மற்ற எந்த ஹீரோக்களிடமும் இல்லாத 2 பிளஸ் விஜய் ஆண்ட்டனி கிட்டே இருக்கு 1 கதைத்தேர்வு. அவரோட முகத்துக்கு , உருவத்துக்கு ஏற்ற கதா பாத்திரம் உள்ள ஜீவனுள்ள திரைக்கதையா தேர்வு செய்வது 2 கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் திலகங்கள் ஒதுக்கி வைத்த நெகடிவ் டைட்டில்களை வேண்டுமென்றே வைத்து சொல்லி அடிக்கும் கில்லி ஆக இருப்பது ( ஆல்ரெடி இது போல் பல எதிர்ப்புகளை மீறி நெகடிவ் டைட்டில் வைத்து வெற்றி பெற்றவர்கள் கே பாக்யராஜ் ( சுவர் இல்லாத சித்திரங்கள்) , ஆபாவாணன் ( ஊமை விழிகள்)
சயனைடு மல்லிகாவையே கதி கலங்க வைக்கும் சசிகலா எப்படி சி எம் ஆகற டைம்ல கரெக்டா ஜெயிலுக்குப்போனாரோ அப்படி ஹீரோ அரசியல்வாதி ஆகும் நல்ல ஒரு தருணத்தில் கொலை செய்யப்படுகிறார்
அவரோட வாரிசு பெரிய ஆள் ஆகி அரசியல்வாதி ஆவதும் , அவரைச்சுற்றி நிகழும் சதி வலைகளை உடைப்பதும் தான் படத்தின் திரைக்கதை. சத்யராஜ் -ன் அமைதிப்படை , தனுஷ் -ன் கொடி , கே வி ஆனந்த் -ன் கோ வரிசையில் எமன் கூட ஒரு பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர் என சொல்லலாம்.
ஹீரோவா அண்டர் ப்ளே ஆக்டிங் ஸ்பெஷலிஸ்ட் அதாவது அடக்கி வாசிக்கும் ஆண் அழகன் விஜய் ஆண்ட்டனி . நான் , சலீம் , பிச்சைக்காரன், சைத்தான் என தொடர்ந்து ஏறுமுகம் ஆகவே இருக்கும் ஆறுமுகம். இதில் நடிப்பில் மெருகேற்றி அனைவர் உள்ளங்களையும் கவர்கிறார். ஆக்சன் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் உதவியுடன் அப்ளாஸ் வாங்கறார். தனக்கு வராத ஐட்டம்சை அவர் விட்டுடனும்.அதாவது டான்ஸ்.. இந்தப்படத்தில் ஒரு மெனக்கெடல் டான்ஸ் இருக்கு., நிஜமா முடியல
ஹீரோயினா மியா ஜார்ஜ். தமிழ் சினிமாவில் எத்தனையோ நெ1 ஹீரோயின்கள் அவ்வப்போது கோலோச்சினாலும் கிளாமர் ஹீரோயினாக புதுப்புது ஆட்கள் சார்ஜ் எடுத்துக்கொள்வார்கள், லேட்டஸ்ட் சார்ஜ் இந்த மியா ஜார்ஜ். காதல் காட்சிகளில் , டூயட் சீன்களில் கண்களில் காதல் பொங்குகிறது
வில்லனா தியாகராஜன்.நீண்ட இடைவெளிக்குப்பின் தினகரன் போல் நெகடிவ் எண்ட்ரி. பிரமாதம்னும் சொல்ல முடியல, மோசம்னும் தள்ள முடியல, ஓக்கே ரகம்
ஜாதிக்கட்சி தலைவராக வரும் அரசியல்வாதி ரோல் கன கச்சிதம்.
கிட்டத்தட்ட ஒரு நாவல் படிப்பது போல் நேர்த்தியான , பொறுமையான கதை ஓட்டம் தந்த திரைக்கதை ஆசிரியருக்கு ஒரு ஷொட்டு
பிஜிஎம் , ஒளிப்பதிவு பக்கா .
சபாஷ் டைரக்டர்
1 வசனகர்த்தா , திரைக்கதை அமைப்பாளர் இருவரும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். நிதானமான வசன உச்சரிப்பு , நறுக் சுருக் கச்சித வசனங்கள் +
2 கதையில் வரும் 3 கதா பாத்திரங்கள் , ஹீரோ இவர்கள் யார் எப்போ எப்படி கட்சி மாறுவார்கள் என யூகிக்க முடியாதபடி கதையை நகர்த்திய விதம்
3 காரில் இரு வில்லன்களை அமர வைத்து விட்டு யாரோ ஒருவர் ஜ் மட்டும் தான் உயிரோட வெளில வரனும் என ஹீரோ எச்சரிக்கும் காட்சியும் அதைத்தொடரும் காட்சிகளும்
4 மியா ஜார்ஜ் -ஹீரோ காதல் மலரும் தருணங்கள் , அதை நாயகி அழகாக நாசூக்காக வெளிப்படுத்தும் விதம்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஹீரோ ஓப்பனிங்க்ல “ நான் எந்த தப்பும் செய்யாம தான் ஜெயிலுக்கு வந்தேன் “ என சொல்கிறார்.ஆனால் ஆள் மாறாட்ட கேசில் தான் உள்ளே வர்றார்? அதாவது யாரோ நிகழ்த்திய விபத்துக்கு இவர் பொறுப்பெடுத்து பணத்துக்காக தான் தான் அந்த விபத்துக்குக்காரணம் என சொல்கிறார். அது தப்பு தானே?
2 இந்தக்காலத்துல சொந்த சம்சாரம்ங்க சலூன்க்கு பேப்பர் படிக்க நாம போனாக்கூட ஏங்க நானும் வரவா?ன்னு கேட்குதுங்க. இந்தப்படத்தில் ஹீரோ முக்கியமான ஒரு அரசியல் நிகழ்வுக்கு[போகும்போது சம்சாரம் கண்டுக்க வே இல்லையே? நானும் வர்றேன்னு சொல்லவே இல்ல?
3 ஹீரோ சாராய வியாபாரியாக வருகிறார், ஆனா க்ளைமாக்சில் காந்திஜியின் கருத்துக்களை பேசறார். அவரோட முக்கியமான கருத்தே மதுவுக்கு எதிரானதுதானே?
4 அரசியல் சதுரங்கம் என்பதுதான் சரியான டைட்டில். எமன் பொருந்தவில்லை
நச் டயலாக்ஸ்
1 எந்த தப்புமே செய்யாம நான் தண்டனையை அனுபவிச்ட்டு இருக்கேன்.அப்டின்னா நான் எந்த தப்பு வேணாலும் பண்ணலாம்னு அர்த்தம் #YAMAN
2 நம்பிக்கை இல்லாத ஆளை கூட வெச்சிருக்கறது எமன் கூட சகவாசம் வெச்சிருப்பது போல் #YAMAN(சசிகலா ரெப்ரன்ஸ்)
3 தலைவரே! நான் 1 கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?
4 அரசியல்வாதி யின் இலக்கணம் என்ன தெரியுமா? இருக்கறவன் கிட்டே பணத்தை வாங்கிட்டு இல்லாதவன் கிட்டே ஓட்டு வாங்கிக்கறவன் #YAMAN
5 நிதி ங்கற பேர்ல பணக்காரன் கிட்டே காசு.வாங்கறவன் எப்டி ஏழைக்கு நல்லது செய்வான் ? #YAMAN
6 அதென்னவோ தெரில.பொண்ணுங்களுக்கு வெள்ளையா இருக்கறவனைத்தான் பிடிக்குது.
உங்க ஒயிப் க்கு உங்களைப்பிடிக்காதா?
ஆ #YAMAN
7 உலகத்துலயே ரொம்பக்கொடுமையானது ஒருத்தனோட அறியாமையை பயன்படுத்தி அவனை ஒழித்துக்கட்டுவது #YAMAN (சசிகலா ரெப்ரன்ஸ்)
9 யுத்தத்தைக்கண்டு பயந்தா அரசன் ஆக முடியாது.
ரத்தத்தைக்கண்டு பயந்தா தலைவன் ஆக முடியாது #YAMAN
10 அரசியல்ல மட்டும் எதிரி வெளில எங்கேயும் இருக்க மாட்டான்.விசுவாசி ங்கற பேர்ல கூடவே தான் இருப்பான் #YAMAN ( சசிகலா ரெப்ரன்ஸ்)
11 பொதுவா நம்ம கிட்டே இருக்கும் பிரச்னை என்ன தெரியுமா ?மத்தவங்களுக்கு வர்ற பிரச்னை நமக்கு வராதுனு தப்பா நினைச்சு அலட்சியமா இருப்பது #YAMAN
12 இங்கே யாரும் அப்பாவி கிடையாது.எல்லாரும் எதோ ஒரு ஆதாயத்துக்காகத்தான் எல்லாம் பன்றோம் #YAMAN
13 நாம எடுக்கற ஒவ்வொரு முடிவுக்குமான பலா பலனை நாம அனுபவிச்சுத்தான் ஆகனும் #YAMAN
14 ஒரு கெட்டவனை எதிர்ப்பதால் மட்டும் இன்னொரு கெட்டவன் நல்லவன் ஆகிட முடியாது #YAMAN ( DMK ADMK PMK ரெப்ரன்ஸ்)
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 விஜய் ஆண்ட்டனி.டான்ஸ் ஆட நினைப்பது
இயக்குநர் விஜய் மீண்டும் அமலாபால் கூட குடும்பம் நடத்த நினைப்பது ,
விஜய் கெட்டப் சேஞ்ச் எல்லாம் 1
2 பொண்ணுங்கன்னா அலங்காரம் தேவைதான்.கேரளா-கோட்டயம் ஆஷா தியேட்டர் லேடீஸ் பாத்ரூம் வாசல்ல சீரியல் பல்ப் எல்லாம் போட்டு டெக்ரேட்டட்
சி.பி.கமெண்ட் -எமன் -நேர்த்தியான திரைக்கதை.கொடி 2 டைப் பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர்.பிஜிஎம் ,வசனம் பக்கா.விகடன் -43 ,ரேட்டிங் 3/5