a
ஹீரோ ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட் . ஒரு ராத்திரில வழில ஒரு விபத்தைப்பார்க்கறாரு. போலீஸ் உதவல. அதனால தானே விபத்தில் பாதிக்கப்பட்ட ஆளை தன் வீட்டுக்கு கொண்டு போய் சிகிச்சை தர்றாரு , அவருக்கு துப்பாக்கிக்குண்டு பாய்ஞ்சிருக்கு . போலீசால் தேடப்படும் குற்றவாளி .ஆபரேஷன் பண்ணி முடிச்சதும் அந்தாள் தப்பிடறார். வந்தது வினை . போலீஸ் ஹீரோவை கைது பண்ணிடுது .
இப்போ யாரைக்காப்பாத்தினாரோ அவரை ஹீரோ சுட்டுக்கொலை பண்ணனும் , இதுதான் போலீஸ் கொடுக்கும் அசைன் மெண்ட். இதை செய்யலைன்னா 10 வருசம் சிறை தண்டனை .
இப்போ ஹீரோவுக்கும் , அந்த குண்டு காயம் பட்ட ஆளுக்கும் நடக்கும் யுத்தமே கதை .
கடந்த 15 வருடங்களில் தமிழில் வந்த மிகச்சிறந்த த்ரில்லர் படங்களில் இது ஒன்று , சபாஷ் மிஷ்கின் . 1972 ல் வந்த ராஜேஷ் கன்னா வின் துஷ்மன் ( எதிரி) ,அதன் உட்டாலக்கடி ரீ
மேக்கான சிவாஜி கணேசன் ன் நீதி படத்தின் சாயல்கள் ஓஆகு ல இருக்கு. அது போக இது ஒரு போர்த்துகீசிய மொழிபடத்தின் தழுவல் தாக்கம் என மிஷ்கினே சொல்லிட்டதால படத்தைப்பத்தி மட்டும் மேற்கொண்டு பார்ப்போம்
இளையராஜா தான் படத்தின் முதுகெலும்பு . ஒரு த்ரில்ல ர் மூவிக்கு இசை எந்த அளவு முக்கியம் என்பதை இளையராஜா அநாயசமாக உணர்த்தி இருக்கிறார். இதே படத்தை பின்னணி இசை இல்லாமல் மியூட் செய்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும் . அபாரமான பி ஜி எம் , அதுவும் க்ளைமாக்சில் அட்டகாசமான துள்ளல் இசை
வழக்கு எண் ஹீரோதான் இதிலும் ஹீரோ , அருமையான நடிப்பு , மிஷ்கின் நடிப்பும் கன கச்சிதம் . அந்த பார்வை அற்ற சிறுமி உருக்கமான நடிப்பு . எட்வர்ட் என படம் முழுக்க அழைக்கும் அந்தப்பொண்ணும் அழகு நடிப்பு
மிஷ்கின் சில கோணங்களீல் மன்சூர் அலிகான் மாதிரியும் தளபதி தினெஷ் மாதிரியும் இருக்கிறார்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. எரியும் வீட்டில் பிடுங்குவது எல்லாம் லாபம் என போலீஸ் விபத்தில் பாதிக்கப்பட்ட ஆளிடம் வாட்சை சுடும் காட்சி போலீஸ்காரங்களூக்கு சவுக்கடி . தியேட்டரில் செம அப்ளாஷ் அந்த காட்சிக்கு
2. ஒரு போலீஸ் காரர் துரோகி ஆன இன்னொரு போலீஸ் ஆஃபீசருக்கு “ அய்யா “ என்பதை மாறு பட்ட உச்சரிப்பில் 3 முறை சொல்வது கிளாஸ் நடிப்பு .
3. படம் முழுக்க வைக்கப்பட்ட கேமிரா கோணங்கள் அபாரம் . வரும் கால கட்டத்தில் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்களூக்கு மிஷ்கின் படங்கள் ஒரு பாடமாக இருக்கும்
4. எடிட்டிங்க் , ஒளிப்பதிவு மிக அருமை . முழுப்படமும் இரவில் தான் நடக்கிறது , ஜெவுக்கு எப்படி உதய சூரியன் ஆகாதோ அந்த மாதிரி மிஷ்கினுக்கு சூரிய வெளிச்சமே ஆகாது போல , ஆனால் அந்தக்குறையே தெரியாத வண்னம் அபாரமான ஒளிபதிவு
5. பின் பாதியில் வரும் 20 நிமிட இழுவைக்காட்சிகள் தவிர படம் பூரா செம விறு விறுப்பு . ஹாட்ஸ் ஆஃப் டோட்டல் டீம் , கலக்கல்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஓப்பனிங்க் சீன் ல ஹீரோ கிட்டே நாளைக்கு எப்போ எக்சாம்?னு கேட்கப்படும் கேள்விக்கு காலை ல 10 30 மணிக்குனு பதில் சொல்றார். எல்லா எக்சாமும் காலை 9 டூ 9 30க்கு ஆரம்பிச்சுடும் , அதிக பட்சம் 10 .
2. சாலையில் விபத்தைப்பார்த்த ஹீரோ உடனே ஏன் 108 க்குக்கூப்பிடலை? கூப்பிட்டு வேன் வராம இருந்து பின் இவர் காப்பாத்துனா ஓக்கே
3. ஓநாய் கேரக்டர் 40 கொலை செஞ்சவன்னு ஒரு இடத்துல வசனம் வருது , இன்னொரு இடத்துல அவன் மேல 14 கொலைக்கேஸ் இருக்குன்னு வருது . ஏன் இந்தக்குழப்பம் ? எல்லாமே வில்லனால் ஜோடிக்கப்பட்டவை என்றாலும் செய்வன திருந்தச்செய்ய வேண்டாமா?
4. ஹீரோவுக்கு ஷூட்டிங்க்க்கு போலீஸ் ட்ரெயினிங்க் கொடுக்குது . ஆனா காதுல பாதுகாப்புக்கவசம் தர்லையே? தொழில் முறை போலீசே காதுல எதையாவ்து தடுப்புக்கு மாட்டிட்டு அதை செய்யும்போது புது ஆள் ஏன் மாட்டிக்கலை?
5. போலீஸ் ஆஃபீசரா வரும் அந்த வெள்ளை சட்டைக்காரர் பாடி லேங்குவேஜ் சரி இல்லை . நாடகம் நடக்கும்போது திடீர்னு நீ போய் நடின்னு அறிமுகம் இல்லாத ஆளை தள்ளி விட்டா எப்படி பதட்டத்துடன் நடந்துக்குவாரோ அப்படி நடந்துக்கறார். சீன் முடிஞ்சதும் அப்பாடா எப்போடா நம்ம பார்ட் முடியும்கற மாதிரி இருக்கு
6. சாதா போலீஸ் எல்லாம் க்ளோஸ் கட்டிங்க் பண்ணி டிரஸ்ஸிங்க் ல நீட்டா இருக்கும் போது ஹை லெவல் சி பி சி ஐ டி ஆஃபீசர் பொருத்தமே இல்லாத சட்டை அணிந்திருப்பது உறுத்தல்
7. ஹீரோவுக்கு மிஷ்கின் மேல் எந்த குரோதமும் விரோதமும் இல்லை , பொலீஸ் அவரை கொலை செய்யச்சொன்னபோதும் அவருக்கு முழு மனதும் இல்லை , ஆனால் மிஷ்கினை கொலை வெறியுடன் அவர் பார்க்கும்போது என்னமோ அவர் சொந்த மாமன் மகளை கொலை செய்தவரைப்பார்ப்பது போல் ஆக்ரோசமாகபார்ப்பது ஏன் ? ஓவர் ஆக்டிங்க்
8 ரயில் வேகமாக ஒடும்போது இந்த மாதிரி ஆக்ஷன்களூக்கு பழக்கம் ஆன மிஷ்கின் குதிப்பது சரி , ஹீரோ ஏன் அதுக்கு ஒத்துகறார்? நான் குதிக்க மாட்டேன் , பயமா இருக்கு என ஏன் சொல்லலை ? அட்லீஸ்ட் ஆறு வந்தா அதாவது ஆறு கிராஸ் ஆகும்போது வேணா எட்டி குதிக்கறேன் , தரைல குதிக்க மாட்டேன் என்று கூட ஒரு வாதம் கூட பண்ணலையே ?
9 அந்த போலீஸ் ஆஃபீசர் இடது கைல எதுக்கு சில்வர் வளையம் போட்டிருக்காரு ப்? ரவுடிங்க தான் அப்படி போடுவாங்க . வேற ஒரு படத்துல ரவுடி கேரக்டர் ல நடிச்சுட்டு நேராஅ இந்த பட ஷூட்டிங்க் வந்துட்டாரா?
10 போலீஸ் கஸ்டடில இருந்து தப்பிச்ச தாடி வில்லனை எதிர்பாராத விதமா வேன்ல பார்த்த ஒரு போலீஸ் ஆஃபீசர் எந்த வித முன் ஜாக்கிரதையும் இல்லாம அப்படித்தான் பெப்பரப்பேன்னு நிப்பாரா? அவன் சுடும் வரை வேடிக்கை பார்த்துட்டு இருக்காரே >? அவர் என்ன போலீஸா? ஓ பி எஸ்சா?
11 மிஷ்கின் கையை ஹீரோ கட்டச்சொன்னதும் மிஷ்கின் ஏன் கையை கிராசா வெச்சுக்கறார்? நேரா வெச்சாத்தானே பின் அவிழ்க்க ஈசி . இதே போல் படத்தில் 3 இடங்களீல் வெவ்வேறு ஆட்களை கையில் கட்டும் சீன் வரும்போது எல்லோரும் சொல்லி வெச்சது போல் ஒரே மாதிரி கையை கிராஸ் பண்ணி காட்டுவது ஏன் ?
12 சாகும் தருவாயில் இருக்கும் அந்த வில்லனின் அடியாள் தம்பாவுக்கு ஃபோன் பண்ணிட்டு ஸ்விட்ச் ஆஃப் பண்ணாமல் எதுக்கு ஃபோனை தூக்கி எறிகிறார் ?
13 விழி ஒளி இழந்தவர் தீப்பெட்டியை முதல் டைம் சரியாகத்திறந்து குச்சி எடுப்பவர் அடுத்த முறை தவ்ற விடுவது எப்படி ? சாதா மனிதனை விட அவர்களூக்கு கவனிப்புத்திறன் அதிகம் ஆச்செ?
14 மிஷ் கின் தன் ஃபிளாஸ் பேக்கை குழ்ந்தையிடம் சொல்லும் காட்சியில் ரொம்ப நாடகத்தனம் . தன்னை தாய்மார்கள் ஆடியன்ஸ் தரப்பு பரிதாபமாகப்பார்க்க வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட நடிப்பு . எப்பவும் சாதா ஆடியண்சுக்கு ஃபிளாஷ் பேக்கை விசுவலாக சொல்லி விட வேண்டும் , நிறைய பேருக்கு இந்த வசனக்காட்சி புரியலை . முழுப்படத்தின் கதையும் அந்த ஒரு காட்சியில் தான் புரியவைக்கப்படும் முக்கியகாட்சி என்பதால் குறியீடுகள் , புத்திசாலித்தனங்கள் அந்த இடத்தில் தேவை இல்லை
15. திறந்த வெளி சுடுகாட்டில் காற்று அடிக்கும் சீதோஷ்ண நிலையில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் ஒரு முறை கூட அணையாமல் இருப்பது எப்படி ?
16 மெடிக்கல் ஸ்டூடண்ட்டான ஹீரோவிடம் ஒரு அமைதியே இல்லையே , பிரமாதமான துடிப்பான ரனிங்க் ரேஸ் வீரன் போல் அவரிடம் ஒரு துடிப்பு ஆல்வேஸ் தென் பட்டுக்கொண்டே இருக்கிறதே ?
17 அந்த பார்வை அற்ற சிறுமிக்கும் , மிஷ்கின் தோளில் சுமந்து கொண்டே வரும் லேடிக்கும் அதீத ஒப்பனை எதுக்கு ?
18 அந்த தாடி வில்லன் நடிப்பும் , கேரக்டரைசேஷனும் தான் படத்தின் பெரிய சொதப்பல் . நம்பவே முடியலை . எதுக்காக அவர் மிஷ்கினை நேர்ல பார்க்கனும் ? பிடிக்கலைன்னா போட்டுத்தள்ளிட வேண்டியதுதானே?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. அம்மாக்கு என்ன ஆச்சு ?
செத்துட்டாங்க
நாமும் செத்துடலாமா?
மொத்த படத்தில் வசனங்கள் 4 பக்க அளவுகள் தான் , விஷுவல் ட்ரீட் தான் முழுக்க
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்- 50
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -நன்று
ரேட்டிங் = 4 / 5
சி பி கமெண்ட் -த்ரில்லர் மூவி ரசிகர்கள் எல்லோரும் பார்க்கலாம் , இளையராஜா ரசிகர்கள் , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் பார்க்கலாம் ( அப்போத்தான் பி ஜி எம் பற்றி அவங்க தெரிஞ்சுக்கலாம் ) பிரமாதமான மேக்கிங்க் ஸ்டைல் உள்ள இந்த படம் தமிழ் நாடு பூரா டப்பா தியேட்டர்களீல் போட்டிருப்பது வருத்தம்
a
டிஸ்கி =
09/blog-post_7084.html
சி பி கமெண்ட் -த்ரில்லர் மூவி ரசிகர்கள் எல்லோரும் பார்க்கலாம் , இளையராஜா ரசிகர்கள் , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் பார்க்கலாம் ( அப்போத்தான் பி ஜி எம் பற்றி அவங்க தெரிஞ்சுக்கலாம் ) பிரமாதமான மேக்கிங்க் ஸ்டைல் உள்ள இந்த படம் தமிழ் நாடு பூரா டப்பா தியேட்டர்களீல் போட்டிருப்பது வருத்தம்
a
டிஸ்கி =