சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் ஞாயிறு அன்று உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை
காலை 11 மணி
OTTAAL | DIR.: JAYARAJ | MALAYALAM|2015|90’
கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. கேரள உலகத் திரைப்படவிழாவின் வரலாற்றிலேயே கடந்த 20 ஆடுகளில் உச்சபட்ச விருதுகளைப் பெற்ற ஒரே படம். தென்னிந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் 18ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. பேரனுக்கு இந்த உலகத்தில் வாழும் ஒரே உறவான தாத்தாவோடு அவனுக்குள்ள தொடர்பை உருக்கமாக பேசுகிறது. ஆன்டன் செகாவின் வான்கா சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.
மதியம் 2.30 மணி
DÉCOR | DIR.:AHMAD ABDALLA | EGYPT | 2014 | 116’
எகிப்தைச் சேர்ந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் மகாவைப் பற்றிய உளவியல் ரீதியான கருப்பு வெள்ளைப் படம் இது. மகா திருமணமான ஒரு பெண்ணின் உடலிலிருந்து உலகத்தைப் பார்ப்பதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது. இரு வெவ்வேறு வாழ்க்கையை, வெவ்வேறு உடல்களின் மூலம் வாழும் மகாவுக்கு இரண்டிலும் பிரச்சினை ஏற்படுகிறது. இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாமல் எது வேண்டுமென முடிவெடுக்கும் நிலைக்கு மகா தள்ளப்படுகிறாள்.
மாலை 5.00 மணி
CINEMAWALA | DIR.: KAUSHIK GANGULY | BENGALI | 2015 | 105’
கவுசிக் கங்குலியின் 'சினிமாவாலா' திரைப்படம், தலைமுறைகளுக்கு இடையேயான இடைவெளியை அழகாக விளக்குகிறது. கொல்கத்தாவுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரனாபேந்து தாஸின் கதையைச் சொல்கிறது 'சினிமாவாலா'. பிரனாப் ஓய்வுபெற்ற திரைப்படப் பார்வையாளர். தன்னுடைய பிழைப்புக்காக காலையில் மீன் வியாபாரம் செய்கிறார். மீதி நேரம் முழுவதையும் தியேட்டரிலேயே கழிக்கிறார். கடந்த காலத்தின் மீது பெரும் மதிப்பைக் கொண்டிருக்கும் பிரனாப், நீதிநெறிகளின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார். நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிக்கத் துடிக்கிறான் பிரனாப்பின் மகன் பிரகாஷ். அவனுக்கு நேர்மை, நியாயத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லை. தடை செய்யப்பட்ட படங்களை விற்கும் பிரகாஷ், ஒரு கட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பான படங்களை தியேட்டரில் திரையிடுகிறான்..
மாலை 7.30 மணி
PARTISAN / PARTISAN | DIR.:ARIEL KLEIMAN | AUSTRALIA | 2015 | 98’
பெரிய மாற்றத்தின் விளிம்பில் இருக்கு நகரத்தில், தனியாக உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குடியிருப்பில் 11 வயது அலெக்ஸாண்டர் வாழ்கிறான். அங்கு அவனைப் போல பல குழந்தைகளும், பெரியவர்களும் இருக்க அவர்களுக்கு க்ரேகோரி என்பவன் தலைவனாக இருக்கிறான். க்ரேகோரி, வாழ்வாதாரத்தை பெருக்குவது, காய்கறிகள் வளர்ப்பது, சமுதாயத்துடன் இணக்காமக இருப்பது, கொலை செய்வது என பல விதங்களில் அந்த குழந்தைகளை பயிற்றுவிக்கிறான்.
நன்றி - த ஹிந்து
நன்றி - த ஹிந்து
நன்றி - த ஹிந்து
நன்றி - த ஹிந்து