வழக்கம் போல் மரபு மாறா அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோவின் அடையாளமா ஹீரோ ஒரு வெட்டாஃபீஸ்.. அப்பா திட்டிட்டே இருக்காரு.. ஏதாவது ஒரு வேலைக்கு போ,.. இல்லை இடத்தை காலி பண்ணுன்னு ஜெ ராம்தாசை கேவலப்படுத்துன மாதிரி விரட்றாரு.. ஹீரோ பட்டணம் வர்றாரு..
ஹீரோயினும் ஒரு ஓடுகாலிதான்.. பாப்பா ஃபேஷன் கேர்ள் அல்லது மாடலிங்க் கேர்ள் ஆகனும்னு ஆசை.. வீட்ல மேரேஜ் ஏற்பாடு நடக்குது.. விட்டா போதும்னு இதுவும் ஓடி வந்துடுச்சு..
பாருங்க.. ஜாதகப்பொருத்ததை.. 10 பொருத்தமும் பொருந்துன மாதிரி
1. வீட்டுக்கு அடங்காதவங்க 2. கைல 10 காசு 2 பேர்ட்டயும் இல்லை 3. வீண் ஜம்பத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை..
இதுக்கு மேல என்ன வேணும்?
மார்வாடிக்கடைல ஹீரோயின் தங்கநகைன்னு சொல்லி கவரிங்க் நகையை விக்கறாங்க.. உலகத்துலயே அப்படி ஒரு ஏமாளி சேட் இருக்கா மாட்டார்..
அப்புறம் ஒரு ஷோ ரூம்ல போய் வாஷிங்க் மெஷினுக்குள்ளே 10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை அபேஷ் பண்ணிட்டு வந்து பிலாட்ஃபார்ம்ல வந்த ரேட்டுக்கு தள்ளி விடறாங்க..
அந்த ஷோ ரூம் ஓவர் தான் வில்லன்.. கோடி கோடியா சம்பாதிச்சாலும் இந்த பிசாத்து 10 லட்சம் ரூபா போனதுக்கு என்னமோ தன் குல கவுரவமே போன மாதிரி கவலைப்படறான்..
தேடுதல் வேட்டை நடக்குது.. இப்போ ஒரு போலீஸ் ஆஃபீசர் எண்ட்ரி.. எப்படியாவது இந்த 2 கேடிகளையும் பிடிச்சே தீருவேன்னு ஆடியன்ஸை பார்த்து சொல்றாரு.. இடைவேளை
வில்லன் போதை மருந்து பிஸ்னெஸ் பண்றவன்.. இண்டர் நேஷன்ல் கிரிமினல்.. கலைஞரை விட 10 மடங்கு டேலண்ட்டான ஆள்.. அப்படிப்பட்டவனை ஹீரோ மளிகைக்கடைல மைதா மாவு பாக்கெட் 5 வாங்கி அதை அபின்னு சொல்லி விக்கறார்.. அந்த கேன வில்லன் அதை வாங்கி கோடிக்கணக்கான பணத்தை லூஸ் மாதிரி தர்றார்..
உண்மை தெரிஞ்சதும் கேப்டன் மாதிரி கண் எல்லாம் சிவக்குது.. எப்படியாவது ஹீரோவை பிடிச்சே தீருவேனு சொல்லிட்டே இருக்கார்..
இப்போ திடீர்னு டைரக்டர்க்கு ஒரு டவுட்.. இவ்ளவ் கேனத்தனமா திரைக்கதை இருக்கே.. செண்ட்டிமெண்ட் கொஞ்சம் சேர்த்தா என்ன? உடனே ஹீரோ ஏமாத்தி சேர்த்த பணத்தை எல்லாம் பஸ்ல பார்த்த முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஒரு 8 வயசுப்பொண்ணோட ஆபரேஷன் செலவுக்கு உதவி பண்றாங்க ( ராபின் ஹூட் இமேஜ்)
இந்த மொள்ளமாரி ஹீரோவை, முடிச்சவுக்கி ஹீரோயினை அந்த கேன வில்லனோ, லூஸ் போலீஸ் ஆஃபீசரோ பிடிச்சாங்களா? இல்லையா? என்பது தான் கேவலமான க்ளைமாக்ஸ்,..
இதுல செம காமெடி என்னன்னா க்ளைமாக்ஸ்க்கு 2 ரீல் முன்னால ஹீரோயின் சசிகலா மாதிரி திடீர்னு திருந்திடுது.. ஹீரோ கிட்டே சொல்லுது.. இதுவரை நாம செஞ்ச தப்பு எல்லாம் போதும்.. இனிமே தப்பு பண்ணக்கூடாது.. ( தப்புன்னா கில்மா தப்பு இல்லை.. திருட்டு )
ஹீரோவும் மண்டையை மண்டையை ஆட்டறான்..
ஹீரோ எனக்கு 20 உனக்கு 18 உன் தங்கச்சிக்கு 16 , உங்கம்மாவுக்கு 38 அப்டினு ஒரு படம் த்ரிஷா நடிக்க வந்ததே அந்த ஹீரோ தருண்.. நடிக்க எல்லாம் வாய்ப்பே இல்லை.. இருக்கற கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்துக்குவாரு.. ஹீரோவுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன்.. நல்ல படம் கிடைச்சு நல்ல பேரு வாங்கறதை விட முக்கியம் ஏதோ சான்ஸ் கிடைக்குதேன்னு குப்பைப்படத்துல நடிச்சு கெட்டபேர் வாங்கிக்க கூடாது
ஹீரோயின் உடுக்கு இடை அழகி இலியானா.. இவரு தம்னா மாதிரி எழுமிச்சை நிறத்தவர் அல்ல.. இருந்தாலும் இவர் ஒரு லெமன் அழகிதான் .. ஹி ஹி .. இலந்தைப்பழச்சிவப்பு உதட்டு அழகி, தொப்பை போடாத மிகச்சில நடிகைகளில் இவரும் ஒருவர்.. மற்றபடி நடிப்பு பற்றி எல்லாம் மூச்
வில்லன் கஜினி படத்துல வில்லனா வந்தாரே அவர் தான் அவர் சம்சாரம் இந்தப்படத்தை பார்த்தா கண்டிப்பா அவருக்கு உதை தான் விழும்.. அவ்ளவ் கேனத்தனமான கேரக்டரைசேஷன்.. .. , Jagapati Babu- இவர் தான் போலீஸ் ஆஃபீசர்.. ஹய்யோ அய்யோ
இந்த கேவலமான படத்துலயும் ரசிக்கும்படி இருந்த சில பல வசனங்கள்
1. வேலைக்கு போகலை?
சம்பளம் ரொம்ப கம்மி
படிச்சதும் கம்மிதானே? பி காம் 3 வது வருஷம் , வித் ஏகப்பட்ட அரியர்ஸ்.. அவ்ளவ் தான் வரும்..
2.திருடனை பிடிக்க போலீஸ்க்கு மிஷின் கன் கொடுப்பாங்க.. உங்களுக்கு மட்டும் வாஷிங்க் மிஷின் குடுத்திருக்காங்க?
3. ஒரு சாதாரண பால் (BALL) பிடிக்கத்தெரியாத நீ என்னை பிடிக்க போறியா?
4. பொண்ணு எப்படி இருப்பா?
அஜந்தா சிலை மாதிரி
காம சூத்ரா கதையா சொல்லிட்டு இருக்கே?
5. சாதாரணமா நான் யார் கிட்டேயும் உண்மையை சொல்ல மாட்டேன். ஆனா நீங்க மிரட்டி கேட்கறதால உங்க கிட்டே மட்டும் சொல்றேன்.. ஹி ஹி
6. யூ ஆர் ஏன் இடியட்
தாங்க்க்ஸ்
7. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?
சொன்னாத்தானே தெரியும்?
8. ஏம்மா,, அவன் என்ன பண்றான்? பார்த்து சொல் பார்க்கலாம்?
பொக்கே விக்கறான்
நோ, கொக்கே ( போதைப்பொருள்) விக்கறான், அதை அதிகமா யூச் பண்ணா ஆபத்து.
ஆமா, கொக்கே சாப்பிட்டா உயிர் போயிடும் பிஸ்கட் சாப்பிட்டா பசி போயிடும்
9. சாதாரணமா இருக்கும்போது என் முகம் சும்மா தான் இருக்கும்.. பொண்ணுங்க வந்துட்டா சுறு சுறுப்பு ஆகிடும்,.,. ம்
10.அவங்க ஏன் உன்னை துரத்திட்டு வர்றாங்க?
திரும்பிப்பார்க்கறப்ப என்னை பார்த்துட்டாங்க .. கடத்திட்டு போகப்போறாங்க .. அழகா இருக்கேன் இல்லையா?
ம், தப்புதான்
எது ? அழகா இருக்கறதா?
ம்ஹூம், கடத்தறது
11. சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஏன் டைவர்ஸ் பண்றாங்க? ( பெருசா எதிர்பார்த்து ஏமாந்திருப்பாங்க ஹி ஹி )
இப்போ அது தான் ஃபேஷன்.. ஃபாரீன்ல எல்லாம் ஆ-ன்னா ஊன்னா டைவர்ஸ் தான்
12. உன் சம்சாரம் நெருப்பு மாதிரி
ஆமா அவ சூடா இருக்கா.. தொட்டுப்பார்த்தேன்
13. நம்ம 2 பேருக்கும் ஒரே அளவு செல்வம், மதிப்பு,அந்தஸ்து, எல்லாம் சமம். என் கிட்டே இல்லாதது அப்படி என்ன உன் கிட்டே இருக்கு?
உன் சம்சாரம் இப்போ என் கிட்டே தான் இருக்கா. ஹி ஹி
14. பணம் இல்லாம கூட என்னால வாழந்துட முடியும் , ஆனா நீ இல்லாம வாழ்ந்துட முடியாது ( ஏன்னா அவ பேர்ல தான் எல்லா சொத்தும் இருக்கா?)
இந்தப்படத்தோட உல்டா தான் அது.. ஹி ஹி
இயக்குநரிடம் நக்கலாக சில கேள்விகள்
1.அண்ணே, எந்த ஊர்ல நாய் மைதா மாவு சாப்பிட்டு இருக்கு? அப்டியே சாப்ட்டாலும் ரெகுலரா வில்லன் நாயை அபின் சாப்பிட வைத்து பழக்கி இருக்கான்.. அது கண்டு பிடிக்காதா? கொஞ்சம் அபின் கொஞ்சம் மைதா கொடுத்தா அதுக்கு தெரியாதா>?
2. எங்கோ இருக்கும் பேபியோட ஆபரேஷனுக்கு பணம் கட்ட ஹீரோ ஹாஸ்பிடல் வந்து வில்லன் கிட்டே மாட்டிக்கறாங்க.. இது மணி ட்ரான்ஸ்ஃபர் காலம்.. அந்த ஹாஸ்பிடல் அக்கவுண்ட் நெம்பர் வாங்குனா உலகின் எந்த மூலைல இருந்தும் யார் வேணாலும் பணம் கட்டலாமே? எதுக்கு மெனக்கெட்டு ஹீரோ அங்கே வரனும்?
3. அந்த போலீஸ் ஆஃபீசர் படம் பூரா என்ன தான் பண்றார்? சம்பளம் எதுக்கு தண்டமா கொடுத்தீங்க..?
4. இவ்வளவு கேனத்தனமா லாஜிக் இல்லாம வெட்டியா நடிக்க சாரி வந்துட்டுப்போக வில்லன் எப்படி சம்மதிச்சாரு..?
இந்த ஹாலிவுட் படம் தான் இதனோட மூலம் -
சி. பி கமெண்ட் - இந்த கேவலமான படத்தை ஈரோடு சங்கீதாவில் பார்த்தேன்..
தொழில் நுட்பக்கலைஞர்கள்
Directed by | K. Vijaya Bhaskar | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Produced by | Sakhamuri Panduranga Rao Bellamkonda Suresh | |||||||||||||||
Written by | Abburi Ravi | |||||||||||||||
Starring | Tarun Kumar Ileana D'Cruz Jagapati Babu | |||||||||||||||
Music by | K.M. Radha Krishnan | |||||||||||||||
Release date(s) | April 11, 2008 | |||||||||||||||
Country | India | |||||||||||||||
Language | Telugu | அ |