Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Tuesday, June 02, 2015

இசைஞானி’ இளையராஜா

இளையராஜா
இளையராஜா
திரைஇசை உலகில் முடிசூடா மன்னராக விளங்கும் பிரபல இசை அமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா (Ilaiayaraaja) பிறந்த தினம் இன்று (ஜூன் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் (1943) பிறந்தவர். இயற்பெயர் ராசய்யா. சிறு வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்கள் 3 பேருடன் சேர்ந்து சுமார் 20 ஆயிரம் கச்சேரிகள், நாடகங்களில் இசை அமைத்தார்.
l திரைப்படத்துக்கு இசை அமைக்கும் ஆர்வத்தில் 26 வயதில் சென்னை வந்தார். தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணி பியானோ, கிடார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
l ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976-ல் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்தான் இவருக்கு ‘இளையராஜா’ என்று பெயர் சூட்டினார். இந்த படத்தின் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல், அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.
l தொடர்ந்து ‘பதினாறு வயதினிலே’, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ ஆகிய படங்களில் நாட்டுப்புற மணம் கமழ வலம்வந்த இவரது இசை, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. கர்னாடக இசையிலும் பல பாடல்களை அமைத்து புகழ்பெற்றார்.
l முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் இசை அமைத்தவர். பல ராகங்களை உருவாக்கியுள்ளார். ஏராளமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
l இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 1993-ல் லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசை அமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
l பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றுள்ளார்.
l தாய் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டு பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் படங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் நடுவே உள்ள தனது அன்னையின் படத்தைக் கும்பிட்டுவிட்டே இவர் தனது நாளைத் தொடங்குவார். தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார்.
l ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். பல நூல்கள் எழுதியுள்ளார். ஆர்மோனியம் இல்லாமல் சிந்தித்தபடியே டியூன் போடக்கூடியவர். கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, பென்சில் டிராயிங் வரைவது, புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஃப்ரேம் செய்து மாட்டுவது ஆகியவை பொழுதுபோக்குகள். மதுரை பொன்னையா செய்துதந்த ஆர்மோனியப் பெட்டி இவரது இசைத்தோழன்.
l இவரது வாரிசுகளும் இசை அமைப்பாளர்களாகப் புகழ்பெற்று தந்தைக்குப் பெருமை சேர்க்கின்றனர். இசைஞானி, ராகதேவன் என்றெல்லாம் போற்றப்படும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்றும் வெற்றி நடைபோடுகிறது.


நன்றி - த இந்து

Wednesday, April 01, 2015

3 முதல் இரவு கண்ட முத்தமிழ் இசை வித்தகர் யுவன் பேட்டி

தனது முடிவுகளுக்கு அப்பா (இளையராஜா) ஒருபோதும் தடை விதித்தது என்று கூறிய யுவன் சங்கர் ராஜா, 1,000 படங்களுக்கு இசையமைத்த தன் தந்தைக்கு தமிழ்த் திரையுலகம் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று கவலை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் மே 9-ம் தேதி நடைபெறவுள்ள 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' இசை நிகழ்ச்சி தொடர்பாக, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு கலந்துகொண்ட முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா கூறியது:
"யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' முதலில் ஒரு தேதியில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பிரம்மாண்டமாக பண்ண வேண்டும் என்று தீர்மானித்து தேதியை மாற்றி அமைத்திருக்கிறோம். வேறு காரணங்கள் எதுவும் இல்லை.
இந்நிகழ்ச்சியில் எனது படங்களில் இருந்து பாடல்கள் இடம்பெறும். அப்பா இளையராஜா, இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி என அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மற்றும் வேறு யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முறைப்படி அறிவிக்கிறோம்.
'மாஸ்' படத்தைப் பொறுத்தவரையில் தமன் இசையமைக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. உண்மையில் நடந்தது என்னவென்றால், இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் தமன் 'நான் யுவனின் இசையில் பணிபுரிய ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டிருக்கிறார். வெங்கட்பிரபு என்னிடம் கேட்ட போது, ஏதாவது நல்ல சந்தர்ப்பம் வரும் போது பண்ணலாம் என்று கூறினேன். 'மாஸ்' படத்தில் நயன்தாரா தேதிகள் உடனே கொடுத்துவிட்டதால், பாடல் உடனே வேண்டும் என்று கேட்டார்கள். ஆகையால், அப்பாடலுக்கு மெட்டு அமைத்தது நான், அந்த மெட்டுக்கு இசை வடிவம் தமன் கொடுத்தார்.
திருமணம் குறித்து கேட்கிறீர்கள். என்னுடைய திருமண வாழ்க்கை நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. என்னுடைய திருமணம் எனது அப்பா சம்மதத்துடன்தான் நடைபெற்றது. திருமணத்தில் அப்பா கலந்துகொள்வதாக தான் இருந்தது. ஆனால், பெண் வீட்டு தரப்பில் இருந்து உடனடியாக திருமணம் என்று பேச்சு நிலவியது. ஆகையால், நான் அப்பாவிடம் போன் போட்டு சொன்னேன். இரண்டு நாளில் திருமணம் என்றால் என்னால் கலந்து கொள்ள முடியாது. கண்டிப்பாக சென்னை வந்தவுடன் சந்திக்கலாம் என்றார். திருமணமான மறுநாளே சென்னை வந்தவுடன் அப்பாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினேன். ஆனால், என்னுடைய திருமணத்தில் அப்பா கலந்து கொள்ளாத வருத்தம் எனக்கு இருக்கிறது.
மதம் மாறியது பற்றி கேட்கிறீர்கள். படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்த தருணத்தில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரைத் தான் வைத்திருக்கிறார். ஆனால், கீ-போர்ட் ப்ளேயராக இருக்கும் போது திலீப் குமார். இப்போது நான் மதம் மாறிவிட்டாலும், யுவன் என்ற பெயரை மாற்றினால் நன்றாக இருக்காது என்பதால் பெயரை மாற்றவில்லை. அப்பா எனது முடிவுகளுக்கு எப்போதுமே தடை போட்டதில்லை. மதமாற்றம் குறித்து எல்லாம் அப்பா எதுவுமே தெரிவிக்கவில்லை.
நான் ஆரம்பித்தில் இருந்தே தனியாக இருந்து பழகிவிட்டேன். சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. ஆகையால், ஒரு பாதுகாப்பான கூடுக்குள் என்னை அடைத்துக் கொண்டேன். மற்றபடி, பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயங்குவதற்கு வேறு எதுவும் காரணமில்லை.
நான் இசையமைக்கும் போது ட்விட்டர் தளத்தில் உள்ள கருத்துக்கள் அவ்வப்போது வந்து போகும். ஆகையால், ஏன் என்று விலகியிருந்தேன். இப்போது இன்ஸ்டாக்ராமில் மட்டுமே இருக்கிறேன். விரைவில் மீண்டும் ட்விட்டர் தளத்துக்கு திரும்ப இருக்கிறேன்.
ஒரு வருடத்துக்கு 14 படங்களுக்கு எல்லாம் இசையமைத்திருக்கிறேன். இந்த வருடம் 'இடம் பொருள் ஏவல்', 'மாஸ்', 'யட்சன்', 'தரமணி', 'செல்வராகவன் படம்' ஆகிய படங்களுக்கு இசையமத்து வருகிறேன். இனிமேல் படங்களை தேர்வு செய்து பண்ணலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். விரைவில் இசை நிறுவனம் ஒன்று ஆரம்பித்து, அந்நிறுவனம் மூலத்தின் எனது இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்.
என் அப்பா 1000 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதையொட்டி, அவருக்கு தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட விழா எதையும் நடத்தாததில் எனக்கு மிகுந்த வருத்தம் உள்ளது" என்றார் யுவன் சங்கர் ராஜா.

நன்றி - த இந்து

  • இந்து மதத்தில் இல்லாததை இஸ்லாத்தில் என்ன கண்டார் என்பது விளங்கவில்லை. ஏ.ஆர். ரகுமான் இசை அமைப்பதற்கு முன்பே மதம் மாறிவிட்டார். மொத்தத்தில் எது இந்து மதத்தில் கிடைக்கவில்லை என்று இவர்கள் மதம் மாறினார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும் - கண்ணன் ஸ்ரினிவாசலு.
    Points
    960
    about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Chandren  from Mumbai
      பழயதை மறந்து விடுங்கள் யுவன். நீங்கள் விட்டு சென்ற இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் உள்ளது. அதை வேறு யாராலும் நிரப்ப முடியாது. குடும்பம் மற்றும் இசையில் நிறைய கவனம் செலுத்துங்கள். இறைவனிடம் ஐக்கியமாய் விடுங்கள். அமைதி கிடைக்கும். எங்களுக்கு நல்ல மெலோடீஸ் கிடைக்கும். நன்றி. வாழ்த்துக்கள் பல கோடி.
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Chandren  from Mumbai
        யுவன் பழயதை மறந்திடவும். உங்கள் இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் உள்ளது. உங்களிடமிருந்து நிறைய மெலோடீஸ் . எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் யுவன்.
        a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • DEVKUMAR ARUMUGAM  from Dubai
          இசை ஞாநிக்கு நிகர் அகில உலகில் எவரும் இல்லை . தேவ லோகம் உண்மை எனில் இவர் இசை தான் அங்கும் இசைக்கப்படும்
          Points
          400
          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Jalilmohamed Riyadh at Riyadh, KSA from Ad Dammam
            யுவன் நீ முஸ்லிம்ஆகியதால் இஸ்லாத்திற்கு எந்த உயர்வும் இல்லை.மற்றவர்கள் இஸ்லாத்தை ஏற்காதளால் இஸ்லாத்திற்கு எந்த குறைவும் இல்லை.யார் நேரிய வழியில் வாழவேண்டும் என்று நினைத்து தன்வாழ்வை அதன்பிரகாரம் அமைத்துக்கொண்டு செயல்படுகிறாரோ.அவருக்கு நிச்சயம் இறைவனின் உதவியும் நேரியவழியும் கிட்டும்.நேசமுடன் ஜலால்
            Points
            1155
            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Siva Murugan  from Pasadena
              "யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்" வெற்றியடைய வாழ்த்துக்கள்.சவ yuvan
              a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • P.Renganathan  from Bangalore
                யுவன் நீங்கள் யோக்கியதையான தந்தைக்கு பிறந்த ஒரு தப்பான பிள்ளை.
                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • P.Renganathan  from Bangalore
                  யுவன் நீங்கள் யோக்கியதையான அப்பாவிற்கு பிறந்த தப்பான பிள்ளை.
                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Vijay  from Chetput
                    "1,000 படங்களுக்கு இசையமைத்த தன் தந்தைக்கு தமிழ்த் திரையுலகம் உரிய மரியாதை செலுத்தவில்லை என்று கவலை தெரிவித்தார்." ... அவர் "isainiyani " இந்த பாராட்டு ,மரியாதைக்கு எல்லாம் கவலை பட மாட்டார் ,தமிழ்நாடு இசை கு அவர் தான் நிரந்தர ராஜா ...கல்யாணத்துக்கு அப்பா வர வரைக்கும் கூட வெயிட் பண்ணாத நீங்க பாராட்டு ,மரியாதை பத்தி பேசாதிங்க ...
                    a day ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
                    baarzini  Down Voted
                    • Shankar  from Bangalore
                      தற்கு பெயர்தான் தண்ணி தெளிச்சு விட்டது என்று.
                      Points
                      15785
                      a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                      Indian · NAVEEN  Up Voted
                      • Dilli Babu  from Chennai
                        யுவன் இந்த இளம் வயதிலேயே நூறு படங்களுக்கு இசை அமைத்துவிட்டார். திருமணம், ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் யாரும் தலையிடக்கூடாது "யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்" வெற்றியடைய வாழ்த்துக்கள்.
                        Points
                        6155
                        a day ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
                        baarzini  Up Voted
                        பாலா · NAVEEN  Down Voted
                        • Venkat  from Chennai
                          அப்பாவின் பேச்சை யார் கேட்கிறார்கள். அதேதான் பின்னாளில், நீங்கள் எப்படி இருந்திர்களோ அதேதான் உங்கள் பிள்ளையும் வரும்.
                          Points
                          2085
                          a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                          Indian  Up Voted
                          • Saravanan  from Bangalore
                            /மதமாற்றம் குறித்து எல்லாம் அப்பா எதுவுமே தெரிவிக்கவில்லை/ - ஒரு பக்திமான், மதம் மாறிய தன் பிள்ளைக்கு என்ன கூற முடியும். அண்ணாமலையானே நீ தான் துணை.
                            Points
                            9525
                            a day ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
                            Indian  Up Voted
                            • Sudhagar  from Bangalore
                              நல்ல புள்ளை பொறந்து இருந்த நல்ல புத்தி சொல்லலாம் நாலாவது துணை தேட போகும் ஒருவருக்கு எப்படி தடை சொல்ல முடியும் ,எல்லாம் ரத்தம் சுண்டிய பிறகு தெரியும் தம்பி ..
                              Points
                              1150
                              2 days ago ·   (2) ·   (5) ·  reply (0) · 
                              Rathi · Indian  Up Voted
                              Dilli-Babu · Dilli-Babu · Siva · nallavan · Thamim  Down Voted
                              • Kanan  from Bangalore
                                தனது /முடிவை/தானே தேடும்போது அப்பா என்ன செய்வார்? (அடுத்த ஜோடி பவுத்தரா அல்லது சமணரா?) ரமணர் பக்தரான அப்ப சர்வமத சமரசம் எல்லாக் கடவுளும் ஒன்றே என்பதை சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டாரே
                                Points
                                4105
                                2 days ago ·   (5) ·   (6) ·  reply (0) · 
                                spshanmuganathan · parthi · pamaran · Indian · kumar  Up Voted
                                Dilli-Babu · Dilli-Babu · raam · Siva · nallavan · indian  Down Voted
                                • Sankar  from Bangalore
                                  உம்முடைய தந்தைக்கு உரிய மரியாதையை செலுத்த நீர் முதலில் கற்றுகொள்ளும். பிறகு மற்றவரை பற்றி பேசலாம்.
                                  Points
                                  1400
                                  2 days ago ·   (8) ·   (9) ·  reply (0) · 
                                  sudhagar · sudhagar · spshanmuganathan · parthi · Indian · vijay · NAVEEN · kumar  Up Voted
                                  Dilli-Babu · Dilli-Babu · Sahoo · Sahoo · raam · Siva · nallavan · Thamim · indian  Down Voted
                                  • Azar Rikkash...  from Dubai
                                    எனக்கு பிடித்த கம்போசெர் யுவன்...யுவனின் இசை அனைவரையும் ஈர்க்கும்...அப்பனை போல் பிள்ளை என்று சொல்லுவாங்க...அதே இசைஞானம் இருக்கிறது இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை...அவரின் முடிவு சரியானது...இந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... இசைஞானி இளையராஜா ஒரு சிறந்த இசைஅமைப்பாளர்...அனால் அவரைபாராட்டி ஒரு விழா கூட நடத்தவில்லை...நல்ல திறமையான மனிதர்களுக்கு பாராட்டு கிடைப்பதில்ல..ஏன் என்று தெரியவில்லை...அய்யா&யுவன்...நீடோடி வாழ்க...இவர்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்...
                                    2 days ago ·   (9) ·   (10) ·  reply (0) · 
                                    Gummu-Kumar · Gummu-Kumar · Dilli-Babu · Dilli-Babu · raam · nallavan · Thamim · abu · indian  Up Voted
                                    sudhagar · sudhagar · JAYASRI · spshanmuganathan · parthi · GOVINDARAJAN · Mohan · Thiyagarajan · NAVEEN · kumar  Down Voted
                                    • பாலா  from Mumbai
                                      திருமணத்துக்காக மதம் மாறுபவர்களை நான் துளிகூட மதிப்பதில்லை!
                                      Points
                                      33425
                                      2 days ago ·   (8) ·   (5) ·  reply (3) · 
                                      பாலா · JAYASRI · parthi · GOVINDARAJAN · pamaran · Thiyagarajan · Indian · kumar  Up Voted
                                      Dilli-Babu · raam · Siva · nallavan · Thamim  Down Voted
                                      • Mu. Raajaangam  from Kuwait
                                        நீங்கள் அவசியம் மதிக்கவேண்டும் என்று அவர் என்றும் சொன்னதில்லை....
                                        2 days ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
                                      • Thanigai K  from Bangalore
                                        ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனத்துக்கு உள்ளாக்கவேண்டம். மதம் மாறுவதும் திருமணம் செய்வதும் அவருடைய தனிப்பட்ட செயல். இசையை மட்டும் பார்போம்
                                        2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                        • Dilli Babu  from Chennai
                                          ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் யாரும் தலையிடக்கூடாது(திருமணம்)
                                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                        • Aru  from Panvel
                                          Yenrum raja tamil makalin manadil villa nayagan...
                                          2 days ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
                                          parthi  Up Voted
                                          spshanmuganathan  Down Voted
                                          • கோபாலகிருஷ்ணன்  from Doha
                                            செல்வாவுடன் யுவன் மீண்டும் இனைவது மகிழ்ச்சியளிக்கிறது. மணிரத்னம் மற்றும் ரஹ்மான் போன்று இவர்களது கூட்டணிக்கு பெரிய வரவேற்பு உள்ளது.
                                            2 days ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
                                            Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · reefa  Up Voted
                                            GOVINDARAJAN  Down Voted
                                            • கோபாலகிருஷ்ணன்  from Doha
                                              செல்வாவுடன் மீண்டும் இனைவது மகிழ்ச்சியளிக்கிறது, மணிரத்னம் ரஹ்மான் மாதிரி உங்களது கூட்டணிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
                                              2 days ago ·   (10) ·   (1) ·  reply (0) · 
                                              GOVINDARAJAN  Down Voted
                                              • R.M.Manoharan Manoharan  from Coimbatore
                                                சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வனாதன் , இளையராஜாபோன்றோர் பாராட்டுக்கும், விருதுக்கும் மேற்பட்டவர்கள். முன்னாள் முதல்வர் ஜே. பீச் ரோடில் அமைக்கப்பட்ட சிவாஜி கணேசன் சிலயை தூக்கி எறிந்தார். அதுபோல் உங்களுடைய அப்பாவுக்கு ஏதும் நடவாதிருந்தால் அதுவே நல்லது. வீண் பாராட்டிற்கு ஏங்க வேண்டாம். சிவாஜி சிலையை தூக்கி எறிந்தவர் முதல்வர் பதவியிலிருந்து இன்று தூக்கி எறியப்பட்டுள்ளார். அதையும் கவனத்தில் கொண்டு சாந்தி பெறுங்கள் யுவனே!
                                                Points
                                                6420
                                                3 days ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
                                                spshanmuganathan · reefa · nallavan · GOVINDARAJAN · senthamillselvan · Thamim  Up Voted
                                                • Karthik Yuvan ELECTRICAL ENGINEERING. at Kwaseb from Sajir
                                                  Yeppothumea, yuvan is no 1 place da
                                                  3 days ago ·   (6) ·   (3) ·  reply (0) · 
                                                  reefa · senthamillselvan · Thamim · abu · abu · abu  Up Voted
                                                  saravanan · spshanmuganathan · NAVEEN  Down Voted
                                                  • Karthik Yuvan ELECTRICAL ENGINEERING. at Kwaseb from Sajir
                                                    Its my god yuvan.
                                                    3 days ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
                                                    reefa · abu  Up Voted
                                                    spshanmuganathan · NAVEEN  Down Voted
                                                    • Hydrooss Tamilan  from Kuwait
                                                      //சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. ஆகையால், ஒரு பாதுகாப்பான கூடுக்குள் என்னை அடைத்துக் கொண்டேன்.// இதற்கு மேலும் யுவனின் தனி வாழ்க்கை பற்றி பேசினால் அது நல்லதல்ல
                                                      Points
                                                      25995
                                                      3 days ago ·   (12) ·   (5) ·  reply (0) · 
                                                      Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Dilli-Babu · Sahoo · reefa · hydrooss-Tamilan · nallavan · senthamillselvan · Thamim · abu  Up Voted
                                                      saravanan · JAYASRI · spshanmuganathan · parthi · kumar  Down Voted
                                                      • Chandraa  from Anekal
                                                        WHY DID THE GIRLS SIDE COMPELL YOU MR YUVAN THEY WOULD HAVE WAITED FOR YOUR FATHERS DATE