தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து 5 வெள்ளி விழாப்படங்களைக்கொடுத்த ஒரே இயக்குநர் பாரதிரஜான்னா தயாரிப்பாளர்னு பார்த்தா கோவைத்தம்பி .
1977 16 வயதினிலே 1978 கிழக்கே போகும் ரயில் 1978 சிகப்பு ரோஜாக்கள் 1979 புதிய வார்ப்புகள் 1979 நிறம் மாறாத பூக்கள் 1980ல் பாரதிராஜா ஹீரோவா நடிச்ச கல்லுக்குள் ஈரம் ஓடலை அதுலதான் கே பாக்யராஜ் துணை இல்லாமல் பாரதிராஜா தோன்றிய படம்
1982 பயணங்கள் முடிவதில்லை 1983 இளமைக்காலங்கள் 1984 நான் பாடும் பாடல் 1984 உன்னை நான் ச்ந்தித்தேன் 1985 உதயகீதம்
இவரது படங்களில் இளையராஜா இசை மோகன் ஹீரோ ஒற்றுமை . அவருக்கு ஒரு சறுக்கல் இதயக்கோவில் 1985 மூலம் வந்தது. இளையராஜா பிரிவும் வந்தது . லட்சுமிகாந்த் பியாரிலால் காம்போவில் உயிரே உனக்காக , ஆயிரம் பூக்கள் மலரட்டும் என சுமார் ஹிட் ப்டங்களை தந்தார் .. மண்ணுக்குள் வைரம் , மங்கை ஒரு கங்கை போன்ற வெகு சுமார் படங்கள் பிறகு உழைத்து வாழ வேண்டும் நு ஒரு டப்பா படம் இதில் கேப்டன் விஜயகாந்த்க்கு 10 லட்சம் ரூபா சம்பள பாக்கி வேற அவரு விட்டுக்கொடுத்துட்டார் 1992 ல உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் ல மீண்டும் இளையராஜா காம்போ . டைட்டிலே முகஸ்துதிதான் . . அது போக டைட்டிலில் 3000 நாட்களுக்குப்பிறகு இணைகிறோம்னு ஒரு பில்டப் வேற
இந்தப்படமும் பாட்டு ஹிட் ஆன அளவுக்கு படம் ஹிட் ஆகலை . அது ஏன் என தெரியலைனு கோவைத்தம்பி ஒரு பேட்டில வருத்தப்பட்டார். அது ஏன் என நாம் பார்ப்போம்
1 ஒரு மாலைச்சந்திரன் மலரைத்தேடுது மலையடி வாரத்திலே
ஒரு கானப்பூங்குயில் மந்திரம் பாடுது மன்மத ராகத்திலே ( டூயட்)
2 ஓஹோஹோ காலைக்குயில்களே ( மோகினி ஓப்பனிங் சாங்)
3 ஒரு ராகம் தராத வீணை ( மெலோடி)
4 இப்போதும் நிப்பேன் எப்போதும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன் ( இளையராஜா செல்ஃப் பில்டப் சாங்)
இது போக சுமார் ரக பாடல்கள் 3 இருக்கு
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு கார் மெக்கானிக் ஷாப்ல வேலை செய்யறாரு. ஆனா ஓனரையே அப்பப்ப மிரட்றாரு. அவரு மெக்கானிக் ஷாப்ல வேலை செஞ்ச நேரம் போக ஒரு பொண்ணை துரத்தி துரத்தி லவ் பண்றாரு. இன்னொரு பணக்காரப்பொண்ணு இதுவரை ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல. ஹீரோவை வெற்த்தனமா லவ்வறாரு. கொஞ்சம் கூட நம்பற மாதிரி இல்லை .
தன்னோட காரை தானே சேதப்படுத்தி மெக்கானிக் ஷெட்ல விடறாரு. அப்போதான் ஹீரோவை டெய்லி பாக்க முடியுமாம், நமக்கு நாமே திட்டம் போல
அப்போதான் இடைவேளை ட்விஸ்ட் வருது. ஹீரோ துரத்தி துரத்தி காதலிச்சாரே அவருதான் ஹீரோவோட சொந்த சம்சாரமாம். ஆல்ரெடி மேரெஜ் ஆகிடுச்சாம்\
தானே தாலி கட்ன சொந்த சம்சாரத்தை எந்த மடையனாவது இப்படி துரத்து துரத்தி லவ் பண்ணுவாங்களா?
இடைவெளை முடிஞ்சதும் ஃபிளாஸ்பேக்
ஹீரோ தான் தான் மெக்கானிக் ஷாப் ஓனர்னு ஒரு பொய் சொல்லிதான் ஹீரோயினை லவ்வறாரு, மேரேஜ் முடிஞ்சதும் சாந்தி முகூர்த்தம் ஹீரோ கமுக்கமா இருந்திருக்கலாம் கேனம் மாதிரி உண்மையை உளறிடறாரு . முதல் இரவு கட் வெளிநடப்பு பண்ணிய ஹீரோயினை ,மீண்டும் காதல் கூட்டணில சேர்த்துடறாரா? அல்லது தன்னை விரும்பும் பணக்காரப்பெண் கூட கூட்டணி வெச்சுக்கறாரா? இதான் க்ளைமாக்ஸ்
ஹீரோவா இரா பார்த்திபன். மதல்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் படங்களில் மோகன் மாதிரி சாஃப்ட் ஹீரோவைப்பார்த்த ரசிகர்களுக்கு லொட லொட அதிகப்பிரசிங்கித்தன கேரக்டர் ஒரு பெரிய ஷாக் .அவர் பண்ற அலட்டல்கள் எல்லாம் ஒவரோ ஓவர்
ஹீரோயினா மனைவியா சுமா ரங்கநாத். நடிப்பு குட் . கடைசி வரை ஹீரோவை வெறுக்கும் கேரக்டர் இதுவும் கொஞ்சம் அதிகப்படியா இருக்கு. பொய் சொல்லாம எவன் காதலிக்கிறான்? எல்லாரும் கேப்மாரியாத்தான் இருக்காங்க
இன்னொரு ஹீரோயினா மோகினி கொள்ளை அழகு . இவரது கண்கள் உதடு இரண்டும் பிளஸ் . ஆனா இவரது கேரக்டர் ஸ்கெட்ச் சரி இல்லை
மோகினியோட அப்பாவா நாச்ர். பணம் இருக்குதே தவிர ,மண்டைல மசாலா இல்லை
ஹீரோவோட அம்மாவா மனோரமா உருக்கமான நடிப்பு
மெக்கானிக் ஷெட் ஓனராக வி கே ராமசாமி கணீர்க்குரல் கச்சித நடிப்பு
பிரபுதேவா சூரியன் ஜெண்டில்மேன் படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுன மாதிரி இதுல ஒரு பாட்டுக்கு ஆடி இருக்கார் ஷாக் சர்ப்பரைஸ் அதிகம் அறியப்படாத தக்வல் \
லாஜிக் மிஸ்டேக்
1 மேரேஜ் பண்ணும்போது மாப்ளையைப்பற்றி வேலை செய்யற இடத்துல விசாரிக்க மாட்டாங்களா? ஓனரா? இல்லையா?னு கண்டு பிடிக்க முடியாதா?
2 மோகினி ஹீரோ மேல ஆசைப்பட்டதும் நாசர் மாப்ளை பார்க்க போனப்போ ஹீரோ தனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு சொல்லியும் நாச்ர் லூஸ் மாதிரி பிஹேவ் பண்ணீட்டு இருக்கார். ஏம்மா மின்னல் இந்தாளுக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சாம் உனக்கு ஓக்கேவா?னு கேட்கவே இல்லை அட்லீஸ்ட் ஃபோன் பண்ணியாவது கேட்கலாம்
3 க்ளைமாக்ஸ் ல மனோரமா சீரியசா இருக்காங்க ., மூச்சு நிற்பதற்குள் இதுவரை நேரில் பார்க்காத தன் மருமக்ளை பார்க்க ஆசைப்படறார். சுமா வரும்போது இறந்துடறார். உடனே பழியைத்தூக்கி சுமா மேல போடுவது ஏன் ? நீ வர லேட் பண்ணதாலதான் இறந்துட்டாங்க என்பது ஓவர்
4 ஹீரோ பொய் சொல்லி மேரேஜ் பண்றது ஓக்கே ஆனா மேரேஜ்க்கு அம்மாவை ஏன் அழைக்கலை? அம்மாவா வர்லைன்னாலும் மூணாவது மனுஷியா மேரேஜ்க்கு வந்திருக்கலாமே?
5 இடைவேளை ட்விஸ்ட் தெரிந்தது,மே ரசிகனுக்கு க்ளைமாக்ஸ் என்ன ஆகப்போகுதுனு தெரிஞ்சிடுது அதுக்குப்பின் இழு இழுனு இழுத்துட்டாங்க
6 ஹீரோக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சுனு தெரிஞ்ச மோகினி ஷாக் ஆகவே இல்லை டீக்கடைல போண்டா இல்லை வடை தான் இருக்குனு சொன்ன மாதிரி சாதார்ணமா இருக்கார்
7 ஹீரோ கண் முன் தான் மோகினி தன் காரை உடைச்சு மெக்கானிக் ஷாப்ல ரிப்பேர்க்கு விடறார் ஆனா ஹீரோ மோகினி இவ்ளோ சீரியசா லவ் பண்றது தெரியாதுங்கறார்
8 க்ளைமேக்ஸ்ல வி கே ராமசாமிக்கு வாரிசே இல்லை ஹீரோவை தத்து எடுத்துக்கறார்னு முடிச்சி சுமாவை சமாதானப்படுத்துவ்து பெண்மையைக்கேவலப்படுத்துவது போல இருக்கு ஹீரோவுக்கு வச்தி வாய்ப்பு வந்தபின் தான் ஓக்கே சொல்ற ,மாதிரி அகிடுது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இளையராஜா ரசிகர்கள் மோகினி ரசிகர்கள் பார்க்கலாம் ரேட்டிங் 2 / 5 இது அமேசா பிரைம் ல கிடைக்குது