Showing posts with label இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம். Show all posts

Friday, December 13, 2013

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

வில்லன் சட்டத்துறை அமைச்சர் . அவர் தம்பி ஒரு கொலைக்குற்றவாளி . அதுக்காக ஒரு கொலை தான் செஞ்சான்னு அர்த்தம் இல்லை , பல கொலை , கொள்ளை , ரேப் செஞ்சவன் தான் . காலம் பூரா தன் தம்பி ஜெயில்ல தான் களி சாப்பிடப்போறான்னு தெரிஞ்சுக்கிட்ட அமைச்சர் அட்லீஸ்ட் 15 நாளாவது ஜாலியா இருக்கட்டும்னு அவனை பரோல் ல கொண்டு வர்றாரு .

ஹீரோ  ஒரு சாதாரண ஆள் தான் . தன் கண் முன்னே நடக்கும்  சட்டக்கல்லூரியில் மாணவர்களை  ரவுடிகள் அடிப்பதைப்பார்த்து அதுக்குக்காரணமான அமைச்சரின் தம்பியை கிட்நாப் பண்ணி ஒரு  கட்டிடத்தில் அடைச்சு வெச்சுடறாரு . கெடு  முடிஞ்சதும் ஜெயில்ல அமைச்சரோட தம்பி இல்லாத மேட்டரை  ஹீரோவே ஃபோன் பண்ணி தகவல் தெரிவிக்கறார். நாடே பத்திக்குது , அமைச்சருக்கு பதவி போகுது . 


ஹீரோ வில்லனின் தம்பியை  ரிலீஸ் பண்ணிடறார். வெளில வந்த தம்பி ஹீரோயினை கடத்தி அதே போல்  ஒரு பில்டிங்க் ல வெச்சுடறார். இருவருக்கும் நடக்கும் சேசிங்க் தான் பின் பாதி பர பர திரைக்கதை . 

எங்கேயும் எப்போதும் இயக்குநரிடம் எனக்குப்பிடிச்சதே சமூக அக்கறையுடன் கூடிய ஒரு மெசேஜை  எப்படி கமர்ஷியலா சொல்லனும் என்ற வித்தை தெரிந்த ஷங்கர் தனம் தான் . அபாரமான திரைக்கதை . சீட் நுனியில் உட்கார வைக்கும் சம்பவங்கள் என கலக்குகிறார். பொதுவா முதல் படம் ஹிட் கொடுத்தவங்க 2 வது படத்தில் சறுக்கிடுவாங்க என்ற கோடம்பாக்க ஜோசியர்கள் கூற்றை சறுக்க வெச்சுட்டார். வெல்டன் சார் .




ஹீரோவா கும்கி ஹீரோ விக்ரம் பிரபு . ஆக்சன் ஹீரோவா  இவர் செஞ்ச முதல் படமே வெற்றி என்பது நல்ல விஷயம் . அதுக்காக அவர் ஓப்பனிங்க் பில்டப் , நம்ப முடியாத ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் நடிக்கலை . ஒரு இயக்குநரின் நடிகரா அளவா செஞ்சிருக்கார் 


புதுமுகம் சுரபி  முகத்தில் அமுத சுரபி . பால் மணம் மாறா பாலகி . தேகத்தில்  இளமை சுரபி . இவர் கொஞ்சல் லைலாத்தனமாய் , ஜெனீலியாத்தனமாய் லூஸாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார். ஏன்னா தமிழனுக்கு தன்னை எதிர்காலத்தில் லூஸ் ஆக்கப்போகும் பொண்ணை லூசாக்காட்டினா ரசிப்பான் . இவர் அணிந்து வரும்  உடைகள் கன கச்சிதம் . மிக கண்ணியமான உடைகள் . ஓப்பனிங்க் ஷாட்டில் ஸ்கிப்பிங்க் ஆடும்போது கூட கேமரா கண்ணீயம் காட்டி இருக்கிறது .  ( அந்த கண்ணியத்தில் இடி விழ )


 ஹீரோயினுக்கு தங்கையா மாளவிகா மேனன் . இவர் ஒரு அக்மார்க் ஃபிகர் . அதென்ன அக்மார்க்? மார்க் போடும் லெவலைத்தாண்டிய ஃபிகர் எல்லாம் அக்மார்க்  ஃபிகரே . இவர் செய்யும் குறும்புத்தனங்கள் , முக பாவனைகள் நிச்சயம் அடுத்த   படம் ஹீரோயினாகத்தான் செய்வார் என்பதை உறுதிப்படுத்துது . 


ஹீரோயினின் அம்மாவாக வரும் ஷர்மிளி யும்  வெரிகுட். 2 வில்லன்களும் சரி ஆக்டிங்க் . அதுவும் அமைச்சரின் தம்பியாக வருபவர்  போடும் சண்டைக்காட்சிகள் அபாரம் . ஸ்டண்ட் மாஸ்டர , ஆக்‌ஷன் சீக்வன்ஸ்  மேனேஜர் எல்லாருக்கும்  ஒரு ஷொட்டு.





 சபாஷ்  சத்யா 


1.  என்னை மறந்தேன் ,  பாடல் காட்சியில் ரசனையான  பல ஷாட்கள் . ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு . மொத்தம் மூன்றே பாடல்கள் எல்லாமே கேட்கும்படியே இருப்பது . இசை சி சத்யா. இவர் பாடலுக்கான இசையை விட பின்னணி இசையில் வல்லவராய் இருக்கிறார் . வரவேற்க வேண்டிய வரவு 


2  ஆக்‌ஷன் காட்சிகள் ராஜசேகரின் பேர் சொல்லுது . சத்யா , உதயம்  படங்களுக்குப்பின் சினிமாத்தனம் குறைந்த  புதுமையான ஸ்டண்ட் காட்சிகள் 


3   வில்லன்  ஹீரோயினை சோளக்கொல்லை பொம்மை போல் பில்டிங்கில் கட்டி வைப்பது பாரதிராஜாவின் ஒரு கைதியின் டைரி ஐடியாவின் இன்ஸ்பிரேசனாக இருந்தாலும் இது போல் ஒரு காட்சி தமிழ் சினிமாவில் வந்த மாதிரி தெரியலை .


4  முன் பாதி திரைக்கதையில் ஜாலியாக காதலைச்சொன்னது , நாட்டில் நடந்த சட்டக்கல்லூரி ரகளையை படம் ஆக்கியது , அந்த ஒன் லைனையே திரைக்கதையின் ஆதாரமாகக்கொண்டு சென்றது , பின் பாதியில்  பரபரப்பான சம்பவங்களால் படத்தை நகர்த்தியது எல்லாம் அபாரம் 

5  ஹீரோ - ஹீரோயின் ஹோட்டல் காதல் காட்சி , மாமா பொண்ணு கலாய்க்கும் காட்சி , ஹீரோயின் தங்கை ஹீரோவைக்கலாய்க்கும் காட்சி எல்லாமே ரசிக்க வைக்கும் பஞ்சாமிர்தம் 




 சொதப்பிட்டியே சொப்னா



1. கை கால்கள் கட்டப்பட்டு 2 நாளாகப்பட்டினியாக இருக்கும் ஒரு ஆள்  சும்மா கால்களாலேயே  கம்பியால் வாட்ச் மேனைக்கொல்லும் காட்சி நம்பவே முடியலை . அந்தளவு ஃபோர்ஸ் கால்கள் மூலம் எப்படி வரும் ? அதுவும் பலவீனமான உடல் நிலையில் , கால்கள் கட்டிப்போட்டிருக்கும்போது ? 


2  வில்லன் ஹாஸ்பிடலில் போய்  பேஷண்ட்டோட பழைய ரெக்கார்ட்ஸ் கேட்கும்போது ஹீரோ நைசாக அந்த லெட்ஜரை சுட்டுட்டு வந்துடறார். ஆனா ஒவ்வொரு அரசாங்க , தனியார் ஹாஸ்பிடலிலும்  அவுட் பேஷண்ட் ரிஜிஸ்டர்  சிஸ்டத்துல ஸ்டோர் பண்ணி வெச்சிருப்பாங்களே, வில்லன் ஏன் அதை கேட்கலை ? 


3 வில்லன் 5 நாட்கள் பட்டினியா இருந்து அரை குறை உயிரோட இருக்கும்போது  ஹீரோவுக்கு வரும்  ஃபோன் காலில் சொல்லப்படும் பேங்க் அக்கவுண்ட் நெம்பரை 12 டிஜிட்டை எப்படி  நினைவு வைத்து  பின் சொல்ல முடியும் ? அது 1ம் ஃபேன்சி நெம்பர் இல்லையே ,. சராசரி மனிதனால் நல்ல ஆரோக்யமான மன நிலையில் , உடல் நிலையில் 8 டிஜிட் நெம்பரை மட்டும் தான் நினைவு வைத்துக்கொள்ள முடியும் என டாக்டர் ரிப்போர்ட் சொல்லுதே ? 


4 ஹீரோ வில்லனை அடைச்சு வெச்ச பில்டிங்க் போகும்போது ஹீரோயின் ஃபோன் பண்ணி  பேங்க் அக்கவுண்ட் நெம்பர் சொல்றா. அது சரிதானா? அப்டினு செக் பண்ண ஹீரோ  ஒரு டைம் சொல்றார் . அதைத்தான் வில்லன்  நோட் பண்றார் . இது முக்கியமான காட்சி . திரைக்கதையின் முதுகெலும்பே இதுதான் . ஹீரோ எப்படி அவ்வளவு அசால்ட்டாக இருந்தார் . ஏம்மா அந்த அக்கவுண்ட் நெம்பரை எஸ் எம் எஸ் அனுப்பு அப்டின்னா வேலை  முடிஞ்சதே?


5 . பல கொலை , கொள்ளை , ரேப் செஞ்ச வில்லன் ஹீரோயினை மட்டும் அத்தனை நாள் சும்மா எப்படி வெச்சிருப்பான் ? ( ரேப்  சீன் வேணும்கறதுக்காக கேட்கலை )


6 வில்லனை அடைச்சு வைக்கும்  ஹீரோ அந்த சின்ன ரூம்ல இரும்புக்கம்பிகள் இருப்பதை அகற்றாமயா  போவார்? 


7 வில்லன் வாட்ச்மேனை கொலை பண்ணிடறார். டெட் பாடியை எடுக்க வந்த போலீஸ் அந்த பில்டிங்கை  ஏன் சுத்திப்பார்க்கலை ? சீல் வைக்கலை ?


 malavika menon

நச் டயாலாக்ஸ் 


1.  இந்தக்காலேஜ் ல உருப்படாத பசங்க 30 பேர் இருக்காங்க , எல்லாரும் மினிஸ்டர் ரெக்கமெண்டெஷன்ல வந்தவங்க தான் 


2  ஏண்டி , அவன் அதுக்காகத்தான் அங்கே வந்தானா? 

 யாருக்குத்தெரியும் ? வேற எதுக்காகவும்  வந்திருக்கலாம் 



3  உனக்கு இது முதல் விளம்பரம் , எனக்கு இது 561  வது , 22 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் 


 அப்போ  உங்களுது 22 வருச ம் பழசான  ஐடியான்னு அர்த்தம்  ( இந்த வசனம்  இயக்குநரின் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவம் ) 


4 ஐ , என் சைன் அப்டியே நீ போட்டுட்டே? 

 ஏய் , லூசு , மாலினின்னு யார் எழுதுனாலும் இப்டித்தான்  இருக்கும் 



5  நல்ல பொண்ணாப்பாரு 

 இதுவே நல்ல பொண்ணுதான் 


 எப்டி சொல்றே?

 20 நிமிஷமா அவ செல்லுக்கு நோ எஸ் எம் எஸ் , நோ கால் , இதை விட என்ன வேணும் ? இந்தக்காலப்பொண்ணுங்களுக்கு 10 நிமிஷத்துக்கு ஒரு கால் வரும் 



6  அவனை ஃபாலோ பண்ணி நல்லவன்னு தெரிஞ்ச பின் ஐ லவ் யூ சொல் , அவசரப்படாதே 


 ஃபாலோ பண்ணும்போது நல்லவனா  இருந்து , காதலிச்ச பின் கெட்டவன் ஆகிட்டா ? 

 சுத்துனவரை லாபம்னு கழட்டி விட்டுடு 


7  வாசத்துல என்ன ஆண் வாசம் , பெண் வாசம்?னுட்டு , எல்லா செண்ட்டும் எல்லாரும் உபயோகிக்கலாம் தானே? 


 நோ நோ . ஆணுக்குப்பிடிச்ச வாசத்தை பொண்ணும் , பொண்ணுக்குப்பிடிச்ச வாசத்தைப்பையனும் செண்ட் அடிச்சுக்குவாங்க 


8 நம்பிக்கைத்துரோகம்கறது  வீட்ல  இருந்துதான் ஆரம்பிக்குது


9  அவனைக்கொல்லனும்,. அதுவரை என்னை மறக்கடிக்கும் எந்த சந்தோசத்தையும் நான் அனுபவிச்சுடக்கூடாது 


10  தப்பு பண்ணிட்டோ , பண்ணாமயோ ஜெயிலுக்குள்ளே வரும் எல்லாரும் அசிங்கபட்டே ஆகனும் 

 சி பி கமெண்ட் = எல்லா செண்ட்டர் ரசிகர்களுக்கும் பிடிக்கும் ., பி சி செண்ட்டர்களில்  பொங்கல் வரை, ஏ செண்ட்டர்களில் அதைத்தாண்டியும் ஓடும் 
இவன் வேற மாதிரி - கமர்ஷியல் ஆக்சன் = பின்பாதி திரைக்கதை பரபர பட்டாசு அரங்கம்அதிரும் கைதட்டலுடன் - 


ஆனந்த விகடன் மார்க் =44 ,

குமுதம் ரேங்க்கிங்க் = நன்று 


ரேட்டிங் = 3.25 / 5.



ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் .  நல்ல ஓப்பனிங்க் . பிளாக்கில் டிக்கெட் விக்கலை . கவுண்ட்டர் டிக்கெட் தான் , பால்கனி  100  ரூபா .