ஒரு பக்க கதை (2020)
- சினிமா
விமர்சனம்
இந்தப்படத்துக்கு
பொருத்தமான டைட்டில் சிண்ட்ரெல்லா
அல்லது குந்தி
தேவி டூ பாய்ண்ட் ஓ அல்லது கடல் குதிரை , அல்லது கடவுளின் குழந்தை என்பதே
மிகப்பொருத்தமா இருக்கும், ஆனா ஏதோ ஒரு காரணத்தால
கவித்துவமா இருக்கட்டுமேனு இந்த டைட்டிலை தேர்ந்தெடுத்து இருக்காரு. வித்தியாசமான கதை தான்.
இந்த மாதிரி படங்களுக்கு
பொதுவா மிக்ஸ்டு ரிவ்யூஸ்
வர்றது சகஜம் தான்.படம்
வந்த போது பலரும்
பல விதமா விமர்சிச்சிருந்ததால பெண்டிங்ல
வெச்சிருந்தேன். ஜீ ஃபைவ் ல
இது கிடைக்குது . பெண்களை
மிகவும் கவரும் திரைக்கதை
அமைப்பு தியேட்டரில் ரிலீஸ்
ஆகாமல் போனது பெரிய பின்னடைவு
ஹீரோ , ஹீரோயின் இருவரும்
லவ்வர்ஸ் னு. ஓப்பனிங்க்லயே இவங்களை காதலர்களா
காட்டினதால காதல் வெளிப்படுத்துன தருணம் . காத்திருத்தல் அந்த மாதிரி போர்சன்ஸ்
டச் பண்ண வேண்டிய
அவசியம் இல்லாம போய்டுச்சு. மணிரத்னம் இயக்கிய
பம்பாய் ல கூட பின் பாதில ஏகப்பட்ட பிரச்சனைகளை
காட்ட வேண்டி இருந்ததா;ல்
லவ் போர்ஷனை ஷார்ட்டா முடிச்சிருப்பார் இயக்குநர்
மணி ரத்னம்
ஹீரோயினோட நடவடிக்கைல சில மாற்றங்களைக்கண்ட அம்மா
சந்தேகப்பட்டு க்ளினிக் கூட்டிட்டுப்போய் செக் பண்ணா சந்தேகப்பட்டது சரி . கர்ப்பமா இருக்கா
ஹீரோவுக்கு அதிர்ச்சி. வேற ஒரு டாக்டர்
கிட்டே காட்டலாம்னு போனா அங்கேயும் அதே ரிசல்ட்
இரு தரப்புப்பெற்றோர்களும் கூடிப்பேசி
விவாதிக்கறாங்க . ஹீரோயின் பாடி கண்டிஷன் வீக்கா
இருக்கறதால கருவைக்கலைக்கக்கூடாதுனு டாக்டர்
அட்வைஸ். அதனால மேரேஜ்க்கு அவசர அவசரமா தேதி குறிக்கறாங்க
இப்பதான் கதைல ஒரு ட்விஸ்ட். ஹீரோ , ஹீரோயின்
இருவருக்கும் உடல் ரீதியான
தொடர்பே நிகழலை . இந்த விஷயம்
முதல்ல இருவரின் பெற்றோர்களுக்கும் தெரியாது
மொத்தம் உள்ள 2 மணி நேரப்படத்துல
முதல் ஒரு மணி நேரம் இந்த ஷாக் நியூஸ் வெவ்வேற ஹாஸ்பிடல்ல
செக்கிங் , பெற்றோர் சந்திப்பு ,விவாதம்னு
போய்டுது.
ஹீரோ ஹீரோயின் இருவரும்
தப்பு பண்ணலை , மயக்க நிலைலயோ , வேற
எந்த சூழலிலோ ஹீரோயின்
பாலியல் ரீதியா யாராலும்
வன்கொடுமை செய்யப்படலை . பின் எப்படி கர்ப்பம்?
இந்த ட்விஸ்ட்
உடைஞ்ச பின் கதை வேற ரூட்ல டேக் டைவர்சன்
ஆகுது. அந்த சுவராஸ்யமான ட்விஸ்ட்
என்ன? க்ளைமாக்ஸ் என்ன ஆச்சு?
என்பதை ஜீ ஃபைவில் காண்க
ஹீரோவா மலையாள ஹீரோ ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமன் . இவரு இந்தப்படத்துக்குப்பின் நடிச்ச
பாவக்கதைகள்,புத்தம் புது காலை எல்லாம் ரிலீஸ்ல
முந்திக்கிச்சு . 2013 – 2014 லயே ரெடி ஆன இந்தப்படம் இப்பதான்
ரிலீஸ் ஆகி இருக்கு . ஆஹா
பட ஹீரோ ராஜீவ்
கிருஷ்ணா வின் நடிப்பு சாயல் இவரிடம், மிக சாஃப்டான தோற்றம் , அமைதியான் நடிப்பு . காலேஜ் , டீன் ஏஜ் பெண்களை கவரும்
விதத்தில் இருக்கார் . சில காட்சிகளில் இவர் என்ன இவ்ளோ நல்லவரா இருக்காரே?
என எண்ண வைக்கும் கேரக்டர்
ஸ்கெட்ச்
ஹீரோயினா மேகா ஆகாஷ் . அமைதியான அழகு முகம்.
இயல்பான சிரிப்பு . கச்சிதமான நடிப்பு
ஹீரோ , ஹீரோயின்
இருவரின் பெற்றோர் தேர்வு
மிகப்பொருத்தம். வழக்கமான டெம்ப்ளேட் ஆட்களைப்போடாமல் புது ஆட்களைப்பார்ப்பது நல்லா இருக்கு
. அவங்க நடிப்பும் அவ்ளோ யதார்த்தம்.
இயக்குநர் புதுவசந்தம் இயக்குநர்
விக்ரமன் மாதிரி , குமுதம் சிரி சிரி
கதை புகழ் நந்து சுந்து மாதிரி
பாசிட்டிவான ஆள் போல, அதுக்காக
படத்தில் எல்லாருமே ரொம்ப ரொம்ப நல்லவங்க , கெட்டவங்கனு யாருமே
இல்லை என அவ்ளோ பாசிட்டிவாக கேரக்டர்களை
அமைத்திருக்க வேண்டாம்
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் தான் இதன் இயக்குநர் . இது அவருக்கு 3 வது படம்
சபாஷ் டைரக்டர்
1
மலையாளப்படங்களுக்கே
உரிய ஸ்லோனெஸ் இருந்தாலும்
கதை சொன்ன பாங்கு
மிக இதம்
2
குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த கண்ணியமான
நெறியாள்கை
3
மகள் கர்ப்பம்
என்று தெரிந்ததும் அப்பா மகளின் காதலனுக்கு
ஃபோன் பண்ணி வீட்டுக்கு
வரச்சொல்வதும் அப்போது காட்டப்படும்
சூழ்நிலையும் நல்ல பதட்டம். வருசம் 16 படத்தில் குஷ்பூ
குளிக்கும்போது பாத்ரூமில் குறும்பு
பண்ண வரும் கார்த்திக்
திடீர் என மாட்டிக்கொள்ள
அப்போது நிலவும் ஒரு அசந்தர்ப்பமான அமைதி இதிலும்
மமெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஆனா மெயின் கதையை விட சுவராஸ்யமான ஒரு கிளைக்கதை இதிலும் உண்டு . நான் தெய்வத்தோட அவதாரம் என சொல்லும் சிறுவன், அவனது பில்டப்களை நம்பும் சிறுவன் இருவரின் கேரக்டர் ஸ்கெட்சும் , நடிப்பும் அருமை
9 96 படத்தின் இசை அமைப்பாளர் தான் இதிலும் இசை. பின்னணி இசையில் உள்ளேன் ஐய்யா என்கிறார்
9
ப்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு சர்ச்சைக்குரிய மேட்டர்
கேள்விப்பட்டதும் ஜனங்க ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமா பேசுவாங்க . அதை எல்லாம்
காட்டி இருக்கனும்
2 ஹீரோ , ஹீரோயின்
இருவரும் பல டாக்டர்களிடம்
செக்கப் செய்வது கொஞ்சம்
சலிப்பு. அதே போல் பெற்றோர்களிடம் யாராவது
ஒருவர் உண்மையை சொல்லி
இருக்கலாம்., மறைக்க தேவை இல்லை
4
ஃபைனலாக ஒரு ஹாஸ்பிடலில் பல டாக்டர்கள் இங்கும்
அங்கும் போவதும் ஹீரோ பதட்டமாக இருப்பதும்
பின் டாக்டர் தரும் ஓப்பனிங் பில்டப்
கொஞ்சம் செயற்கை
5
மீடியாக்களில் புகழ் பெற்ற ஒரு ஸ்பெஷல்
குழந்தை அரசு போலீஸ்
பாதுகாப்பு கொடுத்திருக்காதா? உலக அளவில்
கவனம் பெறும் குழந்தைக்கு
சின்ன செக்யூரிட்டி கூட இல்லை
6
கோயிலில் குழந்தையை இழந்த பின் அங்கேயே
அமர்ந்து தர்ணா பண்ணாமல்
பெற்றோரே “ இனி இங்கே இருந்து
பிரயோஜனம் இல்லை என இடத்தை
காலி பண்ணுவது நம்பும்படி
இல்லை . பாதிப்பேர் ஸ்பாட்லயே
இருப்போம் , மீதிப்பேர் போலீஸ்
, வக்கீல் , மீடியா என போவோம் என்பதுதானே
யதார்த்தம்
7
மதங்களை , மதங்களின் மூட நம்பிக்கைகளை எதிர்க்கும்போது 3 மதங்களையும் ஒரே தராசில் தானே வைக்கனும்? திமுக மாதிரி இந்து மதத்தை மட்டும்
எதிர்ப்பது ஏன்? சும்மா
சால்ஜாப்புக்காக எல்லா மதங்களும்
தான் என ஒரு வசனம் ஒப்புக்கு
சப்பாணியா இருக்கு
8
திரைக்கதையில் முதல் பாதி ஒரு வித கதையோட்டம், பின் பாதி வேறு வித கதை ஓட்டம் என்பது
எல்லாருக்கும் செட் ஆகாது .
நச் வசனங்கள்
1
குழந்தை பிறக்கக்காரணமா இருக்கறதால
மட்டும் ஒருவர் அப்பா ஆகிட முடியாது.குழந்தை பெற்றுக்கொள்ளும் மனைவியைக்காப்பதில்தான் அப்பா தகுதி இருக்கு
2 ஒருத்தருக்கு ஏதாவது
ஒண்ணுன்னா டக்னு ஓடி வந்து உதவற மனுசன் தான் கடவுள்
2
கடவுள் நம்பிக்கை வேற
, மூட நம்பிக்கை
வேற . ஆனா எப்போ இதுல மூட நம்பிக்கை
வந்ததோ அப்பவே கடவுள்
நம்பிக்கை தோத்துப்போகுது
3
4
இந்த உலகத்துல ஒரு சாமிதான் இருக்கனுமா?
முருகர் , வினாயகர் , இயேசு , அல்லா அப்டினு
பல சாமிகள் இருக்கக்கூடாதா?
5
குழந்தையை கலைக்கறதால
ந்மக்குப்பெரிய பாதிப்பில்லை ஆனா உளவியல் ரீதியா
மன் ரீதியா அந்தக்குழந்தையோட அம்மாவுக்கு
எதிர்காலத்துல மிகப்பெரிய பாதிப்பு
இருக்கும்
சி.பி ஃபைனல்
கமெண்ட் - ஆர்ப்பாட்டமே இல்லாத
ஒரு ஓடையின் பயணம் மாதிரி மெதுவாகப்போகும் திரைக்கதையை
ரசிக்கும் பாலுமகேந்திரா டைப் படங்கள்
பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கலாம் . மற்றபடி வெகுஜன
ரசனைக்கான படம் இது அல்ல. ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு
மார்க் 41 , ஆனா ஆல்ரெடி
அவங்க 43 கொடுத்துட்டாங்க . அட்ராசக்க
ரேட்டிங் 2.75 / 5
ஓ டி டி ல ஜீ ஃபைவ்ல கிடைக்குது