சஸ்பென்ஸ் கதைகள் அதிகம் வெளி வராத கால கட்டத்தில் பெரிய பிரபல நடிகர்கள் யாரும் இல்லாமல் அறிமுக நாயகர்களைக்கொண்டு எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற படம், தேங்காய் சீனிவாசன் , ஒரு விரல் கிருஷ்ணராவ் இதில் தான் அறிமுகம் ஆனார்கள் , கிருஷ்ண ராவ்க்கு பட டைட்டில் ஒரு அடையாளப்பெயர் ஆகி விட்டது
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு எஸ்டேட்டின் ஓனர் பெரிய கோடீஸ்வரர், அவருக்கு இரு மகன்கள். மகன்கள் இருவரும் பட்டணத்தில் காலேஜ் படிப்பு படிக்கச்சென்றிருக்கிறார்கள் . படிப்பு முடிந்து ஊருக்குக்கிளம்பலாமா? டூர் எங்காவது போய் வரலாமா? என இரு சகோதரர்களும் உரையாடிக்கொண்டிருக்கும்போது ஊரில் இருந்து தந்தி வந்து விடுகிறது . அப்பா இறந்து விட்டார் , உடனே கிளம்பி வரவும் . இருவரும் ஊருக்கு வருகிறார்கள்
- 1 மல்லிகை மொட்டு சங்கெடுத்து மங்கல இசை பாடுதம்மா
- 2 உங்கள் தேவை என்ன என்று தெரியும், இந்தப்பாவை மனசு துணை
- புரியும்
- ரசித்த வசனங்கள்
- 1 கிண்ணத்தில் இருக்கும் வரை தான் அது பன்னீரு , கீழே தரைல கொட்டிட்டா அது சாதா தண்ணீர் தான், அது மாதிரி தான் பெண்களீன் கற்பும்
- 2 ஓவர் குவாலிஃபிகேஷன் என்னைக்குமே ஆபத்துத்தான். , பெருமை பேசறவனாதான் அவன் இருப்பான்
- 3 ஏமாற்றும் பழக்கம் ஏழைக்குக்கிடையாது
- 4 மிஸ்! பிரமாதமா டைப் பண்ணி இருக்கீங்க, ஒவ்வொரு எழுத்தும், அச்சுல வார்த்தது மாதிரி அவளோ அழகா இருக்கு
- போங்க சார் எல்லாம் மிஷின்ல டைப் பண்ணு னதுதானே?
- இருந்தாலும் உங்க கை விரல்கள் பட்டதாச்சே?
- லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
- அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
- சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் மிஸ்ட்டரி த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், இந்தக்காலத்திலும் ரசிக்கத்தக்க அளவில் தான் உள்ளது , ரேட்டிங் 2.75 / 5
Oru Viral | |
---|---|
Directed by | C. M. V. Raman |
Written by | Thangam C. M. V. Raman |
Produced by | Salvador Fernandes |
Starring | Krishna Rao Thengai Srinivasan |
Cinematography | T. G. Sekar |
Music by | Vedha |
Production company | Associate Artists |
Release date |
|
Country | India |
Language | Tamil |