Showing posts with label உடலுக்கு ஒத்துவராத உணவுகள்!. Show all posts
Showing posts with label உடலுக்கு ஒத்துவராத உணவுகள்!. Show all posts

Tuesday, December 01, 2015

உடலுக்கு ஒத்துவராத உணவுகள்!

ஃபுட் ஸ்டெயிலிங், ஃபுட் காம்பினேஷன், ஃபுட் டெகரேஷன் என்ற பெயரில் புதுப் புது யுக்திகளை பயன்படுத்தி புதுமையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பார்க்க அழகாகவும், நாவிற்குச் சுவையாகவும் இருந்தால் மட்டும் போதும் என நினைத்து தயாரிக்கப்படும் உணவுகள் நம் ஆரோக்கியத்தை  பதம் பார்க்கின்றன.

ஒரு வாரமாகச் சேர்த்து வைக்கப்பட்ட சிக்கனில் கலரும், வினிகரும் சேர்த்தால் பழைய சிக்கன் கூடப் புதிய சிக்கனாக நமது ப்ளேட்களில் பரிமாறப்படுகிறது. புதிய பரிணாமத்தில் உணவுகளாகி இன்றைய தலைமுறையை ஈர்த்தாலும்க் இது சரியான உணவு முறையா என்பது கேள்விக்குறியே. ஆனால் இது நமக்கு உணவா விஷமா? என்பதற்கு விளக்கமளிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால். 

ரச (சுவை), குண (செயல்பாடு), வீரிய (தன்மை), விபாக (செரிமானம்) மற்றும் பிரபாவம் (சிறப்பான செயல்பாடு) போன்ற குணங்கள் கொண்டவைதான் நாம் சாப்பிடும் உணவுகள். இவ்வைந்து குணங்களும் சேர்ந்துதான் உடலில் உணவுகளைச் செரிக்க உதவுகின்றன. 

காலத்திற்கேற்ப உணவுகள்

அந்தந்த காலத்தில் உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலம் கடந்து சாப்பிடுதல் தவறு. இரவில் தயிர் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்னை அதிகரிக்கும். தயிரை இரவில் சாப்பிட்டால், ஒரு மைக்ரோ அளவிற்குக் கூடச் செரிக்காது. இரவில் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகளில் தயிரும், கீரைகளும் உள்ளன.

கோடை காலம்

இக்காலத்தில் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. சூழலும் வெப்பமாக இருப்பதால் எளிதில் செரிக்கக் கூடிய உணவை உண்ணுவது அவசியம்.

மழை காலம்

அடிக்கடி பசி எடுக்கும் காலம் இது. ஆகையால் நீண்ட நேரம் செரிமானம் ஆகும்படியான உணவுகளைச் சாப்பிட வேண்டும். 

நிலத்திற்கேற்ப உணவுகள்

ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு சுவை இருக்கும். அந்தந்த இடங்களைப் பொறுத்து அங்கு விளையும் பொருட்களின் சுவை மாறுபடும். அதுபோல நம் நாட்டில் விளையும் காய், கனிகளை உண்ணுவதே நல்லது. வெளிநாட்டில் விளைய கூடியவைகளைச் சாப்பிடுவதால் உடலுக்குப் பெரிய நன்மைகள் எதுவும் சேராது. நாட்டுப் பழங்கள், நாட்டுக் காய்கறிகள், கீரை வகைகள், பருப்புகள், எண்ணெய் வகைகள் என அனைத்தும் நம் நாட்டில் விளையக் கூடியதாகவும், தயாரிக்கப்படுவதாகவும் இருப்பதே ஆரோக்கியத்தை அளிக்கும்.

எதிர் எதிர் குணங்கள் கொண்ட உணவுகள்

குளிர்ச்சியும் சூடும் போன்ற எதிரெதிர் குணங்கள் கொண்ட உணவுகளைச் சேர்த்து சாப்பிடுதல். பால் மற்றும் கொள்ளு, தேன் மற்றும் நெய் போன்ற இரு குணங்கள் கொண்ட உணவு ஸ்லோ பாய்சன் (slow poison) ஆகும். சில மூலிகை மருத்துவத்தில் தேனும் நெய்யும் சேர்க்கப்பட்டுச் சாப்பிடுவது வழக்கம். அவர்கள் கூடச் சம அளவு தேனையும் நெய்யையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இரண்டில் ஒன்றின் அளவை (2:1) குறைத்து சாப்பிடுவது அவசியம். இல்லையெனில் இதற்கு ஒரு தனி மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும். 

கெட்டுபோன உணவுகள்

சமையலில் தயிர் சேர்க்கப்படுவதைப் பல டிவி சேனல்களில் வரும் சமையல் கலை வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர். அதை மக்களுக்கும் எடுத்துரைகின்றனர். சுவைக்காகவும், மென்மைக்காகவும் எனப் பரிந்துரைக்கின்றனர். உண்மையில் இது தவறு. தயிரை சூடுபடுத்தக் கூடாது அது சூடாகும் போது திரியும். திரியப்படும் தயிர் அலர்ஜிகளை ஏற்படுத்தும். உடலில் சில ப்ளாக்கேஜ்களை (blockage) உண்டு பண்ணும். மோர் குழம்பு சாப்பிடுவது நமது பாரம்பரிய பழக்கம். ஆனால், ஸ்டவ்வை அனைத்த பின்பே மோரை ஊற்றுவோம். அடுப்பிலிருக்கும் போதே ஊற்ற மாட்டோம், அப்படிச் செய்யவும் கூடாது. அவ்வுணவு கெட்டு போன உணவாக மாறிவிடும். மோரை தாளித்துச் சாப்பிடுவது நல்லது இஞ்சி, கடுகு, கொத்தமல்லி, பெருங்காயம் எனத் தாளித்துக் குடித்தல் உடலுக்கு நன்மையைச் செய்யும். 

மில்க் ஷேக்குகள்

இனிப்பு சுவை கொண்ட பழங்களுடன் (ஆப்பிள், வாழை) பால் சேர்ப்பது ஒரளவிற்குப் பரவாயில்லை. அதாவது கல்லை கூடச் செரிமான சக்தியால் கரைக்கக் கூடிய ஆரோக்கியமான உடலுடையோர் தாராளமாகச் சாப்பிடலாம்.

பழங்களுடன் பால் சேர்க்கும் மில்க் ஷேக்கிற்குத் தனி வரவேற்பு உண்டு. சிட்ரஸ் (எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு) பழங்களுடன் பால், மெலான் பழங்களுடன் பால் (கற்பூரப்பழம் (muskmelon), தர்ப்பூசணி, பப்பாளி, கிர்ணி) போன்றவற்றைச் சேர்க்கவே கூடாது. புளிப்பு சுவை கொண்ட மாதுளை பழத்துடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காகக் குடிக்கக் கூடாது. 

​செய்ய வேண்டியவை

நல்லெண்ணெய், பசு நெய் போன்றவை உடலுக்கு நன்மையைச் செய்யும். ரீபைண்டு எண்ணெய்யை அளவோடு பயன்படுத்துதல் நன்மையை அளிக்கும்.

பிரியாணி, ஹெவியான உணவுகள் சாப்பிட்ட பின் சூடான டீ குடிக்கலாம். கூல் டிரிங்ஸ் கூடாது.

மாவுச் சத்துடன் பருப்பைச் சேர்க்கலாம். பருப்பை வேக வைக்கும் போது மஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு தட்டிப் போட்டு வேக வைக்க வேண்டும்.

மாவுச் சத்துகளும், காய்கறிகளும், ப்ரவுன் அரிசியும் சேர்த்துச் சாப்பிடலாம். புரதச் சத்து உணவையும் காய்கறிகளையும் சேர்க்கலாம்.

கஞ்சி குடிப்பதற்கு முன்னரும் பின்னரும் நீர் அருந்துதலை தவிர்க்கலாம்.

காலையில் எழுந்தவுடன் பருவகால (seasonal fruits) பழவகைகளை ஒரு கப் அளவிற்குச் சாப்பிட்டு வரலாம்.

பழச்சாறாகவோ, மில்க் ஷேக்காகவோ சாப்பிடுவதை விட பழங்களை தனியாக சாப்பிடுவதே நல்லது.

- ப்ரீத்தி

விகடன்