உடுக்கை இடை அழகி இலியானாவுடன் ஜெய்ப்பூர்,ஹரித்வார்,காஷ்மீர் போன்ற உல்லாச நகரங்களுக்கு ஒரு ஜாலி டிரிப் போக ஆசையா?நம்ம இளய தளபதி விஜய்க்கு போட்டியா டான்ஸ் காட்சிகளில் எக்சசைஸ் பண்ணும் ஹீரோ ஜூனியர் என் டி ஆர் அவர்களை நக்கல் அடித்துக்கொண்டே கமெண்ட்ட,கலாய்க்க ஆசையா?
கள்ளக்காதலி அல்லது நல்ல காதலியுடன் ஆள் இல்லாத தியேட்டரில் கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்க ஆசையா?அப்போ நீங்க கண்டிப்பா ஓம் சக்தி தெலுங்கு டப்பிங்க் படத்தை பார்க்கலாம்.
ஆந்திரா காரங்க எல்லாம் எம்புட்டு புத்திசாலிங்க என்பதை இந்தப்படத்தின் சூப்பர் ஹிட் ரிசல்ட்ல இருந்து தெரிஞ்சிக்கலாம்.
இலியானோவோட சதையை பற்றி பார்க்கறதுக்கு முன்னால படத்தோட கதை என்னென்னு பார்ப்போம்.. ( ரொம்ப முக்கியம்?).
ஒரு ராஜ குடும்பத்து கைல( கலைஞர் குடும்பம் அல்ல) சக்தி மிக்க வைரம் இருக்கு.. அதை கைப்பற்ற சில தீய சக்திகள் (ஜெயா & சசி அல்ல) முயற்சி செய்யுது. அது கைல இருந்தா உலகத்தையே ஆளலாமாம்..( நல்லா சுத்துறாங்கடா பூவை...)அதை தடுக்கறாரு ஹீரோ.. அவர் பெரிய சீக்ரெட் ஏஜண்ட் வேற.. ( இடைவேளை அப்பத்தான் அந்த அரிய உண்மை தெரிய வருது.. ( அடிங்கொய்யால... )
டைட்டில் போடறப்ப ஓலைச்சுவடில எழுத்துக்கள் ஓடுது.. நல்ல முயற்சி.. ஏம்ப்பா கோடம்பாக்கம் டைரக்டர்ஸ்.. நோட் பண்ணிக்குங்கப்பா.. உல்டா பண்ணிடலாம் இந்த ஐடியாவை..
ஒரு அம்மா கணவன் கொல்லப்பட்டதும் தன்னோட கணவனோட கண்களை எடுத்து உயிரோட இருக்கற தன் 10 வயசு மகன் கண்களை தோண்டி எடுத்து ரீ பிளேஸ்மெண்ட் பண்றாரு.. படு கேவலமான சீன் இது.. கண் தானம் பற்றி தெரில போல டைரக்டருக்கு.. ஒருவருக்கு ஒரே ஆளின் 2 கண்ணையும் வைக்க மாட்டாங்க..
மகனோட முகத்துல கணவனோட கண் இருந்தா அந்த பையன் அம்மாவை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பான்..? என்னய்யா யோசிக்கறீங்க?
ஒரு செண்ட்ரல் மினிஸ்டர் பொண்ணு இப்படியா லூஸ் மாதிரி இருப்பா..?( பொதுவாவே பொண்ணுங்கன்னா , தமிழ் சினிமா ஹீரோயின்கள்னாலே லூஸ் மாதிரி தான் சித்தரிக்கறாங்க..)மிட் நைட்ல பீரோல இருந்து பல பணக்கட்டுக்களை அள்ளி சாக்குப்பைல போட்டுக்கிட்டு அவ ஃபிரண்ட்ஸோட பிக்னிக் போறாளாம்.. ( திரைக்கதை எழுதுனவன் மட்டும் என் கைல சிக்குனான்.. அவன் செத்தான்..)
அது கூட தேவலை.. டூர் வந்த இடத்துல அந்த லூஸ் ஹிந்திப்படத்தை பிளாக்ல பார்க்குது.. ( அதை அவ சொந்த ஊர்லயே செய்யலாமே..?)அப்போ தான் ஹீரோ எண்ட்ரி ஆகறாரு. பிளாக்ல டிக்கெட் வித்து ஹீரோயினை தியேட்டருக்குள்ளே அனுப்பறாரு... அந்த பிளாக் டிக்கெட் வருமானத்துல வந்த பணத்தை ஏழைகளுக்கு ஆன் த ஸ்பாட் பிரிச்சுத்தர்றாரு.. ( அடடா.. எம் ஜி ஆருக்குக்கூட இந்த யோசனை வர்லையே,...?)
ஹீரோயின் லூஸ் என காண்பிப்பதில் இயக்குநர் இன்னொரு ஷாட் வெச்சிருக்கார்.. ஒரு பாலைவனத்துல பயணம் பண்றப்ப.. எல்லாரும் நா வறண்டு தாகத்தால தவிக்கறப்ப சூடா டீ வேணும்னு கேக்கறாரு...
கேவலமான படத்தில் வந்த படு கேவலமான காமெடி வசனங்கள்
1. பார்க்கத்தான் அவரு தங்கத்தமிழன்.. சீறுனா சிங்கத்தமிழன்.. ( அப்போ ஏறுனா சொங்கித்தமிழனா?)
2. இது வேலை செய்யுமா?
போடா புண்ணாக்கு.. முதல்ல உன்னுது வேலை செய்யுமா?
எது?
மூளை..
( டபுள் மீனிங்காம்...சிங்கிள் மீனிங்க்கே எழுத வர்ல...)
3. பாப்பா கைல ஒரு பாப்பாவையே தர ஏற்பாடு நடக்குது.. ஜாக்கிறதை..
4. ஹீரோயின் - மிஸ்டர் சக்தி.. நான் படுத்துக்கப்போறேன்..
நானும் துணைக்கு வரவா?
5. உனக்கு ஐ லவ் யூ என 1000 பேரு எழுதித்தரலாம்.. ஆனா ஐ டோண்ட் லவ் யூ என யாருமே எழுதிக்கொடுத்திருக்க மாட்டாங்க.. எப்பூடி..
(ஹூம்.. கேவலமான ஐடியா)
6. வில்லன் - நானே ஒரு விஷப்பாம்பு.. எனக்குப்பால் புகட்டுனவங்களுக்கே விஷம் குடுத்துப்போட்டுத்தள்ளிட்டுத்தான் நான் இந்த ஸ்டேஜ்க்கு வந்திருக்கேன்.. ( சொந்த அம்மாவைக்கொலை பண்ணிட்டு நாயி பஞ்ச் டயலாக் பேசுது.. )
பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சுமாரா இருந்தாலும் இலியானா கிளாமருக்காக அதை எல்லாத்தையும் சகிச்சுக்கலாம்..
நைட் ஆகிப்போச்சுன்னா இது காதல் தேசம் அல்லவா? போன்ற இலக்கியநயம் மிக்க பாடல்களை எழுதியவர் நா முத்துக்குமார்...
ஒளிப்பதிவாளருக்கு ஒரே ஒரு கேள்விதான்.. இலியானாவை ஒரு சீனில் கூட க்ளோசப்பில் அவர் முகத்தை காட்டலையே ஏன்? ( முகத்தை யார் பார்க்கறா?ன்னு நினைச்சுட்டாரோ..?)
இடைவேளைக்குப்பிறகு மாயாஜால மந்திரக்காட்சிகள் அதாவது காதுல பூ சீன்கள் அதிகம்.. அதனால அந்த ஃபிளாஸ்பேக் சீன் ஆரம்பிக்கறப்பவே நைஸா எஸ்கேப் ஆகிக்கலாம்.. அதுக்குப்பிறகு இலியானா நோ எண்ட்ரி..
பாடல் காட்சிகளில் ஜூனியர் என் டி ஆர் கிராஃபிக்ஸ் உதவியுடன் என்னென்னவோ பண்றார்.. விஜய் வகையறாக்கள் எச்சரிக்கை...
ஆந்திராவில் இந்தப்படம் அமோக வெற்றி அடைந்திருக்கலாம்.. ஆனா இங்கே 10 நாட்கள் தான் ஓடும்//
டிஸ்கி - எதுக்கு ஒரு டப்பா பட விமர்சனத்துல இத்தனை ஸ்டில்லு..? ஹி ஹி .. படம் தான் பார்க்கற மாதிரி இல்லை.. ஸ்டில்ஸ்ஸாவது பார்க்கற மாதிரி இருக்கட்டும்னு தான்