அண்ணா என்றழைத்த பெண்ணை கண்ணா எண்றழைக்க வைக்கத்துடிக்கும் ஒரு சராசரி இளைஞனின் எளிமையான காதல் கதைதான் இந்த அட்டகத்தி..அட்டகத்தின்னா என்ன? . டம்மி பீஸ், வெத்து வேட்டு = அட்டகத்தி.. அந்தக்காலத்துல எம் ஜி ஆர் அட்டைக்கத்தி வீரர்னு எதிரிகளால் கிண்டல் செய்யப்பட்டார்.. ஆனால் அவர் அடைந்த புகழ் அளப்பரியது..
ஹீரோ +2 ல ஒரு பேப்பர் போயிடுச்சு,ஒவ்வொரு எலக்ஷன் வர்றப்பவும் டாக்டர் ராம்தாஸ் எப்படி அடுத்த தேர்தலில் நான் தான் சி எம்னு சொல்வாரோ அந்த மாதிரி 4 வருஷமா பாஸ் ஆகிடுவேன், அடுத்த வருஷம் பாஸ் அப்டினு ரீல் விட்டுட்டு பார்க்கறவங்க கிட்டே காலேஜ் ஸ்டூடண்ட்னு ரீல் விட்டுட்டு திரியறார்
பார்த்தேன் ரசித்தேன் படத்துல வர்ற மாதிரி ஹீரோ பஸ்ல பார்த்த ஒரு ஸ்கூல் ஃபிகரை லவ் பண்றாரு.. வழக்கம் போல அந்த ஃபிகர், பார்க்குது, சிரிக்குது... ஆனா லவ் சொல்ல வரும்போது “ அண்ணா, என்னை விட்டுடு”ங்குது.. ஹீரோ உடனே தாடி எல்லாம் வளர்த்து தேவதாஸ் ஆகலை.. அடுத்த ஃபிகரை பார்க்கறான்..
வீட்டுக்கு எதிர் வீட்டுப்பெண் ஒண்ணு பார்த்து சிரிக்குது.. அதையும் ரூட் விடப்பார்க்கறான்.. அப்புறம் பார்த்தா அது அண்ணன் ஃபிகரு, அண்ணி முறை.. இப்படியே டாக்டர் ராம்தாஸ் அரசியல் மாதிரி மாறி மாறி பச்சோந்தி மாதிரி ஹீரோவுக்கு மனசு மாறிட்டே இருக்கு. ஸ்கூல் லைஃப் முடிஞ்சு எப்படியோ கேப்டன் கரை சேர்ந்த மாதிரி பாஸ் ஆகி காலேஜ் போறாரு.. இதுவரை படம் பவானி ஆற்றுத்தண்ணீர் மாதிரி தெளிவா , அமைதியா, ஜாலியா போகுது..
இடைவேளைக்குப்பிறகு கல்லூரி வாசல் பிரசாந்த் கெட்டப்ல ஹீரோ ரூட்டு தல... என்ற காலேஜ் சேர்மேன் மாதிரி ரவுடி ஆகறார்.. காடு வெட்டி குரு மாதிரி பார்த்த ஆள்ங்களை எல்லாம் அடிக்கறார்.. காலேஜ்ல ஆரம்பத்துல அவர் ரூட் விட்ட ஃபிகரு காலேஜ் படிக்க வருது..
இவரை பார்த்து ஏன் இப்படி இருக்கே?படு கேவலமா இருக்கியே? அன்னைக்கு எப்படி இருந்தே?ன்னு உசுப்பேத்தி விடுது.. பழைய சசிகலா கதவைத்திறன்னு ஜெ சொன்ன மாதிரி ஹீரோ மறுபடி அந்த பொண்ணு பின்னால சுத்தறார்.. முரளி மாதிரி கடைசி வரை காதலை சொல்லாம மென்னு முழுங்கிட்டே இருந்தா என்ன கதி ஆகும்?கறது க்ளைமாக்ஸ்..
ஹீரோ புதுமுகம். இடைவேளை வரை இவர் நடிப்பு கலக்கல்.. தெனாவெட்டான நடிப்பு.. அக்மார்க் சராசரி பிளஸ் டூ மாணவன் பாடி லேங்குவேஜ்.. ஒவ்வொரு ஃபிகரும் அவரை ரிஜக்ட் செய்யும்போது கொஞ்சமே கொஞ்ச நேரம் வருத்தப்படுவதும், பின் ஜாலி ஆவதும் செம.
ஆனா இடைவேளைக்குப்பின் அவர் சேது விக்ரம் மாதிரி , பானுச்சந்தர் மாதிரி நடிப்பில் இமிடேட் பண்றார்.. ஆனாலும் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..
ஹீரோயினும் புதுமுகமே.. கொஞ்சம் ஏறு நெற்றி.. கிராமத்து முகம், நகரத்து முகம் கலந்த கலவை.. ஸ்கூல் கேர்ள், காலேஜ் கேர்ள் என அவர் காட்டும் மாறுதலான முகத்தோற்றங்கள் அழகு..
படத்தில் முக்கியமான ஹீரோ இசை.. படம் ரிலீஸ் ஆகும் முன்னே ஹிட் ஆன பாடல்கள்.. அதுவும் ஆடி போனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி பாட்டு ஹை லைட்.. அலட்டிக்காத இசை.. மனதைக்கொள்ளை கொள்ளுது.. பின்னணி இசை ஓக்கே.. ஆனா பல காட்சிகளில் அந்தக்கால டிராமா இசை போல் போட்டிருப்பதால் படமும் டிராமா பார்க்கும் உணர்வையே தருது..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. அம்மா, என் ஜட்டி எங்கே?
அங்கே தான் இருக்கும் பார்டா..
இல்லை
எங்கம்மா வீட்டுக்கு கொடுத்து விட்டிருக்கேன்..
ம்க்கும், அய்யோ என்னம்மா இது அடுப்புக்கரித்துணியா வெச்சிருக்கே?
2. லவ்வர்ஸ் பாய்ஸ்னா அப்படித்தான்.. ஃபீல்டு ஒர்க் பண்ண போயிடனும்..
3. விட்றா, நீ தமிழ்லயா ஃபெயில்.. இங்க்லீஷ்ல தானே?அந்நிய நாட்டு மொழியை படி படின்னா எப்படி படிக்க?
4. படிக்கலைனாலும் ஈசியா பரீட்சை எழுதலாம் மச்சி.. இங்க்லீஷ் கொஸ்டீன் பேப்பர்ல இருக்கறதை அப்படியே எழுதனும், ஆனா ஒரு கண்டிஷன்.. நீ எழுதி இருக்கறது யாருக்கும் புரியக்கூடாது..
5.. டேய் என்னடா..? ஃபிகர் உன்னை பார்த்து சிரிக்குது?
ஹி ஹி
அய்யய்யோ, நீயும் அவளைப்பார்த்து சிரிக்கறே..
ஹி ஹி \
அடப்பாவி.. நான் 3 வருஷமா ட்ரை பண்றேன்.. ஆனா எனக்கு சிக்கலை, ஜஸ்ட் 3 மாசத்துல நீ கரெக்ட் பண்ணிட்டியே மச்சி..
6. அண்ணா! இனி என் பின்னால வராதே!
என்னது? அண்ணனா?
7. விட்றா.. இப்போ நான் சோகமா இருந்தா மட்டும் அது என்ன என்னை மாமான்னா கூப்பிட்றப்போகுது?
8. இவர் தான் ஹீரோவோட அப்பா.. இவருக்கு எப்போ எல்லாம் கோபம் வருதோ அப்போ எல்லாம் வாழை மரத்தை வெட்டுவார்.. அதான் அட்டைக்கத்தி ஃபேமிலி..
9. பாழாப்போன வாத்தியார் 2 மார்க் சேர்த்து போட்டிருந்தா ஆகாதா? என் பையன் அப்பவே பாஸ் பண்ணி இருப்பானே?
உங்க பையன் ஃபெயிலா?
ச்சே ச்சே ஒரு பேப்பர்ல தான் போச்சுங்க.. அம்மா தெரியாம சொல்றாங்க..
ஆமாமா, ஒரு பேப்பர் தான், ஆனா 4 வருஷமா அதை க்ளியர் பண்ணாம இருக்கான்..
10. அடடா.. அடடா.. 2 பொண்ணுங்களும் பார்க்கறாங்களே, திவ்யா, நதியா 2 ல யாரை செலக்ட் பண்ண? ஒரே குழப்பமா இருக்கே?
11. நல்லாதான் பார்க்குது, சிரிக்குது.. நான் கூட செட் ஆகிடும்னுதான் நினைச்சேன்.. ஹூம்
12. நான் நல்லாத்தானே இருக்கேன்?டிரஸ்ஸிங்க் சென்ஸ் நல்லாத்தானே பண்றேன்?அவனைப்பார்த்தா அவளுக்குப்பிடிக்குது.. என்னைப்பார்த்தா பிடிக்கலை, அது ஏன்?
13. ஹாய்.. சாப்டாச்சா?
ம் ம்
சாப்பிடலைன்னா பிரியாணி வாங்கித்தரலாம்னு நினைச்சேன்..
ஸாரி.. அது காலைல சாப்பிட்டதை சொல்லிட்டேன், இப்போ சாப்பிடலாம்ங்க..
14. அப்போ எல்லாம் என்ன ஸ்டைலா இருப்பே.. இப்போ ஏன் இப்படி இருக்கே? பார்க்க பொறுக்கி மாதிரி இருக்கு..
15. ஹலோ.. லெட்டர்னா கேவலமா?இன்னைக்கும் காதலை சொல்ல அழகான வழி கடிதம் தான்..
16. இங்கே பாரு, மச்சி, பொண்ணு ஓக்கே சொன்னா உடனே தூக்கிடனும்.. அதான் நல்லது..
17. பசங்க கூட சேர்ந்து குடிச்சேன்னு தெரிஞ்சுது.. உன்னை எதும் செய்ய மாட்டேன்.. பிராந்தில விஷத்தை கலந்து நான் குடிச்சிடுவேன்.. ஆரம்பத்துல கூல் டிரிங்க்ஸ்தான்னு சொல்லிக்குடுப்பாங்க.. பார்த்துக்கோ, நம்பிடாதே. என்ன?
18.அண்ணான்னு ஒரு பிகர் சொல்லுச்சுன்னா தங்கச்சின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கணும் மச்சி"
18.அண்ணான்னு ஒரு பிகர் சொல்லுச்சுன்னா தங்கச்சின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கணும் மச்சி"
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹீரோ தினேஷ், ஹீரோயின் நந்திதா இருவரிடமும் வேலை வாங்கிய விதம் மார்வெலஸ்..
2. ஹீரோ வலுக்கட்டாயமாக வராத சோகத்தை முகத்தில் வர வைக்க ஒரு தலை ராகம் படம் பார்த்து சோகத்துக்கு ட்ரை பண்ணி நடிப்பது புதுசு.. நல்ல ஐடியா..
3. சாவு வீட்டில் நடக்கும் சோகத்தை காமெடியாக்கி அங்கே ஹீரோ தப்பாட்ட மேள இசைக்கு ஆடிக்கொண்டே கண் இமையால் ரப்பர் எடுப்பது, அதை பார்த்து குதுகலித்து ஹீரோவின் அண்ணண் ஃபிகர் அமுதா தனி இடத்தில் போய் குத்தாட்டம் போடுவது அழகு..நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா?".ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா கானா பாட்டு கலக்கல்
4. பஸ்சில் காதல் சோகத்தில் ஹீரோ இருக்கும்போது பழைய தோழி பஸ்சில் வாலண்ட்ரியாய் வந்த ஆண்ட்ரியா போல் உரசுவது, மேலே விழுவது அவர் இடையை எல்லை மீறிய அழகியல்வாதமாய் உபயோகிப்பது செம கிளு கிளு.
5. ஹீரோவின் அப்பாவின் கேரக்டர் மனம் தொடுகிறது.. அல்டாப் பேர்வழியாக இருந்தாலும் மகன் மீது காட்டும் மறை முக பாசமும், தான் குடிகாரனாக இருந்தாலும் தன் மகன் நல்லவனாக வளரனும் என்ற ஆதங்கத்தில் பேசுவது எல்லாம் செம.. அதே போல் அம்மா கேரக்டரும் படு பாந்தம்.... அவர் கணவருக்கு சோறு ஊட்டும் காட்சியில் ஏங்க வைக்கும் பாச மழை..
6. இசை சந்தோஷ் நாராயணன்.. இவர் கீதாப்பிரியனா? கிதார்ப்பிரியனா? படம் பூரா மெல்லிய கிதார் ஒலி மனதை வருடுது.. 2012இன் மறக்க முடியாத இசை.
7. படத்துல ஹீரோ ரூட் விடும் பெண்கள் மட்டும் 8 பேர். எல்லாமே 70 மார்க் ஃபிகர்ங்க தான் மிக இயல்பான , ஒப்பனை இல்லாமலேயே அழகுள்ள மனதை சுண்டி இழுக்கும் ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன் சபாஷ் டைரக்டர் பா ரஞ்சித்
8. படத்தின் போஸ்டர் டிசைன், மார்க்கெட்டிங்க் டெக்னிக், ஸ்டில்ஸ் எல்லாம் செம.. ஒளிப்பதிவும் அருமை...
8. படத்தின் போஸ்டர் டிசைன், மார்க்கெட்டிங்க் டெக்னிக், ஸ்டில்ஸ் எல்லாம் செம.. ஒளிப்பதிவும் அருமை...
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. காலேஜில் ஹீரோவை அடிக்க 5 பேர் வர்றாங்க.. அப்போ ஹீரோ கூட 12 பேர் இருக்காங்க.. அவங்க அம்போ என்று அவரை விட்டுட்டு ஓடிடறாங்க.. இது 2 வகைலயும் லாஜிக் இல்லை.. 1. எண்ணிக்கை// 5 பெருசா? 12 பெருசா? அடுத்து என்னதான் ஆள்கள் ரவுடிகளாக வந்தாலும் அப்படி எல்லாம் நண்பர்கள் விட்டுட்டுப்போக மாட்டாங்க.. ஆனா அந்த சீனை யாரும் குறை சொல்லமுடியாத படி காமெடி ஆக்கிட்டதும் சாமார்த்தியம் தான்.. ஆனாலும் குறை குறை தான்..
2. ஹீரோ கிட்டே முன்னாள் தோழி தானா வந்து உரசரது பார்க்க கிளுகிளுப்பாத்தான் இருக்கு.. ஆனா அதில் நம்பகத்தன்மை இல்லை.. ஏன்னா ஒரு ஆண்ட்டியோ, டிக்கெட்டோதான் அப்படி வாலண்ட்ரியா உரசும். இப்படி உரசுனா எவனும் லவ்வர்னு நினைக்க மாட்டான்.. அயிட்டம்னு தான் நினைப்பான்..
3. அந்த பஸ் கில்மா சீன் நடக்கறப்ப ஹீரோயின் அதை பார்த்துடறா.. அதை பார்த்து அதிர்ச்சி ஆகற மாதிரி காட்டி பின்னால ஒரு சஸ்பென்ஸ் வெச்சிருக்கீங்க.. ஓக்கே. ஆனா அந்த சீனுக்குப்பின் படம் ஏன் ஸ்கிப் ஆகுது? எடிட்டிங்க்ல கோளாறா?
4. ஹீரோ எதையும் லைட்டா எடுத்துக்குவார் என்பதை அடிக்கடி சொல்றதால
காதல் தோல்வி வரும்போது நமக்கும் பெரிய பாதிப்பு வர்லை.. அது பெரிய மைனஸ்..
5. இயக்குநர் சொல்ல வர்ற மேட்டர் லவ் சக்சஸ் ஆகலைன்னா இருக்கவே இருக்கு அடுத்த லவ் டேக் இட் பாலிஸி.. நல்ல தீம் தான்.. ஆனாலும் முதல் காதல் மாறாத ரணமாய் என்றும் மனசில் தங்கி இருக்கும் என்பதை அழுத்தமா சொல்ல தவறிட்டார்னு நினைக்கறேன்..
6.படத்தின் முன்பாதி வரை சினிமாத்தனம் இல்லாம நாம எல்லாரும் சந்திச்ச பஸ் லவ் பேஸ் பண்ணி படம் போகுது. ஆனா பின் பாதில ஹீரோவை ஏன் எல்லாப்படத்திலும் வர்ற மாதிரி காலேஜ் ரூட் தல ஆக்கனும்? ஃபைட், ரகளை எல்லாம் எதுக்கு? அதான் பல படங்கள்ல காட்டியாச்சே. அந்த 2 ரீல் கட் பண்ணி இன்னும் வெரைட்டியா யோசிச்சிருக்கலாம்..
7. ஆல்ரெடி ஹீரோ ஹீரோயினுக்கு லவ் லெட்டர் குடுத்தவன்.. அப்போ பாப்பா பிளஸ் டூ மெச்சூரிட்டி பத்தலை ஓக்கே இப்போ காலேஜ் கேர்ள். தான் இன்னொருவரை லவ் பண்ற விஷயத்தை அவ ஏன் ஹீரோ கிட்டே சொல்லலை? எந்த பொண்ணும் இந்த விஷயத்துல மறைக்க மாட்டா.
6.படத்தின் முன்பாதி வரை சினிமாத்தனம் இல்லாம நாம எல்லாரும் சந்திச்ச பஸ் லவ் பேஸ் பண்ணி படம் போகுது. ஆனா பின் பாதில ஹீரோவை ஏன் எல்லாப்படத்திலும் வர்ற மாதிரி காலேஜ் ரூட் தல ஆக்கனும்? ஃபைட், ரகளை எல்லாம் எதுக்கு? அதான் பல படங்கள்ல காட்டியாச்சே. அந்த 2 ரீல் கட் பண்ணி இன்னும் வெரைட்டியா யோசிச்சிருக்கலாம்..
7. ஆல்ரெடி ஹீரோ ஹீரோயினுக்கு லவ் லெட்டர் குடுத்தவன்.. அப்போ பாப்பா பிளஸ் டூ மெச்சூரிட்டி பத்தலை ஓக்கே இப்போ காலேஜ் கேர்ள். தான் இன்னொருவரை லவ் பண்ற விஷயத்தை அவ ஏன் ஹீரோ கிட்டே சொல்லலை? எந்த பொண்ணும் இந்த விஷயத்துல மறைக்க மாட்டா.
சி.பி கமெண்ட் - காதல் படங்கள்ல ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி மாதிரி செம ஸ்பீடு திரைக்கதை எதிர்பார்த்து போனா ஏமாற்றம் தான் வரும்..இது கோவை குற்றாலம் மாதிரி மிதமான வேகத்தில் பொழியும் நீர் ஊற்று.. எல்லாருக்கும் பிடிச்சுடாது.. காதலர்கள், யூத்ங்க, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்க்கு பிடிக்கும். பெண்களும் பார்க்கும் படி கண்ணியமான நெறியாள்கை..இந்தப்படம் சந்தேகம் இல்லாத ஒரு வெற்றிப்படம் தான், ஆனா பிரமாதமான வெற்றிப்படம் ஆகும் வாய்ப்பை ஹேர் இழையில் தவற விட்ட படம்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று
டைம்ஸ் ஆஃப் இண்டியா ரேங்க் - 3 1/2 /5
டெக்கான் கிரானிக்கல் - 7 /10