Showing posts with label உழவன் மகன் (1987) (தமிழ்) - சினிமா விமர்சனம் @ ஜெ மூவிஸ். Show all posts
Showing posts with label உழவன் மகன் (1987) (தமிழ்) - சினிமா விமர்சனம் @ ஜெ மூவிஸ். Show all posts

Friday, October 28, 2022

உழவன் மகன் (1987) (தமிழ்) - சினிமா விமர்சனம் @ ஜெ மூவிஸ்

 


காண்ட்டாரா / காந்தாரா  எனும்  கன்னடப்படத்தை  சிலாகிப்பவர்கள்  எல்லாருமே  ரேக்ளா   பற்றி  குறிப்பிடத்தவறுவதில்லை.35  வருடங்களுக்கு  முன்பே   தமிழ்  சினிமாவில்  பிரம்மாண்டமான  ரேக்ளா  ரேஸ்  இடம்பெற்றிருந்தது  என்பதைப்பதிவு  செய்கிறேன். தமிழ்  சினிமா  வரலாற்றிலேயே  இன்று வரை    பிரம்மாண்டமான  ரேக்ளா  ரேஸ்  இடம்  பெற்ற  படம் இதுதான்


  திரைப்படக்கல்லூரி  மாணவர்கள்  என்றாலே  பயந்தவர்கள்  உண்டு. முன்னணி  ஹீரோக்களில்   ஃபிலிம்  இன்ஸ்டிடியூட்  ஸ்டூடண்ட்சை  நம்பி  படம்  எடுக்க  முன்  வ்ந்தது   விஜயகாந்த்தான். கமல்  கூட  இந்த  விஷயத்தில் கோட்டை  விட்டு  விட்டார். தமிழ்  சினிமா வின்  போக்கையே  திசை  திருப்பிய  பிரம்மாண்டமான  ஊமை  விழிகள் வெற்றியைத்தொடர்ந்து  ஒரு  மசாலாப்ப்டத்தை  எம் ஜி  ஆர்  ஃபார்முலாவில்  தந்த  படம். மனோஜ் கியான்  இசையில்  பாடலக்ள்  எல்லாம்  பட்டாசா  வந்திருக்கும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 கதை  நடப்பது  ஒரு  கிராமத்தில் . ஹீரோ  ஒரு  விவசாயி . அப்பா  சொல்  தட்டாதவர் அதே  கிராமத்தைச்சேர்ந்த  ஒரு  ஏழைப்பெண்ணை  காதலிக்கிறார்.வீணாப்போன  வில்லன்  விட்ட  ஒரு  வெட்டி  சவாலில்  ஹீரோவின்  அப்பா  ஒரு  வார்த்தையை  விட்டுடறார். சண்டையில்  யார்  ஜெயிக்க்றாங்களோ  அவருக்குத்தான்  அந்த  ஊர்ப்பெரிய  மனுசன்  பொண்ணு.


 இந்தப்பந்தய  விவகாரம்  தெரியாம  ஹீரோ  வில்லன்  கூட  ஃபைட்  போட்டு  ஜெயிச்சுடறார். பொண்ணு கட்ற  மேட்டர்  வெளில  வந்ததும்  ஹீரோ  பதறிடறார். 


இந்த  இக்கட்டான  சூழலில்  ஹீரோவின்  அப்பா மர்மமான  முறையில்  கொலை  செய்யப்படுகிறார். தான்  காதலித்த  பெண்ணை  திரும்ணம்  செய்யத்தடையாக  இருந்ததால்  அப்பாவையே  கொலை  செய்தார்  என ஃபிரேம்  செய்யப்பட்டு  ஹீரோ  ஜெயிலுக்குப்போறார்


இனி யார்  உங்களைக்காப்பாத்துவா? என  ஹீரோவிடம்    கேட்கும்போது  அந்த  ஆண்டவன்  தான்  வரனும்  என  ஹீரோ  வானத்தைப்பார்க்க  ஷாட்டை  அங்கே  கட்  பண்ணி  இங்கே  ஓப்பன்  பண்ணினா  இன்னொரு  ஹீரோ  அதே  விஜயகாந்த் , டபுள்  ரோல் 


 அவரு     ஹீரோவின்  தம்பி.இந்த  விஷயம்  நமக்கே  இப்போதான்  தெரியும்கறதை  விட  முக்கியம், ஹீரோவுக்கே  அப்போதான்  தெரியும்., அவர்  எப்படி   ஹீரோவைக்காப்பாத்தறார், வில்லனை  மாட்ட  வைக்கிறார்  என்பதே  பின்  பாதி  திரைக்கதை 


எம்  ஜி ஆர்  மாதிரி  பாடல் காட்சிகளில்  கைகளை  ஆட்டி நடித்தவர்கள்  பலர்.  சத்யராஜ் , எஸ்  எஸ்  சந்திரன், என  பலர்  நடித்தாலும்  விஜயகாந்த்   எம்ஜியார்  போல  நடித்தது  அல்லது  நடிக்க  முய்ற்சித்தது  இந்தப்படத்தில்தான்.  கிராமத்தான், நகரத்தான்  என  2  வேட்ங்களில்  நல்லாப்பண்ணி  இருபபார்.  குறிப்பாக  அப்பாவை  நான்  கொல்லலை, என்னை  நம்புங்க  என  ஊர்  மக்களிடம்  மன்றாடும்  காட்சியில்  புதிய  குணச்சித்திர  விஜய்காந்த்தைப்பார்க்க  முடியும் 


இவருக்கு  ஜோடியாக  ராதிகா. இருவருக்கும்  பாடி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆனதுக்கு  முக்கியக்காரண்ம்  இருவரும்  நிஜ்  வாழ்விலும்  காதலித்ததால்தான் . இருவ்ரும்  ஜோடியாக  27  படங்களில்  நடிச்சிருக்காங்க. சைடு  வாக்கில்  வகிடு  எடுத்த  வரை  நடு  வகிடு  எடுத்து  ஹேர்  ஸ்டைலை  சிறைப்பறவை  முதல்  மாற்றியவர்  ராதிகாதான் .  . 


இன்னொரு  நாயகி  ராதா. சிட்டி  கேர்ள் .  அதிக  வாய்ப்பில்லை 


  அப்பாவாக  நம்பியார் . கச்சிதமான  நடிப்பு ,  ராதாவின்  அப்பாவாக  மலேசியா  வாசுதேவன் / வில்லனாக  ராதா  ரவி 


பாடலக்ள்  எல்லாம்  பட்டி  தொட்டி  எங்கும்  ஹிட் 


 1  பொன்னெல்  ஏரிக்கரையோரம் பொழுது  சாயுற (  ஓப்பனிங்  சாங்) 

2  செம்மறி  ஆடே  செம்மறி  ஆடே   செய்வது  சரியா  சொல்  (  ராதிகா  டூயட்) 

3  வரகுச்சம்பா  கிடைக்கலை  ஓ ஓ (  சோகப்பாட்டு)

4  மாலைக்கருக்கலிலே  மையிருட்டு  வேளையிலே .... உனை  தேடும்  தலைவன் ( டிஎம் எஸ் ) 


5   மத்தாப்பூ ( கலாய் )

6  சொல்லித்தரவா ம்ம்ம்ம்  ( கோக்கு  மாக்கு  தெம்மாங்கு )


சினிமாஸ்கோப்பில்  உருவான  இப்படம்  ஒளிப்பதிவில்  கோலோச்சிய  படம் . கதை  திரைக்கதை  வசனம்  பாடல்கள்  இணை  இசை  என  டைட்டிலில்  ஆபாவாணன்  பெயர்  வரும்போது  கைதட்டல்  தியேட்டரில்  ஒலித்ததை  மறக்க  முடியாது /. ஆர் அர்விந்த்ராஜ்தான்  இயக்கம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    செம்மறி  ஆடே  பாடல்  முழுக்க  செம்மறி  ஆட்டுக்கூட்டம்  இங்கிட்டும்  அங்கிட்டும்  போய்க்கிட்டு  இருக்கும்  பாடலின்  பல்லவியான  செம்மறி  ஆடே  வரி  வரும்போது  ம்ட்டும்  ஹீரோ  ஒரு  வெள்ளாட்டுக்குட்டியை  தோளில்  தூக்கி  வருவார். (  ஒரு  வேளை  செம்மறி  ஆடு வெயிட்  அதிகமா  இருந்திருக்கும்,  அல்லது  வெள்ளாடு  போல  சமர்த்தா  உக்காந்திருக்காம  மக்கர்  பண்ணி  இருக்கலாம்  ) 


2  ஜெயில்ல  ஒரு  கைதியைப்பார்க்கப்போனோம்னா  விசிட்டர்ஸ்  டைம்  ஒரு  அஞ்சு  நிமிசம்தான்  இதுல    ரெண்டு  பேரும்  ஊர்க்கதை  உலகக்கதை  எல்லாம்  அரைமணி  நேரம்  பேசிக்கிட்டு  இருப்பாங்க 


3  ஹீரோ  ராதாவை  முதன்  முதலா  அப்போதான்  பார்ப்பார்  , ஆனா  பாடல்  வரி  உன்னை  தினம்  தேடும்  தலைவன்னு  வரும்,  சிச்சுவேசன்  சொல்லும்போது  மாத்தி  சொல்லிட்டாங்க  போல 


4   செம்மறி  ஆடே  பாடலில்  சரணத்தில்  செவத்த  பொண்ணு  இவத்த  நின்னு  என  வரி  வ்ரும்  நிஜ  வாழ்விலும்  பட்த்தில்  வ்ரும்  கேர்க்டரும்  மாநிறம்  தான் 


5  டூயல்  ரோல்  பட்ங்களில்  இன்னொருவரை  மாறுபட்ட  தோற்றத்தில்  காட்ட  ஹேர்ஸ்டைல்   அல்லது மச்சம்  போதும்  , கண்ணில்  காண்டாக்ட்  லென்ஸ்  போட்டு  காட்டுனா  அந்த  கேரக்டரின்  அம்மாவுக்கும்  அதே  லென்ஸ்  போட்டுக்காட்டனும் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - இப்போது  பார்த்தாலும்  டைம்   பாஸ்  மூவியாக  இருக்கும்  . பாடல்  காட்சிகளுக்ககவே  ப்டம்  பார்க்கலாம்  ரேட்டிங்  2.75 / 5   ஆனந்த  விகடன்  மார்க் 44 


உழவன் மகன்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்அரவிந்தராஜ்
தயாரிப்புஅ. செ. இப்ராகிம் இராவுத்தர்
கதைஆபாவாணன்
இசைமனோஜ் கியான்
நடிப்புவிசயகாந்து
ராதிகா சரத்குமார்
ராதா
ராதாரவி
ஒளிப்பதிவுஏ. ரமேஷ் குமார்
படத்தொகுப்புஜி. ஜெயசந்திரன்
கலையகம்ராவுத்தர் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 21, 1987
ஓட்டம்154 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்