Showing posts with label ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம். Show all posts

Monday, June 13, 2016

ஒரு நாள் கூத்து - சினிமா விமர்சனம்

மூன்று பெண்களின் திருமண வாழ்க்கை தொடங்குவதற்கு முன் நடக்கும் கூத்துதான் ‘ஒரு நாள் கூத்து’.

மென்பொருள் துறையில் வேலை செய்யும் உயர்தட்டு வர்க்கத்துப் பெண் (நிவேதா பெதுராஜ்), பண்பலை வானொலித் தொகுப்பாளராக இருக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண் (ரித்விகா), அப்பா, அம்மாவுக்குக் கீழ்ப்படிந்து பொறுமை காக்கும் கிரா மத்துப் பெண் (மியா ஜார்ஜ்) ஆகியோர் தங்கள் திரு மணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மூவ ருக்கும் மூன்று விதமான பிரச்சினைகள். அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்பதுதான் படம்.

திருமணத்துக்கு முந்தைய பரபரப்புகள், நடை முறைச் சிக்கல்கள், அதனால் ஏற்படும் அழுத்தங் கள், வலிகளைக் காட்சிப்படுத்திய விதத்தில் ஈர்க் கிறார் அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். சங்கர் தாஸும் இவரும் இணைந்து கதை, திரைக் கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்கள். திருமணத் துக்காகக் காத்திருந்து கனவு காண்பவர்கள், கனவு களில் பொசுங்கிப்போகிறவர்கள் ஆகியோரில் ஆண் களைவிடப் பெண்களே அதிகம் என்பதை யதார்த்தத் துக்கு நெருக்கமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.



பெண் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல; இவர்கள் சார்ந்து நிற்கிற காதலன், வரன், தோழன், அப்பா, அண்ணன் என ஆண் கதாபாத்திரங்களும் நம் மத்தியில் உலவிக்கொண்டிருக்கிற, நம்மைக் கடந்துபோகிற கதாபாத்திரங்களாகவே உருப் பெற்றிருக்கிறார்கள். இதனால் படத்துடன் எளிதாக ஒன்றிவிட முடிகிறது.



மூவரின் பிரச்சினைகளும் அவை வெவ்வேறு பரி மாணங்களை எடுக்கும் விதமும் நம்பகத் தன்மை யுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. திரைக்கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்லும் பல சம்பவங்கள் யதார்த்தத்துக்கு அருகில் இருப்பவை. இவற்றைக் காட்சியாக்கிய விதமும் வசனங்களை அளவாகப் பயன்படுத்திய விதமும் பாராட்டத்தக்கவை.



காட்சிகளைப் போலவே வசனங்களும் இயல்பாக வும் தேவையான இடங்களில் அழுத்தமாகவும் உள்ளன. மியா ஜார்ஜ் தன் தோழியிடம் பேருந்து நிறுத்தத்தில் பேசும் காட்சி போகிறபோக்கில் நடைமுறை யதார்த்தங்களைப் பேசிவிட்டுச் செல்கிறது. மொட்டை மாடியில் மியாவும் அவர் தோழியும் பேசும் இடமும் நன்றாக அமைந்துள்ளது. கடைசிக் காட்சியில் தன் அப்பாவுக்கு நிவேதா சொல்லும் பதில் கூர்மையானது.


மூன்று பெண்களின் பிரச்சினைகளும் தனித் தனிப் பாதைகளில் பயணிக்கின் றன. இவற்றை இணைக்கும் கிளை மாக்ஸ் திருப்பம் செயற்கையாகத் திணிக்கப்பட்டதாக உள்ளது. நிவேதாவின் பிரச்சினை உருப் பெற்ற அளவுக்கு ரித்விகா, மியா ஜார்ஜ் ஆகியோரின் பிரச்சினை கள் நம்பகத் தன்மையோடு உருப்பெறவில்லை.


தினேஷ் தனது தன்னிலை விளக்கத்தைத் தன் காதலியிடம் மிக மிகத் தாமதமாக ஏன் தெரிவிக்க வேண்டும்? மியாவை விரும்பும் இளைஞன், அவரைச் சென்னைக்கு வரும்படி சொல்வதும் நம்பகத்தன்மை யுடன் அமையவில்லை. எதிர்மறையான முடிவுக்காக மெனக்கெட்டு யோசித்ததுபோலவே இறுதிக் கட்டம் உள்ளது.


சாமானியக் குடும்பத்தில் பிறந்து, படித்து முன் னேறி, தன் குடும்பத்துக்கான கடமைகளிலிருந்து காத லுக்காகத் தப்பிக்க விரும்பாத பாத்திரம் தினேஷுக்கு. தன்னைவிட உயர்ந்த அந்தஸ்து கொண்ட காதலியை விடவும் முடியாத, உடனடியாக ஏற்கவும் முடியாத தத்தளிப்பை நன்கு வெளிப்படுத்துகிறார்.


பார்வையாலேயே தன் மனநிலையை வெளிப் படுத்தும் மியா ஜார்ஜின் நடிப்பு கவனிக்கத்தக்கது. அவரை முதிர்கன்னியாகச் சித்தரிக்க முயன்ற இயக்குநருக்குத் தோல்விதான்.


அறிமுக நடிகை நிவேதா பெதுராஜ் அப்பாவுக்கும் காதலனுக்கும் இடையிலான ஊடாட்டத்தில் நசுங்கும் நவயுகப் பெண்ணாக, காதல் தரும் கிளர்ச்சி, பிரிவு தரும் தவிப்பு, விலகலின் வலி, தீர்க்கமாக முடிவெடுக் கும் துணிச்சல் என்று பலவித உணர்ச்சிகளையும் நன்கு வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறார்.


ஆர்.ஜே.வாக வரும் ரித்விகா, மைக்கின் முன் பேசும் தோரணை, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் கெஞ்சும் விதம் ஆகியவற்றில் காட்டும் துல்லியம் அவரது நடிப்பின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. தொண்டையை அடைக்கும் துக்கத்தையும் மீறித் தத்துவம் சொல்லி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ரித்விகாவின் நடிப்பு அபாரம்.


ரமேஷ் திலக், கருணாகரன், சார்லி, பால சரவணன் ஆகியோர் தத்தமது பாத்திரங்களில் நன்கு பொருந்தியிருக்கிறார்கள்.


கோகுல் பினோயின் கேமரா, ஐடி உலகம், பண்பலை அலுவலகச் சூழல், கிராமத்துப் பின்புலம், நகர்ப்புற வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாகத் திரையில் காட்டியிருக்கிறது.


ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை கதையை விட்டு விலகாமல் ஒலிக்கிறது. ‘அடியே அழகே', ‘எப்போ வருவாரோ' பாடல்களிலும், பின்னணி இசையிலும் தன்னுடைய முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார். பிசிறின்றி மூன்று கதைகளையும் தொகுத்த விதத்தில் படத் தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோசப் கவர்கிறார்.


மூன்று இழைகளை வைத்துப் படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர், அவற்றை இணைக்கும் சவாலில் சறுக்கியிருக்கிறார். என்றாலும் வெவ்வேறு பின்புலங்களில் வெவ்வேறு வடிவம் எடுக்கும் ஒரு பிரச்சினை பற்றிய நேர்த்தியான பதிவைச் சுவையாகத் தந்ததற்காக அவரைப் பாராட்டலாம்


நன்றி - த இந்து


.நச்  டயலாக்ஸ்

மச்சி.காஸ்ட்லி சரக்கா போட்டு FEEL பண்ணி.இருக்கே?,#,ஒ நா கூ


2 காதல்ல முட்டாள் தனம் இருக்கலாம்.ஆனா முட்டாள்தனமா இருந்துட்டு அதைக்காதல்னு சொன்னா எவனும் ஏத்துக்க மாட்டான்


டைட்டில் டிசைன் ஒரு பெண்ணாய் இருக்கக்கூடும்.வாசல் கோலங்கள் / மேரேஜ் இன் விட்டேசன் பிரமாதம்#ஒநாகூ


4 பசங்கன்னா ஏண்டி இப்டி பயப்படறே?ப்ழகுனா உயிரையே குடுப்பானுங்க



கல்யாணத்தன்னைக்கு மழை பெய்தா நல்லதாம்


ஓ.அப்போ பர்ஸ்ட் நைட் க்கு இடி இடிக்குமா?


டேய்.நான் சொன்னதை மறந்துட்டியா?


எதை டி?

அப்போ மறந்துட்ட



பொன்னி


நைஸ் நேம்.

இல்ல.ரைஸ்.நேம் (எஸ் வி சேகர் டிராமா டயலாக்)



8 ஆபீஸ்ல எல்லார் பாஸ்வோர்டும் தெரிஞ்சு வெச்சிருக்கியா?


ச்சே ச்சே லேடீஸ்து மட்டும்


நானே வெறுப்புல இருக்கேன்.பொறுப்பு இல்லாம பேசாத.


நீ பருப்பு மாதிரி பேசாத


10 ஆம்பளைங்க விளையாடற்துக்கு பொண்ணுங்க வாழ்க்கை தான் பகடைக்காயா?,


11 எதுவுமே.நடக்கலைன்னா அது.வேற
ஆனா ஒருவருடன் வாழ்ந்துட்டு பின் சும்மா தனித்து இருப்பது கொடுமை.


12 மேரேஜா?அதுக்கு நான் செட்டில் ஆகனும்


டேய்.பொண்ணு பெரிய இடம்.மேரேஜ் ஆனாலே செட்டில் ஆனது போல்தான்


13 என் பிரச்னை கல்யாணம் இல்லை.ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு மத்தவங்க கேட்கும் கேள்வி தான் டார்ச்சர்


14 உன் ஒயிப் எங்கே?


செத்துட்டா

இன்னொரு பொண்ணை மேரேஜ் பண்ணலாமில்ல?
அவ.செத்துடுவா.



15 நம்மை மாதிரியே மேரேஜ் ஆகாத ஆளை மீட் பண்ணும்போது ஒரு இனம் புரியாத சந்தோஷம்


16 ஒரு விஷயத்தை மறக்க வைக்கணும்னா புதுசா ஒரு.விஷயத்தை கிளப்பி விடனும்


17 தக்க தருணத்தில் பொய் சொல்வதும் ஒரு போதை தான் சொல்லிப்பாரு



18 சங்கோஜக்கூச்சம் சாப்பாட்டுக்கு தரித்திரம் னு எங்க தாத்தா அடிக்கடி சொல்வாரு !


19 இரக்கப்பட்டு பிச்சை போடலாம்.ஆனா இரக்கத்துக்காக கல்யாணம் பண்ண முடியாது


20  பெண்களைக்கவரும் காட்சி அமைப்புகளுடன் கண்ணியமான திரைக்கதைப்பயணத்தில் ஒரு நாள் கூத்து இடைவேளை



21 10 இலைல இருக்கற் பதார்த்தத்தை பாத்துட்டே இருக்கறவன் தன் இலைல இருக்கும் பதார்த்தத்தை ருசிச்சு சாப்பிடமாட்டான்


22 எப்பவாவது உன் லவ்வை ப்ரூவ் பண்ணி இருக்கியா?


லவ்வை ப்ரூவ் பண்ணவே முடியாது



23 லவ்விங் வேற ,லிவ்விங் வேற.குழப்பிக்காத


24 வாங்க.என்ன சாப்பிடறீங்க?


எது கொடுத்தாலும்




25 நீ வீடு வாங்கச்சொல்றே.உங்க அப்பா கார் வாங்கச்சொல்றாரு.கல்யாணம் பண்ண நாம 2 பேர் போதாதா?,


26 பேச்சிலரா இருந்துட்டு மேரேஜ் ஆகலைன்னு கவலைப்படறவங்களை.விட மேரேஜ் ஆகி இன்னும் கொஞ்ச நாள் பேச்சிலரா இருந்திருக்கலாம் கற்வங்க அதிகம்


27  பொண்ணைக்கல்யாணம் பண்றதை என்னமோ வாழ்க்கையையே பிச்சை போடற மாதிரி சில ஆம்பளைங்க நினைக்கறாங்க


28 உனக்குப்பிடிச்சதை நீ செய்.செத்ததுக்குப்பின் யாரும் உனக்கு சிலை வைக்கப்போறதில்ல.


29 என்ன பயம்?கேட்டுடு.டீலா?நோ டீலா ?அவ்ளோ தான் லைப்


30 செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சேன்.ஆனா காவ்யாவை கல்யாணம் பண்ணாலே செட்டில் ஆனாப்லதான்னு இப்பதான் புரியுது


31 கல்யாணம்கறது ஆனாத்தான் நிஜம்.அது எப்ப் வேணா நிக்கலாம்.எப்ப.வேணா.நடக்கலாம்.


சி.பி கமெண்ட்



ஒரு நாள் கூத்து -ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான FEEL GOOD மூவி.திரைக்கதை கன கச்சிதம் - விகடன் =42 ,ரேட்டிங் =3 / 5