யாழ்ப்பாணம் முதல்வர் அலுவலகத்தில் வைத்து இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி. இதில், இலங்கைத் தமிழர் நிலை பற்றியும் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் அடிக்கடி ஏற்படும் மீனவர் கைது குறித்தும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் தனது மனநிலையைப் பகிர்ந்துகொள்கிறார் விக்னேஸ்வரன். அரசியல்வாதியாக இருந்தும் அரசியலற்ற சமூகக் கண்ணோட்டத்துடன் அவர் கூறியதாவது:
“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு” என்பது உங்கள் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தனித் தமிழீழம் குறித்து உணர்ச்சிபொங்கப் பேசி வருகின்றனர். இது உங்களுக்கு என்னவிதமான தாக்கத்தை உருவாக்குகிறது?
* உணர்வுக்கும் அறிவுக்கும் இடையிலான போராட்டமாக இதை எண்ணத் தோன்றுகிறது. உணர்வு, சுதந்திரத் தென்னிந்தியாவிலிருந்து கொந்தளிக்கிறது. அறிவோ, யதார்த்தத்தின் நிலையறிந்து நிதானமாக இலங்கையில் பயணிக்கிறது.
தமிழக மீனவர்கள் இலங்கையிலும் இலங்கை மீனவர்கள் தமிழகத்திலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மொத்தத்தில் இரு தரப்பிலும் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள்தான். இதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?
* உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே நான் செய்யக்கூடியது. நீங்கள் தமிழர்கள். பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுவது இந்திய - இலங்கை கடற்பரப்பில் வாழும் கடல் இனங்களே. எதற்காக இந்திய மீனவர்கள் தங்கள் கடல் எல்லை தாண்டி இரவு 1 மணியளவில் நன்றாக நாங்கள் பார்க்கக்கூடிய தூரத்திலேயே பயணித்து மீன் பிடிக்கிறார்கள்? பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். காரணம், இந்திய கடல் பிராந்தியத்தில் இழுவலைப் படகுகள் மூலம் கடல் வளங்களாகிய மீன்களை வாரி இழுத்து காலி செய்துவிட்டார்கள். பணத்தாசையால் பெரும் படகு முதலாளிகள் தங்கள் நாட்டுக்கும் கடல் வளத்துக்கும் செய்துள்ள துரோகம் இது.
உங்கள் பகுதியில் மீன் கிடைக்காததால், இலங்கைக் கடல் பகுதியில் மீன் வாருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், இலங்கை கடல் பிராந்தியத்திலும் கடல் இனங்கள் அற்று ஒன்றுமில்லாமல் போய்விடும். எங்கள் நாட்டில் இழு படகுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. இழு படகுகளால் மீன் வளங்கள் மட்டுமல்ல; பவளப்பாறைகள்கூட இழுத்துவரப்படுகின்றன.
இழு படகு உபயோகத்தை இந்தியா தடை செய்ய வேண்டும். அப்படிப்பட் சட்டம் வருமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இழு படகை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை மீனவர்கள் உபயோகித்தால் மீன் இனம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள். இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் இழு படகுகளுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்களே. சிறு மீனவர்கள் அல்லர்.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாடு குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
* பகிஷ்கரிப்பது ஒரு தந்திர உபாயம். பிழை செய்தவர்கள் தங்கள் பிழைகளை உணர நாடும் கருவி அது. பகிஷ்கரிப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதான் முக்கியம். அதுபோல மாநாடு சென்று மனத்தாங்கல்களை வெளிப்படுத்துவதும் ஒரு தந்திரம்தான். இவற்றில் எதைப் பின்பற்றுவது என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்நிலையில் நாங்கள் பகிஷ்கரிப்பது என தீர்மானித்துள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கலவையாகும். ஒவ்வொரு கட்சித் தலைவரும் ஒவ்வொரு குரலில் பேசுகின்றனர். அவர்கள் அனைவரோடும் கைகோத்து நிலையான ஆட்சியைத் தர நீங்கள் வைத்திருக்கும் வியூகம் என்ன ?
* அன்பு ஒன்றுதான். என்னதான் அவர்கள் பேசினாலும் அவர்கள் எங்கள் உடன்பிறப்புகள். அவரவர் கருத்துகளுக்கு காரணம் உண்டு. வன்முறையின் சூழலில் வளர்ந்தவர்கள் அவர்கள். ‘அடித்துப் பறித்தால்தான் கிடைக்கும். அரவணைத்தால் அனைத்தும் போய்விடும்’ என்பது அவர்கள் கொள்கை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஏற்ப, அனைவரும் கைகோத்ததால், வெற்றி பெற்றோம். ஒற்றுமை குறைந்தால் கீழிறங்க வேண்டிவரும் என்ற எண்ணம் அவர்களை ஒன்றுபடுத்திவைக்கிறது. “பஞ்சமே ஆனாலும் பாரம் அவனுக்கன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ” என்பதே எங்கள் வியூகம். இறைவன் எங்களைக் கைவிடமாட்டான்.
மாகாண அதிகார வரம்பில் காவல்துறை இல்லை. சரியான அதிகாரப் பகிர்வினை அடைய நீங்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன?
* அதிகாரம் ஒழுங்காகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது தெரிந்தே நாங்கள் தேர்தலில் ஈடுபட்டோம். மக்கள் சக்தி எங்களுடன் உள்ளது என்பதை தேர்தல் மூலம் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை மூலமே அதிகாரப் பகிர்வைப் பெற வேண்டும். இப்போது அதிகாரம் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
உங்கள் ஆட்சியில் எதனை அமல்படுத்த அதிக முன்னுரிமை தருகின்றீர்கள்?
* போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களுக்கு முன்னுரிமை தருகிறேன். வேலையற்றோர், விதவைகள், வீடு - நிலங்களை இழந்து நிற்போர் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.
இந்திய உதவியுடன் வீடு கட்டித் தரும் திட்டம் எந்த அளவில் உள்ளது? அதை விரைவுபடுத்த நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி என்ன?
* குறிப்பிட்ட தொகையே வீடுகட்ட ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ஆண்டுகள் சில கடந்த நிலையில், பொருள்களின் விலையேற்றத்தால் வீடுகளை கட்டி முடிக்க இயலாமல் பலர் திண்டாடுகின்றனர். இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதருடன் பேசிக்கொண்டிருக்கிறோம். குறைந்த வட்டியுடன் கடன் வசதி செய்து தரும்படி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
இலங்கை அரசின் மும்மொழித் திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதா?
* தமிழ் மக்கள் நினைக்கிறார்கள் - எங்களை சிங்களம் படிக்கவைத்துவி்ட்டு சிங்களர்கள் தமிழ் படிக்கமாட்டார்கள் என்று. மேற்படிப்பு படிப்பதற்கு தமிழும் சிங்களமும் தெரிந்திருக்க வேண்டும் என்று பள்ளியிலேயே கட்டாயப்படுத்தினால்தான் பலன் இருக்கும். அலுவலகங்களில் மட்டும் செயல்படுத்தி ஒன்றும் ஆகாது.
யாழ்ப்பாணத்துக்கு வருமாறு இந்தியப் பிரதமரை அழைத்திருந்தீர்கள். அதுபோல இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு நீங்கள் வருவீர்களா? அதற்கான திட்டம் ஏதும் உள்ளதா?
* தமிழகத்துக்கு வர திட்டம் தீட்டவேண்டியதில்லை. கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் தமிழகம் வந்துபோய்க் கொண்டிருக்கிறேன். தற்போது அரசியல் நிமித்தம் நீங்கள் அழைத்து நான் வருவதுதான் பொருத்தமாக இருக்கும். நீங்கள் அழைத்தால் என் பாதுகாப்பு உங்கள் பொறுப்பு. அழைக்காமல் நானாக வந்தால் எனக்கு அவன் பொறுப்பு.
தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப என்ன செய்யப் போகிறீர்கள்?
* தற்போது வடக்கு மாகாணத்திலிருந்து ராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டால், அகதிகள் திரும்ப வழி ஏற்படும். அகதிகளுக்கு வீட்டு வசதிகள், தொழில் வாய்ப்புகள் செய்துதர வேண்டியது எங்கள் பொறுப்பு என்பதை உணர்ந்துள்ளோம்.
வடக்கு மாகாணத்தில் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு பெருக்கத்துக்கும் முதலீட்டுக்கும் இந்தியாவிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
* விவசாயம், கால்நடைப் பண்ணை, கைத்தொழில்கள் ஆகியவற்றில் எங்களுக்கு இந்தியா அறிவுரை வழங்க வேண்டும். கலை - கலாச்சாரத்தில் எங்களது வரலாற்றை உலகுக்கு எடுத்துரைப்பதில் இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. பெரும் முதலீட்டை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
உங்கள் குடும்பமே சிங்கள - தமிழ் இனங்களின் இணக்கமான வாழ்வுக்கு உதாரணம்தான். இலங்கையில் இரு இனங்களும் இணக்கமாக வாழ நீங்கள் முன்வைக்கும் யோசனைகள் என்னென்ன?
* என் இரு மகன்களும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அதற்காக இரு இன மக்களும் மற்ற இனத்தில் வரன் தேட வேண்டும் என கூறமாட்டேன். புரிந்துணர்வும் பரஸ்பர நம்பிக்கையும்தான் இணக்கத்தை ஏற்படுத்தும். சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் வாழ்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோமே என்ற எண்ணத்தில் எங்களைத் துன்புறுத்துகின்றனர்.
இதற்குக் காரணம் தமிழ்நாடுதான். இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக தமிழக மக்கள் பேசப்பேச, இத்தனை கோடிப் பேரின் ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு யாரும் இல்லை என்கிற எண்ணம் மேலோங்க எங்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்கிறார்கள் சிங்களர்கள்.
உங்களின் முதன்மையான தேடல் ஆன்மிகம் என்று கூறியிருக்கிறீர்கள். உங்களின் ஆன்மிகத் தேடல் பற்றிக் கூறுங்களேன்
* மாணவனாக இருந்தபோதே எனக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகம். சமய ஓப்பீடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவன் நான். இந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற இந்து, பவுத்தம், கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் பற்றிய அறிவு முக்கியம். பல சமயப் பெரியோர்களை நேரடியாகச் சந்தித்தேன். தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி, சுவாமி சாந்தானந்த சரஸ்வதி, சத்யசாயி பாபா, சிவபால யோகி, ராம்சூரத்குமார், ராஜஸ்தானில் வசித்த விமலா தக்கார் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாத்தளை சுவாமி பிரேமானந்தரை ஆன்மிக ஆசானாக அடையும் பேறு பெற்றேன். மக்கள் சேவையே என் கடமை என்ற எண்ணத்தை என்னுள் வேரூன்ற வைத்தவர் அவர்தான்.
ஒரு பேட்டியில் “இதற்கு முன் அரசியலில் ஈடுபட்டது இல்லை” என்று கூறியிருந்தீர்கள். இப்போது அரசியலில் இறங்கியிருப்பது ஏன்?
* பெயர், புகழ், கல்வி, அந்தஸ்து, பணம் எல்லாம் பெற்ற பின் அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். அரசியல் எனக்கு வேண்டாத ஒன்று. ஆனால், சேவை நமது கடமை என்று ஆன்மிகம் சொல்கிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், “ வடமாகாணத் தமிழ் மக்களுக்கு நீ சேவை செய்தே ஆகவேண்டும்” என நிர்ப்பந்தித்தபோது இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு தேர்தலில் நிற்க சம்மதித்தேன். நான் அரசியலில் இறங்கவில்லை: இறக்கிவிடப்பட்டேன்.
thanx - the hindu
readers views
- இலங்கை தமிழர் களுக்காக எத்தனை போராட்டங்கள் எத்தனை கடையடடைப்பு எத்தனை இளப்புகள் அடுத்த நாட்டு மக்களுக்காக நாம் ஏன் இலக்க வேண்டும்about 16 hours ago · Up Vote (0) · Down Vote (0) · reply (0)
- ஆனால், சேவை நமது கடமை என்று ஆன்மிகம் சொல்கிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், “ வடமாகாணத் தமிழ் மக்களுக்கு நீ சேவை செய்தே ஆகவேண்டும்” என நிர்ப்பந்தித்தபோது இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு தேர்தலில் நிற்க சம்மதித்தேன். நான் அரசியலில் இறங்கவில்லை: இறக்கிவிடப்பட்டேன்." என்று சொல்லி வடக்கு ஈழத்தில் வந்து சேர்ந்துள்ள திரு/.விகேன்வரனை ஒப்பிடும்போது இப்பிட ஒரு கட்டத்தை தங்களின் அரசியல் வரலாற்றில் ஒரு பகுதி ஈழ தமிழர்கள் சந்திப்பார்கள் என் போன்றோர் இங்கே தமிழ் நாட்டில் அதை கண்ணுற நேரிடும் என்று நினதிருக்கவேயில்லை.. வேதனைதான் ! விளைவுகளை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்இறுதியாக திரு.விக்னேவரனுக்கு ஒன்று சொல்லவிரும்புகிறேன் - எங்களை குறை சொல்லாதீர்கள். நேற்றும் ,இன்றும் நாளையும் நனகளும் எங்கள் கடமையை செய்கிறோம்.- அதே இறைவன் மீது போட்டுவிட்டுத்தான். அறம் வெல்லுமா? துரோகம் நிலைக்குமா? காலம் பதில் சொல்லட்டும். !Subramanian Down Voted P.Padmanaabhan \"s comment
- ஐயா விக்னேஸ்வரன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் தன்மையாகவும், அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்காமல் ஜனநாயக ரீதியில் உள்ளதாகவும் நிறைய வாசகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களின் நினைவாற்றலுக்கும் பெரிய நன்றி. இலங்கை விடுதலை பெற்றதற்கு முன்பிருந்தே சிங்கள பேரினவாதம் மிகக் கவனமாக திட்டம்போட்டு, "வந்தேறிகள்" என்று அவர்களால் கொச்சையாக அழைக்கப்பட்ட தமிழர்களை இன ஒழிப்பு செய்து வந்திருக்கிற இருநூறு ஆண்டு கால வரலாறை தெரியாதவர்கள் இன்றைய செவ்வியை மட்டும் படித்துவிட்டு, திரு.விக்னேஸ்வரன் அவர்களின் கருத்து நூற்றுக்கு இருநூறு சதம் சரி என்று சொல்லலாம். இவர்கள் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளை எப்படிவேண்டுமானாலும் எடை போடலாம். ஒரு இன வரலாற்றையும் அதன் ரத்தம் சொரிந்த நாட்களையும் இன்றைய சௌகர்யத்திற்காக புறக்கணிப்பதும், அதன் வேதனையை, துயரத்தை வருவதாக சொல்லப்படும் புற வாழ்வியல் வசதிகளுக்காக மறைக்க முற்படுவதும், இனமான அவமானத்தை ஏற்றுக்கொள்வதும் "தி ஹிந்து" போன்ற "உண்மை விளம்பிகள்" செய்யலாம். ஐயா விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமாதானத்தை விரும்பினாலும், இன எழுச்சிக்காக போராடியவர்களின் நினைவுக்கு குந்தகம் விளைவிக்க விரும்பும் எந்த ஒரு கருத்தையும் வெளியிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
- நம் சமுதாயத்தில் நல்லவர்கள் ஒதுங்கி விடுவதால் " வெட்டி வீரர்களின்" வாய்ச்சவடால்களை மக்கள் நம்பத்தொடங்கி விடுகிறார்கள். பெரும்பாலான பத்திரிகைகள் எது விற்கும் எனப் பார்த்து எழுதுகிறார்கள். பாரபட்சம் இன்றி ஒரு ஆய்வு செய்யப்பட்டால் இலங்கைத்தமிழரின் இன்றைய நிலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என தெரியும். பத்திரிகைகள் தற்காலிகமாவது அப்படி ஒரு சுய பரிசோதனைக்கு வந்து மக்களிடம் உண்மையைச் சொன்னால் இங்குள்ள தமிழ் வியாபாரிகள் பெரும் நஷ்டமடைவார்கள் .
- தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் சுய நலத்துக்காக இலங்கை தமிழர் பிரச்சினையை கையில் எடுக்காமல் ஆக்கபூர்வமாக சிந்தித்து மத்திய அரசுடன் சேர்ந்து செயல்படவேண்டும்.அப்பாவி இலங்கைத்தமிழர்களை ஆதரிக்கிறோம் என்று சொலி தங்கள் செயல்களால் மேலும் அவர்களை துன்பத்திற்கு உள்ளாக்கக்கூடாது.வடகிழக்கு மாகாண முதல்வர் அவர்களின் தெளிவான பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது.
- மிகவும் அருமையான நேர்காணல். நமது மீனவர்கள் எல்லை மீறி நுழையும் போது, கைது செய்யாமல் வேறு என்ன தான் செய்வார்கள்?? இரட்டை மடி போட்டு மீன்பிடிப்பது, வெடி வைத்து மீன் பிடிப்பது. இத்ழுவையை போட்டு கடற்தரை மட்டும் இழுத்து செல்வது, மாட்டிக்கொண்டவுடன், "நான் தமிழன். அதனால் தான் சிங்களன் அடிக்கிறான்" என்று உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது. இந்த பிரச்சனைக்கு மட்டும் தீர்வு நம் கையில் தான் உள்ளதுFrancis Harry Roy S Up Voted Francis Harry Roy S\"s comment
- The Hindu should bring more such articles which reflect the political views of srilankan tamils and their honorable CM, so that true nature of the mirage created by tamilnadu political parties would be understood by tamilnadu people. Let sinhala tamil brothers live peaceful life; let us help them grow holistically and spread out their cultures and values across the world as mentioned by the CM. By doing so, we should also be happy that tamil culture would be spreaded and preserved. We tamil nadu people should not make sinhala tamils" life precarious, atleast from now on after hearing these words from CM himself. Thanks to hindu for publishing this.
- போராளிகள் பிரித்து ஆளும் சக்திகளுக்கு ஆட்பட்டு மறைந்தார்கள். காலத்திற்கு உகந்து தங்களது கொள்கைகளை கட்டமைக்க தவறினார்கள். யாருக்கு அவர்கள் ஆட்படிருந்தர்கள் என்று யாராலும் தீர்க்கமான பதிலை சொல்ல முடியாது. கடந்த பாதை போல் நிகழ்கால நிகழ்வுகளும் சோதனை நிறைந்தது. ஆறிவு மேலோங்கிய உணர்வு கொண்ட வழிநடத்தல் உங்களுக்கு வோட்டளித்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற போதுமானதாக அமையும் மற்றும் வரும்கால தலைவர்களை அடையாளம் காணும் பணி மிக முக்கியமானது. கடந்த காலகட்டத்தில் இந்திய தேசிய அளவில் இலங்கை விவகாரம் இந்திய தமிழர் கட்சிகளின் அகண்ட தமிழ் பேரியிக்க உக்தியாக கூட சந்தேகிக்கப்பட்டது. இபொழுது இலங்கையில் சிங்களம் இதே பயத்தில் உள்ளதாக தங்கள் கூற்றில் இருந்து பொருள் கொள்ளபடல்லாம். உங்கள் பிரதேசத்தின் வழியாக பரிமாறப்படும் இரு நாடு வாணிபம் எங்களுக்கும், உங்களுக்கும் மற்றும் சிங்களவர்களுக்கும் ஒரு நம்பிக்கை மற்றும் நட்பினை உருவாக்கலாம். இப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி வரும் கால கட்டங்களில் அறிவும் உணர்வும் சமன்பட உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.R Up Voted krishnan \"s comment
- ஈழ மக்கள் பாக்கியம் செய்தவர்கள் என்பதை தமிழ் உலகம் நன்கு அறியும் அறிவும் ஆற்றலும் மிக்கவர்கள் என்பதற்கு முதல்வர் அவர்களின் விவேகமிக்க பேச்சு நல்ல உதாரணம் துயரங்களையும் தோல்விகளையும் இவர்கள் விரைவில் வென்று எடுக்ககூடிய மனோ வலிமை மிக்கவர்கள் இவர்களுக்கு உள்ள நியாய புத்தி சிங்கள சகோதர்களுக்கு இல்லை மீனவர் பிரச்சனை குறித்து இவரது தரப்பு வாதத்தில் வலு உள்ளது இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.நம் பக்கம் தவறு இருப்பின் உடன் நாம் திருத்தி திருந்தி கொள்ளவேண்டும் சமாதான சக வாழ்வு வேண்டும் என தமிழர்கள் விரும்புவது போல் சிங்களவர்களும் விரும்பவேண்டும் தென் ஆப்ரிக்கா வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணம் டி கிளர்க்ம் மண்டேலா போலவே இணக்கம் காண விரும்பினர் சக வாழ்வு அங்கு வென்று எடுக்க முடிந்து .சமாதான சக வாழ்வுக்கு தடையாக ராஜபக்ச ஊம் அவரது; இனவாத அரசும் இதற்கு துணை போகும் அண்டை நாடும் காரணம். மோரிசுஸ் கனடா போல் சுதந்தரமான நேர்மையான அணுகுமுறையை இந்தியாவும் கடை பிடித்து இருக்குமேயானால் நமக்கு பெருமையாக இருந்து இருக்கும். இப்போதய நிலை இங்கு தொடுருமானால் தமிழ் இனம் அங்கு நம் கண் எதிரில் வேகமாக அழிந்து விடும் என்பது நிதர்சனம் விக்னேஸ்வரன் போன்றோரின் அறிவு கூர்மை இந்திய உட்பட அணைத்து அரசியல்வாதிகளுக்கும் இருக்குமானால் உலகம் இன்பமுடன் வாழும் என்பதில் ஐயமில்லை.ராஜபக்ச உண்மையில் தூங்கினால் உடன் எழுப்பி விடலாம். ஆனால் அவர் தூங்கவது போல் பாவனை செய்கிறார் .இவரை எழுப்ப முடியவே முடியாது .தெய்வ சங்கற்பம் தமிழர்களுக்கு இருந்தால் ஒழிய அவர்களின் விமோசனத்திற்கு மார்க்கம் இல்லை.இறைவா ,என ஏங்குவது தவிர வேறு வழி இல்லை துணிவான கேள்விகளுக்கு தன்மையான பதில்கள் .இந்து வுக்கு சபாஷ்!
- நல்ல மனிதரின் வார்த்தைகள் . கேட்கப்பட்ட கேள்விகளுக்கு , யாருடைய மன்தும் புன்படதவரு , அனால் ஆணித்தரமாக , சிந்திக்கவைக்கதக்க பதில்கள். உலக மக்களை நேசிக்கிற மனம் கொண்டவர் போல தெரிகிறது. ஆன்மீகத்தில் மக்கள் சேவை முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை உணர்தவர். உலக மற்ற தலைவர்களும் பின்பற்ற வேண்டியது.pugalenthi Up Voted K Anantharaman\"s comment
- ஹிந்துவின் இந்த பேட்டி மிகவும் துணிச்சலானது. உண்மையை சொல்வதற்கும் தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அரசியல்வாதிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவும் ஊடகங்கள் பயந்து கொண்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியிடமிருந்து இப்படிப்பட்ட பேட்டி எடுத்த ஹிந்துவுக்கு பாராட்டுக்கள். இலங்கையில் கடைசியாக நடந்த அதிபர் தேர்தலில் ஈழத்தமிழர்கள் வாக்களிப்பதை பிரபாகரன் தடுத்ததன் மூலம் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சேயிடம் தோல்வியுற்றார் என்பதனையும் அதன் காரணமாகவே ராஜபக்சே ஆட்சிக்கு வந்தார் என்பதனையும் அதனால் இன்றைய ஈழத்தமிழர்களின் நிலைமைக்கு பிரபாகரனே காரனம் என்பதனையும் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- உண்மையிலேயே இலங்கை தமிழர்கள் இந்த ஒரு விசயத்தில் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்தான்.என்ன ஒரு விவேகமான ,புத்தி கூர்மையுள்ள முதலமைச்சர்.இங்குள்ள முன்னாள்,இந்நாள் முதலமைச்சர்களை நினைத்தால் ....................மிக பெரிய ஏக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.Dharmaraj Down Voted அ.சேஷகிரி \"s comment
- சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் வாழ்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோமே என்ற எண்ணத்தில் எங்களைத் துன்புறுத்துகின்றனர். இதற்குக் காரணம் தமிழ்நாடுதான். இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக தமிழக மக்கள் பேசப்பேச, இத்தனை கோடிப் பேரின் ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு யாரும் இல்லை என்கிற எண்ணம் மேலோங்க எங்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்கிறார்கள் சிங்களர்கள்.
- அருமையான தமிழில், மென்மையான சிந்தனை.! .இலங்கையின் தமிழ் சமூகம், இத்தகைய கற்றறிந்த, பண்புள்ள, யதார்த்தவாதியை முதலமைச்சராக பெறுவதற்கு , பேறு பெற்றுள்ளது. .தமிழ் தேசிய கூட்டணியின் மற்ற தலைவர்கள், விக்னேஸ்வரன் காட்டும் பாதையில், பொறுமையுடன் பயணிக்கவேண்டும். ..புலம் பெயர்ந்த தமிழர்களின் தவறான வழிகாட்டுதலை நிராகரிக்கவேண்டும். அதிபர் ராஜபக்சேயின் கரங்களை பலப்படுத்தவேண்டும். .நிச்சயமாக அவர் படிப்படியாக , தமிழர்களின் நல்வாழ்விற்கு ஏற்ப்பாடு செய்வார். .நாடு உடைவதை அவர் ஏற்கமுடியாது. ஆனால், பிரிவினைவாதம் கைவிடப்பட்டால் , இலங்கை பிரஜை என்ற அளவில், எந்த ஒரு குறையும் இல்லாமல் வாழமுடியும். .எல்லாம் வல்ல இறைவன் நல்வழி காட்டட்டும்.maalan Up Voted RSR Ramaswamy\"s comment
- நல்ல எண்ணங்களுடன் உள்ள ஒரு நாட்டுப்பற்று மிக்க முதல்வரின் பேட்டி. அன்பும் சகோதரத்துவமுமே முக்கியம் என்று கூறும் இவர், இலங்கைத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த நல்ல முதல்வர். இவர் பணி தொடர்ந்தால், தமிழக அரசியல் வாதிகளுக்குத் திண்டாட்டம் தான் .ஆனால் இலங்கைத் தமிழர்கள் போற்றுவார்கள்.nadhi Up Voted R \"s comment
- திரு.விக்னேஸ்வரன் மிக யதார்த்தமாக பேசியுள்ளார்.அவர் நம்பும் இறைவன் அவருக்கு அருள்புரியவேண்டும்.இலங்கை வாழ் தமிழ் சொந்தங்கள் நலமுடனும்,வளமுடனும் வாழ்வாங்கு வாழ்ந்தால் நாம் மிக்க மகிழ்ச்சியும்,நிம்மதியும் அடைவோம். தமிழகத்தில் மிக மிக அரசியலாக்கப்படும் மீனவர் பிரச்சனையை திரு.விக்னேஸ்வரனை விட யாரும் சரியாக சொல்லிவிடமுடியாது என்று நினைக்கிறேன்.தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்,என்பதுபோல தங்களின் வாழ்வாதாரமான மீன் வழத்தை எப்படி தமிழக மீனவர்களுக்கு காலங்காலமாக விட்டுக்கொடுக்க முடியும்.தமிழக மீனவர்களும்,தமிழக அரசியல்வாதிகளும் யதார்த்தம் உணர்ந்து இலங்கை தமிழ் மீனவர்களை வாழவிட்டு தாங்களும் வாழட்டும்.
- Puduvai Ramji at LIC OF INDIAபொறுப்புள்ள பதவியிலுள்ளவரின் பொறுப்பான பேச்சு. இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் இங்குள்ள திராவிடக்கட்சிகளுக்கு ஒரு சாட்டையடி.
- மிகவும் நுட்பமாகவும், மதி யூகத்துடனும் கூறி இருக்கிறார். இங்கு உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இதைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். தமிழ் நாட்டில் நடக்கும் போராட்டங்கள் , இலங்கைத் தமிழர்கள் அனைவரின் நலனிலும் பற்றுக் கொண்டதால் நடத்தப் படுவதில்லை. அது, குறிப்பிட்ட சிலரின் மேல் கொண்டிருந்தத் தீவிரப் பற்றினால் நடத்தப் படுவது.
- இப்போதைய வட மாகாண முதல்வர் ஒரு யதார்த்தவாதி, ஆன்மீகவாதியும் கூட. ஈழத்திற்காக தந்தை செல்வா தலைமையில் அஹிம்சை வழியில் போராடி பார்த்தார்கள். நடக்கவில்லை. மாவீரன் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டமும் நடந்து முடிந்து விட்டது. இந்த போராட்டம் தோற்றதற்கான காரணம் மிகப்பெரிய கேள்விகளை தொக்கி நின்றாலும். இது முடிந்து போன ஒன்றாகவே கருதப்படுகி|றது.. இனிமேல் அங்கிருக்கும் மக்கள் 30 ஆண்டுகாள போரினால் ஏற்பட்ட அவலம் நீங்கி அமைதி வாழ்வு வாழ இங்கிருக்கும் தமிழர்கள் வேண்டிக்கொள்வதை தவிர வேறொன்றும் வேண்டியதில்லை.
- mohamednasrudeen Nasrudeen at nilஇலங்கை தமிழர்களின் "ஒரு ஜனநாயக பிரதிநிதியாக" அவர்களின் உள்ளார்ந்த என்னத்தை பிரதி பலிக்கும் இந்த பேட்டி தமிழக அரசியல் வாதிகளின் அரசியல் வியாபாரத்திற்கு ஒரு முற்றுபுள்ளி ...இது வரை இது போன்ற ஒரு கட்டுரைகள், பேட்டிகளை தமிழ் வியாபார நாளிதழ்கள்.. ப்ரசொளிதது கிடையாது ...நன்றி தி ஹிந்து ...Abdul Kadhar Up Voted mohamednasrudeen Nasrudeen\"s comment
- mu.saravanakumar தெய்வம் நீயென்றுணர்இப்போதைக்கு விக்னேஸ்வரன் மாதிரி எதார்த்தம் பேசும் தலைவர்களே தேவை.....ஓட்டுக்காகவும், காசுக்காகவும் பன்ச் டயலாக் பேசித் திரியும் அரசியல் அல்லக்கைகளை புறந்தள்ளி விட்டு, களத்தில் தனியே நின்று தன் மக்களுக்காக உழைக்கும் விக்னேஸ்வரனை ஈழத் தமிழ் சமூகம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.maalan Up Voted mu.saravanakumar \"s comment
- Vijay V Raghavan at Healthcare MNCதமிழக அதிகார ஆக்கிரமிப்புச் சகதியில் சிக்கிவிடக் கூடிய அபாயத்தை உணர்ந்து, மிகையின்றி உரையாடும் விக்னேஸ்வரனின் அளவெடுத்த சொற்கள் மாற்று கூடிய, தமிழ் கலாசாரப் பொறுப்பும், கணிசமான பங்கீடும், பண்பும் உள்ள குடியேறிய தமிழரின் பெரும்பான்மை நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவே கொள்ளலாம். வீ விஜயராகவன் (71)
- அய்யா !! சிறு பிழை. தமிழர் வந்தேறிகள் அல்ல பூர்வ குடிகள் என்பதை தங்கள் கனிவான கவனத்தில் கொள்ளவும்.permalink
- கி.மு.200க்கும் முன்பாக, அசோகா சக்ரவர்த்தி, அனுராதபுரத்தில் தலைநகர் கொண்டு இலங்கை முழுதும் ஆட்சி செய்த சிங்கள மன்னருக்கு, புத்த மத பிரச்சாரகர்களாக தனது மகளையும், மகனையும் அனுப்பிவைத்ததாக , அனைவரும் ஏற்றுக்கொண்ட வரலாறு. அப்போது, தமிழ் பிரதேசத்தில், சேர, சோழ, பாண்டிய, சத்யபுத்ர குலமுறை அரசுகள் இருந்ததாக அசோகனின் கல்வெட்டு கூறுகிறது. அப்போது, இலங்கையில் தமிழ் மக்கள் இருந்ததற்கு சான்று ஏதும் இல்லை. ..கி.மு. 50 அளவில், ஏலாள சோழன் படையெடுத்து , இலங்கையில் ஆட்சி செய்ததாக சிங்கள வரலாறு கூறுகிறது. ..மகாவம்சம், சிங்கள மன்னன் , பாண்டியனின் மகளை மணம் புரிந்து, ஆண்டு தோறும், பரிசுப்பொருள்கள் அனுப்பிவந்தான் என்று கூறுகிறது. ( ஆதாரம்: சதாசிவ பண்டாரத்தார்)..எனவே நாம் உறவினர்.