ராட்சசன் , போர் தொழில் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பெண்களைக்கொலை செய்யும் சீரியல் கில்லர் கதை கோடம்பாக்கத்தில் ஃபேமஸ் ஆகி விட்டது , ஆனால் வலுவான திரைக்கதை இல்லாமல் ஸ்டார் வேல்யூ வை மட்டுமே நம்பும் படங்கள் உருப்படாது , உருப்படக்கூடாது என்ற ஃபார்முலா படி ஓடாத இந்தப்படத்தை ஏன் ஓடவில்லை என அலசி ஆராய்வோம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் . அவரது நண்பரும் போலீஸ் ஆஃபீசர் ., வில்லன் ஒரு சைக்கோ கில்லர் , பெண்களைத்தொட்ர்ச்சியாகக்கொலை செய்கிறான். அவனை ஆரம்பத்திலேயே பிடித்து விடுகிறார்கள் , ஆனால் அந்த முயற்சியில் நாயகனின் நண்பன் இறக்கிறான், இதனால் நாயகன் போலீஸ் வேலையை ரிசைன் செய்து விட்டு காஃபி ஷாப் வைக்கிறான் ( லியோ , ஹிஸ்டரி அஃப் வயலன்ஸ் ரெஃப்ரன்ஸ்)
பிடிபட்ட சைக்கோ கில்லர் ஆன வில்லன் தப்பி விடுகிறான். அரசியல் தலைவர்கள் அவரவர் மகன்களை அடுத்த கட்ட கட்சித்தலைவராக ஆக்குவது போல சீரியல் கில்லர் அவனுக்கு ஒரு வாரிசை , காபிகேட் கில்லரை உருவாக்குகிறான்
நாயகன் மீது ஒரு தலைக்காதல் கொண்டு இருக்கும் நாயகனின் நண்பனின் தங்கை , நாயகனின் நண்பனின் மனைவி , அந்தக்குழந்தை இந்த மூவரையும் வில்லனின் பிடியில் இருந்து நாயகன் காப்பாற்றினானா? என்பது மீதிக்கதை
நாயகன் ஆக ஜெயம் ரவி . ரஃப் அண்ட் டஃப் போலீஸ் ஆஃபீசர் கேரக்டருக்குபொருத்தமாக விறைப்பாக வந்து போகிறார்.
நண்பன் ஆக நரேன் கொஞ்ச காட்சிகள் வந்தாலும் ஓக்கே ரகம்’
நாயகி ஆக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா. அநியாயத்துக்கு அவர் கால்ஷீட்சை வேஸ்ட் பண்ணி விட்டார்கள்
சைக்கோ கில்லர் ஆக வில்லன் ஆக ராகுல் போஸ் மிரட்டலான நடிப்பு , காபி கேட் கில்லர் ஆக வினோத் கிஷன் ஆண் ஜோதிகா போல ஓவர் ஆக்டிங்
நரேனின் மனைவியாக விஜயலட்சுமி கவனிக்க வைக்கும் நடிப்பு
யுவன் சங்கர் ராஜா இசையில் ஐந்து பாடல்கள் . ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கு ஏன் இத்தனை பாடல்கள் ? ஆனால் பிஜிஎம் மில் விட்டதைப்பிடித்திருக்கிறார்
ஹரி கே வேதாந்தம் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகளை நுட்பமாகப்படம் பிடித்திருக்கிறார்
ஜே வி மணிகண்ட பாலாஜியின் எடிட்டிங்கில் இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது .
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஐ அகமது
சபாஷ் டைரக்டர் (ஐ அகமது )
1 கடத்தப்பட்ட பெண் ஆப்பிள் வாட்ச் கட்டி இருப்பதும், அவள் ஃபோன் மூலம் லொக்கேஷன் கண்டு பிடிப்பதும் பாராட்ட வைக்கும் பரபரப்பான காட்சி
2 காபி கேட் கில்லராக நடித்தவரிடம் நீ தான் அடுத்த ரகுவரன் , பிரகாஷ்ராஜ் , எஸ் ஜே சூர்யா என உசுப்பி விட்டு ஓவர் ஆக்டிங் பண்ணச்சொன்னது
3 லேடி சூப்பர் ஸ்டார்க்கு அவ்ளவ் சம்பளம் கொடுத்தும் அவரை அதிகம் யூஸ் செய்யாதது ( டூயட் இல்லை எஸ் கேப் )
ரசித்த வசனங்கள்
1 கிரிமினல்ஸ் மிருகமா மாறி தப்புப்பண்ணும்போது ஆண்டவன் பார்த்துக்குவான்னு விட்டுப்போக எனக்குப்பொறுமை இல்லை
2 சாக ரெடியா இருக்கறவனுக்கு சாவு வராது
3 உனக்கு ஒரு பிரச்ச்னைன்னா எனக்கு அது வருத்தம், நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் ச்ந்தோஷம், உன் நிம்மதியா நான் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்
4 உனக்கு யார் மீது பயம் இருக்கோ அவன் கூட நேரா மோது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓப்பனிங்;ல நரேன் தான் வில்லனைக்கைது பண்றாரு. அதுல பலத்த காயம் ஏற்பட்டு உயிர் இழக்கறாரு . நாயகன் ஜெயம் ரவி ஜஸ்ட் லைக் தட் அப்போதான் ஸ்பாட்டுக்கே வர்றாரு. ஆனா நியூஸ்ல இருவரும் தான் கொலைகாரனைக்கைது செய்தார்கள்னு சொல்றாங்க , அதை வில்லன் கோபமா பார்த்துட்டு இருக்கான், என்ன சீன் இது ? ஏம்ப்பா அசிஸ்டெண்ட் டைரக்டஸ்.. நோட் திஸ்
2 12 கொலைகளை செய்த சைக்கோ கில்லரை கை விலங்கிடாமல்., போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் டாக்டர் பேட்டி எடுத்துட்டு இருக்காரு. அந்த டாக்டரையே கொலை பண்ணிட்டதா நியூஸ்ல சொல்றாங்க . விஷூவலா காட்டலை . அது எப்படி சாத்தியம் ?
3 ஹார்ட் அட்டாக்ல ஐசியூ ல அட்மிட் ஆன போலீஸ் ஆஃபீசருக்கு டாகடர், நர்ஸ் யாரும் கூட இருக்க மாட்டாங்களா? கிரிட்டிக்கல் கண்டிஷன் தாண்டாம உயிருக்குப்போராடும் அவரை எப்படி கொலீக்ஸ் கூட பேச விடறாங்க ?
4 கொலைகாரன் & திவ்யா லொக்கேஷன் கிடைத்ததும் நாயகன் ஏன் போலிஸ்க்கு தகவல் சொல்லலை? தனி ஒருவன் படத்தில் நாயகனாக நடித்ததால் தனி ஆளாகவே போலாம்னு முடிவு பண்ணிட்டாரா?
5 நாயகன் கொலைகாரன் ஸ்பாட்டைக்கண்டு பிடித்து விட்டார் என போலீஸ்க்கு தெரியும், நாயகனின் செல் ஃபோன் நெம்பர் லொக்கேஷனை வைத்து போலீஸ் ஃபாலோ பண்ணி இருக்கலாமே?
6 சீரியல் கில்லருக்கு மனநிலை சரி இல்லை எனில் ஜெயிலுக்கு வந்து மன நல மருத்துவர் செக் செய்வது பாதுகாப்பா? லூஸ் மாதிரி கில்லரை பாதுகாப்பே இல்லாமல் மன நல மருத்துவமனைக்கு அனுப்புவது பாதுகாப்பா?
7 காபி கேட் கில்லரை நாயகன் ஒரு விரலை முறிக்கிறார். அவன் அய்யோ என கத்துகிறான். அடுத்த காட்சியிலேயே அவனுக்கு கை விரல்கள் எல்லாம் நார்மலா இருக்கு , அது எப்படி ?
8 காபிகேட் கில்லர் க்ளைமாக்ஸில் நாயகனை ஒரு அறையில் அடைத்து விடுகிறான். அப்படியே விட்டுப்போய் இருக்கலாம், எதுக்கு கிறுக்கன் மாதிரி கதவைத்திற்ந்து விட்டு ஃபைட்டு ப்ண்ணலாம் வா என கூப்பிடுகிறான் ?
9 காபிகேட் கில்லர் ஆலரெடி ஒரு கேசுக்காக நாயகனால் அரெஸ்ட் செய்யப்ப்ட்டவன், அதனால் நாயகனை டார்கெட் செய்யவே சார்லியின் மகள் திவ்யாவை அவன் கொன்றான் என நாயகன் சொல்கிறான். நாயகனைத்தூண்ட , கோபப்படுத்தனும்னா நாயகனின் காதலி நயன் அல்லது நண்பன் நரேனின் மனைவியைத்தானே கொன்றிருக்கனும் ? அந்த லாஜிக் கூடவா வில்லனுக்கு & டைரக்டருக்கு தெரியல ?
10 திரைக்தைக்கு தேவையே இல்லாமல் கொடூரமான காட்சிகள் , கொலை செய்யும் பேட்டர்ன் எல்லாம் ரணகளம் .பெண்கள் , சிறுவர்கள் அந்தப்பக்கமே போக முடியாது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - பயங்கர வன்முறை 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இந்தப்படத்தை தெரியாம , விசாரிக்காம பார்த்து யாரும் மாட்டிக்காதீங்க. யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம் /. ரேட்டிங் 1.75 / 5 ( இந்த மார்க்கும் நாயகி நயனுக்காக )