Showing posts with label கங்குவா (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts
Showing posts with label கங்குவா (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts

Thursday, November 14, 2024

கங்குவா (2024) -தமிழ் - சினிமா விமர்சனம் ( பேண்டசி ஆக்சன் டிராமா ) @ அமேசான் பிரைம்

                    

      

ஓவர் பில்டப்புக்கும் , சூர்யாவுக்கும் ராசி இருந்ததில்லை . கத்துக்கிட்ட  மொத்த வித்தையையும் ஒத்தப்படத்துல இறக்கி இருக்கேன் என்று பில்ட கொடுத்த என் லிங்குசாமியின் அஞ்சான்  டப்பா ஆகிடுச்சு ( ஆனால் படம் ஓரளவு ஓகே தான் ) . நோக்கு வர்மம் , போதிதர்மர்  என  சிலாகிக்கப்பட்ட  முருகதாஸின்  ஏழாம் அறிவு  ஏழரை  ஆகிடுச்சு . 2000 கோடி வசூல்  லட்சியம் 1000 கோடி  வசூல் நிச்சயம்  என்று விசுவாசம்  சிவாவால்  பில்டப் கொடுக்கப்பட்ட இப்படம்  எப்படி  இருக்கு என்று பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


கதை நடக்கும்  காலகட்டம்  1070 ம்  ஆண்டு 


நாயகன்  ஒரு இளவரசன் . அவர்கள் கூட்டத்தில்  ஒரு துரோகியை  அடையாளம்  கண்டு அவனை தீக்கு இரை  ஆக்குகிறார் . அந்த துரோகியின் குடும்பத்தையும் கொல்ல  வேண்டும்  என மற்றவர்கள் ஆசைப்படுகிறார்கள் .  துரோகியின்  மனைவி தன்  மகனை நாயகன் கையில் ஒப்படைத்து அவனைக்காப்பாற்றும்படி  வேண்டிக்கொண்டு  அதே  தீயில் விழுந்து இறக்கிறாள் . இப்போது  நாயகன் நினைத்தாலும் அந்த துரோகியின் மகனைக்காப்பாற்ற முடியவில்லை.உடன்  இருப்பவர்கள்  அந்த  சிறுவனைக்கொன்றே  ஆக வேண்டும்  என்கின்றனர் .நாயகன்  அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு  கானகம்  போகிறார் . அந்த சிறுவனைக்காப்பாற்ற அவர் என்ன எல்லாம் பாடுபட்டார் ,பார்க்கும்  நம்மை எப்படி பாடாய்ப்படுத்துகிறார்  என்பது  மீதிக்கதை 


நாயகன் ஆக சூர்யா .உயிரைக்கொடுத்து  நடித்திருக்கிறார் . ஆனால் நம் உயிரை எதனால் வாங்க வேண்டும் ? தெரியவில்லை 


நாயகி ஆக 10 நிமிடங்கள்  வருகிறார் திஷா  பட்டா ணியோ சுண்டலோ. சகிக்கவில்லை 


யோகிபாபு  இன்னும்  தனக்குக்காமெடி  வரும்  என நம்பிக்கொண்டிருக்கிறார்  . ஸ்க்ரிப்ட் ல  காமெடி  எழுதனும் 


சும்மா  காமெடியனை திரையில் காட்டினால்  சிரிப்பு வராது ,ரெடின்  கிங்க்ஸ்லி  இன்னொரு தண்டக்கடன் . இவர் 7 நிமிடங்கள்  வருகிறார் 

வில்லன்  ஆக பாபிதியோல்  வேஸ்ட் .கேமியோ ரோலில்  க்ளைமாக்சில்  கார்த்தி  வரும்போது  ஒரு பயல் கூட  கை தட்டவில்லை 


தேவி ஸ்ரீ பிரசாத்  தான் இசை . காது  வலிக்கும் அளவு  பிஜிஎம்  போட்டுத்தாக்குகிறார் . படம் முழுக்க  இரைச்சல் . வசனம் எப்படி புரியும் ? 


ஒளிப்பதிவு  வெற்றி பழனிச்சாமி . சில இடங்களில் சபாஷ்  போடவைக்கும்  காட்சிகள் . நிஷாத்  யூஸுபி ன் எடிட்டிங்கில்  படம் 154  நிமிடங்கள்  ஓடுகின்றன .20 நிமிடங்கள்  பார்க்கும்படி இருக்கின்றது 


சபாஷ்  டைரக்டர்


1  இதெல்லாம்   ஒரு கதை என  சொல்லி  தயாரிப்பாளர்  மனதை  நம்பவைத்த சாமர்த்தியம் 


2  படத்துல  உங்களுக்கு  ரெண்டு கெட்டப்  என சூர்யாவிடம்  சொல்லி  நீங்க தான் அடுத்த  கமல் , அடுத்த விக்ரம் என   ஏமாற்றி  கால்ஷீட்  வாங்கியது 


3  டெக்னிக்கல்  அம்சங்களான  சி ஜி ஒர்க் , வி எப் எக்ஸ்  ஒர்க்  நன்றாக  வேலை  வாங்கியது 


  ரசித்த  வசனங்கள்  (மதன்  கார்க்கி ) 


1  இந்த உலகத்துலயே  யாராலும்  தீர்க்க முடியாத மர்மம்  மனிதர்களோட வாழ்க்கை 


2  நீங்க எல்லாம்  பண்றது பவர் பாத் , இவர்   பண்றது ஷவர் பாத்


3 டென்சன் ,பயம் ,பதடடம் எதையும்  என் கிட்ட  நான் வெச்சுக்கறதில்லை , அடுத்தவங்களுக்கு  வாரி வழ ங்கிடுவேன் 

4  நமக்கெல்லாம்  குளிருதுன்னா  போர்வை போர்த்தி க்குவோம் , அவன் என்னடான்னா பொண்ணுங்களை போர்த்திக்கிறான் 

5  நம்ம  காரை  எதனால்  பஞ்ச்சர்  பண்றே? 


பஞ்ச்சர்  பண்ணு   என  சொன்னே .எந்தக்காரை  என சொல்லவில்லையே? 


6  எதிர்  கொள்வோம் , எதிரியைக்கொல்வோம் 

 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்


 1   துரோகியின்  மனைவி  தன மகனை நாயகனிடம் ஒப்படைத்து விட்டு  ஓடிப்போய்  தீயில்  குதிக்கிறாள் , ஆனால் நாயகன்  அவளிடம்  அவளது   மகனைக்காப்பாற்றுவதாக  வாக்கு எல்லாம்  தரவில்லை .ஆனால் பல  இடங்களில்  அபப்டி வாக்கு தந்ததாக  நாயகனே  சொல்லிக்கொள்கிறார் 

2  தனது கண் முன்னே  தனது அம்மா,  அப்பா  இறந்ததைப்பார்த்த   சிறுவன்  நிச்சயம்  நாயகனை எதிரியாகத்தான் பார்ப்பான் என்பது நமக்குத்தெரிந்து விடுகிறது . அதனால்  நாயகனை  குத்தும்போது  நமக்கு அதிர்ச்சி   வரவில்லை 

3   இந்தக்காலத்தில்  நடக்கும் கதையாகக்காட்டும் முதல் 30  நிமிடங்கள்  ஒட் டவில்லை 

4  காமெடியன்  கமிஷனரை  கமீஸ்  என அழைப்பது கடுப்பை  வர வைக்குது .காமெடின்னு நினைச்சுட்டாங்க 


5   நாயகன்  அசால்ட்  ஆக 500  பேரை  சமாளிப்பது எல்லாம் கொடுமை 


6 யானைத்தந்தங்கள்   இரண்டை  நாயகன்  என்னமோ  கிளவுஸ்  போல  சொருகிக்கொண்டு  சண்டை போடுகிறார் . வாய்ப்பே  இல்லை .இயக்குனர் யானைத்தந்தத்தை  பார்த்தே  இருக்க  மாட்டார்  போல 


7  வானத்தில்  மழை கொட்டிட்டு  இருக்கு .ஆனா  பல வாள்கள்  தீயில்   பழுக்க  காய்ச்சிட்டு  இருக்கு . எப்படி ? 


8  நாயகன்  ஒரு   சீனில்   தன உள்ளங்கையை  தானே  கட் பண்ணிக்கறார்  எதுக்கு ?


9   ஒரு  பாடல்  கடைசியில்  நாயகன்  தன நாக்கை  வெளியே  நீட்டி  நீட்டி   பே  பெ  என  கத்துகிறார் எதுக்கு ?





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18  வயதுக்கு கீழே  உள்ளவர்கள்  மட்டும்  அல்ல , யாருமே  பார்க்க தகுதி இல்லாத படம்   



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தங்கலான்  ,     இந்தியன் 2  ஆகிய  டப்பாப்படங்களையாவது  அந்த படங்களின்  நாயகனின்   ரசிகர்கள் , ரசிகைகள் பார்த்தார்கள் .இதை  யாருமே  பார்க்க  முடியாது .விகடன்  மார்க்  35 .குமுதம்  =  சுமார் . ரேட்டிங்க்  1.5 /5  


கங்குவா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்சிவா
எழுதியவர்சிவா
ஆதி நாராயண
மதன் கார்க்கி
(உரையாடல்கள்)
தயாரித்தது
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுவெற்றி பழனிசாமி
திருத்தியதுநிஷாத் யூசுப்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுகீழே பார்க்கவும்
வெளியீட்டு தேதி
  • 14 நவம்பர் 2024
இயங்கும் நேரம்
154 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பட்ஜெட்மதிப்பீடு ₹300–350 கோடி [ 2 [