35 நாட்களில் எடுக்கப்பட்ட ஒரு படம் இந்த அளவு தரமாக அமைந்தது ஆச்சரியமே. படத்தின் இயக்குநரே நாயகனாக நடித்திருப்பது ஹை லைட். லொக்கேஷன் ஒரே ஒரு பங்களா. அதில் ஐந்து பேரை வைத்து மொத்தப்படத்தையும் லோ பட்ஜெட்டில் எடுத்தது சிறப்பு
6/10/2023 அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது 1/3/2024 முதல் அமேசான் பிரைம் ஓடி டி யில் காணக்கிடைக்கிற்து .
ஸ்பாய்லர் அலெர்ட்
. நாயகி ஒரு தொழில் அதிபரின் மனைவி, வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டம் காரணமாக பெரிய பொருளாதார இழப்பு , அதை சரி செய்ய நாயகி ஒரு எம் எல் ஏ வின் உதவியை நாடுகிறாள். பெரிய தொகையை கடனாகக்கேட்கிறாள் . இது சம்பந்தமாக அடிக்கடி எம் எல் ஏ வை சந்திக்க நேர்கிறது . ஆனால் நாயகியின் கணவர் இதை தப்பாக நினைக்கிறார், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளு முள்ளு நடந்ததில் நாயகி தன் கணவரைத்தாக்கி விடுகிறாள் . கணவர் சீரியஸ் கண்டிஷனில் வீட்டில் மயக்க நிலையில் இருக்கிறார்
நாயகன் ஒரு டாக்சி டிரைவர்
நாயகி நாயகனின் டாக்சி யில் பயணம் செய்து தன் வீட்டுக்கு வருகிறாள். நாயகனையும் உள்ளே அழைக்கிறாள் . உள்ளே வந்த பின் தான் நாயகனுக்கு வீட்டில் ஒரு டெட் பாடி இருப்பது தெரிய வருகிறது . திடீர் என நாயகியும் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார்.
அப்போது வீட்டுக்கு ஒரு திருடன் வருகிறான். பணம், நகை எல்லாம் கொள்ளை அடித்து வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் மாட்டிக்கொள்கிறான்
அப்போது நாயகிக்குப்பணம் தருவதாகச்சொன்ன எம் எல் ஏ வருகிறார். அவரும் வீட்டில் மாட்டிக்கொள்கிறார்
இப்போது வீட்டில் இரு பிணங்கள் ( நாயகி & நாயகியின் கணவர் ) உயிருடன் மூவர்.. இதற்குப்பின் திரைக்கதையில் ஏற்படும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக நடித்து படத்தை இயக்கி இருக்கிறார் விக்ரம் ரமேஷ் நல்ல முகவெட்டு. ஆஜானுபாவகமான தோற்றம் . நடிப்பும் ஓக்கே ரகம். இவர் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பு உண்டு
நாயகி ஆக ஸ்வயம் சித்தா நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் புகழ் காயத்ரி முகச்சாயலில் இருக்கிறார். முதல் அரை மணி நேரம் தான் இவருக்கு வாய்ப்பு . அதற்குப்பின் மகளிர் மட்டும் நாகேஷ் போல் படம் முழுக்க டெட்பாடியாகத்தான் வருகிறார், முக அழகு , கிளாமர் இரண்டும் ஓக்கே
திருடனாக வரும் கார்த்திக் வெங்கட் ராமன் , கணவன் ஆக வரும் ,முரளி சீனிவாசன் , எம் எல் ஏ வாக வரும் சிவக்குமார் ராஜூ , , போலீஸ் ஆஃபீசர் ஆக வரும் சக்திவேல் வெங்கட் ராமன் நால்வருமே கச்சிதமாக் நடித்திருக்கிறார்கள்
கலாச்சரண் தான் இசை , பின்னணி இசையில் டெம்ப்போ ஏற்றுகிறார். தளபதி ரத்தினம் தான் ஒளிப்பதிவு ஒரே பங்களாவை 2 மணி நேரம் மாறுபட்ட கோணங்களில் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், சமாளித்து இருக்கிறார். முகன் வேல் தான் எடிட்டிங். 104 நிமிடங்களில் ஷார்ப் ஆக ட்ரிம் செய்து இருக்கிறார்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் விக்ரம் ரமேஷ்
சபாஷ் டைரக்டர்
1 முதல் காட்சியிலேயே எதிர்பார்ப்பைத்தூண்டி முதல் 30 நிமிடங்கள் கதைக்குள் இழுத்துச்சென்ற விதம்
2 பின் பாதி திரைக்கதையை காமெடியாகக்கொண்டு சென்றது .. மிஸ்ட்ரி த்ரில்ல்ர் என பிரமோ செய்தாலும் இது காமெடி க்ரைம் ட்ராமா என்பதே சரி
3 தேவையற்ற காட்சிகள் இல்லாமல் குயிக் வாட்ச் ஆக ஒன்றே முக்கால் மணி நேரத்தில் படத்தை முடித்த விதம்
ரசித்த வசனங்கள்
1 ஊர் சுற்றுவது எனக்கு ரொம்பப்பிடிக்கும், இப்போ கேப் டிரைவ்ர் ஆகிட்டேன். ஊர் சுற்றுபவர்களை வண்டில ஏத்திக்கிட்டு நான் இப்போ ஊர் சுத்தறேன்
2 உங்க பேர் என்ன?
சேகர் மேடம்
உங்கப்பா பேரு மேடமா?
சும்மா கலாய்க்காதீங்க
ஜஸ்ட் கிட்டிங்
ரெண்டும் ஒண்னுதான்
3 மேடம் , விஸ்கி , ரம், ஒயின் தெரியும், அதென்ன ஷகீலா?
அது ஷகீலா இல்லை , டகீலா
4 இந்தாளு உன் பேச்சைக்கேட்க மாட்டேங்கறான்
என் பேச்சை நானே கேட்க மாட்டேன் , இந்தாளு எப்படி கேட்பான் ?
5 கத்தியால என்னைக்குத்தத்தெரியுது இல்ல ? அதை எடுக்கத்தெரியாதா?
6 நீ ஒரு திருடனா?
அய்யோ , இல்லீங்கண்ணா , காஃபி ஷாப் ஓனர். பார்ட் டைமா தான் திருடன்
உன் லைஃப் டைமே காலி ஆகப்போகுது, உன் பார்ட் டைம் வேலையால
7 க்தவுக்கு பாஸ்வோர்டு போட்டு லாக் பண்ணவங்க சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் இருக்கும் சிஸ்டத்துக்கு லாக் போடலை
டேய், கதவுக்கு லாக் போட்டதாலதான் சிஸ்டத்துக்கு லாக் போடலை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பாஸ்வோர்டு தப்பாப்போட்டதால் செக்யூரிட்டி சிஸ்ட,ம் லாக் ஆகிடுச்சு, அடுத்த நான்கு மணி நேரம் கழிச்சுதான் பாஸ்வோர்டு போட்டு க்தவைத்திறக்க முடியும், ஓக்கே.. கதவை உடைச்சாலோ , ஜன்னல் கதவை உடைச்சாலோ அலாரம் அடிக்கும், அதுவும் ஓக்கே, மாடிப்படி வழியாக மொட்டை மாடி போய் அங்கே இருந்து பைப் வழியாக இறங்கி இருக்கலாமே?
2 திருடன் தான் தேடி வந்த பணம், நகை எல்லாம் கிடைத்த பின் எஸ் ஆகப்பார்ப்பானா? ரூமில் வேறு யாரோ இருக்கிறார்களே? என தேடி ஃபைட் போட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருப்பானா? பணம் கிடைச்சதும் சிட்டாகப்பறந்து இருக்கலாமே?
3 நாயகன் , திருடன் , எம் எல் ஏ மூவருமே சிசிடிவி ஃபுட்டேஜை அழிக்கறாங்க, ஓக்கே , ஆனா சரக்கு அடிச்சு அவங்க கை ரேகைகளை டம்ளர்ல, பாட்டில்ல விட்டுட்டு போறாங்களே?
4 கால் தொடையில் கத்திக்குத்து வாங்கிய எம் எல் ஏ தூங்கப்போவதாக சொல்கிறார். பெயின் கில்லர் போட்டாலே தூக்கம் வராது . காயத்துக்கு சிகிச்சையும் எடுத்துக்காம, பெய்ன் கில்லரும் போட்டுக்காம எப்படித்தூங்க முடியும் ?
5 நாயகன் , திருடன் , எம் எல் ஏ மூவருமே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகாதவர்கள் , ஆனால் நீண்ட நாள் நண்பர்கள் போல ஒருவரை ஒருவர் காப்பாற்றத்துடிப்பது ஏன் ? அவ்ளோ நல்லவங்களா? அவனவன் தப்பிக்கத்தானே பார்ப்பான் ?
6 நான்கு டெட் பாடிக்ள் இருக்கும் வீட்டுக்கு வரும் போலீஸ் அந்த வீட்டை அக்கு வேறு ஆணி வேறாக சல்லடை போட்டு தேடி இருக்க மாட்டார்களா? அவ்ளோ பணத்தை நாயகன் அங்கே மறைத்து வைத்து பின் எடுக்க முடியுமா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சின்னப்படம் தான் என்பதால் த்ரில்லர் ரசிகர்கள் தாராளமாக இதைப்பார்க்கலாம் ரேட்டிங் 2.75 / 5