Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Thursday, June 11, 2015

‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையும்’ - இயக்குநர் மணிகண்டன் பேட்டி

கனடா நாட்டின் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘காக்கா முட்டை’ தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்த விமர்சகர்கள், ‘இவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல, ஆனால்... பொழுதுபோக்கால் போதுமான அளவில் மகிழ்விக்கக்கூடிய தெருக்கோடி வசீகரர்கள்!’ என்று பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டுத் தயாரிப்பில் விரைவில் தமிழகத்திலும் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் பேசியதிலிருந்து...
திரைப்பட விழாக்களை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தை இயக்கினீர்களா?
பொழுதுபோக்குக்காக மட்டும் பாடல்கள் வச்சுட்டு டான்ஸ் பண்ற படங்கள் மீது எனக்கு விருப்பம் கிடையாது. தமிழ் ரசிகர்களுக்காகவே இந்தப் படத்தை இயக்கினேன்.
பாடல்கள், நடனம் பிடிக்காது என்று சொல்ல என்ன காரணம்?
பாடல் இருந்தால்தான் படம் பார்ப்போம் என்று ரசிகர்கள் அடம்பிடிக்கிறது இல்ல. அவங்களுக்கு பாட்டுல கதைய நகத்திட்டுப்போனா ரொம்பப் பிடிக்கும்.
சில கதைகளுக்குப் பாடல்களே மைனஸாக இருக்கும். கதையோட ஓட்டத்தைத் தடுக்கும். பாடல்களே தேவையில்லை என்று சொல்ல மாட்டேன். ‘காக்கா முட்டை’யில்கூட 4 பாடல்கள் இருக்கிறது. எல்லாமே மாண்டேஜ் பாடல்கள்தான். நல்ல ஒரு கதையில், பாடல்கள் கதையின் ஓட்டத்தைத் தடுக்கும். இந்த மாதிரிப் படங்களில் ரொம்ப அப்பட்டமாவே தப்பா தெரியும்.
வெற்றி மாறன், தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது எப்படி?
என்னுடைய ‘விண்ட் (WIND), என்ற குறும்படத்தை ஒரு படவிழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பார்த்திருக்கிறார். என்னைக் கூப்பிட்டு இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டார். நான் எழுதி வைச்சுருந்த ‘காக்கா முட்டை’ கதையைச் சொன்னேன். வெற்றி மாறன் கதையைக் கேட்ட உடனே, ஓ.கே. பண்ணிட்டார். தனுஷும் கதையைப் படிச்சுப் பார்த்துட்டு உடனே ஓ.கே. சொல்ல உடனே படப்பிடிப்புக்குக் கிளம்பிட்டோம்.
ஹீரோ இல்லாத இந்தப் படத்துல சிம்பு நடிச்சிருக்காராமே?
ஆமா! அவர் நடிகர் சிம்புவாகவே இரண்டு காட்சிகளில் வருவார். நான் முதலில் கதையை எழுதும்போதே, இந்த கேரக்டர் சிம்புதான் என்று எழுதிவைத்தேன். வெற்றி மாறன் பார்த்துவிட்டு எதுவுமே சொல்லவில்லை. தனுஷும் இணைந்து தயாரிக்கிறார் என்றவுடன், வெற்றி சாரிடம் கேட்டேன். ‘சிம்புனு எழுதி வைத்திருக்கேனே சார்’னு சொன்னேன்.
தனுஷ் படிச்சுப் பார்த்துட்டு, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையே இல்ல. நானே சிம்புகிட்ட பேசுறேன்னு அவரே போன் பண்ணிப் பேசினார். தனுஷ் பேசிய அடுத்த நிமிடமே, ‘நான் பண்றேன்’னு சிம்புவும் சொல்லிட்டார். அரை நாளில் சிம்புவை வைத்துப் படப்பிடிப்பு முடித்துவிட்டோம்.
கமர்ஷியல், காமெடி, யதார்த்தம் - இதில் உங்க ஏரியா எது?
எதற்குள்ளும் நான் என்னை பிக்ஸ் பண்ணிக்க விரும்பல. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் படமாக எடுக்கவே ஆசைப்படுவேன். விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சோகத்தைத் திணித்து கதை பண்ணுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. யதார்த்தமான படங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மக்களுக்குப் பிடித்த மாதிரி, அவர்களுக்கு போர் அடிக்காத படங்களில்தான் என்னோட கவனம் இருக்கும்.
தரமான படங்களைத் தயாரிக்க முன்வரும் தயாரிப்பாளர்களுக்குத் திரைப்பட விழாக்கள் மூலம் வருவாய் உண்டா?
இங்கு இருக்கிற மார்க்கெட்டைவிட, திரைப்பட விழா மார்க்கெட் என்பது பெரிது. இங்குள்ள தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எப்படித் திரும்ப எடுப்பது என்று யோசிப்பார்கள். அதை நாம் திரும்ப எடுத்துக் கொடுக்கணும். தயாரிப்பாளருக்குத் திரைப்பட விழாக்கள் மூலமாகவே போட்ட பணம் வருகிறது என்றால் அவங்க நம்மகிட்ட எதுவும் கேட்க மாட்டார்கள்.
நான் பண்ற ரெண்டு படங்களிலுமே மினிமம் கியாரண்டி இருக்கிறது. திரைப்பட விழாக்களில் இருக்கும் மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு படம் எடுத்தால், இன்னும் நிறைய உலக சினிமாக்களைத் தமிழில் உருவாக்கலாம்.
உங்களது அடுத்த படம்?
படத்துக்கு ‘குற்றமும் தண்டனையும்’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறேன். இதே தலைப்பில் ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல் இருக்கிறது. அந்த நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
விதார்த் நாயகன், நாடக நடிகை பூஜா நாயகி. முக்கியமான பாத்திரங்களில் நாசர், குரு சோமசுந்தரம் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசை. பின்னணி இசை மட்டும்தான். பாடல்கள் கிடையாது.



நன்றி -த இந்து

Wednesday, April 29, 2015

THE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வென்ற படம்)

முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் வாழ்க்கைக் கதையே ‘தி சோஷியல் நெட்வொர்க்’. பென் மெஸ்ரிக்கின் நாவலுக்கு ஆரோன் சோர்கின் திரைக்கதை அமைக்க இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் டேவிட் ஃபின்செர். இந்த படத்துக்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. சிறந்த திரைக்கதை விருது அதில் ஒன்று.
பணக்காரர்கள் வாழ்க்கையில் எட்டிப் பார்க்கும் மனோபாவம் நம் எல்லாருக்கும் உண்டு. அதனால்தான் பணக்காரர் பற்றிய கதை என்றால் உடனே படிக்கிறோம். ‘தி ஆக்சிடெண்டல் பில்லியனர்ஸ்’ என்ற புத்தகத்துக்கு அதனாலேயே பெரும் வரவேற்பு கிடைத்தது. மார்க் ஸக்கர்பெர்க் உலகின் மிக இளம் பில்லியனர். எனவே அவர் எப்படி ஜெயித்தார் என்று தெரிந்துகொள்வதில் எல்லாருக்கும் ஆர்வம் இருந்தது.
இன்று வாட்ஸ் அப்பை வாங்கி விழுங்கிய ஃபேஸ்புக்கின் வீச்சும் வியாபாரமும் நமக்குத் தெரியும். ஆனால் இப்படி ஒரு சமூக வலைதளம் அமைக்க முடியும் என்று எப்படி எண்ணம் வந்தது? அதை இவ்வளவு பெரிய வியாபாரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது? கடந்து வந்த தடைகள் என்ன? ‘தி சோஷியல் நெட்வொர்க்’ மார்க் ஸக்கர்பெர்க்கின் கதையை ஒரு ஜன்னலின் வழியாக நமக்குக் காட்டுகிறது.
இதை ஒரு நிர்வாகப் படம் என்றோ, தன்னம்பிக்கை பற்றிய படம் என்றோ, வியாபார நுணுக்கங்கள் நிறைந்த படம் என்றோ நினைத்துப் பார்க்காதீர்கள். இது ஒரு தனிமனிதனின் வியாபாரப் பயணம் பற்றிய படம். இதில் ஆசை, அறிவு, தொழில்நுட்பம், காதல், நட்பு, துரோகம், விரோதம், போட்டி என அனைத்தும் உண்டு. கதையைவிடச் சொல்லப்பட்ட விதத்தில் இது நல்ல திரைப்படமாகிறது.
காதலியின் நிராகரிப்பில் எரிச்சலடைகிறான் மார்க். உறவுகளைப் பக்குவமாகக் கையாளத் தெரியாத அவள், பிரிந்து செல்வதன் நியாயத்தைப் பார்க்கவில்லை. அவளைப் பழிவாங்க அவள் புகைப்படத்துடன் தன் பிளாக்கில் அவள் உருவ அழகைக் கொச்சைப்படுத்திப் பதிவேற்றம் செய்கிறான்.
பின் ஃபேஸ்மேஷ் என்று ஒரு தளத்தை உருவாக்கி அவர்கள் படிக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பெண்களின் படங்களைப் பதிவேற்றம் செய்து வலைதளத்துக்கு வருகை தரும் ஆண்களை மதிப்பிடச் செய்கிறான்.
ஃபேஸ்மேஷின் பிரபல்யம் மார்க் ஜுகம்பர்கை நோக்கி மூலதனம் செய்யத்தக்க பணக்காரர்களை இழுத்துவருகிறது. ஹார்வர்ட் கனெக்ஷன் எனும் வளாகத்தில் உள்ள ஆண் பெண்களுக்கான டேட்டிங் தொடர்பை உருவாக்கித் தரும் வலைதளத்தை உருவாக்கச் சொல்கிறார்கள்.
அவர்களிடம் சம்மதித்த பின், தன் நண்பர்களிடம் தி ஃபேஸ்புக் எனும் மாணவர்களுக்கான வலைதளம் அமைக்கும் எண்ணத்தைக் கூற 1000 டாலர் நிதி கிடைக்கிறது. ஏல், கொலம்பியா, ஸ்டான்ஃபோர்ட் என்று பல முன்னணி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பட்டையைக் கிளப்புகிறது இந்த வலைதளம்.
ஸ்னாப்டீல் கம்பெனியின் நிறுவனர் மார்க்குக்கு இந்தப் புது வலைதளத்துக்கு “ஒரு பில்லியன் டாலர்” கனவு வேண்டும் என்று சொல்லி “தி” யை வெட்டி வெறும் ஃபேஸ்புக் என ஆக்கச் சொல்கிறார். பின் நடந்தவை அனைத்தும் சரித்திரம் எனச் சொல்லலாம்.
இதற்கிடையில் ஃபேஸ்புக்கின் வியாபாரக் கரு தங்களுடையது என்று வழக்குத் தொடர்கிறார்கள் ஹார்வர்ட் கனெக்‌ஷன் தளத்துக்கு மூலதனம் செய்தவர்கள். நிறுவனம் ராட்சஸத்தனமாக வளரும்போது தன்னுடன் நிறுவனத்தை வளர்த்த நண்பனின் பங்குகளை நீர்க்கச் செய்து அவனை வெளியேற்றம் செய்கிறான் ஜுகம்பர்க். இரண்டு வழக்குகளின் இடையில்தான் மொத்தப் படமும் சொல்லப்படுகிறது.
இறுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு தரப்புக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மார்க்கின் மனோபாவம் வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் எரிச்சலடையச் செய்கிறது. தீர்ப்பாகும் நேரம் மார்க் ஒருவருக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்த வண்ணம் இருக்கிறான்.
25 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 200 நாடுகளில் 500 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாகவும் மார்க் ஜுகம்பர்க்தான் உலகின் மிக இளைய பில்லியனர் என்றும் கூறி படம் முடிகிறது.
‘தி சோஷியல் நெட்வொர்க்’ படம் எனக்குத் தனிப்பட்ட முறையில் பல பாடங்களை உணர்த்தியது. உங்களுக்கும் அவை சம்மதமா என்று பாருங்கள்.
1.சமூகத் திறன் அதிகம் இல்லாத ஒருவன் சமூக வலைதளம் அமைத்து வெற்றிபெற்றது ஒரு முரண்நகை. வரும் தலைமுறைக்கான ஆளுமையை அது சித்தரிப்பது போலவும் எனக்குப் பட்டது. தன் காதலி, நண்பன், முதலீட்டாளன் என்று எந்த மனிதரிடமும் இணக்கமாக இல்லை. வியாபார வெற்றியும், பணமும் அவரை மாற்றியதாகத் தெரியவில்லை. சுற்றி வாழும் மனிதர்கள் மேல் உறவில்லாமல் வாழும் மனிதனின் ஆளுமையைப் படம் நிஜமாகக் காட்டியுள்ளது. பொருளாதார வெற்றிபெற்ற மனிதர்களின் பிழைகளை அறிவது முக்கியம்.
2. ஒரு சமூக வலைதளம் உருவாக்குவது என்று முடிவுசெய்து, அந்தத் திசையிலேயே தன் தன் எண்ணம், பேச்சு, செயல் எனத் தனது சக்தி முழுவதையும் கூர்மையாகச் செலுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஆறு மாதத்துக்கு ஒருமுறை புது வியாபாரத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் பலர் எதிலும் வெற்றிபெறாதது ஏன் என்று புரிந்துகொள்ளலாம்.
3. கல்வி வளாகங்களின் கலாச்சாரங்கள் வியாபார எண்ணங்களைச் செழிப்பாக ஊக்குவித்தால் நிறைய வெற்றியாளர்கள் உருவாவது உறுதி. ஹார்வர்ட், ஸ்டான்ஃபர்ட் போன்ற பல்கலைக்கழகங்கள் படிப்பைப் போலவே தொழில் முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் தருகின்றன. நம்மூர் ஐ.ஐ.டி/ ஐ.ஐ.எம் கள்கூடப் படித்துவிட்டு வேலை தேடும் கூட்டத்தைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
4. தான் நம்புவதில் மிக உறுதியாக இருப்பது சுய தொழில் செய்பவரின் மரபணுக்களில் இருக்க வேண்டும். எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் தாங்கி ஒரே திசையில் செல்ல இது முக்கியம்.
5. மார்க் ஜுகம்பர்க் வயது பற்றிய மதிப்பீட்டை உடைத்தெறிகிறார். 19 வயதில் தொடங்கும் தொழில் பயணம் அவரை உலகின் மிக இளைய பில்லியனராக்கியிருக்கிறது. உலகின் மிக இளைய தேசமான இந்தியா பல மார்க் ஜுகம்பர்க்குகளை உருவாக்க முடியும். அவர்களை லகான் போட்டுப் பிடிக்காமல் இருந்தாலே போதும்.
வலைதளம் மூலம் சமூகங்களை இணைத்தவனின் படம் இளைஞர்களுக்கான பாடம் என்று சொல்வேன்.
தொடர்புக்கு: [email protected]


நன்றி - த இந்து 

Thursday, November 24, 2011

The Shawshank Redemption - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://movietrailers2.com/wp-content/gallery/the-shawshank-redemption/shawshank-redemption-picture2.jpg

ஒரு புருஷன், ஒரு பொண்டாட்டி.. ஒரு கள்ளக்காதலன்.. உடனே கில்மாப்படமா?ன்னு யாரும் குதூகலப்படத்தேவை இல்லை.. ஓப்பனிங்க் சீன்லயே அந்த  கள்ளக்காதல் ஜோடி யாரோலோ சாகடிக்கப்படறா..  இந்த தத்தி போலீஸ்ங்க எப்பவுமே நல்லவனை. அப்பாவியைத்தானே அரெஸ்ட் பண்ணும்.. ? அந்தப்பொண்ணோட கணவனை அரெஸ்ட் பண்ணிடுது.. சந்தர்ப்பங்கள், சாட்சியங்கள் எல்லாமே அவனுக்கு எதிரா இருக்கு... அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிச்சு கோர்ட் தீர்ப்பு சொல்லிடுது..



ஹீரோ ஒரு பேங்க்ல ஒர்க் செஞ்சவர்.. நல்ல படிப்பு.. ஆனாலும் அவருக்கு நேரம் சரி இல்லை.. சம்சாரம் வழி தவறுது.. கொலைப்பழி  அவர் மேல விழுந்து செய்யாத தப்புக்கு தண்டனை.. இப்போ இவர் மகாநதி கமல் மாதிரி ஜெயில்ல என்னவெல்லாம் அவஸ்தைப்படறார்ங்கறதுதான் 70% படம்.. 1994 -ல் ரிலீஸ் ஆன படம் 2 மணிநேரம் 24 நிமிடங்கள் என நீளமான படமா இருந்தாலும் ஒரு சீன்ல கூட போர் அடிக்காத படம்..  படத்தோட திரைக்கதை, இயக்கம் எல்லாமே Frank Darabont தான்..

 Tim Robbins - Andy DufresneMorgan , Freeman - Ellis Boyd "Red" ReddingBob Gunton - Warden Samuel NortonWilliam ,  Sadler - HeywoodClancy  , Brown - Captain Byron Hadley

ஜெயில்ல ஹீரோ முதல் 2 வருஷங்கள் லாண்டரில வேலை செய்யறார்.. பிறகு தனது தொழில் அனுபவங்களின் காரணமாக ஜெயிலருக்கு ஃபைனான்சியல் அட்வைஸ் செய்கிறார்.. ஜெயிலில் உள்ள லைப்ரரியை விஸ்தீகர்க்க அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுகிறார் .. வாரா வாரம் நிதி வேண்டி மாநில அரசுக்கு அவர் எழுதும் கடிதத்துக்கு பலன் கிடைக்கிறது..

ஹீரோவின் ஆலோசனைப்படி ஜெயிலர் ஜெயில் கைதிகளை பப்ளிக் ஒர்க்ஸ்க்கு யூஸ் பண்ணிக்கறார்.. அதனால ஜெயில் கைதிகளுக்கு வெளி உலகத்தை பார்க்க ஒரு சந்தர்ப்பம்.. 

ஹீரோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் மனைவியை கொன்றவன் அந்த ஜெயிலில் இருப்பதை கண்டு பிடிக்கிறான்.. அதை ஜெயில் அதிகாரியிடம் சாட்சியுடன் விளக்கும்போது அந்த சாட்சி மர்மமான முறையில் கொல்லப்படுகிறான்..  ஹீரோ ரிலீஸ் ஆவது பிடிக்காமல் செய்யப்படும் சதி.. ஹீரோ தப்பிக்க முடிவு செய்கிறான்.. எந்த தப்பும் செய்யாமல் 20 வருடங்கள் ஜெயிலில் சித்திரவதைகளை அனுபவித்து ஹீரோ ஜெயிலில் இருந்து தப்பி சுதந்திர வாழ்க்கையை அனுபவிக்கிறான்..

http://i2.listal.com/image/266791/600full-the-shawshank-redemption-screenshot.jpg

ரசித்த வசனங்கள்

1. வர்றவனுங்க எல்லாம் கேடிங்க.. ஆனா பாரு எல்லாரும் அப்பாவி மாதிரியே முகத்தை வெச்சுக்குவானுங்க..

2. நான் ரெண்டு விஷயம் நம்பறேன்.. 1. ஒழுக்கம் 2 . பைபிள்

3. மொத்த வாழ்க்கையும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள்ள மாறிப்போறதை தாங்கிக்கவே முடியறதில்ல..

4. நான் நல்லவன் தான், ஆனா ஜட்ஜ் என்னை கெட்டவன்னு சொல்லிட்டார்..

5. என் பேரு ரெட்.. ஆனா நான் கறுப்பு.. டிஃப்ரண்ட்டான ஆளு..

6. இதை உங்க ஒயிஃப்க்கு கிஃப்ட்டா குடுங்க.. எனக்குதான் அந்த குடுப்பினை இல்லை..

7. நாங்க எல்லாம் சாப்பாட்டையே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சற ஆளுங்க..

8. தனிமை என்னை துரத்த ஆரம்பிச்சுது.. தனிமைதான் உலகின் பெரிய பழி வாங்கல்.. அதுவும் ஜெயில்ல தனிமைச்சிறை என்பது ரொம்ப கொடுமையானது.. 

9. நினைச்சதை உடனே செஞ்சு முடிக்கறவன் தான் மனுஷன்.. அதை தள்ளிப்போடறவன் அல்ல..

10. ஒருத்தன் உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் அவன் சோம்பேறியா இருக்க மாட்டான்..

http://www.listosaurusrex.com/wp-content/uploads/2008/01/stiff-breeze.PNG

11. நான் உருவாக்குன கற்பனை கதாபாத்திரத்துக்கு பர்த் சர்ட்டிஃபிகேட் , டிரைவிங்க் லைசன்ஸ் கூட  ரெடி..


12. வாழ்க்கைல தப்பு பண்ணாம யாராலயும் இருக்க முடியாது.. மாட்டிக்காம வேணா சிலர் இருக்கலாம்..



13. எதுக்காக நீ ஜெயிலுக்கு வந்தே?

வெளீல புழுக்கமா இருந்துச்சு.. அதான்.. கேக்கறான் பாரு கேள்வி..

14.  எதுக்காக இந்த பேப்பரை நீ எல்லாருக்கும் பாஸ் (PAUSE) பண்ணுனே?

ஹா ஹா.. நானா? எந்த பேப்பரையும் இதுவரை நான் பாஸ் (PASS) பண்ணுனதே இல்லையே..

15. செத்ததுக்குப்பிறகு 4 பேர் தூக்கிப்போட்டா என்ன? 40 பேர் தூக்கிப்போட்டா என்ன?

16. கனவு  காண , அதை நிறைவேத்த ஆண்டவன் நமக்கு 2 சான்ஸ் குடுத்திருக்கான்.. 1. எப்படி வாழனும்? 2 எப்படி சாகனும்?

17. மனசு ஒடிஞ்சவன் என்ன வேணாலும் செய்வான்.. தேவைப்பட்டா தற்கொலை கூட..

18.  நான் இன்னும் 500 கஜம் இந்த பாதாள சாக்கடையை  நீந்திக்கடக்கனும்.. மூச்சு விடாம..  5 ஃபுட் பால் கிரவுண்டுக்கு சமமான தூரம்.. கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர்..

19. திருந்தறதும், வருந்தறதும் ஒண்ணுதானே.. திருந்தறதுக்கு 1 மாசம் போதாதா? அட்லீஸ்ட் 2 மாசம்? எதுக்காக 40 வருஷம் தேவைப்பட்டுது? எனக்கு?

http://i2.listal.com/image/266798/600full-the-shawshank-redemption-screenshot.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. கிட்டத்தட்ட ரெண்டே முக்கால் மணி நேர படத்தில் ஒரே ஒரு சீன் தவிர பெண் கேரக்டர்களே இல்லாமல் செம இண்ட்ரஸ்ட்டாக ஒரு படம் கொடுத்ததற்காக பாராட்டலாம்..



2.  ஜெயிலில் இருந்து ஹீரோ தப்பிக்கும் சீனை  நிதானமாக காட்டியது.. பெரும்பாலும் ஹீரோ ஜெயிலில் வந்த உடன் அடுத்த நாளே தப்பி விடும் படங்களூக்கு இடையே 20 வருடங்கள் பிளான் பண்ணி ஸ்டெப் பை  ஸ்டெப்  திட்டம் போட்டு தப்பிப்பதாக காட்டியது..

3. ஹீரோ, நண்பர் ரெட்டாக வருபவர், ஜெயிலர் என பல தரப்பட்ட பாத்திரங்களின் இயற்கையான நடிப்பு..

4. எந்த வித செயற்கை ஒளியும் இன்றி அழகான நேர்த்தியான ஒளிப்பதிவு..

5. தேவையான இடங்களில் அமைதி.. தேவைப்படும் இடங்களில் மட்டும் ஒலிச்சேர்க்கை என பின்னணி இசையில் கவனம்..

http://i.telegraph.co.uk/multimedia/archive/01467/filmdone_1467999c.jpg

லாஜிக் மிஸ்டேக்ஸ் டன் பை டைரக்டர் 

1.  ஹீரோ  ஜெயில் செல்லுக்குள் ஒரு ஹாலிவுட் நடிகையின் வால் போஸ்டரை மாட்டி வைத்திருக்கிறார்.. சிறை ரூம் என்ன சலூன் கடையா? எப்படி நிர்வாகம் அதை அனுமதிக்கிறது?

2. ஒரு மனிதனால் முக்கால் கி மீ தூரம் பாதாள சாக்கடையில் மூச்சை நிறுத்தி நீந்த முடியுமா?

3. ஹீரோ தனது நண்பர் ரெட் அவர்களுக்கு ஒரு குறிப்பு பேப்பர் தருவதும் , அதை ஃபாலோ பண்ணி அவர் ஹீரோவை கண்டறிவதும் நம்பும்படி இல்லை


 சி.பி கமெண்ட் - பல அவார்டுகளை அள்ளிய இந்தப்படம் அனைவரும் காண வேண்டிய படம் டோண்ட் மிஸ் இட்.. ஃபேமிலியுடன் பார்க்கலாம்