-
- a
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா
இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோஹித் சர்மா, ஒருநாள்
சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும்
முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த
முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோஹித் சர்மா.
கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்து சேவாக் எடுத்த அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ரன்கள் சாதனையைக் கடந்தார் ரோஹித்.
ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா, இன்று மீண்டும் இரட்டைச்சதம் விளாசினார்.
முதல் 100 பந்துகளில் சரியாக 100 ரன்களை எடுத்த ரோஹித், அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் எடுத்து 150 ரன்கள் எடுத்தார். பிறகு 151 பந்துகளில் 200 ரன்களை கடந்தார் ரோஹித். குலசேகரா பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபார பவுண்டரி அடித்து அவர் இரட்டைச் சதம் கண்டார். இரண்டாவது 100 ரன்களை அவர் 51 பந்துகளில் எடுத்தார். இதில் அவர் 25 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் அடித்தார்.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த போது கோலி ரன்
அவுட் ஆனார். இந்த முறையும் கோலி ரன் அவுட் ஆக, ரோஹித் சர்மா இரட்டைச்
சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன் முதலாக இரட்டைசதம் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியிலிருந்து 4 இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா: இந்தியா 404 ரன்கள் குவிப்பு
கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தின் 150-வது ஆண்டு விழாவை ரோஹித் சர்மா
தனது 3 உலக சாதனைகளினால் சிறப்புறச் செய்துள்ளார். இந்தியா 50 ஓவர்களில் 5
விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது.
264 ரன்களை 173 பந்துகளில் குவித்து 50-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார் ரோகித் சர்மா.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர்,
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் எடுத்த வீரர்,
சர்வதேச ஒருநாள் போட்டியில்ல் முதல் முறையாக 250 ரன்களைக் கடந்த வீரர் என ரோஹித் சர்மா 3 உலக சாதனைகள் படைத்த இந்த இன்னிங்ஸில், இந்தியா 5-வது முறையாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ரன்களுக்கும் மேல் குவித்தது.
தோனி வாழ்த்து:
தோனி தனது ட்விட்டர் பதிவில் ரோஹித்திற்கு இரட்டைச்சத சாதனைக்காக வாழ்த்து
கூறியுள்ளார், அதில், “ரோஹித் இன்று ஆட்டமிழக்காமல் இருந்தால் நிச்சயம் 250
ரன்கள் எடுப்பார்” என்று கூறியிருந்தார். தோனியின் இந்த எதிர்பார்ப்பை
ரோஹித் சர்மா பூர்த்தி செய்தார். அவர் 173 பந்துகளில் 33 பவுண்டரி மற்றும் 9
சிக்சர்களுடன் 264 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா அவுட்
ஆனார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது 2-வது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோராகும். ரோஹித் அரை சதம் எடுக்க 72 பந்துகள் எடுத்துக் கொண்டார். முதல் 100 பந்துகளில் 100, பிறகு 150 ரன்களை 125 பந்துகளில் எட்டினார். 200 ரன்களை 151 பந்துகளில்ம் 250 ரன்களை 166 பந்துகளில் எட்டினார். கடைசி 50 ரன்கள் 15 பந்துகளில் எடுக்கப்பட்டது.
2 மாதகாலம் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் காயம் காரணமாக விலகியிருந்தார். இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது சதம் கண்டார். ஆனாலும் அணித் தேர்வு அதற்கு முன்னரே செய்யப்பட்டு விட்டதால் அவரால் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை.
இன்று வந்தார், வென்றார். ராபின் உத்தப்பாவுடன் 5-வது விக்கெட்டுக்காக சேர்த்த 128 ரன்கள் 58 பந்துகளில் விளாசப்பட்டது. உத்தப்பா இதில் 16 ரன்களை மட்டுமே எடுத்து எதிர்முனையில் இருந்து ரோஹித் சர்மாவின் தாண்டவத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.
பவுண்டரிகளும் சிக்சர்களும் கண்களுக்கு பெரிய விருந்து என்று இர்பான் பத்தான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ரஹானே 28 ரன்களுக்கு நன்றாக ஆடினார். அவர் லெக் திசையில் திருப்பி அடிக்க நினைத்து மேத்யூஸ் பந்தில் எல்.பி. ஆனார். அம்பாத்தி ராயுடு 8 ரன்களில் எரங்காவின் அபார பந்தில் பவுல்டு ஆனார்.
13-வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் என்று இலங்கை கட்டுப்பாட்டில்தான் இந்தியா இருந்தது.
அதன் பிறகு கோலியும், ரோஹித்தும் இணைந்து இன்னிங்சை நிலைப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 202 ரன்களை 25 ஓவர்களில் சேர்த்தனர். கோலி 6 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சற்றே தயங்கி 2-வது ரன்னை ஓடி ரன் அவுட் ஆனார்.
39-வது ஓவரில் இந்தியா 261/3 என்று இருந்தது. அப்போது ரோஹித் சர்மா 152 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு 11 ஓவர்களில் 143 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா மட்டும் 112 ரன்களை விளாசியுள்ளார்.
இந்த இன்னிங்ஸை நன்றாக திட்டமிட்டு ஆடினார் ரோஹித் சர்மா. இலங்கை பந்து வீச்சாளர் குலசேகரா, 9 ஓவர்களில் 89 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மீண்டும் அழைக்கப்பட்ட புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் 7 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்தார்.
மொத்தம் 300 பந்துகளில் 173 பந்துகளை ரோஹித் சர்மா சந்தித்தார். இந்திய அணியின் மொத்த ரன்களில் பாதிக்கும் மேல் ரோகித் மட்டையிலிருந்து வந்ததுதான்.
அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் இரட்டை சதம் எடுக்கும் போது ரோஹித் சர்மா 16 சிக்சர்களை அடித்து உலக சாதனை நிகழ்த்தினார் என்றால் இன்றைய அதிரடி இரட்டைச் சத உலக சாதனையில் 33 பவுண்டரிகளை அடித்து பவுண்டரி சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது சாதனை இரட்டைச் சதத்தில் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்களை அடித்திருந்தார். சேவாக் 219 ரன்களை எடுத்த போது, 25 பவுண்டரி 7 சிக்சர்களை எடுத்திருந்தார். தற்போது ரோஹித் சர்மா 33 பவுண்டரிகளை தனது இரட்டைச் சதத்தில் அடித்து சாதனையை தன்வசமாக்கினார்.