இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் முதல் படம் 2017ம் ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் வந்த மெல்லிசை ( புரியாத புதிர்) எனும் த்ரில்லர் படம். 2வது படம் தான் இது. டக்னு த்ரில்லர் ஜர்னர்ல இருந்து ரொமான்ஸ்க்கு ஏன் மாறினார்னு தெரில, ஆனா ரெண்டுமே நல்லா வருது அவருக்கு.
ஹீரோ ஒரு முன்கோபி.அதுக்குக்காரணம்,அவரோட அம்மா சின்ன வயசுலயே அவரையும், அப்பாவையும் விட்டுட்டு வேற ஒருவர் கூட வாழ்ந்ததுதான். அப்பா கூட மனஸ்தாபம்னா அவரை தண்டிக்கலாம், நான் என்ன தப்பு செஞ்சேன்? என்பதே அவரது கேள்வி
ஹீரோயின் பணக்கார வீட்டுப்பொண்ணு , சின்ன வயசுல இருந்தே ஒரு டொக்கு விழுந்த கன்னம் கொண்ட தகர டப்பா தலையனைக்காட்டி இவன் தான் உன் வருங்காலக்கணவன்னு சொல்லிடறாங்க
ஹீரோ ஹீரோயின் சந்திப்பு வழக்கம் போல மோதலில் ஆரம்பித்து காதலில் முடியுது.பொசசிவ்னெஸ் , முன் கோபம் , ரவுடித்தனம் போன்ற குணங்களால் ஹீரோயினுக்கு ஹீரோவால செம டார்ச்சர். இவங்க காதல் கை கூடுச்சா? பிரிஞ்சுதா? என்பதே பின் பாதி திரைக்கதை
ஹீரோவா ஹரீஸ் கல்யாண். இவரது கேரக்டர் ஸ்கெட்ச் பக்காவா இருக்கு , சரியா பாத்திரத்தை உணர்ந்து நடிச்சிருக்கார் . ஃபைட் சீன்கள் , ரொமான்ஸ் காட்சிகள் , சோக முகம் என எல்லா இடங்களிலும் சோபிக்கிறார்
ஹீரோயினா ஷில்பா மஞ்சுநாத், அழகிய முகம், ரொம்ப நாள் பழகிய பாவனை . விஜய் ஆண்ட்டனியுடன் காளி படத்தில் வில்லேஜ் கேர்ளாக வந்தவர் மாடர்ன் கேர்ளாக அசத்தி இருக்கார்
காமெடிக்கு பாலசரவணன், மகாபா ஆனந்த். ஓக்கே ரகம், அப்பாவாக பொன் வண்ணன் பக்குவப்பட்ட நடிப்பு
சாம் சி எஸ் இசையில் 2 பாட்டு தேறுது , பிஜிஎம் பாஸ் ரகம்
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங் சீனில் இருந்து முதல் 40 நிமிடங்கள் போர் அடி க்காமல் ஜாலி கலாட்டா காதல் என காட்சிகளை நகர்த்திய விதம், கலகலப்புக்கு பஞ்சம் இல்லை
2 வசனகர்த்தா பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். இயக்குநர் தான் வசனம் போல் , திரைக்கதை , வசனம் உதவி அவினாசி கே ராஜன்
3 படத்தின் டைட்டிலும் , முதல் பாதி திரைக்கதையும் கவிதை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தின் மெயின் தீம் ஹீரோவின் அம்மா கேரக்டர் பாதியில் விட்டுச்செல்வது ,அதில் தெளிவில்லை கணவன் சரி இல்லை என விட்டுச்செல்லும் பெண் எப்போதும் குழந்தையை தன்னுடன் தான் கூட்டிச்செல்வாள் ஆனா இதுல விட்டுட்டுப்போறார். குழந்தையும் என் கூட இருக்கும் , இஷ்டம்னா என் கூட வாழலாம்னு அந்த புது காதலன் கிட்டே கண்டிஷன் போடலாமே?
2 அப்பா கேரக்டர் ஸ்கெட்சும் தெளிவில்லை . அம்மா மேல தப்பில்லை என் மேல தான் தப்பு என தன்னிலை விளக்கத்தை க்ளைமாக்சில் சொல்பவர் முதலிலேயே சொல்லி இருந்தா மகனின் குணத்தை , பிடிவாதத்தை மாற்றி இருக்கலாமே?
3 பதிவுத்திருமணம் செய்ய அழைக்கும்போது மறுத்து அதுக்கு ஏதோ காரணம், சால்ஜாப் சொல்லும் நாயகி திருமணத்துக்கு முந்தைய தாம்பத்ய உறவுக்கு மட்டும் நோ சொல்லவில்லை . அதுவும் ஏதோ விபத்து போல ஒரு முறைன்னா பரவால்லை . பல முறை, ஆனா அப்பாவிடம் உறுதியாக காதலை சொல்லி சம்மதம் கேட்க ஏன் தயக்கம்?
4 கடைசி 40 நிமிடங்கள் திரைக்கதை குழப்ப ரகம், இயக்குநர் தடுமாறி இருக்கிறார். டீ டோட்டலரான ஹீரோ கஞ்சா அடிப்பது , க்ளைமாக்ஸில் நாயகியைக்கொலை செய்ய தீர்மானிப்பது எல்லாம் ஓவரோ ஒவர்
ரசித்த வசனங்கள்
1 இந்த உலகத்துல யரை அதிகமா நேசிக்கறீங்களோ அவங்களைத்தான் அதிகம் வெறுப்பீங்க , யாரை அதிகமா வெறுக்கறீங்களோ அவங்களைத்தான் அதிகம் நேசிச்சு இருப்பீங்க
2 எமோஷனாலா யார் கூடவாவது அட்டாச் ஆகிட்டேனா ஒண்ணு அவங்களை ஹர்ட் பண்றேன், அல்லது அவங்களால ஹர்ட் ஆகறேன்
3 நம்மை சுத்தி இருக்கறவங்களை நாம ஹர்ட் பண்ணாம இருக்கனும்னா நம்மை சுத்தி யாருமே இருக்கக்கூடாது அப்போதான் அது சாத்தியம்
4 இந்த ஒட்டு மொத்த வாழ்க்கைங்கறது உங்களுக்கு என்னவெல்லாம் ஞாபகம் இருக்கோ அது மட்டும்தான்
5 நான் உன்னை விட்டு விலகிட்டா , உன் கூட பேசலைன்னா உன்னப்பார்க்க வராமயே போனா அப்பவும் என்னை காதலிச்ட்டே இருப்பியா?
6 சைக்கோ சிரிக்கிறான் பாரு
செண்ட்டிமெண்ட் சீனை ஜோக்காப்பார்த்திருப்பான்
நம்மை எல்லாம் ஜோக்கர் ஆக்கித்தான் அவன் சிரிக்கிறான்
7 அசிங்கப்பட்டான் ஆன் லைன் சைக்கோ
தியேட்டர் வாசல்ல நின்னு ஆடியன்ஸ் கருத்து கேட்டு யூ ட்யூப்ல போட்டு சம்பாதிக்கறது எதிர்காலத்துல கவர்மெண்ட் ஜாப் ஆகப்போகுது பாரு
கவர்மெண்ட் ஜாப்பா? கவர்மெண்ட்க்கே ஜாப் இல்லை
8 லவ் பண்ற பையனுக்கு பைக், கார் எல்லாம் முக்கியம் இல்லை , லைக் , ஷேர் தான் முக்கியம்
9 உன் ஃபிரண்ட் என்னை பயங்கரமா அடிச்சிருக்கான்
ஓ அதான் மூஞ்சி இப்படி வீங்கி இருக்கா? உன் மூஞ்சியே இப்ப்டிதான்னு நினைச்ட்டேன், சாரி ப்ரோ
10 என்ன சார் ? காயம் எல்லாம் ஆறிடுச்சா? அந்த வீங்குன மூஞ்சில தான் நீங்க பார்க்கற மாதிரி இருந்தீங்க . நல்லான பின் நல்லாவே இல்லையே?
11 புண்ணுக்கு புதினா சட்னி வை சரியாகிடும்
12 கேரம் போர்டுல நாங்க எல்லாம் டெண்டுல்கர்டா
13 இந்த வரிக்கி எல்லாம் எங்கேய்யா வாங்கறெ? வட்ட வட்டமா பார்த்து போர் அடிச்சிடுச்சு அடுத்த டைம் ஸ்டார் டிசைன்ல வாங்கு
14 அவனைக்கூட்டிட்டு போறதும் பாகிஸ்தானுக்கு பாஸ்போர்ட் இல்லாம போறதும் ஒண்ணுதான்
15 ஏம்மா மின்னல் , உன்னைப்ப்பார்க்கும்போதெல்லாம் க்ரைம் சீன்லயே இருக்கியே? நீ யாரு ?
16 உனக்கு எதிரா அவ சாட்சி சொல்லிட்டா நீ ஜெயிலுக்குத்தான் போகனும்’’ நிஜமாவா?
பின்னே? பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்புவாங்கனு நினைச்சியா?
ரெண்டும் ஒண்ணுதான்
17 இருண்டு போன நம்ம வாழ்க்கையின் பக்கங்களுக்கு ஒளியூட்ட யாராவது வருவாங்க
18 காதல்ல இருக்கும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், ஏன்னா அது மீண்டும் ஒரு முறை கிடைக்காம கூட போய்டலாம்
19 விலங்குகள் எப்போவாவ்து லவ் ஃபெய்லிய்ர்னு புலம்பிட்டே இருக்கா?
20 நம்மை எது ஹர்ட் பண்ணுதோ அதுல இருந்து விலகி இருக்கனும்
விலகி இருக்கறதுதான் எனக்கு ஹர்ட் ஆகுது
21 பசங்க எல்லாம் ரப்பர் பேண்ட் மாதிரி ஒரு ஸ்டிட்ச் வரை இழுத்துட்டுப்போவானுங்க நாம லைட்டா திரும்பிப்பார்த்தா போதும் டக்னு பின்னால வந்துடுவாங்க
22 ஆண்கள் எப்பவுமே அன்பிரடிக்ட்டபிள் பர்சன்ஸ்.. எப்போ எப்படி மாறுவாங்கனு சொல்ல முடியாது
23 நாம ரெண்டு பேருல யார் தப்பு பண்ணினாலும் நான் தான் இறங்கி வந்து பேசனும் இல்ல ?
26 என்னைக்கு இருந்தாலும் நான் உனக்காக வருவேன்கறதை நி நம்பனும், வெயிட் பண்ணனும், அதான் லவ்
27 உலகத்துல லவ் பண்ற எல்லாருமே தங்களோடது மெச்சூர்டு லவ்தான்னு சொல்லிட்டு இருக்காங்க , ஆனா அது சில்லறைத்தனமானது
28 டி பி ல ஃபோட்டோ வைக்கறதுக்காக லவ் பண்றவங்க எல்லாம் இருக்காங்க
29 என் வாழ்க்கைல நீங்க ,மட்டும்தான்னு அவ சொன்னா
அப்படி எத்தனை பேர்ட்ட சொன்னாளோ?
30 போகனும்னு முடிவு ப்ண்ணிட்டா யாரும் யாரையும் பிடிச்சு எல்லாம் வைக்க முடியாது
31 பொண்ணுங்க உள்ளங்கைல இருக்கற தண்ணீர் மாதிரி , இறுக்கிப்பிடிக்கவும் கூடாது , அஜாக்கிர்தையா இருக்கவும் கூடாது
32 நீ பண்றதுக்குப்பேருதான் ஸ்டாக்கிங்
டேய் , முதல்ல ஸ்டாக்கிங்னா என்ன?னு எனக்கு சொல்லுங்கடா
ஒரு பொண்ணுக்குப்பிடிக்கலைனு தெரிஞ்சும் அவ்ளைத்ஹ்டொந்தரவு பண்றது
33 என் வாழ்க்கைல உனக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னா அது உன்னைப்பிரியறதுதான்
34 எல்லாத்தையும் சரி செய்ய வாழ்க்கை ஒரு வாய்ப்பு தரும்
35 ஈகோ இருக்கற இடத்துல அன்புக்கோ , காதலுக்கோ இடம் இல்லை
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் = காதலர்கள் விரும்பிப்பார்ப்பார்கள் , குறிப்பா நீ தானே என் பொன் வசந்தம் , குஷி , மாதிரி படங்களை ரசிப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம் . ரேட்டிங் 2. 5 / 5