பெண் வெறுப்பு என்னும் நீண்ட படலம்’ என்ற தலைப்பில்
எழுத்தாளர் அம்பை எழுதியிருந்த கட்டுரைக்கு எழுத்தாளர் ஜெயமோகன்
எழுதியிருக்கும் மறுப்பும் அம்பையின் பதிலும் இங்கே பிரசுரிக்கப்படுகின்றன.

ஆதாரமற்ற வரிகள்
- ஜெயமோகன்
என்னுடைய படத்துடன் அம்பை எழுதிய ஒரு கட்டுரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழில்
(21.06.2014) வெளிவந்துள்ளது. அதில் சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் நடந்து
கொண்ட முறை பற்றி எந்த வித ஆதாரமும் இல்லாத வரிகள் பல உள்ளன. அவையெல்லாம்
என்னைக் குறிப்பவை என்னும் பொருள் வரும்படி அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
நான் எந்த ஒரு தருணத்திலும் எந்த ஒரு பெண் எழுத்தாளரையும் தனிப்பட்ட
முறையில் விமர்சித்ததில்லை. நேரிலோ கடிதங்களிலோ தொலைபேசியிலோ. எவரிடமும்
எவ்வகையான தொடர்புகளையும் வைத்துக்கொண்டதில்லை.
தமிழிலும் இந்திய மொழிகளிலும் எழுதிய முதன்மையான பெண் எழுத்தாளர்களை
விரிவாக அறிமுகம்செய்து ஏராளமான கட்டுரைகளை எழுதியவன் நான். அவர்களின்
கலைத்திறனைப் புகழ்ந்தும் அவர்களைப் புரிந்துகொள்ளும் வழிகளை விவாதித்தும்
நான் எழுதிய கட்டுரைகளே இன்றும் பெண்ணெழுத்தைப் புரிந்துகொள்ள உதவியானவை.
அம்பை உட்பட எந்தப் பெண்ணும் இன்னொரு பெண்ணெழுத்தாளரைப் பற்றி அப்படி
எந்தக் கட்டுரையையும் எழுதிவிடவில்லை.
கடந்த காலத்தில் பெண் எழுத்துக்களைப் பற்றி, பொதுவாழ்க்கையில் பெண்களைப்
பற்றிச் சிலர் தரக்குறைவாக விமர்சித்தபோதெல்லாம் மிகக் கடுமையாக அதற்கு
எதிராக எதிர் வினையாற்றியவன் நான். அக்கட்டுரைகள் எல்லாமே இன்றும்
வாசிக்கக் கிடைக்கின்றன. பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களின் ஒழுக்கத்தை
விவாதிக்க முற்படும் ஆண்களைக் கண்டித்து நான் எழுதிய முப்பதுக்கும்
மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன
.
ஒரு தருணத்திலும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஆளுமை எதையும் நான் பேசுபொருளாகக் கொள்வதில்லை.
பெண்ணெழுத்து என்னும் பேரில் இவர்கள் எழுதிய இலக்கியம் தரமற்றது என்றும்,
தரமான பெண்ணெழுத்து உள்ளதே... அந்த தரத்தில் ஏன் எழுதக் கூடாது என்றும்
எழுதினால் அதைப் பெண்ணைப் பாலியல்ரீதியாக அவமதிப்பது, பெண் குலத்தை
இழிவுபடுத்துவது என்றெல்லாம் திரித்து எதிர்கொள்ளும்போக்கு நாகரீகம்
அற்றது.

ஊடகத் தந்திரம் அல்ல
- அம்பை
இந்த விவாதத்தை ஜெயமோகன் மற்றும் அனைத்துப் பெண்ணெழுத்தாளர்கள் என்றமைந்த
நேரெதிர் மோதல் புதைகுழியிலிருந்து வெளியே எடுத்து அதைப் பண்பாட்டுத்
தளத்திலும் சரித்திரரீதியிலும் அணுகவே எனது கட்டுரை எழுதப்பட்டது.
கூட்டறிக்கை எங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியது. இதை
வேறொரு பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நாங்கள்
எல்லோருமே அறிவோம். என் கட்டுரையின் நோக்கம் இதுதான்.
‘தி இந்து’ வோ எங்கள் இருவர் புகைப்படங்களையும் பிரசுரித்தது. ஜெயமோகனை
எதிர்க்க ஊடகத் தந்திரங்கள் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்
தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது. அவரைப் போல் அல்லாமல் எதையாவது சொல்ல
வேண்டு மென்றால் நேரிடையாகப் பேசுவதுதான் என் வழக்கம். தமிழில் கெட்ட
வார்த்தைகள்கூட எனக்குத் தெரியாது! என்னை ஆராதனை செய்பவர்களும் கிடையாது,
வலைத்தளமும் கிடையாது, ஊடகத் தந்திரங்கள் செய்ய. ஒரு கட்டுரை எப்படிப்
பிரசுரமாகப் போகிறது என்பது என் பொறுப்பில் இல்லை. பார்க்கப்போனால்
‘தி இந்து’ பிரசுரித்த ஜெயமோகனின் புகைப்படம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது! யாருடைய ஊடகத் தந்திரமோ தெரியவில்லை!
thanx - the hindu
- malay from PERUNGUDIஜெயமொஹனே நீங்க இன்னும் வளரனும் தம்பி! நலமாய் வாழ்.about 13 hours ago · (1) · (0) · reply (0)ms Up Voted
- Vaduvooraan from CHETPUTஇந்த இலக்கிய ஆசாமிகளே இப்படிதான்! சரி எதோ எழுதறோம்; மக்கள் படிக்கிறாங்க ன்னு போகாம எப்போ பார்த்தாலும் ஒருத்தருக்கொருத்தர் காலை வாரிகிட்டு, சேற்றை வாரி எரிஞ்சிகிட்டு ..கேட்டால் அதுக்கு அறிவுஜீவித்தனமா வியாக்கியானங்கள் அதற்கு பதில் வியாக்கியானங்கள்! எழுதுற எழுத்து பேசணுமே ஒழிய எழுத்தாளர்கள் பேசக் கூடாதுன்னு ஒரு சட்டம் வந்தால் தேவலாம்!Points1640
Devan Vasu from CHETPUT
ஜெயமோகன், குருவி மண்டை என்று அருந்ததி ராயை விளித்தது தனிப்பட்ட குற்றசட்டு இல்லையா?about 17 hours ago · (0) · (0) · reply (0)Devan Vasu from CHETPUT
ஜெயமோகன் அவர்கள் எழுதியவற்றுக்கு அவர் கொடுக்கும் அதாரம் என்ன? தமிழில் நாவலே இல்லை என்று எவர் சொல்ல, அதற்க்கு சுஜாதா எதிர் வினையாற்றி, இவர்களுக்கெல்லாம் காபி டி கொடுத்து நாம் உபசரிக்கிறோம் என்று கூற, உடனே அந்தர் பல்டி அடித்து, இவர் சுஜாதாவை வானளாவ புகழந்ததை யாரும் மறக்கவில்லை. பல நாள் உள்ளே புகைந்து கொண்டிருந்த அந்த அவமானத்தை, இவர் சுஜாதா இறந்த உடன், எதிர் வினையற்ற அவருக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், அவரை ஒரு பழமை வாதியாக சித்தரிக்க முயன்றதையும், எஸ். வி. ராஜதுரை மீது இவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு, எஸ்.வி. ராஜதுரை எதிர்வினையாற்றி, இவரின் குற்றச்சாட்டுகளை மறுத்தவுடன், அந்த விவாதத்தை விட்டு விலகி ஓடியதையும் தமிழகம் அறியும். சம்பந்தப்பட்ட பதிவுகள் ஜெயமோகனின் தளத்திலேயே காண கிடைக்கும். அருந்ததி ராய் பற்றியும் கமலதாஸ் பற்றியும் இவர் முன் வைத்த கருத்துகளை இப்போது மிக சாமர்த்தியமாக மறைத்துள்ளார். ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்வது, அதற்கு தீவிரமான மறுப்பு எழும் பொழுது விட்டு விலகி ஓடுவது, இதுதான் இவரின் அறிவு நேர்மை. ஜெயமோகன் என்றாலே வெறுப்பின் அடையாளம்.about 17 hours ago · (1) · (0) · reply (0)shanthi Elangovan from CHETPUT
பொதுவாகவே எனக்கொன்று புரியவில்லை ..ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்றுணரும் பெண் தனி அந்தஸ்தை கோருவதேன்?தன் திறனில் உயர விழைவதை நோக்காக கொண்டவர்கள் இத்தகைய சிறுமையில் நேரத்தை விரயம் செய்வதேன்? இது இவ்வாறிருக்க, இருவரது பதிலும் மனப்பாங்கை வெளிபடுத்துகிறது .திரு.ஜெயமோகன் தன்னிலையை முன்னிறுத்துவதில் முனைப்பையும் அம்பை அவர்கள் பதில் மேலோட்டமானதாக முடிவில் (ஜெயமோகன் புகைப்படம் பற்றிய குறிப்பு)சிறுபிள்ளைத்தனமான எனக்கு பட்டது