இடைவேளையே இல்லாத ஈகோ!
க.நாகப்பன்
சிச்சுவேஷன்-1
வில்லனின் மனைவி: ''நீங்க ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை... வெட்டுங்க அவனை.''
ஹீரோவின் நண்பன்: ''இவ என்னடா... நம்மளைக் கொல்றதைவிட, அவ புருஷனை ஜெயிலுக்கு அனுப்புறதுலயே குறியா இருக்கா. வேற எதுவும் கனெக்ஷனா இருக்குமோ?''
சிச்சுவேஷன்-2
ஹீரோவின் நண்பன்: ''இந்தக் காலத்துப் பொண்ணுங்க காபி
போடச் சொன்னா, யோசிச்சு ரொம்ப நேரம் ஆக்குவாங்க. ஆனா, 'கட்டிப்பிடி’ன்னா,
உடனே கட்டிப்பிடிச்சிடறாங்க.''
இரண்டு நிமிட டிரெய்லரிலேயே கலகலவென ஈர்க்கிறது 'ஈகோ’. வழக்கமான காதல்
ஃபீலிங்ஸ் இல்லாமல் சிரிப்புத் தோரணம் அமைத்திருக்கும் படத்தின் இயக்குநர்
சக்திவேல், 'மொழி’ ராதாமோகனிடம் சினிமா கற்றவர். ''ஈஸ்வர் - கோமதி
பெயர்களின் சுருக்கம்தான் 'ஈகோ’. ஒரு பொண்ணைத் திடீர்னு காணோம். குடும்பமே
அந்தப் பொண்ணைத் தேடும்போது, தேவை இல்லாம ஹீரோவும் அவன் நண்பனும்
அவங்ககிட்ட சிக்கிக்குறாங்க. அவன்தான் நம்ம பொண்ணைக் காதலிச்சுக்
கடத்தியிருக்கான்னு அந்தக் குடும்பம் தப்பா நினைச்சிடுது. 'உன்னால நான்
மாட்டிக்கிட்டேன்’,
'என்னால நீ கெட்டே’னு ஹீரோவும் ஹீரோயினும் ஈகோவுல
பொங்குறாங்க. அப்புறம் என்ன நடக்குதுனு காமெடியா சொல்லியிருக்கோம்.
'இடைவேளைக்கு முன், இடைவேளைக்குப் பின்’லாம் படத்துல எதுவும் பெரிய
வித்தியாசம் இருக்காது. 66 சீன்களும் காமெடிதான். முக்கியமா, படத்துல ஒரு
துளிக் காதல்கூட இருக்காது.''
''காதல் கிடையாது, முழுக்கப் புதுமுகங்கள்... இன்னுமொரு யதார்த்த சினிமாவுக்கான பரிசோதனை முயற்சியா?''
''இந்த ஃபார்முலா இப்போ பரிசோதனை முயற்சி எல்லாம் இல்லைங்க. இதுதான்
இப்போ ஹிட் மந்திரம். 'தென்மேற்குப் பருவக்காற்று’ விஜய் சேதுபதி,
'அட்டகத்தி’ தினேஷ், 'மைனா’ விதார்த் எல்லாம் அப்போ புதுமுகம். இப்போ ஒரே
படத்துல பளிச் அடையாளத்தோட வளர்ந்து நிக்கிறாங்களே.
அந்த நம்பிக்கையில்தான்
புதுமுகங்களோட களம் இறங்கியிருக்கேன். ஹீரோ வேலு, திருச்சிப் பையன்.
அமெரிக்காவில் சிவில் இன்ஜினீயரிங் படிச்சிட்டு வந்திருக்கார்.
அப்பாவித்தனமான, மொக்கை வாங்கிட்டே இருக்கும் கேரக்டருக்குப் பொருத்தமா
இருக்கார். ஹீரோயின் அனஸ்வரா, கேரளாப் பொண்ணு. சினிமா ஹீரோயினுக்கான எந்த
கிளாமரும் இல்லாம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி ஹோம்லி லுக்ல
ஈர்ப்பாங்க.
படத்துல ஹீரோகூட சந்தானம் மாதிரி படம் முழுக்க டிராவல் பண்ண வேண்டிய
கேரக்டர் ஒண்ணு இருந்துச்சு. 'கனாக் காணும் காலங்கள்’ பாலசரவணன் அதுக்கு
செட் ஆனார். தான் வர்ற ஒவ்வொரு சீன், ஷாட், டயலாக்னு எல்லாத்துலயும் பெஸ்ட்
கொடுக்கணும்னு உழைக்கிறார். வில்லேஜ், சிட்டினு எல்லா ஃபீல்டுக்கும் செட்
ஆவார். வசன உச்சரிப்பு, மாடுலேஷன், ரியாக்ஷன்னு பட்டையைக் கிளப்புறார்.
நிச்சயம் காமெடியன்கள் வரிசைல பாலாவுக்குப் பலமான இடம் இருக்கு.''
''அதென்ன... இப்போ எல்லா இயக்குநர்களும் காமெடி ரூட்லயே பயணிக்கிறீங்க?''
''நான் 'கந்தகோட்டை’ படத்தை ஆக்ஷன் சப்ஜெக்ட்டாதான் பண்ணேன். படம்
பார்த்தவங்க, 'ஆக்ஷன் சீக்வன்ஸ் நல்லா இருக்கு. ஆனா, அது விஜய் மாதிரி
ஆர்ட்டிஸ்ட்கள் பண்ண வேண்டிய படம். நகுல் பண்ணதுதான் மைனஸ்’னு சொன்னாங்க.
ஏத்துக்கிட்டேன். அதே சமயம், 'உங்களுக்குக் காமெடி நல்லா வருதே... அதை டிரை
பண்ணுங்களேன்’னு சொன்னாங்க. அந்தச் சின்ன லீடைப் பிடிச்சுட்டு 'ஈகோ’
பண்ணேன். ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தவங்க வாய் விட்டுச் சிரிச்சாங்க. அந்தச்
சிரிப்பு தியேட்டர்கள்ல அப்படியே ஆயிரம் மடங்கு எதிரொலிக்கணும்!''
நன்றி - விகடன்
டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம், நம்மாளு கேபிள் தான் இந்தப்படத்துக்கு வசனம் . சும்மா டைட்டில் அட்ராக்சனுக்காக , மற்றபடி ஈகோன்னா அவருக்கு என்னன்னே தெரியாது , ஜாலி டைப்