊழலிலும் சில அரசியல் கட்சிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது ஆனால் அதற்க்கான ஆதாரம் என்னிடம் இல்லை ஆதலால் இந்த விசயங்களை நான் இணையத்தில் பகிர்ந்தால் சம்பந்தப் பட்டவர்கள் என் மேல் வழக்குப்பதிவது நியாயமே என்பது என்ன மாதிரியான நியாயம் என்று எனக்கு புரியவில்லை. அப்பேர்ப்பட்ட ஆதாரங்கள் என்னிடம் இருந்தால் நான் நேரிடையாக நீதிமன்றத்துக்கு சென்று வழக்குபதிந்து விடமாட்டேனா? அதைவிட்டு இணையத்தில் எதற்காக புலம்பப்போகிறேன்? டீக்கடை விவாதத்தை கவனித்திருக்கிறீர்களா, அங்கு பல விசயங்கள் பேசப்படும், பேசுபவர்கள் பெரும்பாலும் நடுத்தரத்துக்கு குறைந்த பொருளாதார நிலை உடையவர்களாகவே இருப்பார்கள். அவர்களையும் அவ்வாறு பேசாமல் இருக்க ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் எதுவும் இல்லை. ஆனால் அது போன்ற விவாதத்தை இணையத்தில் சராசரி மற்றும் அதுக்கும் மேலுள்ள பொருளாதார நிலை உள்ளவர்கள் பேசினால் இந்த அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லை.



அதுக்கு காரணம் இத்தகைய சராசரி மக்கள் தங்களை தாண்டி எதையும் பார்க்கும் திறன் இல்லாமலே இருந்திருக்கிறார்கள், அதனாலேயே இந்த அரசாங்கம் பல தவறுகளை துணித்து செய்து கொண்டிருக்கிறது, இந்த நிலையில் இந்த சராசரி மனிதர்கள் உலகத்தை புரிந்துகொள்வதில் உள்ள ஆபத்தை இந்த அரசாங்கம் பயத்துடன் கவனிக்கிறது, இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது, அதன் காரணமாகவே சில நாட்களுக்கு முன் ட்விட்டரை தடை செய்யவேண்டும் என்ற பரிசீலனையை முன்வைத்தது. இப்போது சைபர் கிரைம் மூலமாக சில கைதுகளை நிகழ்த்தி மக்களை பயமுறுத்துகிறது.




சரி,அப்பிடியே இணையம் மூலம் செய்யப்படும் தனிப்பட்ட அவதூறுகளை கண்டிக்கும் விதமாக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கும்பட்சத்தில் அதனால் அனைவரும் பயன் அடைவார்களா என்று பார்த்தால் அதற்கான பதிலும் சந்தேகமே. உங்களையோ என்னையோ ஒருவர் திட்டிவிடுகிறார் என்று வைத்துகொள்வோம் நாம் சென்று சைபர் கிரைமில் புகார் குடுத்தால் அவர்கள் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைகிறீர்களா? இப்பொழுது சின்மயி சொன்ன கருத்தை எடுத்துக்கொள்வோம், இப்பொழுது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு சரியானது இல்லை என்று சொல்கிறார்.




 இவருக்கு இட ஒதுக்கீட்டு பற்றி முழுவது தெரியுமா இல்லை இவர் கூறிய கருத்துக்கு ஏதேனும் வலுவான ஆதாரம் இவரிடம் உள்ளதா ? இது கட்டாயம் என்னை பாதிக்கிறது, எனவே நான் இதை எடுத்துக்கொண்டு சைபர் கிரைம்முக்கு செல்வது தான் சரியா ? அப்பிடி நான் சென்றால் நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமா ? இதை பற்றி உங்களுடைய கருத்து எப்படிப்பட்டது என தெரியவில்லை ஆனால் நான் தெளிவாக நம்புவது இந்த சட்டமும் நடவடிக்கையும் தங்களின் செல்வாக்கை தவறாக பயன்படுத்தி அடுத்தவர்களை அடக்குபவர்களுக்கு மட்டுமே உரியது என்பதே.




நான் கடேசியாக சொல்ல விரும்புவது என்னவென்றால், மேலே நான் குறிப்பிட்ட அணைத்து கருத்துகளும் இந்த இணைய வசதியினால் நான் மற்றவர்களிடமிருந்து உள்வாங்கிக் கொண்டவையே. இந்த வரம்பற்ற இணையம் இல்லை என்றால் இது சாத்தியப்பட்டு இருக்காது. நீங்கள் நியாயம் என நினைக்கும் கருத்தடக்கும் சட்டப் பாய்ச்சலினால் இவை போன்ற கருத்துபகிர்வுகள் சாத்தியம் இல்லாமல் போய்விடும். அது ஆரோக்கியமற்றது சகோ, தொடர்ந்து பல சமூக விசயங்களை பகிரும் நீங்களுமா இதற்கு ஆதரவாக இருக்கப் போகிறீர்கள், வேண்டாமே. இவ்வளவு விளாவரியாக நான் இதை எழுதி இருப்பதற்கு உங்களின் ஏற்றுக்கொள்ளும் புரிதலும் ஒரு காரணமே, அந்த வகையில் உங்களுக்கு நன்றிகள்.

நன்றி,


கணேஷ்-வசந்தாகவே அறியப்பட விரும்பும் சக தோழர்.

Sunday, October 07, 2012

காசி ஆனந்தன் கடிதம் -தமிழா, உனக்கு வெட்கமாக இல்லையா?

http://www.jaffnacnn.com/upload-files/sept/kasianandan02.jpgதமிழா, உனக்கு வெட்கமாக இல்லையா?


காசி ஆனந்தன்
ஆங்கிலமும் தமிழும் கலந்த இந்த வகைப் பாடல்களை இங்கே சாடுகிறார் கவிஞர் காசி ஆனந்தன். இப்படியே போனால் இன்னும் ஒரு நூறாண்டில் தமிழ் அழியும் என்கிறார்.

ஒரு மொழி அழிந்தால் போதும் அந்தத் தேசிய இனமும் அழிந்துவிடும். ஓர் இனத்தின் உயிர்நாடியே தாய்மொழிதான். ஓர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் தாய்மொழியை அழித்துவிடு என்று சொல்வார்கள். மொழி என்பது ஒரு கருவி மட்டும்தான் என¢ற கருத்து இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. அதுவல்ல. மனிதர்களின் உயிரோடும் உணர்வோடும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிற உயிர்மூச்சு. மொழி ஒரு தொடர்பு கொள்ளும் கருவி என்பதைப்போல தாய் என்பவள் பிள்ளை பெற்றுத்தருகிற கருவி என்று சொல்லமுடியுமா? 


அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும். ஆனால் மெல்ல தமிழ் மொழி அழிந்து மிகப்பெரிய அளவில் சுருங்கி தேய்ந்துகொண்டிருப்பது உணமை.


சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழ் மொழி இருந்தது என சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமை கவலைக்கிடமானது. கீழை ஆரிய மொழியான சமஸ்கிருதம் கலந்து தமிழை அழித்ததைப்போல, மேலை ஆரிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழ் சிதைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


 600 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மொழி மலையாளம். சேர நாடாக இருந்தது. சேரன் செங்குட்டுவன் கல் சுமந்து கண்ணகி கோயில் கட்டினான். சிலப்பதிகாரம் குறிப்பிடும் வளம் நிறைந்த நாடு. தமிழ்தான் சமஸ்கிருதம் கலந்து மலையாளமாக  மாறிப்போனது. இதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமா? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிற மொழி கலந்தால் கண்டிப்பாக தமிழ் அழியும். தஜுகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கவிஞன் ரசூல் கம்ஸதோவ் பேசிய மொழி அவார். அதுதான் அவனுடைய தாய்மொழி. "நாளை என்னுடைய தாய்மொழி இறக்குமானால், நான் இன¢றே இறந்துவிட விரும்புகிறேன்" என்று சொன்னான். 


 தன் தாய்மொழியை எந்த அளவுக்கு அவன் மதிக்கிறான் என்பதற்கு இதைவிட வேறொரு கருத்தைச் சொல்லமுடியாது. நாம் அதை நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.


ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போனால், மிகக் குறுகிய காலத்திலேயே தமிங்கிலர் என்ற புதிய தேசிய இனமாக நாம் மாறிவிடுவோம். புதிய  மொழியும் புதிய இனமும் உலகில் அறிமுகமாகும். நூறு ஆண¢டுகளுக்குள் இந்த மாற்றம் நடந்துவிடும். தமிழின் வயது இன்றைக்கு 50 ஆயிரம் ஆண்டுகள் என்று பாவாணர் சொல்லியிருக்கிறார். இக்கருத்தை மொழியியல் அறிஞர் லெவிட் ஒப்புக்கொள்கிறார். 50 ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒரு மொழியை  இழந்துகொண்டிருக் கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். 


உங்களுக்குக் கவலையாக  இல்லையா? தொன¢மையான ஒரு மொழியை இழக்கலாமா? உலகம் முழுவதும் இன்றும் பழம்பொருளை பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மிக அழகான ஒரு பேனாவைக்கூட பாதுகாத்து நினைவாக வைத்திருக்கிறோம். அந்த உணர்வு மொழியைப் பாதுகாப்பதில் உனக்கு இருக்கவேண்டும். 



ஆங்கில மொழி லத்தீன், பிரெஞ்சு, கிரேக்க வார்த்தைகளைக் கொண்டுதானே உருவாகியிருக்கிறது. அப்படி ஏன் பிற மொழி வார்த்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை? என்று கேட்கிறார்கள். அது சொற்கள் தட்டுப்பாடுள்ள மொழி. பிற மொழிகளை ஏற்றுக்கொண்டால் அம்மொழிக்கு வரவு. ஆனால் தமிழில் ஒவ்வொரு புதுச்சொல் நுழையும்போதும் நம்மிடம் இருக்கிற ஒரு பழஞ்சொல் வழக்கொழிந்துவிடும். 


இது நமக்கு இழப்பு. அவனுக்கு வரவு. ப்ளவர் என்கிற சொல்லை நாம் ஏற்றுக் கொண்டால் மலர்,  பூ என்கிற சொற்கள் காணாமல் போய்விடும். அது மொழியின் அழிவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற மொழி அறிவியல் சொற்களுக்கு இணையாக மொழியாக் கம் செய்கிற அளவுக்கு தமிழில் சொற்கள் இருக்கின்றன. சில புதிய சொற்களையும் உருவாக்கமுடியும்.



சிலர் வெட்கங்கெட்ட முறையில் ஆங்கிலச் சொற்கள் கலப்பைத் தவிர்க்கமுடியாது. தமிழில் பேசுவது இயல்பாக இல்லை என்று சொல்கிறார் கள். தமிழில் பேசுவது உனக்கு வெட்கமாக இருக்கிறதா? ஆங்கிலத்தை முழுமையாகப் பேசு. ஆங்கிலமும் வளரும். தமிழும் வளரும். வெளிநாட்டுக் குப் போனால் என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மொழிகளிலும் பேசுகிறார்கள். அங்கே போன பிறகுதான் கற்றுக் கொண்டார்கள். தமிழ்நாட்டுக்கு மார்வாடிகள் வருகிறார்கள். அவர்கள் ராஜஸ்தானில் தமிழைக் கற்றுக் கொண்டுதான் இங்கு வருகிறார்களா?



இங்கேயே ஆங்கிலேயனாக மாறி வாழத் தொடங்கிவிட்டோம். இன்றைய நிலையில் தமிழுடன் 50 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகள் கலந்துவிட்டன. அன்றாடப் பேச்சில் நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனர். கிட்டத்தட்ட மொழி மாறிக்கொண்டிருக்கிறோம்.


 தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. இனமும் மாறிக்கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையில் ஆங்கிலக் கலப்பு என்பது மிக  எளிதாக நடந்துவருகிறது. ஆங்கிலப் படங்களில் எங்காவது பிரெஞ்சு மொழியில் பேசுகிறார்களா. நீ ஏன் செய்கிறாய்? அவனது தாய்மொழிமீது விழிப்புடன் இருக்கிறான். இங்கிலாந்தில் மொழிக் கலப்பு தொடர்பான எதிர்ப்பு இயக்கத்துக்கு இளவரசர் சார்லஸ் தலைவராக இருக்கிறார். இயல், இசை, நாடகம் என்று சொல்லிவருகிறோம். இயலான பாடல்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிக்கிறோம். இசையில் பாப், ராக் என்று கலந்துவிட்டோம்.



ஒய் திஸ் கொலவெறிடி? என்று எழுதுகிறவனைப் பார்த்து தமிழ்மீது உனக்கு ஏன் இந்தக்  கொலைவெறி என்று கேட்கவேண்டும். நீ எளிதாகப் பாடி விடுகிறாய். ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிறாய். இந்த நொடியில் அழியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் அழியும். அதற்கு இதுதான் தொடக்கமாக இருக்கும். இதுபோன்ற பாடல்களுக்கு எதிரான இயக்கமே தொடங்கப் படவேண்டும்.


 தமிழும் தெரியும். தெலுங்கும் தெரியும். ஆனால் தமிழ், தெலுங்கு மொழியாக மாறிய காலம் தெரியுமா? குரங்கு தெரியும். மனிதன் தெரியும். குரங்கு மனிதனாக மாறிய படிநிலை தெரியுமா? அதுபோல தமிழும் மாறும். அது நமக்குத் தெரியாமல் போய்விடும். இன்று 'ஒய் திஸ்  கொலவெறிடி' என்று பாடி விடுகிறாய். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் முடிந்துபோய்விடும். உன்னுடைய மொழி புதிய மொழியாக மாறியிருக்கும்.



எல்லீஸ் டங்கன் என்ற ஆங்கிலேயன் தமிழில் படமெடுத்த காலத்தில் தமிழ் செழித்திருந்தது. நல்ல தமிழில் தலைப்புகளை வைத்தார்கள். இந்த மானங்கெட்ட தமிழன் படமெடுக்கும் போது தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. நீ தமிழனாக இருந்துகொண்டு இப்படி செய்வதில் உனக்கு கொஞ்சங்கூட வெட்கமாக இல்லையா?



மிக அண்மையில் சீனாவில், தொலைக்காட்சியில் வானொலியில், திரைப்படங்களில் ஆங்கிலத்தைக் கலந்தால் தண்டனை உண்டு என்று அறிவித்துள்ளார்கள். அதுபற்றி 2010, டிசம்பர் 23 அன்று வெளிவந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்
   என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் அகமதிநிஜாத்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறார். உலகமயமாக் கலின் விளைவாக ஆங்கிலம் வேகமாகக் கலந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கில மொழி கலப்புக்கு எதிரான இயக்கங்கள் தோன்றி வருகின்றன. அந்தவகையில் ஒய் திஸ் கொலைவெறிடி... போன்ற மொழிக் கலப்புப் பாடல்களை எழுதுகிறவர் களுக்கு தண்டனை அளிக்க வேண்டும்.

நன்றி - த சண்டே இந்தியன்

Saturday, October 06, 2012

நெடுமாறனுக்கு கலைஞரின் காட்டமான கடிதம்


தமிழகத்தில் நடைபெறும அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து,  இன்று முதல் கருப்புச் சட்டையே அணிவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இது குறித்து இன்று அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், கடுமையான மின் தடை, குடிநீர் பஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு  கொடுமைகளையெல்லாம் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கைக் கண்டித்து, அமைதியாக அறவழியில் கருப்பு உடை அணிந்து
மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்போகிறோம் என்று கழகச் செயற்குழுவிலே முடிவெடுத்து, முறைப்படி அதற்கு அனுமதி கோரி, காவல் துறையினரிடம் எழுதிக் கொடுத்தால் அதற்குக் கூட இந்த ஆட்சியிலே அனுமதி கிடைக்கவில்லை. கழகத்தின் சார்பில் கேட்கப்படும் வழி சரியில்லை
என்று சொன்னதால், மூன்று மாற்று வழிகளைக் குறித்துக் கொடுத்து, இதிலே ஒன்றைக் கொடுங்கள் என்று கேட்டால்; அதற்குக்கூட இந்த ஆட்சியினர் அனுமதி தரவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
ஒரே நாளில் ஒரு சில மணி நேரங்களில் மட்டுமே தமிழக மக்கள் பிரச்சினைகளுக்காக நடத்தவிருந்த மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தற்போது மூன்று நாட்களில் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த ஆட்சியினர் நம்மைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சில மணிகள் சாலையோரத்தில் கருப்பு உடை அணிந்து நிற்பதோடு முடிந்து விடுகின்ற நிலையை - கருப்பு உடை அணிந்து வீடு வீடாகச் சென்று இந்த ஆட்சியினரின் அவலங்களை எடுத்துச் சொல்லக் கூடிய அளவிற்கு நம்மைக் கொண்டு போய் விட்டிருப்பது ஆளுங்கட்சியினரே தவிர நாமல்ல.



கழகம் நடத்தவிருந்த மனிதச் சங்கிலிக்கான அனுமதியை ரத்து செய்து காவல் துறை பிறப்பித்த ஓர் ஆணையை தற்போது என்னிடம் காட்டினார்கள். அந்த ஆணையின் தொடக்கத்தில், “அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நிலவும் கடும் மின்வெட்டைக் கண்டித்தும், தொடர்ந்து தி.மு.க. வினரைப் பழி வாங்குவதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்” போராட்டம் என்று எழுதியிருக்கிறார்கள். எனவே காவல் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அ.தி.மு.க. ஆட்சியிலே கடும் மின்வெட்டு இருப்பதையும், தி.மு.க. வினர் பழிவாங்கப்படு வதையும் ஒப்புக் கொண்டிருப்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. எனவே இன்றையதினம் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிற அளவிற்குத் தமிழகம் இருண்ட கண்டமாகவே  காட்சியளிக்கிறது.


இந்த அவலங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலேதான் 5ஆம் தேதியன்று சென்னையிலும், 6ஆம் தேதியும், 7ஆம் தேதியும் மற்ற மாவட்டங்களில் மாநகர், ஒன்றியம், சிற்றூர், பேரூர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும், கருப்பு உடை அணிந்து துண்டுப் பிரசுரங்களாக அச்சியற்றி, வீட்டுக்கு வீடு எடுத்துச் சென்று சாதாரண, சாமான்ய, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் வழங்க வேண்டுமென்று கழகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


இந்தப் பணியினை மிகவும் அமைதியாக, அற வழியில், எந்தவிதமான பிரச்சினைக்கும் இடம் தந்து விடாமல் நடத்திட வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். சாலையோரத்தில் அமைதியாக மனிதச் சங்கிலியாக ஒரே இடத்தில் கருப்பு உடை அணிந்து நின்று அணிவகுப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றுதான் நாம் அனுமதி கோரினோம்.


நாளைய மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவித்தேன். ஆம் நாளையதினம் கருப்புச் சட்டை அணிந்து மனிதச் சங்கிலியில் கலந்து கொள்வதாக இருந்தேன். அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. பரவாயில்லை, இன்று முதலே இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து கருப்புச் சட்டை அணிவேன், இன்றே அணிவேன்; இனி என்றும் அணிவேன் என்று கூறியுள்ளார்.


 கடிதம் 2 


சென்னை: இலங்கை போராளிகளிடையே சகோதர சண்டையை தொடங்கிவைத்தவன் நான் என்றால் 1985-ம் ஆண்டு உருவான டெசோ அமைப்பில் நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராக சேர்ந்தார் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.




இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது," கடந்த 23-8-2012 அன்று நெடுமாறன் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில் இலங்கையில் விடுதலைப்போராளிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்றபோது, அதைத்தடுக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்று எழுதியிருந்தார். அதற்கு நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆதாரப்பூர்வமாக சில விவரங்களை குறிப்பிட்டு; இலங்கையில் போர் நடைபெற்றபோது அதனை தடுக்க நான் எதுவுமே செய்யவில்லையா? என்னென்ன செய்தேன்? என்பதையெல்லாம் தொகுத்து தேதிவாரியாக விளக்கியிருந்தேன்.




நெடுமாறனை பொறுத்தவரையில் அவருக்கு எப்படியாவது தற்போது ஆளுங்கட்சியோடு இணைந்து ஏதாவது பயன்பெற வேண்டுமென்பதுதான் குறிக்கோள். அங்கே நெருங்க வேண்டுமென்பதற்கு என்ன வழி என்று பார்த்து, நம்மை தாக்கினால்தான், அங்கே உள்ளவர்கள் மனம் குளிர்வார்கள், தனக்கு தக்க இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, 24 மணி நேரமும் நம்மை சாடுவதிலேயே நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்.



1984-85 ஆண்டுகளில் போராளிகளிடையே சகோதர சண்டையை தொடங்கி வைத்தவனே கருணாநிதிதான் என்று எழுதியிருக்கிறார். சகோதர யுத்தத்தை போராளிகளிடையே நான் தூண்டி விட்டேனா? அல்லது நெடுமாறன் கும்பல் தூண்டி விட்டதா? என்பதை அந்தப்போராளி இயக்கங்களை சேர்ந்தவர்களே நன்குணர்வார்கள். அந்த போராளிகள் இயக்கங்களை நான் தான் தூண்டிவிட்டேன் என்று நெடுமாறன் கூறுவதை வாதத்திற்காக ஒப்புக்கொண்டு கேட்கிறேன்.




நான்தான் போராளிகள் இயக்கத்தை தூண்டி விட்டவன் ஆயிற்றே? 1985-ம் ஆண்டு மே திங்களில் என் தலைமையில் உருவான "டெசோ'' அமைப்பில் இந்த நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராக சேர்ந்தார்? "டெசோ'' அமைப்பின் சார்பில் கோவை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் என்னுடன் எதற்காக நெடுமாறன் கலந்து கொண்டார்?



கடைசியாக நடைபெற்ற வேலூர் பேரணியில் நெடுமாறன் கலந்துகொள்ளாமல் யாருக்கும் தெரியாமல் இலங்கை சென்றபோது, 10-10-1985 தேதியிட்டு எனக்கொரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், "டெசோ இயக்கத்தை மேலும் வளருங்கள். ஏனெனில் தமிழீழம் காண போராடும் விடுதலை போராளிகளுக்கும் மக்களுக்கும் நமது "டெசோ'' இயக்கத்தை தவிர உற்ற துணைவன்-உண்மையான துணைவன் வேறு யாருமில்லை'' என்று எழுதிய கை நெடுமாறன் கை தானே?


அதுமாத்திரமல்ல; அந்த காலகட்டத்தில் இதே நெடுமாறன்; அவர் எழுதிய "மத்திய-மாநில உறவுகள்-சில குறிப்புகள்'' என்ற நூலினை நான்தான் வெளியிட வேண்டுமென்று கேட்டு, 30-6-1985 அன்று சென்னை பெரியார் திடலில் தி.சு.கிள்ளிவளவன் தலைமையில் நான் வெளியிட்டேன். அப்போது நெடுமாறனுக்கு நான்தான் இலங்கையில் சகோதர சண்டையை தொடங்கி வைத்தவன் என்று தெரியாமல் போய்விட்டதா?



நெடுமாறன் அறிக்கையில் திரும்பத்திரும்ப நான் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து கொண்டதைபோல தோற்றமளிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். அது ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எழுதியுள்ளதாகவே தெரிகிறது.



டெசோ மாநாட்டிற்காக வருகை தந்திருந்த வாஜ்பாய், என்.டி.ராமராவ், ராமுவாலியா போன்றவர்களின் முன்னிலையில், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளிடம் "நமக்குள் நாமே மோதி கொள்ளக் கூடாது, சகோதர யுத்தம் கூடாது, சபாரத்தினத்தை கொன்றுவிட வேண்டாம், இலங்கை தமிழர்களுக்காக அனைவரும் சேர்ந்துதான் பாடுபடவேண்டும்'' என்று அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு உருக்கத்தோடு கேட்டுக்கொண்டேன். நெடுமாறனுக்கு இது தெரியாதா?




இலங்கை தமிழர் பிரச்சினையில் என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு முதுகெலும்பு இல்லை என்று ஒரு வார்த்தையை நெடுமாறன் பயன்படுத்தியிருக்கிறார். எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.



இலங்கைத்தமிழர் பிரச்சினையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் என் மனச்சாட்சிபடி என்னால் முடிந்த அளவிற்கு என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன்.



இதிலே நெடுமாறன் போன்றவர்களின் சான்றிதழ்களை நான் ஏற்கனவே பெற்றிருக்கிறேன். எனவே இப்போது அவரை போன்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறேன். என்மீது குறை கூறி விரலை நீட்டுகின்ற நெடுமாறன் போன்றவர்கள் வாய் ஜாலம் காட்டுவதை தவிர இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள்.


 என்னைப்பற்றியும் நன்கறிவார்கள். ஏதோ என்னைத்தாக்கி எழுதினால் தங்கள் பிழைப்பு நடக்காதா என்பதற்காக எழுதுகிறார்கள் என்றால் எழுதி விட்டுப்போகட்டும்! எதையும் தாங்கும் இந்த இதயம்-வாழ்க வசவாளர்கள்! என்று மட்டும் அண்ணா வழியில் கூறி, அவ்வழியில் நடப்போம் நாம்" என்று கூறியுள்ளார்.

Wednesday, June 06, 2012

ஆ ராசாவின் உள்குத்து கடிதம் - கலைஞர் அதிர்ச்சி - ஜூ வி கட்டுரை

அலற வைத்த ஆ.ராசா கடிதம்


ழுகார் உள்ளே நுழைந்ததும், தனது சிறகுகளுக்குள் இருந்து 'முரசொலி’யை எடுத்தார்! 

''கருணாநிதியின் 89-வது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களைவிட, வராதவர்களைப் பற்றித்தான் அதிகம் பேச்சு'' என்று பொடி வைத்துச் சொன்ன கழுகார், கையில் இருந்த ஜூன் 2-ம் தேதி முரசொலியின் இரண்டாம் பக்கத்தைத் திருப்பினார்.


''ஆ.ராசாவின் கடிதம்தானே?'' என்றோம்.


''கடிதமா அது. தி.மு.க. வட்டாரத்தில் அதை, 'கந்தகக் குண்டு’ என்றே வர்ணிக்கிறார்கள். நிபந்தனை ஜாமீனில் வெளியே விடப்பட்டு இருக்கும் ராசா, டெல்லியில்தான் தங்கி இருக்கிறார். டெல்லியை விட்டுக் கிளம்ப வேண்டுமானால், தனி நீதிமன்றத்தின் அனுமதி வாங்க வேண்டும். 'ஜூன் 3-ம் தேதி தலைவரின் பிறந்தநாள். அதற்கு நிச்சயம் நீங்கள் வந்துவிட வேண்டும்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொன்னார்கள். ராசாவும் ஆர்வமாக இருந்தார். ஆனால், கோபாலபுரத்தில் சிலருக்கு அதில் விருப்பம் இல்லை. 'ராசா வந்தால், பிறந்த நாள் விழாவின் ஹைலைட்டே அவர் வருகை என்று ஆகிவிடும்’ என்று சொல்லி கட்டையைப் போட்டு விட்டார்கள். இது ராசாவின் கவனத்துக்குப் போனதாம். கோபம் கொண்டாலும் ஏனோ தன்னை சாந்தப்படுத்திக் கொண்டார்!''


''சிறை தந்த பக்குவமாய் இருக்கும்.''


''இருக்கலாம்! சென்னைக்கு வந்து கருணாநிதியை வாழ்த்த இயலாத நிலையில், டெல்லியில் இருந்தே ஒரு கடிதத்தை எழுதினார் ராசா. அந்தக் கடிதம் தனது கைக்குக் கிடைத்ததும் கலங்கிப்போன கருணாநிதி, நான்கைந்து முறைக்கு மேல் அதைப் படித்தாராம்.


 'அப்படியே முரசொலியில் போடலாம்’ என்று சொன்னவர், திடீரென  'போடலாமா... வேண்டாமா?’ என்று குழம்பிப்போனாராம். கருணாநிதியை அளவுக்கு மீறிப் புகழ்வதுதான் அந்தக் கடிதத்தின் ஒட்டுமொத்த சாரம்சம் என்றாலும், ஒரே பத்தியில் தன்னுடைய ஒட்டுமொத்த ஆத்திரத் தையும் தீர்த்துவிட்டார் ராசா என்பதுதான் கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு!''


''என்ன சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்?''


''கருணாநிதி தனது வாழ்க்கை வரலாறாக எழுதிய 'நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காண்பித்துத் தொடங்கும் ராசா, 'வாழ்க்கையைப் போராட்டம் என்று வர்ணிப்போர் உளர், எனக்கோ போராட்டமே வாழ்க்கை... என்று சொல்லி இருக்கிறீர்கள். இது உங்களைப் பற்றிய உங்களின் சுயவிமர்சனம். இந்த வரையறைக்குள் வர எனக்கும் தகுதி உண்டு என வரித்துக்கொள்வதற்கு உங்களுக்குப் பின் தலைவன் இல்லை என்பது உங்களுக்குப் பெருமை. எங்களின் வெறுமை’ என்று கடுமையான வார்த்தைகள் போட்டு எழுதி இருக்கிறார் ராசா.


'கலைஞருக்கு அடுத்து ஸ்டாலின்தான் தலைவர்... இல்லை இல்லை அழகிரிக்குத்தான் அந்தத் தகுதி இருக்கிறது... ஏன் ஒரு பெண் வரக் கூடாதா? கனிமொழிதான் அடுத்த தலைவர்’ என்று ஒவ்வொருவரும் அணி அணியாகப் பிரிந்து நிற்கிறார்கள். இந்த அணிகளுக்கு ஆட்களைத் திரட்டுவது மட்டும்தான் இப்போது கட்சியில் நடக்கிறது. கட்சியில் ராசா என்பவரும் முக்கியமான மையம். 

அவரை யார் இழுப்பது என்று போட்டியே நடக்கிறது. ராசாவுக்கும் ஸ்டாலினுக்கும் ஏனோ பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு இரண்டு மூன்று தடவை திகார் சிறையில் போய்ப் பார்த்தார் அழகிரி. ஸ்டாலினும் இரண்டு தடவை ராசாவுடன் திடீர் சந்திப்பு நடத்தினார். கனிமொழி மீதும் ராசாவுக்கு சில வருத்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் கலை ஞருக்கு இணையான தகுதி இங்கு எவருக்கும் இல்லை என்ற கோபத்தை ராசா காட்டினார்’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.''


''ராசாவின் கோரிக்கைதான் என்ன?''


''ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவி அவருக்குத் தரப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். 'கட்சிக்காகத்தான் அவர் பல அவமானங்களைப் பட்டார். அதைக் கட்சிதான் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால், அவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் வேண்டா வெறுப்பாகப் பார்ப்பது ஏன்?’ என்று ராசா ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். அதனால்தான், ராசா சென்னைக்கு வராமல் இருப்பதே நல்லது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் நினைக்கிறார்களாம்!''


''கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்படி?''


''எல்லாக் கூட்டங்களிலும் உமது நிருபர்கள் வலம் வந்தார்களே! ஒரு சில குறிப்புகளை மட்டும் சொல்கிறேன். மூன்று நாட்களாக ஸ்டாலின் நல்ல மூடில் இல்லை. ஜூன் 1-ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. மகளிர் அணி விழா நடத்தியது. மகளிர் அணி நடத்தினாலும் கனிமொழிக்கு முக்கியத்துவம் தந்த விழா அது. ராஜாத்தி அம்மாள் துணையாக அந்தக் கூட்டத்துக்குப் பார்வையாளராக வந்த கருணாநிதி, விழா முடியும் வரை நெடுநேரம் இருந்து, கண்டுகளித்தார். கனிமொழியின் அன்றைய பேச்சு பலராலும் வரவேற்கப்பட்டது. கூட்டத்துக்கு ஸ்டாலினும் வந்திருந்தார்.


அடுத்த நாள், காமராஜர் அரங்கத்தில் இளைஞர் அணி சார்பில் ஒரு கருத்தரங்கம். வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்துக்கும் கருணாநிதி வரவேண்டும் என்று அழைத்தாராம் ஸ்டாலின். வருகிறேன் என்று முதலில் ஒப்புக்கொண்ட கருணாநிதி, ஏனோ வரவில்லை. இது ஸ்டாலினைக் கோபம்கொள்ள வைத்ததாம். அதனால்தான் 3-ம் தேதி பிறந்த நாள் அன்று முழுப் பங்களிப்பையும் தராமல் ஸ்டாலின் தவிர்த்து விட்டதாகச் சொல்கிறார்கள்'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்.


''சிங்கத்தைச் சீண்டிவிட்டது மாதிரி நடராஜன் சிலிர்த்து எழ ஆரம்பித்து இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கி விட்டார் நடராஜன் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். போலீஸுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நடராஜன், இப்போது மனித உரிமை கமிஷனின் கதவைத் தட்டிவிட்டார். 4-ம் தேதி, காவல்துறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் நடராஜன் புகார் அளித்தார்.


 புகார் கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், 'கடந்த பிப்ரவரி 18-ம் தேதி டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் வந்த 15-க்கும் மேற்பட்ட போலீஸார் என் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து என்னைத் தாக்கினார்கள். ஏன், எதற்கு என்றுகூட எனக்குப் புரியவில்லை. அதன்பின், என்னை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றி, செங்கிப்பட்டி, வல்லம் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு என்கவுன்ட்டர் செய்து என்னைக் கொல்லப்போவதாகப் பேசிக்கொண்டனர்.


 அதன் பிறகு, எங்கிருந்தோ வந்த உத்தரவை அடுத்து என்னை தஞ்சாவூர் கொண்டு சென்றனர். இது மனித உரிமை மீறல்’ என்று சொன்னார். டெல்லிக்குச் சென்று மத்திய மனித உரிமை ஆணையத்திலும் இதுபற்றி புகார் கொடுக்கப்போகிறாராம்.


'இப்போது, அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அதிலும் போலீஸ்காரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை. நில மோசடி என்று போலிப் புகாரில் என்னைக் கைது செய்த போலீஸ்காரர்களால் அதை நிரூபிக்க முடிந்ததா? என் வீட்டில் இருந்து எதையாவது இந்த போலீஸால் கைப்பற்ற முடிந்ததா? நான் இப்போது ஜாமீனில் இருக்கிறேன். ஆனால், இப்போதும் இந்தப் போலீஸ் தொல்லையைத் தாங்க முடியவில்லை. அதிகாலையில் வாக்கிங் போக முடியவில்லை. இருட்டில் மறைந்துகொண்டு ஒருவன் பின் தொடர்கிறான். கேட்டால், போலீஸ் என்கிறான். 

 ஆனால், அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொன்னால், காட்டுவது இல்லை. அவன் போலீஸ்காரனா இல்லை... ராமஜெயம், தா.கிருஷ்ணனைக் கொலை செய்த கும்பலில் ஒருவனா என்பது எப்படித் தெரியும்?’ என்று பதற்றமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் நடராஜன்.''


''ம்!''


''தஞ்சாவூரில் பி.ஆர்.ஓ-வாக இருந்தவர் கிரி. இவர் எம்.நடராஜனுக்கு ஒரு வகையில் உறவினர். ஜெ. - சசி பிரிவின்போது இவர் வேலூருக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், தஞ்சாவூரில் நடந்த நடராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அம்மா பயத்தில் உளவுத்துறையைக் கண்டு பலரும் ஓடி ஒளிந்தனர். 

 ஆனால், இவர் மட்டும் வலிய உளவுத்துறையினரிடம் சென்று 'என்னைப் பற்றி ஏதாவது போட்டுக்கொடுங்க’ என்று ரீதியில் பேசினார். திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கல்தா கொடுத்த நேரத்தில், இவரையும் சேலம் போக்குவரத்துக் கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இடமாற்றம் செய்தார்கள். பதவி ஏற்பதற்காக சேலம் சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம். பின்னே, அப்படி ஒரு பதவியே கிடையாது என்று அங்கு சொன்னார்களாம்.''


''இது மாதிரியான இடத்தை எல்லாம் எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறார்களோ!'' என்று நாம் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடி எஸ்கேப் ஆனார் கழுகார்!


படங்கள்: என்.விவேக், கே.குணசீலன்


 பிரேமலதா காட்டிய திசை!


இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக, ஜூன் 3-ம் தேதி புதுக்கோட்டை வந்தார் பிரேமலதா விஜயகாந்த். கறம்பக்குடியில் பிரசாரத்தைத் தொடங்கியவர், மீனம்பட்டி கிராமத்தில் பேசியபோது, ''தி.மு.க தலைவர் கருணாநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்'' என்று புது டிராக் போட்டார். ''இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு தே.மு.தி.க. சார்பில் 89-வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரி¢வித்துக் கொள்கிறோம்'' என்று மீண்டும் அவர் அழுத்திப் பேசியது அ.தி.மு.க-வினரை யோசிக்க வைத்திருக்கிறது. 'இந்தப் பேச்சுக்கு கருணாநிதியிடம் இருந்து விரைவில் பாசிட்டிவ் பதில் வரும்’ என்று தே.மு.தி.க-வினர் சந்தோஷத்தில் கிடக்கிறார்கள்.


 கார்த்திகேயன் மன மாற்றம்!


அகில இந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடந்தது. பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் கலந்துகொண்டார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் மனித உரிமை ஆர்வலர்கள் வந்திருந்தார்கள்.

 இதில் ஹைலைட், ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனின் அறிக்கைதான். மரண தண்டனை தேவை இல்லை என்பதற்கான வாதங்களை அறிக்கையில் வைக்கும் கார்த்திகேயன், 'என் எண்ணத்தில் மரண தண்டனை உலகமெங்கும் ஒரு நாள் ஒழிக்கப்பட்டுவிடும் எனத் திண்ணமாக நம்புகிறேன். தூக்குக் கயிற்றின் நிழலில் இருக்கும் மனிதனின் எண்ணவோட்டம், தண்டனை விதிப்புக்கும் தண்டனை நிறைவேற்றத்துக்கும் இடையே உள்ள மிகநீண்ட இடைவெளி, தன் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை ஆகியன ஒன்றாக இணைந்து கொடும் மனவலியை ஏற்படுத்தி உள்ளத்தைச் சிதைத்து இரட்டைத் தண்டனைக்கு வழி வகுத்துவிடும்'' என்று கறாராக தனது முடிவைச் சொன்னது, தமிழ் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது!



1.ஆவுடையப்பன் - ஜெயக்குமார்... இதில் சமாளிப்பதில் கெட்டி யார்? 

 
ஆவுடையப்பன் சீரியஸான முகத்தை வைத்துச் சமாளிப்பார். ஜெயக்குமார் சிரித்த முகத்துடன் அதையே செய்வார். ரெண்டு பேருமே ஜாடிக்கு ஏற்ற மூடிகள்!


 
2. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக ஒரு தமிழர் கூட இல்லையாமே? 


காரியக் கமிட்டியிலா... காங்கிரஸிலா?



3. நூற்றாண்டு விழா காணும் மு.வ. பற்றி..? 



மொழி வளமும் இலக்கியத் திறனும் இருக்குமானால், ஓர் அலுவலக எழுத்தர்கூட தன்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகும் அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு உதாரணம் மு.வரதராச​னார். காக்காய் பிடிப்பு, கழுத்​தறுப்புகள் இல்லாமல் தன் தகுதியால் அந்தப் பதவியை அடைந்த சிலரில் ஒருவர். பரிமேலழகர் மூலமாக, பண்டிதர்களுக்கு மட்டுமே என மூடிவைக்கப்பட்டு இருந்த திருக்குறளை, தனது இனிய, எளிய தெளிவுரை மூலமாக பாமரர்க்கும் திறந்து விட்டவர்.


 'மு.வ.வின் கையடக்கத் திருக்குறள் தெளிவுரை’ என்ற பாக்கெட் அளவுப் புத்தகம் இதுவரை எத்தனை லட்சங்கள் விற்றன என்பது அதை வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கே தெரியாது.
அனைத்தையும்விட, தமிழ் இலக்கியம் சொல்லும் நெறிகளின்படி வாழ்ந்த மனிதர். ஏழை மாணவர்களை அவரே படிக்க வைத்தார். தன்னை விடத் தகுதியான மாணவன் என்று உணர்ந்தால், தனது புத்தகத்துக்கு மதிப்புரை எழுதவும் வைத்தார். அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தபோது ஒரு காட்சி...
கோவில்பட்டி கோ.வெ.நா.கல்லூரி முதல்வரும் தகுதிவாய்ந்த அறிஞருமான அரசு.நாராயணசாமி, உடல் நலம் குன்றிய நிலையிலும் தன்னைப் பார்க்க வருகிறார் என்று தெரிந்ததும், துணை வேந்தரான மு.வ. தனது அறையில் இருந்து எழுந்து வெளியில் வந்து அவரைச் சந்தித்து அனுப்பி​வைத்த பெருந்தன்மைக்காரர். தமிழால் மு.வ. தகுதி பெற்றிருந்தாலும் அவரால் தமிழும் தகுதி பெற்றது!\\




3. பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றையும் ஏற்றிய ஜெயலலிதா, பெட்ரோல் விலையை ஏற்றியதற்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கிறாரே? 


'எந்த விலையாக இருந்தாலும் நான்தான் உயர்த்துவேன்’ என்ற எண்ணத்தால் இருக்குமா?



4. நாடகம் சரி, அதென்ன 'கபட’ நாடகம்? 



அரங்கத்தில் நடப்பது நாடகம். அரசியலில் நடப்பது கபட நாடகம்! 'கபடம்’ என்றால் திருட்டுத் தனம்.


சமீபத்திய உதாரணம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தினார்கள். நாடு முழுவதும் எதிர்ப்பு வந்தபோதும், 'எங்களுக்கு வழி இல்லை. மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று மத்திய பிரசார பீரங்கிகள் ஊதின.


 திடீரென, இப்போது 2 ரூபாய் குறைக்கப்பட்டது மட்டும் எப்படி சாத்தியம் ஆனது? 6 ரூபாய் உயர்த்தினால் போதுமானது என்றுகூட எண்ணெய் நிறுவனங்கள் சொல்லி இருக்கலாம். '8 ரூபாய் உயர்த்துவோம். எதிர்ப்பு வந்ததும் 2 ரூபாய் குறைப்போம்’ என்று ஒட்டகத்தின் கண்ணில் புல்லைக் காட்டி எடுத்துப் போடும் ஏமாற்று வேலையை பட்டப்பகலில் செய்தார்களே... அதற்குப் பெயர்தான் கபட நாடகம்!




5. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரே பிரதமராக வர வேண்டும்’ என்கிறாரே சங்மா? 


இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன், நேரடியாகத் தேர்தலில் நின்று வென்று எம்.பி. ஆனவர் அல்ல. மாநிலங்கள்அவை உறுப்பினர். எனவே, சங்மாவுக்கு மன்மோகன் மீது என்ன வருத்தமோ? ஒருவேளை சங்மாவுக்கு எதிராக சிங் கட்டையைப் போடுகிறாரோ?


6. 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ விளம்பரங்களுக்கு மட்டும் பல கோடி செலவு செய்து விட்டார்கள் போல? 


ஒருவேளை, நூறு ஆண்டுகளுக்குத் தர வேண்டிய விளம்பரங்களை ஓராண்டில் தரத் திட்ட​மிட்டுள்ளார்களோ?



7. உண்மையான தமிழினத் தலைவர் யார் என்று கேட்டால்  'பட்’டென்று என்ன சொல்வீர்கள்? 


யாரும் இல்லை என்பேன்!



8. 'தமிழ் ஈழம் கேட்பதைக் கைவிட வேண்டும் என்று இங்கு உள்ள தலைவர்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்’ என்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்? 


யாராவது அவரை வாங்கித் தரச் சொன்னார்​களா? ஞானதேசிகன் ஏன் பயப்​படுகிறார்?



9. அரசியல் அறம் என்பது என்ன? 


எழுத்தாளர் வைகறை, 'வாருங்கள் கவிஞர் இன்குலாப்பை சந்திப்போம்’ என்ற நிகழ்ச்சிக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசிய இன்குலாப் இப்படிச் சொன்னார்...


'தமிழர் பெரும்பான்மையாக இருந்து சிங்களவர் களை ஒடுக்கினால், என் பேனா சிங்​களவர் களுக்காகவே எழுதும்’. இதுதான் அரசியல் அறம்!


10. வெற்றி மட்டுமே ஒரு மனிதனை அடையாளப்​படுத்துகிறதே? 


வீரபாண்டிய கட்டபொம்மனும், பூலித் தேவனும், மருது பாண்டியரும் வாழ்ந்த காலத்தில் தங்களின் லட்சிய வெற்றிகளைப் பார்க்கவில்லை. ஆனால், அவர்களை மனிதர்கள் ஆராதிக்கிறார்களே. என்ன காரணம்? வெற்றி பெற்றவர்களைத்தான் அடையாளப்படுத்த வேண்டுமானால், அவர்களைக் காட்டிக் கொடுத்தவர்​களைத்தான் நாம் பூஜித்திருக்க வேண்டும்.
லட்சியத்துக்காக, கொள்கைக்காகப் போராடியவர்கள், வாதாடியவர்கள் வரலாற்றில் இடம் பெறு​​வார்கள். அதில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை!


 THANX -JU VI

Tuesday, May 08, 2012

இலக்கியவாதி எழுத்தாளர் ஜெய மோகன் தாக்கு - சி.பி ஒரு அடிமுட்டாள் விமர்சகன்

http://cdn3.tamilnanbargal.com/sites/default/files/images/person/img_6318_0.jpg
நாகர்கோயிலில் நான் எழுதிய மலையாளப்படம் ஒழிமுறியின் படப்பிடிப்பு. கிட்டத்தட்ட குழுவே படத்தை பாதியில் விட்டுவிட்டு பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தை பார்த்தார்கள். வழக்கமாக நான் படப்பிடிப்புகளுக்குச் செல்வதில்லை. ஆனால் ஒழிமுறியில் பெரும்பாலான நேரம் இருந்துகொண்டிருக்கிறேன். நானும் குடும்பத்துடன் சென்று பாலாஜியின் படத்தைப் பார்த்துவந்தேன்.

தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று இது என்பதில் சினிமா தெரிந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. சினிமா ஆக்கத்துடன் நடிப்பு, திரைக்கதை அமைப்பு, காட்சிப்படுத்தலின் சிறு நுட்பங்கள் அனைத்திலும் முழுமையை நோக்கிச்செல்லும் படைப்புகளில் ஒன்று இது.சினிமா எடுப்பதைப்பற்றி அறிந்தவர்கள் அதில் முழுமை என்ற இலக்கை குறிவைப்பதே அபத்தம் என அறிவார்கள். அவர்கள் கண்ணில் இந்தப்படம் பிரமிப்பூட்டக்கூடியதாகவே இருக்கும்.

படத்தின் மீதான விமர்சனத்தை எழுதவிரும்பவில்லை. படம் எனக்கு அபாரமான மன எழுச்சியை உருவாக்கியது. கலை என்பதே நம் வாழ்க்கையை நாம் விரும்பியபடி சொல்லிப்பார்ப்பதுதான். கடவுள் மீதான மனக்குறையை அப்படி தீர்த்துக்கொள்வதுதான். கலைஞனின் கருணையும் கையாலாகாத கனவும்தான் பெரும்பாலும் கலையின் உள்ளடக்கம். இதுவும் அப்படியே.

ஒரு பொது அறிவுக்காக இணைய மதிப்புரைகளை வாசித்தேன். எந்த ஓரு விஷயத்திலும் இணையத்தில் தமிழில் தொண்ணூறு சதவீதம் அடிமுட்டாள்தனங்கள்தான் எழுதப்பட்டிருக்கும் என்பது என் கணிப்பு. ஏனென்றால் நம்மாட்களுக்கு எதிலும் வாசிப்பும் இல்லை, வாசிப்பு தேவை என்ற புரிதலும் இல்லை. சினிமாவாவது ஏதோ பார்ப்பார்கள் என நினைத்திருந்தேன். அதிலும் மண்

இரு விமர்சனங்களை குறிப்பாகச் சொல்லவேண்டும். இந்த விமர்சனத்தை மன்னிக்கலாம், ஒரு வழக்கமான அசட்டுத்தனம். இந்த விமர்சனத்தில் அந்த மேதை 17 ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சொல்கிறார் பாருங்கள், ஹாலிவுட்டில் ஊறுகாய் வடிவில் பாதுகாக்கப்படவேண்டிய மூளை! 



அவரது கண்டனத்துக்கு உள்ளான பதிவு

வழக்கு எண் 18 / 9 - சினிமா விமர்சனம்  

http://www.adrasaka.com/2012/05/18-9.html


இது குறித்து உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

 

diski -

மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது 
 
.
http://www.hotlinksin.com
 
 
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
 
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
 
"/>a>

 

Tuesday, April 03, 2012

குங்குமம் பத்திரிக்கையை கிண்டல் அடித்ததன் மூலம் சன் டி வி யை பகைத்துக்கொண்ட சாரு நிவேதிதா

 புலம்பல் திலகம் சாரு நிவேதிதா அவர்கள் எக்செல் நாவலில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என 30 பக்கங்கள் புலம்பியது அனைவருக்கும் ( அதாவது அந்த நாவலை வாசித்த  3800 பேருக்கும்) தெரிந்ததே.. அந்த நாவல் வெளியான சமயத்தில் குங்குமம் இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.. அந்த பேட்டிக்கு சன்மானமாக ரூ 500 அனுப்பி இருக்காங்க.. இப்போ அவர் வெப்சைட்ல வாசகர்கள் கலந்துரையாடலில் நைஸா அதை சொல்லி காட்டி இருக்கார்.. 


ஜோஸஃப் சுகானந்த்: நான் சில நாட்களாக தலயிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கேள்வி.   தல, நீங்கள் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறி வருகிறீர்கள். ஒரு விதத்தில் அது சரியானதாகத் தோன்றினாலும் இன்னொரு வகையில் பார்த்தால் இன்று இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று படுகிறது. இன்று உங்களுக்கு இரண்டாயிரம் பேர் கொண்ட வாசகர் வட்டம் உள்ளது. உங்களையும் உங்கள் எழுத்தையும் கொண்டாடுகிறோம். உங்கள் இணையதளத்தை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள், கருத்து சொல்கிறார்கள். நீங்கள் மீடியாவில் அடிக்கடி தென்படுகிறீர்கள். உங்களை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் உட்பட அனைத்து நல்ல எழுத்தாளர்களுக்கும் ஒரு fan following உருவாகியுள்ளது. இன்னும் ‘தமிழத்தில் எழுத்தாளனை யாரும் பெரிதாய் மதிபதில்லை’ என்ற கருத்தில் உறுதியாய் உள்ளீர்களா? இல்லை அதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?   நீங்கள் பதில் கூறினால் மகிழ்வேன்.

 சி.பி - யாரும் குழம்ப வேணாம்.. ஜோசப் தலன்னு சொல்றது அண்ணன் சாருவைத்தான்..தறுதல என்பதை சுருக்கி தலன்னு கூப்பிடறார் போல.. ஒரிஜினல் தல அஜித் மன்னிக்க

ராஜ ராஜேந்திரன்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)

சி.பி - ஒரு விஷயம் ஓப்பனா சொல்றேன்.. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.. இங்கே லெண்டிங்க் லைப்ரரி இருக்கு.. ஒரே புக்கை பலர் பகிர்ந்துக்கற சிஸ்டம் இருக்கு.. சித்தோடு கே சதீஷ்குமார் நல்ல நேரம் பிளாக் ஓனர்க்கு கிஃப்ட்டா அந்த புக் வந்தது.. அவர் சித்தோட்ல இருக்கற 12 பேருக்கு அதை பகிர்ந்தார்.. நான் வாங்கி என் நண்பர்கள் 34 பேருக்கு ஷேர் பண்ணேன்.. இந்த மாதிரி படிக்கப்படறதுதான் அதிகம். ரூ 250 புக்குக்காக செலவு பண்ண தமிழன் யோசிப்பான்.. 


சாரு நிவேதிதாவின் பதில்:  ஜோஸஃப். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது.  யாராவது என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆரம்பித்து விடுவேன்.  அப்படித்தான் உங்கள் கேள்வியையும் சாரு ஆன்லைனில் போட்டு நாலு பக்கம் பதில் எழுத ஆரம்பித்தேன்.  உடனே நான் எழுதிக் கொண்டிருக்கும் – இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய ஆங்கில குறுநாவல் – gothic – ஞாபகம் வந்து உடனே பதில் சொல்வதை நிறுத்தி விட்டேன்.

சி.பி - அண்ணன் எழுதுன தமிழ் நாவல்ல 17 பக்கங்களுக்கு ஆங்கில கலப்பு இருந்தது.. அப்போ ஆங்கில நாவல்ல தமிழ் கலப்பு இருக்குமா? டவுட்டு..  டைட்டில் தான் சரி இல்லை GOMADHI THICK ,GOPAALAA THIN அப்படி ஏதாவது வெச்சிருக்கலாம்


 யாராவது ஒரு குப்பை படம் எடுத்தால் அந்தப் படத்தை 2000 பேரா பார்க்கிறார்கள்?  அந்தப் படத்தை எடுத்த  இயக்குனர் தெருமுனையில் வந்து நின்று கொண்டு துண்டா விரிக்கிறார்?  அடுத்த படத்துக்கு லொகேஷன் பார்க்க அமெரிக்கா பறந்து விடுகிறார் இல்லையா?  இங்கே நான் சிங்கப்பூர் சென்று வரவே ஐந்து வருடம் யோசித்துக் கொண்டிருக்கிறேனே, பணம் இல்லாமல்?


சி.பி - அண்ணே, சிங்கப்பூர் போய்ட்டா மட்டும் அமர காவியமா எழுதப்போறீங்க? எழுதற குப்பையை லோக்கல்ல இருந்தே எழுதுங்கண்ணே.. லோக்கல் நாவல்க்கு லோக்கல் லொக்கேஷன் போதாதா? ஹி ஹி 


 இங்கே என் கொல்லைப்புறத்தில் இருக்கும் சிங்கப்பூருக்கே ஐந்து வருட யோசனை என்றால், எப்போது நான் சிலே, க்யூபா, ஃப்ரான்ஸ் எல்லாம் போய் வருவது?  ராஜ ராஜேந்திரன் சரியாகப் பிடித்திருக்கிறார்.   என் புத்தகம் 50,000 பிரதி விற்றால் தான் இதெல்லாம் சாத்தியமாகும்.  ஆனால் இன்னும் எக்ஸைல் விற்பனை 5000 ஐக் கூட தாண்டவில்லை.


சி.பி - அந்த புக் 3800 விற்றதே பெருசு.. அண்ணனுக்கு ஆசை ஜாஸ்தி.. தமிழ்நாட்டு லைப்ரரிக்கு எல்லாம் தானம் பண்ணிடுங்க. சும்மா வீட்ல ஸ்டாக் வெச்சு வாட் யூஸ்?



மேலும் ஜோஸஃப், நீங்கள் ரொம்ப வெகுளியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலும் உங்கள் மீது நான் கோபம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால், உங்கள் கேள்விக்குப் பதிலையே எக்ஸைல் நாவலில் 30 பக்கம் எழுதி விட்டேன்.  அந்த நாவலைப் படித்தீர்களா இல்லையா?

சி.பி - நாங்க பிளாக் படிக்காமயே ஆஹா அபாரம், சூப்பர் தல பின்னீட்டிங்க அப்டினு கமெண்ட் போடற பரம்பரைல வந்தவங்க.. அந்த நாவலை ஒரு வரி விடாம ஃபுல்லா படிச்சவங்க  யாருமே இல்லையாம் , நான் அடிச்சு சொல்றேன் ஹி ஹி 

ஒரு மாணவன் 4 வருடம் எஞ்ஜினிரியரிங் முடித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான்.  நான் 40 வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நேற்று ஒரு பத்திரிகையிலிருந்து நான் எழுதிய கட்டுரைக்கு சன்மானமாக 500 ரூ செக் வந்தது.  இப்போது இதை இங்கே எழுதி விட்டேனா?  இனிமேல், 50 வருடத்துக்கு என்னை அந்தப் பத்திரிகையிலிருந்து boycott செய்து விடுவார்கள்.


சி.பி -குங்குமம் புக்ல ஒரு பக்கக்கதைக்கு ரூ 200 சன்மானம் தர்றாங்க.. உங்க பேட்டி 3 பக்கம் வந்தது.. அதுல படங்கள் மட்டும் ஒன்றரை பக்கம் இருக்கும்.. அதனால பேட்டி குங்குமம் கணக்குக்கு ஒன்றரை பக்கம் தான்.. அவங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி உங்களூக்கு ரூ 300 தான் தந்திருக்கனும்.. ஏதோ கவனக்குறைவால அல்லது ரவுண்ட் ஃபிகரா தரலாம்னு ரூ 500 தந்துட்டாங்க. இப்படி எல்லாம் குறை சொன்னா நெக்ஸ்ட் டைம் தர்ற சன்மானத்துல அந்த எக்ஸ்ட்ரா ரூ 200 ம் கட் பண்ணி அதாவது கழிச்சுத்தான் தருவாங்க.. பி கேர் ப்= ஃபுல் ஹி ஹி 


 எப்படி எனக்கு வேட்டு வைக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  சில விஷயங்களை நான் வெளிப்படையாகப் பேசினாலே எனக்கு ஆபத்து.  நீங்கள் ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்டு விட்டீர்கள்.   500 ரூ. செக்கை வைத்துக் கொண்டு நான் பிச்சைதான் எடுக்க வேண்டும் ஜோஸஃப்.  அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.  பல உயிர் நண்பர்களும் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஆதங்கத்துடன் எழுதி வருகிறார்கள்.

சி.பி - என்னப்பா இது?ஒரு இண்டர்நேசனல் எழுத்தாளரைப்போய் இப்படி சொல்லீட்டீங்களே. 


  50000 பிரதிகள் எல்லாம் விற்க வேண்டாம்; 40 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.  ஒவ்வொன்றும் 5000 விற்றால் போதுமே?  விற்பதில்லையே?  கட்டுரைகளாவது போகட்டும், நாவலாவது 50,000 பிரதிகள் விற்றால்தான் ஒரு எழுத்தாளன் கௌரவத்தோடு வாழ முடியும்.  ஆனால் உலகில் எல்லா நாடுகளிலும் நாவல்கள் 50,000 பிரதிகள் விற்பதில்லை.  அப்படியும் எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால், intelligentia-வின் ஆதரவு.


சி.பி -  எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால் அவங்க எழுத்து கண்ணீயமா, பெண்ணியமா இருக்கனும்னே.. கண்ட படி கெட்ட வார்த்தைல பலரை திட்டக்கூடாது..


 உதாரணமாக, எழுத்தாளர்களை பல்கலைக்கழகங்கள் creative writing துறையில் பேராசிரியர்களாக நியமித்து ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறது.  இதுதான் உலகம் பூராவும் இருக்கும் நடைமுறை.  ஆனால் இங்கே பல்கலைக்கழகத்தில் போய் விரிவுரை ஆற்றினால் ஒரு பூங்கொத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.  இண்டெலிஜென்ஷியா என்றால் பத்திரிகைகளும்தான்.  தமிழில் கட்டுரைக்கு சன்மானம் 500 ரூ.  இல்லாவிட்டால் அதிகபட்சம் 1000 ரூ.

சி.பி - அதுவும் ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளீல் தான். காலச்சுவடு, கணையாளி, அமிர்தா, உயிர் எழுத்து போன்ற இலக்கியப்பத்திரிக்கைகள்னா சன்மானம், காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கூட நோ தான் 




ஆனால் என்னுடைய எஞ்ஜினியர் நண்பர் ஒருநாள் என்னோடு பீட்ஸா சாப்பிட்டு விட்டு 500 ரூ. பில்லை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.


சி.பி - பில்லை வாங்கி பாக்கெட்ல வெச்சுட்டு நைஸா போய்ட்டாரா? பில் பே பண்ணலையா>?

 கம்பெனி reimburse செய்து விடுமாம்.  இதேபோல் மருத்துவ செலவுக்கும், பெட்ரோல் செலவுக்கும் கம்பெனியே கொடுத்து விடும்.  அவ்வளவு ஏன், காண்டம் செலவுக்குக் கூட கம்பெனிதான் பணம் கொடுக்கிறது.

 சி.பி - அவ்ளவ் பணக்கஷ்டத்துலயும் அண்ணனோட இஷ்ட தெய்வம் பற்றித்தான் பேசறாரு.. அண்ணனை கண்டம் துண்டமா வெட்டுனாக்கூட காண்டம்க்கு எதும் ஆகாம பார்த்துக்குவார் போல. அண்ணன் வாழ்வில் சுந்தர காண்டம் மலர வாழ்த்துகள்


 சம்பளப் பணம் தனி.  அதை இதில் சேர்க்கக் கூடாது.  ஆனால் எழுத்தாளனின் சம்பளம் 500 ரூ.  உணவு கிடைக்காத தெருநாய்கள் காய்ந்து போன மனித மலத்தைச் சாப்பிடுவதை என் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்.  தமிழ் எழுத்தாளனின் நிலைக்கும் அந்த நாயின் நிலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.  இப்படி சீரழியா விட்டால் சினிமாக்காரர்களுக்கு கால் கழுவி விட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.  60 வயது வரை விட்டுக் கொடுக்காத சுய கௌரவத்தை இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

சி.பி - ஆமாண்ணே.. உங்க சுய கவுரவத்தை யுத்தம் செய் படத்துல மிஸ்கின் கூட வெச்சிருந்த ஃபிரண்ட்ஷிப்ல பார்த்தோம்..  ஒரே ஒரு சீன் வெறும் கையை காட்டிட்டு போனதுக்கே சம்பளம் ஒரு லட்சம் தந்தாங்கன்னு ஜிங்க் ஜக் அடிச்சீங்களே.. உங்க கிட்ட இருக்கற எல்லா திறமையையும் காட்டி பல லட்சம் சம்பாதிக்கலாமெ சினி ஃபீல்டுல ஏன் மிஸ் பண்றீங்க? 

மேற்கண்ட காரணங்களினால்தான், நான் தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று ஒரு ஆங்கிலப் பேட்டியில் குறிப்பிட்டேன்.  இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.  என்னுடைய 2000 வாசகர்களை அப்படிச் சொல்லவில்லை.  அந்த 2000 பேரும் என் குடும்ப உறுப்பினர்களைப் போல.  நீங்களும் அதில் ஒருவர் என்பதையும் நான் அறிவேன்.  இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள்.  சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

சி.பி - அட.. இப்படி ஒரு ரூட் இருக்கா? ஓ சில கேட்க கூச்சமா இருக்காதா? அது சரி. நாம தான் எப்பவும் சரக்கு அடிச்சுட்டு மப்புலயோ கிடக்கறமே.. எதுக்கு நமக்கு கூச்ச நாச்சம் எல்லாம்?




 அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.  கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சி.பி - கியூபாக்கு டிக்கெட் எடுத்தவர் கூட ஒரு டிக்கெட்டையும் அனுப்பி இருந்தா அண்ணன் ஒரு வேளை போய் இருப்பார்.. 

Saturday, March 17, 2012

ஈழத்தமிழருக்கு ஆதரவு கேட்டு பாரதப்பிரதமருக்கு தமிழருவி மணியனின் சாட்டையடி கடிதம்

ன்பிற்கினிய பாரதப் பிரதமர் மாண்பு​மிகு மன்மோகன்சிங் அவர்களுக்கு... வணக்கம்! 


இந்திய ஜனநாயகம் இந்த எளிய​வனுக்​கும் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்​படையில் உங்களுக்கு இந்த முடங்கலின் மூலம், என்னை உறங்கவிடாத உணர்வுகளை வெளிப்படுத்த விழைகிறேன்.


தமிழகத்தில் உள்ளவர்கள் தலைசிறந்த பண்பாட்​டுக்கு உரியவர்கள்; அன்பு சார்ந்து, அமைதி காத்து, இந்திய ஒருமைப்பாட்டை இதயங்களில் இருத்தி, சக மனிதர்களை உடன் பிறந்த சகோதரர்களாகப் பாவித்து வாழப் பழகியவர்கள். ஒன்றுபடுவது ஞானம், வேறுபடுவது அஞ்ஞானம் என்ற வாழ்வியல் விழுமியத்தை, 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற வேத வாசகத்தின் மூலம் உலகுக்கு உணர்த்தியவர்கள். இந்தியாவின் ஓர் அங்கமாக இவர்கள் இருப்பதே இந்த மண்ணின் மகத்தான பெருமை என்பதை மத்திய அரசுக்குத் தலைமை ஏற்றிருக்கும் நீங்கள் முதலில் உணர வேண்டும்.


எங்கள் போற்றுதலுக்குரிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று குரல் கொடுத்தார். நாங்கள் செவிசாய்க்கவில்லை. அன்பிற்கினிய அண்ணா, 'திண் ணையில் அமர்ந்தாவது திராவிட நாடு கேட்பேன்’ என்று மேடைதோறும் முழங்கினார். அவரை நாங்கள் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தோம். ஆனால், அவருடைய பிரிவினைக் கோரிக்கையை நிரா கரித்தோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், 'சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழரசு காண்போம்’ என்று எங்கள் கைகளைப் பிடித்து வேண்டினார். 


தேசிய மயக்கத்தில் இருக்கும் நாங்கள் அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்தோம். இன்றும், 'தமிழ்த் தேசியம்’ பேசுபவர்களை நாங்கள் பெரிதாக ஆதரித்து விடுவது இல்லை. இன்றுவரை இந்தியராய் இருப்பதற்கு நாங்கள் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம். ஆனால், இறுதிவரை நாங்கள் இந்தியராய் நீடிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்ஆப்பிரிக்காவில் மகாத்மா​வாக மலர்ந்ததற்கு முதற்காரணம் தமிழர்கள். 'அடுத்த பிறவியில் வள்ளுவத்தை வாசிப்பதற்காகத் தமிழனாய்ப் பிறக்க விரும்புகிறேன்’ என்றார். இந்தியாவைவிட்டு வெளியேறி அந்நிய மண்ணில் வெள்ளையருக்கு எதிராக நேதாஜி படை திரட்டியபோது, அவருக்குப் பின்னால் வெள்ளமெனத் திரண்​டவர்கள் தமிழர்கள். 

 அதனால்தான், 'இன்னொரு பிறவி இருந்தால் தமிழனாய்ப் பிறக்கும் வரம் எனக்கு வாய்க்க வேண்டும்’ என்றார் அந்த வீரத்தின் விளைநிலம். ஆனால், உங்கள் அரசோ தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதையே ஆட் சிச் சாதனையாக அரங்கேற்றி வருகிறது.



விடுதலை வேள்வியில் நாட்டு மக்கள் ஈடுபட்டி​ருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி ஆயிரம் வாக் குறுதிகளை அன்றைய காங்கிரஸ் தலைமை அள்ளி வழங்கியது. 'ஒவ்வொரு மாநிலமும் பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்பி விட்டுக்கொடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும்’ என்று இடை விடாமல் வலியுறுத்தினார் மகாத்மா. 


புதுடெல்​லி யில் 2.4.1942 அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, 'ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் இருக்கும்படி வற்புறுத்த விரும்பவில்லை’ என்று தீர்மானம் தீட்டியது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களை மாண்புமிகு மாநகராட்சிகளாக மாற்றிவிட்டது. இந்தியராய் இருப்பதற்கு எங்கள் உரிமைகளை இழந்து நின்றோம். எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கவில்லை.



சுதந்திர இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தெலுங்கர்கள் 'விசால ஆந்திரா’ வேண்டும் என்றனர்; கன்னடர் 'சம்யுக்த கர்னாடகா’ என்று குரல் கொடுத்தனர். மலையாளிகள் 'ஐக்கிய கேரளா’ என்ற கோரிக்கை வைத்தனர். இந்தியராய் இருக்க விரும்பிய நாங்களோ அகன்ற தமிழகத்துக்கு ஆசைப்படவில்லை. சித்தூர், புத்தூர், திருப்பதி, திருக்காளத்தி ஆகிய தமிழர் பகுதிகளைத் தெலுங்கருக்குத் தாரை வார்த்தோம்.

 மாதேசுவரன் மலை முதல் நந்திமலை வரை வாழ்ந்த நிலப் பரப்பையும், பெங்களூரு முதல் தங்கவயல் வரை சொந்தமான தமிழர் மண்ணையும் எங்கள் கன்னட சகோதரர்களுக்குச் சீதனமாகத் தந்து மகிழ்ந்தோம். ஏராளமான ஆறுகள் பெருக்கெடுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை, 'குளமாவது? மேடாவது? எல்லாம் இந்தியாவில்தானே இருக்கின்றன’ என்று தேசியத் தத்துவம் பேசி மலையாளிகளுக்கு 'மொய்’ எழுதிவிட்டு, இன்று முல்லை - பெரியாறு அணைக்காக அழுது​கொண்டு இருக்கிறோம். பிரதமரே... இவ்வளவு இழப்புகளும் எதற்காக? இந்தியராய் தமிழர் இருப்பதற்காக!


பிரிட்டனின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டு 1948 பிப்ர வரியில் சுதந்திரம் அடைந்து ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்பே காடாய், மேடாய், களர்நிலமாய் இருந்த மத்திய மேட்டு நிலத்தை ரப்பர், காபி, தேயிலைத் தோட்டங்களாக மாற்றி இலங்கையின் பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்குத் தங்கள் வியர் வையை, ரத்தத்தைச் சிந்திய எங்கள் தாயகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து, ஆதரவற்ற அனாதைகளாக்க முதல்பிரதமர் டி.எஸ்.சேனநாயகா மூன்று மசோதாக்களை இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முயன்றபோது, நேருவின் மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. மலையகத் தமிழர்களின் உரிமை காக்க 1939-ல் 'இலங்கை இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து வைத்ததே நேருதான் என்பது எவ்வளவு பெரிய இயற்கை முரண்!



விடுதலை பெறுவதற்கு முன், இலங்கை நாடாளு​மன்றத்தில் எட்டு உறுப்பினர்களையும், 'செனட்’ எனப்படும் மூத்தோர் அவையில் இரண்டு உறுப் பினர்களையும் பெற்றிருந்த இந்தியத் தமிழர்கள், ஒரு நொடியில் நாடற்றவர்களாக ஆக்கப்​பட்டனர். இந்த அநீதியை எதிர்க்காமல், அவர்களை அகதிகளாக்க 1964-ல் சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தை இந்திய அரசு அங்கீகரித்து, ஐந்து லட்சம் தமிழர்களைத் திரும்ப அழைத்து நடுத்தெருவில் நிறுத்தி நிலைகுலையச் செய்த போதும், நாங்கள் ஈர விழிகளுடன் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம், 'இந்தியர்’ என்ற மகுடத்தை இழந்து விடாமல் இருக்க!


தமிழகத்தின் தென்பரப்பில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள கச்சத்தீவு எங்க ளுக்குச் சொந்தமானது. பல நூற்றாண்டுகளாக ஒரு தேசியஇனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பை, அந்த இனத்தின் அனுமதி இன்றிப் பக்கத்து நாட் டுக்குப் பரிசாய் வழங்கும் பாதகச் செயலை எந்த அரசும் செய்யத் துணியாது. ஆனால், இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன்னுடைய சீதனப்பொருளை அடுத்தவருக்குத் தருவது போல் திருமதி பண்டாரநாயகாவிடம் 1974-ல் கச்சத்தீவை ஒப்படைத்தது எந்த வகையில் நியாயம்?


காங்கிரஸை 1969-ல் தன் சுயநலத்துக்காக இரண்​டாகப் பிளந்த இந்திரா காந்தியின் குடும்ப அரசியலை, அன்று தொட்டு எதிர்த்த கூட்டத்தில் நான் ஒருவன். இந்திரா காந்தியின் எந்த அரசியல் நிலைப் பாட்டையும் ஏற்றவன் இல்லை நான். உலகின் மீன் வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான கச்சத்தீவை நேருவின் மகள் சட்ட வரம்பை மீறி இலங்கையிடம் சமர்ப்பித்​த போதும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு நிறுத்திக் கொண்டோம். ஏன்..? இந்தியராய் இருப்பதற்கு!


இந்தியப் பிரதமரே... உலகில் உள்ள கடற்கரை நாடுகள் அனைத்திலும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது உண்டு. எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று சொல்லி எந்த நாட்டுக் கடற்படையும் மீன​வரைச் சுடுவது இல்லை. நம் பகை நாடான பாகிஸ்தான்கூட, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்தியரை எல்லை தாண்டியதாக ஒரு முறையும் சுட்டது இல்லை.

 ஒருவரையும் கொன்றது இல்லை. உலகிலேயே மீனவரைச் சுட்டுக் கொல்லும் ஈனச் செயலை இலங்கை மட்டும்தான் இன்று வரை செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழகத்து மீனவரை - அதாவது நம் 'இந்திய’ மீனவரை ஊனப்படுத்தி, 400-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களின் - அதாவது 'இந்திய’ மீனவர்களின் உயிர் குடித்த இலங்கை அரசுக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் உங்கள் அரசு ஆனந்தம் அடைவதைப் பார்த்தும் நாங்கள் ஆத்திரப்படவில்லை. 'தேசியஉணர்வு’ எங்களைத் தேம்பி அழச் செய்வதோடு தடுத்து விடுகிறது; எங்கள் முதல்வர்களை உங்களுக்குக் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி விடுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கள் உயர் தமிழுக்கு வட்டார மொழிக்குரிய தகுதியைத்தான் தந்திருக்கிறது. 'இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மொழியே உயர்தனிச் செம்மொழி’ என்று மொழியியல் அறிஞர்கள் வைத்திருக்கும் வரையறையைப் புறந்தள்ளி, எங்கள் தமிழோடு கன்னடமும் தெலுங்கும்கூட 'உயர் தனிச் செம்மொழிகள்’ என்று அங்கீகரித்திருக்கும் உங்கள் 'அரசியல்’ நியாயமானது என்று எந்த நேர்மை யாளரும் ஏற்க முடியாது.
இந்தியைப் போன்று தமிழும் தேசத்தின் ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று மதுரை ஒத்தக்கடை வீதியில் நாங்கள் ஓங்கிக் குரல் கொடுப்பதற்கு மேல் எதையும் செய்ய மாட்டோம். எங்களுக்குத் தமிழா முக்கியம்? 'இந்தியர்’ என்ற அடையாளம் அல்லவா அதிமுக்கியம்!


போகட்டும். இந்தியராய் இருப்பதற்கு இழக்கக் கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டோம். எங்கள் இனம் ஈழத்தில் அழிவதற்கு இலங்கை அரக்கரிடம் ஆயுதம் அளித்தீர்களே... அதைப் பொறுத்தோம். முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர் பலியிடப்பட்ட போதும் ராஜபக்ஷேவுக்கு டெல்லியில் 'ரத்தினக் கம்பள வரவேற்பு’ வழங்கி ரசித்தீர்களே... அதையும் பொறுத்தோம். 


முள்வேலிக் கம்பிகளுக்கிடையில் மூன்று லட்சம் தமிழர் முடக்கப் பட்டபோது, இலங்கை அரக்க அரசுக்கு 1,000 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துக் கொலைகாரக் கூட்டத்தையே மறுவாழ்வு தரும்படி வேண்டி நின்றீர்களே... அதையும் பொறுத்தோம்.


'உயிரினும் சிறந்தன்று கற்பு’ என்று போற்றி வாழ்ந்த எம் குலப் பெண்களைச் சிங்களர் வன்புணர்ச்சி செய்து வதைத்த செய்தி வந்ததே... அதையும் பொறுத்தோம். பிரிட்டனின் 4-வது சேனலில், எம் இனத்தவரை எட்டி உதைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கண்களைத் துணியில் மறைத்துச் சுட்டு வீழ்த்திய மனிதகுல அநாகரிகத்தைக் கண்டபோதும் பொறுத்துக்கொண்டோம். இன்​னமும் பொறுப்பதற்கு என்ன இருக்கிறது பிரதமரே?


தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று 24 நாடுகளின் ஆதரவோடு ஐ.நா-வில் சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானத்தை முறியடிக்க இந்திய அரசு முனைந்தது நியாயந்தானா? இன்று, ஜெனிவாவில் மனித உரிமைகள் அமைப்பின் முன் இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை உங்கள் அரசு ஆதரிக்கத் தயங்குவது நாகரிக அரசின் நல்ல​ அடையாளமா? அபிசீனீயா மீது ஆக்கிரமிப்பு நடத்தி​யதற்காக, ரோமாபுரியில் விமானத்தில் வீற்றிருந்த நேருவை விருந்தோம்ப வருந்தி அழைத்த முசோலினியைச் சந்திக்க மறுத்த ஆசியஜோதி அமர்ந்து ஆட்சி நடத்திய நாற்காலியில் நீங்கள் அமர்ந்து இருப்பதை மறந்து விட்டீர்களா?


ஈழப்போரில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் குரல் கொடுக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தது உங்கள் செவிகளில் சேரவில்லையா? 'சேனல் 4 ஒளிப்பதிவைக் கண்டு உறைந்து போய்விட்டேன்’ என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் சொன்னது உங்கள் சிந்தையில் பதியவில்லையா?  ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்​தின் கண்டனம் உங்கள் கண்களில் படவில்லையா?


மாண்புமிகு பிரதமரே... உங்கள் மனச்சான்றோடு கொஞ்சம் பேசிப் பாருங்கள். காஷ்மீர் தீவிரவாதி களை அழிக்க இந்திய ராணுவம் என்றாவது விமானத் தாக்குதல் நடத்தியது உண்டா? 'ஈழத் தமிழரும் இலங்கை மக்களே’ என்று சொல்லும் ராஜபக்ஷே அரசு சொந்த மக்கள் மீதே வான் வழியாக ரசாயனக் குண்டுகளைப் பொழிந்து பல்லாயிரவரைப் படுகொலை செய்தது மனித உரிமை மீறல் இல்லையா?

 இன அழிப்பு இல்லையா? சர்வதேசப் போர் விதிமீறல் இல்லையா? எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவருவது இந்திய மரபு இல்லை என்று சொல்லி இந்த மண்ணின் பண்பாட்டுப் பெருமையைப் படுகுழியில் தள்ள எப்படி உங்கள் அரசுக்கு மனம் வந்தது?


'தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்’ என்றார் பெரியார். உண்மைதான். முல்லை-பெரியாறு, காவிரி, பாலாறு என்று எந்தப் பிரச்னையிலும் தமிழர் உரிமை நிலைத்திட 'இந்தியன்’ என்ற உணர்வு இதுவரை உதவவில்லை. 'ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தால், மம்தாவுக்கு அள்ளிக் கொடுப்போம். சாமரம் வீசவில்லை என்றால், 'தானே’ புயல் அழிவுக்கும் கிள்ளியே கொடுப்போம்’ என்று ஓரவஞ்சனையோடு நடக்கும் நியாயமற்ற உங்கள் அரசு எங்களுக்கு எதற்கு?


கட்சி ரீதியாக நாங்கள் பிரிந்துகிடந்ததுவரை எங்களை உங்களால் எளிதில் புறக்கணிக்கமுடிந்தது. இன்று உலகின் எட்டாவது அதிசயமாய் முதல்வர் ஜெயலலிதாவும், கலைஞரும், காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஈழத் தமிழரின் இன்னல் தீர்க்க ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

 இலங் கைக்கு ஆதரவாக இந்திய அரசு இனி இருந்தால், தமிழ் நிலத்தில் காங்கிரஸ் கல்லறைக்குச் சென்று விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் என்று சரித்திரம் படைத்த உங்களுக்கு அதுகுறித்துக் கவலைப்பட நேரம் இருக்காது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலைப்பட்டாக வேண்டும்.


இந்தியஅரசு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து எங்களை முதலில் தமிழராகவும், முடிவில் இந்தியராகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழில் தீட்டப்பட்ட என் கடிதத்தின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உங்களுக்குச் சொல்வார் என்று நம்புகிறேன்.


இனஉணர்வை மதித்து என்னை இந்தியனாக இருக்க விடுவீர்கள் என்ற ஆழ்ந்த    நம்பிக்​கையுடன்,


தமிழருவி மணியன்