Showing posts with label உன்னைப்போல் ஒருவன் (1965) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label உன்னைப்போல் ஒருவன் (1965) - சினிமா விமர்சனம். Show all posts

Friday, May 05, 2023

உன்னைப்போல் ஒருவன் (1965) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) தெசிய விருது பெற்ற படம்

 


ஆனந்த  விகடன்  வார  இதழில்  தொடர்கதையாக  வந்தபோது  வாசகர்களின்  ஏகோபித்த  பாராட்டைப்பெற்றது. பின்  நாவலாகவும்  வெளி  வந்தது. ஜெயகாந்தன்  தானே  திரைக்கதை , இயக்கம் , தயாரிப்பு  ஆகிய  பொறுப்புக்களை ஏற்று  படமாக  எடுத்தார்.  இது  தேசிய  விருது  பெற்ற  படம் .  சேரி  மக்களின்  வாழ்க்கையைப்பதிவு  செய்த  படம் . பாடல்களே  இல்லாத  இந்தப்படம்  அந்தக்காலத்தில்  துணிச்சலான  முயற்சியாகப்பேசப்பட்டது 

    ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகிக்குத்திருமணம்  ஆன  பின்  கணவன்  அவள்  வயிற்றில்  ஒரு குழந்தையைக்கொடுத்து விட்டு குழந்தை  பிறக்கும்  முன்பே  ஓடி  விட்டான். நாயகி  தனி  ஒரு  ஆளாய்  சித்தாள்  வேலைக்குப்போய்  குழந்தையை  வளர்க்கிறாள் . மகனுக்கு  10  வயசு  ஆகும்போது  நாயகிக்கு  அந்த  ஊரில்  இருக்கும்  கிளி  ஜோசியக்காரனுடன்  பழக்கம்  ஏற்படுகிறது . அவன்  ஒரு  அனாதை 


 அவனைத்தன்  கூடவே  வந்து  தங்கிகொள்ளும்படி  நாயகி  அழைக்கிறாள் . அவனும்  அவள்  உடன்  வீட்டுக்கு  வந்து  தங்கிக்கொள்கிறான். இருவரும்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்கள் 


 இது  மகனுக்குப்பிடிக்கவில்ல அவன்  வீட்டை  விட்டு  வெளியேறுகிறான். ஒரு  மாதமாக  மகனின்  பிரிவால்  வாடும்  நாயகியைக்கண்ட  அந்த  ஜோசியக்காரன்   என்னால்  அம்மா - மகன்  இருவரும்  பிரிய  வேண்டாம்  என  அவன்  நாயகியை  விட்டு  விட்டு  கிளம்புகிறான் 


 கிளம்பும்  முன்  நாயகியின்  மகனை  சந்தித்து  தன்  நிலை  தெரிவித்து  விட்டு  செல்கிறான். இப்போது  அம்மா, மகன்  சேர்ந்து  விட்டாலும்  துணை இல்லை 


 இப்போது  அடுத்த  சிக்கல் , அம்மா  கர்ப்பமாக  இருக்கிறார். இதற்குப்பின்  திரைக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  என்ன? என்பதை  திரையில் காண்க 


நாயகியாக  காந்திமதி  அற்புதமாக  நடித்திருக்கிறார். மண்  வாசனை  ஒச்சாயிக்கிழவி  கேரக்டர்  தான்  இவரது  உச்சம்  என்றாலும்  இதிலும்  பிரமாதமான  வாய்ப்பு  தான்.  மகன்  மீது  அன்பு , நாயகன்  மீது  காதல் , தன்  மீது  சுயபசாதாபம்  என  கலவையான  உண்ர்வுகளை  காட்டும்  விதம்  அருமை 


 நாயகனாக  பிரபாகரன் . பாந்தமான  நடிப்பு 


 பாட்டியாக  வருபவர்  த்மிழ்ப்படங்களில் பலவற்றில்  பாட்டி  ரோலுக்குப்பேர்  போனவர் .   சிட்டி  பாபுவாக  வரும்  அந்த  சிறுவன்  நடிப்பும்  கச்சிதம் 


 பாடல்கள் இல்லை ,  பின்னணி  இசை  சிட்டி  பாபு 



சபாஷ்  டைரக்டர்

1 ஓப்பனிங்  ஷாட்டில்  அந்த  பெர்யவர்  - சிறுவன்  காம்பினேஷன்  காட்சி  அருமை . வசனமும்  கச்சிதம்


2  க்ளைமாக்சுக்கு  கொஞ்சம்  முன்  நாயகி  தன்  மகனிடம்  உன்னைப்போல்  ரோஷம்  உள்ள  ஒருவன்  எனக்கு  அண்ணனாகப்பிறந்திருந்தால்  இன்று  என்  நிலைமை  இப்படி  இருந்திருக்காது  என  டைட்டிலுக்கு  நியாயம் கற்பிக்கும் காட்சி  டச்சிங் 


3  பல  இடங்களில்  வாய்ப்பிருந்தும்  பாடல்  காட்சிகளே  வைக்காதது அருமை 


4  க்ளைமாக்ஸ்  காட்சியில்  ஐஸ்  வண்டிக்காரனின்  அரை  அணா  ஒரு  அணா  பால்  ஐஸ்  என  குரல்  கேட்டு  அம்மா  நினைவு  வந்து  கதறும்  சிறுவனின்  நடிப்பு  உருக்கம் 


ரசித்த  வசனங்கள் 


1  திடீர்னு  சொல்லாம கொள்ளாம  ஊரை  விட்டுப்போய்டுவியா?


 நம்மால  மத்தவங்களுக்கு  ஒரு  கஷ்டம்  வர  நான்  காரணமா  இருக்க  மாட்டேன் 


2  உன்னை வெறும்  பெண்  என்று  மட்டும் தான்  நான்  பார்த்தேன் , ஒரு குழந்தைக்கு  அம்மா  என்பதை  மறந்துட்டேன்


3   ஆமா, ஏன்  இந்த  ஏரியா  பக்கமே  வர்லை ?  உன்க்கு  என்  கிட்டேயுமா  சண்டை?


 இல்லை  சார் , எனக்கு  என்  கூடதான்  சண்டை 


 யார்  கிட்டே  சண்டை போட்டாலும்  தாய் கிட்டே  சண்டை போடக்கூடாது , தாய்  கிட்டே  சண்டை போட்டாலும்  தன் கிட்டேயே  ஒருத்தன்   சண்டை போடக்கூடாது , ஏன்னா  தன்னைத்தானே  வெறுக்க  ஆரம்பிச்ட்டா  மனசு  அழுகிடும்   

4   உன்  அம்மாவை  வேஷக்காரினு  சொன்னியாமே? ஒரு  அம்மா  தன்  குழந்தையை  அடிப்பதும்  திட்டுவதும் கொல்றேனு  மிரட்டுவதும்  வேஷம்  தான். 


5   என்  மேல  கோபப்படவோ , என்னை  வெறுக்கவோ யாருமே  இல்லைங்கற  வருத்தம்தான்  எனக்கு 


6  உன்  கோபம் , ரோஷம்  எதையும்  விட்டுடாத, நம்ம  மாதிரி  மனுசாளுக்கு  அதுதான்  சொத்து 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தன்  மகனை  என்னதான்  குழந்தைதானே  என  நாயகி  சொல்லிக்கொண்டாலும்  தான் ஒரு  புதிய  ஆண்  துணையுடன்  ஒரே  வீட்டில்  வாழப்போகிறோம்  என்ற  தகவலையும், அந்த  ஆள்  பற்றி  ஒரு  இண்ட்ரோவையும்  மகனுக்கு  முறைப்படி  முன்  கூட்டியோ  தந்திருக்க  வெண்டாமா? திடீர்   என  வீட்டில்  புது  ஆளைப்பார்த்ததும்  அவன்  மிரள்வான்  என  யூகிக்க  வேண்டாமா? 


2  பாட்டியிடம்  நாயகி  தன்  குழந்தை / பையன்   எப்படி  அந்த ஆளை  எதிர்கொள்வானோ  என  அங்கலாய்க்கிறாள் . அப்போ  பாட்டியை  விட்டே  தன்  மகனிடம்  விளக்க  வைத்திருக்கலாமே? சில  விஷயங்களை  நாம்  நேரடியாக  சொல்வதை  விட  இன்னொருவர்  மூலம்  சொல்ல வைத்தால்  நல்லதுதான்  


3  ஆடை  வ்டிவமைப்பில்  இயக்குநர்  கோடடை  விட்டு  விட்டார் . நாயகி , ஜோசியக்காரன் பாட்டி  எல்லோரும்  குடிசை  வாழ்  மக்கள்  போல  விளிம்புநிலை  ஆட்களீன்  உடைகளை  அணிந்திருக்க  அந்தப்பையன்  மட்டும்  பணக்கார  வீட்டுப்பையன்  போல்  ஷோக்கா  டி  சர்ட்  அணிஃந்திருக்கிறான் 


4  அந்த  சின்னப்பையன்  உட்பட  படத்தில்  வரும் அனைத்து  ஆண்  கேரக்டர்களும்  எப்போப்பாரு  பீடி  அல்லது  சிகரெட்  உடன்  ஊதிக்கொண்டே  இருப்பது  கடுப்படிக்கிறது.  விளிம்புநிலை  மனிதர்களில்  எல்லோருமே  தம்  பார்ட்டிகள்  தானா? நூத்துக்கு  ஒரு  ஆள்  கூட  டீ டோட்டலர்  ஆக  இருக்க  மாட்டானா? 


5  அம்மாவும் , ம்கனும்  சேர்ந்திருக்க  வேண்டும்  என்பதற்காக  நாயகியைப்பிரிந்து  வாழும்  நல்ல  எண்ணம்  கொண்ட  நாயகன் அவர்கள்  இருவரும்  சேர்ந்து  வாழ்கிறார்களா? என்பதை  கிராஸ்  செக்  செய்ய  மாட்டாரா?  அட்லீஸ்ட்  யாரிடமாவது  விசாரிக்க  மாட்டாரா? 


6  பாதுகாப்பில்லாத  உறவில்  ஈடுபடும்  நாயகன், நாயகி  இருவருக்கும்  கர்ப்பம்  ஆகப்போகும் நிலை  பற்றிய  புரிதல்  இருக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தொடர்கதையை, நாவலைப்படித்தவர்கள்  , ப்டிக்கதவர்கள்  அனைவரும்  பார்க்கலாம்.  இதில்  கமர்சியல்  எலிமெண்ட்ஸ்  எதுவும்  இல்லை.  பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும்  ரேட்டிங் 3 / 5 


உன்னைப்போல் ஒருவன்
இயக்கம்ஜெயகாந்தன்
தயாரிப்புஜெயகாந்தன்
ஆசிய ஜோதி பிலிம்ஸ்
இசைசிட்டிபாபு
நடிப்புபிரபாகரன்
காந்திமதி
வெளியீடுபெப்ரவரி 271965
நீளம்3362 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்