Showing posts with label ஏழாம் அறிவு. Show all posts
Showing posts with label ஏழாம் அறிவு. Show all posts

Thursday, August 04, 2011

ஏழாம் அறிவு மெகா ஹிட் ஆகும் - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி VS விகடன் காமெடி கும்மி

http://www.thedipaar.com/pictures/resize_20100830141958.jpg

இது 2,000 வருட ரகசியம்!

ஏழாம் அறிவு ஆல்பம்


மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தைத் தமிழ் கூறும் நல்லுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது


''140 நாட்கள் ஷூட்டிங்...  நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன்.



 சி.பி - இதே டயலாக்கைத்தான் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் எடுக்கறப்பவும் சொன்னாரு.. பார்ப்போம்.. 



தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பிரமாதமா வந்திருக்கு படம்!''


சி.பி - ஆனா ஒரு மெகா ஹிட் கொடுத்தவர் அடுத்து வர்ற படங்கள்ல அடக்கி வாசிக்கறது தான் தமிழ் சினிமா செண்ட்டிமெண்ட்.. உதா சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் , பாட்ஷா

 சி.பி - இந்த ஸ்டில்ஸை பார்த்தா புதுமைப்பித்தன் ஆர் பார்த்திபன் கெட்டப் தான் நினைவு வருது,  விக் நல்லாவே தெரிது, துருத்திட்டு இருக்கு, ஆனா சிக்ஸ் பேக் சூப்பர்.. வெல்டன் சூர்யா,வெல் நாட் டன் மேக்கப்மேன்

1.'' 'ஏழாம் அறிவு’ன்னா என்ன?''
'' 'ஏழாம் அறிவு’ன்னா... அது DNA-க்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன். தமிழர்களின் நாகரிகம் மிகச் சிறந்தது. ஆனால், நாம் அதைப் புத்தகங்களிலும், வரலாற்றுச் சுவடிகளிலும் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறோம். வெள்ளைக்காரங்க அந்தப் பெருமைகளை மறக்கடிச்சு, வறுமையை மட்டும் அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டாங்க. இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைச்சு இருக்கேன். 

 சி.பி - அய்யய்யோ, பீரியட் ஃபிலிமா? கொஞ்சம் கஷ்டம் தான்.. 


அதனால்தான், இதை ஒரு ரெகுலர் சினிமா இல்லைன்னு சொன்னேன். 500 வருஷங்களுக்கு முன் காட்டுவாசிகளா இருந்த அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, தொன்மையான பாரம்பரியம் உள்ள நம்மால் ஏன் முன்னேற முடியலை? இது எல்லாத்தையும் படத்தில் சொல்லப்போறேன்!''


சி.பி - அண்ணன் சொல்றதைப்பார்த்தா அப்போகாலிப்டாவை கொஞ்சம்,காட்ஸ் மஸ்ட் பீ க்ரேஸி கொஞ்சம் உல்டா பண்ணீட்டார் போல. 

http://pirapalam.net/wp-content/uploads/2010/11/Shruti-Haasan-_12__001.jpg


'2. 'நீங்க சொல்றதைப் பார்த்தா... சூர்யாவோட கேரியர்ல பெஸ்ட் படமா இருக்குமா?''

''நிச்சயமா! சூர்யா, அடுத்து என்ன படம் பண்ணினாலும், இதுதான் அவருக்கு சவாலா இருக்கும். இதில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலந்த சண்டைகள் வருது. ஒரு மாசம் சூர்யா வியட்நாமில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தார். அங்கே இருந்து அந்தச் சண்டைகளில் பிரபலமான இரண்டு பேரை அழைச்சிட்டு வந்தார். அவங்களோட சண்டைகளைக் கத்துக்கிட்டு, அவங்களுக்கே சவால் தரும்படி ஃபைட் பண்ணினார். சிக்ஸ்பேக் வெச்சுக்கிட்டு சண்டை போடுறது சிரமமான விஷயம். சிக்ஸ்பேக் வெச்சா, அளவாத்தான் தண்ணீர் குடிக் கணும். இவ்வளவுதான் சாப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கு. இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, படத்துக்காகத் தன்னை அவ்வளவு வருத்தி இருக்கார் சூர்யா. நேரில் சொன்னால், நன்றி... கூச்சமா மாறிடும். ரொம்ப தேங்க்ஸ் சூர்யா!''


சி,.பி - எனக்குள் ஒருவன் கமல் கெட்டப் மாதிரி இருக்கும்னு நினைக்கறேன் .


3. ''ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம். எப்படி இருக்காங்க?''

சி.பி - அவங்க எப்பவும் போல் லோ ஹிப்ல , லோ கட்ல தான் இருக்காங்க. ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கலை? அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு போல.. 


''சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து போற கேரக்டர் இல்லை. அவங்களுக்கு எல்லாமே பெரிய பெரிய டயலாக்ஸ். கமல் சார் பொண்ணுனு நாங்க சலுகை காட்டலை. அவங்களும் அதை எதிர்பார்க்கலை. இந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அதை அழகாக் கொடுத்து இருக்காங்க. தமிழில் திறமையான இன்னொரு ஹீரோயின் ரெடி. அதுவும் தமிழ் தெரிஞ்ச ஹீரோயின். சந்தோஷம்தானே!''

சி.பி - பெரிய டயலாக்னா எப்படி? அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டியா?


4. ''ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் இசை... பேசப்படுகிற கூட்டணியாச்சே...''


''இதிலும் அப்படியே... படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஆறாவதா ஒரு சைனீஸ் பாட்டு தேவையா இருந்தது. சீன மொழி தெரிந்த ஒரு கவிஞரைத் தேடினோம். அப்போதான் மதன் கார்க்கிக்கு 'சீன மொழி எழுத, படிக்கத் தெரியும்’னு கேள்விப்பட்டேன். அவர்கிட்ட கேட்டா, 'பாட்டே எழுதுவேன் சார்!’னு எழுதிக் கொடுத்தார். ''இது பாட்டுதானா? நாம் சொன்ன விஷயம் எல்லாம் இந்தப் பாட்டில் இருக்கானு குழப்பமா இருந்துச்சு. சீன மொழி தெரிஞ்சவங்ககிட்ட கிராஸ் செக் பண்ணப்போனா, 'அழகான     கவிதைங்க’னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. ரொம்ப சீக்கிரமா அப்பா பெயரைத் தாண்டிடுவார் மகன்!''


சி.பி -அப்போ அந்த சைனீஷ் பாட்டை ரசிகர்கள் எப்படி புரிஞ்சுப்பாங்க?ஸ்க்ரீன்ல தமிழ் லைன் ஓடுமா? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVoSFycCh5UmTwIZMGji1N57EXRu5BNXVWu12xFKD-LXBEYgXNmEb_1LFxuL3Kdl0JP3y0QYAXx_eABfY-TkKS7Uu1QIjLk5VREncaArE6HE0B9LGYlx1fhSZ8Z5EnVcHFfPJRs1FVU1n_/s400/Shruti+Haasan+Barefoot.jpg


5. ''உங்களோட வெற்றிக்குக் காரணம் என்ன?''


''எனக்கு சக்சஸ் பிடிக்கும். சிலர் வெற்றியைப் பார்த்து ஆடக் கூடாது. தோல்வியைப் பார்த்து துவளக் கூடாதுன்னு சொல் வாங்க. நான் அப்படியே ரிவர்ஸ் டைப். வெற்றியைக் கொண்டாடு வேன். தோல்வி கிடைச்சா துவண்டு விழுந்திருவேன். வெற்றி யையும் தோல்வியையும் ஒரே மாதிரி எடுத்துக்கிட்டால், அப் புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கு? வெவ்வேறு மாதிரி உணர்ந்தால்தான், வெற்றி, தோல்வி இரண்டுமே உறைக்கும். தோல்வியில் துவண்டு எழுந்தால் தான், அடுத்து பலமா நிக்க முடியும்.


சி.பி - ஆனா ரமணா ஹிட் கொடுத்தப்ப இதே விகடன் பேட்டில இந்தப்படத்தின் வெற்றி என்னை பாதிக்கவில்லை, எப்பவும்போல் தான் ஒர்க் பண்றேன்னு சொன்னீங்களே?
சினிமாவில் சில விஷயங்கள் நீங்க கேட்காமலேயே கிடைக்கும். அதை ரசிச்சு உள்ளே போய் விழுந்துட்டா, உங்க கதை முடிஞ்சது. நான் சினிமாவை 'கேம்’ மாதிரி நினைச்சு விளையாடு றேன். எனக்கு ஃபைனல் கோல் தான் முக்கியம். இடையில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவும் வேண் டாம். என்கிட்டே வெற்றிக்கு வேறு மந்திரம் எதுவும் இல்லை!''


சி.பி - வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள் வேணாமா? அதான் சார் வாழ்க்கையில் பெரிய விஷயம்.. 

http://news.top10recent.com/wp-content/uploads/2011/01/Shruti-Hasan-New-hot-photos-1-600x746.jpg