மம்முட்டி நதியா முகேஷ் நடிச்ச ஷியாமா எனும் மலையாளப்படத்தின் அஃபிஷியல் ரீமேக் இது, வழக்கமா ஒரு படம் ஹிட் ஆகிட்டா அதனோட ரீமேக் மற்ற மொழிகளில் வர ஓரிரு ஆண்டுகள் ஆகும் ஆனா மலையாளத்துல ரிலீஸ் ஆன அதே ஆண்டு தமிழிலும் ரீமேக் ஆகிடுச்சு
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ பிரபலமான மியூசிக் டைரக்டர் . இவரோட குரு சினிமா ல ஒர்க் பண்ணுன வரை இவரும் அவர் ட்ரூப்ல இருந்தாரு. கடந்த 2 வருசமா அவர் ஃபீல்டுல இல்லாததால இவரும் வேற எதுலயும் கலந்துக்கறதில்லை . குருவுக்கு மரியாதையாம். இவருக்கு ஒரு மனைவி இருந்தாங்க இப்போ இல்லை இறந்துட்டாங்க , ஒரு மன மாறுதலுக்காக புது ஊருக்கு வந்து தங்கறார்
அங்கே ஹீரோயினை சந்திக்கிறார். இருவரும் பேசிக்கறாங்க , பழகறாங்க. ஹீரோயினுக்கு ஆல்ரெடி ஒரு லவ்வர் இருக்கான் சொந்த அத்தை பையன் தான். அவனோட காதல் கலாட்டானு லைஃப் போய்க்கிட்டு இருக்கு . ஒரு சாலை விபத்துல அவன் இறந்துட்டான். காதலன் இறந்த துக்கம் தாளாமல் நடைப்பிணமா வாழ்ந்துட்டு இருந்த ஹீரோயின் வாழ்க்கைல ஹீரோவின் அருகாமை அவரை உயிர்ப்பிக்குது
தன் பொண்ணு முகத்துல சில காலம் சிரிப்பையே பார்க்காத பெற்றோர் இப்போ ஓரளவு மீண்டு வந்ததைப்பார்த்து மேரேஜ் விஷயம் பேசறாங்க / அப்போ ஹீரோ மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்கறார்
அதுக்கு காரணம் இருக்கு ஹீரோவோட மனைவி வீட்ல சமைக்கும்போது கேஸ் சிலிண்டர் வெடிச்சு பலத்த காயத்தோட இருந்தப்ப அவரை கார்ல ஹாஸ்பிடல் கூட்டிப்போறப்ப ஒரு விபத்து நடக்குது அதுல ஒரு ஆளை கார்ல அடிச்சுத்தூக்கிடறாரு. அவர் நினைச்சிருந்தா அந்த ஆளைக்காப்பாத்தி இருக்கலாம் ஆனா மனைவி உயிர் ஆபத்துல இருப்பதால் சுயநலமா அவனை அம்போனு வ்ட்டுட்டு போய்டறார். ஆனா ஹீரோ மனைவி ஹாஸ்பிடல் போகும் முன்னே இறந்துடறாங்க ஹீரோயினோட காதலன் விபத்துல இறக்க தான் தான் காரணம்கறதை ஹீரோயின் தன் ஃபிளாஸ்பேக்கை சொல்லும்போது தெரிஞ்சுக்கிட்ட ஹீரோ குற்ற உணர்ச்சில தவிக்கறார்
ஹீரோயினுக்கு இந்த உண்மை தெரிய வந்ததா? எப்படி தெரிய வந்தது ?தெரிஞ்ச பின் அவர் ரீ ஆக்சன் என்ன? ஹீரோவைப்பழிக்கு ப்ழி வாங்குனாரா? இல்லை மேரேஜ் பண்ணிக்க ஓக்கே சொன்னாரா? இதான் க்ளைமாக்ஸ்
ஹீரோவா சிவக்குமார் . குருவுக்கு மரியாதை காட்டும் போது பணிவு குருவுக்குத்தெரியாமல் அவர் குடும்பத்துக்கு பண உதவி செய்கையில் ,ம்னிதாபிமானம் ஹீரோயின் கூட பழகும்போது புத்துணர்ச்சி , ஃபிளாஸ்பேக் கேட்டதும் குற்ற உணர்ச்சி என நவ ரசங்களையும் கலந்து கட்டிட்டார்
ஹீரோயினா நதியா . இவரது ஹேர் ஸ்டைலும் கண்ணியமான மாடர்ன் டிரசும் அந்தக்கால காலேஜ் மாணவிகளுக்கு மிகவும் பிடிக்கும் நதியா ஸ்டெட் நதியா ஹேர் ஸ்டைல் நதியா ,மிடி என ஹிட் ஆடிச்சுது அவரது டிரஸ்சிங்ல கட்டுக்கோப்பு இருக்கும். கமல் கூட நடிக்க மறுத்த இரு நடிகைகளில் இவரும் ஒருவர் ( இன்னொருவர் ஆசை சுவலட்சுமி )
நதியாவின் காதலனா சுரேஷ் அந்தக்காலத்துல இவஙக 2 பேரும் நல்ல ஜோடினு பேர் எடுத்தாங்க ( இருவரும் லவ்வர்ஸ் என்ற ரூமரும் இருந்தது ) மோகன் நதியா ஜோடிப்பொருத்தம் நல்லாருதலும் சுரேஷ் கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கும்
ஹீரோவின் மனைவியா மேனகா சுரேஷ். அதிக வாய்ப்பில்லை. வந்தவரை ஓக்கே . நதியாவின் அண்ணனாக ரவீந்தர் ஒரு ஃபைட் சீன் வேற இவருக்கு
செந்தில் காமெடி எடுப்டல கவுண்டமணி காம்போல தான் நல்லா ஒர்க் அவுட் ஆகும்
இளையராஜா இசை
இளஞ்சோலை பூத்ததா? என்ன ராகம்?
கண்ணா உனை தேடுகிறேன் வா இந்த ரெண்டு பாட்டும் ஹிட்டு அது போக 4 பாட்டு இருக்கு ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை
சபாஷ் டைரக்டர் ( கே ரங்கராஜ் )
1 சிவகுமார் நதியா காம்போ சுரேஷ் நதியா காம்போ இரண்டும் மக்கள் மனதைக்கவரும் விதமாகவே வடிவமைக்கப்பட்டது
2 ஹீரோவின் மனைவி ஹீரோயினின் காதலன் இருவர் இறப்புக்கும் ஒரு கனெக்சன் இருக்கு என்ற சஸ்பென்சை காப்பாற்றிய விதம்
3 ஹீரோயின் ஹீரோவை ஏத்துக்குவாரா? மாட்டாரா? அல்லது காதலனின் இற்ப்புக்குக்காரணமானதால் அவரைப்பழி வாங்குவாரா? என்ற எண்ணத்தை எதிர்பார்ப்பை உருவாக்கிய விதம்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஹீரோயினும் அவர் காதலனும் சினிமா சான்ஸ் கேட்க ஆல்ரெடி ஹீரோவை மீட் பண்ண அவர் வீட்டுக்கு வந்திருக்காங்க என ஹீரோயின் சொல்லும் ஃபிளாஸ்பேக்கில் ஹீரோ தனியாக இருக்கும்போது நடந்த சம்பவங்களும் வருது அது எப்படி அவருக்கு தெரிஞ்சுது ? பொதுவாக தமிழ் சினிமாவில் வரும் பிழை இது ஒரு ஃபிளாஸ்பேக்கில் யார் கதை சொல்றாங்களோ அவங்க ஃப்ரேம் டூ ஃப்ரேம் இருக்கனும் அப்போதான் அவங்க பார்வைல கதை சொல்லல்ல ஒரு நம்பகத்தன்மை வரும்
2 சுரேஷ் விபத்தில் அடிபட்டதும் ஹீரோ வேற எங்காவது அவசரமா போறவரா இருந்தா அந்த சீன் ஓக்கே ஆனா அவரும் ஹாஸ்பிடல்தான் போறார். ஆன் த வேதானே? எதுக்கு தயங்கனும் ? தயங்கி தயங்கி பார்த்துட்டு இருந்த நேரத்தில் காப்பாத்தி இருக்கலாம்
3 காதலனின் மரணத்துக்கு ஹீரோ தான் காரணம் என்ப்தை ஹீரோயின் உணர்ந்ததும் அவர் அழுதுட்டே அந்த இடத்தை விட்டுப்போய்டறார். ஆக்சுவலா கோபம் வெறி வரனும் ஹீரோ சட்டையைப்பிடிச்சு உலுக்கனும் அந்த கோபமே அவருக்கு வர்லை
4 ஹீரோ மேல பரிதாபம் வர வில்லனை விட்டு சும்மா ஒரு ஃபைட் வெச்சு அவர் காயத்தோட இருப்பதைப்பார்த்து ஹீரோயின் காதலுக்கு ஓக்கே சொல்வது போல காட்டுனது என்னமோ அனுதாபப்பிச்சை மாதிரி இருக்கு . அந்த க்ளைமாக்ஸ் சீன் ஒரு சமாளிஃபிகேஷன் சீன் மாதிரி தான் இருக்கு ,உயிரோட்டமா இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நதியா ரசிகர்கள் பார்க்கலாம் டீசண்ட்டான லவ் ஸ்டோரி . இதன் ஒரிஜினல் வெர்சன் அமேசான் பிரைம்ல யும் இது யூ ட்யூப்லயும் கிடைக்குது ரேட்டிங் 2.25 / 5