தே.மு.தி.க., தனித்து போட்டி? மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு
உளுந்தூர்பேட்டை : 'தேர்தலில் தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள்; கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து, அதனால் பட்ட அடி போதும்' என, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார்.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய 'ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்" தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எறஞ்சியில் இளைஞர்கள் கடல் இங்கே இருப்பதைக் காண முடிகிறது.அருகில் உள்ள விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதி மக்களுக்கு எனது நன்றி. இங்கு ஒரு நரையை கூட பார்க்க முடியவில்லை. அனைவரும் இளைஞர் கூட்டம்.மக்களுக்கு நல்லது செய்யும் போலீஸ் வேடத்தை அதிக படத்தில் ஏற்று நடித்தேன். இதற்காக இப்போது வெட்கப்படுகிறேன். எனது மகனையும் போலீஸ் வேடத்தில் நடிக்க விடமாட்டேன். போலீஸ் துறை, இந்த மாநாட்டை நடக்க விடாமல் செய்ய அனைத்து வேலைகளையும் செய்தனர். இந்த மானம் கெட்ட பிழைப்புக்கு தூக்கு போட்டு சாகலாம். ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு நடத்துகிறோம். இதற்கு அனுமதி மறுக்கின்றனர். தமிழகத்தில் திருடன், கொலைகாரனை வளர்த்து விடும் வேலையை ஜெ., செய்கிறார்.வரும் 24ம் ததேி ஜெ., பிறந்த நாளில் பேனர் கட்டுவார்களே, அதை போலீஸ் தடுப்பார்களா. தமிழகத்தை பாதுகாக்கும் செயலை ஜெ., செய்யவில்லை. இங்கு
கூடியிருக்கும் கூட்டத்தை நான் தூண்டிவிட மாட்டேன்.ஆண்ட, ஆளும் கட்சிக்கு அடித்து கூறுகிறேன். தே.மு.தி.க., மாற்றுக்கட்சியாக செயல்படும் என்பதை மறந்து விடக்கூடாது. பேனர் கட்டும் கயிறு எனது தொண்டனின் நரம்பு.
பணக்காரனிடம் ஊழல் இருக்க கூடாது. இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள். லஞ்சம் இருந்தால் நாடு உருப்படாது. மாடுகளை தாக்கிய கோமாரி நோயை தீர்க்க ஆள் இல்லை. இந்நோய் தாக்கி 1 லட்சம் கால்நடைகள் இறந்து உள்ளது. நாட்டை திருத்த விவேகானந்தர் 100 இளைஞர்களை கேட்டார். எனது கட்சியில் 25 லட்சம் இளைஞர்கள் உள்ளனர்.இந்தியா முழுவதும் ஊழல் நிறைந்துள்ளது. தமிழகத்தில் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டம் என்று பெயர் மாற்றி பெரும் ஊழல் நடந்து வருகிறது.பத்திரிகையில் என்னை பற்றி எது எழுதினாலும் நான் கவலைப்படமாட்டேன். சட்டசபைக்கு ஏன் போகவில்லை என்று பலர் கேட்கின்றனர். அங்கே எதையும் பேச விடுவதில்லை. அதிக எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க,. வில் உள்ளதால் அவர்களே பேசிக்கொள்கின்றனர். மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. ஆனால், அ.தி.மு.க., அரசு இளைஞர்களை கெடுக்க டாஸ்மாக் திறந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விவசாய பூமி. இங்கு 70 சதவீதம் விவசாயம் செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை மூலம் டார்கெட் பிக்ஸ் செய்து 300 கோடி, 350 கோடி ரூபாய் என்று விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.
விவசாயிகள் வருவாய் பெருக்க எந்த டார்கெட்டையும் அரசு நிர்ணயிக்க வில்லை. சட்டசபையில் 110 விதியின் கீழ் இதுவரை 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ஆண்டுக்கு பட்ஜெட் தொகையே 1.25 லட்சம் கோடிதான். இட்லி ஒரு ரூபாய், ஆனால் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீருக்கு விலை வைத்த ஒரே முதல்வர் ஜெ., மட்டுமே.கூட்டணி கட்சி என்றால் சட்டசபையில் 'ஜிங்ஜாங்' போடுவதற்கு அல்ல. தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். நான் தலை குனிந்தாலும் எனது தொண்டர்களை தலை குனிய விடமாட்டேன். பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு குறித்து பேசியது தவறு என்று ஜெ., நினைக்கிறார். பென்னாகரத்தில் டெபாசிட் இழந்த ஜெ., எங்களால் தான் தே.மு.தி.க., வெற்றிபெற்றது என்று வீண் பிரசாரம் செய்கிறார்.ஆனால் தி.மு.க., ஆட்சியில் நடந்த 13 இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க., தோல்வியை தான் கண்டது. கூடங்குளம் மக்களை ஏமாற்றும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக கூறி ஏமாற்றினார். ஆனால் அந்த பகுதியில் இதுவரை ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டவில்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதுதான் ஜெ., வின் பழக்கம். ஜெ., வின் செயலால் வாஜ்பாய் படுத்த படுக்கையாய் போனார். இரு பெண்களால் தான் அவர் பதவி இழந்தார்.இலங்கை தமிழர் கண்ணீரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். ஜாதி, மதத்தை வைத்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது.
40 சீட்டையும் காசு கொடுத்து வாங்கலாம் என்று ஜெ., நினைக்கிறார். ஆனால் பணத்திற்காக மக்கள் தங்கள் ஓட்டுக்களை விற்க மாட்டார்கள். தே.மு.தி.க.,வில் எதிரிகளை மன்னித்து விடுவோம், துரோகிகளை மன்னிக்க மாட்டோம். குள்ளமாக இருக்கும் ஜெ., வுக்கு உயரமாக இருக்கும் ஆண்கள் குனிந்துதான் வணக்கம் சொல்ல வேண்டும்.இந்த ஆட்சியில் இரண்டு மூன்று நாட்கள் கூட அமைச்சர்கள் பதவியில் இருக்கமுடியவில்லை. இதனால் துறைகள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இதை உணர்ந்து போலீஸ் துறை எங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பில் ஜெ., சிக்கி தவிக்கிறார்.நான் உண்மையை பேசினால் குடித்து விட்டு பேசுகிறேன் என்று குறை சொல்கிறார்கள். வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டால், என் தொண்டர்கள் கூட்டணி வேண்டாம். தனித்தே நிற்கலாம் என்கின்றனர். கடந்த முறை கூட்டணி வைத்து பட்ட அடி போதும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
ஆனாலும், கேப்டன் கொஞ்சம் வித்தியாசமாகதான் முடிவுகள் எடுக்கிறார்..... சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டு போடுகிறார்....பாராளுமன்ற தேர்தலுக்கு தனியே என்கிறார்.....தனித்து நின்றால் சட்ட மன்ற தேர்தலிலேயே தேறுவது கடினம்.... பாராளுமன்ற தேர்தலில் எப்படி?........விஜயகாந்தின் 'எதிர்பார்ப்புகள்' நிறைவேற்றப்படும் என்றுதானே அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தன...
..எங்கேயோ இடிக்குதே?
நன்றி -தினமலர்
Share this comment
R.Subramanian - chennai,இந்தியா
ஆந்திராவில் சிரஞ்சிவி செய்தது போல் விஜயகாந்த் தன் கட்சியை ஏதேனும் ஒரு தேசிய கட்சியோடு இணைத்து விடலாம். இவர் தனித்து நிற்பதால் வாக்குகள் சிதறுமே தவிர அதனால் இவர் கட்சிக்கோ அல்லது தமிழகத்திற்கோ நன்மை இல்லை... இதுவே ஒரு தேசிய கட்சியில் இவர் கட்சியை இணைக்கும் போது அது இவருக்கு மட்டும் இல்லை தமிழகத்திற்கு நன்மை கொண்டு வரும். என்னை பொருத்தவரையில் இவர் காங்கிரஸ் கட்சியோடு தேமுதிகவை இணைத்து தமிழகத்தில் மீண்டும் தேசிய கட்சியின் ஆட்சியை கொண்டு வர உதவலாம். திராவிட கட்சிகளின் ஆட்சியை விட தேசியக்கட்சிகளின் ஆட்சி நன்றாகவே இருக்கும்...
Share this comment
T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
கப்டனின் முடிவை மதிப்போம்....வரவேற்போம்......பெரிய கட்சிகளே தனித்து நிற்க திராணி இல்லாத நிலையில், இவர் தனித்து நிற்கிறேன் என்கிறார்.... அந்த வகையில் நல்லது...ஆனால், காப்டனின் தற்போதைய ஒரே குறிக்கோளான ஜெயாவை தோற்கடிக்கும் எண்ணத்துக்கு இந்த முடிவு எந்த வகையில் துணை போகும்?.......ஜெயா அதிக இடங்கள் பெறுவது என்பது வரப்போகும் மத்திய அரசின் ஆயுள் கம்மி என்பதையே குறிக்கும்....அது பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி, இல்லை மூன்றாவது அணியாக இருந்தாலும் சரி.....
Share this comment
saravanan sagadevan - chennai,இந்தியா
நேற்று மாநாடு ஜெயலலிதாவை திட்டுவதற்காக தான் நடத்தப்பட்டது. எல்லோரும் தொண்டை கிழியும் அளவு கத்தினார்கள். விஜயகாந்த் பற்றி சொல்லவே வேண்டாம், வழக்கம் போல் என்ன பேசுறோம் என்று தெரியாமல் ஏதோ உளறிக்கொண்டு இருந்தார். இடையில் கூட்டத்தினரை பார்த்து கோப பட்டார். கேப்டன் டிவியில் நேரலையாக இருந்தாலும் அடிக்கடி சென்சார் செய்யப்பட்டது. அவர் கட்சியினரை அவரே அமைதிபடுத்த முடியவில்லை ஜெயலலிதாவை தாக்கி பேசுகிறோம் என்று அநாகரிகமாக பேசினார். மாநாட்டின் சாராம்சமே தெரியாமல் ஒரு கூத்து நடந்தது .
Share this comment
K Sanckar - bengaluru ,இந்தியா
விஜயகாந்த் கூட்டத்தை வைத்து கணக்கு போடுகிறார். காசு கொடுத்தால் கூட்டம் வரும் அந்த கணக்கு பிரகாரம் வோட்டுக்கும் காசு கொடுக்க வேண்டும். விஜயகாந்த் இதை மறந்து விடக்கூடாது. விஜயகாந்த் ஏதோ பேரம் பேசப்போகிறார் என்று தெரிகிறது. அதற்கு தயாராகிறார் என்று தோன்றுகிறது. அதனால் தான் மாநாட்டில் சொன்னபடி கூட்டணியை அறிவிக்கவில்லை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ?
Share this comment
மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
விஜயகாந்த் எடுத்த தனியாக நிற்ப்போம் என்ற முடிவுக்கு பாராட்டுக்கள்... அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.... தங்களின் நிர்வாகத்திறமை என்ன என்பது மக்கள் அறியாதது... அதனை நிருபியுங்கள்... இல்லை எனில் கெஜிரிவாலின் மறுவுருவம் என்று மக்கள் என்ன கூடும்... இப்பொழுது உங்களுக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை வைத்து அதனை ஓரளவிற்கு நிருபிக்க முடியும்....இந்த தேர்தலில் உங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கிறது என்று எண்ணாமல் எதிர்காலத்தில் தமிழகத்தில் கால்பதிக்க இது உதவும்...All the best..
Share this comment
Share this comment
Share this comment
Share this comment
Share this comment
Share this comment
Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
கேப்டன் சரியான முடிவை எடுத்து இருக்கிறார்.இதே முடிவை அம்மா கூட சேர்வதற்கு முன்பே எடுத்து இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.தனியா நிக்கிறதுக்கும் ஒரு தில்லு வேணும்.தில்லு இருந்தா பேசு இல்லாட்டி ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பாரு.தமிழ் நாட்ல எந்த கட்சிக்காவது தனியா நிக்க தில்லு இருக்கா.தனியா நிக்கிறேன்னு சொல்ல வேண்டியது.தேர்தல் வந்துட்டா யார் கூடயாவது கூட்டணி சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியது.எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு.ஜெயிக்கிறமோ,தோக்குரமோ அது முக்கியம் இல்ல ஆனா நம்மளோட தனித் தன்மைய இழந்து விட கூடாது.மறுபடியும் கேட்குறேன் எந்த கட்சிக்காவது தனியா நிக்கிற தில்லு இருக்கா.என்னப்பா யாருமே வாய தொறக்க மாட்டென்குரிங்க.சும்மா மா..மா..மா..மா..அதிருதில்ல..ல..ல..ல..ல..
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
மோடிக்கு பிறகு தேமுதிகவுக்கு தான் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி நான் பார்கிறேன்...அதனை இவர்கள் ஜெயாவை திட்டுவதற்கு பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை...இருந்தாலும் அவர்கள் கோவத்தில் ஒரு நியாயமும் இருக்கிறது.........மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதற்கு கடைசி வரை இழுத்தடித்தது, மற்றும் போலிஸ் காரர்களை இலட்சணக்கான மக்கள் கூடும் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு அனுப்பாதது, மற்றும் மாநாட்டு திடல் தவிர வேறு ஊர்களில் பிளக்ஸ் போர்டு பேனர் வைக்க அனுமதி தராதது போன்ற கோவம் அவர்களது பேச்சில் தெறிக்கிறது...ஜெயாவுக்கு இருபத்தினாலாம் தேதி பிறந்த நாள் வருகிறது. அப்போது இதே காவல்துறை அதிமுக ஆட்களுக்கும் பிளக்ஸ் போர்டு பேனர் வைக்க அனுமதி தர கூடாது. அப்படி செய்யுமா காவல் துறை....நடக்காது...மாநிலம் முழுக்க பிளக்ஸ் போர்டு பேனர்களை காண்பீர்கள்...அதனால் தான் அவர்கள் கோவப்பட்டு அடக்குமுறை என்று திட்டுகிறார்கள்...மற்றும் தனியார் பேருந்து முதலாளிகளை மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று நிர்பந்தித்த காரணத்தினால் காவல் துறை மீதும் ஜெயா மீதும் கோவமா இருக்கிறார்கள்...
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
"இட்லி ஒரு ரூபாய், ஆனால் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது" - அலுவாலியா சொன்னதை சரியாக நினைவில் வைத்து ஒவ்வொரு ஏழையும் ஆளுக்கு 2 இட்லி ஒரு தண்ணீர் பாட்டில் மூலம் பசியை போக்கிக்கொள்ளலாம் என்று கொடுத்ததை ஏன் கஜிநிகாந்தால் புரிந்து கொள்ள முடியவில்லை? கான்வென்ட்-இல் படித்திருந்தால் புரிந்திருக்கும்...
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
"சட்டசபையில் 110 விதியின் கீழ் இதுவரை 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது" - எப்பேர்ப்பட்ட பொய்களை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதன் விளைவு இது. அம்மா பிரதமரானால் அமெரிக்க + சீன + ஜப்பானிய GDP யையும் சேர்த்தால் வரக்கூடிய தொகையை விட 10 மடங்கு அதிகமாக 110 விதி மூலம் திட்டங்களை அறிவித்து விடுவார்.
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
மிக அருமையான ஒரு முடிவை எடுத்துள்ளதற்காக கேப்டனுக்கு பாராட்டுக்கள்....தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்...இது அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படும்...இப்போது பிஜேபியோடு கூட்டணி வைத்து 5 சீட்டு ஜெயித்தாலும் இது மோடி அலையினால் கிடைத்தது என்பார்கள்...திமுகஅதிமுக கட்சிகளை நீக்கிவிட்டு மூன்றாம் நபராக தொடர்ந்து செயல்படட்டும்...
Share this comment
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
Share this comment
Share this comment
Share this comment
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
தனித்து நில்லுங்கள். அதைதான் நாங்கள் எதிர்பார்கின்றோம். பிஜேபி, மதிமுக, பாமகவுடன் கூட்டு சேர்ந்து ஓட்டை பிரித்துவிடாமல், தனித்தே நில்லுங்கள். அப்போதுதான் தலைவர் நாற்பதுக்கு நாற்பது வெல்ல முடியும். உங்களின் தைரியத்தை மனமார பாராட்டுகிறேன். முட்டை வாங்க நீங்கள் காட்டும் ஆர்வம் மெச்சத்தக்கது. அனைத்து கட்சிகளும் தனித்தே களம் இறங்கும் போது, திமுக சுலபமாக அனைத்து சீட்டுகளையும் வெல்லும். தமிழகத்தின் பெரிய கட்சி திமுக எனும் சுறா மற்ற கெண்டை மீன்களை திங்க போவதை நினைத்தால், எங்களுக்கே பரிதாபமாக உள்ளது. என்ன செய்ய முடியும்? பசிக்கும் போது திங்கதான் வேண்டும். இப்போது தமிழர்களுக்கு மின்சார பசி, தண்ணீர் பசி, வேலை வாய்ப்பு பசி உள்ளது. அதை போக்க, உதய சூரியனின் வெளிச்சம் வேண்டும். வரும். மலைகளில் இருந்து புகை மூட்டங்களில் இருந்து, உதய சூரியன் வெளியே வரும். தமிழர்களை காக்கும். " தமிழ் சிங்கம் " என்ற பெயரில் இன்னொரு அதிமுக புல்லுருவி கருத்துகள் எழுதி வருவதை கண்டு வாசகர்கள் குழப்பம் அடையவேண்டாம்.
Share this comment
ASHOK - tanjore,இந்தியா