3.11.2011 வியாழன் அன்று ஈரோட்டில் ஒரே பரபரப்பு , ஈரோட்ல ஒரு கோயில்ல அம்மன் கண் திறந்து பார்த்ததா... இது நம்ம தமிழ் நாட்ல ஒண்ணும் புதுசில்ல.. பிள்ளையார் பாலை குடிச்சார்.. அம்மன் சிலை கண்ல இருந்து ரத்தம் வழிஞ்சதுன்னு ஏதாவது ஒரு பர பரப்பு நியூஸ் ஓடிட்டே இருக்கும்..அப்புறம் பார்த்தா அது ஏதாவது காரணத்துக்காக சொல்லப்பட்ட புரளியா இருக்கும், ஆனா ஜனங்க ஒவ்வொருதடவையும் கும்பலா போய் விழுவாங்க..
ஆனா இந்த டைம் இந்த நியூஸ் பரவுன அடுத்த நாள் கோயில் கலெக்ஷன் மட்டும் ரூ ஒரு லட்சத்து நாற்பதாயிரமாம்.. வழக்கமா அந்த கோயில்ல டெயிலி கலெக்ஷன் அதிக பட்சம் ரூ 400 தான் இருக்கும்.. அவ்வளவு ரஷ் வரக்காரணம் என்ன? ஒரு ஸ்பாட் விசிட் அடிச்சேன்..
ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் கில் இருந்து 2 கி மீ தொலைவில் ஈரோடு கோட்டை செங்குந்தர் கல்யாணம் மண்டபம் அருகே செங்குந்தர் சமூக திருமண மண்டபம் இருக்கு.. அதுக்கு பக்கத்துல பத்ர காளியம்மன் கோவில் இருக்கு.. அதுதான் ஸ்பாட்..
அடேங்கப்பா.. என்னா கூட்டம்? அங்கே போய் அம்மனை பார்த்தேன்.. எப்பவும் போல் தான் இருந்தது.. அக்கம் பக்கம் விசாரித்தேன்..
அந்த கோயிலுக்கு ஐம்பொன் சிலை செய்யப்போறாங்களாம்.. அதுக்கு பொருள் உதவி கேட்டு கோயில்லயே விளம்பரம் பண்ணியும் ஒரு ஆளும் கண்டுக்கலையாம்.. அதனால ஒரு விளம்பரத்துக்காக பூசாரி தான் இந்த ட்ரிக்கை செஞ்சாராம்..
பெரிய பெரிய தலைவருங்க கூட என் கனவுல அண்ணா வந்தார் , எம் ஜி ஆர் வந்தார் அப்படி சொன்னார்.. இப்படி செய்ய சொன்னார்னு சொல்லி மக்களை ஏமாத்தறப்ப சாதாரண பூசாரி அப்படி செஞ்சதுல என்ன தப்பு? என நினைக்கத்தோணினாலும் இது ஒரு சமுதாயத்தை ஏமாற்றும் குற்றமே..
இதுதான் கோயில்
அந்த விளம்பர போஸ்டர்
சப்போஸ் கடவுள் கண்ணை திறந்தால் நான் கேட்க விரும்பும் கேள்விகள்
1. கூடங்குளம் பிரச்சனைக்கு என்ன தீர்வு? மக்கள் உண்ணா விரதம் இருக்கறதும் அதை அரசியல் ஆக்கும் சிலர் ஆதாயம் கண்பதும் ஏன்?
2. பிரதமர் மன்மோஹன் சிங்க் உண்மையிலேயே ஒண்ணும் தெரியாதவரா? இல்லை அப்படி நடிக்கிறாரா?
3. இலங்கைத்தமிழ் அகதிகள்க்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? எல்லாரும் உங்கள் குழந்தைகள் என்றால் ஏன் அவங்க சாவதை வேடிக்கை பார்க்கறீங்க?
4. தமிழ் நாட்ல கலைஞர், ஜெ ஆகிய 2 தீய சக்திகளுக்கு மாற்று யாரும் இல்லையா? ஒருத்தர் மாற்றா வருவார்னு நினைச்சோம், அவர் வர்றேன் வந்துடுவேன், வரப்போறேன்னு சொல்லிட்டு வரவே இல்லை.. இன்னொருத்தர் எப்பவும் மப்புலயே இருக்கார்..
5. மாற்று அரசு அமையும்னு பார்த்தா தமிழ் நாட்ல எதையாவது டெயிலி மாத்திட்டே இருக்கற அரசாங்கம் அமைஞ்சிருக்கே.. அதுக்கு என்ன தீர்வு?
6. மாயாவதி மாதிரி சிலைப்பைத்தியங்களை நிஜமாவே சிலை ஆக்கிட்டா என்ன?
7. இந்த உலகத்துல பாரதியார், பக்த்சிங்க் போன்ற நல்லவங்க அல்ப ஆயுசுல போயிடறாங்க.. கெட்டவங்க, அட்டூழியம் பண்றவங்க நீண்ட நாள் நலமா வாழறாங்க.. அது ஏன்?