- விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானதால் இப்படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் ஒரே தேதியில் வெளியானது. இன்று (ஜனவரி 16) இந்தியில் இப்படம் வெளியாகி இருக்கிறது.இதுவரை தயாரான தமிழ்ப் படங்களைவிட 'ஐ' படத்தின் பட்ஜெட் அதிகம் (சுமார் ரூ.100 கோடி என்கிறார்கள்.) என்பதால் எந்த அளவுக்கு வசூல் இருக்கும் என்பதை பல்வேறு தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளையும் சேர்த்து சுமார் 5000-க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 200 திரையங்குகளில் வெளியாகி இருக்கிறது 'ஐ'.ஷங்கர், விக்ரம் உள்ளிட்ட மொத்த படக் குழுவினரும் இந்தியா முழுவதும் படத்தை விளம்பரப்படுத்தியதால் பிரம்மாண்டமான முதல் நாள் வசூல் கிடைத்திருக்கிறது என்கிறது திரையுலக வட்டாரம்.தமிழில் முதல் நாளில் மொத்தமாக ரூ.10.5 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். அதில் நிகர வசூல் ரூ.8 கோடி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டையும் சேர்த்து ரூ.7.5 கோடி வசூலாகி இருக்கிறதாம். கேரளாவில் எவ்வளவு வசூல் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் நிறைவேற்றியதா என்றால், 'இல்லை' என்றே சொல்லலாம். படம் பார்த்தவர்கள் விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் கொண்டாடுகிறார்களே தவிர, இயக்குநர் ஷங்கரின் திரைக்கதை அமைப்பில் புதுமை என்று எதுவுமே இல்லை என்றே சொல்கின்றனர்.திரையரங்குக்குச் சென்று ரசிக்கக் கூடிய சாமானிய ரசிகர்கள் திருப்தி அடையும் அம்சங்கள் இருப்பினும், ஷங்கர் படத்துக்கே உரிய 'ரிப்பீட் ஆடியன்ஸ்' என்ற மேஜிக்கை 'ஐ' கைப்பற்றவில்லை.விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. பலரும் சுஜாதா இல்லாதது ஷங்கர் படங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதற்கு 'ஐ' ஓர் உதாரணம் என்று கருத்து பதிந்து வருகிறார்கள்.சமூக வலைதளங்களில் 'ஐ' படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. விக்ரமின் ரசிகர்களிடம் மட்டுமே 'ஐ'க்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. பலரின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.விக்ரமின் திறமையையும், மேக்கிங்கையும் சிலாகிக்கும் இணைய விமர்சகர்கள் பலர், திரைக்கதையையும் வசனத்தையும் கழுவியூற்றி வருகின்றனர். குறிப்பாக, திருநங்கை கதாபாத்திரத்தைக் கையாண்ட விதம் இயக்குநரின் பொறுப்பற்றத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் அடிக்கோடிட்டுள்ளனர்.ஆந்திராவில் வசூல் ரீதியில் முதல் நாள் பெரியளவில் இருந்தாலும், அங்கு படம் பார்த்த சினிமா ஆர்வலர்களில் பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் "இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு பில்டப்" என்கிற ரீதியில் கருத்து பதிந்து வருகிறார்கள்.இது விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகமாக இருக்கும். ஆனால், திங்கட்கிழமைதான் இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும்.தமிழில் U/A சான்றிதழுடன் வெளியாகி இருப்பதால், தமிழக அரசுக்கு 30% வரி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆந்திரா, கேரளா, இந்தி, வெளிநாடு ஆகிய இடங்களில் விநியோகஸ்தர்கள் மூலம் வெளியாகி இருப்பதால் வரும் நாட்களில்தான் தயாரிப்பாளரின் வருவாய் நிலவரம் என்று தெரிய வரும்.
- vigneshபரவை முனியம்மா ஒரு படத்தில் சொல்லுவர், " இந்த கருமத்தை தான் ராத்திரி முழுக்க கண் முழிச்சு ஒட்டுநீங்களான்னு?" . அது போல இந்த படத்தை தான் மூணு வருஷமா எடுத்தீன்களான்னு கேக்க தோணுது . பெருச்சாளி வேஷத்துல புதுமை பண்ணுவாங்கன்னு பாத்தா, அது ஒரு பாட்டு சீனுக்கு தானாம். கஷ்டம் டா சாமி. நன்றாக உழைத்திருந்தும் வீழலுக்கு இறைத்த நீர்...Points125
- South Movemenstory good compare recent tamil movie.Points135
- oorvambuலிங்கா,, கத்தி,, போன்ற குப்பைகளுக்கு ஐ எவ்வளவோ பரவாயில்லை,, கதாநாயகன் அடித்தே பார்த்தவர்களுக்கு,, அவனை சற்று கோரமாக பார்க்க அலுப்பு தட்டுகிறது,, ஷங்கர் மற்றும் விக்ரமின் உழைப்பு பாரட்ட வேண்டிய படம்,, பார்க்க பிடிக்காதவர்கள்,, விஜயின் சுறா என்று ஒரு படம் இருக்கிறது,, நான்கு முறை பார்த்தல் நாக்கு தள்ளி சாகலாம்,,,,Points6940
- jayavelu.v.awesome movie... congrats to vikram, shankar , pc sir, and whole team.. this is the time to proud to be a tamilian...about 5 hours ago · (0) · (2) · reply (0) ·
- jayavelu.v.a milestone film in tamil "I" in indian cinema history... some may critisise negatively.. but this film is reaching so height in terms of vikram hardworking acting( can any actor do this role in world!!!) director shankar's unimaginable scenes ( in songs).. legend p.c. sir's cinematography... art direction... emy's beauty... in another level... CONGRATS TO SHANKAR, VIKRAM, PC... AND WHOLE TEAM... so many awards waiting to this team... this film is the inspiration who loves to achieve in cinema industry.....about 5 hours ago · (2) · (2) · reply (0) ·
- காமாட்சிவிக்ரமனின் நடிப்பு அருமை... மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளது படத்தில் தொிகிறது.. சங்காின் படத்திற்கே உாிய சமுதாயத்திற்குாிய கருத்து எதுவும் இல்லாதது குறை.... எதிா்பாா்த்த அளவுக்கு நிச்சயமாக இல்லை....... விக்ரமின் நடிப்பிற்காக ஒரு தடவை பாா்க்கலாம்...... ஆனால் தியேட்டாில் டிக்கெட்டின் விலை அதிகமாக உள்ளது.... அரசு விதிமுறைகளின் படி குறைந்த விலையில் டிக்கட் விற்றால் நிறைய போ் படம் பாா்க்க தியேட்டருக்கு வருவாா்கள்.........about 7 hours ago · (7) · (0) · reply (0) ·
- rubanpaulinga enna nadukuthunne purilla.....hollywooda poi paarunga evlo mokkayaana padangalla vanthutu irikkunnu....bollywood sollave vena summa ethukeduthaalu bodyya kaatrathum comedyndra perla varatu mokkaya podrathuma irukka....."i" mathiri oru unmayaana effort irinta padatha "naa vikrama mattum sollala shankar illana itha mathiriyaana makking namaku kedachurukkathu.so chinna chinna laging ellathayum vitutu "i" ya kondaduvom.........plsabout 8 hours ago · (3) · (0) · reply (0) ·
- prakashpeakVikram நடிப்பில் நான் மெர்சலாயிட்டேன் ..awesomeabout 10 hours ago · (4) · (3) · reply (0) ·
- Karthick BalaAlll these idiots who are speaking wrong about the film must see one thing....I watched this movie in two diffrent theatres and in both the theatres audience gave a standing ovation when the film is over...Also here they says vikram fans are repeatedly watching the film no every one are watching the film go and look at the amazing response that they got for the film....Sharukh khan happy new year no story and the film is collecting money and reviews are good...Points180
- Kumaravel.Mஇதெல்லாம் நம் இண்டுஸ்ரில சகஜம் என்று சொல்லிவிட்டு அந்தமெட்டரைஎ பில்டுப் செய்து இருக்கிறாய் ஷங்கர்.... பலர்மத்திஎல் அம்மணமாக வரும் நாயகியை பார்த்து காதலில் vizhugirar விக்ரம் ஒரு ad பிலிம் டைரக்டர் சீனாவிற்கு சென்று அங்குவைத்து, இவனுக்கு ஒண்டுமே நடிக்கவரவில்லை என்று மண்டையை பிப்பது மட்டுமில்லாமல், நாயகிடம் ஒரு ஐடியா கொடுக்கிறார் எல்லார்க்கும் விக்ரம்மேல் பொறமை போரமையாகவருகிறது பழிதீர்துவிட்டு விக்ரம்மை பார்த்து எல்லாராலும் கூடி சிரிக்கும்பொழுது சன் டிவி மேகசிரியால்கள் நிவிற்குவருகிறது அதுக்கு அப்பரம் ரயிலேறி சண்டைபொற்றரு.... தேனியை கொண்டுபொஇவிட்டு கடிக்கவுற்றாரு.... பெட்ட்ரோல உடம்புல ஊதும்போது வில்லன் தலைய சொற்றிகிகிட்டு நிக்குறாரு ( மப்பாம்...!) அப்பே நெருப்புபதவேக்குறாரு ...... கடசிய ஹெரொஇனி விக்க்ரமோட கைய கோத்துக்கிட்டு ஓடுது....Points330
- gvஷங்கர்கிட்ட இருக்கிறது ஒரே ஒரு கதைதான் .. அதாவது ஒரு சாமானியன் அநியாயம் பண்றவங்களை காலி பண்றது .... அதை விட்டா கிராபிக்ஸ் , லொகேஷன் ,ம்யுசிக் வச்சு பஜனை பண்றதுதான் அவர் வழக்கம் ... உள்ளத்தை தொடும் , மனதில் நிற்கும் நல்ல கதை, திறமையான டைரக்ஷன் அவர் படத்துல எப்பவும் கிடையாது . இது மட்டும் விதி விலக்கா என்ன ?about 19 hours ago · (11) · (4) · reply (0) ·
- நரேஷ்செகண்ட் ஆப் சான்சே இல்ல,தியெட்டர்ல pin drop silent,படம் முடிஞ்சதும் யாருமே ஒரு குறைகூட சொல்லாமல் வெளியே போனார்கள்,பேய் படங்கள்ல பயப்படறத விட அதிகமா இந்த படம் மிரட்டிருக்கு,யாரும் கிளைமாக்ஸ்ல சீட் நுனிக்கு வரலதான்,ஆன இருக்கையோட கைப்பிடிய அழுத்தமா பிடிச்சிட்டிருந்துருப்பாங்க.in second half shankar truly mesmerize the people.படம் பாத்துட்டு வந்த எல்லாருமே மெர்சலாய்ட்டாங்க.மனசாட்சியே இல்லாம இந்த படத்த போய் நல்ல இல்லனு எப்படி சொல்றாங்க.about 19 hours ago · (1) · (1) · reply (0) ·
- Rayees Ahamed Intern at Gyeongsang National Universityநான் வடஇந்தியாவில் உள்ளவன். இங்கு மக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல எதிபார்ப்பு கிடைத்துள்ளது... நானும் படம் பார்த்தேன்... புதுமையான முறையை தேர்ந்தெடுத்துள்ளார். மேக்கப் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்திய சினிமாவிலும் இது போல் படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார். அதற்கு மேல் என்ன வேண்டும்? எல்லா நேரமும் ஒரே மாதிரியான பிரமாண்டத்தை கொடுத்தால் உங்களுக்கும் 'போர்' அடித்துவிடும்.... 'தி இந்து' வில் மட்டும் தான், 'ஐ' க்கு எதிரான விமர்சனம் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவருக்கு படம் பிடிக்கவில்லையோ என்னமோ? உண்மையான விமர்சனம் அறிய, உங்களின் "'ஐ'க்கு நீங்கள் தரும் மதிப்பெண்?" கேள்வியில் மக்கள் அளித்த சதவிகித்தை பாருங்கள் தெரியும்!!Points450
- NAVANITHAMShankar is not a talented director like the late Balachander.Most of his films based on ultapulta of other languages stories.He gets warn for winter on someone 's big money.😎about 19 hours ago · (0) · (0) · reply (0) ·
- Indiya Tamilanசிவாஜி,கமலுக்கு பின் தமிழுக்கு கிடைத்துள்ள விக்ரம் போன்ற மகா கலைஞன் தனது உழைப்பை அர்ப்பணித்து இருப்பது படத்தை பார்த்தால்தான் தெரியும். உண்மையை சொல்ல போனால் விக்ரம் மரியாதைக்குரிய சிவாஜி,கமல் இருவரையும் தாண்டி ஒருபடி போயுள்ளார் நடிப்பில்.Points265
- Sriramachandran Manickam at State Governmentசரி.விடுங்கள். விக்ரம் சரியா என பார்த்து விட்டு நிறுத்துங்கள். சங்கர் நன்றாக தான் செய்துள்ளார். பிரம்மாண்டத்தை குறை சொல்ல முடியாது. உங்களது எதிர்பார்ப்பு அதிகம். அவ்வளவு தான்.Points1195
- paulselvadhasஏன் இந்த படத்திற்கு என்ன குறை இந்து ?nalla தமிழ் சினிமாவிற்கு எதிரி வேறு எங்கும் இல்லை .தமிழ்நாட்டிலேயே இருக்கிண்டனர்about 22 hours ago · (54) · (8) · reply (0) ·
- Anbuவிக்ரமின் நடிப்பு மிக அருமை. மற்றபடி ஷங்கரின் வித்தை ஒன்றும் இல்லை. என்னக்கு படம் திருப்தியாக இருந்தது.நன்றி - த இந்து
Showing posts with label ஐ படம். Show all posts
Showing posts with label ஐ படம். Show all posts