Showing posts with label எம்ஜிஆர். Show all posts
Showing posts with label எம்ஜிஆர். Show all posts

Saturday, April 07, 2012

எம் ஜி ஆர் - நான் நாத்திக வாதி அல்ல - பொக்கிஷ பேட்டி


''


ரங்கிமலையிலிருந்து பூவிருந்தவல்லி போகும் சாலையிலிருக்கும் தமது தோட்டத்தில், எங்களை இன்முகத்தோடு கை கூப்பி வரவேற்றார் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன். படப்பிடிப்பு முடிந்த களைப்பு தீரக் குளித்துவிட்டு 'ஜில்'லென்று காட்சி தந்த அவரைப் பார்த்ததுமே மனத்திற்குக் குளிர்ச்சியாக இருந்தது


. 'எம்.ஜி.ஆர். தோட்டம்' என்று புகழ்பெற்ற அந்த இடத்தைக் காண வேண்டும் என்ற ஆவலில் 'தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாமா?' என்று கேட்டோம்.


''தோட்டத்திலே என்ன இருக்கு? ரொம்ப சாதாரணமா ஏதோ...'' என்று அடக்கத்துடன் கூறினார் அவர்.


''ஒரு கரடி இருக்கிறதாமே...''

'இருந்தது. பாவம், அது பத்து நாட்களுக்கு முன்னே இறந்துவிட்டது. அது ரொம்பப் பொல்லாத குட்டி! அடங்கவே இல்லை. மூக்கு குத்தி வளையம் மாட்டி, கயிறு கட்டினால்தான் வழிக்கு வரும்னு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சேன். அங்கே துளை போட்டதும், ரத்தம் கொட்டி செத்துடுத்து. அதை மிருகக் காட்சி சாலைக்குக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்... என்ன செய்யறது? இதோ பார்த்தீங்களா, மான் குட்டிங்க. அறந்தாங்கி தோழர்கள் அன்புடன் கொடுத்தாங்க'' என்று அருகிலிருந்த மான்களைச் சுட்டிக் காட்டினார். அந்தக் குட்டிகளும் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து, கண்களை உருட்டிப் பார்த்தன!





ஏழரை ஏகரா பரப்புள்ள அந்தத் தோட்டத்தில் வாழை மரங்களையும் மாமரங்களையும் தவிர, காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. நெல் விளைச்சலும் உண்டு. மத்தியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. படம் போட்டுப் பார்க்க ஒரு சிறு தியேட்டரும் இருக்கிறது. தேகப் பயிற்சி செய்வதற்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.



''அண்ணாச்சிக்கு எடை அதிகமாயிடுச்சுன்னா இங்கேதான் எக்ஸர்ஸைஸ் செய்வார்'' என்று, உடன் வந்த பழைய நடிகர் திருப்பதிசாமி விளக்கம் கொடுத்தார்.


அந்தத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்' என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்குக் கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது.


''அது என்ன மண்டபம்?'' என்று கேட்டேன் நான்.


''அதுதான் கோயில்?''


''என்ன கோயில்?''


''என் தாயாருடைய கோயில். அங்கே என் அன்னையின் படம் தான் இருக்கிறது. அவர்தான் நான் வணங்கும் கடவுள்.''


''அவங்களைக் கும்பிடாம அண்ணாச்சி வெளியே கிளம்பமாட்டார். வாரத்திற்கு இருமுறை படத்திற்குப் பூ மாலை போடுவோம். தினமும் விளக்கேற்றி வைப்போம்'' என்று கூறினார் திருப்பதிசாமி.


''சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டிருக்கிறீர்களே, ஏன்?'' என்று, பெற்ற தாய்க்குக் கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.


''அப்படியரு கொள்கையே எனக்குக் கிடையாதே! எதனால் இப்படிக் கேட்கிறீர்கள்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.


'' 'காஞ்சித் தலைவ'னில், நீங்கள் கோயிலுக்குள் நுழைவது போலவும், உடனே வெளியே வருவது போலவும் ஒரு காட்சி வருகிறதே..?''


''அந்தக் காட்சியை முதலில் நினைத்தபடி எடுக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக்கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூட நம்பிக்கைகள் பெருகுவதையும், சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து வந்திருக்கிறோம். 

'ஜெனோவா' படத்தில் நான் நடிக்கவில்லையா! இப்போது 'பரம பிதா'வில் நடிக்கிறேனே, அதுவும் மத சம்பந்தமான கதைதானே? 'பெரிய இடத்துப் பெண்'ணில் எல்லோரையும் நான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வது போல் ஒரு காட்சி வருகிறதே! சினிமா இருக்கட்டும். சமீபத்தில் மருத மலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்தேனே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்?''


நான் ஒன்றும் சொல்லவில்லை.
பேசிக்கொண்டே மேற்குப்புறமிருந்த ஒரு சிறு வீட்டினுள் நுழைந்தோம். அது ஒரு 'அவுட் ஹவுஸ்' மாதிரி இருந்தது. அறை முழுதும் சாம்பிராணி புகைப்படலம் சூழ்ந்திருந்தது.


''இந்த இடத்தை ஒரு கலைக்கூடமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இன்னும் படங்களெல்லாம் வரவில்லை'' என்று எம்.ஜி.ஆர். சொன் னதும், அந்த அறையில் ஒரு வெளவால் பறந்து வந்து எங்களை வட்ட மிட்டது!


நாங்கள் அமர்ந்தோம். சிற்றுண்டி வந்தது. ஐஸ்கிரீமும் காபியும் வந்தன. அவற்றைக் கொண்டு வந்த தோழரைப் பார்த்து எம்.ஜி.ஆர், ''இவங்க வந்த டாக்ஸி வெளியே நிக்குதே, அந்த டிரைவருக்குப் பலகாரம் கொடுத்தீங்களா?'' என்று குரலைச் சற்று தாழ்த்திக் கேட்டார்.


''ஓ! கொடுத்துவிட்டேனே!'' என்றார் அனுபவமிக்க அந்தத் தோழர்.


சிற்றுண்டிக்குப் பிறகு ''வருகிறீர்களா, என் பாதாள அறையைக் காட்டுகிறேன்'' என்று அழைத்தார் எம்.ஜி.ஆர்.


எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

'' 'ரகசிய அறையைக் காட்டுகிறேன், வாருங்கள்' என்று அழைக்கும் துணிச்சல் உங்களுக்குத்தான் வரும்'' என்று நான் சொன்னதும், ''வந்து பாருங்கள், மறைப்பதற்கு ஒன்றுமில்லை'' என்றார் அவர் புன்முறுவலுடன்.


அவரைப் பின் தொடர்ந்தோம். அடுத்த அறைக்குள் சென்று தரையில் இருந்த ஒரு கதவைத் திறந்தார் அவர். ''பின்னாலேயே வாருங்கள்'' என்று சொல்லியபடியே கீழே இறங்கினார். சினிமாவில் 'க்ளைமாக்ஸ் சீன்' சண்டை நடப்பதற்காக ஒரு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கிப் போவார்களே, அது மாதிரி சென்றோம்.


கீழே இருந்த அறையில் எம்.ஜி.ஆர். மறைத்து வைத்திருந்த 'செல்வங்க'ளைக் கண்டு மலைத்துப்போனோம். அழகான அந்த அறையின் சுவரை மகான்களின் படங்கள் அலங்கரித்திருந்தன. காந்திஜி, நேருஜி, தாகூர், விவேகானந்தர், ஏசுநாதர், புத்தர், ராமலிங்க சுவாமிகள், சாரதாமணி அம்மையார், பாரதி, திருவள்ளுவர் என்று வரிசையாக அங்கு கொலுவீற்றிருந்த காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, எங்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தியது.


''கீழே கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் என்ன?'' என்று கேட்டேன்.
''அத்தனை நூல்களும் இம்மகான்களைப் பற்றிய கருத்தோவியங்கள். அவர்கள் சிந்தனையில் பிறந்த அறி வுரைகளும் இருக்கின்றன'' என்று சொன்னார் அருகிலிருந்த வித்வான் வே.லட்சுமணன்.


''இந்த இடத்தை ஒரு சிறந்த நூல் நிலையமாக்க வேண்டும் என்பது என் அவா. இங்கு சற்று உரக்கப் பேசி னாலும் எதிரொலி எழும்பும். ஆகவே இங்கு வருபவர்கள் பேசாமல் அமைதி யாக அறிவுச் செல்வங்களில் மனத் தைப் பறிகொடுக்கவேண்டும் என்றே இப்படியரு அறையைக் கட்டச் சொன்னேன். புற வாழ்க்கையிலிருந்து நிம்மதி பெறுவதற்காக எனக்கு மட்டு மின்றி, என் அருமைத் தோழர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நூல் நிலையத்தை அமைத்திருக்கிறேன். என் காலத்திற்குப் பிறகு இதுவும், மேலேயுள்ள கலைக் கோயிலும் பொதுச்சொத்தாக ஆவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறேன்'' என்று புன்முறுவலுக்கிடையே தன்னடக்கத்துடன் கூறினார் அவர்.


அறிவும் ஆன்மிகமும் இணைந்து புனிதமாக்கப்பட்ட அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் மேலே ஏறி வந்தோம்.


எம்.ஜி.ஆர். காபி அருந்துவதில்லை; வெற்றிலை போடுவதில்லை; புகை பிடிப்பதில்லை. ஆகவே, அவருடைய நண்பர்களில் சிலர் தம் எதிரில் புகை பிடிக்கத் தயங்குவதாகக் கூறினார் அவர். இவரிடம் பெருமதிப்புக் கொண்ட ஒரு மதுரை நண்பர், எம்.ஜி.ஆரின் உருவத்தைப் போஸ்டரில் கண்டால் கூட சிகரெட்டை மறைத்துக் கொண்டு விடுவாராம்!


''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''


''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், முக்கியமாக 'என் தங்கை' நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சி வசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். 


அது ரொம்பவும் இயற்கையாக இருக் கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின்' போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதே போல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்து போய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்துகொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.''


''கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வனை'ப் படமாக்கப் போவதாக அறிவித்திருந்தீர்களே, அது எந்த நிலையில் இருக்கிறது?''


''படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதை கலரில் எடுக்கப்போகி றேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதித் தரும்படி கேட்கப் போகிறேன்!''


''வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இல்லையா உங்களுக்கு?''


''நிறைய இருக்கிறது. நாடகக் கம்பெனியுடன் ஒரு முறை பர்மா சென்றிருக்கிறேன். வேறு எங்கும் போனது கிடையாது. இலங்கையிலிருந்து ஒரு முறை அழைப்பு வந்தது. 'விசா'வும் கிடைத்தது. ஆனால், நமது சர்க்கார் என்ன காரணத்தாலோ 'பாஸ்போர்ட்' கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த வருஷம் செப்டம்பர் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்திருக் கிறது. மறுபடியும் சர்க்காரை அனுமதி கேட்கப் போகிறேன். பாஸ்போர்ட் கிடைத்தால் போய் வருவேன்!'' என்றார் புன்னகையோடு.


அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். சினிமாவில் குத்துச் சண்டையும் கத்திச் சண்டையும் போடும் புரட்சி நடிகர், நேரில் பார்க்க இத்தனை சாதுவாக இருக்கிறாரே என்று வியந்து கொண்டே வீடு திரும்பினோம்.

ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில்......

Sunday, September 04, 2011

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா சுட்டதன் பின்னணி என்ன?

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataM/mgr/images/restricted/06-11-2008/malayalam_actor_mgr_20.jpg



1. எம்.சிவகுமார், வேதாரண்யம்.

 இந்த அரசின் 100 நாள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்? 

'ஜெயலலிதாவிடம் கொஞ்சம் மாறுதல் தெரிகிறது’ என்று பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க ஆரம்பித்திருப்பதே பெரிய சாதனை!

சி.பி - நில மோசடி வழக்கில் வரிசையா பெரிய தலைங்க எல்லாம் உள்ளே போறாங்க, பலருக்கு கிலி.. இது நல்ல ஓப்பனிங்க்.. 
2.  வசந்த முருகன், மன்னார்குடி.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டதற்கு உண்மை​யான காரணம் என்ன? 


அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசிய பேச்சைக் கேளுங்கள்...


'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம். 

அதுல என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க!’

சி.பி - ஒரு பட அதிபரை கால்ஷீட் விஷயத்தில் எம்ஜிஆர் இழுத்தடித்ததாகவும், அது பற்றிய பஞ்சாயத்தில் எம் ஆர் ராதாவை வாக்குவாதத்தில் சுட முயன்றபோது அவ்ர் முந்திக்கொண்டதாகவும் ஒரு உறுதி செய்யப்படாத தகவல் உலா வருகிறது.. 


http://cdn4.supergoodmovies.com/FilesFour/mgr-s-assistant-muthu-passes-away-418a725d.jpg
3.  பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

அடையாள உண்ணாவிரதம், ஒரு நாள் உண்ணாவிரதம், காலவரையற்ற உண்ணாவிரதம், சாகும் வரை உண்ணாவிரதம்.... என்ன வேறுபாடு? 

முன்னது இரண்டும் கட்சிகள் நடத்துவது. மூன்றாவது, போராட்டக்காரர்கள் நடத்துவது. சாகும் வரை உண்ணாவிரதம் மட்டுமே தியாகிகள் நடத்துவது!
முன்னது இரண்டும் ஒப்புக்காக நடத்தப்படுவது. நிர்ப்பந்தமும் நெருக்கடியும் காலவரையற்ற உண்ணா​​விரதத்துக்குக் காரணமாக இருக்கிறது. எதைப் பற்றிய கவலையும் இல்லாமல், நோக்கம் நிறைவேறினால் மட்டுமே போதும் என்ற ஒரே இலக்கோடு நடத்தப்படுவைதான் தியாக நெருப்பில் நடப்பவை!



சி.பி -  அடையாள உண்ணாவிரதம் கலைஞர் நடத்தும் 3 மணி நேர நாடகம் போல, ஒரு நாள் உண்ணாவிரதம் வீட்டில் மனைவி நம்மை வழிக்கு கொண்டு வர நடத்துவது,காலவரையற்ற உண்ணாவிரதம் காந்திஅடிகள் செய்தது, சாகும் வரை உண்ணாவிரதம் திலீபன் செய்தது. 


4.  மகேந்திரன், செய்யாறு.

அறிவை விருத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்? 

'அதிகம் உற்று நோக்க வேண்டும். கொஞ்சமாவது துன்பப்பட வேண்டும். ஏராளமாக வாசிக்க வேண்டும்’ - என்று கெதே சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
'கண்டதும் கற்றால் பண்டிதன் ஆவான்’ என்கிறதே நம்முடைய பழந்தமிழர் மொழி!

சி.பி - பல புத்தகங்கள் படிக்க வேண்டும், பல சான்றோர்கள், ஆன்றோர்கள் அனுபவங்களை கேட்டு அதன் படி நடக்க வேண்டும். 

  http://www.mgrhome.org/Pictures/AAA.jpg
5.  அய்யாறு வாசுதேவன், சென்னை-14.

மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டால் சமூகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும், கொலைபற்றிய பீதியிலேயே மக்கள் வாழ வேண்டி இருக்கும் என்கிறார்​களே? 

அப்படியா?
மரண தண்டனை இப்போது நடைமுறையில்தானே இருக்கிறது. அதனால், நாட்டில் கொலையே நடக்கவில்லையா? கொலை, கொள்ளை பீதி இல்லாமல்தான் வாழ்கிறீர்களா? தண்டனைகளைக் கடுமைப்படுத்துவதால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது. குற்றவாளிகள் - காவல் துறை - ஆட்சியாளர்கள் - அதிகார வர்க்கம் இவற்றுக்குள் இருக்கும் நட்புறவுச் சங்கிலியை அறுப்பதன் மூலம்தான் குற்றங்​களைக் குறைக்க முடியும்!


சி.பி - கண்ணுக்கு கண் , பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்பது கொடூரம்..


6.  ஆர்.அஜிதா, கம்பம்.

'அ.தி.மு.க. அரசுபற்றி இப்போது கருத்துச் சொல்ல மாட்டேன். ஆறு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்’ என்று சொல்கிறாரே எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்? 

இதெல்லாம் நொண்டிச் சாக்கு!
அதுவரைக்கும் ஜெயலலிதா என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வாரா விஜயகாந்த்?

தி.மு.க-வினர் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது, பெருந்தலைவர் காமராஜர், 'அவர்கள் இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆட்சி என்றால் என்ன, எந்த ஃபைல் எங்கே இருக்கிறது, அதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கு ஆறு மாதங்களாவது அவகாசம் தர வேண்டும். அதுவரை விமர்சிக்க மாட்டேன்’ என்று பெருந்தன்மையாகச் சொன்னார். 

அது புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர... மூன்றாவது முறையாக முதல்வராகும் ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது.
அதைவிட முக்கியமாக, முதல் தடவை எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு வருபவர் ஆறு மாதங்களுக்கு சட்டமன்றத்துக்கு வரத் தேவை இல்லை என்று பெருந்தலைவர் காமராஜர் ஏதாவது சொல்லி வைத்தாரா என்று பழைய பேப்பரைப் பார்க்க வேண்டும்!


சி.பி - உ:ள்ளாட்சித்தேர்தல் வரும்போது கூட்டு தொடர வேண்டுமெ? அதுக்காக அண்ணன் பம்பறார்னு நினைக்கறேன்.. 

http://blog.tamilmp3songslyrics.com/image.axd?picture=2010%2F3%2Fmgr_latha.jpg
7.  நா.மைதிலி, சென்னை-45.

தற்போதைய தலைமைச் செயலகம் இடப்பற்றாக்குறையாக இருப்பதால்தானே இப்போதுள்ள அரசு முந்தைய ஆட்சிக் காலத்திலும் புதிய கட்டடம் கட்டலாம் எனத் திட்டமிட்டது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை அரசு அலுவலகங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு... மத்திய சிறை இருந்த இடத்தில் மருத்துவமனையை விரிவாக்கம் செய்துகொள்ளலாமே? 


நல்ல யோசனைதான்! அதைச் செய்யவிடாமல் தடுக்கும் 'ஈகோ’வை எங்கே கொண்டு​போய்​வைப்பது?

சி.பி - கலைஞரால் தொடங்கப்பட்ட எந்த ஒரு திட்டத்தாலும் நல்ல பெயர் அவருக்கு வந்துடக்கூடாதுனு அம்மாவுக்கு ஒரு நல்ல எண்ணம் இருக்கு.. 
8.  முருகேசன், திருவள்ளூர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தண்டனையைக் குறைக்கச் சொல்லி அறிக்கைவிடுத்த கருணாநிதி, 'இது கடிதம் அல்ல. கருணை மனு’ என்கிறாரே? 


அவர் முதலமைச்சராக இருந்தபோது, இதே மூவரும் அனுப்பிய கருணை மனுவை வெறும் கடிதமாகத்​தான் பார்த்தார். இன்று இவரது கடிதத்​
தை கருணை மனுவாகப் பார்க்க வேண்டும் என்கிறார்.
வெறும் வார்த்தை ஜாலங்களில் ஓடுகிறது காலம்!

சி.பி - அவர் முதல்வராக இருந்தபோது ஏதாவது செய்திருக்கலாம், அப்போ விட்டுட்டு........

நன்றி - ஜூ வி

Saturday, April 30, 2011

எம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்?

கழுகார் பதில்கள் - காமெடி கும்மி

1.குணசீலன், தஞ்சாவூர்

சார்லி சாப்ளின் நடிப்பு பிடிக்குமா?
சாப்ளினை ரசிக்காதவர்கள் ரசிப்புத்தன்மை இல்லாதவர்கள்! அவர் நடிகர் மட்டுமல்ல...  தத்துவ மேதை! இதோ சில முத்துகள்...

. வாழ்க்கையே ஒரு நகைச்சுவை​தான்.
. மழையில் நனைவது பிடிக்கும், ஏனென்றால் நான் அழுவதை யாரும் கவனித்துவிட முடியாது.

. வாழ்க்கையை நெருங்கிப் பார்த்தால் சோகம், விலகிப் பார்த்தால் இன்பம்.

.நீங்கள் தலைகுனிந்து நடந்தால், வானவில்லை ரசிக்க முடியாது.


.நினைவுகள் இருந்தால் தனிமை தெரியாது.

சி. பி  - கம்யூனிச சிந்தனைகளை, தொழிலாளர் படும் கஷ்டங்களை அவர் அளவுக்கு நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர் யாரும் இல்லை.. பர்சனல் லைஃபில் அவர் போல் தோல்வியை சந்தித்த நகைச்சுவை நடிகரும் யாரும் இல்லை.

------------------------------
2.எல்லோரும் கரடியாய்க் கத்தி என்ன பயன்? நம் பிரதமரே வாக்களிக்கவில்லையாமே?

யாருக்கு வாக்களிப்பது என்று மன்மோகன் சிங் முடிவுக்கு வருவதற்குள், தேர்தல் முடிந்துவிட்டது. பாவம், பிரதமர் என்ன செய்வார்?



சி .பி. -அன்னையிடம் இருந்து ஆணை வரவில்லையோ என்னவோ?முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் எல்லாம் இந்த மாதிரி இருந்தால்நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்துவது எப்படி?

 -------------------------------

3.ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்

தி.மு.க-வுக்கு எதிரான செய்திகளுக்கு கழுகார் முக்கியத்துவம் தருவது ஏன்?

அ.தி.மு.க ஆட்சிக் காலமாக இருந்திருந்​தால் நீர், இதே கேள்வியை மாற்றிக் கேட்டிருப்பீர். காய்க்கும் மரமே கல்லடி படும். ஆளும் கட்சியே அதிக விமர்சனங்களை சந்திக்க நேரும்!

சி பி - உச்சியில் இருப்பவர்களைத்தானே குட்ட முடியும்?

----------------------------------
4. ஜி.விஸ்வநாதன், நாகர்கோவில்.

நல்ல நடிகர் சந்திரபாபுவை குடிதானே வீழ்த்தி​யது?

குடியும்!
ஆனால், மனசுக்குள் எதையும் மறைத்து வைக்​காமல் வெளிச்சத்தில் போட்டு உடைத்த குணம் உடையவர் என்பதால், அவர் வீழ்த்தப்பட்டார் என்பதே உண்மை!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகிய மூவரையும்பற்றி சந்திரபாபுவிடம் கருத்துக் கேட்டார் ஒரு நிருபர்.

'ஜெமினி என்னோட ஆதிகால நண்பன். அவனுக்கு காமெடி எப்படிப் பண்ணனும், லவ் சீன் எப்படிப் பண்ணனும் என்று நடித்துக் காட்டுவேன்.

அடே அம்பி, இத்தனை வருஷமாச்சு. நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை!

சிவாஜி நல்ல ஆக்டர், பட்... அவரைச் சுத்தி காக்கா கூட்டம். அந்த ஜால்ரா கூட்டம் போனாத்தான் தேறுவார்.

எம்.ஜி.ஆர்., கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். கம்பவுண்டராகப் போகலாம்’ என்று பதில் சொன்னவர் சந்திரபாபு. இடம், பொருள் பார்க்காமல், இப்படி கமென்ட்கள் அடித்ததால்தான் அவருக்கு சிக்கல் வந்தது!

சி பி - ஓப்பனா பேசக்கூடாது என்பது வி ஐ பி களுக்கான எழுதப்படாத விதி.. நம் ஆர் ராதாவும்,சந்திரபாபுவும் அதை மீறினார்கள். அவர்கள் பலமும் அதுதான்,பலவீனமும் அதுதான்

---------------------------------

5. போடி எஸ்.சையது முகமது, சென்னை-93

  மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பற்றி?

'அவருக்கு யாருய்யா சகாயம்னு பேர் வெச்சது? எந்த சகாயமும் பண்ண மாட்டேன்னு சொல்றாரே?’ என்று புலம்பினாராம் மத்திய அமைச்சர் அழகிரி.
'யார் என்னைத் தொந்தரவு செய்தாலும், இந்த சகாயம் நேர்மை தவற மாட்டான்’ என்பது அவர் அடிக்கடி சொல்வது.

2026-ல் யார் முதலமைச்சராக வருவார் என்பதைக்கூடக் கணக்குப் போட்டு காக்கா பிடிக்க நினைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கத்தில் தப்பிய சிலரில் சகாயமும் ஒருவர். இந்த சமூகம் இன்னும் மோசமாகிவிடவில்லை, நல்லவர்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு சாட்சி!

சி. பி -சகாயம் அரசியல்வாதிகளுக்கு ஒரு கசாயம். சேற்றில் செந்தாமரைகள் முளைப்பது மாதிரி நாட்டில் சில நல்லவர்கள் தோன்றுவது உண்டு

---------------------------

6.ரேவதிப்ரியன், ஈரோடு

  உங்கள் குரு யார்?

வாசகர்!

சி பி - காசு குடுத்து வாங்கிப்படிக்கறவங்களா? ஓ சி ல லைப்ரரில படிக்கறவங்களா?

--------------------------
7. வி.சுதாகரன், நெய்வேலி.

  ஈழத் தமிழர் பிரச்னையை முழுமையாக அறிந்துகொள்ள சில புத்தகங்களைப் பரிந்துரை செய்யுங்கள்!


போரும் சமாதானமும் - ஆன்டன் பாலசிங்கம்

சமாதானம் பேசுதல் - 'அடையாளம்’ வெளியீடு

ஈழத்தமிழர் போராட்ட வரலாறு - பாவைச் சந்திரன்

இந்த மூன்றும் புராதன இலங்கையில் தொடங்கி ராஜபக்ஷேவின் காலம் வரைக்குமான அனைத்து அழிவுத் தகவல்களையும் அப்பட்டமாகச் சொல்கின்றன!

சி பி - புத்தகங்கள் படிப்பதை விட ஈழ அகதியிடம் ஒரு நாள் இருந்து அவர்களுடன் பேசிப்பார்த்தாலே அவர்கள் வலியை உணர முடியும்.

-----------------------

8. எம்.செல்லையா, சாத்தூர்

  நரேஷ்குப்தா, பிரவீண் குமார் ஒப்பிடுக!

இரண்டுமே அணுகுண்டுகள். ஒன்று அமைதியாகவும், இன்னொன்று அதிரடியாகவும் வெடிக்கும்!

சி பி -ஆணவத்தால் ஆடிய அரசியல்வாதி மாப்புகளை ஆப்பு அடித்தவர்கள் இருவருமே..

------------------------------


9. வி.செல்லப்பா, திருநெல்வேலி.

  இந்தத் தேர்தலில் செலவான பணத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?

ஒரே ஒரு கட்சி செலவழித்தது மட்டும் இரண்டாயிரம் கோடியைத்  தாண்டுகிறது!  இதைத்தான் பூஜ்யங்களின் ராஜ்யம் என்கிறார்கள்!

சி பி - பிஸ்னெஸ்மேன் முதல் போட்டு பின் போட்ட காசை எடுப்பது மாதிரி சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்கிறார்கள்.பாக்கெட்டில் இருந்தா செலவு பண்ணுனாங்க.? ஏற்கனவே அடிச்ச காசில இருந்து ஒரு பர்சண்ட்டேஜ்ஜை செலவு பண்ரது பெரிய தியாகமா? என்ன?

----------------------------
10. என்.சொர்ணம், தூத்துக்குடி.

  ஆ.ராசா எப்படி இருக்கிறார்?

தேர்தல் முடிந்ததும் தன்னை வந்து தலைவர் சந்திப்பார் என்று நினைத்தாராம். ஆசை நிராசை ஆகி வருவது அவருக்கு வருத்தமாகத் தானே இருக்கும்!

 சி பி - மாட்டிக்கொள்ளாதவரை மகான், மாட்டிக்கொண்டால் மாக்கான் .
தலைவர் வராட்டி என்ன? தலைவி வந்தாங்களே போதாதா?


-------------------------------
11. சி.சாந்தி, மதுரை.

  அமைச்சர்களில் அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் யார்?

தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கிறார்!

 சி பி - அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் நம் முதல் அமைச்சர்?