Showing posts with label உங்கள் புத்தாண்டு சபதம் என்ன?. Show all posts
Showing posts with label உங்கள் புத்தாண்டு சபதம் என்ன?. Show all posts

Saturday, January 03, 2015

உங்கள் புத்தாண்டு சபதம் என்ன?

மகிழ்ச்சி, துக்கம், சாதனை, சந்தோஷம், வேதனை, கோபம், போட்டி, ஏமாற்றம், ஏக்கம் என உணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப் பார்த்தால், அசைபோட நிறைய நினைவலைகள் எல்லோருக்குமே இருக்கும்.
புத்தாண்டில் அடியெடுத்து வைக்க தயாராகிவிட்ட நமக்கு முதலில் பொறி தட்டுவது 'இந்த ஆண்டுக்கான சபதம்'. இது வெறும் சம்பிரதாயம்தான் என்று உள் மனது ஏளனம் செய்தாலும்கூட, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள இதைவிட பெரிய வாய்ப்பு நமக்கு தெரிவதில்லை.
எனவேதான், முதல் முயற்சியாக புத்தாண்டு விடியும் போது புது சபதம் போடத் தவறுவதில்லை.
அது சிகரெட்டை நிறுத்துவதாக இருக்கலாம், இல்லை பிடித்தவருடனான ஒரு நிலவொளி நடைபயணமாக இருக்கலாம், கொஞ்சம் சீரியஸாக ஏதோ சமூக சேவையாக இருக்கலாம். அனைத்தையும் பட்டியிலிட முடியாதல்லவா? எனவே உங்கள் 'புத்தாண்டு சபதம்' என்னவென்று இங்கே பகிருங்களேன். 


  • palani Kuppusam  from Bangalore
    எனது புத்தாண்டு இலக்குகள் இதோ : 1. பொருளாதார வெற்றி வேலை செய்து கொண்டே சேமிப்பை பெருக்கி எனது மாதாந்திர , வருட வரவு செலவினை திட்ட மிட்டு துண்டு விழாதவாறு சீரமைத்து என்னை சார்ந்தவரை சிரம படுத்தாமல் பொருளாதார தேவையில் வெற்றியடைவது. 2. வியாபார வெற்றி சேமிப்பை வியாபார முதலீடாக வைத்து சிறு தொழில் தொடங்கி அவசரமில்லா அடிமேல் அடிவைத்து துவங்கிய தொழிலில் வெற்றியடைந்து தொழிலை பெருக்கி வரவினை நடப்பு தொழிலிலும் , வளச்சிக்கு உதவிய பணியாரலர்களின் மீதும் முதலீடு செய்து உயர்வது. 3. முதலீட்டில் வெற்றி தொழிலில் ஈட்டிய லாபத்தை நீண்ட கால இடைவெளியில் பயன்தரும் முதலீடுகளை இனம் கண்டு அவற்றில் முதலீடு செய்து காத்திருந்து பலன் பெறுவேன் . 4. கால மேலாண்மையில் வெற்றி கடவுளே கட்டுப்படும் காலத்தின் மேன்மை அறிந்து காலத்தை வளர்ச்சி தரும் பணிகளுக்கே கவனம் செலுத்துவேன் . 5. வளங்களை பயனாகுவதில் வெற்றி இயற்கை வளமனைத்தையும் மனித குலம் வாழ வழி செய்ய முயல்வேன். 6. பண் மொழி அறிவில் வெற்றி 7. எப்பொழுதும் மகிழ்வாய் இருப்பதில் வெற்றி 8. பொது தொண்டில் வெற்றில் 9. தொலை நோக்கு பார்வையில் வெற்றி 10. ஒத்திசைவில் வெற்றி
    about 23 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
       
  • Venkatesh  from Calicut
    பூரண மது விலக்கை நிறைவேற்ற தவறும் மற்றும் தேவை அற்ற இலவசங்களை கொடுக்கும் ( மக்களை கெடுக்கும் ) கட்சிகளை (கூட்டணிக்கு ஆதரவு தரும் கட்சிகளையும் சேர்த்து ) புறந்தள்ளுவதாக சபதம் எடுத்துள்ளேன்.
    Points
    415
    about 23 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • humanbeing  from Singapore
    மதவெறி மாய்ப்போம், மனிதம் பேணுவோம்.
    Points
    31315
    about 24 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • செ.  from Chennai
    விடாமல் தொடர்ந்து எவருக்கும் அஞ்சாமல், அழகிய நற்றமிழில் மக்களின் மனதில் சிந்தனைகளைத் தூண்டுமாறு "தி ஹிந்து" வலைத்தளத்தில் முன்னோருக்கால் BBC யின் HYS பகுதியில் அனைத்துத் தலைப்புக்களிலும் பலருடைய பரிகாசம், பாராட்டுதல்களுக்கு ஆளாகியும் அயராமல் எழுதியதைப்போல எழுதி என் உயிரினுமினிய தமிழ் மொழிக்கு புதிய முகம் ஒன்றை படைக்கப் போகிறேன். அதற்கு, தேன் ததும்பும் திருவாசகம், ஊனுருக்கும் பிரபந்தம், சிந்தனைகளை விரிவாக்கம் செய்யும் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதியார், பாரதிதாசன், பாவாணர், மு. வ., பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பனவற்றை பயன்படுத்தப் போகிறேன். ஊழல் அரசியல்வாதி எவராயினும் என் எழுத்துக்குத் தப்ப வழியில்லாது உண்மையைக் கூறுவேன். அந்தோன் செகோவ், சிங்கிஸ் அய்த்மாதேவ், மக்சிம் கோர்கி, ராகுல் சாங்கிருத்தியாயன், புறநானூறு, திருப்புகழ், அண்ணல் அம்பேத்கார் எழுதிய புத்த தருமம், அனைத்தையும் தமிழ் மறையாகிய ஓதரும் திருக்குறளுடன் ஒப்புமை காணப்போகிறேன். என் எழுத்து தென்பட்டால் உங்கள் நீங்கள் கொடுக்கும் கருத்து எதுவாயினும் அதை வேண்டுவேன். இதுவே என் புத்தாண்டு உறுதிப்பாடு.
    Points
    13160
    a day ago ·   (2) ·   (0) ·  reply (1) · 
    humanbeing  Up Voted
    • humanbeing  from Singapore
      வாழுத்துக்கள் புலவரே!
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • senbagapandian  from Chennai
    அதிகம் பேசுவதை குறைத்து கொள்வேன்....
    Points
    125
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • Bhagyalakshmisrinivasan  from San Jose
    இந்தப் புத்தாண்டில் இரண்டு சபதங்கள் எடுத்துக் கொள்ளப்போகிறேன். சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்து விட்ட என்னை இது நாள் வரை அழ வைத்தவர்கள்,அவமானப்படுத்தியவர்கள்,என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பழகியவர்கள் எல்லோரிடமிருந்தும் மனதளவில் விலகி என் மனதை சமன்படுத்திக் கொள்ளப் போகிறேன். 2.பல ஆண்டுகளாக எழுத்தாளராக இருந்தும் மிகப் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எழுத்துத் துறையில் உயரத்தையடைவது என் அடுத்த குறிக்கோள்.
    Points
    1100
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • SANKARANARAYANAN  from Bangalore
    இந்தியாவின் குடும்ப அமைப்பே உலகத்துக்கு வழிகாட்டும் வன்முறை இல்ல்லாத உலகம் படைப்போம்
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • arul  from Gaborone
    நான் என்னுடிய எடை குறைக்க சபதம் . குறைவான உணவு முயல்கிறேன் . Arul
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • aru  from Dewas
    நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். வேலையில் மாற்றம் வேண்டும் எழுத்தாளன் ஆவதற்கு வேண்டிய முயற்சி செய்ய வேண்டும்
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Ravichandran Ramalingam  from Courbevoie
    want to buy a land in Chennai for my proposed small scale industry. Achieve 25lakhs target House construction in to be completed Want to live without loans.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Nivas Kumar IT Analyst at Caterpillar Logistics Services, Inc. from -
    Be a Human as mentioned by Mahakavi Bharathiyar in புதிய ஆத்திசூடி காப்பு அச்சம் தவிர் ஆண்மை தவறேல். இளைத்தல் இகழ்ச்சி ஈகை திறன் உடலினை உறுதிசெய் ஊண்மிக விரும்பு எண்ணுவது உயர்வு ஏறுபோல் நட ஐம்பொறி ஆட்சிக்கொள் ஒற்றுமை வலிமையாம். ஓய்தல் ஒழி. ஓளடதம் குறை. கற்றது ஒழுகு. காலம் அழியேல். கிளைபல தாங்கேல். கீழோர்க்கு அஞ்சேல். குன்றென நிமர்ந்து நில். கூடித் தொழில் செய். கெடுப்பது சோர்வு கேட்டிலும் துணிந்து நில். கைத்தொழில் போற்று கொடுமையை எதிர்த்து நில். கோல்கைக் கொண்டுவாழ் கவ்வியதை விடேல். சரித்திரச் தேர்ச்சி கொள் சாவதற்கு அஞ்சேல் சிதையா நெஞ்சு கொள். சீறுவோர்ச் சீறு. சுமையினுக்கு இளைத்திடேல். சூரரைப் போற்று செய்வது துணிந்து செய் சேர்க்கை அழியேல். சைகையில் பொருளுணர். சொல்வது தெளிந்து சொல் சோதிடந் தளை யிகழ். சௌரியம் தவறேல். ஞமலிபோல் வாழேல். ஞாயிறு போற்று ஞிமறென இன்புறு. ஞெகிழ்வது அருளின். ஞேயம் காத்தல்செய். தன்மை இழவேல். தாழ்ந்து நடவேல். திருவினை வென்று வாழ். தீயோர்க்கு அஞ்சேல். துன்பம் மறந்திடு தூற்றுதல் ஒழி. தெய்வம் நீ என் றுணர். தேசத்தைக் காத்தல
    a day ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
    humanbeing · humanbeing  Up Voted
  • பாலகுமார்  from Erode
    புத்தாண்டில் சபதம் ஏற்பது முக்கியம் இல்லை..... அடுத்த புத்தாண்டிகுள் எடுத்த சபதத்தை நிறைவேற்றுவதே முக்கியம்.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • muniyandi  from Angamali
    பேங்க் ஆபீசர் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக பிசினஸ் செய்ய ஆசைபடுகிறேன்.
    a day ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
  • subbu  from Chennai
    இனி புரோட்டா, பால் கலந்த காபி, டீ, சிக்கன், மட்டன் உண்பதில்லை
    2 days ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
  • S. Ramu,  from Pondicherry
    Everyone feels hard to adapt to a New Year Resolution but it is defenitely possible to do so. You may take a note of your group of friends, I am sure one or few persons would be different from others. Whatsoever the reason, they do not change their habit. Some may be short-temper, some may smoke, some may be addicted to Movies, Internet etc. Those who are addicted should look at the fine ones for a moment and then you could also become a good person. Do not say that the "Old Habits Die Hard" but emanate the good habits from your friends itself. After all, "Practice Makes the Man Perfect". May God Bless You All. With Best Wishes!
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Velram Ekambaram  from Bangalore
    தினமும் ஒரு மணி நேரமாவது தியானம் செய்ய வேண்டும்.
    2 days ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  • sathishkumar  from Bangalore
    ஸ்டேட் பேங்க் கஸ்டமர் சர்வீஸ் பாயிண்ட் வேலைய விடப்போறேன்
    2 days ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
  • sundar  from Bangalore
    இந்த வருடம் நான் இணையத்தில் தவறான படங்களை பார்க்க மாட்டேன்
    2 days ago ·   (15) ·   (0) ·  reply (1) · 
    humanbeing · humanbeing  Up Voted
    • T. siva  from Pondicherry
      அப்போ அடுத்த வருடம் ?!
      2 days ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • sakthiumamaheswari  from Klang
    நல்ல மனித பிறவியாக இருக்கவே விரும்புகிறேன்.....
    2 days ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
  • முத்துக்குமார்  from Singapore
    அம்மா,அப்பாவோட ஆசை இந்த வருசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்பா.,
    2 days ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • செல்வராஜ்  from Bangalore
    வன்முறையற்ற வளமான புத்தாண்டாக அமைய வேண்டும்
    Points
    140
    2 days ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • vetriveeran  from Singapore
    ஜனவரி: Named after the Roman god of beginnings and endings Janus (the month Januarius). Thursday was named after the god Thor. உங்கள் வாழ்க்கையில் நேற்றைப்போல் வருவதுதான் இன்றும். உங்களை மகிழ்சியுரசெய்யும் நாட்கள் பல உங்களுக்கு வரலாம். ஆனால் இன்று அல்ல. இன்று நீங்கள் கொண்டாடுவது கிரிகோரியன் காலண்டரின் ஆரம்பமான ஆரம்பகால ரோம மக்களின் கடவுள் நம்பிக்கையை . நாம் செய்யும் காரியங்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கவேண்டும் . அது அறிவு பூர்வமாக இருக்கவேண்டும். எல்லோரும் ஒரு செயலை செய்வதால் நானும் செய்கிறேன் என்பது சரியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
    Points
    6095
    2 days ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
    vetriveeran  Up Voted
  • ram  from Singapore
    டிவி , சினிமா, இன்டர்நெட் -ல் நேரம் செலவிடுவதை குறைத்து நல்ல தமிழ் புத்தகங்களை படிக்க முயற்சிக்கிறேன்.
    2 days ago ·   (14) ·   (0) ·  reply (0) · 
  • vetriveeran  from Singapore
    எதனை புத்தாண்டு என்கிறீர்கள் . என்னை பொருத்தவரை ஜனவரி 1 என்பது மற்ற நாட்களைப்போல் காலத்தை கணக்கிட உதவும் ஒரு நாள். மற்ற நாட்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் - அதிக மது அருந்துவது , அதிகமாக விபத்து ஏற்ப்பட்டு உயிரிழப்பு, இரவு தூக்கத்தை கெடுத்து ஆன் பெண் வித்தியாசமின்றி ஆட்டம் பாட்டம் . அடுத்து தமிழ் புத்தாண்டு அப்புறம் தெலுங்கு புத்தாண்டு பின்பு சீனப்புத்தாண்டு இஸ்லாமிய புத்தாண்டு இப்படி எத்தனை புத்தாண்டுகள் எத்தனை கொண்டாட்டங்கள் எத்தனை வீண் செலவுகள். காசிருப்பவருக்கு தினம் புத்தாண்டு காசில்லாத எழைபாளைகளுக்கோ தினமும் துக்க தினம். நாம் உண்மையில் உழைத்து உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைத்து பாதுகாப்போடும் மகிழ்ச்சியோடும் வாழும் அந்த நாளே எல்லா வகையிலும் மகிழ்ச்சிதரும் நாள். எனக்கு தெரிய அறுபது எழுபதுகளில் அங்கிலோ இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கொண்டாடப்பட்டுவந்த நாள் இப்போது விளம்பரப்படுத்தப்பட்டு மேற்கத்திய போலி மாயையினால் உருவாக்கப்பட்ட ஒரு வியாபார உக்தியே இந்த புத்தாண்டு தினம். நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். ஜனவரி முதல் தினம் உங்களுக்கு உண்மையில் மகிழ்சியைதருகிறதா ?
    Points
    6095
    2 days ago ·   (21) ·   (6) ·  reply (1) · 
    senbagapandian · senbagapandian  Down Voted
    • கௌசிக்  from Kassel
      ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு நொடியும் புதிதுதான் . கொண்டாடவேண்டுமெனில் வீணாக்காமல் இருக்க வேண்டும்.
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Srini  from Bangalore
    I should avoid Non-veg food.
    2 days ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
  • Srini  from Bangalore
    I should avoid Non-veg food.
    2 days ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
  • T. siva  from Srinagar
    அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி வர கடவுளை பிரார்த்திப்பேன்.
    Points
    41735
    2 days ago ·   (3) ·   (5) ·  reply (0) · 
    senbagapandian · senbagapandian  Down Voted
  • RAJ KUMAR  from Anaimalai
    இந்த வருடம் நான் கண்டிப்பாக என் தந்தை இன் கனவை நினைவக்குவேன் ... இந்திய குடிமை பணி தேர்வில் வெற்றி பெறுவேன் .
    2 days ago ·   (20) ·   (0) ·  reply (2) · 
    • panneerselvam  from Mannargudi
      வாழ்த்துகிறேன். மனத்தில் உறுதி இருந்தால் செயலில் உறுதி இருக்கும் .வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் உறுதியோடு உலகை வென்று எடுங்கள் - அ.த.ப
      2 days ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
    • surendran  from Madurai
      வாழ்த்துகள்
      2 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • ELIZABETH.Y  from Avanashi
    இந்த வருடம் கண்டிப்பாக கலக்டர் ஆகி விடுவேன் என் சேவைக்காக சமுகம் காத்திருக்கிறது ப்ரே FOR மீ எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    2 days ago ·   (20) ·   (0) ·  reply (0) · 
  • Anbarasan  from Bangalore
    பதவி உயர்வு வாங்க வேண்டும்


    நன்றி  - த இந்து