Showing posts with label உணவில் விஷம். Show all posts
Showing posts with label உணவில் விஷம். Show all posts

Monday, June 08, 2015

‘மேகி' மட்டும்தான் குற்றவாளியா? - மருத்துவர் கு. சிவராமன்

மருத்துவர் கு.சிவராமன்
மருத்துவர் கு.சிவராமன்
மேகி தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் பற்றி பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான கு. சிவராமன் என்ன சொல்கிறார்?:
ஓர் உணவுப் பொருளில் சுவை என்பது இயல்பாக வரவேண்டும். இயற்கையாகச் சில உணவுப் பொருட் களைச் சேர்க்கும்போது உருவாகும் சுவையைத் தாண்டி கூடுதலாகச் சுவையூட்டுவதற்கு, மருத்துவ, உணவியல் அடிப்படையில் நமது பாரம்பரியத்தில் சுவைகள் கூட்டப்பட்டன. ஏலக்காய், வெல்லம், எலுமிச்சை போன்ற சுவையூட்டிகளின் குணமறிந்து சேர்க்கப்பட்டன.
அடிப்படையே தவறு
இந்தப் புரிதலும் அக்கறையும் தூக்கியெறியப்பட்ட உணவுப் பொருள் பெருவணிகத்தில், வலிந்து சுவையைக் கூட்டும்போது, எந்தப் பொருட்களின் அடிப்படையில் அந்தச் சுவை கூட்டப்பட்டது என்பதை அறிய முடிவதில்லை. இப்படி வலிந்து சுவையூட்டுவது அடிப்படையிலேயே தவறு என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாகவும், அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும் விற்பனையாகும் மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற செயற்கை சுவையூட்டியின் தயாரிப்பு முறை தெளிவற்றதாக இருக்கிறது. தாவரப் பொருட்களில் இருந்து குளூட்டமிக் அமிலம் கிடைப்பதாகக் கூறப்பட்டாலும், காப்புரிமை சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் தயாரிப்பு முறை ரகசியம் காக்கப்படுகிறது. அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாது.
அடிமைப்படுத்தும்
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் உள்ளிட்ட உடனடி உணவுப் பொருட்களில் அமிலத்தன்மை வாய்ந்த இந்த உப்பு சேர்க்கப்படுகிறது. அதனால் வயிற்றுப் புண், அல்சர் போன்ற இரைப்பை சார்ந்த பிரச்சினைகளைச் சாதாரணமாக இது ஏற்படுத்தலாம். இந்த உப்பு ஒருவித அடிமைத்தன்மையை உருவாக்கக்கூடியது. இந்த உப்புச்சுவையை உணர்ந்தவர்களுக்கு, மற்ற உணவு வகைகளின் மீதான நாட்டம் குறையும். டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான ‘தி டேஸ்ட் தட் கில்’ என்ற புத்தகத்தில், மோனோ சோடியம் குளூட்டமேட் மூளையின் ஹைப்போ தலாமஸ்வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், வயிற்றுவலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பதுவரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேகி மட்டுமல்ல
அதேநேரம் தடை செய்யப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மட்டுமல்ல, வேறு பல உடனடி நூடுல்ஸ் வகைகள், ஹோட்டல்-ரோட்டு கடைகளில் விற்கப்படும் சீன, தந்தூரி உணவு வகைகள், சிக்கன், பனீர், கடாய் உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படுகிறது.
திருமண வீடுகள், விசேஷங்களுக்குச் சமைக்கும்போதும் சாம்பார், ரசத்தில்கூட இதைக் கலந்துவிடுகிறார்கள். பர்கர், ரொட்டி, கோழி வறுவல் உள்ளிட்ட பிரபலப் பன்னாட்டு ஹோட்டல் சங்கிலித்தொடர் கடைகளில் பரிமாறப்படும் உணவு வகைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஒருவித தனிச்சுவை கிடைக்கிறது.
மேகி நூடுல்ஸை தடை செய்வதில் காட்டும் அக்கறையை, மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்பட்ட அனைத்து உணவு வகைகளைத் தடை செய்வதிலும் அரசு காட்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
- ஆதி


  • அஜினோமோட்டொவை இந்தியாவிலிருந்து விரட்டவேண்டும். பயிர்களுக்கு ரசாயன உரமிடுவதை தடை செய்யவேண்டும் . இதை விடுத்து மேகியைமட்டும் தடை செய்வது பித்தலாட்டம் . செய்வார்களா இந்த அரசியல் வாதிகள்
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • மேகி மட்டுமல்ல இந்தியாவில் இன்னும் தடை செய்யப்பட வேண்டிய உணவு வகைகள் அனைத்தும் மனிதனின் சக்தியை உற்பத்தியை செய்யக்கூடிய குடல்.. கல்லீரல் மற்றும் கணையம் உட்பட உணவுக்குழாய் உறுப்புகளின் செயல்த்திறனை வலுவிழக்கச் செய்யும் காரணிகளை அனுமதிப்பது நமது உடலுக்கு நாமே வேட்டு வைப்பதாகும்..??!
      about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • TMZ  
        நண்பர்கள் கருத்து எல்லாம் சரி. ஆனால் இன்றைய தாய்மார்கள் இந்த நூடுல்சில் ஆரம்பித்து பிட்சா, பர்கர் வரை ஒரு பாஷன் பொருளாக, ஆடம்பரம் மிக்க பொருளாய் தான் ஊட்டி வளர்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
        Points
        2660
        about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • நாம் விழித்துகொள்வதற்கான தருணம் இது .... சமீபத்திய கணக்கெடுப்பில் 37% மக்கள் (?) இந்த தடை பற்றி கவலை இல்லை என்று சொல்லி மாகியை தொடர்ந்து உன்னபோவதாக கருத்து கூறியுள்ளனர். சொந்த உடல் நலத்தின் மீதும் தனது குடும்பத்தாரின் நலத்தின் மீதும் அக்கறை அற்ற இவர்கள், பொதுநலத்தின் மீதும் சுற்றுசூழல் மீதும் எப்படி அக்கறை காட்டுவார்கள்? இவர்கள்தான் உண்மையான தேச துரோஹிகள் !!! இந்த சிவராமன் மட்டுமல்ல அந்த சிவனும் ராமனும் சேர்ந்து வந்தால் கூட திருத்தமுடியாது.
          about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Ali  
            தகவலுக்கு நன்றி மருத்துவர் அய்யா அவர்களே.
            about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Feefai  
              மோனோ சோடியம் குளூட்டமேட் மட்டும் தடை செய்தால் போதாது. டாஸ்மாக் சரக்குகளில் என்ன கலக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் டாஸ்மாக் அரசு எப்போது மூடும் என்பது தெரியாது? டாஸ்மாக் இழப்பை மிக சுலபமாக சரிகட்ட முடியும், அதற்கு பல்வேறு வழிவகைகள் இருக்கிறது. இதற்கான ஆலோசனைகளை பல்வேறு நிபுணர்களை கேட்டாலே கிடைக்கும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? எத்தனையோ பேர் குடி கெட்டதற்கும், இதபோல குறைந்த விலை உணவு நிலைக்கு தள்ளப்ப் பட்டதற்கும் காரணம் "டாஸ்மாக்".
              Points
              180
              about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
              Selvam  Up Voted
              • Siva  
                நிரம்ப யோசிக்கிற யாரும் பேக்கிங் ல் வரும் எந்த உணவையும் சாப்பிட koodaathu..அதே உணவகங்களில் அலை மோதும் கூட்டமும் குறைய vendum..வீட்டில் சமைக்கும் சாதரணம் என்று நாம் நினைக்கும் உணவே மிக nalladhu..
              நன்றி- த இந்து