சித்த லிங்கய்யா எழுதி இயக்கிய பாலு பெலகிது(1970) என்னும் கன்னடப்படம் மெகா ஹிட் ஆனது . அதன் தெலுங்கு ரீமேக் ஆன மஞ்சிவாடு (1974)ஹிட் ஆனது , ஹிந்தி ரீ மேக் ஆன ஹம் சக்கல் (1974) சூப்பர் டூப்பர் ஹிட் , ஆனால் தமிழ் ரீ மேக் கன்னடம், தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் பெற்ற பிரம்மாண்டமான வெற்றியைப்பெறவில்லை . இருந்தாலும் எம் ஜி ஆர் படங்கள் வசூலில் மோசம் போனதில்லை என்ற அளவில் முதலுக்கு மோசம் இல்லாமல் ஓடிய படம்
எம் ஜி ஆர் படப்பாடல்களில் வழக்கமாக இருக்கும் ஓப்பனிங் தத்துவ சாங் இதில் இல்லை .டி எம் எஸ் வாய்ஸ் இல்லை ,எமர்ஜென்சி டைமில் வந்ததால் சென்சாரின் கத்திரி விளையாடி இருக்கும் . நாளை நமதே படத்தில் தான் நாளை நமதே இந்த நாளும் நமதே என்ற பாடல் ரிப்பீட்டாக மூன்று முறை வரும் , இப்படத்தில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டு இரவுப்பாடகன் ஒருவன் என்ற பாட்டு 5 இடங்களில் வரும்
இந்தப்படத்தை பட்டி டிங்கரிங் பண்ணி தான் விஜய்காந்த் நல்லவன் என்ற படத்திலும் ரஜினி வீரா என்ற படத்திலும் நடித்தார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனுக்குத்திருமணம் ஆகி மனைவி ,குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்த கட்டத்தில் குழந்தை ஒரு விபத்தில் சிக்க அதைப்பர்த்து அதிர்ச்சியில் மனைவி மனநலன் பாதிக்கப்படுகிறார். குழந்தை உயிர் பிழைக்கிறது . ஆனால் மனைவிக்கு எந்த அதிர்ச்சியான செய்தியும் சொல்லக்கூடாது என டாக்டர் சொல்லி விடுகிறார்
நாயகனைப்போலவே உருவ ஒற்றுமை உடைய நபர் ஒருவர் இருக்கிறார்.அவர்தான் நாயகனின் குழந்தையை விபத்தில் இருந்து காப்பாற்றியவர் , நாயகன் பெயர் செல்வம், அவரைப்போலவே இருப்பவர் ராஜா
காஞ்சனா என்னும் ஏழைப்பெண் தனிமையில் குடிசையில் வசிப்பதால் அவளை ஒருவன் தொந்தரவு செய்கிறான். அப்போது அந்த வழியாக வந்த ராஜா ( நாயகனைப்போலவே உருவ அமைப்பில் இருப்பவன் ) காப்பாற்றுகிறார். ஆனால் சமூகம் இவர்கள் இருவரையும் இணைத்துத்தப்பாகப்பேசுகிறது . அதனால் சமூகத்தின் வாயை அடைக்க ராஜா காஞ்சனாவைத்திருமணம் செய்து கொள்கிறர். இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது
அப்போதுதான் காஞ்சனா ராஜாவிடம் நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என கேட்க எஸ்டேட்டில் பணி புரிவதாக ராஜா சொல்கிறான்.
செல்வம் ஒரு போலீஸ் ஆஃபீசர் . ஒரு கேஸ் விஷய்மாக அவர் ஜெயிலில் கைதியாக நடிக்க வேண்டி இருப்பதால் அவரைப்போலவே இருக்கும் ராஜா இரு இடத்திலும் நாடகம் போட்டு சமாளிக்க வேண்டிய சூழல்
இதனால் ஏற்படும் குடும்பக்குழப்பங்கள் தான் மீதிக்கதை
நாயகன் ஆக எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்து இருக்கிறார். வழக்கமான அவர் துள்ளல் பாடல்கள் இல்லாதது பெரிய மைனஸ் , எம் ஜி ஆர் படங்களில் பிளசே உற்சாகமான அவரது தத்துவப்பாடல்கள் தான் , அது மிஸ்சிங்
நாயகிகள் ஆக வாணி ஸ்ரீ , வெண்ணிற ஆடை நிர்மலா இருவரும் ந்டித்திருந்தாலும் வாணி ஸ்ரீயின் நடிப்பு இதில் பெரிதும் பேசப்பட்டது
காமெடிக்கு தேங்காய் சீனிவாசன்
படத்தில் நான்கே பாடல்கள் , அதில் ஒரு பாட்டு மட்டும் ரிப்பீட்டாய் ஐந்து முறை வரும்
இசை எம் எஸ் விஸ்வநாதன் . மெலோடி இசையை அதிகம் நம்பி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர் ( எம் கிருஷ்ணன் நாயர் )
1 வழக்கமான எம் ஜி ஆர் பட ஃபார்முலாவில் இருந்து விலகி மாறுபட்டு திரைக்கதை அமைத்த விதம் குட் , ஆனால் ஒர்க் அவுட் ஆகவில்லை
செம ஹிட் சாங்க்ஸ்
1 அழகென்னும் ஓவியம் இங்கே , உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே?
2 இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திருரசித்த வசனங்கள்
1 சாயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு வரனும்
ஏன்? மத்தியானமே வந்தா ஒத்துக்க மாட்டியா?
( இந்த வசனத்தை நான் பேசினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என எம் ஜி ஆர் தயங்கினாராம் , வசனகர்த்தா ஆர் கே சண்மும் எம் ஜி ஆரை வற்புறுத்தி நடிக்க வைத்தாராம் , ஆனால் தியேட்டரில் இந்தக்காட்சிக்கு செம வரவேற்பாம். சென்னை மவுண்ட் ரோடு ப்ளாசா வில் ஒன்ஸ்மோர் கேட்டார்களாம்)
2 இவர் தான் என் கணவர்
நான் அவர் தாலி கட்டிய மனைவி
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு போல என மனைவி எண்ணும்போது அப்போது நான் உன் கணவனே இல்லை என்ற உண்மையை சொன்னால் அவள் உடல் நலம் பாதிக்கும் என்ற லாஜிக் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை . அதுவே பெரிய அதிர்ச்சி தான். அதை ம்றைப்பதற்கு ஓப்பன் பண்ணி இருக்கலாம்
2 ஒரே கோயிலுக்கு ஒரே சமயத்தில் இரு மனைவிகளும் போகலாம் என சொல்லும்போது ஈசியாக அதை சமாளித்து வேறு கோயிலுக்கு ஒருவரை அழைத்துச்சென்றிருக்கலாம் ( இதே காட்சி காமெடி டிராக் ஆக இரட்டை வால் குருவி , வீரா ஆகிய படங்களில் சிறப்பாகக்கையாளப்பட்டது )
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது ரிலீஸ் ஆன டைமிலேயே தோல்விப்படம், அதனால் எம்ஜி ஆர் ரசிகர்கள் தவிர பொது ஆடியன்ஸ் பார்ப்பதைத்தவிர்த்தல் நலம் ., ரேட்டிங் 2 / 5